Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Puthithaai Malarntha Kaathal

Puthithaai Malarntha Kaathal 7 1

அத்தியாயம் 7 

 

ஏய் வர்ணா, எதுக்கு இப்ப அழுற? அந்த லூசு பத்தி எதுக்கு பேசுற?”, என்று கேட்டு கொண்டே அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.

 



Advertisement

ஆமா, நான் படிக்கலை. நீங்க நிறைய படிச்சிருக்கீங்க. அவ சொன்ன மாதிரி நான் உங்களுக்கு தகுதியே இல்லை. என்னை எங்க வீட்லயே விட்டுட்டு போயிருங்க”

 

நீ முதலில் அழுறதை நிப்பாட்டு”, என்று சொல்லி கொண்டே அவளை எழுப்பி அமர வைத்தவன், அவளை தன்னுடைய தோளில் சாய்த்து கொண்டான்.

Advertisement

 

Advertisement

அவன் தோளில் சாய்ந்தாலும், அழுது கொண்டே இருந்தாள் பஞ்சு.

 

அவ சொன்னான்னு இப்படி கவலை படலாமா வர்ணா?”

Advertisement

 

அவ சொன்னான்னு ஒன்னும் கவலை படலை. நீங்களே அத்தை கிட்ட சாயங்காலம் சொன்னீங்க”

 

தன் தலையிலே அடித்து கொண்டவன், “என் வாழ்க்கையை காட்டி அவன் வாழ்க்கையை பத்தி பேச வந்தேன் டி. அது உன்னை காய படுத்திருக்கும்னு நான் யோசிக்கவே இல்லை. எனக்கு சத்தியமா உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு வர்ணா. உன்னை மட்டும் தான் பிடிச்சிருக்கு”, என்றான்.

 

பொய் சொல்லாதீங்க! பிடிக்காம இருக்க போய் தான், நீங்க என் கூட வாழவே இல்லை”

 

என்னது வாழலையா? என்ன டி கேக்குற?”

 

ஆமா முதலிரவுக்கு பூவை அனுப்பும் போது, அந்த பாட்டி உள்ளே என்ன என்ன நடக்கும்னு பேசுச்சு. ஆனா….”

 

ஏய், அப்ப உனக்கு என்ன நடக்கும்னு தெரிஞ்சிட்டா? வாழ்க அந்த பாட்டி. ஏய் லூசு வர்ணா”, என்று சொல்லி கொண்டே அவள் கண்ணீரை துடைத்தவன் “அந்த வாழ்க்கையை வாழ தான டி ஒரு வாரமா தவம் இருக்கேன். எங்க நடந்தது? ஒன்னு நீ தூங்கிருற? இல்லை எதாவது தடங்கல் வந்துருது. சத்தியமா உன்னை தான் எனக்கு பிடிக்கும். வா உனக்கு நிரூபிக்கிறேன். அந்த பாட்டி என்ன சொல்லி கொடுத்தாங்க?”, என்று சிரித்து கொண்டே கேட்டான் ஆதி.

 

ஹ்ம்ம் அது அது”, என்று அழகாக வெட்க பட்டாள் பஞ்சு.

 

என்ன அது அது… முதலில் முத்தம்”, என்றவன் அவள் உதடுகள் மீது தன்னுடைய உதட்டை பதித்தான். தன்னாலே பஞ்சுவின் கண்கள் மூடியது.

 

அடுத்து என்ன தெரியுமா?”, என்றவன் அவள் சேலையை பிடித்து இழுத்தான்.

 

ஆ”, என்று வாயை பிளந்து அவனை பார்த்தாள் பஞ்சு. அவள் வெற்றிடையில் கையை வைத்தவனின் கைகள் அங்கும் இங்கும் அலைந்தது.

 

அவன் தொடுகையில் அவனுடன் சரிந்த பஞ்சு “மாமா மேல படுக்கலாம்”, என்று கட்டிலை கை காட்டினாள்.

 

அதெல்லாம் அப்புறம்”, என்றவன், அவள் உதடுகளில் ஆழ்ந்த முத்தத்தை பதித்து, தன்னுடைய தேடலை ஆரம்பித்தான்.

 

அவன் ஒவ்வொரு செய்கையிலும் சிலிர்த்து, அவன் சொல்லி தந்த புதிய விஷயங்களை அனுபவித்தாள் பஞ்சு. வெட்கத்தில் அவன் நெஞ்சில் முகம் புதைத்தவளை மீண்டும் மீண்டும் நாடினான் ஆதி.

 

புது விதமான ஆதியை பார்த்த பஞ்சு, அவனுக்குள்ளே கரைந்து காணாமல் போனாள்.

 

அதே நேரம் சீனி அறைக்குள் அங்கேயும், இங்கயும் அவன் கைகளுக்குள் சிக்காமல் ஓடி கொண்டிருந்த பூங்கோதையை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

 

ஒழுங்கா கிட்ட வந்துரு டி”, என்றான் சீனி.

 

ஹ்ம்ம் வந்தா நீ அடிப்ப”, என்று பயந்தாள் பூவு.

 

அடிக்காம கொஞ்சுவாங்களா? எல்லார் கிட்டயும் என் மானத்தை வாங்கி வச்சிருக்க? நீ செத்த வா”, என்று விரட்டி கொண்டிருந்தான்.

 

ஒரு வழியாக தன்னுடைய கைகளில் சிக்கியவளை அள்ளி கட்டிலில்  போட்டவன் “துண்டு அவுந்ததை தான சொன்ன? இப்ப இங்க நடக்க போறதையும் சொல்லு என்ன?”, என்று சொல்லி கொண்டே அவளை முத்தங்களால் குளிப்பாட்டி அவன் வாழ்க்கையை ஆரம்பித்தான்.

 

அதே நேரம் வெட்கத்தோடு, ஆதியுடன்  ஒரே போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்தாள் பஞ்சு. அவள் மேல் கையை போட்டு உறங்கி கொண்டிருந்த ஆதி கண் விழித்து  அவளை பார்த்தான்.

 

விடிஞ்சிட்டா வர்ணா?”

 

இல்லை மாமா”, என்று சொல்லி அழகாக சிரித்தாள் பஞ்சு.

 

அப்படியா? நல்லதா போச்சு”, என்று சொல்லி கொண்டே அவள் மேலேயே கவிழ்ந்தான் ஆதி.

 

மறுபடியுமா?”, என்று சிணுங்கினாள் பஞ்சு.

 

ஒரு வழியாக இரண்டு ஜோடியும், சகுந்தலாவை கூட்டி கொண்டு டெல்லி வந்து சேர்ந்தனர். நேராக ஆதி வீட்டுக்கு எல்லாரும் போனார்கள்.

 

சீனி, நீ பேசாம இங்க நம்ம வீட்டுக்கே வந்துறேன். அங்க தனியா தான இருக்க? இங்க பெரிய வீடா தான இருக்கு? நாங்க மூணு பேரு தான இருக்கோம். நீ நைட் ஷிப்ட் போனேன்னா, பூவும் தனியா தான இருப்பா”, என்று சொன்னாள் சகுந்தலா.

 

இல்லாத தாடியை தடவி கொண்டிருந்தான் சீனி. 

 

ரொம்ப யோசிக்காத சீனி. நீ வேணும்னா  வாடகை கொடுத்துரு”, என்று சொன்னாள் சகுந்தலா.

 

ஆமா டா, சீனி எனக்கும் அம்மா சொல்ற யோசனை சரினு படுது”, என்றான் ஆதி. 

 

சரி மா வாரேன். ஆனா வாடகை எல்லாம் கொடுக்க மாட்டேன். எங்க அம்மா வீட்ல நான் இருக்குறதுக்கு நான் எதுக்கு வாடகை கொடுக்கணும்?”, என்று சொல்லி சம்மதம் தெரிவித்தான் சீனி. 

 

சரி டா சீனி. நீ வாடகை எல்லாம் தர வேண்டாம். ஆனா மாசம் ஒரு தடவை என்னை அப்பறம் பூவு, பஞ்சு மூணு பேரையும் ஷாப்பிங் மட்டும் கூட்டிட்டு போ என்ன?”, என்று சொன்னாள் சகுந்தலா.

 

ஹ்ம்ம் சரி மா”, என்று சொன்னான் சீனி.

 

நீ இதுக்கு வாடகையே கொடுத்துறலாம் டா சீனி. உன் பர்ஸ்க்கு வேட்டு வைக்க அம்மா முடிவு பண்ணிட்டா”, என்று சொன்னான் ஆதி. 

 

விடு டா அம்மா தான?”, என்று சொன்னான் சீனி.

 

அவன் கிடக்கான். நீ எப்ப சீனி இங்க  வர?”, என்று கேட்டாள் சகுந்தலா.

 

ஒரு ரெண்டு வாரம் கழிச்சு வரேன் மா. இப்ப கிளம்புறோம்”, என்று சொல்லி விட்டு தங்கள் வீட்டுக்கு சென்றார்கள் சீனியும், பூவும். 

 

அடுத்து வாழ்க்கை எப்போதும் போல நகர்ந்தது. 

 

அந்த வார சனி கிழமை அன்று, சேவிங் பண்ண எல்லாவற்றையும் எடுத்து வைத்து கொண்டிருந்தான் ஆதி. 

 

அவன் அருகில் வந்த பஞ்சு “கல்யாணத்துக்கு பிறகு மீசை வைக்கணும்னு சொன்னேன்ல. இப்படியே விடுங்க மாமா”, என்று மிரட்டி விட்டு எல்லாவற்றையும் எடுத்து போட்டாள்.

 

அவளை பார்த்து சிரித்தவன், “அப்ப ஒரே ஒரு முத்தம் கொடு. அப்ப தான்”, என்றான்.

 

ஹ்ம் சரி”, என்று சொல்லி எப்போதும் போல் கன்னத்தில் கொடுக்க வந்தாள்.

 

அங்க இல்ல வர்ணா. இங்க”, என்று உதட்டை காட்டினான் ஆதி.

 

என்னது அங்கயா? அதெல்லாம் முடியாது நான் போறேன்”, என்று ஓட போனவளை இழுத்தவன் கேட்டதை பெற்று கொண்டே விட்டான்.

 

அடுத்து வழக்கம் போல அந்த நாள் சென்றது. மாலை ஒரு மூணு மணிக்கு தன்னுடைய அறையில், புக் படித்து கொண்டிருந்தான் ஆதி.

 

துவைத்து வைத்த துணியை மடித்து வைத்து கொண்டே உள்ளே வந்த பஞ்சு. “எடுபட்ட பய, அவன் நல்லா இருப்பானா? நாசமா போக. எங்க அத்தையவே அழ வச்சிட்டானே”, என்று திட்டி கொண்டிருந்தாள்.

 

ஏய் வர்ணா நீ யாரை சொல்ற? அம்மாவையா அழ வச்சாங்க?”, என்று கேட்டான் ஆதி.

 

ஆமா மாமா, அத்தையவே அழ வச்சிட்டாங்க”, என்று மறுபடியும் சொன்னாள்.

 

ஐயோ யாரு”, என்று பதறி கொண்டு சகுந்தலாவை தேடி ஓடினான்.

 

இந்த மாமா, எதுக்கு இப்படி ஓடி போறாரு?”, என்று பின்னாலே வந்தாள் பஞ்சு.

 

சகுந்தலா சோபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள். அவள் அருகில் சென்ற ஆதி , “சட்டையை மடக்கி விட்டு கொண்டே, யாருனு சொல்லுமா? எவன் மா உன்னை அழ வச்சது. இன்னைக்கு அவன் செத்தான்”, என்று வீர வசனம் பேசினான்.

 

அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, டிவி யில் கவனமானாள் சகுந்தலா.

 

எம்மா நான் இங்க கேட்டுட்டு இருக்கேன்? நீ டிவி பாத்துட்டு இருக்க. உன்னை அழ வச்சனா மா?”

 

ஆமா டா. எல்லாரும் இந்த டிவி ல போடுற நாடகத்தை பாத்து அழுறாங்களாம். சரி நம்மளும் அழுது பாப்போமேன்னு நினைச்சு அழுது பாத்தேன்”, என்று சாதாரணமாக சொன்னாள் சகுந்தலா.

 

லூசுங்களா? ரெண்டு பேரும் எதுக்கு என் உயிரை வாங்குறீங்க?”, என்று அம்மாவையும் பொண்டாட்டியையும் திட்டினான் ஆதி. 

 

அவனை கண்டு கொள்ளாமல் டீவியை பார்க்க ஆரம்பித்தாள் சகுந்தலா. அவன் பேசுவதை கேட்டு கொண்டிருந்த பஞ்சு, அவனை கண்டு கொள்ளாமல் திரும்பி சென்று விட்டாள்.

 

தினமும் எதாவது செஞ்சு சாகடிக்கிறாங்களே”, என்று நினைத்து கொண்டு இருவரையும் முறைத்து கொண்டு அமர்ந்திருந்தான். 

 

அப்போது அழைப்பு மணி சத்தம் கேட்டது.

 

அதை போய் திற டா”, என்றாள் சகுந்தலா. 

 

வேணும்னா நீயே திற”, என்று சொல்லி விட்டு பஞ்சுவையும் முறைத்து விட்டு அறைக்குள் சென்று விட்டான் ஆதி.

 

எழ போன சகுந்தலாவை தடுத்த பஞ்சு “இருங்க அத்தை, நான் யாருனு பாக்குறேன்”, என்று சொல்லி விட்டு லென்ஸ் வழியே வெளியே பார்த்தாள். 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!