Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 12.1 (1)

 

நாம் 12. 1(1)

 

    அரசிம்மா.. நான் உன்னைய ஸ்கூலில் பார்த்த பின்..  நான் திருப்ப உன்னை பார்த்து.. இருவரும் முதன்முதலில் பார்த்து!. பேசிய.. இடமான பிரகதாம்பாள் கோயில். “



Advertisement

 

சில வருடங்களுக்கு முன்பு:

      புதுக்கோட்டை.. பிரகதாம்பாள் கோயில். கோயில் உருவான காலம் ஏழாம் நூற்றாண்டு(கி.பி. 600 முதல் 630 வரை) என மதிப்பிட்டிருக்கிறார்கள். பாறையின் மீதே கட்டப்பட்டுள்ள ஒருகுடவரைக்கோயிலாகும். குடவரைக் கோயில்கள்  என்பவை, செயற்கையான கட்டுமானங்கள் இல்லாமல், முழுமையான பாறைப் பகுதியை அப்படியே குடைந்து மண்டபங்கள், இறைவன் திருமேனிகள் என்று உருவாக்கப்பட்டவை.

Advertisement

   எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு வியப்பும்.. சிறப்பும்  உள்ளது. அது இத்திருக்கோயிலில் தான்  மாடிப்பகுதி என்ற மேல் தளத்திலும் தெய்வத் திருமேனிகள் இடம் பெற்றுள்ளன.

Advertisement

 

    வெள்ளிக்கிழமை  மாலை. மக்கள் மனநிறைவுடன் சிறப்பு ஆராதனைகள்.. வழிபாடுகள் என செய்து கொண்டுயிருந்த இக்கோயிலின் ஒருபகுதியில்.. ஒருத்தி மட்டும் ஒருவனை திட்டிக் கொண்டுயிருந்தாள்.

    யாருடா?.. உங்களுக்கு இப்படி செய்யுங்கனு சொல்லி யோசனை கொடுத்தாங்களோ?.. என்னைய மாதிரி இருந்தா.. எப்படி அவங்க ஆசைய நிறைவேற்றிக் கொள்வாங்க?.. ”

Advertisement

     ‘ அங்கு ஒரு இடத்தில் கட்டப்பட்டுயிருந்த பழமையான.. சற்று உயரத்தில் இருந்த ஆலயமணியை பார்த்தும்.. அதனை அங்கு அமைக்க சொன்ன வரையும்.. இரவு 7.30 மணி என்பதால் மக்கள் ஒருசிலர் மட்டும் அங்கு வந்து போனதால்.. வாய்விட்டு புலம்பிக் கொண்டுயிருந்தாள். இவள் புலம்பலை சற்று தள்ளி ஒருவன் கேட்கிறான் என்பதை அறியாமல். ‘

    ‘ அந்த ஒருவன் வேந்தனே. வேந்தன் தன்னுடைய முதுகலை கல்லூரி படிப்புகள் முடித்து.. பெங்களூரில் புதிதாக வேலையில் சேரப் போகிறான். அதனால் இக்கோயில் தெய்வத்தை தரிசித்துவிட்டு செல்லாம் என்று வந்தவன்.. அனைத்தும் முடித்துவிட்டு அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்தால் மனதிற்கு சாந்தமாக இருக்கும் என்று அமர்ந்துயிருந்தான். ‘

    அப்போது அவன் காதில் கீச்.. கீச் என்ற குரலில் ஒருவர்.. யாரோ ஒருவரை திட்டும் குரல் கேட்க.. ‘ யாருடா அது?.. இந்த இடத்தில் வந்து கத்தி திட்டுகிறார்கள்.. அதுவும் ஒரு குரல்தான் கேட்குது.. இன்னொரு குரல் கேட்கவே இல்ல.. என்ன திட்டுபவர் அவ்வளவு பெரிய அப்பாடக்கரா!.. ‘ என்று குரல் மட்டும் கேட்கும் திசையை நோக்கி.. உட்கார்ந்து இருந்தவன் தலைசாய்த்து திரும்பி பார்த்தான்

   ‘ பார்த்தவுடன் சிரித்துவிட்டான்.. அவன் பார்த்தது எழிலரசியை.. அவனின் அரசியை தான் பார்த்தான். ஆனால் அவள் என்று அவனுக்கு தெரியாது.. தெரியும் போது அவனின் மனநிலை ம்ஹூம்.. தெரியல. ‘

     ‘ அவன் பார்த்தபோதுதான்.. ஒரு குமரிப்பெண் ஒருத்தி.. அங்கு கட்டப்பட்டு இருந்த ஆலயமணியை தன்னால் அடிக்க முடியவில்லை என்று.. தன்னாக புலம்பி கொண்டுயிருந்தை பார்த்தான்.. அதனை பார்த்ததும் சிரித்துவிட்டு அதற்கு மேல் அவனுக்கு அவளை ஆராயத்தோன்றாமல் பாதி திரும்பிய வேலையில்.. அவன் காதுகளில்எழிலரசிஎன்று மற்றோரு அழைக்கும் குரல் கேட்டதும்.. வேகமாக திருப்பி பார்த்தான். ‘

     அந்த இடம் அமைதியாக இருந்தால் அழைப்பு சத்தம் சற்று அதிகமாக கேட்டது. அவனின் இதயம் அந்த பெயரை கேட்டவுடன் வேகமாக துடித்தது. அந்த அழைப்பிற்கு வேறு.. யாரும்?. அங்கு பதில் அளிக்கவில்லை. அவனின் முன்னால் அந்த பெண் மட்டுமே தன் முதுகை காண்பித்து இன்னும் சிலவற்றை கூறி ஆலயமணியிடம் பேசிக் கொண்டுயிருந்தாள். 

    மீண்டும்எழிலரசிஎன்று சத்தமாக கேட்கவும்..

    இதோ வந்துட்டேன்.. அக்கா.. “  என்று.. அவனுக்கான பதில் அவனின் முன்னால் நின்று கொண்டுயிருந்த பெண்ணிடமிருந்து தான் வந்தது. அவனுக்கு இப்போது அந்த பெண்ணை  உடனே பார்த்தாக வேண்டும்.. இது தன் முயல்குட்டி தானா?.. என ஆராயும் போதே..

   எழில்அழைப்புடன் வந்த மற்றொரு பெண்ணை பார்த்து.. அவன் மனம் துள்ளி குதித்தது குத்தாட்டம் போடாத குறைதான். ஏன் அவனின் இதயம் துடித்தது.. மனம் ஆடியது என்று அவன் அறிவானே!. தன் முன்னால் இருக்கும் பெண் தான்.. தன் முயல்குட்டி என்பதை.. தன்னவள் பெயரை அழைத்துக் கொண்டு வந்த நபர் அரசியின் அக்கா இளமதியை வைத்து உறுதிப்படுத்திக் கொண்டான்.

   இளமதியை வைத்து அரசியை உறுதிப்படுத்திக் கொண்டாலும்.. அரசியின் முழு உருவத்தை பார்க்க வேண்டுமே என அவன் நினைக்கவும்.. அரசி திரும்பி அவன்.. அவளை பார்ப்பது போல நிற்கவும் சரியாக இருந்தது. ‘

      பூப்படைந்து.. தன் கைகளை பற்றிக்கொண்டு.. குழந்தைதனமான முகத்துடன் இருந்த அரசி.. இன்று அவளிற்கு ஏதோ முக்கிய தினமா?. இல்லை எப்போதும் இப்படிதான் அணிவாளா?.. தெரியவில்லை.. பச்சை, மஞ்சள் பாவாடை தாவணி, தலை நிறை பூ.. காதில், கழுத்தில் பார்க்ககூடிய அளவில் தங்கம் அணிகலன் என அழகு பதுமையாகவும்.. இப்போதும் அதே கிள்ளத்தோன்றும் கன்னத்தோடு கூடிய முகத்துடனும்.. சற்று பூசிய உடல்வாகுடன் கூடிய பருவபெண்ணாக அவனின்முன் காட்சியளிக்கிறாள்.. அவனின் அரசி. ‘ 

    ஒரு நொடி சாதாரணமான அன்புள்ளம் கொண்டவனாகவும்.. மறுநொடி கண் இமைக்க மறந்து.. தன்னவள் முயல்குட்டியை உரிமை பார்வையுடன் தலை முதல் கால் வரை பார்த்துக் கொண்டுயிருந்தான். 

    அவனிற்கு அந்த நொடியே தன்னவளின் அருகில் சென்று அவள் கை பிடித்து.. தோள்வளைவில் கொண்டுவந்து.. அவளை நலம் விசாரிக்க வேண்டும் என ஆசையாக இருந்தது. அவள் அக்கா இளமதி இருங்காங்களே?.. சாதாரணமாக சென்று.. இளமதியிடம் பேசிவிட்டு.. அப்படியே முயல்குட்டியிடம் பேசலாமா?.. எப்படி எங்களுக்கு அறிமுகம் என்று இளமதி கேட்டால். எதற்கு தேவையில்லாத பிரச்சனை என்று?.. முயல்குட்டிக்கே என்னை ஞாபகம் இருக்குமா தெரியல?.. அய்யோ!.. என்று.. தன்னை குழப்பி.. பின்!.. இப்போதைக்கு வேறு எதுவும் என்ன வேண்டாம் முடிவிற்கு வந்து.. அவர்களின் உரையாடலை கேட்க ஆரம்பித்தான். ‘

   இளமதி தன் பெயரை அழைத்துக் கொண்டு வந்ததால்.. இளமதி அருகில் வந்தவுடன்.. ” ஏன் அக்கா?..  என் பெயரை ஏலம் விட்டுக்கிட்டே வர.. நான் அடி பிரதஷ்ணம்.. முடித்தவுடன் இங்குதான் இருப்பேன் என்று உனக்கு தெரியாதா?..”

   அவளை முறைத்துஉன் பெயரைதானே ஏலம் போட்டேன்.. உன்னையவா ஏலம் போட்டேன்.?ஓவ்வொரு தடவை நீ இங்க வரும்போதும்.. உன்னைய கூட்டி போவதற்கு நாங்க படுறபாடு.. சொல்ல வார்த்தையே இல்லடி.. எல்லாம் தீர்ந்து போச்சு. அது எப்படி எழில்?.. ஒவ்வோரு தடவை வரும்போதும் வார்த்தை மாறாமா இந்த மணிய பார்த்து புலம்புற. ”

   ஏன் சொல்லமாட்ட?.. என் கஷ்டம் எனக்கு.. அதுக்கு எப்ப விடிவுகாலமோ தெரியல?.. ” கவலையுடன் கூற.

   இதனை கேட்ட வேந்தனோ.. ‘ என்ன முயல்குட்டிக்கு கஷ்டம்மா?.. அவளை பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே?.. என ஒருமுறை மனம் நினைக்க.. மறுமுறை.. கஷ்டம் எப்படிடா?.. வெளிய தெரியும் என அவளை பார்த்து நினைக்கும் போது..

   இளமதியின் சிரிப்பு சத்தம் கேட்டது.. என்ன இளமதி சிரிக்கிறாங்க?.. ‘

   இளமதி சிரிப்புடன்குட்டிம்மா.. உன் கஷ்டம் தீரவேண்டும் எனில் நீ இன்னும் வளர வேண்டும். அதுக்கு இனிமேல் வாய்ப்பு கம்மிதான். நான் வேண்னா உனக்கு இன்னைக்கு மட்டும் உதவி செய்து.. உன் ஆசையை தீர்த்து வைக்கவா?..”

   அக்கா.. உனக்கு எத்தனை தடவ சொல்வது.. குட்டிம்மானு கூப்பிடாதேனு.. நான் சின்னபிள்ளையா இருக்கும் போது கூப்பிட்டிங்க.. சரி போன போகுதுனு விட்டா.. இன்னும் கூப்பிடுறிங்க. நீங்க இப்படி கூப்பிட்டு கூப்பிட்டுதான் நான் வளராம போய்விட்டேன் போல. இதுதான் உங்களுக்கு கடைசி தடவ. அப்புறம் நீங்க ஒன்னும் எனக்கு.. இன்னைக்கு மட்டும் இல்ல என்னைக்கும் உதவி பண்ண வேண்டாம். ”

    சரி நான் கூப்பிடல.. ஆனா இன்னைக்கு உன்னோட 18வது பிறந்தநாள் இல்ல. இது எவ்வளவு முக்கியமான பிறந்தநாள்..  நீ இனிமேல் ஓட்டு போடலாம்.. டிரைவிங் லைசன்ஸ் கிடைத்துவிடும். மேஜர் பொண்ணாயிட்ட. அதனால உனக்கு பதிலா நான் அடித்து.. உதவி பண்ணவானு கேட்டேன். ”

    என் பிறந்தநாளா இருந்தாலும்.. எனக்கு உங்க உதவி வேண்டாம். அது நான் பண்ணமாதிரி இருக்காது. இந்த மணிய நானே என் கையால தான் அடிக்கனும். அப்ப தான் என் வேண்டுதல் பழிக்கும். நான் பார்த்துக் கொள்கிறேன்.. நானா இந்த மணியா என்று. இன்றைக்கு இல்லையென்றாலும் என்னைக்காவது நான் என் கையால் இந்த மணிய அடிப்பது என்ற ஆசையையான  என் வேண்டுதலை நிறைவேற்றுவேன். ” எனக் கூறி சுற்றி சுற்றி பார்த்து..

    இது இது அங்க உட்கார்ந்து இருக்கார் பார் அவர் மேல சத்தியம். ” என்று கூற..

     ‘ அவளின் ஆசைகளை அவள் சொல்லாமலே  நிறைவேற்றும்.. வேந்தனின் மீது தான் சத்தியம் செய்தால் என்று.. அவளுக்கு தெரியவில்லை. ‘

    ஹேய் எழில்..  லூசு மாதிரி.. யார்மேலையோ பண்ணுற. இப்படியெல்லாம் பண்ணக்கூடாது. வா போகலாம்.  இங்க இருந்தா இப்படிதான் ஏதாவது பண்ணுவ. ” அவளை அழைத்து சென்றாள்.

    இவர்களின் உரையாடலை கேட்டதில்.. சிரிப்புடனேஇன்னும் குட்டிம்மானு சொன்னா.. முயல்குட்டிக்கு கோபம் வருது. இன்று உன் பிறந்தநாளா அரசி?.. அதான் பாவாடை தாவணியில் இருக்கிங்களா!.. ஆனா இதில் ரொம்ப அழகாக இருக்க. நீங்க உயரம் கம்மியா இருப்பதால் தான் மணியை அடிக்க முடியவில்ல என்பதை தான் கஷ்டம் என்று சொன்னீங்களா?.. நான் வேறு ஏதோ என்று பயந்துட்டேன். ‘

     ‘ உங்களுக்கு இந்த மணிய அடிக்க வேண்டும் என்பது ஆசையா?.. என் மீது வேற பிறந்தநாள்அன்று சத்தியம் செய்துயிருக்கிங்க.. கண்டிப்பாக உன் ஆசை நிறைவேறும் எழிலரசி. ‘ என நினைத்துக் கொண்டு.. அவள் சென்ற வழியையே பார்த்துக் கொண்டுயிருந்தான்

இன்று:

   வேந்தன் அன்று பார்த்ததையும் கூறிவுடன்..  என்ன முயல்குட்டி.. யார்மீது அன்று சத்தியம் செய்திர்களோ?.. அவர்களே உங்க ஆசையை  நிறைவேற்றிவிட்டார். அவராகிய இந்த வேந்தனுக்கு உடனடி பரிசு ஏதாவது தருவிர்களா?.. ” என அவன் புன்னகையுடன் கேட்க.

   அரசிக்கு அன்று நடந்து ஞாபகம் இருந்தது. இளமதி சத்தியம் செய்தேன் என்று.. அடிக்கடி கூறி சிரிப்பது உண்டு. அதனால்.. என்ன?.. என்ன?.. இவர் அன்று நடந்தை கூறுவதை கேட்டாலே.. தூரத்தில் இருந்து பார்த்துயிருக்கலாம்.. அதனால் ஏதோ நம்புவது போல இருக்கு. ஆனா அன்றைக்கு சத்தியம் செய்த நபரும் இவரா?.. என்று எண்ணி அவனை பார்க்க.. ‘

   வேந்தனோ.. அவள் தன்னை கூர்மையாகவும்.. சந்தேகமாக பார்க்கவும் .. உங்களால் நம்பமுடியலையா?.. ‘

    ‘ அவள் கையில் ஒன்றை கொடுக்க.. அவள் அதனை வாங்கி பார்த்தால்.. பார்த்ததும் அவளின் உதட்டில் முதலில் சிறிதாக அரும்பிய புன்னகையானது.. சிறிது நேரம் ஆகஆக.. பெரிதாகி.. அவனை பார்த்து கலங்கிய கண்களுடன்.. ‘

    தன்னவனிற்கு தன்னுடைய பரிசு மற்றும் தன்னுடைய முதல் முத்தமாக.. சில பல முத்தங்களை அவனின் நெற்றியில் தன் உதடுகள் கொண்டு பதித்துக் கொண்டுயிருந்தாள் அவனவளாக. ‘

    அவனும் அவளையும்.. அவள் கண்கள் கலங்கியிருப்பதையும் பார்த்தான்.. பின் சட்டென்று அவனின் நெற்றியானது.. பூ போல மென்மையாக இருந்த ஈர உதடுகளின் மூலம்.. முத்த மழையொன்றில் நனைந்தது.. அந்த முத்தமானது அவனின் உச்சயிலிருந்து.. பாதம் வரையிலும் உள்ள உடல் முழுவதிலும் சென்று.. தன்னவளின் மேல் தாபம்.. என்ற புதுவித உணர்வை முதன்முதலில் அவளறியாமல் அவனுக்கு அறிமுகப்படுத்திவிட்டாள் அவனின் முயல்குட்டி.. ‘

    எழிலரசி பார்த்தது.. அன்று அவன் புதிகாக வாங்கிய போனில்  முதல் புகைப்படம் எடுத்தது அவளைதான். அதில் அரசி பச்சை, மஞ்சள் பாவாடை தாவணியில் இடுப்பில் கை வைத்து நிற்பதுபோல.. இளமதியுடன் பேசுவது.. அவள் கைநீட்டி யாரையே பார்ப்பது நிற்பது போல.. என சில புகைப்படங்களில் அவளை பார்க்கும் போது.. சிறு புன்னகையும்.. கடைசியாக பின் அவனுடன் அவளும் சற்று தூரத்தில் இருப்பது போல.. சில புகைப்படங்கள் இருந்தது. அதனை பார்த்துதான் அவள் கண்கள் கலங்கி அவனை பார்த்து.. ‘

     ‘ அவன் உடனடியாக கேட்ட பரிசை அவளும் வாரி வழங்கிவிட்டாள். வேந்தனும் அவளின் பரிசை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டும்.. தன்னுள் அவளிற்கான மாற்றத்தையும் உணர்ந்தான் தான். அவளிற்கு.. தன்னுடைய பரிசாக திரும்ப ஏதாவது கொடுக்க ஆசைதான்.. அதனைவிட அவள் கலக்கிய கண்களை சரிய வேண்டும் மட்டும் கருத்தில் கொண்டான். ‘

   முயல்குட்டி இப்ப உங்களுக்கு சந்தோஷம் தானே?.. உங்க ஆசை.. என் ஆசை நிறைவேறி விட்டது. வேற ஏதாவது என்னிடம் கேட்க வேண்டும்மா?.. ”

    அவனின் முகத்தை பார்த்தவள்.. ” ம். தனுனு.. நீங்க சொல்வதை பார்த்தா.. உங்க.. உங்களுக்கு என்னை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கும். என்னை முன்பே நல்லா தெரிந்துயிருக்கு. ஆனா இரண்டுதடவை தான் பார்த்துயிருப்பதா சொல்லுறிங்க.. முதல் தடவை சரி.. இரண்டு பேருக்கும் வயசு கம்மி.. ஆனா இரண்டாவது தடவை பார்த்த பிறகு உங்களுக்கு என்னை திரும்ப எப்பயாவது பார்க்க வேண்டும் என தோன்றியிருக்கா?.. இல்லையா ?.. நம்ம வீட்டல நம்ம இரண்டு பேருக்கும் வரன் பார்க்கவில்லைனா.. நீங்க என்னை.. ” பார்க்க வந்துயிருக்க மாட்டீங்களா?? முடிக்கும் முன்.. அவளின் இதழ் மேல் தன்விரல் வைத்து போதும் என கூற.. அவள் கண்களில் இருந்து கண்ணிர் அவனின் மேல் படிந்தது.

   

    அவளின் கண்ணீரில்..  அவன் கலங்கினான் தான். ஆனால் தன் எண்ணத்தையும்.. நினைத்தையும்  கூற வேண்டுமே.. ” முயல்குட்டி.. இதுக்கு போய் கண்கலங்குறிங்க?..  ” அவளை மீண்டும் தோள்மீது சாய்த்து.. பின்..

    அரசி.. நான் உன்னை முதல் தடவை பார்த்தது.. நாம் பேசிக் கொண்டது.. பிறகு நீ சென்ற பிறகு.. நான் உணர்ந்தது எல்லாம் எப்படி இருந்தது?.. என்று இப்ப அதை நினைத்தாலும்.. ” என்றுக் கூறி அவன் கைகளை காண்பித்தான்.

    ‘ அவனின் உடல்சிலிர்த்து.. கைகளின் ரோமங்கள் அழகாக எழுந்து நின்றது. அதனை அவள் அவனின் கையை தொட்டுப் பார்த்து மகிழ்ந்து.. அதனுடன் விளையாடினாள். அப்போது அவளின் கலங்கிய கண்கள் இப்போது சிரிக்கும் கண்களாகவும்.. புன்னகைக்கும் உதடு.. மின்னலென ஒளிவீசிய முகம் என மாறியிருந்தால் அவள். ‘

    ‘ எப்படி மாறாமல் இருப்பாள்?.. இது அவளிற்கான அவன்  உணர்வின் வெளிப்படுயில்லையா!.. ‘

    அவள் தன் கை ரோம்மங்களுடன் விளையாடுபவளை.. ‘ முயல்குட்டிடிடி.. கைய எடுடி முதலில்.. நல்ல பையனா என்னை பேச விடமாட்டா போல.. ‘ என மனதினுள் அவளை செல்லமாக அர்ச்சித்துக் கொண்டே..

    வெளியில் புன்னகை மற்றும்  மென்மையான குரலில்…” நான் ஒருவாரம் உன்னை நினைத்துயிருந்தது.. உன் அக்காவிடம் கேட்க வேண்டும் என நினைத்தது.. கூடவே அப்ப எனக்கு உங்க வீடு தெரியும். நீ எப்படியிருக்கனு?. பார்க்ககூட வரலாம் என்று கூட நினைத்தேன். அப்புறம் வினோவ பார்க்கும் போதெல்லாம் தான் கொஞ்சம் தெளிய ஆரம்பித்தேன்.. நீ அவளவிட சின்னபொண்ணு.. இந்த வயசுல நான் நினைப்பது தப்புனு தோனுச்சு. “

     ” பிறகு நான் உன் நினைவு வரக்கூடாது என்பதற்காகவே.. தனியாகவே இருக்கமாட்டேன். எப்பவும் நண்பர்கள் கூடவும்.. படிப்புல கவனம் என மாற்றிக் கொண்டேன். பிறகு கல்லூரி படிப்பு.. அப்ப தான்  உணவகம் விரிவுப்படுத்தியதால்.. லீவ்விட்டு இங்க வந்தா.. பெரும்பாலும் உணவகத்தில் தான் இருப்பேன். “

    உன்னைய இரண்டாவது தடவை என் முயல்குட்டியோட பிறந்தநாள் அன்றைக்குதான் பார்த்தேன். நீ தானா என்று தெரிந்து கொள்வதற்கு முன்னே.. அது நீயாக தான் இருக்க வேண்டும் என்று என் இதயம் பட்டபாடு.. பாவம் அது!.  பிறகு உன் முகத்தை பார்த்துவிட்டு அது நீ தான் என்றதும்.. என் இதயம் குஷியாகி.. கண்ணுக்கு அது இடம் மாறிவிட்டது. இமைக்க  மறந்து உன்னை பார்த்தேன் முயல்குட்டி.. ” இப்போது அரசி அவனை இமைக்காமல் பார்க்கும் நிலையில் இருந்தாள்.

     அன்னைக்கு உன்னை பாவாடை தாவணியில் அழாகா மட்டுமா இருந்த.. உன்னை சின்னபொண்ணா பார்த்தப்பவே ஒரு வாரம் நான் உன் பின்னாடி என்னவென்று தெரியாமல் சுத்துனேன். உன்னை பெரிய பொண்ணா பார்த்த என் நிலைமை எப்படி இருக்கும்?.. ” அவளிடம் இறுக்கத்தை கூட்ட..

      நீ அங்குயிருந்து சென்ற பிறகு தான்.. நான் உன்னுடையவன் ஆக வேண்டும்.. என் முயல்குட்டி வாழ்நாள் முழுவதும் எனக்கு மட்டுமே வேண்டும் என்ற உரிமை உணர்வு வந்தது. ” அவளுக்கு நெற்றியில் நீண்ட அழுத்தமான முத்தம் ஒன்றை வழங்கி சமர்பித்தான்.

  

        

   

   

   

   

   

   

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!