நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 5.2
நாம் 5 (2)
எழில் தன் அண்ணி சுரபியிடமும். வேந்தன்.. தன் அக்கா யோகலட்சுமியிடமும் கூறிவிட்டு.. எழிலரசியும் வேந்தனும் ஒரு சேர பார்த்தனர்.
Advertisement
‘ எழிலரசிக்கு வரன் பற்றி அறியாததும்.. சற்றுமுன் உருவான இந்த தீடர் ஏற்பாட்டால் மட்டுமே.. வேந்தனை பார்த்து பேசுவதில்.. சிறிது பதற்றம். ஆனால் அவளின் ஆழ்மனம்!. மட்டுமே அறிந்த உண்மை!. ‘ வேந்தன் தன்னிடம் இங்கு உடனே பேச வேண்டும். அனுமதி வாங்கிவிட்டேன். ‘ எனக் கூறியவுடன்.. அவனை பார்த்ததில் இருந்து.. அவன் அறியாதவன்.. முன்பின் தெரியாதவன்.. வெளிஆள்.. என்ற உணர்வு.. ஏனோ தோன்றவேயில்லை. அவனிடத்தில் இதில் ஏதோ ஒன்று!.. அவன் கேட்டவுடன் சரி என்று மனம் பதில் கூற.. வீட்டிலும் இங்கு பேச கூறிவிட்டனர்.. அதனால் வார்த்தையிலும் மறுக்க எந்த காரணமும் இல்லை. வந்த பதற்றத்தை சமாளித்து கொள்ளலாம் என்ற உணர்வில்.. பேசுவதற்கு சரி என்று எந்த தயக்கமும் இல்லாமல் ஒத்துக் கொண்டாள். ‘
வேந்தன் அவளின் பதற்றம் உணர்ந்தே.. “அரசி” மென்மையாக அழைக்க..
Advertisement
எழிலுக்கு.. முதலில் அரசி என்று அழைக்கவும் புரியாமல் அவனையே விழிவிரித்து பார்த்தாள். அதன்பிறகே கண்முடி புன்னகைத்து.. ஓ.. நம்ம பெயர் ” எழிலரசி” ல்ல.. என்ற நினைவு வந்த பிறகே.. ” ம்.. சொல்லுங்க. “
Advertisement
அவளின் முழித்த பார்வை.. அதன்பின் தோன்றிய அசட்டு புன்னகையை.. அவளின் மிக ரசித்து.. தன்னில் நிரப்பி.. ஒருநொடி நிதானித்து.. ” அரசி.. நாம்ம முதலில் அடி பிரதஷ்ணம் முடிச்சுட்டு.. பிறகு உட்கார்ந்து பேசலாமா?..”
” ம். “ முதலில் அவளுடைய இஷ்ட தெய்வமான விநாயகரை வணங்கி.. அடி பிரதஷ்ணத்தை ஆரம்பித்தனர். பின்பு அடி அடியாக நடந்து.. அடிகள் எடுத்து செல்லும் வழிகளில் வரும் தெய்வங்களை வணங்கி.. கோயிலை ஒருமுறை முழுவதும் சுற்றி வந்து.. அவளுடைய அடி பிரதஷ்ண பிராத்தனையை முடித்துவிட்டு.. தெய்வத்தின் முன் விழுந்து வணங்கி.. சிறிது நேரம் சன்னதி முன்அமர்ந்து இருந்தனர்.
பின் இருவரும். அருகில் உள்ள குளத்தின் நிழல் உள்ள படிகளில் அருஅருகே.. சற்று இடைவெளிவிட்டு உட்கார்ந்தனர். சில நொடிகள் கழித்து.. இருவரும் சற்று சகஜநிலைக்கு வருவதற்காக வேந்தன் முதலில் பேச ஆரம்பித்தான்.
Advertisement
” அரசி இந்த கோயிலுக்கு அடிக்கடி வருவியா என்ன?.. உங்க வீட்டல இருந்து இந்த கோயில் கொஞ்சம் அதிகம் தூரம் இல்ல. “
” அடிக்கடியெல்லாம் வரமாட்டேன்.. 3 ல்ல 6 மாதத்திற்கு ஒருமுறை. இல்ல முக்கியமானது தொடங்கும் முன்.. இல்ல முக்கியமானது பதில்வரும் போதோ கண்டிப்பா வருவேன். ஏதோ இந்த கோயிலுக்கு வரும்போது மனசு லேசானமாதிரி இருக்கும். யாரோட வரனோ அவங்களோட சாமியை ஒருமுறை தரிசனம் பண்ணிவிட்டு.. நான் மட்டும் தனியா வந்து.. ஒவ்வொரு சாமிய பொறுமையா கும்பிடுவதற்காகவே.. அடி பிரதஷ்ணம் பண்ணுவேன். அப்படி வரும்போது ஒவ்வொரு சாமிகிட்டையும் .. தனித்தனி அப்பிளிகேஷன் போடுவேன். நான் நினைத்தது நிறைவேறுனா அடுத்ததடவை வரும் போது என்ன டீலீங் போட்டனோ?. முழுசா பண்ணுவேன்.. இல்லனா போன போகட்டுனு பாதி பண்ணுவேன். ஆனா இந்த கோயில் ரொம்ப பிடிக்கும். ” மெல்லிய புன்னகையுடன் கூற..
வேந்தன்.. எழில் கூறிக் கொண்டு இருக்கும்போது அவள் முகம் காட்டும் பாவனைகளையும் அணுஅணுவாய் ரசித்தும்.. அவள் கூறுவதையும் கன்னத்தில் கைவைத்து.. மெல்லிய புன்னகையுடன் கேட்டபின்.. ” ம்ம்.. நானும் முக்கியமானது.. ஏதாவது ஆரம்பிக்கும்போது கண்டிப்பா வருவேன். “
‘ தன்னைபோலவேவா!. ‘ என்ற மகிழ்ச்சியை கண்களிலும்.. இதழ் புன்னகையில் காண்பித்து.. ” ம்ம்.. ” தற்போது இருவரும் தங்களை பற்றி பேசுவதற்கு ஏற்ற மனநிலைக்கு வந்துயிருந்தனர்.
” அரசி..” உள்ளார்ந்த உணர்வை கலந்து.. மென்மையாக எழிலரசியை அழைக்க..
‘ அவளோ தான் அதிகம் கேட்டிடாத அரசி என்ற அழைப்பு!. எவர் குரலிலும் தான் அறிந்திடாத ஓர் உணர்வில் மயங்கி.. ஒருநொடி தன்னை மறந்து அவனையே பார்த்திருக்க.. அவனும் அதில் கலக்க.. கோயில் மணியோசையில் இருவரும் நிகழ்காலத்திற்கு வந்தனர். ‘
இருவரும் ஒரு நொடி அமைதிக்கு பின்.. மெல்லிய புன்னகையுடன்.. ” ம்.. சொல்லுங்க. ” அரசி என்ற அழைப்பிற்கு பதில் அளிக்க..
வேந்தன் அவளை பார்த்தவாறே.. அவள் கையை மெதுவாகப் பற்றி.. தன் கையுடன் வைத்து.. ” அரசி முதல்ல உன்னிடம் சாரி கேட்டுக்கிறேன். “
‘ வேந்தனுடன் பேசும்போது மட்டும் எழிலரசி இனி அரசி… ‘
‘ வேந்தன் வெகு இயல்பாக அவள் கையை பிடிக்க!.. அரசியும் அதனை ஏற்க!.. இருவரும் சேர்ந்து!.. கையை பற்றி இருப்பது.. வெகு இயல்பு போல அவர்களுக்கு உள்ளான இந்த கலந்துரையாடல் மாறியது. ‘
புரியாமல்.. ” எதுக்கு இப்ப சாரி கேட்கிறிங்க?..”
” அது நாம்ம இப்ப.. இங்கு பேச உனக்கு யோசிக்க கூட நேரம் கொடுக்கல.. நான் உன்ன பார்த்த உடனே.. பேசனு முடிவு எடுத்து.. எல்லோரிடம் அனுமதி வாங்கிட்டேன். ஆனா நான் பேசனு உன்கிட்ட சொன்னபோது.. நீ கேட்டவுடன்.. உன் முகத்தில் பதட்டதை பார்த்தவுடன் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அதுக்காக தான். “
அப்போது அரசி… வேந்தனை ஒருபார்வை பார்த்தாலே ஒரு பார்வை.. இல்லை இல்லை முறைத்தாலே ஒரு முறைப்பு.. அந்த பார்வை அவனுக்கு.. ‘ ஒ.. பேசலாமே.. வாடா பா தம்பினு.. நான் உங்க கூட பேச எப்படானு காத்துக்கொண்டு இருக்கிறேன் எனக்கூறி.. உங்க கூட சந்தோஷமாக ஒடி வந்துயிருக்கனுமோ!.. ‘ என்பது போல் இருந்தது.
புன்னகையுடன்.. “ ஒ!. ஓ!.. அரசி.. ஏன்? ஏன்? இப்படி ரொம்ப பாசமா பார்க்குற. சரி சரி.. நான் சாரிய திரும்ப வாங்கிக்கிறேன்.. உனக்கு இருக்கும்.. அதே பதற்றம் எனக்கும் தாம்மா!.. இருந்தது. உனக்கு எப்படி இங்க வந்த பிறகுதான் தெரியுமோ.. அதேமாதிரி தான் எனக்கும் இங்க வந்தது தான் தெரியும். நீ பதற்றத்தை லைட்டா முகத்தில் காண்பித்துக் கொள்கிறாய்.. நான் காண்பிக்கவில்லை. சாரி கேட்கனும் தோனுச்சு.. அவ்வளவு தான். ஆனா நான் எதுக்கு இப்ப.. இங்க பேசனு சொன்னேன் என்று கூறனும். ” அவள் முகத்தை பார்க்க..
” ம்ம்.. ” என்றவாறே தலையசைக்க…
” நம்ம வீட்டல இன்னைக்கு.. நம்மள பற்றி பேசி.. ஞாயிறுக்கிழமை அன்றைக்கு இப்ப நாம்ம பேசுர மாதிரி பேச வைத்து இருப்பார்கள். அப்ப வீட்டல நம்மள பற்றி சொல்லியிருப்பதால் கொஞ்சம் நம்ம இரண்டுபேரும் பேசுவதற்கு தயாராயிருப்போம். ஆனா இதே பதற்றம் கண்டிப்பா இருக்கும். அதான் உன்ன பார்த்த உடனே ஏன்?? இன்னும் இரண்டு நாள் கழித்து பேசறதுக்கு.. இப்பவே பேசிவிடலாமே என்ற முடிவுக்கு வந்துட்டேன். ” சரி என்பது போல கேட்டுக் கொண்டுயிருந்தவள்.
” ஆனா இப்ப நீ!.. எனக்கு 2 விஷயத்திற்கு நன்றி சொல்லனும்..” ஏன்?.. என்பதுபோல ஒருபார்வை பார்க்க..
புன்னகையுடன்.. ” முதலில்.. நம்ம எப்படி பேசுவோம், பழகுவோம் என்று.. நமக்கு இரண்டு நாள் பதற்றமா இருக்கும்.. ஆனா இப்ப பாரு.. 5 நிமிடம் தான் பதற்றம்.. நாமா இப்ப .. எப்படி?.. எந்த டென்ஷன் இல்லாம பேசுகிறோம். ( தம்பி உங்க இரண்டு பேர் வீட்டுலையும்.. நீங்க பேசுர விஷயம்தெரிந்த எல்லா பேரும் BP அதிகமாகி உடகார்ந்து இருக்காங்க..அது எங்க உனக்குதெரியப்போகுது..)
இரண்டாவது என அவள் பார்க்க.. ” வீட்டல சொல்லி நம்ம இரண்டு பேரையும் பற்றி தெரிந்துக் கொள்வதை விட.. நம்மளப்பற்றி நாமளே கேட்டு தெரிந்துக் கொள்ளலாம். அதனால உனக்கும் சேர்த்து.. நமக்கு.. நான் நல்லதுதான் பண்ணி இருக்கேன். அதுக்காக நான் நன்றியெல்லாம் கேட்கமாட்டேன் கவலைப்படாத. ”
சற்று விரிந்த புன்னகையுடன் கூற.. அதற்கு அவள் ‘ நக்கலு!.. ‘ என்பது போல லுக்விட..
‘ ஆமாம் முயல்குட்டி ‘ என கண்ணமூடி திறந்து.. ” அதனால நீ இப்ப என்கிட்ட சாதாரணமாக பேசனும், என்கிட்ட எதுனாலும் கேட்கலாம்.”
“ நிஜமா!.. எது கேட்டாலும் ஒன்னும் நினைக்க மாட்டிங்க தானே?? “
இல்லை என தலைசைத்தவன்.. ‘ என்ன கேட்டக போறாளோ தெரியலையே!..? ‘
” அதுது.. சாய்ந்திரம் வர வேண்டிய கோயிலுக்கு.. காலையிலேயே போலானு அண்ணி சொன்னதால.. அவரசமா கிளம்பினேனா.. இதில் நான் கொஞ்சமா தான் சாப்பிட்டேன். இங்கு வந்ததில் இருந்து கொஞ்சம் டென்ஷன், பதற்றமாவே இருந்தேனா.. ஆனா இப்ப பரவாயில்ல. எனக்கு ஏதாவது லைட்டா சாப்பிட்டா நல்லா இருக்கும். சாமி பிரசாதமும் அண்ணி கொண்டு போய்யிட்டாங்க. அதனால நாம இரண்டு பேரும் சாப்பிடுற மாதிரி கோயிலுக்குள்ள ஏதாவது.. இல்ல வாழைப்பழம் கூட போதும். வாங்கிட்டு வரீங்களா??.. ” தயக்கத்துடன் கேட்க..
அவன் சற்று அதிர்ந்து.. தலைதடவி.. ” சாரி டா அரசி. சாரி டா அரசிம்மா. இதோ வாங்கிட்டு வரேன் இரு. ” கூறிவுடனே.. வேகநடையுடன் சென்றான்.
எழிலரசி கன்னத்தில் கைவைத்தபடியே.. பதட்டத்துடன் கூறிச் சென்றவனின் வார்த்தைகளே சுற்றி வந்தது. ‘ சாரி டா அரசி. சாரி டா அரசிம்மா. கூறும்போது அந்த முகத்தில் எவ்வளவு வருத்தம்!.. பதட்டம். அதிலும் ” அரசி.. அரசிம்மா ” அதில் அவ்வளவு உரிமை, பாசம்!.. கொண்டு தன்னை அழைக்கிறான். ” அரசி” என்று எப்போதாவது அழைக்கும் அப்பாவை தவிர.. யாரும் அழைத்தாக ஞாபகத்தில் இல்லை.
ஆனால் மூளையில் எங்கோ என் நினைவில்.. இந்த குரலை கேட்டது போலவும்!.. கைபிடித்து இதேபோல் பேசியது.. ஏற்கனவே நடந்தது போலவே ஒர் உணர்வு!.. வீட்டில் உள்ளவர்கள் இல்லாமல்.. வேறு ஒருவர் தான்.. இவரைப் போல.. ஏன் இவரே கூடவும் இருக்கலாம்?.. ஆனால் யார் என்று தெரியவில்லை?..
இப்போது போலவே.. அந்த சமயத்திலும் எனக்கு மிகுந்த பயம்.. பதற்றத்தில் இருந்தபோது.. என் கையை பிடித்துக் கொண்டு.. என் பதற்றத்தை போக்கி.. இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதில் அவ்வளவு பாசம், பொறுமை. என் பயம், பதற்றத்தை போக்க வேண்டும்.. என்ற ஒரே எண்ணம்!.. அதற்கு முதலில் என்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து.. பின் தான் கூற வேண்டியதை கூறினார். ‘
‘ ஆனால்.. அதுவே திரும்ப நடைபெறுவது போலவும்.. ஆனால் இப்போது கூடுதலான உரிமை உணர்வு தெரிகிறது. ஆனால் இவரிடத்தில் மட்டும் ஏன் இதை நான் உணர்கிறேன்?. எனக்கு இவரைப்பற்றி ஒன்றுமே தெரியாது.. ஏன்? இவர் பெயர் கூட எனக் தெரியாது? தன் நினைவுகளில் உணரும் ஒர் நபரும்.. இவரும்.. ஒருவரா?.. இல்லையா? ‘ என எண்ணிக் கொண்டு இருக்க..
வேந்தனும் அதே நேரத்தில்.. நடந்து கொண்டே மனதிற்குள் தன்னை திட்டிக் கொண்டு இருந்தான். ‘ சாரி டா முயல் குட்டி!.. நான் ரொம்ப பதட்டபட வச்சுடேன். அடி பிரதஷ்ணத்தை முடிச்சு தண்ணியாவது உன்னை குடிக்க வைத்து.. பிறகு நான் பேச ஆரம்பித்து இருக்க வேண்டும். முயல்கிட்ட பேசனு நினைப்பில்.. எல்லா மறந்துபோச்சு எனக்கு. ஏதாவது வாங்கிட்டு வரிங்களா கேட்கும் அளவிற்கு நீ பாட்டுக்கு முயல் கூட பேசிட்டு இருக்க. ஆனா அந்த நேரத்திலும் கேட்டாபார்.. இரண்டு பேரும் சாப்பிடுற மாதிரினு.. எனக்கும் சேர்த்து யோசித்து இருக்குகா என்னோட முயல் குட்டி!.. ‘
அங்கு இருக்கும் கடை பார்த்தவன்.. நல்லவேலையாக சாப்பிடும் படியான உணவுப் பொருட்கள் இருந்தது. அதை வாங்கிக் கொண்டு அரசி இருக்கும் இடத்தில்.. அவள் எண்ணத்தின் நாயகன்!.. அவளின் மிக அருகில்.. நீண்டநாள் பழக்கம் போல நெருக்கமாக அமர்ந்தான். சக்கரைப்பொங்கல், வாழைப்பழம், தண்ணிர் பாட்டில் என தற்போதையை பசி மற்றும் இருவருக்கும் போதுமான உணவு இருந்தது. பின் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு.. அரசியின் கையில் வைத்து ‘ சாப்பிடு.. ‘ என பார்வை பார்த்து கொடுத்தான்.
அப்போது அவள் விழிகளில்.. ஏதோ குழப்பத்தில் அவளிற்குள்ளாகவே கேள்வி கேட்டுக் கொண்டு இருப்பது போல தெரிந்தது. என்னை பற்றியதாக இருந்தால் அவளாக கேட்கட்டும் என நினைத்து.. தான் வைத்துயிருந்ததை கொடுக்க அதை அவள் சாப்பிட்ட.. அவன் வாழைப்பழத்தை சிறிதுசிறிதாக அவளின் துணைக்கு சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
” இன்னைக்கு மட்டும்தான்.. அவசரமாக கிளம்பினதால் சரியா சாப்பிடலையா? இல்ல எப்போதும் ஒழுங்கா சாப்பிடமாட்டியா?.. ” அவனுக்கு தான் தெரியுமே முன் எப்படி இருந்தாள் என்று!.. அதனால் அவள் சரியாக சாப்பிடாமல் இருக்காளோ?.. என அக்கறை குரலில் கேட்டான்.
” அதெல்லாம் நல்லாவே சாப்பிடுவேன்.. இன்னைக்கு தான் இப்படி.. உங்களுக்கு சந்தேகம் என்றால்.. என் பாட்டிகிட்ட.. நீங்க வரும்போது கேளுங்க. கதை கதையா சொல்லுவாங்க.. அது..இதுனு.. செஞ்சு தர சொல்லி.. அவ்வளவு படுத்தியிருக்கேன். “
‘ நீ கூறியது உண்மையா?. பொய்யா?. என ஒருநாள் நானும் அறிவேன் ‘ என்ற பார்வை மற்றும் ‘ சரி ‘ என்ற தலையசைப்புடன்.. ” அரசி MBA முடித்து அப்பா, அண்ணாவும் பார்த்துக் கொள்ளும் மில், கடைக்கு போவதா.. சுரபி சொன்னாங்க. ஏன் சென்னை, கோவை இல்ல வெளியூர் சென்று பெரிய கம்பெனிக்களுக்கு வேலைக்கு போகாம இங்கயே போற. அதில் ஏதாவது காரணம் இருக்கா??.. ”
” ம்ம்.. இருக்கு. அதுவந்து.. வெளியூர் வேலைக்கு போகவேண்டும் எனில்.. எல்லாத்தையும் விட்டு.. அங்கு தனியா இருக்கனும். இல்ல பக்கத்தில் எங்கயாவது போகலாம்.. ஆனா அங்கு எல்லாம் டிரெயின் இல்ல பஸ்லாதான் போகனும். ஐந்து வருடமா கல்லூரிக்கு பஸ்ல போய்யிட்டு வந்தே!. செம்ம டைய்டு ஆகிட்டேன். நான் முன்னாடி எப்படி இருந்தேன் தெரியுமா? என்னோட எடையில பாதி கம்மியாகிவிட்டது. ” என சோகமாக கூறி..
” கல்லூரி கடைசி நாட்களில் அப்பதான் ஒன்னு தோணுச்சு. எப்படியும் ஒன்று இல்ல இரண்டு வருடத்தில் திருமணம் நடக்கும். அதனால் எங்க கல்யாணம் செய்து செல்கிறோமோ?.. அங்கு சென்று.. அதற்கு ஏற்ப பணியில் சேர்ந்து கொள்ளாம் என்று முடிவு பண்ணிட்டேன். ” ஆவலுடன் சொல்ல.. அதனை அவன் ஆசையாக பார்த்தும்.. ‘ ம் ‘ என தலையாட்டிய படியும் கேட்டுக் கொண்டுயிருந்தான்.
” அதனால.. 3 –ன் 1- னா.. ஒரு யோசனை பண்ணி.. அதுவரை வீட்டல இருந்துக்கொண்டு.. அம்மா, அப்பா கூட எந்த டென்ஷனும் இல்லாம ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன். கம்ப்யூட்டர் கிளாஸ் போனேன். இப்ப பிளவுஸ் டிசைன் கிளாஸ் காலையில் போயிட்டு.. அப்படியே அப்பா, அண்ணா கடைமில்லுக்கு போயிட்டு அண்ணா, அப்பா மதியம் வீட்டிற்கு போயிட்டு பின் வந்தவுடன்.. நான் கிளம்பி வண்டியில் வந்துடுவேன். பின்ன நானும் ஒரு வருசமா பழைய எடைக்கு வர ட்ரை பண்ணுறேன்.. ஆனா வரமாட்டேங்குது. ” ஜாலியாக ஆரம்பித்து.. வருத்தமாக முடித்தாள்.
சிரிப்புடன்.. ” ம்ம்.. சூப்பரா இந்த ஒரு வருடத்தை நல்லா உபயோகப்படுத்தி இருக்க. மூன்றாவதா.. சொன்னியே உன் பழைய எடை வரவைக்க நானும் உனக்கு உதவி பண்ணுறேன். சரியா.. ” ( அதை அவன் சிரித்துக் கொண்டு சொன்னானா? இல்லை சீரியஸ்சா சொன்னானா? என்பது அவனுக்கு தான் தெரியும்)
” எப்படி? எப்படி பண்ணுவிங்க? ” எனக் கேட்டாள்
புன்னகையுடன்.. ” பிறகு சொல்கிறேன்.. சரி நீ ஏதாவது என்னிடம் கேட்கனுமா??.. ”
பொங்கலை சுவைத்தபடியே.. ” அப்பாடி.. இப்பவாவது.. உங்களுக்கு கேட்கனும் தோனுச்சே. ஆமா உங்க பெயர் என்ன??.. எல்லாம் என் தம்பி.. அண்ணா.. மாப்பிள்ளை தம்பினு யாருமே உங்க பெயரே சொல்லல.. உங்க பெயர் கூட தெரியாம உங்க கூட பேசிட்டு.. சாப்பிட்டு இருக்கேன். ” கையில் இருக்கும் பொங்கலை காண்பித்து கூறியவள்.. ” முதலில் உங்க பெயர் கூறிவிட்டு.. பிறகு உங்களப்பற்றி சொல்லுங்க. ”
‘ அவளின் மனசாட்சியோ.. பெயர் தெரியாமையே.. இவ்வளவு பேசுற.. தெரிந்தால்?. ‘
புன்னகையுடன்.. ” நீ முதலிலே.. என் பெயர் கேட்பேன் என நினைச்சேன். ஆனா என் பெயர் இப்ப சொல்ல.. என்னைப் பற்றி முதலில் சொல்கிறேன்.
என்னுடைய அப்பா ரவிந்திரன், அம்மா சித்ரா. பெரியப்பாவுடன் இணைந்து.. உணவகம் நடத்தி வருகிறோம். 2 தங்கை.. முதல் தங்கை வினோதினி.. தனியார் வங்கியில் வேலை. கணவன் விஸ்வநாதன்–வழக்கறிகர்., திருச்சியில் இருக்காங்க. 2வது வசுந்தரா B. Tech படிக்கிறா. அவளுக்கு2 வருடங்கள் கழித்து ,தாய்மாமா பையன் கமலேஷ் உடன் திருமணம் முடிவு செய்துயிருக்கு. “
” நான் இப்போதைக்கு சென்னையில் ஒரு ரிசர்ச் கம்பெனியில் வேலைப்பார்க்கிறேன். எனக்கு உணவுப் பொருட்கள் தயாரிப்பு பிஸ்னஸ் பண்ணணும்.. அதுக்கான கடைக்கு.. உணவகம் பக்கத்திலேயே இடமும், ஃபேக்டரிக்கு இடம் திருச்சி ரோடு புறநகரில் இருக்கு. சென்னையில் இன்னும் அதிகமாக ஒன்று இல்ல ஒன்றரை வருடம் வேலை செய்யனும். அதன் பிறகு இங்க வந்து பிஸ்னஸ் ஆரம்பிச்சு செட்டில் ஆகிவிடலாம்.”
இவைகளையெல்லாம் வேந்தன்.. அரசியின் கைகளை அழுத்தமாக பற்றிக் கொண்டே கூறியிருந்தவன்.. இப்போது அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே.. ” இது தான் இப்போதைக்கு நான்.. வேந்தன்!. என் கனவு!. இதோட எழிலரசியின் கணவன் வேந்தனா ஆகனும் விருப்பபடுகிறேன். நீ!.. என்னை அரசியா என்னுள் வந்து ஆளனும்.. நாம வாழ்க்கை முழுவதும் ஒருவருக்கு ஒருவர் துணையா இருக்கனும் ஆசைப்படுறேன். ”
” உன்ன.. உன் வீட்டல இளவரசியா இருந்தவள.. என்னோட அரசியா இன்னும் அழாக பார்த்துக்கொள்வேனும்.. உன்னோட விருப்பம்.. கனவுவை.. உன்னுடன்!.. நான் கூட இருந்து நிறைவேற்றனும். இப்ப மகன், மகளாக இருக்க நாம்ம.. இனிமேல் மருமகன், மருமகளா.. நீ எங்க வீட்டுக்கும்.. நான் உங்க வீட்டுக்கு ஆகனு விருப்புகிறேன்.”
” அதற்கு.. நீ என்னை அரசியின் கணவன் வேந்தனா ஏற்றுக்கொள்வாயா??.. இல்ல நீ என் அரசியா என்னுள் வருகிறாயா எழிலரசி..??..”
அவனின் திருமண சம்மதத்தையும்.. தன் திருமண விருப்பத்தையும்.. அவளிடம் சம்மததிற்காகவும்.. தன்னுடய விருப்பத்தையும் அவளின் கண்களை பார்த்து கேட்டு கூறி முடித்தான்.
‘ அரசி சிலையென அசையாமல் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.. ஆனால் அவள் கண்கள்.. அவள் கேட்காமல் கண்ணிர் மட்டும் வந்து கொண்டு இருந்தது.. அவள்.. அவன் தன்னை.. குடும்பத்தை.. அவனின் கனவு.. வருங்கால திட்டம்.. ஆகியவற்றை கூறும்போது.. அவனின் பேச்சை ஆசையாகவும்.. ஓ!! சூப்பர்.. என நினைத்து கேட்டிருந்தவள்.
அதன் பிறகு தன் கையை பற்றி அவன் தன்னை கணவனாக ஏற்றுக் கொள்ளும் படி கூறிய விதம்… வார்த்தைகள்.. விருப்பங்கள்.. ஆசைகள்.. நான் அவனின் அரசியாக வரவேண்டும்மாம்.. என் கண்களை பார்த்து எவ்வளவு அழகாக.. தங்களின் வருங்கால வாழ்க்கை பற்றிய கனவுகளையும்… எதிர்பார்ப்புகளையும் கூறினான். ‘
‘ நான் அவனைப்பற்றியும்.. இந்த திருமணத்தை பற்றியும்.. எனக்கு எந்தவித தயக்கம், பயம், குழப்பம் தோன்றாத அளவிற்கு.. நாம் சேர்ந்து வாழப்போகும் வாழ்க்கை அழகாக இருக்கும்.. உனக்கு எல்லா வித்திலும் துணையாக இருப்பேன் எனக் கூறுகிறான். இவரை தன் வாழ்க்கை துணையாக ஏற்க எந்தவித தயக்கம், பயமும் இல்லை என.. என் மனம் அவனிடம் தன் சம்மதத்தை கூற சொன்னது..
ஆனால் திருப்பிக் கூற வார்த்தைகள் இன்றி.. அசையாமல் இருக்க.. ஆனால் எண்ணத்தை, மகிழ்ச்சியை, சம்மதத்தை, விருப்பத்தை தன் கண்கள் தானாக அவனிடம் கூறியது. ஆனால் வார்த்தையாக அவனிடம் கூற வேண்டுமே.. அதுதானே அவனுக்கு.. இல்லை வேந்தன்.. என்னுடையவனின் பெயர் ” வேந்தன் “ என்னுடையவனிடம் கூற வேண்டும். ‘
அரசி உதட்டில் புன்னகையுடன்.. அவன் கண்களை பார்த்து.. ” எனக்கு நீங்க என்னுடைய கணவனாகவும்.. நான் உங்க அரசியா வருவதற்கும்.. எனக்கு சம்மதம். ” கண்களில் மகிழ்ச்சியும், சந்தோஷமும், தன் வாய்மொழியாக தன்னவன் வேந்தனிடம் கூறினாள்.
வேந்தன் அவள் சம்மதம் என்று தெரிவித்தவுடன் முகம்கொள்ளா மகிழ்ச்சியுடன் ‘ என் முயல்குட்டி அரசிசி… ‘ என்று எண்ணியவாறே.. அவளை தன் தோளோடு அணைத்து விடுவித்தான்.
அரசி.. வேந்தன் தன்னை தோளோடு அணைத்து விடுவித்ததும்.. ‘ என்ன பண்ணுறிங்க!.. ‘ அவனை பார்க்க..
வேந்தனும் அவள் பார்வையை பார்த்து “சந்தோஷத்தில் கோயிலா இருக்கவும் லைட்டா தானமா பிடிச்சேன். இதுவே வேற இடமாக இருந்தால் என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமே!. வேறு. அவ்வளவு சந்தோஷத்தில் இப்ப இருக்கேன். சரி சரி.. இப்ப இந்த பொங்கல எனக்கு நீ ஊட்டிவிடுவியா?. ” கடைசி ஒருவாய் இருக்க.. அதனை புன்னகையுடன் கேட்டான்.
” என்ன??.. நான்.. உங்களுக்கு ஊட்டி விடனுமா?? ..” ஊட்டி விடு என்று வேந்தன்.. கூறியவுடன் தீடீர் என்று தன்னில் ஒட்டிக் கொண்ட வெக்கத்தை, தயக்கத்தை.. அவனின் முன் மறைக்க.. அவனை முறைத்த படி கூற..
புன்னகையுடன் வேந்தன் அந்த முறைப்பை ஏற்று.. ” சரி சரி.. ரொம்ப வெக்கப்படுற டா நீ. நான் இன்னொரு நாள் வாங்கிக்கிறேன். அரசி நாம்ம இந்த சந்தோஷமான விசயத்தை வீட்டல எல்லோரிடமும் சொல்லனும்.. எல்லோரும் நம்மள எதிர்பார்த்துட்டு இருப்பாங்க. கிளம்பலாம். ” எனக்கூறி தன் கையாலே.. அரசி அறியா வண்ணம் அவள் இதழை ஒரு நொடி பார்த்து.. இலையில் அவள் போதும் என்று தனக்காக வைந்தயிருந்த சர்க்கரை பொங்கலை அவன் உண்டான்.
அரசி வேந்தனின் சட்டென்ற செயலில்.. அவன் பார்வை உணரவில்லை.. ஆனால் அவள் கையில் இருந்து தான் அவன் கைக்கு இரண்டு தடவை மாறியது. அந்த செயல் தானே அவனுக்கு ஊட்டிய உணர்வில் இருந்தாள். உடல் ஒரு நொடி சிலிர்த்தது. தண்ணீரை எடுத்து பருகி கொண்டாள். புன்னகையுடன் அனைத்து பார்த்தவன்.. அவனும் தண்ணீர் பருகி.. தன் கைகுட்டியால் இருவரின் கையை துடைத்துக்கொண்டு அதனை பாதுகாப்பாய் வைத்து கொண்டான்.
‘ வேந்தன் எழுந்து தன் அரசியிடம் தன் கையை நீட்ட.. அரசியும் நீட்டிய வேந்தனின் கரம்பற்றினாள். ‘
‘ தங்களுக்குள் எழுந்த எண்ணத்தை, விருப்பத்தை, பகிர்ந்து.. அதனால் மகிழ்ந்து!. இருவரும் தங்களின் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்ற அழகான அற்புதமான தருணத்தை!. மாற்றிய அந்த இடத்திலேயே நின்று சில பல புகைபடங்களை எடுக்கவும் மறக்கவில்லை அவர்கள்.. மறப்போமா நாங்க…’
