Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Puthithaai Malarntha Kaathal

Puthithaai Malarntha Kaathal 7 2

வெளியே அர்ச்சனா நின்றிருந்தாள். அவளை பார்த்த பஞ்சு உடனடியாக ஓடி வந்து சகுந்தலாவிடம் “இன்னைக்கு  கொஞ்சம் நேரம் போகும் அத்தை. நடக்குறது மட்டும் வேடிக்கை பாருங்க”, என்று சொல்லி விட்டு கதவை திறந்தாள். 

 

சகுந்தலாவும் ஆர்வமாக, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

 



Advertisement

கதவை திறந்த பஞ்சு, “உள்ள வாங்க”, என்று வர வேற்றாள்.

 

உன் வரவேற்பு ஒன்னும் தேவை இல்லை. நான் ஆதியை பாக்க வந்தேன்”, என்று சொல்லி உள்ளே வந்தாள்.

Advertisement

 

Advertisement

அடடே அர்ச்சனாவா, வா வா. எம்மாடி பஞ்சு  உன் புருஷன் கிட்ட போய் சொல்லு மா. இவ வந்துருக்கானு. அப்புறம், மறந்து போய் காபி ஜுஸ்ன்னு எதாவது கொண்டு வந்துற போற? அர்ச்சனா அதெல்லாம் குடிக்க மாட்டாள்”, என்று சிரித்தாள் சகுந்தலா. 

 

நீங்க சொல்லலைனாலும் இவளுக்கு நான் காபி போட்டு கொடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்பேன் அத்தை”, என்று நினைத்து கொண்டு அவர்கள் பெட் ரூம் வாசலில் நின்று கொண்டு, தலையை நீட்டி “மாமா இந்த அர்ச்சனா இருக்காளே, அர்ச்சனா”, என்று ஆரம்பித்தாள்.

Advertisement

 

இப்ப எதுக்கு இதை ஆரம்பிக்கிறா?”, என்று யோசித்த ஆதிக்கு அவள் பேரை சொன்னால் சொல்ல சொல்லி சொல்லி கொடுத்த டயலாக் நினைவு வந்தது. 

 

“ஓ அதை சொல்ல சொல்றா போல? ஐயோ மறந்துட்டே. சரி சும்மா அடிச்சு விடுவோம்”, என்று நினைத்து “அந்த மேனாமினுக்கியை பத்தி எதுக்கு பேசுற?”, என்று கேட்டான். 

 

இங்க சகுந்தலா அமைதியாக சிரித்தாள். அர்ச்சனா திகைத்தாள். 

 

இரு டி இன்னும் உனக்கு இருக்கு”, என்று நினைத்து கொண்டு “அது இல்லை மாமா, அவ வந்து”, என்று மறுபடியும் ஆரம்பித்தாள் பஞ்சு.

 

அந்த நாசமா போறவளை பத்தி எதுக்கு பேசுற?”, என்று கேட்டான் ஆதி.

 

இங்க கோபத்தில் முகம் சிவந்தது, அர்ச்சனாவுக்கு.

 

அந்த அர்ச்சனா வந்து, மாமா”, என்று மறுபடியும் பேசினாள் பஞ்சு.

 

ஏய் வர்ணா, அந்த வெளங்காம போறவளை பத்தி இன்னொரு தடவை பேசாதடி. அவளும் அவ மூஞ்சியும். எத்தனை தடவை அவளை பத்தி பேசி என்னை எரிச்சல் பட வைப்ப? நானே அவ மூஞ்சியை பாக்க வேண்டி இருக்கே, தலை எழுத்துன்னு சகிச்சிக்கிறேன். அவளை எல்லாம் ஒருத்தன் கல்யாணம் பண்ணுனா செத்தான். அவளுக்கு கல்யாணமே ஆகாது. நல்லதா போச்சு நான் தப்பிச்சேன்”,  என்று பொண்டாட்டியை சந்தோச படுத்த அவள் சொல்லி  கொடுக்காததை எல்லாம் பேசினான் ஆதி. 

 

அவன் பேசிய பேச்சில், எழுந்தே நின்று விட்டாள் அர்ச்சனா.

 

இது போதும்”, என்று நினைத்த பஞ்சு “இல்லை மாமா, அவ நம்ம வீட்டுக்கு வந்துருக்கா. அதை தான் சொல்ல வந்தேன். இங்க தான் இருக்கா. வெளிய வாங்க”, என்று சொன்னாள்.

 

தலையில் அடித்து கொண்டான் ஆதி. “நல்ல மாட்டி விட்டுட்டா. ச்ச என்னை பத்தி அவ என்ன நினைப்பா”, என்று நினைத்து கொண்டே வெளியே வந்தான்.

 

கோபத்தில்  முறைத்து கொண்டு நின்றிருந்தாள் அர்ச்சனா. 

 

வா அர்ச்சனா. எதாவது சாப்புடுறியா?”, என்று தயக்கத்துடன் விசாரித்த ஆதியை கை காட்டி நிறுத்தியவள் “போயும் போயும் உன்னை போய் லவ் பண்ணேன் பாரு? இனி உன் மூஞ்சிலே முழிக்க மாட்டேன். நான் எங்க அம்மா அப்பா இருக்குற அமெரிக்காக்கே  போறேன். அவங்க பாத்து வச்சிருக்க பையனையே கல்யாணம் செஞ்சு காட்டுறேன். குட்பை”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள். 

 

சகுந்தலா உருண்டு பிரண்டு சிரித்தாள். பஞ்சுவும் கூட சேர்ந்து சிரித்தாள்.

 

இதுவரைக்கும் யாரையும் கஷ்ட படுத்தி இருக்காத ஆதிக்கு இப்போது நடந்தது எரிச்சலை கொடுத்தது. “இதுக்கு பஞ்சு தான் காரணம்”, என்று நினைத்தவன் “கொஞ்சம் சிரிக்கிறதை ரெண்டு பேரும் நிப்பாட்டுறீங்களா?”, என்று கத்தினான். 

 

ஒரு நிமிடம் சிரிப்பை நிறுத்தி விட்டு, மறுபடியும் சிரித்தார்கள்.

 

அவ அங்க கோபமா போறா? நீ சிரிக்கவா செய்ற?”, என்று சொல்லி கொண்டே வந்தவன் பஞ்சுவின் கன்னத்தில் ஒரு அடி அடித்தான். 

 

அடுத்த நொடி, அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள் சகுந்தலா.

 

அம்மா என்னை எதுக்கு அடிக்கிற? பாவம் அவ, எப்படி போறா பாரு. இவ இப்படி செஞ்சது னால தான?”, என்று கேட்டான் ஆதி.

 

பஞ்சு இப்படி செய்யாம வேற எப்படி செய்யணும்னு சொல்ற ஆதி? பஞ்சு  இப்படி செஞ்சதுனால தான், அந்த அர்ச்சனா  உன்னை மறந்துட்டு வேற கல்யாணம் பண்ண போறேன்னு நல்ல முடிவா எடுத்துருக்கா. அன்னைக்கு பஞ்சுவை மிரட்டிருக்கா, உன்னோட வாழ்க்கையை விட்டு போகணும்னு. இன்னைக்கு பஞ்சு இந்த மாதிரி உன்னை பேச வைக்கலைன்னா, உங்க ரெண்டு பேரையும் பிரிச்சு உன்கூட வாழணும்னு நினைச்சிட்டு அந்த அர்ச்சனா இருந்துருப்பா. ஒரு வேளை உனக்கு அது தான் வேணுமோ? என்னவோ? பஞ்சுவுக்கு இனி அர்ச்சனா விஷயத்தில் இப்படி ஏதாவது செய்யணும்னு சொல்லி கொடுத்ததே நான் தான்.  நீ கவலை படாத பஞ்சு. ரெண்டு நாளைக்கு இவனுக்கு சோறு கொடுக்காம போடு. இப்ப சுடுதண்ணியை எடுத்து இவன் மூஞ்சுல ஊத்து”, என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்குள் சென்று விட்டாள் சகுந்தலா. 

 

கன்னத்தை பிடித்து கொண்டு, அங்கேயே நின்றாள் பஞ்சு.

 

சாரி வர்ணா”, என்று சொல்லி கொண்டே அவள் கன்னத்தை தொட வந்தான் ஆதி. அவன் கையை தட்டி விட்டவள், அறைக்குள் சென்று விட்டாள். 

 

பின்னாடியே, அவளை சமாதான படுத்த சென்றான் ஆதி.

 

அவன் உள்ளே வந்ததும், கதவை பூட்டி தாள் போட்டவள் அந்த தலையணையை எடுத்தாள்.

 

என்ன இவ, ஒரு மாதிரி லுக்கு விடுறா?”, என்று நினைத்து கொண்டே அவள் அருகில் சென்றான். 

 

ஏன்யா, அந்த நாதாரி நாய்காக நீ என்னை அடிப்பியோ? அன்னைக்கே உன்னை என்ன சொன்னேன்? நீ இன்னும் அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு தான் இருக்க?”, என்று சொல்லி கொண்டே அவனை புரட்ட ஆரம்பித்தாள். 

 

இன்று முன்னெச்சரிக்கையாக, அவள் கையில் இருந்து தலையணையை கை பற்றியவன், அவள் கைகளை பிடித்து கொண்டான்.

 

விடு யா. இன்னைக்கு நீ என்கிட்ட செத்த. அடிக்கவா செய்ற?”, என்று கைகளை விடுவிக்க போராடினாள்.

 

வர்ணா செல்லம்ல, ப்ளீஸ் மா, மாமா தெரியாம அடிச்சிட்டேன். மன்னிச்சிக்கோ”, என்றான் ஆதி.

 

மன்னிப்பா? இரு இப்ப துடைப்பக்கட்டை பிய்ய போகுது”

 

இதுக்கு மேல உன்னை விட்டா ஆபத்து”, என்று சொல்லி கொண்டே அவள் இதழ்களில் முத்தமிட்டான் ஆதி.

 

ம்ம்ம் ம்ம் விடு விடு”, என்று திமிறியவள் அடுத்து அவன் விடாமல் கொடுத்த முத்தத்தில், அவனை அடிக்க வேண்டிய நிகழ்வை என்ன? அவளையே மறந்தாள் பஞ்சு.

 

மற்றொரு நாள் நைட் ஷிப்ட் முடித்து விட்டு, வீட்டுக்கு வந்தான் ஆதி. 

 

வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். யாரும் வந்து திறக்க வில்லை. 

 

மணியை பார்த்தான், மணி ஒன்பது என்று காண்பித்தது கடிகாரம்.

 

என்ன ஆச்சு? ரெண்டு பேரையும் காணும்”, என்று நினைத்து கொண்டு கதவை கையால் தட்டினான். ஒரு தள்ளில், கதவு தன்னால் திறந்து கொண்டது. 

 

என்ன கதவு திறந்து இருக்கு? இன்னைக்கு என்ன கூத்து பண்ணி வச்சிருக்காங்களோ?”, என்று மனதில் பயத்தோடு உள்ளே நுழைந்தான் ஆதி. 

 

அவன் உள்ளே கால் எடுத்து வைக்கவும், அவன் கால் அருகே ஒரு டம்ளர் வந்து விழுந்தது. 

 

காதல் மலரும்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!