Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK Episode 13.2

“இல்லை சஞ்சு. சமையல் பாதியில் இருக்கு. இன்னொரு நாள் நான் கண்டிப்பா பார்க்கிறேன். நீ போயிட்டு வா.” என்றதும்

“சரி” என்று கலைவாணி, குழந்தை இருவரையும் விட்டுவிட்டு மற்றவர்கள் விக்ரமுடன் காரில் ஏறினர்.

 

காரில் ஏறிய ஜோதி “அங்கிள் ரூப் விண்டோவை ஓபன் பண்ணுங்க. நான் மேல நின்னு டெக்கரேஷன் பார்க்கிறேன்.” என்றாள்.



Advertisement

 

“சரி கேர்ஃபுல்லா பாரு.” என்றுவிட்டு அந்த ஜன்னலை திறந்து விட்டான். அவள் நின்று கொண்டாள். அவள் பக்கத்தில் சாதனா அவளை பிடித்தபடி நின்று கொண்டிருந்தாள்.

 

Advertisement

விக்ரம் காரை மெதுவாக ஓட்டிக் கொண்டிருந்தான்.

Advertisement

காரில் இருந்தபடி ஜன்னல் வழியாக தெருவின் இரு பக்கமும் வீட்டின் முன்பு  பல வண்ண விளக்குகளால் செய்திருந்த அலங்காரங்களை பார்த்து ரசித்தபடி சென்றுகொண்டிருந்தனர்.

ஒரு வீட்டின் முன்பு  குழந்தை இயேசு நாதர் பிறப்பை எடுத்துக்காட்டும் படி ஒரு சிறு குடிசை, குடிசையில் ஒரு குழந்தை, தாய் மற்றும் சிலரை அழகாக வடிவமைத்து இருந்தனர்.

 

Advertisement

ஒரு வீட்டின் முன்பு பல்லக்கு செய்து வைத்திருந்தார்கள். அதில் குழந்தைகள், பெரியவர்கள் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

அதை பார்த்த ஜோதி “அங்கிள் காரை நிறுத்துங்க. நாம எல்லோரும் இங்கே ஒரு போட்டோ எடுத்துக்கலாம்.” என்றால்a.

 

“சரி ஜோ.” என்று விக்ரம் காரை நிறுத்தினான்.

 

அனைவரும் இறங்கி அங்கு ஒரு புகைப்படம்  எடுத்துக்கொண்டனர்.

 

“அங்க பாருங்க ஒரு பெரிய கிறிஸ்மஸ் ட்ரீ. எவ்வளவு பெருசா இருக்கு.” என்று அண்ணாந்து பார்த்தாள் ஜோதி.

 

அடுத்த வீட்டின் முன்பு பெரிய கொம்புகளை கொண்ட இரண்டு பெரிய மான் சிலைகள் பச்சை மற்றும் சிகப்பு நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அதன் பக்கத்திலும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்பு காரில் மீண்டும் ஏறிக் கொண்டனர்.

 

இன்னொரு வீட்டின் முன்பு இருந்த மரங்களின் கிளைகளில் மஞ்சள், சிகப்பு பச்சை, வெள்ளை நிறங்களில் மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு மரம் ஜொலித்துக் கொண்டிருந்தது.

 

ஒரு வீட்டின் முன்பு ஊஞ்சல் போடப்பட்டு அதை சுற்றி  பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

 

இப்படி அனைவர் வீட்டின் முன்பும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னிக்கொண்டிருந்தது. சாலையில் இவர்கள் காருக்கு பின் பல கார்கள் மெதுவாக ஒன்றன்பின் ஒன்றாக இந்த அலங்காரங்களை பார்த்தபடி சென்று கொண்டிருந்தன.

 

பல்லக்கு போல மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டி ஒன்று மக்கள்களை ஏற்றி கொண்டு அந்த தெருவினை சுற்றி காட்டிக்கொண்டிருந்தது.

 

இனம், மொழி என்ற பாகுபாடு இல்லாமல்  ஒருவர் மற்றவர்களுக்கு

“மெரி கிறிஸ்மஸ் மெரி கிறிஸ்மஸ்!!” என்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

 

போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லோரும் மற்றவர்களைப் பார்த்து கை அசைத்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

 

சாலையோரம் அந்தக் கடும் குளிருக்கு ஏற்ப உடை அணிந்துகொண்டு ஒருவர் சூடான பானம்  விற்றுக்கொண்டிருந்தார்.

அதனைப் பார்த்த சாதனா

“வாங்க எல்லோரும் ஹாட் சாக்லேட் சாப்பிடலாம்.” என்று கூப்பிட விக்ரம் ஓரமாக காரை நிறுத்தினான்.

 

காரில் இருந்த அனைவரும் கை உரை, தொப்பி, மொத்தமான ஜாக்கெட் போன்றவற்றுடன் அந்த கடும் குளிரில் இறங்கினர்.

 

சாதனா தன் பையிலிருந்த டாலர் எடுத்து  அவரிடம் கொடுத்து அனைவருக்கும் அந்த பானத்தை வாங்கி கொடுத்தாள்.

 

அதனை வாங்கி அனைவரும் குடித்தனர்.

 

“எமி” என்றால்a ஜோதி.

 

“இந்த குளிருக்கு இந்த ஹாட் சாக்லேட் ரொம்ப சூப்பரா இருக்கு.” என்றாள் விஜயா.

 

எல்லோரும் திரும்பவும் காரில் ஏறி அமர்ந்து குடித்தனர். குடித்து முடித்துவிட்டு மீண்டும் காரை எடுத்தான் விக்ரம்.

 

பார்க்க பார்க்க திகட்டாமல் காட்சிகள் கண்களை பறிக்கும் அளவிற்கு ஜொலித்தன.

 

ஒரு வீட்டின் முன்பு சாண்டா கிளாஸ் உடை அணிந்திருந்த  ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

 

ஜோதி “அங்கிள் காரை நிறுத்துங்க. நாம அந்த சாண்டா உடன் ஒரு போட்டோ எடுக்கலாம்.” என்று சொல்ல அவன் காரை நிறுத்தினான்.

 

ஜோதி இறங்கி விஜயா உடன் அவரிடம் சென்றாள்.

 

சாண்டா உடன் கைகுலுக்கிக் கொண்டு ஒரு புகைப்படம் மற்றும் அவரை பிடித்தபடி ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டால்a.

அந்த சாண்டா உடன் அனைவரும் ஒரு புகைப்படம் தனித்தனியாக எடுத்துக் கொண்டனர்.

 

சாதனா சாண்டா பக்கத்தில் நின்றுகொண்டு போஸ் கொடுத்தாள். விக்ரம் புகைப்படம் எடுத்தான். சாதனா அவரிடமிருந்து நகர முயற்சிக்க அவர் அவளை பற்றினார்.

“என்ன?” என்பது போல நிமிர்ந்து சாண்டா முகத்தை பார்த்தால்a சாதனா.

பிடித்தபடி விடாமல் தலையை பலமாக ஆட்டி ஆட்டி உற்சாகமானார் சாண்டா..

 

முகத்திலிருந்த சாண்டா முகமூடியை எடுத்தால்a சாதனா.

சிரித்தபடி தோன்றினான் சுகந்தன்.

 

“தெரியுமே” என்றுவிட்டு கையிலிருந்த முகமூடியை அவன் கையில் திணித்து விட்டு அவன் கையை உதறி நடந்தாள்.

 

“ஹாய் விக்ரம்.” என்றால்d சுகந்தன்.

 

“ஹாய் கந்தா” என்றான் விக்ரம்.

 

“சாண்டா கிளாஸ் டிரஸ் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு.” என்றான் விக்ரம் சிரித்தபடி. சுகந்தன் பதில் புன்னகைசெய்தான் .

“அச்” என்று தும்மினால்d சுகந்தன்.

 

சாதனா திரும்பி அவனை பார்த்தாள்.

 

‘இந்த  குளிர்ல இப்படி இங்க வந்து  நிக்கனுமா?’ என்று நினைத்து அவனை பார்த்து முறைத்தாள்.

 

“நான் இப்போதான் இங்க வந்தேன் விக்ரம்.” என்றான் சாதனாவை பார்த்தபடி.

அவள் பார்வையில் இருந்து அவள் மனதை புரிந்து கொண்டு பதிலை விக்ரம் மூலம் அவளுக்கு சொன்னான்.

 

‘அப்போ என்னை பார்த்துட்டு  இங்கே வந்து இருக்க அப்படித்தானே?’ என்று கேள்வி கேட்பது போல அவனைப் பார்த்தாள் சாதனா.

 

“நான் ஜோதியை பார்த்துட்டு குழந்தை கூட  விளையாடலாம்nu இங்க வந்தேன். வேற யாரையும் பார்க்க வந்ததா தப்பா நினைக்க வேண்டாம்.” என்று விக்ரமிடம் சொன்னாலும் அவன் பார்வை  சாதனா மீது இருந்தது.

 

விக்ரம் இருவரையும் கவனித்துவிட்டு லேசாக சிரித்துக் கொண்டான்.

 

சாதனா திரும்பி நடந்தாள்.

 

ஜோதி அவனிடம் வந்தாள்.

“ஹாய் அங்கிள் ஹவ் ஆர் யூ?” என்றாள்.

“குட். நீ எப்படி இருக்க?” என்று கேட்டான்  கந்தன்.

 

“குட்.” என்றால்a ஜோதி.

 

விஜயா “எப்படி இருக்கீங்க சுகந்தன்?” என்று நலம் விசாரித்தாள்.

 

விஜயா கந்தனுடன் பேசிக்கொண்டிருந்ததை  கவனித்தால்a சாதனா.

 

பேசி முடித்துவிட்டு வந்த விஜயாவிடம் சாதனா

உங்களுக்கு அவனை….. என்று ஆரம்பித்து விட்டு அவரை எப்படி தெரியும்?” என்று ஆச்சரியமாக கேட்டார்a.

 

“அவர் ராஜேஷின்  பிரண்ட். ஒருநாள் வால்மார்ட்டில் பார்த்து பிரிண்ட் ஆகி இருக்காங்க.”

 

“ஓ அப்படியா?”. என்று கேட்டுக் கொண்டாள் சாதனா

 

ஜோதி கந்தனிடம்

“அங்கிள் நாங்க அடுத்தது மால் போகிறோம். நீங்களும் என் கூட வாங்க.” என்று அவள் கையை பிடித்து இழுத்தாள்.

“அப்படியா? அதுக்கு என்ன வந்துட்டா போச்சு.” என்றான் சுகந்தன்.

 

“சரி வாங்க. நாம எல்லோரும் இந்த காரில் போயிடலாம்.” என்றான் விக்ரம். காரின் முன் சீட்டில் விக்ரம், சஞ்சனா அமர்ந்துகொண்டனர். பின்சீட்டில் விஜயா, பக்கத்திலிருந்த குழந்தை இருக்கையில் பெல்ட் உடன் அமர்ந்து இருந்தால்a ஜோதி. அவளுக்கு பக்கத்தில் சாதனா அமர்ந்திருக்க அதற்கு பின்பு இருந்த சீட்டில் அமர்ந்தான் சுகந்தன்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!