நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 6.2
நாம் 6(2)
Advertisement
அரசி.. இவன் என்கிட்ட திட்டு வாங்கிட்டு தான் போகப்போறான்.. ” முதல ஒன்னு சொல்லிவிடுங்க.. அது நான் உங்கள திட்டினா, ஏன் இப்படி பண்ணுனிங்க??.. கேள்வி கேட்டா?.. இப்படி பண்ணியிருக்கலாம் என கூறினா.. நான் இப்ப என்ன நினைக்கிறேன் என்று கூறினா.. நீங்க எதுவும்நினைச்சு உங்க நண்பர்களிடமோ, இல்ல அத்தை, அண்ணி இவங்களிடம் கூறி அழக்கூடாது.. இல்ல வருத்தப்பட கூடாது சரியா.. நீங்க கேட்பதால் தான் இப்ப சொல்லப் போறேன்.. இப்ப கேட்கவில்லை என்றாலும் ஈவினிங் கால் பண்ணுறப்ப கேட்பேன்.. ஆனா இத கண்டிப்பா கேட்பேன். “
‘ இதை கேட்டு கொண்டு இருந்தவர்கள்.. முதலில் ஏதோ கேட்க நினைக்கிறாள் என்று நினைக்க.. அவள் யாரிடமும் சொல்லி அழக்கூடாது.. இல்ல வருத்தப் படகூடாது என்று கூறியதும்.. அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. சிறியவர்கள் சிரித்தாலும்.. பெரியவர்கள் ஏதேனும் இருவருக்கும் மனம் வருத்தம் ஆகி விடுமோ!. என்று நினைத்து வேந்தனை பார்த்தால்.. அவன் இன்னும் அதிகமாக சிரித்தான். அப்பாடா.. பிரச்சனை இல்லை என மிகிழ்ச்சி அடைந்து.. அவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தனர். ‘
ஆனால் வேந்தன் தன்னை சுற்றி இருந்தவர்களை அவன் நினைக்கவில்லை.. அவனுக்கு இருவரும் மனம்விட்டுபேசி அவளின் வருத்தத்தை போக்க வேண்டும். அவள் இப்படி உரிமையாக தன்னிடம் கேட்டதும் மகிழ்ச்சிதான்.
Advertisement
அதே சிரிப்புடனே.. ” நீ சொன்ன எதுக்கும் நான் அழமாட்டேன்.. ஏன் அடிச்சா கூட அழமாட்டேன்.. நீ நினைப்பதை கூறு அரசி.. அரசிமா.. “
Advertisement
” நீங்க…நீங்க முதல இந்த அரசி…அரசிமாவ!.. யாரு முன்னாடியும் கொஞ்சம் நாளைக்கு கூப்பிடாதிங்க.. தனியா வேணா கூப்பிடுங்க. சரியா. ”
புன்னகையுடன்..” ஏன் அரசி?.. ”
” ஏன்னா?.. என்னைய யாரும் அரசினு கூப்பிட்டது இல்ல. வீட்டலையும் கல்யாணம் பற்றி எதுவும் சொல்ல. நீங்க காலையில் பண்ண கலாட்டாவில்.. நானே என் மனசு.. மூளையில.. இந்த திருமணம்!.. நீங்கனு!.. இன்னும் நல்லா பதியனும்.. அதுக்கு முன்னாடியே நீங்க அரசி கூப்பிடுறது யாரையோ கூப்பிடுவது போல இருக்கு. சிறிது நாள் ஆகட்டும். அதுவரை எழிலரசினு.. எல்லார் முன்பும் கூப்பிடுங்க. நீங்க இன்னைக்கு வேற அண்ணி, இன்பா முன்னாடி கூப்பிட்டு இருக்கிங்க.. பார்த்த கொஞ்ச நேரத்தில ஷாட்டா பெயர் வைத்து கூப்பிடுறாங்கனு.. இங்க வீட்டுக்கு வந்து எப்படி ஒட்டுறாங்க தெரியும்மா!.. அதனால் தான் ” என கெஞ்சுதலாக முடித்தாள்.
Advertisement
புன்னகையுடன்.. ” பார்க்கலாம் அரசி.. ஆனா கஷ்டம்தான். “ அது அவளிடம் நான் யாருக்காவும் மாற்ற முடியாது.. எனப் பொருள் இருந்தது..
அரசி இவனை என்ன பண்ணலாம்?. நினைத்து.. அதைபின் பார்த்துக் கொள்ளலாம்.. நாம் கேட்க வேண்டியதை கேட்போம்.. ” சரி நான் பெயர் பிரச்சனைக்கு அப்புறம் வரேன். காலையில்ல பேசனும் என்று கேட்டுயிருக்கப்ப.. வீட்டல இருக்க பெரியவங்க மனநிலைய யோசிச்ச நீங்க.. உடல்நிலைய ஏன் யோசிக்கவேயில்ல?.. நான் வீட்டுக்கு வரும்வரை அம்மா.. கொஞ்சம் பயந்திட்டு சாப்பிடாமாவே இருந்துயிருக்காங்க. நம்ம சொந்தகாரங்க நம்மள கோயில்ல பார்த்து விடுவாங்களோனு.. பாட்டியும் கொஞ்சம் பயமாவே இருந்து இருக்காங்க. இதே மனநிலையில்ல தான் அத்தையும் இருந்து இருப்பாங்கனு நினைக்கிறேன். ” கூறிக் கொண்டு இருக்கும் போதே..
“ சாரி அரசி.. அவங்க இரண்டுபேரும் இப்ப ஓகே தானே. ” என்று கேட்டுக் கொண்டே.. தன்அம்மாவிடமும் ‘ சாரி அம்மா ‘ கண்களால் மன்னிப்பு வேண்டினான்.
பதட்டத்துடன் அவன் கேட்க.. ” ம்.. நல்லாயிருக்காங்க. நான் வீட்டுக்குள்ள நுழையும் வரை.. டல்லா இருந்த பாட்டி.. நீங்க அண்ணாகிட்ட வாங்கி கொடுத்த பொருட்களையும்.. என் கையில் இருந்த பூவையும், என் கழுத்தையும் பார்த்து.. கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி. பாட்டி அப்படி கேட்பிறகு தான் இந்த அண்ணியும்.. இன்பாவும்.. அமைதியா இருக்கும் இந்த அமுதன் அண்ணா கூட என்னைய ஓட்டுறாங்க. நானும் நீங்க வாங்கி கொடுத்ததை தலையாட்டு.. வாங்கிட்டு வந்துவிட்டேன். நான் அங்க என்ன சொல்லவேன்?.. எல்லாம் உங்க உங்களால் வந்தது. “
அவள் வேகமாக திட்ட.. அவளின் குரலை ரசித்தவன்.. ஆனால் அவள் கூறுவது அவனிற்கு ஒன்றும் புரியாததால்.. ” அப்படி பாட்டி என்ன சொன்னாங்க?.. நான் பாட்டிய பார்க்கும் போது அதுக்கு பதில் சொல்வேன்ல. ”
இவர் அதுக்கும் மேல.. விநாயகா..” ஏன்?.. அத என்னானு கேட்டுட்டு அடுத்த ஷாக்க எல்லாருக்கும் கொடுக்கவா?. இல்ல அப்படியும் பண்ணியிருக்கலாமோ?. என நீங்க நினைக்கவா??.. ”
மெல்லிய புன்னகையுடன்.. ” அரசி.. நீ என்னவென்று சொன்னாதானே என்னோட பதில் உனக்குதெரியும். ”
அரசி விடமாட்டான் போல.. ” அது.. அதுவந்து.. என்னோட கழுத்த பார்த்துட்டு.. பாட்டிசொல்லுறாங்க.. என் பேரன் பண்ண அதிரடியும்.. அவசரத்தையும் பார்த்துட்டு.. நீங்க என்னைய அப்பவே கல்யாணம் பண்ணிட்டு.. நைட்டுக்கு ஏற்பாடு பண்ண இன்பாவிடம்.. இனிப்பு வாங்கி கொடுத்திங்களோ!. நினைத்தாங்களா. “
‘ இதை கேட்டவுடன் வேந்தனை பார்த்து.. அவன் செய்த செயலை எண்ணி சிலர் சிரித்தனர்.. சிலர் முறைத்தனர்.. சிலர் சிரித்துக் கொண்டே முறைத்தனர். வேந்தன் அனைத்தையும் வாங்கிக்கொண்டான். ‘
‘ வேந்தன்.. நான் ஏன்?.. பாட்டி கல்யாணத்திற்கு அவசரப்படபோறேன். என் முயல்குட்டியோட ஒவ்வொரு திருமண சடங்கையும் அனுபவிச்சு எல்லாரோட ஆசியோட.. என் அரசியோட கழுத்தில் திருமாங்கல்யம் கட்டி.. எங்க வாழ்க்கை தொடங்குவோம் பாட்டி. ‘
புன்னகையுடன் ” அப்படியா சொன்னாங்க!. நான் பாட்டிய பார்க்கும் போது நான் இதற்கான பதில்சொல்கிறேன். இப்போதைக்கு அவங்க வருத்தப்பட்டதுக்கு என்னோட விளக்கம்.. அப்படியேயாராவது பார்த்து இருந்தா?. என்னோட பதில் கல்யாணத்திற்கு பார்த்த பொண்ணு சொல்லி இருப்பேன். நான்தான் சொன்னேன்.. முதல பொண்ண.. வீட்டல இருக்கறவங்க பார்த்து அப்புறம் சொந்தகாரங்க எல்லாம் சேர்ந்து உறுதி பண்ணலாம் இருந்தோம் என்று சொல்லியிருப்பேன். ” வீட்டில் கேட்ட போது கூறிய பதிலையே கூற..
” விநாயகா.. நீங்க புரிந்துதான் பேசிறிங்களா?.. இல்ல புரியாமா பேசிறிங்களா?.. தெரியல.. ஆனா நல்லா லூசு மாதிரி பேசுறிங்கனு மட்டும் எனக்கு புரியுது. ”
அனைவரும் இவன் கூறிய பதிலை கேட்டு.. அவனை முறைக்க.. எழிலரசியும் அவர்கள் வீட்டில் கூறியது போலவே கூறி அவனை திட்டவும்.. அப்பாடா இந்த பொண்ணிற்காவது புரிந்து இருக்கே என்று நிம்மதி அடைந்தனர்.. அவள் அவனிடம் புரியவைத்து விடுவாள் என எண்ணினர்.
வேந்தன் என்னா டா?. இதேதான் இங்கேயும் கேட்டாங்க.. என்ன எல்லாம் ஒன்னா முறைக்கிறாங்க?.. இதுல முயல்குட்டி.. லூசுனு வேற சொல்லுறா.. சோக குரலுடன்.. ” என்ன அரசி.. இப்படி திட்டுற?.. அம்மா கூட இப்படி திட்டுனது கிடையாது.. தெரியுமா?.. ”
” ஆமாம்.. நீங்க சொன்னத கேட்டவுடன்.. வாவ்!.. செம்ம பதில்!.. என்று உங்களுக்கு நான்அவார்டு கொடுப்பேன் நினைச்சிங்களா?.. நீங்க சொன்னத கேட்டா நாலுஅடி கூட உங்கள அடிக்கலாம். ஆமா அத்தை உங்கள திட்டுனது இல்லையா?.. நல்லா 18 வயசுலயிருந்து.. யோசிச்சுசொல்லுங்க.. நான் சொல்லுறது சரியா?.. இல்லையானு.. இந்த மாதிரி திடிர்.. திடிர்னு அவங்க சொல்லியும் நீங்க கேட்காத போது.. உங்களிடம் ஒரு 24வயது வரைக்கும் கண்டிப்பா திட்டுவாங்கிஇருப்பிங்க.. அப்புறம் 27வயது வரை ‘ சரி.. பண்ணாதனு. ‘ இரண்டும் சொல்லியிருப்பாங்க.. அதுக்குபிறகு ஒன்னும் சொல்லியிருக்க மாட்டாங்களே சரியா. ”
வேந்தன் தன்அம்மாவை பார்த்துக் கொண்டே..” ஆமாம் அரசி.. நீ சொல்வது சரிதான் அரசி.. ஏன்?..”
அரசி புன்னகையுடன்.. ” அப்ப அத்தையிடம் திட்டுவாங்கி இருக்கிங்க. அது ஏன்னா?.. நீங்க திடிர்முடிவு ஏதாவது எடுத்தா ஆரம்பத்தில் பொறுமையாக சொல்லி இருப்பாங்க.. நீங்க கேட்டு இருக்கமாட்டிங்க. வயசு ஆக ஆக நீங்க கேட்க மாட்டிங்கனு.. அமைதி ஆகி இருப்பாங்க. கல்யாண வயது வந்தவுடன்.. நீங்க கேட்காத சமயம் மனதிற்குள் நினைத்து இருப்பாங்க.. பார்க்கலாம் டா மகனே.. உனக்கு வர மனைவி இதேமாதிரி பண்ணு நாலுஅடி கொடுப்பா.. அப்ப தெரியும் டா என் அருமை.. அப்ப அம்மா அம்மா.. என்கிட்டதான் டா வருவனு நினைத்து இருப்பாங்க. “
” ஆனா அப்ப திடிர் எடுக்கற உங்க முடிவால் யாருக்கும் பாதிப்பு இல்லாம இருந்திருக்கும்.. அதனால எதுவும் சொல்லியிருக்க மாட்டாங்க.. ஆனா இன்னைக்கு நல்லா திட்டு விழுந்துயிருக்கும்மே?.. சரியா நான் சொன்னது.. அதிலும் இப்ப ஏன்கிட்ட சொன்னிங்களே அதை போய் சொல்லி பாருங்க.. அப்பதெரியும். ”
வேந்தன் அமைதியாக இருக்கவும்.. ” என்ன அமைதியாக இருக்கிங்க?.. ஓ.. அப்ப நீங்க இதே கேள்விய வீட்டல கேட்டு.. அதுக்கு என்னிடம் சொன்ன பதிலையே சொல்லி.. நல்ல திட்டு வாங்கியாச்சு போல. “
‘ அனைவருக்கும் என்ன நினைப்பது? என்று தெரியவில்லை.. எப்படி வேந்தனின் செயல் மற்றும் சித்ராவின் எண்ணத்தை அப்படியே சொல்கிறாள் என்று.. வேந்தன் உட்பட ஆச்சிரியமாக எண்ணினர். ‘
வேந்தன் சற்று சோகமாக.. ” ஆமாம்.. இதை சொல்லி நல்லா அம்மாட்ட மட்டும் இல்ல வீட்டல எல்லோரிடமும் திட்டு வாங்கியச்சு.. ஆனா அப்பா ஒன்னும் சொல்லல. அதான் பிரச்சனை வரவில்லையில்ல தானே.. அதனால இனிமேல் இது போல நடக்காமா பார்த்துக்கோனு சொல்லிட்டார். ஹே.. நீ எப்படி?.. நான் திட்டு வாங்கியதை நேரடியாக பார்த்தது போல அப்படியேசொல்லுற?.. “
அரசி புன்னகையுடன் ” ஆமாம்.. நான்தான் தினமும் பார்க்கிறேனே. ”
” என்ன தினமும் பார்க்கிறாயா? “
அரசி இன்னும் அதிக புன்னகையுடன் “ ஆமா.. தினமும் பார்க்கிறேன் சொன்னேன்.. உங்களை என்றா சொன்னேன்?.. நான் தினமும் பார்க்கிறது என்னோட அண்ணா இன்பாவை சொன்னேன். அண்ணா சில விஷயங்களில் உங்கள மாதிரிதான் பண்ணுவான். அம்மா இப்படி தான் நினைப்பாங்க. இதெல்லாம் உலகத்தில் உள்ள மகன்கள் நடப்பது… அம்மா நினைப்பது.. இவங்க இரண்டு பேரையும் கவனிப்பது எல்லா தங்கைகளின் பொழுது போக்கு. நான் சொல்வதில் சந்தேகம் எனில் உங்க தங்கச்சிய கேளுங்க.
என்ன சொன்னிங்க?.. மாமா அமைதியாக அதான் பிரச்சனை வரவில்லையில்ல என்றா?.. இனிமேல் இதுமாதிரி நடக்காமா பார்த்துக்கோனு சொல்லிவிட்டாரா?.. நீங்க இன்னும் காலையில்இருந்து நடந்தத நினைத்து பார்க்கலையா?.. “
என்னடா என யோசனையுடன்.. ” இல்ல.. “
யோசனையுடன் கூற.. அதற்கு அவசியம் இல்லை என.. ” சரி நானே சொல்கிறேன். ”
அரசி வீட்டிற்கு வந்தவுடன் இன்றைக்கு நடந்ததையும்.. நினைத்து பார்த்தையும் அவனிடம் கூற ஆரம்பித்தாள் “ என்னோட யூகம் இதுதான்.. நீங்க என்னிடம் பேச அனுமதி வாங்கியவுடன் அப்பாவும்.. மாமாவும் அனுமதி கொடுத்துட்டு.. அமைதியா இருந்து இருப்பாங்கனு நினைக்கிறிங்க?. கண்டிப்பா இருந்து இருக்கமாட்டாங்க. நம்ம கூட இருந்த அண்ணி இரண்டு பேரும்.. கோயில்லஅவங்களா வீட்டுக்கு வரமாட்டாங்களா என்ன?.. நீங்க கேட்டவுடன் அண்ணா இரண்டு பேருக்கும் போன் உடனே போயிருக்கும். நீங்களும் யோகா அண்ணி கணவருக்கு போன் செய்து இருப்பிங்க.. எப்படியும் அவங்க சீக்கிரமா கோயிலுக்கு வந்துயிருப்பாங்க. “
” வந்தவங்க.. அவங்கள பார்த்தவுடன்.. நம்மள பேச அனுப்பி இருந்தாலும்.. கோயில்ல நம்ம உறவினர்கள் யாராவது இருக்காங்களானு பார்த்தது இருப்பாங்க. அப்புறம் அண்ணி இரண்டு பேரையும் பத்திரமா தனியா அனுப்பி வைத்துவிட்டு.. அண்ணா இரண்டுபேரும் அங்கதான் இருந்து இருப்பாங்க.. இரண்டு பேருக்கும் பிஸ்னஸ் விஷயமாக தெரிந்தவங்க.. அதனால் நம்ம உறவினர்கள்வந்தாலும் ஒன்னும் நினைக்க மாட்டாங்க.. நமக்கும் உடனே கால் வந்து இருக்கும்.. அதனால்தான் நம்ம பேச வசதியாக இருந்தது. “
” நீங்க இன்பாவிற்கு போன் பண்ணவுடன் தான் அவங்க கிளம்பி இருப்பாங்க. உடனே இன்பா அங்கு இருந்துயிருப்பான். உங்க உறவினர் ஒருவரும் அங்க இன்பாவுடன் இருந்து இருப்பாங்க.. இன்பா நம்ம கடையில் இருந்தப்ப மெசேஜ் பண்ணிட்டு இருந்தானே.. நம்ம அப்பா, மாமா இப்படியாருக்காவது தான் இருக்கும். நம்ம எல்லாரோட நல்ல நேரம்.. உறவினர்கள் யாரும் வரல. எந்த பிரச்சனையும் இரண்டு வீட்டு சைடுலையும் வரல.. நாம்ம வீட்டுக்கு வருவதற்குள்ள அப்பாவும்.. மாமாவும் போன் பேசியிருப்பாங்க. அதனால் தான் மாமா அமைதியா உங்ககிட்ட பேசியிருப்பாங்க. “
அனைவரும் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தனர்.. வேந்தனும் சற்று யோசித்தான். ஆம் அரசி சொல்வது போலத்தான் இருக்கும் என்று தோன்றியது.. கமலேஷ் இனிப்பு கடையில் நடந்தை கூறியது.. அவன் அருகில் இருந்து பார்த்தது போலவே இருந்தது. அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான்.. அம்மாவும்.. கமலேஷ் பார்வை.. ‘ ஆமாம் அவ்வாறு தான் நடந்தது ‘ என தலையை ஆட்டினார்கள். வேந்தனுக்கு இப்போது கொஞ்சம் அவரசப்பட்டு விட்டோமோ?.. என்று மனம் வருந்தினான். ‘
அரசி வேந்தன் எதுவும் பேசாமல் இருக்கவும்.. ஓ.. பையன் அவரசப்பட்டு விட்டோமோ?. கவலைபடுகிறான் போல.. ” ஓய்.. என்ன லைன்ல இருக்கிங்களா?. இல்லையா?.. என்ன?. நாம்ம கொஞ்சம் அவரசப்பட்டு விட்டோமோ?.. ரொம்ப கவலைப்படுறிங்க போல.. நான் இப்படி நடந்திருக்க நிறைய வாய்ப்பு இருக்கு.. என்று நான் சொல்றேன். அவங்க அப்படி பண்ணியிருந்தா.. அவங்க எல்லாம்.. நம்ம பெற்றோர்.. மாமா.. அண்ணா.. அண்ணி முறையிலும்.. பிஸ்னஸ் பண்ணுறவங்க.. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில்.. நம்ம யாருக்கும் பிரச்சனை வராமல் இருக்க இப்படி முடிவு எடுத்து.. அவங்க எல்லாரும் சேர்ந்து பண்ணியிருந்தாங்க அப்படினா!.. ”
” நீங்க என்னிடம் பேசனும் நினைத்தவுடன்.. நீங்க அந்த நேரத்தில் யாரிடம் பேசினால் எல்லோருக்கும் விசயம் போகும்.. அவங்க என்னவெல்லாம் கேள்வி கேட்பாங்க.. அதுக்கான பதில்.. எல்லோருக்கும் ஓரே டைம்ல போன்கால்.. என்ன நாம்ம சொன்னா அவங்க மறுப்பே இல்லாமல் சரினு சொல்வாங்கனு.. அதற்கு ஏற்றார் போல எல்லோரிடமும் பேசி அனுமதி வாங்கியும்..”
” அதேசமயம்.. நீங்க.. உங்க குடும்ப உறுப்பினரா.. பொண்ணு பார்த்து.. நல்லபடியா முடிந்தால்.. பெரியவங்க என்னவெல்லாம் பண்ணுவாங்களோ.. பூ, இனிப்பு எல்லாம் எங்க வீட்டுக்கு வாங்கிகொடுத்து.. அதுவும் அந்த இனிப்பு எல்லாம் எனக்கு விருப்பமானது.. அதன்மூலமா எங்க வீட்லையும் வர மருமகனை பாராட்ட வச்சுயிருக்கிங்க… அண்ணாகிட்ட நீங்க.. நான் இன்றைக்கு எதிர்ப்பார்க்காமா நாங்க பேசிவிட்டோம்.. இனிமேல் நடப்பது எல்லாம் பெரியவங்க மூலம் முறையா நடக்கும் என ஒரு மணமகன்னாக நடந்து கொண்டிங்க.. இதை எல்லாம் பண்ணி எனக்குஉங்ககூடான திருமணத்தில் நம்பிக்கையை வரவச்சுயிருக்கிங்க.. “
” ஏதோ உங்களுக்கு காலையில என்னிடம் அப்பவே பேசனும் ஒரு எண்ணம்.. முக்கிய காரணம் ஏதும் இருந்து இருக்கும். அதனால பண்ணியிருக்கிங்க. இதையெல்லாம்.. தனியா.. ஒரு ஆள.. அழகா.. சூப்பரா எல்லாம் பண்ணியிருக்கிங்க.. அதனால நீங்க பண்ணது உங்க பார்வையில் சரி.. அவங்க அப்படி பண்ணியிருந்தா?.. அவங்க பார்வையில் சரி.. அதனால்நீங்க கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல சரியா.. ” என்று வேந்தன் மனவருத்தை குறைக்க அல்லது போக்க முயன்றாள்.
‘ அவள் எண்ணத்தில் வேந்தன் காலையில் பெரியவர்கள் இல்லாமல்.. தன்னை பார்த்தவுடன் பேச நினைத்து.. ஏதோ மனம் சம்பந்தப்பட்டது.. அதனால் தான் அவர் எடுத்த அதிரடி முடிவு. மற்றப்படி பெரியவர்களை மதிக்காமல் செய்த செயல் என்று தோன்றவில்லை. அதனால் தான்.. வேந்தனால் அந்த நேரத்தில் தான் அவரால் பதட்டம் அடைந்தாலும் அவர் செய்த செயலால் மனம் வருந்துவது தேவையற்றது என்று தோன்றியது. இனிமேல் யாரும் மனம் வருந்தாமல் வேந்தன் பார்த்து கொள்ளவேண்டும். ‘
‘ வேந்தனுக்கு அவள் கூறுவதை கேட்டவுடன் மனவருத்தம் பெரியளவில் குறைந்துதான் இருந்தது.. அதனைவிட தன்னை நன்றாக கவனித்து.. தன் மனவருத்தை போக்க முயல்கிறாள் என்று மனம் இனிமையாக உணர்ந்தது. அவள் தன்னை முழுமையான நம்பிக்கையுடன் தன்னவளாக வருவது.. ஒரு ஆண்மகனாக கவர்வமாகவும் இருந்தது. அப்பொழுது தான் சுற்றியிருப்பவர்களையும்பார்த்தான்.. அவர்களும் அவளின் கருத்தை ஏற்பவர்கள் போல வேந்தனை பார்த்துக் கொண்டு இருந்தனர். ‘
” ஹலோ லைன்ல இருக்கிங்களா?.. இல்லையா?.. “
” ம்.. இருக்கேன் அரசி.. அது எப்படி?.. அரசி.. என்னை பார்த்த கொஞ்சம் நேரத்தில் நான் இப்படி எண்ணத்தில் தான் பண்ணுனேன் என்றும்.. அப்பா, மாமா இப்படி செய்து இருக்க வாய்ப்பு இருக்கு.. எப்படி உனக்கு தோனுச்சு?..”
சிறு யோசனைக்கு பிறகு.. “ எப்படினா?.. அது.. நீங்க என்னிடம் நடந்துகிட்ட விதத்தில் தெரிந்துக் கொண்டேன். எல்லாத்திலும் உங்க தனியான விருப்பமும் இருந்தது.. அதே சமயம் பெரியவர்களுக்கு மதிப்பு.. மரியாதை கொடுத்து பேசிய விதத்திலும் தெரிந்தது. “
” அப்பா.. மாமா ஏன் இப்படி பண்ணியிருப்பாங்கனா?.. நீங்க.. அவர்களிடம் என் மீதான விருப்பத்தை கூறிதான் பேசனும் என்று சொன்னவுடன்.. முதல்முறை கல்யாண விசயத்தில்.. உங்க விருப்பத்தை மறுப்பு சொல்ல தோனியிருக்காது. அதே சமயம் நம்ம தனிப்பட்ட பெயரும் சரி.. சேர்ந்து வரும் உறவுமுறையும் தவறான கண்ணோட்டத்தில் மற்றவர்களின் பார்வைக்கு தெரியக்கூடாது. முறையாக எவ்வித பிரச்சனையின்றி நடக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணம் ஆகும். நான் அப்பா.. அண்ணாவ.. வீட்டில் இருப்பதற்கும்.. கடை, மில்லில் நடந்து கொள்ளும் முறைய நான் பார்த்துயிருக்கேன். ”
” இப்ப பண்ணியிருப்பாங்களா? இல்லையா என்பது இப்ப முக்கியமில்ல. நாம்ம இனிமேல்நம்ம கல்யாணம் எப்படி ஆரம்பித்தது?.. என.. இதமட்டும் ஞாபகம் வச்சுக்கனும். நாம இரண்டு பேரும் நம்ம விருப்பத்தை தெரிவிச்சதும்.. அவங்க அதை ஏற்றுக் கொண்டாங்க. அதனால் அவங்க முதன்முறையா நம் சொந்தகாரங்க கல்யாண முறை சம்பந்தத்தில் இருந்து வெளியில் வந்து கல்யாணம் நடக்க விருக்கிறது. அதுக்கு நாம்ம அப்பா அம்மாவிடம் எவ்வளவு சமாதானபடுத்தி அவங்கள சம்மதிக்க வைத்து இருப்போம்.. அது எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்க வேண்டும் இல்லையா?. நம்ம எடுத்த முடிவு.. நல்லமுடிவு தான் என அவங்க சந்தோஷம் தான் படனும். “
” நமக்காவது வீட்டல இருங்கறவங்க.. பிறகு நமக்கு பிடுச்சவங்கள சமாதானம் செய்து.. சம்மதிக்க வைத்தால் போதும். ஆனா நம்ம பெற்றோர்களுக்கு.. அவங்களும்.. அவர்கள் எண்ணத்தில் இருந்து வெளிவந்து.. நம்ம விருப்பத்தை ஏற்றுக் கொண்டு.. பிறகு மற்றவர்களையும்.. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுக்கனும். அவங்க எல்லோரையும் சமாளிச்சு. அதன்பிறகு தான்வர வரன் நல்லபடியா இருக்கனும்.. உறவினர்களின் எந்த கேள்விக்கும் வழிவகுக்க முடியாதபடி வேற நல்ல வரன் அமைய வேண்டும். இப்படி பல எண்ணங்களையும் தாண்டிதான்.. நமக்கு வரன் பார்க்க ஆரம்பித்து இருப்பாங்க. ”
” நம்ம அல்லது நம்ம பெற்றோர்களின் வேண்டுதலோ என்னவோ!.. நமக்கு பார்த்த முதல் வரனே நமக்கு.. ஓரே ஊர்.. வியாபாரத்தில் தெரிந்தவர்கள்.. மன பொருத்தம்.. இன்னும் மனநிம்மதி தரக்கூடிய வரனாக நமக்கு எல்லாம் நல்லவிதமாக அமைந்து இருக்கிறது. அதனால் நம்ம பெற்றோர்களை.. யாரும் எந்த கேள்வியும் கேட்காத மாதிரி.. நம்ம கல்யாணத்திற்கு என்று!.. நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஒன்றிக்கு நான்கு தடவை யோசித்து செய்ய வேண்டும். நம் பெற்றோர்களுக்கும் மனநிறைவு இருக்கனும்.. அதேசமயம் நம் கல்யாணத்திற்கு இருக்கும் நம் விருப்பங்களையும் ஒன்றுவிடாமல் செய்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். ” படபடவென்று தன் மனதில்இருப்பதை கூற..
