Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Mazhaiyaagi Vaa

மின்னல் மழையாகி வா – 15

அத்தியாயம் – 15

“ஆர் யூ சீரியஸ்..?”

ஜென்சியின் எதிரே அமர்ந்திருந்த பார்த்திபனின் வயது முப்பதுகளின் பாதியில் இருக்கும்.. அவளிடம் ஆச்சரியமாய் கேட்டவரிடம்,

“உங்களோட விளையாட தான் இவ்வளவு தூரம் வந்திருப்பேனா பார்த்திபன்..” என்று புருவம் உயர்த்தி கேட்டாள்.



Advertisement

ஜென்சி ஆர்.எக்ஸ் நிர்வனத்தில் சேர்ந்தபோது அவளுக்கு மேலதிகாரி பொறுப்பில் அவன் இருந்தான். அப்பொழுதில் இருந்தே அவளின் திறமையும் ஆற்றலும் அவர் அறிந்ததே..!!  தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்தோம் என்று இல்லாமல் புதிது புதிதாய் ஒவ்வொரு விஷயங்களை கற்று கொள்ளவதிலும் அதனை பற்றி முழுமையாய் தெரிந்து கொள்வதிலும் நிறைய ஆர்வம் காட்டுவாள்.

‘ஆர்வகோளாறு.. இதெல்லாம் தெரிஞ்சு இவ என்ன பண்ணபோறா..’ என்று இவரே சில சமயம் எண்ணியதுண்டு. ஆனால் இன்று  தெளிவான சிந்தனையோடு அடுதடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமும் அதனை எப்படி செயலாக்க வேண்டும் என்ற பார்வையும் அவளின் தன்னம்பிக்கையை காட்ட ஜென்சியை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

தன்னைவிட சிறுபெண் என்றாலும் அவளின் இந்த ஆர்வமும் தன்னம்பிக்கையும் தான் அவளை இங்கே கொண்டு வந்துள்ளது என்று எண்ணியவன் தான் இன்னும் அதே நிலையில் இருக்க காரணமும் அந்த தன்னம்பிக்கை இல்லாதது தானோ என்று சுய அலசலும் தோன்றியது.

Advertisement

“இல்லை தான்…” என்று புன்னகைத்தவன்,

Advertisement

“பட்.. என்ன சொல்றதுனு தெரியல ஜென்சி.. ஆர்.எக்ஸை விட்டு நான் ரிலீவ் ஆகியே இரண்டு வருஷம் ஆகுது..நாம பெருசா காண்டெக்லையும் இல்லைல.. அதனால நீ மீட் பண்ணனும்னு சொன்னபோது கூட ஹானஸ்ட்லீ இந்த பொண்ணு நம்மை ஞாபகம் வைச்சு இருக்கேன்னு தான் நினைச்சேன்.. பட் இது டோட்டலீ அன் எக்ஸ்பெக்டட்.. வொய் மீ?”

வியப்பாய் தொடங்கி கேள்வியில் முடிக்க,

“இந்த பரந்த உலகத்தில் என் நம்பிக்கைகுரிய மக்கள் ரொம்ப குறைவு தான் பார்த்திபன்…”

Advertisement

என்றாள் சுருக்கமாய்.. அதிலிருந்த ‘உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது..’ என்ற அர்த்தம் அவருக்கும் புரிந்தது.

“புதுசா கம்பெனி தொடங்கிறதோட சாதக பாதகங்கள் நான் சொல்லி உங்களுக்கு தெரியணும்னு இல்ல.. கம்பெனி செட்டில் ஆகி ஒரு பொஷிசன் வரும்வரை ரிஸ்கி ஸ்டேட் தான்.. நீங்க மறுபடியும் மும்பை ஷிஃப்ட் ஆகணும்… உங்களோட ஃபேமிலி அங்க இருக்கிறதால அது உங்களுக்கு வசதி தான்.. பட் இப்ப நீங்க ஒரு நல்ல ஜாப்ல தான் இருக்கீங்க.. அதை விடவேண்டியது இருக்கும்.. ஸோ ரிஸ்க் எடுக்க தயார் என்றால் மேற்கொண்டு பேசலாம் பார்த்திபன்..”

என்று முன் கூட்டியே தெளிவாய் சொல்லியவள்,

“அண்ட் அஃப்கோஸ்.. டூ அச்சீவ் க்ரெட்டர் திங்க்ஸ்… சில ரிஸ்கி டெஷின்ஸூம் எடுக்கிறது அவசியம் தானே..” கண்களின் ஓரம் சுருங்க சின்ன புன்னகையோடு கூறி,

“யோசிங்க பார்த்திபன்… உங்களுக்கு விருப்பம்னா என்னை காண்டாக்ட் பண்ணுங்க..”

என விடைபெற்று ரெஸ்டாரெண்ட் பார்க்கிங்கை அடைந்தாள்.

அங்கே காரின் ஓட்டுநர் இருக்கையை சற்று சாய்த்து கையை நெற்றியில் தாங்கி கண்மூடி அமர்ந்திருந்தான் ஜோஷ்வா.

‘அடப்பாவி.. தூங்கிட்டானா..’

என்று ஒருபக்கம் சிரிப்பு வந்தாலும், 

‘இவ்வளவு நேரம் காத்திருக்க வைத்து விட்டோமே..’ என்று பாவமாய் இருந்தது. இரவு சரி என்று தலையசைத்தவள் காலையில் தான் மட்டும் போய் கொள்வதாய் பிடிவாதம் பிடிக்க அவள் சொன்னதையும் மீறி அவனும் வந்திருந்தான்.

ஜோஷ்வா அருகில் சென்று எழுப்ப நினைத்த ஜென்சியின் கண்களில் எதர்ச்சையாய் மீண்டும் அந்த டாட்டூ தென்பட்டது. வழக்கம்போல் பாதி ஷர்ட்டில் மறைப்பட்ட நிலையில்..! 

அது என்ன உருவம் என்று புரியவில்லை. அப்படி என்ன தான் வரைஞ்சு வைச்சு இருக்கான் என்று ஆர்வம் பொங்க

காரின் வெளியே இருந்தே ஜன்னல் வழி தலையை உள்ளே விட்ட ஜென்சி கையில் அருகில் சென்று ஆராய்ச்சியாய் பார்த்தாள். அப்பொழுதும் புரியவில்லை.

அவன் கையையே உற்று நோக்கியபோது,

“என்ன பண்ற ஜென்சி..” என்று திடீரென காதை உரசிய குரலில் தான் அவனுக்கு மிக நெருக்கத்தில் உள்ளோம் என்று புரிந்தது.

அவனின் மூச்சு காற்று அவள் கழுத்தில் படிய பதறி விலகியபோது தலை கதவில் இடிக்க போக,

“ஹே..பார்த்து..” என்று அவசரமாய் அவள் தலைமேல் கைவைத்து இடிக்காமல் பார்த்து கொண்டான்.

என்ன சொல்வது என்று நொடி பொழுது திருதிருத்தாலும்,

“உன் கைல ஏதோ பூச்சி மாதிரி இருந்துச்சு.. அதான் தட்டிவிட பார்த்தேன்..” என்று சமாளிக்க,

“பூச்சியா…?” என்று அவன் குழப்பமாய் காரை விட்டு இறங்கி தன் கையில் பார்த்தான்.

“அது கீழ விழுந்திடுச்சு..” என்றதும்

அவள் சொன்ன காரணத்தை நம்பி ‘ஓ..நல்லது..’ என தலையசைக்கவும் தான் ஆசுவாசமானாள்.

“போன வேலை ஓகே ஆகிடுச்சா ஜென்சி..”

என்று அவன் கேட்கவும்,

“ஆல்மோஸ்ட்..” என்று புன்னகைத்து,

“ஆனா இவ்வளவு நேரம் இங்க கார்லையே இருந்தியா ஜோஷ்.. ஃபினிக்ஸோட எம்.டி… அ சயிண்டிஸ்ட்… ஒவ்வொரு நிமிஷமும் ஓடிட்டே இருக்கவர்.. எனக்கு ட்ரைவர் வேலை பார்க்கணும்னு தலையெழுத்தா..?? அதான் வேணாம்னு அப்போவே சொன்னேன்..”

என்று கேலியாய் கேட்டாலும் அதில் சங்கடமும் இருந்தது. அவள் சயிண்டிஸ்ட் என்று குறிப்பிடத்தில் அவன் விழிகள் ஆச்சரியமாய் மேலெறியது. ஆனாலும் அதைவிடுத்து அவள் கேள்விக்கு விடையாய்,

“நீ ஃபீல் பண்ண எல்லாம் ஒன்னுமே இல்ல ஜென்சி.. தாத்தா ஒரு வேலை கொடுத்து இருந்தார்.. அதை முடிச்சுட்டு இப்ப தான் வந்தேன்..” என்றவன்,

“எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் இருபத்தி நாளு மணி நேரத்தில அவனுக்குனு பர்ஷன்ல் டைம் கண்டிப்பா இருக்கும்.. அதை அவன் எப்படி யூஸ் பண்றான் என்றதுல தான் இருக்கு… எனக்கு இந்த லாங் ட்ரைவ் பிடிச்சு இருக்கு.. ஐம் என்ஜாயிங் இட்.. அவ்வளவு தான்..” என்றான் தோள் குலுக்கலோடு..

“அது மத்த நாள்ல.. உனக்கு இன்னும் கால் வலி இருக்கும்போது.. இது தேவையா..?”

“ஹே.. நான் வலிக்குதுனு எப்போ சொன்னேன்..”

“நீ சொல்லல.. ஆனால் அடிக்கடி காலை பிடிச்சு விடுற.. இது கூட புரியாதா எனக்கு..?”

அவள் மடக்கியதும் ‘உன் கூட தனிமையில் இந்த பயணத்தை மிஸ் பண்ண மனசு இல்ல..’ என்ற உண்மையை சொல்ல விரும்பாமல்,

“வந்தாச்சு.. இப்ப என்ன தான் பண்ண சொல்ற ஜென்சி..” என்று  அவளிடமே சரணடைந்தான்.

“ஒன்னும் பண்ண வேண்டாம்… நீ நகரு.. நான் ட்ரைவ் பண்றேன்..”

என அவனை தாண்டி ஓட்டுநர் இருக்கையில் ஏறியமர அவனும் அருகில் அமர்ந்ததும் அங்கிருந்து வண்டியை வெளியே எடுத்தவள்,

“இப்ப எப்படி போனும்..” என்று கேட்க,

“லெஃப்ட் எடுத்து அந்த மெய்ன் ரோட்ல நேர போ.. ஹைவேஸ் வந்திடும்..”

என்று அவன் வழிகாட்டுதலின் படி செலுத்தினாள்.

அதன்பின் தேசிய நெடுஞ்சாலையில் சீரான வேகத்தில் வாகனம் செல்லும்போது அவள் ட்ரைவிங்கில் கவனமாய் இருக்க அவனோ பாடலை ஒலிக்கவிட்டு அதனோடு ஐக்கியமாகி விட வெகு நேரமாகியும் வரும்போது இருந்த பேச்சு கூட தற்போது இல்லை.

ஜோஷ்வாவிற்கு இருக்கும் பழக்கம் ஒன்று பாடல்கள் கேட்பதோடு நிறுத்திவிடாமல் அதனை கூடவே சேர்ந்து பாடுவதுமாய் இல்லை ஹம் செய்வதுமாய் இருப்பான். அதற்கென அவன் அருமையாய் பாடுவான் என்று எண்ணிவிட வேண்டாம். அவன் குரலில் ஸ்ருதி தாளங்கள் எல்லாம் இசகு பிசகாய் வந்து விழுந்தாலும் அதனை எல்லாம் அவன் கண்டு கொள்ளாமல் இரசித்து பாடுவான்.. ஆனால் கேட்பவர்களுக்கும் அது இரசிக்க கூடியதாய் இருக்கும் என்று இல்லையே..??

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்.. 

ஜரிகை நெளியும் சேலைக் கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்..

பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்..

பட்டம் தரத் தேடுகின்றேன்.. எங்கே அந்த நாயகன்..

மலையின் காட்சி.. இறைவன் ஆட்சி.. 

செந்தாழம் பூவில்..  செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் 

என் மீது மொதுதமா..”

என சூழலிற்கு பொருந்தும் அப்பாடலை ஜேஸூதாஸோடு இணைத்து நம் ஜோஷ்வாவும் பாட பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில்,

“யப்பா.. முதல்ல அதை ஆஃப் பண்ணு.. ப்ளீஸ்..” என்றாள் ஜென்சி.

“ஏன்.. நல்ல பாட்டு தானே ஜென்சி..”

“நல்ல பாட்டு தான்.. ஆனால் அதை நல்லா இருக்க விடாம உன் பாட்டு படுத்தி எடுக்குது..”

“ஓய்… என்ன நக்கலா..”

“சத்தியமா சொல்றேன்… முடியல..”

முகத்தை பாவமாய் வைத்து அவள் சொன்ன தொனியில் அவனுக்கு சிரிப்பு வந்தது.

“அதையும் அமத்திட்டு… நான் என்ன பண்ண..? என்னால எல்லாம் அமைதியா வர முடியாது.. நீயும் பேச மாட்டேங்கிற..”

“என்ன பேசணும்..”

“என்ன வேணாலும் பேசலாம்.. உனக்கு தாத்தாவை எப்படி தெரியும்.. அதை பத்தி பேசலாம்..! அன்னைக்கு எப்படி கரெக்டா ஹாஸ்பிட்டல் வந்த அதை பத்தி பேசலாம்..! அன்னைக்கு என்னை எதை வைச்சு நம்புறேன்னு சொன்ன..? அதை பத்தி பேசலாம்..!அட்லீஸ்ட் நான் சயிண்டிஸ்ட் என்ற விஷயம் எப்படி தெரிஞ்சுது.. அதையாவது பேசலாம்..”

என கிடைத்த கேப்பில் ‘பேசலாம்’  ‘பேசலாம்..’ என்ற தன் கேள்விகளை எல்லாம் முன் நிறுத்தியவனை ஒன்னும் சொல்ல முடியாமல் மற்ற கேள்விகளை ஒதுக்கி கடைசியாய் கேட்டதற்கு மட்டும் தாமஸ் வீட்டில் நடந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டாள்.

“ஏமி விஷயத்தில் என்னால க்ரெடிட் எடுத்துக்க முடியாது.. அப்போ நான் வெறும் ஜூனியர் ரிஸர்ச்சர்.. அதுல என்னோட கான்ரிபியூஷன் கடுகளவு தான் இருக்கும்..” என்று தலையசைத்து மறுக்க,

“இருக்கலாம்.. தாமஸிற்கு உங்களை பற்றி சரியா தெரியல.. சந்தேகமா தான் சொன்னார்… ஸோ நெட்ல தேடி பார்த்தேன். அதுல The famous biochemist, Dr.joshua matthew பத்தி சகலமும் தெரிய வந்தது.. சிந்தெட்டிக் மலீக்யூல்(synthetic molecule)… நியூ ஃபிச்சர்ட் ப்ரோடீன் இன் ட்ரக்டிஸைன் (new featured protein in drug designing) இன்னும் நிறைய உன்னுடைய ரிஸர்ச் பத்தி தெரிஞ்சுகிட்டேன்… டு பி ஃப்ரங்.. பயோலஜில எனக்கு பொது அறிவே கொஞ்சம் கம்மி தான்.. அதனால நிறைய விஷயம் என்னால புரிஞ்சுக்க முடியல.. ஆனால் நீ எழுதிய GMOs பத்திய அனலிஸீஸ் புக் மட்டும் புரிஞ்சுது.. தட்ஸ் ரியலீ வெரி இம்ரெஸிவ் ஜோஷ்.. அண்ட் NITMல ஒருவருஷம் வேலை பார்த்து இருக்க.. இல்லையா..?”

அவள் பேசபேச அவன் முகத்தில் புன்னகை அரும்ப,

“ஹே.. என்ன ஜென்சி.. என்னை பத்தி நீ பெரிய ரிஸர்ச் பண்ணி இருப்ப போலையே..”

என்று அவன் ஆச்சரியமாய் கேட்டதற்கு பதிலாய் சிரிப்பை கொடுத்தாள்.

“இப்படி சிரிச்சா..? உன்னோட ரிஸர்ச்சோட கன்க்ளூஷன் என்ன ஜென்சி..?”

என்று அவன் கேலியாய் கேட்கவும் சாலையில் இருந்து பார்வையை அவன் புறம் திருப்பி,

“உன்னுடைய துறையில் உனக்கு ஆழமான புரிதலும் அறிவும் இருக்கு ஜோஷ்.. கண்டிப்பா அதனுடைய பலன் உன்னை சார்த்தது மட்டும் இல்ல.. பல ஸ்டூடெண்ஸ் உன்னை ரெஃப்ர் எடுத்து அதை தொடர்வாங்க..” என்றவள்

“என்னோட கேள்வி என்னானா.. இப்படி ஒரு ஐகானிங் சயிண்டிஸ்ட்… ஏன் பக்கா பிஸ்னெஸ்மேனா மாறணும்.. என்றது தான்..”

என நேரடியாய் கேட்க,

அவளின் கேள்வியில் சிரித்த ஜோஷ்,

“ஏன்னா..” என இரகசியம்போல் இழுத்து,

“என் திறமையை என்னோட வோன் பெனிஃபிடிற்கு மட்டும் உபயோகிக்க  நினைச்சேன்…  என்னுடைய ஆராய்ச்சியை என்னோட ப்ராடெக்ட்ஸ்ல அப்ளை பண்ணி நான் முன்னேறனும்னு நினைச்சேன்.. இல்லைனா இந்த சின்ன வயசுல இவ்வளவு உயரம் சாத்தியம் ஆகுமா சொல்லு..”

என்று கர்வமாய் புன்னகைத்தான். அவன் சொன்னதை கேட்டு அதுவரை இருந்த இலகுதன்மை மறைய  அவளுக்கு டென்ஷன் ஏறியது.

உதடுகளை அழுத்தமாய் மூடி ஸ்டியரிங்கை இறுக்க பற்றி அவனிடம் திரும்பாமல் காரை ஓட்டும் அவளிடம் சரிந்து,

“நீயெல்லாம் ஒரு மனுஷனா.. சுயநலவாதி… அப்படி இப்படினு கத்திவிட தோணலையா ஜென்சி..” என்று நக்கல் செய்தவனிடம் உஷ்ணபார்வை வீசியவள்,

“பேசாத.. இல்லைனா அப்படியே பிடிச்சு மலைல உருட்டி விட்டுடுவேன்..”

என்று அவள் கடித்து துப்ப அவனுக்கு ஏனோ அவள் கோபமும் சிரிப்பை தான் கொடுத்தது. அவள் இருக்கும் கோபத்தில் சிரித்தால் நிச்சயம் தள்ளி விட்டுவிடுவாள் என்று அறிந்ததால் முயன்று அமைதி காத்தான்.

‘இதென்ன விதமான எஸ்கேபிஷம்.. எதாவது கேட்டால் கடைசியா தன் தலையில் தூக்கி போட்டுகிறது.. இவன் என்ன சொன்னாலும் நம்புவேன்னு நினைச்சுட்டானா..’

என்று அவள் உள்ளம் குமைய ஜோசஃப் அவனை பற்றி சொன்ன விஷயங்கள் மீண்டும் நினைவில் வந்தது.

***

“நீங்க டிவின்ஸ் தானே ஜோ.. அப்புறம் ஏன் இரண்டு பேரும் எதிர் எதிர் துருவமா இருக்கீங்க.. அவனோட இந்த அடாவடியான குணத்துக்கு பின்னாடி எதாவது காரணம் இருக்கா ஜோ.. சின்ன வயசுல இருந்தே இப்படி தானா? உங்களோட இல்லாம ஏன் தாத்தாவிடம் வளரணும்…”

என்று ஜென்சி கேட்தற்கு,

“காரணம் எல்லாம் எதுவும் இல்ல.. அவனோட நேச்சரே அதான்..நினைச்சதை பண்ணனும்.. பிடிச்சபடி இருக்கணும்.. ஆனால் அவனுக்கு பிடிச்ச எதுவுமே அப்பாவுக்கு பிடிக்காது.. இதனால சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் முறைச்சுகிட்டு தான் இருப்பாங்க.. ஒவ்வொரு விஷயத்திலும் வாக்குவாதம் தான் நடக்கும்.. கடைசில அவன் நினைச்சதை தான் செய்வான்..

அப்பா சொல்றது தான் சரினு எனக்கும் தோணும்.. நான் அப்பா பக்கம் தான் நிற்பேன்.. அதனாலயே என்னிடம் எதுவும் ஷேர் பண்ண மாட்டான்.. நான் ஒன்னு கேட்டால் அவன் ஒன்னு சொல்லுவான்.. சில நேரம் என்னையும் அப்பாவையும் வெறுபேத்தி பார்க்கணும்னே எதாவது ஒரண்டை இழுப்பான்..

செவந்த் படிக்கும்போது நினைகிறேன்.. அவனாவே வந்து எனக்கு தாத்தாவோட போய் இருக்கணும்.. என்னை அங்க போய் ஸ்கூல் சேர்ந்திடுங்கன்னு வந்து நின்னான். அப்பா ஒத்துக்கவே இல்லை.

தாத்தாக்கு அம்மா ஒரே பொண்ணு தான்.. பாட்டியும் அப்பவே தவறிட்டாங்க.. தாத்தா அங்க தனியா தான் இருப்பார்.. இவனை தனியா வைச்சுட்டு என்ன செய்வார்னு அப்பா விடமாட்டேன்னு இருந்தார்.. ஆனால் இவன் விடுவானா..?? 

தாத்தாவை வைச்சே பேச வைச்சு அம்மாவை எமோஷ்னலா ப்ளாக்மெயில் பண்ணி.. நினைச்சா மாதிரி அங்கேயே போய்டான்.. அப்படியே எங்க கைய விட்டு போயிட்டானு தான் சொல்லனும்.. எனக்கும் அவனுக்குமான உறவு இன்னும் தூரம் ஆகிடுச்சு.. எப்போவாவது தான் சந்திபோம்..

அவன் என்ன நினைக்கிறான்.. என்ன செய்றானு யாரலையுமே புரிஞ்சிக்க முடியாது ஜென்சி.. தப்பான வழியில போய்ட்டானோனு பயந்து அவனை கண்டிக்க நினைச்சா வெறுபேத்தவே இன்னும் இன்னும் செய்வான்..

ஒருதடவ ஏதோ ஒரு பொண்ணோட அவன் அடிக்கடி வெளியே சுத்துறானு அப்பாவுக்கு தகவல் வந்ததும் அவனை அப்பா லெஃப்ட் ரைட் வாங்கிட்டாங்க.. அதுக்குனு அடுத்த முறைல இருந்து இன்னைக்கு இந்த பொண்னோட இங்க போனேன்.. அந்த பொண்ணோட அங்க போனேன்னு தானே வந்து சொல்லி  சொல்லி இரத்தழுத்ததை எகிற வைப்பான்..

அவனே தப்பு செஞ்சுட்டு.. அவனே அதை சொல்லி காட்டுவான்.. இப்படி தான் செஞ்சேன்.. இப்படி தான் செய்வேனு  சொல்லி சொல்லி எரிச்சல் படுத்துவான்.. அதனால தானோ என்னவோ அவன் என்ன செஞ்சாலும் அவனை கெட்டவனா தான் பார்க்க வைக்குது..”

என்று ஜோசஃப் பேசியதை இன்று எண்ணி பார்த்தாள்.

‘இப்பொழுது மட்டுமல்ல.. சிறு வயதில் இருந்தே அவன் இதையே தான் செய்து வருகிறான்.. ஆனால் அவன் வேண்டுமென்ற பொய் சொல்கிறான் என்பதை ஜோசஃப் உட்பட யாரும் உணரவே இல்லை’ என்ற உண்மையை அவளின் மூளை அறிவுறுத்த அதன் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தாள். இத்தனை சிந்தனையில் இருந்தாலும் அவன் சொல்லும் வழியில் கைகள் தன் போக்கில் லாவகமாய் காரை இயக்கி வந்தது. 

வீடு வந்து சேர்ந்ததும் காரை நிறுத்தி விட்டு அவனிடம் திரும்பாமல் வேகமாய் உள்ளே சென்றவளை தடுக்க தோன்றாமல் நின்றவன் மனதில் என்ன ஓடுகிறது என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!