Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK Episode 16.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கந்தனை பற்றி நினைத்த மனதை கட்டுப்படுத்திக்கொண்டு பாடத்தில் கவனத்தை செலுத்தி பாடம் எடுத்தாள்.

 

“குழந்தைகளா நாம இன்னிக்கி ‘தமிழ் மொழியின் பெருமை’ பற்றி பார்க்க போகிறோம். எல்லோரும் தமிழ் புக் எடுத்து  ஏழாவது பாடம் எடுங்க.” என்றாள் சாதனா.



Advertisement

 

மாணவர்கள் எடுத்தனர்.

சாதனா புத்தகத்தை படித்தாள்.

Advertisement

“செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்

Advertisement

தேன் வந்து பாயுது காதினிலே.” என்று பாடியுள்ளார் பாரதியார்.

 

தமிழ்நாடுன்னு சொல்லும்போது கேட்க அவ்வளவு ஸ்வீட்டா இருக்குன்னு பாடியிருக்கிறார்  பாரதியார்.

Advertisement

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம்.”

அவர் கற்றுக்கொண்ட மொழிகளில் தமிழ்மொழி போல இனிமையான மொழியை அவர் பார்க்கவில்லை. என்று பாடியிருக்கிறார் பாரதியார்.

 

உலகில் உள்ள மொழிகளில் மிகவும் தொன்மை வாய்ந்தது தமிழ் மொழி. அதாவது ரொம்ப வருஷத்துக்கு காலத்துக்கு   முன்பிலிருந்து இந்த மொழி இருந்துட்டு இருக்கு. அன்சியின்ட்(ancient language) லாங்குவேஜ் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் இல்ல? நம்ம தமிழ் மொழி அந்த மாதிரி ஒரு  லாங்குவேஜ். இதை நினைச்சு நாம எல்லோரும் பெருமை படனும். எந்த நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் நம்ம தமிழ் மொழியை மறக்காமல்  எழுத பேச கத்துக்கணும். நாம கத்துக்கிட்டு மத்தவங்களுக்கும் கத்துக் கொடுக்கணும். நம்ம முன்னோர்கள் இத்தனை வருஷமா காலமா இந்த மொழியை காப்பாற்றி நமக்கு கொடுத்திருக்காங்க. தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம் பொறுப்பு.”என்று தமிழ் மொழியின் பெருமையை பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள் சாதனா.

மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

“என்ன பசங்களா நான் சொல்றதை கேட்டு செய்வீர்களா?” என்று கேட்டாள்

“கண்டிப்பா செய்வோம் செய்வோம் டீச்சர்.” என்றனர் மாணவர்கள்.

 

பாடத்தை  பெருமையுடன் நடத்தி முடித்துவிட்டு வீட்டு பாடங்களை சரிபார்த்து விட்டு அமர்ந்தாள். அப்போது அங்கு வந்தாள் மகாலட்சுமி.

 

“சாதனா இந்தாங்க அட்டெண்டன்ஸ் ஷீட். இன்னிக்கி சுகந்தன்வரல. அதனால நீங்களே அட்டென்டன்ஸ் எடுத்துடுங்க.”  என்றார்.

 

‘ஏன் வரலன்னு கேட்கலாமா? வேண்டாமா?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சாதனா.

“என்ன சாதனா யோசிச்சிட்டு இருக்கீங்க? சுகந்தன்ஏன் வரலன்னு கேட்க மாட்டீங்களா?”

“அதைத்தான் யோசிச்சிட்டு இருந்தேன். சொல்லுங்க.”

 

“இதுல யோசிக்க என்ன இருக்கு? கேட்க வேண்டியதுதானே. நம்ம கூட வேலை செய்றவங்க வரலன்னா கேட்டு என்னன்னு தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது தானே.” என்றார் சாதாரணமாக.

 

அவர் சொல்வது சரிதான் ஆனால் இவளுக்கு இருந்த குழப்பத்தில் கேட்க தயங்கியதை அவள் எப்படி சொல்லுவாள்?

“எனவே நீங்க சொல்றது கரெக்ட் தான் சொல்லுங்க. ஏன் வரல?” என்று தனக்கு இருந்த ஆர்வத்தை மறைத்துக் கொண்டு சாதாரணமாக கேட்பது போல கேட்டாள்.

“அதுவா அவருக்கு உடம்பு சரியில்லை. அதான் லீவ் எடுத்திருக்காரு. எனக்கு மெயில் பண்ணாரு.” என்றார்.

“ஓ அப்படியா?”

“ஆமாம் சாதனா. அதனால நீங்க தான் இன்னிக்கி  எல்லா வேலையையும் செய்யணும். ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளுங்க.. நான் வேற யாரையாவது அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

“இல்லை பரவாயில்லை. நான் சமாளித்துக் கொள்கிறேன்” என்றாள் சாதனா.

சொன்னபடி அன்றைய வேலையை  முடித்துவிட்டு வீடு திரும்பினாள் சாதனா.

 

சஞ்சனா குழந்தை விஷாலை தொட்டிலில் போட்டு ஆட்டி கொண்டிருந்தாள். விஷால் புன்னகைத்தபடி தூக்கத்தில் ஆழ்ந்தான்.

“கிருஷ்ணபரமாத்மா மாதிரி எப்ப பார்த்தாலும் ஒரு புன்னகை!”  என்று கிண்டல் அடிப்பது போல விக்ரமிடம் மகன் பெருமை பேசினாள் சஞ்சனா.

 

“அவன் அப்பா மாதிரி.” என்றான் விக்ரம் பெருமையாக.

“கிருஷ்ணர் மாதிரி சிரிச்சா பரவாயில்லை. ஆனால் என் பையன் ராமர் மாதிரி ஏகபத்தினி விரதனாக தான் இருக்கணும்.” என்றாள் சஞ்சனா.

“ஆமாம் என் பையன் என்னை மாதிரி தானே இருப்பான். நான் ராமர் மாதிரி  ஏகபத்தினி விரதன் தானே!” என்று சொல்லிவிட்டு சஞ்சனாவின் கையை பிடித்து இழுத்து அணைத்து அவள் கண்ணத்தில் முத்தமிட்டான்.

 

“சரி சரி போதும் ஆரம்பித்து விடாதீர்கள். விடுங்க. நைட்டு டிபன் பண்ணனும்.” என்று சொல்லி அவனை  விட்டு விலகி சமையலறை வந்தாள்.

 

4 அடுப்புகள் இருக்க  ஒன்றில் காய்கறி வெந்து கொண்டிருந்தது.

சாதனா தேங்காயை மிக்ஸியில் அரைத்துக் கொண்டிருந்தாள். கோதுமை மாவு பிசைந்து சப்பாத்தி போடுவதற்கு தயாராக ஒரு பாத்திரத்தில் இருந்தது. மிக்ஸியை நிறுத்திவிட்டு சாதனா அரைத்த தேங்காயை கொதித்துக் கொண்டிருந்த காய்கறி பாத்திரத்தில் ஊற்றினாள்.

 

“சாதனா நான் சப்பாத்தி திரட்டி தருகிறேன். நீ சப்பாத்தி போடறியா?” என்று கேட்டாள் சஞ்சனா.

“சரி சஞ்சனா.” என்று சொன்னபடி அந்த பாத்திரத்தில் இருந்த குருமாவை கரண்டி கொண்டு  கிண்டினாள்.

சஞ்சனா சப்பாத்தி மாவை எடுத்து உருண்டையாக உருட்டி சப்பாத்தி திரட்டினாள்.

இன்னொரு அடுப்பில் தோசை கல்லை சூடு செய்து நெய் ஊற்றி சப்பாத்தி போட்டு எடுத்துக் கொண்டிருந்தாள் சாதனா.

இரண்டு சப்பாத்தி போட்ட பிறகு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதையடுத்து “சஞ்சு” என்று குரல் கொடுத்தான் விக்ரம்.

 

“ஆரம்பிச்சிட்டான். அம்மா இருக்கும்போது இந்த குட்டி பையன் இப்படி அழவே மாட்டான். இப்போ சும்மா சும்மா அழுகிறான். அம்மா இவனை மடியிலேயே வைத்து பழக்கிவிட்டார்கள். அதனாலதான் இப்படி பண்றான். தொட்டிலில் பழக கொஞ்சம் டைம் ஆகும். வேற எந்த வேலையும் செய்ய விட மாட்டேங்கிறான்.” என்றாள் சஞ்சனா சிறு சலிப்புடன்.

“குழந்தைதானே  சஞ்சனா. எல்லாம் சரியாகிடும். நீ போய் பாரு.” என்று அவளை அனுப்பினாள் சாதனா.

சாதனா சப்பாத்தி திரட்டி கல்லில் போட்டு  சப்பாத்தியை சுற்றி நெய் விட்டாள்.

 

ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். “உஸ் உஸ்” என்று காற்று பலமாக வீசி கொண்டிருந்தது. அதற்கு தாக்கு பிடிக்க முடியாமல் மரங்களெல்லாம் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது.

‘இன்னிக்கு குளிர் ஜாஸ்தியா இருக்கு. இவனுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க. இவன் எப்படி இருப்பான்? இவனுக்கு வேற ஜுரம் வந்தா அவ்வளவு சீக்கிரம் போகாது. ஒரு வாரம்  ஆவது இருக்கும். இவனை பாடு படுத்திட்டு தான் போகும். ஒரு மயக்கத்தில் இருப்பான். சுத்தி என்ன நடக்குதுன்னு கூட தெரியாது. யாராவது பக்கத்துல இருந்து பாத்துகிட்டா தான் உடம்பு சரியாகும். இப்போ யார் அவனை பாத்துக்குவா?’ என்று யோசித்தாள்.

அந்தப் கார்த்திக் பாத்துக்குவானா? சரியான லூசு. என்கிட்ட கோபப்பட்டு ஐஸ்கட்டி போட்டு 2 டம்ளர்  கூல் ட்ரிங்க் குடிச்சான். அதனாலதான் ஜுரம் வந்து இருக்கு. கொஞ்சம் கூட மூளையே கிடையாது.’ என்று அவனை மனதுக்குள் திட்டி தீர்த்தாலும் அவனை நினைத்து மனம் வருந்தியது.

 

அன்று அவனை அமெரிக்கா கூப்பிட்டபோது அவன் பேசியது ஞாபகம் வந்தது.

 

“சஞ்சனா அமெரிக்காவில் எடுத்த போட்டோஸ் நிறைய அனுப்பி இருக்கா. பார்க்கிறாயா?” என்று அவள் மொபைல் வாட்ஸ் அப்பில் இருந்த புகைப் படங்களை ஒவ்வொன்றாக காண்பித்தாள்.

“பாருடா எவ்வளவு அழகா இருக்கு! நம்மை அங்க வந்து ஒரு மூணு மாசம்  தங்கி சுத்தி பாக்க சொன்னா. நாம தான் கல்யாணம் ஆகி ஹனிமூன் போகவே இல்லையே. நாம அமெரிக்கா போயிட்டு வரலாமா?” என்று ஆர்வமாக கேட்டாள் சாதனா.

“நீ போயிட்டு வா. என்னை ஆளை விடு. எனக்கு இந்த ஊர் மார்கழி குளிரே ஒத்துக்க மாட்டேங்குது. இதுல அமெரிக்காவுக்கு போகணுமா? அன்னிக்கி பார்த்தாய் இல்ல?”

“முதல்ல  அப்படித்தான் இருக்கும். அப்புறம்  செட் ஆயிடும். என்னடா சொல்ற?”

“என்னால முடியாது. எனக்கு இந்தியா தான் செட் ஆகும். எனக்கு இதுவே திருப்தியா இருக்கு.”

“நான் என்ன உன்னை அங்க  பர்மன்னடாவா இருக்க சொல்றேன்? ஒரு மூணு மாசம் தானேடா போயிட்டு வரலாமா? நாம குளிர்காலத்தில் போக வேண்டாம். வெயில் காலத்தில் போகலாமா?” என்று கேட்டாள் சாதனா.

“சரி ஒரு வெயில் காலத்துல போயிட்டு வரலாம்.ஆனால் குளிர்காலத்தில் என்னை அங்கே கூப்பிடாதே. கூப்பிட்டால் நீ தான் எனக்கு உடம்பு சரியில்லன்னா பார்க்கணும்.” என்றான கந்தன்.

“அப்படி உனக்கு ஏதாவது வந்தாலும் உன்னை என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துகிட்டு சரி பண்ணிடுவேன்.” என்றாள் சாதனா அக்கறையுடன்.

“இப்போ பண்ணின மாதிரி. அப்படித்தானே?” என்றான் சுகந்தன்.

“அப்படிதான்.” என்றாள் சாதனா புன்னகையுடன்.

“சாது என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்க? சப்பாத்தி கருகி போச்சு பாரு. ஸ்டவ்வை  நிறுத்து.” என்று  பரபரப்புடன் ஓடி வந்தாள் சஞ்சனா.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!