Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 6.1

 

நாம் 6(1)

 

     முயல்குட்டியுடன் உடனே பேச வேண்டும் என  சட்டென்று முடிவு எடுத்து.. அரசியோடு சேர்த்து.. அனைவரையும் பதட்டப்பட வைத்ததை நினைத்து!.. சிறு வருத்தமும் இருக்க தான் செய்கிறது.



Advertisement

     ‘ பெற்றோர்களிடம் அரசியிடம் பேச அனுமதி வாங்கியதும்.. அவளிடம் பேசி.. அவளின் திருமண சம்மதம் கிடைத்துவிட்டது தான். அரசியின் சம்மதம் கிடைத்து இருக்கவில்லை எனில்?.  !!! எனில்.. என்ற வார்த்தைகூட நினைத்து பார்க்கக்கூட முடியவில்லை. ‘

    எனக்கு.. இந்த வேந்தனிற்காகவே பிறந்தவள்!.  என் அரசி.. எழிலரசி.  எப்போதோ அவளுக்கும் எனக்குமான உறவை ஏற்படுத்தி.. எனக்குள்ளே சில மாற்றங்களை உருவாக்கி.. எதற்காகவும்.. யாருக்காவும்.. எந்த சூழ்நிலையிலும்  மாறாமல்.. மாற்றாமல்.. முடிவாக இருந்தது என் மனம்!. என் மனத்திற்குள்.. என் அரசியால் மட்டுமே நுழைந்து.. என் மனதை ஆளமுடியும்  என்பதால்தான்.. என் அரசியை நான் பார்த்தவுடன்.. அவள் என்னவளாக உடனே வரவேண்டும்.. அதனை அனைவரும் அறிய வேண்டும்.. என்பதற்காகவே இத்தகைய  அதிரடியான முடிவுவா? ‘ 

    ‘ யாரும்.. ஏன்? என் அம்மா அப்பா கூட நான் நடந்து கொண்டதை  எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். திருமணம் பற்றிய பேச்சு வார்த்தைக்கே.. ஏதாவது பிரச்சனை செய்வேன் என பயந்து!. என் நலனிற்காக.. எனக்கு விருப்பமானவர்களை வர வைத்தவர்கள். எனக்கு அது தெரிந்தும்.. அவர்கள் பார்த்த பெண் என்றாலும்.. இத்தகைய அதிர்ச்சியை  கொடுக்க ஒரே காரணம்.. என்னை ஆட்சி செய்யும் அரசி என்பதால் மட்டுமே தன் செயல் என்று.. தன்னை நிலைப்படுத்திக் கொண்டு.. ‘ 

Advertisement

   ‘ இன்றைய அவசர முடிவு போல் எதிர்காலத்தில் எடுக்க கூடாது. அப்படி நான் செய்யும் செயல்.. சில சமயங்களில் அரசி மீது தவறான எண்ணத்தை உருவாக்கிவிடும்அரசியை யாரும்.. எதுவும் சொல்லக்கூடாது. ஏன்.. அது நானாக்க கூட இருக்கக்கூடாது. எக்காரணத்தை கொண்டும் அவளின் மதிப்பு, மரியாதை குறையக்கூடாது. நான் இனிமேல் அனைவரின் வழிநடத்தலுடன்.. அதேசமயம் என் விருப்பத்தையும் கூறி.. தன் அரசியை!.  அனைவரின் ஆசிர்வாதத்துடன் என் மனைவியாக, வீட்டின் மருமகளாக கொண்டு வரவேண்டும். ‘ 

Advertisement

    ‘ இனிமேல் நான் பொறுமையாக, நிதானமாக நடந்துக் கொள்ள வேண்டும். இப்போது வீட்டில் உள்ளவர்களின் மனம் வருந்தாமல் சமாதானம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும்.. அககளிப்புடன் தன்னவளை.. தன் அரசியை மனதில் சுமந்து கொண்டு வீட்டின் நுழைவாயில் வலதுகாலை எடுத்து வைத்து வீட்டின் உள்ளே வந்தான். ‘ 

    அங்கு அப்பாவின் அம்மா அப்பா, அம்மாவின்.. அப்பா, அம்மா, பெரியப்பா மாணிக்கம்,பெரியம்மா சாந்தி, அப்பா ரவிந்திரன், அம்மா சித்ரா, ஈஸ்வர் அண்ணா,  காவ்யா அண்ணி, யோகா அக்கா, கார்த்திக் மாமா,  தங்கை வினோதினி, வினோதினியின் கணவர் விஸ்வநாதன், 2வது தங்கை வசுந்தரா, மாமன் மகன் கமலேஷ் நண்பர்கள் வினோத்தும், திலகனும் என.. நல விரும்பிகள் அவனை ரவுண்டு கட்ட காத்து இருந்தனர்.

    வாசலில் கேட்ட பைக் சத்தத்தை வைத்தே.. அவன் வருவதை ஊகித்து.. அனைவரின் பார்வையும் அவன் மீது திரும்பியது. ‘ கடவுளே!. ‘ இப்ப என்னை காப்பாற்றி விடுப்பா!. வேண்டுதல் இப்ப ஞாபகம் வரல.. பிறகு சொல்கிறேன்.. பீளிஸ் கடவுளே!. ‘ என அவசர பெட்டிசன் போட்டான் கடவுளுக்கு.

Advertisement

    வேந்தன் அனைவரையும் புன்னகையுடன்.. ” வாங்க.. எல்லோரும்என வரவேற்று தன் கைகளில்இருந்த இனிப்புகளை ஹாலின் நடுவில் இருந்த மேசையின் மீது வைத்துவிட்டு.. தன் இரண்டு  தாத்தா, பாட்டியின் அருகில் சென்று அமர்ந்தான்.

     எல்லோருக்கும் அவன் செய்த செயலை எண்ணி.. அவனை வரவேற்கவும் முடியாமல்.. திட்டவும் முடியாமலும் அமர்ந்தது இருந்தனர். அனைவரும் அவன் திருமண விஷயத்தை பற்றி தான் பேச வந்தனர். அவனது விருப்பம் அறிந்து.. அதனை ஏற்று.. அதன்படி வந்த சம்பந்தத்தை பற்றி வேந்தனிடம் பேசி.. முறையாக எல்லாம் நடக்க வேண்டும் என எல்லோரும் நினைத்து இருக்க..

     தீடிர் என்று இவன் அந்த பெண்ணிடம் ( எழிலரசி) பேச வேண்டும் எனக் கூறி எழிலரசியிடம் பேசிவிட்டு வந்துள்ளான். அவன் எப்போதும் தன்னுடைய செயல்கள், முக்கிய முடிவுகள்அனைத்தையும் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்து.. அதன்படி செய்ய கூடியவன்.. அதனாலே திருமண சம்பந்ததை பேச அனைவரும் வந்தனர். ‘ 

    ஏனெனில் திருமணமான அனைவருக்கும் சொந்தங்களுக்கு கிடையே நடந்தது. இவனின் திருமணம் தான் முதல்முறையாக அன்னிய குடும்பத்தில் பார்த்திருக்கும் வரன். இவர்கள் போலவே பெண் வீட்டிலும் இந்த திருமணம் முதல்முறையாக அன்னிய குடும்பத்தில் எடுக்கும் வரன். அவனாகவே எடுத்த  இந்த முடிவால் இரு வீட்டினருக்கும் சிறிதும் வருத்தம் வரக்கூடாது.

    இரு வீட்டினரும் மற்றவர்களின் குடும்பத்தை ஏற்கனவே  தெரிந்து இருந்ததால் தான். அவர்களுக்கு வேந்தன் செய்ததை சமாளிக்கவும்.. அவர்களை பேசவைத்து அவனின் விருப்பத்தை நிறைவேற்றவும் முடிந்தது. இப்போது நல்ல முடிவுடன் தான் வந்து இருக்கிறான். ஆனால் இதுபோல் இனி நடைபெறாமல் இருக்க.. அவனை இலகுவாக இப்போது நடத்தக்கூடாது.. அதனால் அவனை அனைவரும் கண்டிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தனர். ‘

   வேந்தன் சிறிதுநேரம் அவர்களின் அமைதியை பார்த்தான்.. ம்ஹூம்.. இனிமேல் நாம அமைதியாக இருக்ககூடாது என நினைத்து.. ” ஏன்?. எல்லோரும் அமைதியாக இருக்கிங்க.?.  எல்லாம் நல்ல படியா நடந்து.. எழிலரசி சம்மதத்துடன்  சந்தோஷமா வந்து இருக்கேன். அதை கொண்டாடுவதற்கு எல்லாருக்கும் பிடிச்ச ஸ்விட் எல்லாம் வாங்கி வந்துயிருக்கேன்..  எல்லாம் அமைதியாக இருக்கீங்க.

    எப்படியும் நீங்க எழிலரசியோட என் திருமணத்தைப் பற்றி தானே பேச வந்திங்க. அதை நானே நல்லபடியா முடிச்சுவிட்டேனே என்று.. சந்தோஷசப்படாமா!. அமைதியாக இருக்கறது நல்லா இல்ல. இனிமேல நீங்க வருத்தப்படுற மாதிரி.. இதுபோல நடக்காமா நான் பார்த்துக் கொள்கிறேன் சரியா. நான் செய்த காரியத்தை மன்னித்து.. இந்த இனிப்பு எல்லாம் எடுத்துப்பிங்களாம். “

     அனைவரிடம்  புன்னகையுடன் மன்னிப்பு வேண்டிய பின்.. முதலில் விரைவில் சமாதானம் அடையும் தாத்தா, பாட்டியிடம் இனிப்பை நீட்ட.. அவர்களும் மற்றவர்களை ஒர்பார்வை பார்த்து.. புன்னகையுடன் நெற்றிமுத்தம் கொடுத்து அவனிற்கு மன்னிப்பு மற்றும் அவர்களின் மகிழ்ச்சி, அவனின் அரசியின் வருகையானால் ஏற்பட்ட சந்தோஷத்திலும் பங்கெடுத்தார்கள்.

    மெல்லிய புன்னகையுடன்.. அம்மா சித்ராவிடம் சென்றவன்.. ” வேந்தா நீ பண்ணியதை  இப்ப நினைத்தா கூட பயமா இருக்குடா. டேய் உன் மேல இருந்த கோபத்த விட.. அந்த பொண்ண நினைச்சு தான் டா வருத்தமா, கவலையா இருந்துச்சு.  அந்த பொண்ணுடன் ஆன உன் திருமணத்திற்கு தான் இவங்க எல்லாம் பேசத்தான்.. எல்லாம் கிளம்பிட்டு இருந்தாங்க.. திடிர் அந்த பொண்ணுடன் பேசனு சொல்லுறஇதை கேட்ட நாங்களே.. உன்னைய தெரிந்த எங்களுக்கே அந்த நேரத்தில் என்ன பண்ணப்போற?. எப்படி பேசப்போறனு பயமா இருந்ததுடா!..

    பாவம்டா அந்த பொண்ணு..  அந்த பொண்ணுக்கும் இன்னைக்கு தான் அவங்க  வீட்டல நீ தான் மாப்பிள்ளை என்று சொல்ல இருந்தாங்களா.. நீ போய் பேசனும் சொன்னவுடன் பதட்டமா !.. இருந்தானு. யோகா சொன்னா. உன்னைய என்ன பண்ணலாம் சொல்லு?.. ” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

     அம்மா.. அரசிய பத்தி யோசிக்காம நான்  எதுவும் பண்ணலமா. அவளோட பதட்டம் குறைந்து அதன் பிறகுதான் மா நான் இந்த திருமணம் பற்றியே பேச ஆரம்பித்தேன். அக்கா சொன்னவுடன் எனக்கு அப்போ தோன்றியது ஒன்று மட்டும் தான் ( மனத்திற்குள் 2 காரணம். 1-அரசி) மா. எங்களை பற்றியும்.. எங்களின் குடும்பத்தை பற்றியும் நாங்களே சொல்லி தெரிந்து கொண்டால் இன்னும் நல்லா இருக்கும் நினைத்தேன் மா.. அதனால்தான்.” என்று தன் விளக்கத்தை கூறினான்.

    வினோதினியின் கணவன் விஸ்வநாதன்..  அதெல்லாம் ஓகே வேந்தா. அந்த பொண்ண பார்த்தவுடன் நீ பேசனும் சொல்லிட்ட. பொண்ணுட குடும்பத்திற்கு நம்ம குடும்பத்தை பற்றி தெரிந்ததால் நீ பேசனும் சொன்னவுடன் மாற்று கருத்தோ.. இல்லை பிரச்சனையோ பண்ணாம சரின்னு சொல்லிட்டாங்க. இல்லையினா  இரண்டு குடும்பத்திற்கும் சங்கடம் ஆகியிருக்கும். ”

    வேந்தனின் அப்பா ரவிந்திரன்நீ பேச நினைத்து தப்பில்லப்பா.. இப்ப நீங்க தனியா பேசுனத.. நம்ம இல்ல.. அவங்க சொந்தகாரங்க பார்த்து இருந்தா?. என்ன நினைத்து இருப்பாங்க சொல்லு? தேவையில்லா வருத்தம் தானாப்பா. ”

    யார் பார்த்தா என்ன அப்பா?..  கேட்டா.. கல்யாணத்திற்கு பார்த்த பொண்ணு சொல்ல வேண்டியதுதான். ”

    கார்த்திக் மாமாவேந்தா.. புரிந்து தான் பேசுறியா?.. பொருத்தம் மட்டும்தான் பார்த்து இருக்கு. இரண்டு வீட்டலயும் இருப்பவர்களே.. இன்னும் முறையா பேசல டா. முக்கிய சொந்தகாரங்க இல்லாம நாமா எப்படி போய் பேசியிருப்போம் சொல்லு?.. ”

      கேட்டுயிருந்தா.. நான்தான் சொன்னேன்.. என்னைய சொல்லியிருக்கலமேமுதல பொண்ண.. வீட்டல இருக்கறவங்க பார்த்து அப்புறம் சொந்தகாரங்க எல்லாம் சேர்ந்து உறுதி பண்ணலாம் இருந்தோம் என்று சொல்லியிருக்கலாமே. ” என்றதும்.. 

    இதனை கேட்டு சற்று தனிந்து இருந்தவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப.. அதனை பார்த்தவன்.. ‘ அய்யோ வேந்தா மலையிறங்கிய பார்வைய  ஏற வச்சுட்டனா!.. ‘ காலில் விழுந்துவிடு

    ” சரிங்க அப்பா.. நீங்க  அரசி வீட்டல இப்ப பேசி.. ஞாயிறுகிழமை நீங்க நினைச்ச மாதிரி எல்லாரும் போய் பார்த்துட்டு.. அன்றைக்கே உறுதி பண்ணுற மாதிரி பண்ணிக்கலாம் என்று கூறி..  சொந்தகாரங்களை முறைய கூப்பிட்டு விடுங்கப்பா. “

    அவரும் யோசித்து.. ” ம்.. சரிப்பா.. இனி நடந்தத பேசி ஏதும்  பண்ணமுடியாது. இப்போது பிரச்சனை வரல. நீ சொன்னபோல் இனிமேல் நடக்காமா பார்த்துக்கோ. நடக்க போவதை பார்ப்போம். எழிலரசி வீட்டினருடன்  பேசலாம்..  நீ போய் சாப்பிடு. எங்களுக்கு  இந்த திருமணம்  உறுதியானதுல ரொம்ப சந்தோஷம் வேந்தா. சித்ரா இனிப்பு எடுத்து எல்லாருக்கும் கொடும்மா. ”

    தானும் இனிப்பு எடுத்துக் கொண்டு தன் அண்ணண்.. அப்பா, மாமாவுடன் மதியம் எப்போதும் ஓய்வு எடுப்பதால்.. இன்றும் ஓய்வு எடுக்க கீழே உள்ள இரு அறைகளுக்கு சென்றனர். மாடி அறைகளில் குட்டிஸ்கள் உறங்கியிருந்தனர். கார்த்திக், ஈஸ்வர் இனிப்பு சாப்பிட்டு தங்களின் கடைக்கு சென்றுவிட்டனர்.

     அனைவருக்கும் இனிப்பு கொடுத்துவிட்டு.. அமர்ந்த சித்ரா.. அவர்கள் எல்லோரும் ஓய்வு எடுக்க அறையினுள் செல்லும் வரை காத்திருந்து.. ” வேந்தா என்னிடம் அடி வாங்காமா போகமாட்ட என்று நினைக்கிறேன். இப்பதான் ஒரு ஷாக் கொடுத்த அதுக்குள்ள அடுத்ததாடா. முதல இப்ப பொண்ணு வீட்டல என்ன மனநிலையில இருக்காங்க தெரிந்து கொண்டு.. அதன்பிறகு தான்டா.. அவங்களிடம்  உறுதி பற்றி பேசனும். உறுதி அன்றைக்கு இரண்டு வீட்டு.. எல்லா உறவினர்கள் இருக்கனும். அதனால நீ சொல்வது.. நினைத்தவுடன் முடியும் காரியம் இல்லடா. ”

    ” ஏன் முடியாதும்மா?.. நம்ம வீட்டல இப்ப எல்லோரும் இங்கதான் இருக்காங்க. கண்ணன் மாமா கூட இங்கதான் இருங்காங்க. அரசியோட வீட்டல மட்டும்தான் பார்க்கனும். அங்கயும் கூட அரசியோட அண்ணி சுரபியிடம் பேசியதில்.. அவங்க சொந்தகாரங்க எல்லாம் உடனே வரும் தூரத்தில் தான் இருப்பாங்க நினைக்கிறேன். இன்னைக்கு பேசிட்டு.. நைட் கொஞ்ச பேருக்கும், நாளை மீதி பேருக்கும்.. சொல்லிக்கலாம் மா. இது இங்க இருக்க எல்லோருக்கும் வசதியும் கூட. ” தனது யோசனையை கூற..

     சித்ராவும் வேந்தன் கூறியதற்கு  என தலையசைக்க தான் நினைக்கிறார்.. ஆனால் முடிவு இவர் ஒருவரால் எடுக்கக் கூடியது அல்லவே.

     டேய் வேந்தா.. இப்ப நீ சொன்னில யோசனை.. அதை எங்க எல்லோருரையும் பார்த்த பிறகு போட்டியா?.. இல்ல  பிளான் போட்ட பிறகு தான் எங்கள பார்க்க வந்தியா?.. ” என ஒரு நண்பன் வினோத்தும்..

    நீ சொன்னதில் யாருக்கு ரொம்ப வசதியாக இருக்கும்?.. ” என்று மற்றொரு நண்பன் திலகன் வேந்தனிடம் யாரும் கேட்க வண்ணம் கேட்க.. இருவரையும் பார்த்து முறைத்தான். ‘ போடா டேய்என இருவரும் திரும்பிக் கொண்டனர்.

     ஆமா இனிப்பு பேக்கு.. அந்த பொண்ணு வீட்டுக்கு இரண்டு பைநிறைய போச்சு.. இங்கு என்னப்பா ஒன்னே ஒன்னுதான் வந்து இருக்கு?… அத  என்னானு கேளுக்க அத்த. ?. “  மாமா பையன் கமலேஷ் கேட்க..

    அம்மா.. அது  அரசியோட அண்ணி வீட்டுக்கு ம்மா.. அவங்களும் கோயில்ல கூட இருந்தாங்க. அதனாலதான்மா. அக்காக்கு கூட நான் தனியா வாங்கிட்டு வந்து இருக்கேமா. ஆமா.. உனக்கு எப்படி டா தெரியும்?. ” என கமலேஷ் இடம் திரும்பி கேட்க..

    அதெல்லாம் தகவல் தானா வரும். சரி அந்த கடையில் இருப்பதை மட்டும்தான் அங்கு சாப்பிட முடியும்.. பிறகு எப்படி டா  வெளிப்பொருட்களும் உள்ள விடமாட்டாங்க.. அப்புறம் எப்படி? டா.. உங்க இரண்டு பேர் கையில ஜுஸ் வந்தது. ” 

    அரசி ரொம்ப டையடா இருந்தா.. சாப்பிடல. அந்த கடையின் உரிமையாளரை தெரியும்.. அதனால அவரிடம் கேட்டுதான் வாங்கி கொடுத்தேன். ” அனைவரும் இவர்கள் பேச்சை கேட்டு கொண்டுதான் இருந்தனர்.

    வேந்தனின்  சிறிய தங்கை  வசுந்தரா சிரிப்புடன்.. ” அண்ணா.. யோகா அக்கா சொன்னாங்க. அண்ணி பெயர் எழில் என்று.. நீ என்ன அரசினு சொல்லுற. ” அவளுக்கு தெரியும் அண்ணியின் பெயர் எழிலரசி என்று.. தன் அண்ணாவிடம் விளையாட்டிற்கு கேட்டாள்.

     மென் புன்னகையுடன்.. ” உங்க அண்ணி பெயர் எழிலரசி.. அதனால்தான். “

     பெரிய தங்கை வினோதினி.. ” அண்ணா.. நாம்ம அண்ணியோட  இப்ப பேசலாமா.?. ” 

    இல்ல வினோ.. நாம்ம பேச வேண்டாம். வேந்தன் மட்டும் எழிலரசியோட பேசட்டும். ஆனா ஸ்பீக்கர் போட்டு பேசட்டும். கோயில் என்னா கலாட்டா பண்ணுனான்.. இப்ப நம்ம முறை வினோஅப்பதான்  நமக்கு  எழிலிடம் இவன் பண்ண கலாட்டாவோட பலன் என்ன?.  என்பது நமக்குதெரியும். “

     அக்கா.. இது கொஞ்சமும் நல்லா இல்லக்கா. அரசி எப்பாடா  போன்ல மாட்டுவேன் பார்த்துட்டு இருப்பாக்கா.  நானே  போய் தலைய கொடுக்கனுமா?.. ”

   யோகாஆம்என தலையை ஆட்டி.. ” யாரெல்லாம் இதற்கு சம்மதம்அனைவரிடமும் கேட்க.. புன்னகையுடன் அவன் அம்மா சித்ரா உட்பட சரி என்று சொன்னார்கள்.  அவன் காலையில் படுத்திய பாடு அப்படி.. சாப்பிட்டவுடன் அனைவருக்கும் நல்ல பொழுதுபோக்கா இருக்க போகிறது என்று எண்ணினர்.

   வேந்தன்நீங்க கூடவாமா பையன் திட்டுவாங்குவதை  அம்மாவை பார்க்க ஆசைபடுறீங்க?. ‘ என்பது போல பார்க்க.. பார்வை புரிந்தவர்.. ” நீ திட்டு வாங்கறத  இப்பவே பார்த்து பழகிக்கத்தான்

    ஸ்பீக்கர் போனில் வேந்தனின் தலைவி அரசியின் உடனான காதல் படத்தை கேட்க.. எல்லோரும் முடிவு செய்து விட்டனர்.

காதலன் வேந்தனாக.. காதலோடு தன்னவள் எழிலரசிக்கு போன் செய்ய..

     .. .. ..  .. ..     .. .. .. .. ..

     என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி

     எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி

     நெஞ்சைத்தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி

     எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி

    அன்பே ஓடி வாஅன்பால் கூடவா.. பைங்கிளி

    நிதமும் என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி

    எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி..

 

     என்ற பாடலுடன்..  போன் ரிங் எல்லோருக்கும் கேட்டது.. காதல்.. ஆவல்.. ஆசை.. எல்லோரும் ஓவ்வொரு மனநிலையில்இருந்தனர்

      எழிலரசி தன்னுடைய  போனில் அழைப்பவர் பெயரை பார்த்து சில நொடிகள் கழித்து எடுத்து..  ” சொல்லுங்க.. ”

     வேந்தன் பாடலை கேட்டு.. ஒருவித மயக்கத்துடன் இருந்தவன்.. அரசிசொல்லுங்கஎனக்கூற.. ‘ உன் மன்னவன்!..  ‘ என மனதில் கூறிய படி..  நான் வேந்தன். 

     ம்.. வீட்டல இருக்கிங்களா?. எல்லோரும் நல்லா இருங்காங்களா?.. 

     அவனுக்கு அவள் குரல் சோகம் மற்றும் ஏதோ யோசனையில் இருப்பது போல இருக்க..” ம்.. வீட்டலதான் இருக்கேன். எல்லாம் நல்லா இருக்காங்க.. நீ சாப்பிட்டியா?..  உங்க  வீட்டல எல்லோரும் நல்லா இருங்காங்களா?.. ஏன்?.. ஒன்னோட வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு?.. “

   இப்ப இவனோட பேசுனா.. என்னோட வாய்ஸ் வைத்தே கண்டுபிடுச்சு விடுவான்.. அவ்வளவு தான்பிறகு பேசலாம் என நினைத்து.. ” எல்லாம் நல்லா இருக்காங்க.. சாப்பிட்டேன்.. தூங்கப்போறேன்.. சாய்ந்தரம் கால் பண்ணுங்க?.. வைக்கட்டா?.. ”

   கண்டிப்பாக ஏதோ இருக்கிறது.. ” நான் சாய்ந்திரமும் கால் பண்ணுறேன். ஆனா இப்ப ஏன்  உன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்குனு ??.. சொல்லிட்டு.. பிறகு தூங்கு அரசி. ”

    அனைவரும் ஏதோ என்று அவளை நினைத்து கவலை கொண்டு வருந்த.. பிறகு அது தவறு என்று நினைக்க வைத்தாள்.

    

     

    

   

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!