Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன்- 02

 

 

நாம் 2

  



Advertisement

உயிர் உருவாத

உருக்குளைக்காத

என்னில் வந்து சேர

நீ யோசிக்காத

திசை அறியாத

பறவையைப்போல

பறக்கவும் ஆச

உன்னோடு தூர

வாழ்கை தீர தீர

வாயேன் நிழலா கூட

சாகும் தூரம் போக

துணையா நீயும் தேவை

நான் உன்கூட

உன் நெனப்பு

நெஞ்சு குழி வர இருக்கு

என் உலகம் முழுசும்

உன்ன சுத்தி சுத்தி கெடக்கு

மனசுல ஒரு வித வலிதான்

சுகமா சுகமா

எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்

நெஜமா நெஜமா

கண்ணே கண்ணே

காலம் தோரும்

என் கூட நீ மட்டும்

போதும் போதும்

நீ நாளும்

    மாலை 7 தரமணி. RR ரிசேச் அண்ட் டெவலப்மென்ட் கம்பெனி. பல மாநிலமுகங்கள்.. பல கியுபிக் வரிசைகள் மற்றும் தனித்தனி அறைகளில் என அங்கு வேலை செய்பவர்களில் சிலர் கிளம்பியும்.. பலர் தங்கள் பணிகளை செய்து கொண்டும் இருக்க.. 

 

       வேந்தன் TL.  என்ற தனி அறையினுள் மெல்லிய ஒலியில் (உயிர் உருவாத உருக்குளைக்காத….) பாடல் ஓடிக் கொண்டு இருக்க..

Advertisement

      ” வேந்தன்.. வேலை முடிந்ததா? கிளம்பலாமா? இப்ப கிளம்பினா தான் 8.15மணிக்கு தாம்பரம் போக சரியா இருக்கும். ”

Advertisement

      ” 10 மினிட்ஸ் ஆகாஷ்அவசரமாக வேலையை முடிக்க பார்த்தான்.

      சரி சரி  சீக்கிரம் டா. ” அங்குயிருந்த சேரில் அமர்ந்து நேரம் கடத்த அறையை பார்வையிட்டவனின் கண்கள் முடிவில் நண்பனின் மேல் நின்றது.

 

Advertisement

     29வயது. மாநிறத்திற்கும் சற்று கூடுதலான நிறம்புன்னகைக்கும் கண்கள் ஒன்றே போதும்.. அவனை பார்த்தவுடன் பிடிக்கும். 6 அடி உயரம்.. அதற்கு ஏற்ற எடை கொண்டு இருப்பவன்.. இப்போது அவன் எடுத்துக்கொண்ட வேலையை விரைவாக, சரியாக முடிக்க வேண்டும் என கூர்மையான பார்வை, நேராக அமர்ந்திருக்கும் தோரணை!. அவனின் வேந்தன் என்ற பெயரிற்கு அத்தனை பொருத்தத்தை தத்தது

    தன் பெற்றோர்களை பார்க்க இன்று ஊருக்கு செல்வதால்.. இளம் மஞ்சள் நிறம் சட்டையில் அள்ளி தெளித்தார் போல் நிலநிற சிறிய பூக்கள் இருந்த முழுக்கை சட்டையை., முழங்கைக்கு சற்று கீழ்வரை மடித்திருக்க.. அதற்கு இளம்பச்சை வண்ண ஜீன்ஸ். கேஷ்வல் சூ அணிந்திருந்தான். 

      M.Sc(Chemistry) முடித்த உடன் பெங்களூரில் 4வருடம் வேலை செய்து கொண்டே  MBA படித்தவன்..  சென்னை வந்து 2 வருடம் ஆகிறது.

     பெங்களூரில் வேந்தன் வேலை செய்த கம்பெனியில்.. இருவரும் முதல் 2வருடம் சேர்ந்து பணியாற்றியதால்.. இப்போது இருவரும் ஓரே ப்ராடெக்ட் ப்ரொஐட்(project)-யில் வேறு பிரிவில் டீம் லிடர்( team leader). முன்புயிருந்த பழக்கம்.. இப்போது நண்பர்கள் ஆகினர். ஆனால் இது வேறு கம்பெனி. 

     15 பேர் கொண்ட குழுவில்.. பெரும்பான்மையானவர்கள் இங்கு வந்து சேர்ந்தது முதல்.. தற்போது வரை.. ஒன்றாக ஒரே ப்ராஜெக்டில் பணிபுரிவதால். இனிமையாக தோழமையுடன், பெண்களிடம் சகோதர உணர்வுடனும், தன் குழு மட்டுமல்லாது பிறரிடமும்  பழகுவதற்கு மிகவும் எளிமையாகவும்  இருப்பான். அதே சமயம் தேவையான நேரம் மட்டுமே பேசி.. மற்ற நேரங்களில் அமைதியும் கூட. 

 

   வேலை முடித்த நிலையில் இருந்தவனிடம்..  நல்ல சாங்டா. உனக்கென பிறந்தவ இப்ப எங்க டா இருப்பா?.. “

     புன்னகையுடன்.. ” தெரியலையே  ”

     விரைவில் உன்னிடம் வர வாழ்த்துக்கள்

     ஆகாஷ் வாழ்த்துக்கள் பலிக்க போவது அறியாமல்

     சற்று அதிக புன்னகையுடன்.. ” நன்றி நன்றி நன்றி.. கிளம்பலாமா?. ” கூறியபடி துள்ளலுடன் எழுந்தான்.

      சரி என புன்னகையுடன் கூறியவன்.. என்றும் இல்லாமல் இன்று வேந்தனின் முகம் ஏதோ இன்று புதுபொலிவுடன்!. இருப்பது போல ஆகாஷ் உணர்ந்தான்.

    ஆகாஷ் 2 நாட்களுக்கு உண்டான என்னுடைய வேலை எல்லாம் முடித்து.. மற்றவர்களுக்கும் தேவையானதையும் அசைன் பண்ணிட்டேன். ரொம்ப தேவைனா மட்டும் வீடியோகால் பண்ணுங்க.. சரியா. “

      பார்க்கிங் சென்றுக் கொண்டே இன்னும் சில வேலை சம்பந்தபட்ட, மற்ற பிற விஷயங்களை பேசி.. Bajaj Pulsar இருசக்கர வண்டியில் தரமணியிலிருந்து தாம்பரத்தை குறித்த நேரத்தில் வந்தடைந்தனர்

       நடைமேடை நோக்கி சென்றபடியே.. ” ஸ்டேஷனுக்கு உன்ன அழைக்க யார் வராங்க?”

       வினோத்தும், திலகனும் வருவாங்க. “

        ஊரில் வேந்தனுடைய நண்பர்களுடனும் ஆகாஷ் நல்ல பழக்கம். அவர்கள் சென்னை வருவார்கள், ஆகாஷ் எப்போதாவது ஊர் செல்வான்.

     சரி டா டீரெயின் வந்துருச்சு. எல்லாத்தையும் கேட்டதாக சொல்லு வீட்டுக்கு போன உடன் மெசேஜ் பண்ணு. “

      சரி ஆகாஷ்.. பார்த்து போ. ” தலையசைப்புடன் அவனை வழியனுப்பினான்.

   

    வேந்தனின் சொந்த ஊர் புதுக்கோட்டை. சில மாதங்களுக்கு பிறகு 2 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு  வார இறுதிய இனிமையாக செலவிட செல்கிறான்.

      ஆனால் வேந்தனுக்கு இந்த விடுமுறையானது மறக்க முடியாத  நிகழ்வுகளையும் , நினைவுகளையும், நிறைய மாற்றங்களையும் அவனுக்குள் கொண்டு வரப்போகிறது என்று தெரியாமல்..

   தன்னுடைய இருகையை தேடி சென்று அமர்ந்தவன்.. இரயில் ஏறிவிட்டதாக தங்கைக்கு மெசேஜ் அனுப்பி.. இரயிலில் வந்த உணவை வாங்கி உண்டு விட்டான். டிக்கெட் செக் செய்தாகி விட்டது.  காதில் இயர்போனை மாட்டி பாடலை கேட்டபடி வந்தான்.

 

     வேந்தனுடைய அப்பா ரவிந்திரன், அம்மா சித்ரா. 2 தங்கைகள். முதல் தங்கை வினோதினி 26 வயது  (தனியார் வங்கியில் பணி) கணவன் விஸ்வநாதன் (வழக்கறிகர்) திருச்சியில்உள்ளனர் .  2வது தங்கை வசுந்தரா 21வயது. B.E படித்து கொண்டு இருக்கிறாள். 2 வருடத்தில் திருமணம்( 2வது தாய்மாமா பையன் கமலேஷ்).

    வேந்தனின் தாத்தா ஜெயபாலன், பாட்டி பாக்கியம். தாத்தா விவசாயி. ரவிந்திரன் தன் அண்ணா மாணிக்கத்துடன் சேர்ந்து உணகவம் ஆரம்பித்து.. இப்போது  அவர் மகன் ஈஸ்வர்.. அவர்களுடன் இருக்க அது புகழ்பெற்ற உணவகமாக நன்முறையில் சென்றுக் கொண்டுயிருக்கிறது.

   வேந்தனின் பெரியம்மா சாந்தி.  காவ்யா அண்ணி (தனியார் பள்ளிஆசிரியர்). யோகலட்சுமி அக்கா, கார்த்திகேயன் மாமா( முதல் தாய்மாமனின் முதல்மகன்).

     அத்தை சுமதிமாமா கணேஷ்(இரண்டாவது தாய்மாமா). கமலேஷ், நந்தினி, சாருலதா.

     வேந்தனின் அம்மாவிற்கு 2அண்ணா. அப்பா சுந்தரம், அம்மா மீனாட்சி. முதல் அண்ணா ராகவன்ராஜேஸ்வரி. இவர்களுக்கு கார்த்திக்கேயன், கண்ணன்தீபா.

      சித்ராரவிந்திரன், கணேஷ்சுமதி..பெண் எடுத்து.. பெண் கொடுத்த திருமணம். 

    இரண்டு தாய்மாமாவும் சேர்ந்து மரகடை வைத்து உள்ளனர். கார்த்திக்கேயன் மாமா, கமலேஷ் இருவரும் அப்பா,சித்தாப்பாவிற்கு உதவியாக இருந்துக் கொண்டே மர வேலைபாடுகளில் செய்யும் பொருட்களை செய்து விற்கும் கடை வைத்துள்ளார். கண்ணன் மாமா.. பெங்களுரில்  மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

 

     வேந்தன் இரயில் ஊர் சென்று சேரும் நேரம் கணக்கிட்டு வைத்திருந்த அல்லாரம் அடிக்க எழுந்தவன்.. உடமைகளை சரிப் பார்த்துக் கொண்டான்ஸ்டேஷன் வந்துவிட்டதாக நண்பனிடம் இருந்து மெசேஜ்.

    வேந்தன் இரவு உடையான பருத்தி டீசேட், பேன்ட்டும் உற்சாகமாக  படியின் அருகில் கவனமாக நின்றுக் கொண்டு.. அதிகாலை நேரக்காற்றை உள்இழுத்து சுவாசித்து நுரையீரல் சென்று.. இதயம் பரவி மூளை புத்துணர்ச்சி பெற்றது.

    இரயில் புதுக்கோட்டை வந்தடைந்த போது மணி காலை 3.15. நண்பர்களிடம் கோச் நம்பர் சொல்லியிருந்ததால்  இறங்கிய உடனேவா வேந்தா வா வா..”  வினோத், திலகனின் வரவேற்பு.. வேந்தனுக்கு கிடைத்தது.

     வருகிறேன்.. வந்துவிட்டேன்..  தன் ஊரில் தன் கால்தடம் பதிந்துவிட்ட தன் மகிழ்ச்சியை!. வினோத்தையும், திலகனையும் தனித்தனியாக ஆரத்தழுவி.. அதில் அதை வெளிப்படுத்தினான்.

      வினோத்தும் திலகனும் பள்ளியில் இருந்து இன்று வரை மிக நெருங்கிய நண்பர்கள். வினோத் தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளான். திலகன் ட்ராவல்ஸ் கம்பெனி வைத்திருக்கிறான்.

 

      நல்லா இருக்கிங்களா?? வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா?? காலேஜ்.. ட்ராவல்ஸ் கம்பெனி எல்லாம் சூப்பரா இருக்கா?? “

      திலகன் புன்னகையுடன்ம்.. எல்லாரும்எல்லாமும் சூப்பர்!.. ”

      வாங்க முதல டீ குடிப்போம். அங்கு போய் பேசலாம். ” வினோத் கூற.. இருவரும் சரி எனதலையசைத்து காரை நோக்கிச் சென்றனர்.

     இரயில் நிலையும் அருகில் உள்ள கடையிலேயே டீ குடித்துக் கொண்டே 5 மாத ஊர் கதைகள், நண்பர்களின் சந்திப்புகள் என சிரித்து பேசி மகிழ்ந்து வேந்தனின் வீட்டை அடைந்த போது காலை4.30 மணி.

     கார் நின்ற சிறிதுநேரத்திலேயே.. ” வேந்தா!!… ” அவனை அழைத்த படி புன்னகையுடன் வந்தார் அம்மா சித்ரா. அம்மாவின் பின்னாள் தங்கை வசுந்தரா.

     அம்மாவையும், தங்கையையும் இந்நேரத்தில் எதிர்பார்க்கவில்லை. அதிகாலை இவர்களை எழுப்ப வேண்டாம் என நினைத்து.. அப்பா உணகவத்திற்கு எப்போதும் அதிகாலையிலேயே  கிளம்புவார். அதனால் அப்பாவிடம் மட்டும் டீ கடையில் இருக்கும் போதே.. போன் செய்து வரும் நேரத்தை கூறிவிட்டு வந்தான்.

 

      வா பா வேந்தா. நல்லாயிருக்கியா பா?..” அம்மாவும்.. ” அண்ணா!! எப்படி இருக்க??” தங்கையும் நலம் விசாரிக்க..

      நல்லா இருக்கேன் மா.. அம்மா நீங்க நல்லாயிருங்கிங்களா?? ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுந்திங்க? நான் வந்து எழுப்பியிருப்பேன்ல. நீங்க எழுந்ததும் இல்லாம வசுவையும் எழுப்பிவிட்டு இருக்கிங்க??. “

    அம்மா காத்திருந்ததால் தந்தை ரவிந்திரன் சத்தம் கேட்டு அப்போது தான் வெளியே வந்தார்.. ” வா பா வேந்தா.. நல்லாயிருக்கியா? வாங்கப்பா.. வினோத், திலகன். ” நண்பர்களை வரவேற்றும் அவர்களுடைய நல விசாரிப்புகள், பதில் என முடிந்தப் பிறகுதான் அனைவரும் வீட்டினுள் சென்றனர்.

 

       வேந்தனின் வீடு.. சில வருடங்களுக்கு முன்.. பழமையும்+புதுமையும் சேர்த்து கட்டிய வீடு. அதற்கு முன் வரை தாத்தா, பாட்டி அவர்களின் 2மகன்களின் குடும்பத்துடன் ஒன்றாக இருந்தார்கள். 3 பிள்ளைகளுக்கு கல்யாணம், கொள்ளு பேரன்..பேத்திகள் வந்த உடன்.. அந்த வீட்டை சற்று இக்காலத்திற்கு  ஏற்றார் போல சில மாற்றங்கள் செய்து தாத்தா, பாட்டி உடன் பெரியப்பாவின் குடும்பம் உள்ளது. அதற்கு அடுத்த தெருவில் தான் இவர்கள் இருக்கிறது.

     சுற்றிலும் மரங்கள்..செடி.. கொடிகள் அவற்றிற்கு ஏற்றார் மண் தரைகளை நன்றாக விட்டு.. இரண்டு தளம் உள்ள சுற்றிலும் சுவர் வைத்து கட்டியது. வீட்டின் முன்பு இருவர்  மற்றும் இரு சிறிய கார் வரக்கூடிய பெரிய இரும்பு கதவு உள்ளது. கற்கள் பதித்த நடைபாதை.. பிறகு மூன்று படிகட்டுகள்.. வீட்டின் முன் சிறிய தூண்கள்.. மர வேலைபாடுகளுடன் தேக்கு மரத்தால் ஆன நுழைவாயில். படிகளுக்கும், வாசலுக்கும் இடையில் நீளமான நான்கு பேர்  சாய்ந்து அமர கூடிய திண்ணை. சற்று தூரத்தில் வேப்பமரம்.

      வீட்டில் நுழைந்த உடன் சிறிய முற்றம் இருக்கும். தரைதளத்தில் உட்காருவது போல படிகள்.. நடுவில் துளசி செடி இருக்கும்..அதனை முதல்தளத்தில் இருந்து பார்க்கக் கூடியது போலவும்.. இரண்டாம் தளத்திலிருந்து வெளிச்சம் மட்டும் எப்பொதும் வரும்.. வேண்டிய நேரம் அதனை திறந்துக்கொள்ளலாம்.

    வீட்டை சுற்றிலும் தேவையான இடத்திற்கு ஏற்றார் போல தூண்கள் இருக்கும். இடதுபுறம் நவீன மாடல் சமையலறையில் அதன் உட்பகுதியில் அம்மி,ஆட்டுகல் உபயோகப் படுத்துவதற்கு ஏற்றார் போல அமைந்திருக்கும். அதனை ஒட்டி ஆறு பேர்கள் அமரக்கூடிய சாப்பிடும் பகுதிஅடுத்து அழகான வேலைபாடுகளுடன் தனி சாமிஅறை. அதனை ஒட்டி மாடிக்கு செல்லும் மாடிப்படி இருக்கும்.

      படியின் வலது பக்கம் உட்காரும் இருக்கைகள். LED டீவியுடன் ஹால்.. அடுத்து வலது பக்கம்சிறிய அறை.. இடதுப்பக்கம் பெரியதுமான அறை.. இரண்டு அறைகள்.

     முதல்தளத்தில் பால்கனியுடன் மூன்று அறைகள். இரண்டாம் தளத்தில் திறந்தவெளி தான்.. ஆனால் முதல்தளத்திலிருந்து மாடிக்கு வரும் வாசலின் அருகில் நிழலிற்கு மேல் சுவர்.. அதன் அடியில் மாடிக்கு வந்தால் உட்காருவதற்கு மூன்று பேர் அமரக்கூடிய மரத்தாலான ஊஞ்சல்.. சுற்றிலும் பலவண்ணத் பூந்தொட்டிகள் இருக்கும். தரை தளத்தில்  பலவண்ண ரோஜாபூ, சில வகையான மல்லிசெடிகள், செவ்வந்தி பூ, சாமந்தி பூ செடிகள்.. ஜாதிமல்லி கொடியும்.. முருங்கை மரம், வாழைமரம், தென்னைமரம் மற்றும் அவர்களையும் அடங்கியது வேந்தனின் வீடு.

 

     குடிக்க தண்ணீர் கொடுத்த சித்ரா.. ” காபி எடுத்து வருகிறேன்கூறி திருப்ப.. ” நீங்க எழுந்து இருக்கமாட்டீங்க என நினைத்து வரும்போதே குடித்துவிட்டோம் அம்மா. ” சரி என அவர் அமர்ந்து விட்டார்.

    என்ன வசு? நீயா இது.. இவ்வளவு சீக்கிரம் எழுந்துயிருக்க? காலேஜ் ஏதும் சீக்கிரம் போக வேண்டுமா? ” மெல்லிய புன்னகையை வெளிப்படுத்தி தங்கையிடம் கேட்க..

     ஆமா அண்ணாசிரித்துக் கொண்டே  கூறினாள்.

    தன் அண்ணனிடம் புதிய மாடல் சாம்சங்போன் கேட்டு இருந்தாள்.. அதை வாங்கி பார்த்து சிம் மாற்றி.. இன்றே கல்லூரிக்கு எடுத்து சென்று நண்பர்களிடம் காண்பிக்க வேண்டும். வரும் நேரம் தெரிந்ததால் ஆவலாக எழுந்திருந்தாள். பெற்றோர்களின் முன் கேட்க முடியாது.. வந்தவுடனே ஏன்? மாலை வந்து பார்த்துக் கொள் என்றுகூறுவர். அதனால் இவ்வளவு நேரமும் சிரித்துக் கொண்டே அவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

     வேந்தன் தங்கை கேட்ட புதுமாடல் போன்.. தன் நண்பனின் மூலம்  வாங்கிக் கொண்டு வந்துயிருக்கிறான். அவள் அதற்காகதான்  அமர்ந்துயிருக்கிறாள் என்பது தெரிந்தும்.. அவளிற்குசரிஎன தலையசைத்து  ஒன்றும் அறியாதவன் போல் மற்றவர்களிடம்  பேசிக் கொண்டிருந்தான்.

 

   சரி வேந்தா நான் உணவகத்திற்கு கிளம்புறேன். நீ நல்லா தூங்கி எழுந்து, சாப்பிட்டு.. தாத்தா, பாட்டி பார்த்துவிட்டு வா. ”

    ம்.. சரிங்கப்பா. நான் போய் பார்த்துவிட்டு  மதியம் போல கடைக்கு வருவேன்.

    சரி டா நாங்களும் கிளம்புகிறோம் ஈவ்னிங் பார்க்கலாம். ” என நண்பர்கள் அவர்களது வீட்டிற்கு சென்றனர். சித்ராவும் காலை வேலைகளை பார்க்க சென்றார்.

     வேந்தனும் எழுந்து தன் அறைக்கு செல்ல மாடிபடி ஏற.. அம்மா சென்றவுடன் அவனின் பின்னால் ஓடி வந்தாள் தங்கை வசு. ” அண்ணா.. அண்ணா..  உங்க பேக்கை கொடுங்க.. கனமா இருக்கபோது. என் அண்ணா பாவம் இல்ல. ”

     ஏன்?. இவ்வாறு கேட்கிறாள் என புரிந்து.. ” பரவால வசு. சென்னையிலிருந்து இங்க கொண்டு வந்த என்னால.. கீழயிருந்து மேல கொண்டு வர முடியாதா ??.. நீ சீக்கிரம் காலேஜ் போகனும் சொன்னேல?.. போபோ!! போய் கிளம்பு மா. “

     

   ம்ஹூம்.. இனி அமைதியாக கேட்டு எடுபடாது என.. ” அண்ணா நான் என்ன கேட்டுகிறேன் தெரிந்தே.. இந்த தங்கச்சிய இப்படியெல்லாம் சோதித்துப் பார்க்கக் கூடாது. நான் மூன்று எண்றதுக்குள்ள.. அதை என் கையில வச்சிடுங்க  சொல்லிட்டேன். நீங்களும் ஒருநாள் வசு வசும்மா.. எனக்காக ஒரு உதவி பண்ணும்மா என கேட்க வேண்டி வருந்தாலும் வரலாம். அப்ப இதை காரணமா கூறி முடியாது என சொல்லிட்டா.. அப்ப இப்படி எல்லாம் பண்ணியிருக்க கூடாதோ !!  என நீங்க வருத்தப்பட வேண்டிய காலம் வரும் பாத்துக்கோ.. நல்லா யோசிச்சிங்க  சொல்லிட்டேன்.” வசு அண்ணனை மறைமுகமாக எச்சரிக்கை செய்து கொண்டு இருந்தால்…( இது மறைமுகமாங்க…)

      ” 1.. 2.. 2.15… ” 

      அது மாதிரி வருத்தப்பட வேண்டிய காலம் வரும்மோ!!?.. 

      ‘2.30.. 2.444…’

      வேந்தா வேண்டா டா.. தங்கச்சி தானே. ரொம்ப விளையாடக்கூடாது.. முன்னெச்சரிக்கை வேந்தா…’

    வசுமா இந்தாங்க.. நீங்க கேட்ட போன்.. ” வசு.. 3 .. என சொல்ல தொடங்கும் முன்.. புன்னகைமுகமாக வசுவின் கையில் வைத்தான்.

     அது.. அந்த பயம் இருக்கனும்..” என இடுப்பில் ஒருகையும்.. ஒரு கையை எச்சரிக்கை அறிகுறியாக காண்பித்தாள்.

     சும்மாதான் டா.. உனக்கு சந்தோஷம் தானே??.” அவளை  புன்னகை முகமாக பார்த்து தலையை பாசமாக தடவினான். ஆனால் இதே தன் தங்கையால்..  தன் உயிர்போகும் வழியை உணரப்போகிறோம் என்று அவன் நினைத்து இருக்கமாட்டான்.

    ரொம்ப சந்தோஷம் ண்ணா.. !! போன் சூப்பர்!.  சிலவர்கலர் நல்லா இருக்கு அண்ணா. ” புன்னகையுடன் கூறி தன் அறைக்கு சென்றாள்.

     வேந்தன் தன் அறைக்குள் நுழைய.. அங்கு பொருட்கள் மாற்றம் ஏதும் இல்லாமல் முன் எப்படி இருந்ததோ!.  அப்படியே.. சுத்தமாக, ஒழுங்குடன் இருந்தது. பிறகு தன்னை சுத்தப்படுத்திக்  கொண்டு தன் படுக்கையில் 5.30 மணிக்கு படுத்தவன் 10 மணிக்கு எழுந்தான்.

 

     இந்த இடைப்பட்ட நேரத்தில் வேந்தனின் வாழ்க்கையை மாற்றும் வல்லமைப் படைத்த ஒரு நபர்!. அவன் வீட்டிற்குள் நுழைந்து விட்டார். குடும்பத்தில் உள்ளவர்களும்.. அவரை மகிழ்ச்சியுடன்.. மகனை கேட்காமலே.. அவனின் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க அனுமதித்து விட்டனர் என்று இது எதுவும் தெரியாமல் வேந்தன் ஆழ்ந்த உறக்கத்தில்  இருந்தான்.

 

     வேந்தன் வீட்டில் பொறுப்புணர்வுடனும், அனைத்து செயல்களிலும் கவனமாகவும், வீட்டில் உள்ளவர்களின் எண்ணம் அறிந்து தான் செயல்புரிவான்.

 

     ஆனால்  திருமணத்தில் மட்டும் தன்னுடைய எண்ணத்தை  யாருக்காவும் மாற்றுவதாக இல்லவே இல்லை.. ஆஆம் நம் நாயகனும் திருமணம் பற்றிய சில விருப்பங்களை வைத்திருந்தான்.

        

     

      

      

      

    

       

       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!