Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன்- 5 .1

 

நாம் 5 (1)

 

     தங்களிடம் புன்னகையுடன் வந்து கொண்டு இருக்கும்  நபரை (யோகாவை).. பார்த்துக் கொண்டு இருக்கும் போதே.. எழிலசிக்கு ஒரு நொடி.. “தன்னவனின் முழு உருவத்தை நினைத்துப் பார்த்தாள்.



Advertisement

   ‘ இருவரின் முதல் பார்வையிலேயே தன்னவன் இவன்தான் என்று!. முடிவு எடுத்து விட்டாள் போல?. ‘ அதன்பின் தான் எதிரில் வருபவரிடம்.. பேசுவது பற்றி அவளிற்கு பதட்டம் வந்தது. முதல் முறை அல்லவா.. ஆழ்ந்த மூச்சு எடுத்துவிட்டு பிறகு யோகாவை பார்த்து பதிலுக்கு புன்னகைத்தாள்.

 

    ஹாய் எழிலரசி.. நான் யோகலட்சுமி. நல்லாயிருக்கிங்களா?.. என்னோட தம்பிய தான் எழிலரசிக்கு வரன் பார்த்து இருக்காங்க ”  யோகா முதலில் எழில்.. அடுத்து சுரபியை பார்த்து கூறி.. அவரிடம்உங்க பேர் என்ன?  எனக்கு எழிலரசியோட பேரும், புகைப்படமும் மட்டும்தான் பார்த்து இருக்கிறேன். அதனால தெரியல. ”

Advertisement

    புன்னகையுடன்.. ” நான் சுரபி..  எழிலரசியின் அண்ணி மற்றும் மாமா மகள். நல்லாயிருக்கோம்நீங்க?..  வீட்டில் உள்ளவர்கள் பசங்க எப்படி இருக்காங்க??.. ” சுரபிக்கு யோகாவின் தன்மையான பேச்சால் அவளின் பதட்டம்  குறைந்து.. அவளும் சாதாரணமாக பேச ஆரம்பித்துவிட்டாள்.

Advertisement

    எல்லோரும் நல்லாயிருக்கோம்.. ” பிறகு அவர்கள் சில பொதுவான கேள்விகளை கேட்டு.. சுரபி கேட்பதற்கு பதில் அளித்ததில்.. சுரபிக்கு தங்கள் கடை பற்றியும்.. அவரின் கணவர் அமுதனுக்கு.. தன் கணவர் கார்த்தியும் பழக்கம் என்பதை தெரிந்துக்கொண்டாள். ஆனால் யோகாவிற்கு சாதாரண பேச்சாக இருந்தாலும்.. மனமோ சித்தப்பாவிடம் இருந்து என்ன பதில் வருமோ என்று தெரியவில்லையே?. ‘ வேந்தனை சுற்றியே இருந்தது.

 

    எழிலரசி.. யோகா கேட்கும் கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் கூறியும்.. அவர் அண்ணியிடம் பேசும் பேச்சின் இடையே.. ‘ வேந்தன் இங்கு இருப்பானோ? என்றோ.. அவனை மறுபடியும் பார்க்க வேண்டும்!. என்றோ.. அவளின் கண்கள் அவனை தேடியது. ‘

Advertisement

 

    ‘ அந்த தேடும் விழிக்களுக்கு சொந்தக்காரன்.. தன்னையும்.. தான் தேடும் அழகையும் ரசித்துக் கொண்டு இருக்கிறான் என அறியாமல்.. அவள் கண்கள் தேடியது தன்னவனை. ‘

     வேந்தன் யோகா புன்னகையுடன்  சுரபி மற்றும் அவனின் எழிலரசியை நோக்கி  சென்றதில் இருந்து.. இவர்கள் மூவரையும் அவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். வேந்தன் முதலில் அப்பாவிற்கு போன்  எழிலரசியின் அப்பா, அண்ணா, அம்மாவின் போன் எண் பெற்றுக் கொண்டு பின் தன் அப்பா அம்மா என அனைவருக்கும் கான்பரன்ஸ் கால் இணைத்து எழிலரசியுடன் உடனே பேச வேண்டும் என தன் விருப்பத்தை தெரிவித்து என வேந்தன் சென்ற சில நிமிடங்களிலேயே அனைவரிடமும் வெற்றிகரமாக அனுமதி வாங்கிவிட்டான்.

   இப்போது  தன்னவளிடம்  என்னை.. அவளவனாக!. என்னை மாற்றி.. ஏற்றுக்கொள்வதற்கு உனக்கு நான் அனுமதி தருகிறேன் என்று கூறி.. இந்த திருமணத்திற்காக தனது சம்மதத்தை தெரிவிக்கிறேன் என்றும். இல்லையெனில்.. அவளை தன்னவளாக வருவதற்கு இந்த திருமணத்திற்கு சம்மதமா?. என கேட்க அவளிடம் வேண்டும். ‘ என மகிழ்ச்சியில் இருந்து நடப்பிற்கு வந்தவன்.. 

    அக்கா.. எழிலரசி மற்றும் அவளுடன் இருப்பவரை பார்த்து பேச ஆரம்பித்ததை பார்த்தான். அவர்கள் மூவரும் சற்று பதட்டமாக.. இருப்பது போல் தெரிய அவர்கள் சற்று நிதானம் ஆகட்டும் என்று  நினைத்தவன்.. மனது சில நிமிடங்களுக்கு முன்னான அற்புத நொடிகளுக்கு பின்னோக்கி சென்றது.

    ‘ யோகா அக்கா.. தனக்காக பார்த்திருக்கும் பெண்ணை பார்!. என்று திரும்பியதும்.. பார்த்த பெண்ணை..  யார் இந்த பெண் என்று?.. நொடியில் கண்டுக்கொண்டு.. முதலில் அதிர்ச்சி!.. அதிசயம்!. பின்பு ஆச்சரியம்.. மகிழ்ச்சி!.. என அந்த நொடிக்குள் பல  உணர்வுகள். அவள் கடந்த பின்பு அக்கா தன் முகத்திற்கு முன் தன் கையை ஆட்டி.. என்னையும்.. சுற்றுப்புறத்தையும் உணரவைத்தார்

    ஆனால் அடுத்த நொடியே முடிவு எடுத்துவிட்டேன்.  அன்று முயல்குட்டி!.. பெண்ணாக அறிமுகமாகி..  பிறகு குமரியாக சில நிமிடங்கள் மட்டுமே பார்த்த பெண்.. இன்று வீட்டில் உள்ளவர்களால்..  எனக்கான பெண்ணாக  என் கண்முன் வந்துவிட்டாள். இனி  ஒரு நொடியும் நான் தாமதிக்காமல்.. இவள்தான் எனக்கானவள்.. என்னவள்.. என் வாழ்க்கை துணை என்பதை அனைவரிடமும் உடனே கூற வேண்டும். அதற்கு முதலில் அவளிடம் பேச வேண்டும். அதற்குமுன் வீட்டில்  உள்ளவர்களிடம் அனுமதி வேண்டும் நினைத்தேன்!. இப்போது வீட்டில் உள்ளவர்களிடம்  பேசி அனுமதி பெற்றாகியும் விட்டது ‘ என்ற துள்ளலுடன்!.

    கண்முன் நிற்பவளின் மீது.. தான் முன் பாதியாக விட்ட முக்கியமான  ஒரு வேலையை.. முழுவதுமாக முடித்துவிட்டு செல்லலாம் என அங்கேயே போன்னை  மறுமுனையில் பேசுவதை கேட்பது போல கையில் வைத்துக் கொண்டே.. பார்வையை தன் வாழ்க்கை துணையாக வரப்போகும் எழிலரசியை பார்ப்பதற்கு ஏற்றவாறு நின்றுக்கொண்டு.. தன்னவள் என்ற உரிமையும், ரசிப்பும் கலந்த பார்வை செலுத்தினான்

    குமரியாக பார்த்த போது இருந்த உயரத்தை விட.. சற்று உயரம் ஆகி இருக்கிறாள்.. ! இல்லை இல்லை.. முன்பு உயரத்திற்கு ஏற்ற எடையை விட சற்று கூடுதல் எடையுடன் இருப்பாள். இப்போது சற்று மெலிந்து அளவான எடையுடன் இருக்கிறாள்.

    ஆனால் இன்றும் மாறாமல் இருக்கிறதே ஒன்று!. மெல்லிய புன்னகையுடன் முயல்குட்டி போல் பிடித்து இழுத்து கொஞ்ச தோன்றும் புசு புசு கன்னம் மட்டும் அப்படியே உள்ளதே. இந்த கன்னமும்!. கூடவே அதன் மேல் இருக்கும் கருவிழிகள். ‘ ஒருநிமிடம் கண்மூடி நின்றான்.

   பின் புன்னகையுடன்.. இப்போது அவளை கூர்பார்வையில் ஆராய்ந்தான். ‘ அவளின் சந்தனநிறத்திற்கு ஏற்றார் போல.. அடர்மை, ரோஜா வண்ணத்தில்..  அங்கங்கே சிறுசிறு மயில் டிசைன் என நினைக்கிறேன்.. இளம்ரோஜா வண்ண சிறிதான அளவிலான பாடரும்.. அடர்மை வண்ணத்தில் பிளெளஸ்வுடன் கூடிய.. காட்டன் சேலையை அழகாக உடுத்தி.. இடை வரை உள்ள முடியில் இரண்டு பக்க முடிகளை எடுத்து கிளிப் போட்டு பின் சிறிதளவு முடிகளை தளர்வாக விட்டு பின் நான்கு ஐந்து பின்னல்கள் மட்டும் பின்னி ஹேர் பேண்டு கொண்டு முடியை அடக்கியும் அந்த தளர்வான முடிகளின் மேல்.. இரண்டு சரங்களில் மல்லிகை பூ சூடியிருக்கிறாள்.

    காதில் சிறிதும் இல்லாமல் பெரிதும் இல்லாத அளவில் ஜிமிக்கி.. சேலையிற்கு அழகாக உள்ளது. கழுத்தில் மெல்லிய செயின்.. கையில் சேலையின் நிறத்திற்கு ஏற்ற கண்ணாடி வளையல் அணிந்தும்சில வருடங்கள் முன் பார்த்தற்கும்.. இப்போது பார்ப்பதற்கும் அவளிள் சில மாற்றங்கள் மட்டுமே. ‘

      அப்போதுதான் ஒன்றை கவனித்தான்.. ‘ ஹேய்.. என்ன? அவள் அக்காவின் கேள்விக்கு பதில்கூறியும் அவளுடைய அண்ணியிடம் அக்கா பேசும் போது யாரையோ சுற்றி..சுற்றி.. தேடுவது போல் இருக்கே. வேந்தா ஒரு வேலை உன்னதான் தேடுறாளோ?.. ‘ சில நிமிடங்கள் சிறு புன்னகையுடன் அவளோடு.. அவள் தேடும் அழகையும்!.. சிறிது நேரம் ரசித்து பார்த்துவிட்டு..

   ‘ தான் இப்போது அவள்முன் போய் நின்றால்?. ‘ அவள் முகம் எவ்வாறு தன்னை பார்க்கும் என்று மனம் ஆவல் கொண்டது. தன்னவளின் அருகில் நிற்க போகிறோம்.. பின் பேச போகிறோம் என்று மனம் முழுவதும் ஆர்வத்துடன்..

    எழிலரசி மற்றும் சுரபியின் பின்புறத்திலிருந்துஅக்காஅழைப்புடன் யோகாவின் அருகில் நின்றான்.

     

     வேந்தனை பார்த்ததும் மூவரும் மூன்று மனநிலையில் பார்த்தனர். யோகாஅப்பாடா.. வந்திட்டியா டா.. என்ன சொன்னாங்களோ?. ‘ என அவனின் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள். ‘

    எழிலரசிஇங்க தான் இருந்தாங்களா?  எங்க இருந்து இருப்பாங்க?..   நம்மள இவ்வளவு நேரம் பார்த்துட்டு இருந்து இருப்பாங்களோ? ‘ சிறு நாணத்துடன் சுரபியிடம் திருப்பி.. ‘ இப்போது என்ன செய்ய?. ‘ என பார்த்தாள்.

      சுரபிஎன்ன?!. இவங்க இவ்வளவு நேரம் இங்கு தான் இருந்தாங்களா?  இப்ப.. இப்ப.. என்ன பண்ணும்?.. இப்படி குழம்பிபோய் நிக்கறியே சுபி. இப்படி பண்ணிவிட்டு போய்விட வேண்டியதுதான்.. இந்த அண்ணாட்ட ஹாய்.. ஹலோ.. சொல்லிவிட்டு..  அப்படியே.. வீட்டுக்கு கிளம்ப வேண்டியது தான். அதுதான் உனக்கு சேப் டி சுபி சரியா..’

    வேந்தன் மூவரின் முகத்தை ஒரு நொடிப்பார்த்தான்.. அக்கா.. என்ன சொன்னாங்க தெரியலையே? என்பதை போலவும்..

   தன்னவள்.. இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தாங்களா?  என்ற கேள்வியுமாக.. நம்மள இவ்வளவு நேரம் பார்த்துட்டு இருந்து இருப்பாங்களோ?  என்ற வெக்கம், நாணம் கலந்த பயமுமாகவும்என்ன பண்ணுறது? தன் அண்ணி பார்க்கிறாள்

    என்ன? அவங்க அண்ணி என்ன ரொம்ப ஏதோ யோசிக்கிறாங்க. சரி வேந்தா.. அடுத்து நாம்ம இப்ப முயல்குட்டி!.  கிட்ட பேசப்போக வேண்டிய வேலையை பார்ப்போம். ‘ 

    சில நொடிகள் நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்திருக்க.. இதில் எழிலரசி வேந்தனை பார்க்கவில்லை.  ஆனால் வேந்தன் சூப்பரா!. ரசனையா!!. எழில பார்த்தான். நீண்ட வருடங்கள் கழித்து பார்க்கிறான். அதுவும் முழு உரிமை உடையவனாக.. அதை எப்படி நழுவ விடுவான்.

 

    வேலைக்கு ஆகாது என ஒருத்தி.. ” ஹாய் அண்ணா.. நல்லாயிருக்கிங்களா? ”

    மெல்லிய புன்னகையுடன்.. “  நல்லாயிருக்கேன் மா. நீங்க?”

     நல்லாயிருக்கேன் அண்ணா.. சரிங்க அக்கா.. நாங்க கிளம்புகிறோம்.. அப்பறம் பார்க்கலாம். ” என யோகா மற்றும் வேந்தனிடம் கூறி எழிலிடம் போகலாம் என கண்களால் கூறினாள்.

    எழில் சற்று சாய்ந்து சுரபியிடம்அண்ணி நான் இன்னைக்கு எதுக்கு வந்து இருக்கிறேன்?. அத இன்னும் நான் பண்ணல.. பிறகு எப்படி போவது? ”

    அதெல்லாம் வேறு ஒருநாள் வந்து பண்ணலாம் எழில். இப்ப போகலாம். சரியா..” பதட்டம் மற்றும் பெரியவள் என்ற உணர்வில் கூற..

    அவரின் மனநிலை புரிந்து.. ” ம்.. சரி அண்ணி. “

 

     சுரபி நாங்க கிளம்பிகிறோம் என்று சொன்னவுடன்.. யோகா.. வேந்தனை பார்க்க.. வேந்தன்.. எழிலரசி, சுரபியை ஒரு பார்வை பார்த்தபோது.. அவர்கள்  தங்களை பார்க்காமல் ஏதோ பேசிக்கொண்டு இருந்தால்..

     அக்கா.. அப்பாவிற்கு போன் செஞ்சு முதலில் எழிலரசியோட அப்பா, அண்ணா, அம்மாவின் போன் எண் வாங்கி.. பிறகு நம்ம அப்பா ,அம்மா..  என எல்லோருக்கும்.. கான்பரன்ஸ் கால் போட்டு.. என் விருப்பத்தை தெரிவித்து.. அனுமதி வாங்கிட்டேன். “

    வேந்தா.. நீ போய் பத்து இல்ல பதினைந்து நிமிசம் தானடா இருக்கும். அதுக்குள்ள!.. எல்லா பேர்களிடம் சொல்லி.. அவங்களும் உங்கிட்ட எந்த கேள்வியும் கேட்காமா.. உன்னிடம் சரினு சொல்லிட்டாங்களா?? ஏன் என் ஒரு ஆளிடமே.. சில நிமிடம் பேசுன.. பிறகு எப்படி டா 5 பேர்களிடம் 10நிமிடத்தில பேசி  எப்படி சம்மதம் வாங்கின??..”

    மெல்லிய புன்னகையுடன்.. அக்கா நான் உங்ககிட்ட சொன்னது விளக்கம் கா. நான் அவங்க கிட்ட சொன்னது.. விருப்பமும்.. தகவல் மட்டும்தான் க்கா. “

    அதான் தம்பி என்ன சொன்ன? ” 

    நீ என்கிட்ட கேட்டது சேர்த்து..  அவங்ககிட்ட நானும், அக்கா இருந்த கோயில்ல.. எழிலரசிய  தற்செயலாக பார்த்தோம்.. எழிலரசிய எனக்கு ரொம்ப   பிடிச்சுயிருக்கு!. இப்பவே எழிலரசியோட எனக்கு பேசனு விருப்பப்படுகிறேன். அதனால் நான் இப்ப பேசனும்.. அதையும் உங்க அனுமதியோட பேசனும் நினைத்தேன்.. இன்னைக்கு, இப்ப நாள், நேரம் எல்லாம் நன்றாக தான்இருக்கு. நான் எழிலரசி உடன் பேசட்டுமானு??.. கேட்டேன். சரிக்கா.. நாம்ம பிறகு பேசலாம்.. அவங்க கிளம்பிடு வாங்க போல.. நான் பேசனும் என்று..  சொல்லுங்க க்கா. ” பாவமாக கேட்க..

    இன்று புரிதாக தெரியும் தன் தம்பியை.. நக்கல் பார்வையோடு.. ” ஆமா.. ஆமா.. நாம்ம அப்புறம் பேசிக்கலாம்.. ஒன்னோட காரியம் முக்கியம்மல்ல..” மெல்லிய புன்னகையுடன் கூறி.. ” சுரபி

    அவர்கள் பேசுகிறார்கள் என இருவரும் வேறு பேசிக் கொண்டுயிருக்க.. யோகாவின் அழைப்பில்.. இருவரையும் பார்த்தவள்.. ” என்னங்க அக்கா?? “

    அது வந்து சுரபி.. என் தம்பி வந்து.. உங்க எழிலரசி கூட  இப்ப.. இங்க.. பேசனுமா. “

    ‘ என்ன பேசனுமா? அய்யோ சுரபி!.. நாம்ம நெனச்ச மாதிரியே நடக்குதே. இது மாதிரி தான் ஏதாவது நடக்கும்.. அதுக்குள் வீட்டுக்கு கிளம்பவேண்டும் என நினைத்தேன். அது மாதிரியே நடக்குதே. நான் வீட்டல கேட்டா என்ன சொல்வது?. இப்ப இவங்ககிட்ட என்ன சொல்வது?. ‘ என எண்ணி எழிலை பார்த்து விட்டு.. யோகாவை பார்த்தாள்.. ‘

   எழிலோ யோகா தன் அண்ணியை கூப்பிடவும் வேந்தனை தவிர்த்து.. சாதாரணமாகவே அவரை பார்த்தாள்.. அவருடைய தம்பி தன்னிடம்  இப்ப.. இங்க பேச வேண்டுமாம்.. ‘ ஒரு நொடி வேந்தனை பார்த்து.. உடனே குனிந்துக் கொண்டாள். ‘ பேசனுமா???.. ஏன்? எதற்கு? இங்க? அதுவும் உடனே? இப்ப அண்ணி என்ன சொல்வாங்க? இது வீட்டல தெரிந்தால் என்ன சொல்வாங்க? இப்ப அண்ணி என்னிடம் கேட்டால் என்ன சொல்வது?.. ‘ சுரபியை பதற்றத்துடன் பார்த்தாள்.

 

   யோகாவிற்கு.. எழில் மற்றும் சுரபியின் முகத்தை பார்த்தவுடன் தெரிந்தது. அவர்கள் மிகவும் பதற்றம், பயம்.. என்ன இப்போது சொல்வது? என்று நினைக்கிறார்கள் என்பது.  பெரியவர்கள்  இல்லாமல் அல்லது சொல்லாமல் தாங்கள் என்ன சொல்வது?. வீட்டில் என்ன சொல்வது.. என பல கேள்விகளுடன் குழப்பதுடன் இருப்பது புரிந்தது. தனக்கே வேந்தனும், எழிலரசியும் பேசுவதை மற்றவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்??  எதுவும் தவறு நேர்ந்து விடக்கூடாது என்று பயம் தோன்றும் போது.. இருவரும் சிறியவர்கள்அவர்களின் பதட்டத்தை பார்க்கவே சங்கடமாக இருந்தது. யோகா.. வேந்தனை முறைத்து விட்டு.. இருவரிடம் அனுமதி வாங்கியதை சொல்ல போனார். ‘

    வேந்தனோ யோகா அவனின் முடிவை கூறியதில் இருந்தே எழிலை மட்டும்தான் பார்த்திருந்தான். ‘ அச்சசோ!! முயல்குட்டி ரொம்ப பயந்துட்டா போல!.. என்ன டக்குனு பார்த்துவிட்டு.. குனிஞ்சுடா. ‘ அடுத்து என்னவென்று அக்காவை பார்த்தவன்.. அவர் என்னை ஒரு முறைப்பு பார்வை கொடுத்துவிட்டு.. சுரபியிடம் பேச ஆரம்பித்தார். ‘ எதுக்கு என்ன முறைக்கிறாங்க??.. ஏன்? இன்னும் அக்கா நான் அனுமதி வாங்கியதை சொல்லாம இருக்காங்க?.. ‘

 

     சுரபி.. எழில்மா.. நீங்க எதுக்கும் பதற்றமோ, பயமோ பட வோண்டாம். வீட்டல என்ன சொல்வாங்கனு தான நினைக்கிறீங்க??.”

   சுரபி.. எழில். இருவரும் ஒருசேர.. “ஆமாம்..” என தலையாட்டினர்..’

    யோகாவிற்கு.. அவர்கள் ஆமாம் என ஒருசேர.. தலையாட்டியதை பார்க்க பாவமாக இருந்தது. இவன என  வேந்தனை 4 அடிகள் போடலாம்  என நினைத்து அவர் வேந்தனை பார்க்க..அவர்தான் இப்போது அதிர்ச்சியில் இருந்தார். ‘ 

 

    ‘ ஏனெனில் வேந்தன் மெல்லிய அடங்கபட்ட சிரிப்புடன் இருந்தான். அந்த சிரிப்பின் திசை எழிலை நோக்கியும்.. அங்கு எழில்.. வேந்தனை பார்த்து முறைத்துக் கொண்டும் இருந்தாள். ‘

 

     வேந்தன்.. அவர்கள் இருவரும் ஒருசேர.. ‘ ஆமாம்..’  என தலையாட்டவும்.. தன் முயல்குட்டியை பார்த்து சிறு புன்னகை புரிந்துவிட்டான். அதனை மட்டும் எழிலரசி..  வேந்தனிடம் பார்த்துவிட.. அவள் கோபம் கொண்டு அவனை முறைத்தாள். அதனை பார்த்த வேந்தன் இன்னும் தன் புன்னகையில் உற்சாகத்தை கூட்டினான். ஏனெனில் அவள் தன்னை உரிமையாக பார்க்கும் முதல்பார்வை அல்லவா.. அது எந்த பார்வையாக இருந்தால் என்ன மகிழ்ச்சி பார்வையோ.. அல்லது கோபபார்வையோ. இன்னும் அவனை முறைக்க..   போனால் போகட்டும்  முயல் என.. இப்போதைக்கு அமைதியாக திரும்பிக் கொண்டான்.

 

   யோகா வேந்தனிடம் இருந்து பார்வையை திருப்பி.. ” சுரபி.. எழில்.. நீங்க வீட்டல இருப்பவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம். ” வேந்தனை முறைத்து விட்டு..” இப்பதான் எழிலோட அம்மா, அப்பாஎங்க வீட்ல அம்மா அப்பா எல்லோரிடமும் போனில்.. எழிலரசியிடம் பேச வேண்டும் என்று செல்லி அனுமதி வாங்கிட்டான் மா. அதனால நீங்க பயப்பட வேண்டாம்..”

    சுரபி வேறு ஒரு கேள்வியாக இருவரையும் பார்த்தாள். வேந்தன் அந்த  கேள்விப் பார்வை அர்த்தம் புரிந்து.. ” உங்களுக்கு கால் செய்து.. நான் அரசியிடம் பேசுவதற்கு அவங்க சரினு சொல்லிட்டேனு.. போன் செய்வதாக  சொன்னாங்க. ” வேந்தன் கூறிக் கொண்டு இருக்கும் போதே.. சுரபி தனது போனை எடுத்து பார்த்தாள்..

     சுரபிக்கு மாமா, கணவன், அத்தை என 7 தவறிய போன்அழைப்புகள் வந்து இருந்தது. கோயிலில் இருந்ததால் போன் சைலட்டில் இருந்ததாலும், இவ்வளவு நேரம் இருந்த  பதற்றத்தில் அழைப்பை இரண்டு பேரும் கவனிக்கவில்லை. எழிலரசி போனும் கூட சைலட்டில்  இருந்தது. அப்போதுதான்  மாமாவிடம் இருந்தது அழைப்பு வந்தது.

    சுரபி.. யோகாவையும், வேந்தனையும் பார்த்து.. ” மாமாதான் கால் பண்ணுறாங்க. ஹலோ.. சாரிமாமா. போன் சைலன்ட்ல இருந்தது  கவனிக்கல. ம்ம்.. சொல்லுங்க மாமா.. சரிங்க மாமா.. ம்ம்.. சரிங்க மாமா.. சரிங்க மாமா.. ம்..எழிலிடமா? சரி. இந்தா எழில் அப்பா உன்னிடம் பேசனுமா. ” எனகூறி போனை எழிலிடம் கொடுத்தாள்.. அவர்கள் முன் பேச சற்று பதற்றமாக இருக்க.. அண்ணியிடம்  போனை வாங்கி.. சற்று தள்ளி பேச சென்றாள். அவர்களும் அவள் பதற்றத்தை புரிந்து கொண்டனர்.

 

    சொல்லுங்க ப்பா.. ம்ம்.. இல்லப்பா.. சரிங்க ப்பா.. பார்த்துக் கொள்கிறேன் ப்பா.. ம்ம்.. சரிங்கப்பா.. சரிங்க ப்பா.. வைக்கிறேன்  ப்பா..”  தன் அப்பாவிடம் பேசிவிட்டு அவர்கள் மூவர் இருக்கும் இடம் வந்தாள்.

   எழிலரசியிடம் அருணாச்சலம்.. ” எழில்ம்மா..  கோயில்ல இருக்க யோகலட்சுமி தம்பி தான்.. நாங்க உனக்கு பார்த்திற்கும் மாப்பிள்ளை பையன்மா. வரன் பற்றி இன்னைக்கு தான் பேசனு நினைத்தோம். தற்செயலா இதெல்லாம் அமைந்து விட்டது.. நீ எதுவும் நினைக்காத. சரியா. அவர் இப்ப உன்கிட்ட பேசனு கேட்டார் மா.. நாங்களும் சரி சொல்லிவிட்டோம்.. ரொம்ப நல்ல பையம்மா

     நீ எதுவும்  பதட்டப்படாமா, சாதாரணமாக பேசுனு அம்மா சொல்ல சொன்னாங்கதாரிக்கா பாப்பா தேடுதா. அதனால அமுதன் வந்து சுரபிய கூப்பிட வந்துவிடுவான். உன்ன கூப்பிட அண்ணா கொஞ்ச நேரத்தில்ல வருவான். வைக்கிறேன்மா. “

 

    எழில் தன் அப்பாவிடம்  பேசிக் கொண்டு இருந்த நேரத்தில்வேந்தன் தன் மாமா கார்த்திக் மாமாவிற்கு அழைத்து நடந்தவைகளை மேலோட்டமாக சொல்லி.. அக்காவை அழைக்க கோயிலுக்கு வரச் சொன்னான். யோகா.. தன் கணவனும், சுரபியின் கணவனும் தொழில்முறையில் அறிந்தவர்கள்., பழக்கம் உண்டு என்பதை யோகா.. வேந்தனிடம் கூறியும், எழில் பதட்டமாக இருக்கிறாள்.. அதனால் பார்த்து பேசு டா என்று எச்சரிக்கையான முறைப்பும் பார்வையும் வீசினார். ‘

     வேந்தன் புன்னகையுடன் சரி என தலையசைத்து.. சுரபியிடம் திரும்பியவன்எழிலின்.. அண்ணா இன்பா தான் அவருக்கு.. அழைப்பு அல்லது குறுஞ்செய்தி வந்தவுடன்தான் வரவேண்டும் எனஅவரிடம் கூறிவிடும்படி தயவன்புடன் கேட்டுக் கொண்டான். ‘ அதற்கு  சுரபி சிரித்துக் கொண்டேசரிஎன்று கூறினாள்.

 

   எழிலரசி சுரபியிடம் போனை கொடுக்க.. ” எழில்.. மாமா எல்லாம் சொல்லி இருப்பாங்க. நீ நல்லபடியா பேசு சரியா. நீ அடி பிரதஷ்ணம் பண்ணணும் இல்ல.. அடி பிரதஷ்ணம் செய்த பிறகு சாமி கும்பிட்டு அண்ணாவும், நீயும் அப்படியே பேசிட்டு இருங்க. நான் அமுதன் மாமா வந்தும் கிளம்பி விடுவேன். இன்பா உன்னை கூப்பிட வருவாங்க. சரியா. “

    சரிங்க அண்ணி.. நான் பார்த்துக் கொள்கிறேன். ” வேந்தனை பார்த்தாள்..

   அவனும்.. ‘ வா என் அரசியே.. உன்னுடன்  பேச இந்த மன்னவன் காத்துக்கொண்டு  இருக்கிறேன். ‘ என எழிலரசியை மெல்லிய விரிந்த புன்னகையுடன் பார்த்தான்.

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!