Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thalaivanin Kaathali

அத்தியாயம் 15.1 : தலைவனின் காதலி!!!

அத்தியாயம் 15

எந்தன் முகத்தை நீ

மறந்தாலும் எந்தன்

நினைவுகள் உன்னை விட்டு



Advertisement

எப்போதுமே செல்லாது!!!

 

அவனைப் பார்த்த படியே கட்டிலில் படுத்திருந்தாள் மாயா. அவள் கண்கள் அவனை விட்டு விலக வில்லை தான். ஆனால் மனம் எங்கெங்கோ பயணித்தது. சுமனை நினைத்தும் வருத்தப் பட்டாள். திருமணம் முடிந்த எந்த ஆண்மகனுக்கும் ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கத் தான் செய்யும்.

Advertisement

 

Advertisement

ஏனோ தன்னால் கடைசி வரை சுமனுக்கு நல்ல மனைவியாக இருக்க முடியாதோ என்ற பயம் மாயாவை ஆட்டிப் படைத்தது. அவனை நெருங்க அவளுக்கு தயக்கமாக இருந்தது.

 

அவனாகவே அவளை நெருங்கினால் அவள் அடுத்த கட்டத்துக்கு செல்ல முயற்சி செய்யலாம். ஆனால் அவனோ அவளைக் கஷ்டப் படுத்தக் கூடாதே என்று விலகியே இருந்தான். அது அவளுக்கு புரிந்தாலும் அடுத்து என்ன என்று அவளாலும் யோசிக்க முடியவில்லை.

Advertisement

 

அவனையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தவளின் கண்களில் கண்ணீர் வந்தது. “ஏன் எனக்கு மட்டும் மற்ற பெண்களைப் போல வாழ்க்கை இல்லை? இதில் சுமனையும் இழுத்து வைத்து விட்டேனே?”, என்ற எண்ணம் வந்து அவள் மனதை வலிக்கச் செய்தது.

 

மற்ற பெண்களைப் போல தான் அவளும் இருந்தாள். வீட்டுக்கு ஒரே பெண்ணான அவளை அவளுடைய பெற்றோர்கள் தரையில் விடாமல் தாங்கினார்கள் தான்.

 

சந்தோஷமான சிறுமியாக தான் உலா வந்தாள் மாயா. அந்த நாள் மட்டும் வாழ்வில் வராமல் இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். அவள் வாழ்வின் கருப்பு தினம் அன்று. இரண்டு கால் மிருகங்களால் அவள் வாழ்வு சிதைந்த நாள்.

 

சந்தோசமாக பள்ளிக்கு போய் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் தான் மாயா அந்த கொடூர கும்பலால் கடத்தப் பட்டாள்.

 

எப்படிப் பட்ட நாள் அது? என்ன முயன்றும் அவளால் அதை மறக்க முடியவில்லை. என்னவென்றே தெரியாத வயதில் அப்பப்பா எத்தனை வலி? சிறுமி என்றும் பாராமல் அவர்களால் எப்படி அவளை சித்ரவதை செய்ய முடிந்தது? பெற்றவர்கள் அவளை கண்டெடுத்த போது அவள் இருந்த கோலம் அவலம் தான்.

 

ஆடை எல்லாம் கிழிந்து, ஆங்காங்கே ரத்தம் வடிய, உயிருக்கு போராடிய நிலையில் குத்துயிரும் கொலையுயிறுமாக தான் மீட்கப் பட்டாள். டாக்டர்கள் அவளை போராடி தான் காப்பாற்றினார்கள். துள்ளித் திரிந்த பறவையின் சிறகுகள் வெட்டப் பட்டது போல தான் மாயாவின் நிலையும். அவளுடைய சந்தோஷம் அனைத்தும் மாயமாகிப் போனது.

 

காப்பாற்றியதற்கு பின்னரும் கூட பித்துப் பிடித்தவளைப் போல தானே இருந்தாள். பெற்ற தகப்பனைக் கண்டாலும் அவள் அலற ஆரம்பிக்க வேறு வழியில்லாமல் தான் அவளை ஹோமில் சேர்த்தார்கள். ஆண்கள் என்றாலே ஒதுங்க ஆரம்பித்தாள். ஆண்கள் குரல் கேட்டாலே அலற ஆரம்பித்தாள்.

 

அடிக்கடி பயத்தில் அவளுக்கு காய்ச்சல் வந்து விடும். திடீரென்று அலறி ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்து விடுவாள்.

 

அடிக்கடி அவளுடைய பெற்றவர்கள் அவளை பார்த்து விட்டுச் செல்வார்கள். அவர்கள் கண்களிலும் அவளை நினைத்து ரத்தக் கண்ணீர் தான் வந்தது.

 

அவளுக்கு கொடுத்திருந்த அறைக்குள் அவளுடைய தாய் மட்டுமே செல்வாள். தன்னைக் கண்டு அலறுவதால் அவளுடைய தந்தை வெளியே நின்று கொள்வார்.

 

தாயின் மடியில் முகம் புதைத்திருக்கும் மாயா “அம்மா, வேண்டாம்னு சொல்லு மா. வலிக்குது மா. யாரோ வாராங்க மா”, என்று பதறுவாள்.

 

எப்போதும் பாட்டு, பாட்டி மன்றம் என்று தைரியமாக இருக்கும் பெண்ணா இவள் என்று என்னை அவளின் பெற்றோர்கள் சோர்ந்து போனார்கள்.

 

ஆனாலும் மகளை இந்த நிலையில் ஆளாக்கியர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி வந்தது. ஆனால் அவர்களால் முடியவில்லை. அதை யுவன் செய்தான். அவளை இப்படிச் செய்தவர்களை கண்டு பிடித்தான். அதற்கு அவனுடைய தொழில் உதவி செய்தது. கொஞ்சம் போராடி தான் அவர்களைத் தூக்கினான். அவர்களுக்கு அவர்களே எதிர் பார்க்காத தண்டனையைக் கொடுத்தான். அவர்கள் துடிதுடித்து செத்தார்கள். அவர்கள் எப்படி கொல்லப் பட்டார்களோ அதை வீடியோ எடுத்தான்.

 

அந்த கயவர்கள் முகம் தெரியாத ஒருவரால் கொல்லப் பட்ட விஷயம் மாயாவின் பெற்றோருக்கு நிம்மதியைத் தந்தாலும் சுற்றி இருப்பவர்களின் பரிதாபப் பார்வையும், அவர்களின் பேச்சுக்களும், மகளின் நிலையும் தாங்க முடியாததாக இருந்தது.

 

உலகை வெறுத்து வாழ்வை வெறுத்து அந்த தாயும் தகப்பனும் தற்கொலை செய்து கொண்டார்கள். அந்த நிகழ்வுக்கு கூட மாயா செல்ல வில்லை. புத்தி சுவாதீனம் இல்லாதவள் போல இருந்தவளை யாரும் அங்கே அழைத்துச் செல்ல வில்லை.

 

மாயா விஷயம் அறிந்து யுவன் தான் அவளுடைய பெற்றோருக்கு அனைத்துக் காரியங்களையும் செய்தான். அதன் பின்னே அவளைக் காண வந்து அவளை தன்னுடைய தங்கையாக எண்ணி அழைத்துச் சென்றான். அவளுக்கு துணையாக சாரும்மாவையும் அழைத்துச் சென்றான். அவளிடம் அந்த கொடூரமானவர்கள் கொல்லப் பட்ட வீடியோவைக் காட்டிய பிறகு தான் கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்தாள் மாயா.

ஆரம்பத்தில் இருந்து சுமனும் கேசவும் கூடவே தான் இருக்கிறார்கள். அவள் எங்காவது செல்ல வேண்டும் என்றால் சுமன் தான் அவளுடன் செல்வான்.

 

எதார்த்த வாழ்விற்க்கு மாயா திரும்பிக் கொண்டிருந்தாலும் அவள் அடி மனதில் பதிந்திருந்த அந்த கோரச் சம்பவத்தை அவளால் மறக்க முடியவில்லை.

 

இப்போது அவளுக்கு திருமணமும் ஆகி விட்டது. அடுத்து என்ன என்றும் அவளுக்கு தெரியும் தான். ஆனால்… விடை தெரியாத கேள்விகள் தான் அவளுக்கு உருவானது.

 

அழுத படியே தூங்கிப் போனாள் மாயா. ஆனால் அவள் தூங்கிய பிறகு அவளையே பார்த்துக் கொண்டிருந்த சுமனை அவள் பார்க்க வில்லை.

 

அவள் காயத்தை கீறி விட்டுவிடக் கூடாதே என்று தான் அவன் ஒதுங்கியிருக்கிறான். அவள் கன்னத்தில் இருந்த கண்ணீர் தடத்தைப் பார்த்தவனுக்கு அதை துடைத்து விட்டு உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்லி அவளை தன்னுடைய தோளில் சாய்த்துக் கொள்ள ஆசை தான்.

 

ஆனால் அவனுடைய சிறு செய்கை அவளை காயப் படுத்தி விட்டால். அதனாலே அவளிடம் இருந்து ஒதுங்கி இருக்கிறான். எவ்வளவு தூரம் ஒதுங்கியிருந்தாலும் எப்போதும் அவனுக்கு அவள் மீது ஒரு கண் இருக்கும்.

 

அவ்வளவு அக்கறையாக பார்த்துக் கொண்டாலும் அவள் மனதை அவனால் படிக்க முடியவில்லை. அவள் அவனைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அவள் கலக்கத்தை கட்டாயம் போக்கியிருப்பான்.

 

இரவு முழுவதும் அந்த சம்பவத்தை நினைத்திருந்ததாலோ, கலக்கம் நெஞ்சம் முழுவதும் இருந்ததாலோ எதுவோ ஒன்று மாயாவை அதிகம் பாதிதிருந்தது. நடு இரவில் அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க மாயா முகத்திலோ எதுவோ பதற்றம், அவள் நெற்றியில் வியர்வை பெருகியது.

 

எதுவோ கனவு காண்கிறாள் போல என்று அவன் எண்ண அவளோ

அடுத்த நொடி “அம்மா வலிக்குது வலிக்குது”, என்று துடிக்க துவங்கினாள்.

 

பழைய நினைவு என்று உணர்ந்த சுமன் அடுத்த நொடி அவளை நெருங்கி அவளை அமைதி படுத்த முயன்றான்.

 

ஆனால் அந்த நேரத்தில் அவன் சத்தம் கேட்கவும் அவள் பயம் இன்னும் அதிகமானது. அது சுமன் என்று உணராத அவள் “என்னை விடு….. விடு…. அருவருப்பா இருக்கு “,என்று அலறத் துடங்கினாள்.

அது மட்டுமில்லாமல் அவனை காயப் படுத்தவும் ஆரம்பித்தாள்.

 

தன்னால் அவளை அமைதிப் படுத்த முடியாது என்று உணர்ந்தவன் உடனே வெளியே சென்று சுசீலாவின் அறைக் கதவை தட்டினான்.

 

அவள் பதறி அடித்துக் கொண்டு வெளியே வரவும் “மாயாவை  கொஞ்சம் பாருங்க சுசீ”, என்றான். அவசரமாக மாயாவின் அறைக்கு ஓடினாள். அங்கே துடித்துக் கொண்டிருந்தவளை நெருங்கிய சுசீ அவளை அமைதிப் படுத்த முயன்றாள்.

 

சுசீலா சென்றதும் சுமன் யுவனை தான் எழுப்பினான். விஷயம் அறிந்த யுவனுக்கு வருத்தமாக இருந்தது. இந்நேரம் மாயா அறைக்குள் இவர்கள் சென்றால் மாயா பயப்படுவாள் என்று உணர்ந்தவர்கள் சுசீலா வெளியே வருவதற்காக காத்திருந்தார்கள்.

 

“ஒண்ணும் இல்லை மாயா. பயப்படாத. நீ சேஃபா தான் இருக்க”, என்று சொல்லி மாயாவை அமைதிப் படுத்திக் கொண்டிருந்தாள் சுசீலா.

 

சுசீலா அருகில் தான் இருக்கிறாள் என்ற தைரியத்தில் சிறிது நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள் மாயா. அவள் தூங்கியதும் வெளியே வந்தாள் சுசீலா.

 

இருவரும் பதட்டமாக நிற்பதை கண்டு “ஒண்ணும் பிரச்சனை இல்லை. நல்லா தூங்குராங்க”, என்று சொன்னதும் நிம்மதியாக மூச்சு விட்டவர்கள் அறைக்குள் சென்று மௌனமாக அவளைப் பார்த்தார்கள்.

 

பின் இருவரும் வெளியே வந்ததும் “நான் பழைய மாதிரியே என்னோட ரூமுக்கு போறேன் பையா”, என்றான் சுமன்.

 

அவனை கேள்வியாக யுவன் ஏறிட்டுப் பார்க்க “மாயா இன்னும் பழைய விஷயங்களில் இருந்து வெளிய வரலை. நான் கூடவே இருந்தா மறுபடி அவ மனசை பாதிக்கும். அதான்”, என்று சுமன் நிறுத்த “இல்லை அது தப்பு. நீங்க அப்படி விலகி நின்னா மாயா இன்னும் அவங்க கூட்டுக்குள்ள தான் போவாங்க. நீங்க எப்பவுமே மாயா கூட இருக்கணும் சுமன். கொஞ்ச நாள்ல எல்லாம் மாறும். இப்ப நீங்க ஒதுங்கி போனா அவங்க பழசை கூடிய சீக்கிரம் மறக்க மாட்டாங்க”, என்றாள் சுசீலா.

 

“எனக்கும் சுசீ சொல்றது தான் சரின்னு தோணுது சுமன். இங்க வந்த புதுசுல மாயா இப்படி தான் இருந்தா. அதுக்கப்புறம் நம்ம கிட்ட நல்லா தானே பழகுறா. கொஞ்ச நாள்ல சரியாகிரும் டா. கூடிய சீக்கிரம் அவ மனசு மாறும் சுமன்”

 

“இல்லை பையா… நான் என்ன சொல்ல வரேன்னா?”

 

“புரியுது சுமன். ஆனா இதுக்கு வேற என்ன பண்ண மூடுயும்? பொறுமையா இருக்குறதை தவிர வேற வழி இருக்குறதா எனக்கு தெரியலை”, என்று யுவன் சொல்ல “எனக்கு ஒரு வழி தோணுது”, என்றாள் சுசீலா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!