Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன்- 01

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன்.

நாம் 1

விநாயகனே! வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தனிவிப்பான்
விநாயகனே விண்ணிற்க்கும் மண்ணிற்க்கும் நாதனுமாய்
தன்மையினால் கண்ணிற் பணிவிற் கனிந்து
விநாயகனே வினை தீர்ப்பவனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே…

ஆதவன் இருளை விலக்க.. முதலில் தன் வெளிச்ச கதிர்களை அனுப்பி.. பின் தானும் அனைவரையும் காண வந்து 1மணி நேரம் கடந்தபின்னும்..



Advertisement

நம் நாயகி குளிரில் இருந்து தன்னை காக்கும் போர்வைக்குள்.. தன் உறக்கத்தை இன்னும் தொடர்ந்து கொண்டு இருந்தாள்.

“எழில் எழில் எழில்மா”… நாயகியின் ஆழ்ந்த உறக்கத்தில் எங்கோ இந்த பெயர் கேட்ட மாதிரி இருக்கே.. அடடே!. நம்ம பெயர்தான். விநாயகா மணி 7 ஆச்சா!. மெல்ல கனவுலகத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்தாள்.

” எழில் எழுந்திருக்க போறியா இல்லையா?. ” நாயகி மனத்திற்குள் 7.15..

Advertisement

” எழுந்து விடு.. இல்ல அப்பாவ கூப்பிடவா?. ” நாயகி மனத்திற்குள் 7.30…

Advertisement

எப்படி? நாயகி கடிகாரம் பார்க்காமல் மணி சொல்கிறாள் நினைக்கிறிங்களா..? எல்லாம் அம்மாவின் அருமையான குரலின் ஒலியை வைத்துதான்.

அம்மா பாசமாக அழைத்தால் 7.. வார்னிங்ஙா…(எச்சரிக்கையாக) அழைத்தால் 7.15… கட்டளையாக அழைத்தால் 7.30 மணி.

‘ இனிமேல் எழுந்திருக்கவில்லை எனில் யார் அப்பாவிடம் காலையிலே திட்டு வாங்குவது. என்ன? அப்பாவிற்கு பயந்த பிள்ளையா? என நினைக்க வேண்டாம். நல்ல பிள்ளை அவ்வளவே.. ‘ அப்பாவை நினைத்தவாறே கோழிதூக்கம் போட ஆரம்பித்தாள். அதன் சுகமே வேறுஅல்லவா!.

Advertisement

‘ நான் எழிலரசி 23வயது மங்கை. சந்தன நிறம், சராசரி உயரத்திற்கு சற்று குறைவு, உயரத்திற்கு ஏற்ற எடை ஆனால் முகம் மட்டும் பிடித்து இழுக்க தோன்றும் பூசு பூசு கன்னம். கவரும் கண்கள்.. அழகான முகம். வீட்டின் கடைகுட்டி.. BBA.,MBA. முடித்து தற்போது ஓய்வு.

வீட்டின் கடைகுட்டி அதனால் அதிக செல்லம் என்று கிடையாது. சில சலுகைகள் மட்டுமே எழிலும் இடத்திற்கு தகுந்தார் போல் அமைதி, குறும்பு , பொறுமை, பாசம், கோபம் என நடத்தையில் இருக்கும். ‘

‘ அப்பா அருணாச்சலம். அம்மா லெட்சுமி.. குடுபத்தை பேணி காப்பவர். 3 பிள்ளைகள். அக்கா இளமதி. 6வருடம் முத்தவள். அரசு ஆசிரியராக உள்ளார். கணவர் அருள்நிதி.. அரசு ஆசிரியர்.(2வது அத்தை மகன்.)

அண்ணா இன்பன். 3 வருடம் மூத்தவன். அப்பாவின் கடையை இக்காலத்திற்கு ஏற்ப சற்று மெருகேற்றி அவருக்கு உதவியாக இருந்து கொண்டே.. தனக்கான திறமையை வெளிப்படுத்த 2 வருடத்திற்கு முன்.. அரிசி ஆலை தொடங்கி திறம்பட நடத்தி வருகிறார். 2 வருடத்திற்கு பிறகு அத்தைமகள் மேகாவுடன் திருமணம். ‘

‘ அப்பாவிற்கு 1 அண்ணா 2 தங்கை. தாத்தா விநாயகம்.. பாட்டி ரெங்கநாயகி. பெரியப்பா சிவநேசன் (பாத்திரகடை வியாபாரி).. பெரியம்மா பார்வதி(அம்மாவின் பெரியம்மாமகள்). அண்ணா அமுதன்,சுரபி.(அம்மாவின் அண்ணா மகள்). அக்கா ஆர்த்தி,கணவன் அருட்செல்வம். (மூத்த அத்தை மகன்).

அக்கா தங்கை இருவரும் அத்தை மகன்கள் அண்ணன் தம்பி மணம் முடித்தார்கள். முதல் அத்தை தேவகி, மாமா வரதராஐன். அருட்செல்வம், அஸ்வின். மேகா. 2வது அத்தை ராதா, மாமா சுந்தர்ராஐன். அருள்நிதி, கதிரவன்.

அம்மாவிற்கு 1அண்ணா 1 தங்கை. தாத்தா வேல்மூர்த்தி, அம்மாச்சி விசாலாட்சி. மாமா சக்கரவர்த்தி, அத்தை அம்பிகா. சுரபி,சுதாகர். சித்தி சரஸ்வதி,சித்தப்பா குமரேசன். பார்த்திபன், பிரியதர்ஷினி. ‘

‘ தனக்கு மிகவும் பிடிச்ச இடம். தன்னுடைய எட்டாவது வயதில் கட்டிய தங்களின் வீடு. மூன்று பக்கம் சுற்றிலும் மண்தரை..போகும் வழி, கார், இரு சக்கர வண்டி வைக்க இடம் போக… வீடு முன்பு சிறிது மண்தரை. அந்த இடத்தில் சிவப்பு,மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை கலர்கள் அடங்கிய ரோஜா செடிகளும், துளசி செடியும் இருக்கும்.

வீட்டை சுற்றி மலர்களாக நாட்டு ரோஜா, செம்பருத்தி, கனகாபரம், மல்லியும், மருதாணி செடியும் இருக்கும். மரங்களாக தென்னை, வாழை, முருங்கை, மாதுளை மரம் இருக்கும். வீட்டிற்கு தேவையான கருவேப்பிலை,மல்லி, புதினா செடியும் இருக்கும். நடுவில் அழகான வீடு. ‘

‘ வீடு தரை தளத்துடன் கூடிய இரண்டு அடுக்கு மாடி கொண்டது. தரைதளம் முதலில் சிறு வரவேற்பு அறை. அடுத்து வீட்டின் அகலமான நடுபகுதி.. நடுபகுதியின் வலது பக்கம் சமையல் அறை அதன் பக்கவாட்டில் ஸ்டோர் ரூம் அடுத்து சாப்பிடும் அறையில் 6 பேர் உட்காரும் மேஜை. அதன்பக்கத்திலேயே அகலமான ஐன்னல் வெளி தோட்டத்தை பார்த்து காற்று வாங்கி கொண்டு சாப்பிடலாம். அதனை ஒட்டி பூஜைஅறை இருக்கும்.

இடது பக்கம் இரண்டு அறை. ஒன்றில் அப்பா அம்மா. மற்றொன்றில் தாத்தா பாட்டி இருப்பார்கள். இடது பக்கம் ஓரத்தில் மாடிக்கு செல்லும் படிகள் இருக்கும் முதல் தளத்தல் 4 அறைகள் அதில் சிறுபகுதி ஹால் இருக்கும். 3 அறைகள் பிள்ளைகள் அறை.. 1 விருந்தினர் அறை. இரண்டாம் தளம் அத்தை மாமாக்கள் வந்தால் தங்கும் அறை ஒன்று. பின்பகுதி திறந்தவெளியாக இருக்கும். அனைவரும் வரும் சமயங்களில் சாப்பிடும், விளையாடும் இடமாகவும் இருக்கும்.

சுற்றிலும் மரம் செடிகளால் இந்த கோடையிலும் கூட அறையில் குளுமை இருந்துக் கொண்டே இருக்கும் என்னுடைய அறை. பிறகு எப்படிங்க எழுந்திறிக்க மனசு வரும்?.. நீங்களே சொல்லுங்க.?. ‘

‘ சரி.. எல்லாத்தையும் சொல்லி முடிச்சு.. தொண்டை வறண்டுவிட்டது. யாராவது சோடா கொடுங்கப்பா.. ஓஓ!. இது காலை வேளையா? காபிதான் குடிப்போமா?. சரி சரி இன்னும் அம்மா வந்து அடிச்சு எழுப்புவதற்குள்ளாக நல்ல பிள்ளையா நாமே போய்விடுவோம். ‘

காலைகடன்களை முடித்துக்கொண்டு பழுப்பு வண்ண முழுநீளபாவாடையும், இளம்பச்சை மேல்சட்டையும்.. வரும்போதே காலை உணவு தயார் செய்யும்.. அவருக்கு உதவியாக இருக்கும் பாட்டி இவர்களை பார்த்தபடியே அமைதியாக ஷோபாவில் வந்தமர்ந்தாள் எழில்.

செய்தித்தாளை பார்த்தபடியே.. ” ம்மா… பாட்டி… காபி. ”

அதிகாலையில் அவர்களின் கடையில் அரிசி ஏற்ற, இறக்க வண்டிகள் வரும். அந்த வேலையை முடித்துவிட்டு வீட்டினுள் நுழைந்தவனின் காதில் தங்கை கூறியது விழ..” அம்மா எனக்கும். ”

தங்கையின் பக்கம் திருப்பியவன்.. ” என்ன மேடத்துக்கு இப்பதான் பள்ளிஎழுச்சியா? 8.15மணி.. நானும் ஒருக்காலத்தில உன்னமாதிரி ஜாலியா இருந்தேன். இப்ப யாரு என்னைய இருக்கவிடுறாங்க. ” புலம்பியபடி.. எழில் அருகில் உட்கார்ந்து செய்திச்சேனலை பார்க்க ஆரம்பித்தான்.

” 3 வருடத்திற்கு முன்பு வரை 9 மணி கல்லூரிக்கு 7.45மணிக்கு எழுந்து 8.35 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பிய இன்பா இன்பா என்ற ஒரு தம்பிய உனக்கு தெரியும். ” அருகில் இருந்தவனிடம் கேட்க.

இன்பன் அமைதியாக இருக்கவும்.. ” கேட்கலையாமா இவருக்கு.. ” எழில் கூறிக் கொண்டு இருக்கும் போதே.. ” இந்தாங்க பிள்ளைகளா காபி ” அவர்களது பாட்டி ரெங்கநாயகி இருவருக்கும் கொடுக்க.. நன்றி தெரிவித்து வாங்கி பருகினர்.

அவர்களுடனே அருகில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டுயிருந்தவரிடம் ” பாட்டி எத்தனையாவது காபி இது? ” பாசமாக கேட்க.

அவர் 3விரலை நீட்ட. ‘ அய்யா ‘ என மனதிற்குள்ளும், ‘ அய்யோ ‘ என தன்வாய் மேல் கைவைத்து மெல்லிய குரலில்.. ” அப்பாட்ட சொல்லடா? ” மிரட்டல் போட..

தலை இட வலமாக நீட்டி சொல்ல கூடாது.. ” நீ போதும் என்று கூறும்வரை உனக்கு இப்ப முட்டைதோசை உற்றித் தருவேனா.. அப்பாவிடம் சொல்லக்கூடாது. சரியா..” அவரும் மெல்லிய குரலில் அருகில் கூற.. ” ஓகே. ” சைகை செய்தாள்.

வயதின் காரணமாக இரண்டுவேளையும்.. சிறிதளவே குடிக்க மருத்துவர் அறிவுரை.. சில சமயங்களில் இதுபோல மாதிரி குடிப்பார்.. அப்போது பாட்டி.. பேத்தியிடையே உடன்படிக்கை நடக்கும். பிறகு இருவரும் திட்டுவாங்குவார்கள் என்பது.. அதுவேறு கதை..

” லெட்சுமி.. லெட்சுமி” மனைவியை அழைத்தவாறே அருணாச்சலம்.. உடன் அப்பா விநாயகம். இருவரும் கடைக்கு கிளம்புவதற்கு தயாராகி உணவு உண்பதற்கு வந்தார்கள்.

தாத்தா விநாயகம் எப்போதும் காலை மகன்களின் கடைகளில் ஏதோ ஒரு கடைக்கு செல்வார். முன்பு இரு மகன்களின் கடைகளையும் மூவரும் தான் பார்த்திருந்தனர். மகன்களின் பிள்ளைகள் பெரியவர்கள் ஆன உடன் மகன்களின் விருப்பத்திற்கு ஏற்றால் போல் பிரித்துக் கொடுத்து.. அவர் ஓய்வு பெற்று கொண்டார். நேரத்தை கழிப்பதற்காக மட்டுமே செல்வார், எதிலும் தலையிட மாட்டார், அறிவுரை கேட்டால் மட்டும் வழங்குவார். மதியத்திற்கு பிறகு ஒய்வு.. பேரன், பேத்தி , கொள்ளு பேரன் ,பேத்திகளுடன் நேரத்தை கழிப்பார்.

அருணாச்சலம் சாப்பிட அமரும் முன்.. ஹாலில் அமர்ந்து இருந்த மூவரையும் பார்த்தபடி அதிலும் எழிலின் மீது அழுத்த பார்வையை பதிந்தது.

‘ அப்பா எதுக்கு இப்ப நம்மள பார்க்காரு?. ‘ எழுந்தவள்.. தாத்தாவிற்கு சைகையிலே காலை வணக்கம் கூறிவிட்டு… ” பாட்டி நான் குளிக்கப்போறேன்” என எழில் அந்த இடத்தில் இருந்து கிளம்பினாள், இல்லை.. இல்லை தப்பித்து ஒடினாள். பின்ன 8 மணிக்குதான் எழுந்தேன் என தெரிஞ்சா அவ்வளவுதான். அதன்பின் பாட்டி உள்ளே செல்ல.. இன்பா டீவி பார்த்தபடிதான் இருந்தான்.

அருணாச்சலம் ஒன்றும் பிள்ளைகளிடம் கடுமையாக நடந்து கொள்ள மாட்டார். எப்போதும் இளகுவாக பழககூடியவர் தான். ஆனால் எல்லா நேரத்திலும் இப்படி இருக்க முடியது அல்லவா. பிள்ளைகள் பண்பு, ஒழுக்கத்துடன் இருக்க வேண்டுமெனில் சில சமயங்களில் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பணம், பொன், பொருளை விட இவைதான் நாம் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மிக பெரிய சொத்து.

ஆனால் அவர் பார்த்து சென்றதின் நோக்கமே வேறு. அவர் நினைவு கடந்த வாரம் ஞாயிறுக்கிழமை நோக்கிச் சென்றது.

ஞாயிறுக்கிழமை எழிலின் பெரியப்பா, பெரியம்மா, அக்கா இளமதி, மாமா அருள்நிதி அனைவரையும் காண வந்திருக்க இரவு உணவை முடித்து அன்றைய நிகழ்வுகளை பற்றி பேசிக் கொண்டுயிருந்த அந்நேரம்.. இனிமேல் திருமணம் செய்தால் திருமண வாழ்வு சிறப்பாக இருக்கும் என எழிலின் ஜாதகத்தை கணித்துவர் கூறியதால் அருணாச்சலம் எல்லாரிடமும் எழிலின் திருமணம் பற்றிய பேச எண்ணியிருந்தார்.

” எழில் ” எல்லோரும் கேட்கும் படியாக எழிலை அழைக்க.. எழிலுடன் சேர்த்து.. அனைவருமே என்னவென்று அவரை பார்த்தனர்..

” எழில்மா உனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாம் நினைக்கிறோம். கடைசியா, உறுதியாக கேட்கிறோம் மா. உன்னுடைய கண்டிஷனில்!! இருந்து மாறுவதற்கு எண்ணமே இல்லையா?? ”

“இல்லை” என தலையை எழில் இடவலமாக வேகமாக ஆட்டினாள்.

வீட்டில் உள்ளவர்களில் சிலர் எழிலை யோசனையாகவும்.. சிலர் முறைப்பாகவும் பார்க்க..

‘ நீங்க என் திருமணத்திற்கு நம் சொந்தகாரங்களில் யாரையும் பார்க்கவேண்டாம், கூடாது, பண்ணிக்க மாட்டேன். வெளி ஆட்களை இருந்து வரும் மாப்பிள்ளையை பாருங்க… பார்க்கனும்.. பண்ணிப்பேன். ‘

‘ இந்த ஒரே ஒரு கண்டிஷன் தாங்க போட்டேன். அதுக்குனு இந்த சின்ன பிள்ளையை எல்லோரும் இப்படி பாசமா பாக்குறாங்க.. அதாங்க முறைக்கிறாங்க.. ஏன்? ஏன்???…

நீங்களே சொல்லுங்க எங்க வீட்டு உறுப்பினர்கள் எல்லாம் அத்தை, மாமா பசங்களா தான் கல்யாணம் பண்ணி இருக்காங்க. அவங்க எல்லாத்துக்கும் பிடிச்சுதான் கல்யாணம் பண்ணி இருக்காங்க. ஆனா எனக்கு யாரையும் கல்யாணம் பண்ணத்தோனலயே!. ஏன் சின்ன ஈர்ப்பு வர கூட அவங்க மேல தோணலங்க.. நான் என்ன பண்ண??

பசங்கள பார்க்கமாட்டேன் எல்லாம் நினைக்க வோண்டாம். தோழிகளுடன் நல்லா சைட்ல்லாம் அடிப்பேங்க. ஆனா அது வேற டிபார்ட்மெண்ட். கல்யாணம்!. என்பது இது வேற டிபார்ட்மெண்ட் இல்லங்களா?.. ‘

” நல்லா யோசிச்சுதான் சொல்றியாமா? வெளியே சென்று மாப்பிள்ளை பார்த்துவிட்டு உனக்கு, நமக்கு, நம் எண்ணத்திற்கு ஏற்ப மாப்பிள்ளை அமையல என்ற பிறகு.. உறவினர்களை கேட்கும் சூழ்நிலை வந்தால் நல்லாயிருக்காது மா..” என பெரியப்பா சிவநேசனும்.. அப்பா அருணாச்சலமும் கூற

” எழில்.. உறவினர்களின் பையன் என்றால் குணம், பழக்கவழக்கம், நடவடிக்கையும்.. அவங்க வீட்டில் இருப்பவர்களையும் பற்றியும் தெரியும்.. என்பதால் நமக்கு கவலை இருக்காது. அதேபோல உன்னையும் , நம்மை பற்றியும் அவர்களுக்கு தெரியும்.. அதனால் சுமுகமான சூழ்நிலை உருவாகி கல்யாண வாழ்க்கை நன்றாக இருக்கும் டா..” என பெரியம்மா பார்வதியும் , அம்மா லட்சுமியும்.. அக்கா இளமதி.. மாமா அருள்நிதி.. அண்ணா இன்பா ஒன்றுபோலக் கூற..

” எல்லாரும் நல்லது , கெட்டது, அவசரம் எனில் விரைவில் வர, போக தூரத்தில் இருக்கிறோம். உனக்கு தொலைவில் அமைந்தால் உன்னைவிட்டு எவ்வாறு இருப்போம்.. அடிக்கடி வரவும், பார்க்கவும் முடியாது. ” தாத்தா விநாயகம், பாட்டி ரெங்கநாயகியும்..
கூறினார்கள்.

அனைவர் கூறியதை அமைதியாக கேட்டவள்.. ” என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை அப்பா. ” என அழுத்தம் திருத்தமாக இந்த முடிவுதான் இறுதியானது என அனைவருக்கும் உணர்த்தினாள்.

‘ இப்போது அருணாச்சலம் சாப்பிடும் போதே நடந்து முடிந்த நிகழ்வுகளை எண்ணிக் கொண்டுயிருக்க காரணம்..

ஒரு பையனின் ஜாதகம், குணம், குடும்பம் அனைத்தும் எழிலரசி ஜாதகம், குணம், குடும்பம் என அனைத்தும் கூடி.. மிகவும் பொருத்தமான திருமணவரன் வந்துள்ளது. இதை வீட்டில் உள்ளவர்களிடம் கூறி மகிழ்ந்து!. இதை உறவினர்களிடம் கூறி அனைவரையும் சமாளித்து நல்ல முறையில் அனைத்தும் நடக்க வேண்டும் என்பதுதான் அவரின் கவலை. ‘

‘ அருணாச்சலம்.. தங்கைகள், அவர்களின் கணவன்கள், பிள்ளைகள், மனைவியின் அண்ணா, தங்கை மற்றும் அவர்களின் அனைவரிடமும் தன் மகள் எழிலரசியின் விருப்பம், எண்ணம் அனைத்தையும் கூற.. அதில் சிலர் மகிழ்ச்சியாகவும், சிலர் எழில் மற்றும் உங்கள் விருப்பம் என்று மேம்போக்காக கூறிவிட்டனர். தான் நினைத்திருந்தால் மாற்றி இருக்கலாம் என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது.

நான் எப்படி அவ்வாறு நினைப்பேன்?. என் எழில்மா ஒரு பொருளையே காரணம் இல்லாமல்.. யோசிக்காமல் கேட்க மாட்டாள். அப்படி இருக்க தன் வாழ்க்கையை சாதாரணமாக எண்ணுவாளா என்ன? நன்றாக அனைத்தையும் யோசித்துதான் முடிவு எடுத்து இருப்பாள் என தீர்க்கமாக எண்ணினார். பிறகு தன் மகளின் விருப்பத்தை தவிர வேறு எதுவும், எவரும் முக்கியமில்லை என தீர்மானித்ததன் பிறகுதான்.. வரன் பார்க்க ஆரம்பிக்கும் செயலில் இறங்கினர். அவருடன் அப்பா மற்றும் அண்ணன் சிவநேசனும். ‘

சாப்பிட்டு முடித்தவர் எழில் தற்போது இல்லை.. இதுதான் சரியான சமயம் என அனைவரிடமும் கூறி… பிறகு வரன் வந்து இருக்கும் வீட்டு நபர்களிடம் நல்ல செய்தியை கூறி.. அடுத்து என்ன என்று முடிவு செய்ய வேண்டும் என்று எண்ணி.. ” அப்பா, அம்மா, லட்சுமி எல்லோரும் ஹாலிற்கு வாங்க. ” என அழைப்பு விடுத்து.. இன்பாவின் பக்கத்தில் அமர்ந்தார்.

அழைத்தவர்கள் வந்தவுடன் இளமதி, மூத்த மாப்பிள்ளையை வீடியோ காலில் அழைத்து கூற வேண்டியதை ஆரம்பித்தார்.. ” எழிலுக்கு வரன் ஒன்று மிக நன்றாக பொருந்தி வந்துயிருக்கிறது. ” என கூறி வரன் வந்த மாப்பிள்ளையின் படத்தை அனுப்பியும்.. மற்ற பிற விவரங்களையும் கூறினார்.

அனைவரின் மகிழ்ச்சியுடனும் உடனடியாக வீடியோ காலில் இருக்கும் போதே.. வரன் வந்த மாப்பிள்ளை வீட்டிற்கு போனில் அழைத்து விவரங்களை கூறி.. அடுத்து என்ன என்றும்? அடுத்த மங்களகரமான நிகழ்வு எப்போது?. முடிவு செய்து அழைக்க வேண்டும் கூறி போனை வைத்தனர்.

எல்லோருக்கும் மிக மிக மகிழ்ச்சி, வார்த்தைகள் இல்லா சந்தோஷம்!.. எழிலையும், வரன் மாப்பிள்ளையையும் ஒன்றாக நினைத்து மகிழ்ச்சி கடலில் இருந்தனர்.

அனைவரும் கீழ்தளத்தில் தனக்கான வாழ்க்கை துணையை தன் விருப்பத்திற்கு ஏற்றார் போல் கண்டுபிடித்து விட்டார்கள் என்றும்.. அவனை பார்ப்பதற்கு அனைவரும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து விட்டனர் என்று எதுவும் தெரியாமல் நிம்மதியாக ஷவரில் தலைக்கு குளித்துவிட்டு வந்து ட்ரையரில் தலையை காய வைத்துக் கொண்டே.. FM- ல் ஓடிய பாடலுக்கு ட்ரையரை மைக்காக எண்ணி பாடிக்கொண்டு இருந்தாள் ‘ எழிலரசி.. அவளவனிற்கு மட்டும் அரசி. ‘

ஷா லா லா ஷா லா லா
ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா
செ செ செ செவ்வந்தி
என் தோழி சாமந்தி
வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி
கொட்டும் அருவி வி வி
என்னை தழுவி வி வி
அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் எங்கே வருவானோ…

ஷா லா லா ஷா லா லா
ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா

மரங்களே மரங்களே ஒற்றை காலில் இருப்பதேன்
என்னவோ என்னவோ தவமா..
நதிகளே நதிகளே சத்தம் போட்டு தான் நடப்பதேன்..
கால்களின் விரல்களே கொலுசா
பாரதி போல தலைப்பாகை கட்டியதே தீக்குச்சி
நெருப்பில்லாமல் புகை வருதே ஆதிசயமான நீர்வீழ்ச்சி
இடையை ஆட்டி நடையை ஆட்டி ஓடும் ரயிலே சொல்
நாட்டியமா ஹேய் நாட்டியமா

தாய் முகம் பார்த்த நாள் தாவணி போட்ட நாள்
மறக்குமா மறக்குமா நெஞ்சே..
மழைதுளி ரசித்ததும் பனித்துளி ருசித்ததும்
கரையுமா கரையுமா கண்ணில்
ஹைதர் கால வீரந்தான் குதிரை ஏறி வருவானோ
காவல் தாண்டி என்னை தான் கடத்திக்கொண்டு போவானோ
கண்ணுக்குள் முதல் நெஞ்சுக்குள் வரை ஆசை சேமிக்கிறேன
யாரவனோ?? யாரவனோ??..

– [ ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!