Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thedi Vantha Kaathal Nee

Thedi Vantha Kaathal 6 1

அத்தியாயம் 6

 

முடியாது”, என்று சொல்லி கொண்டே அவன் முதுகில் கைகளை படர விட்டாள்.

 



Advertisement

இது தப்பு மித்ரா விலகு. உனக்கு புரியலை. என்னையும் சோதிக்காத விலகு”

 

முடியாது”, என்று சொல்லி கொண்டே அவன் நெஞ்சில் அழுத்தமான முத்தத்தை பதித்தாள்.

Advertisement

 

Advertisement

சிலையாக நின்றான் பார்த்தி. அடுத்த நொடி அவன் புலன்கள் அனைத்தும் விழித்து கொண்டது.

 

கீழே கிடந்த அவன் கைகள் அவள் இடுப்பில் பதிந்தது.

Advertisement

 

சிறிது நேரம் மெய் மறந்து நின்றவனின், ஒரு கை அவள் முகத்தை தாங்கி பிடித்தது.

 

அவன் முகத்தை அருகாமையில் பார்த்த மித்ரா ஒரு வெட்க சிரிப்பு சிரித்தாள். அடுத்த நொடி கண்களை மூடி கொண்டு உதடுகளை அவனுக்கு காண்பித்தாள்.

 

சிவந்த அவள் உதடுகளை விரலால் வருடிய பார்த்திபன், அதற்கு மேல் முடியாமல் அதில் ஆழ்ந்த முத்தத்தை பதித்தான்.

 

மேலும் மேலும் முத்த பரிமாற்றம் முடிவில்லாமல் தொடர்ந்தது. முடிவில் கலைந்திருந்த அவள் தலை முடியை கோதி கொடுத்தவன், அவள் கன்னத்தை தன் கைகளால் தாங்கி பிடித்தான்.

 

கண்களை திறந்து அவனை பார்த்த மித்ரா வெண்பற்கள் தெரியுமாறு சிரித்தாள்.

 

சாரி மா தப்பு பண்ணிட்டேன்ல?”, என்றான் பார்த்திபன்.

 

தலையை இட வலமாக ஆட்டி “இல்லை”, என்றாள் மித்ரா.

 

கோபம் இல்லையா? நான் என்னையே  அறியாம தான் இப்படி எல்லை மீறி நடந்துக்கிட்டேன்?”

 

பரவால்ல”, என்று சொல்லி கொண்டே அவன் நெஞ்சில் மீண்டும்  சாய்ந்தாள்.

 

இதுக்கு என்ன அர்த்தம் மித்ரா?”

 

எனக்கு உங்களை பிடிச்சிருக்குன்னு அர்த்தம். நான் உங்களை விரும்புறேன்னு அர்த்தம்”

 

மித்ரா”, என்ற படியே அவனை இறுக்கி கொண்டான்.

 

நான் படிக்கவே இல்லை மித்ரா. உனக்கு நான்  தகுதி ஆனவனே கிடையாது”

 

ஆனா எனக்கு நீங்க தான் வேணும்”

 

நான் எந்த வேலையும் பாக்கலை”

 

எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு பார்த்தி”

 

அன்னைக்கு கேட்டல்ல என்னைக்காவது படிக்கலைன்னு பீல் பண்ணிருக்கீங்களான்னு. உன்னை என்னைக்கு பாத்தேனோ அன்னைல இருந்து பீல் பண்றேன் மித்ரா. உனக்கு பொருத்தமா பொறந்திருக்கலாம்னு. இப்ப கஷ்டமா இருக்கு. மாமா என்னை எல்லாம் மருமகனான ஏத்துக்க மாட்டாங்க”

 

அவனை விட்டு விலகி,  அவன்  முகம்  பார்த்தவள்  “அப்பா  கல்யாணத்துக்கு  சம்மதிச்சிட்டாங்க”, என்று  சொல்லி  சிரித்தாள்.

 

என்ன சொல்ற மித்ரா? உண்மையாவா?”

 

ஹ்ம்ம் ஆமா. அத்தை அப்பாகிட்ட கேட்டாங்க. அப்பா சரி சொல்லிட்டாங்க”

 

அடுத்த நொடி அவளுடைய எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு, அவளை இறுக்கி அணைத்தான்.

 

நல்ல முகூர்த்தமாக இருப்பதால் இன்னும் இரண்டு வாரத்தில் இருவருக்கும்  திருமணம் என்று உறுதி செய்ய பட்டது.  இரண்டு நாள் கழித்து மோகனும், மித்ராவும் சென்னை சென்று அங்கு முடிக்க வேண்டிய வேலை, வாங்க வேண்டிய நகை, புடவை எல்லாம் வாங்குவதாக  முடிவு செய்தார்கள்.

 

எல்லாரும் அந்த வீட்டில் சந்தோசமாக இருந்தார்கள். ஊரை சுற்றி சுத்தி பார்க்கலாம் என்று எண்ணி கிளம்பி கீழே வந்தாள் மித்ரா.

 

தன் அத்தையிடம் வம்பு  செய்து விட்டு வெளியே வந்தவளின் கண்களில் அங்கே சோகமாக அமர்ந்திருந்த வள்ளி பாட்டி கண்ணில் தெரிந்தாள்.

 

பாட்டி அருகில்  சென்ற மித்ரா “பாட்டி என்கூட வாயேன்”, என்று சொல்லி அழைத்தாள்.

 

நான் வரலை மித்ரா. நீ வேற யாரையாவது கூட்டிட்டு போ”, என்றாள் வள்ளி பாட்டி.

 

பாட்டி காதின் அருகே குனிந்த மித்ரா “பாட்டி நந்தினி அம்மா பத்தி உங்கிட்ட கொஞ்சம் பேசணும். நீ வாயேன். ப்ளீஸ் பாட்டி. வா பாட்டி”என்றாள் 

 

ஹ்ம்ம் அவளை பத்தி பேசி இனி என்ன ஆக போகுது? சரி வா போவோம். உங்க அத்தைகிட்ட சொல்லிட்டு வா”

 

சரி பாட்டி”, என்று சொல்லி விட்டு பார்வதியின் அருகே போய் “பாட்டி கூட வெளியே போறேன்”, என்று சொல்லி விட்டு பாட்டியுடன் நடந்தாள் மித்ரா.

 

நேராக தங்கள் தோட்டத்துக்கு போனார்கள் இருவரும். அங்கு இருந்த மரத்தின் வேரில் அமர்ந்த மித்ரா “பாட்டி இங்க உக்காறேன்”, என்றாள்.

 

மித்ரா அருகில் அமர்ந்த வள்ளி பாட்டி, “என்ன பேசணும்? சொல்லு மித்ரா”, என்றாள்.

 

எனக்கும், பார்த்தி அத்தானுக்கும் கல்யாணம் நடக்குறதுல உனக்கு சந்தோசம் இல்லையா பாட்டி?”

 

என்ன மித்ரா சொல்ற? என் பேரனுக்கும், பேத்திக்கும் கல்யாணம். எனக்கு பிடிக்காம போகுமா சொல்லு. ஆமா நீ ஏன் அப்படி கேக்குற?”

 

எனக்கு உன் முகத்துல எதுவோ கவலை தெரியுதே பாட்டி. இப்ப நடக்குற விஷயம் அது ஒன்னு தான பாட்டி? அதனால தான் கேட்டேன்”

 

அது இல்லை மா. நான் நந்தினியை பத்தி தான் கவலை படுறேன். ஒரு பொண்ணை பெத்து வச்சு, அது வாழ்க்கையை வள படுத்த முடியாம இப்படி பட்ட மரமா காஞ்சு போய் நிக்குறதை பாத்துட்டு நான் இவ்வளவு  வருஷம் உசுரோடே இருக்கேனேனு நெஞ்சு அடிச்சிக்குது மித்ரா”

 

கண் கலங்காத பாட்டி”

 

எப்படி கலங்காம இருக்க சொல்ற? எனக்கு அவளை பாக்கும் போது எல்லாம்  பெத்த  வயிறு துடிக்குது ஆத்தா”

 

பாட்டி நான் இப்ப உனக்கு ஒன்னு சொல்லட்டா? கண்டிப்பா  அதை கேட்டு  நீ சந்தோச  படுவ?”

 

சொல்லு மா”

 

ஆனால் அவள் சொன்ன விசயத்தை கேட்டு சந்தோஷ படாமல்என்ன மித்ரா சொல்ற?”, என்று அதிர்ச்சியாக  கேட்டாள் வள்ளி பாட்டி.

 

ஆமா பாட்டி. நான் வந்ததே அதுக்கு தான்”, என்று சொல்லி தன் திட்டத்தை சொன்னாள்.

 

அதை கேட்டு அடுத்த நொடி அவளை அணைத்து  கொண்ட வள்ளி பாட்டி “இப்ப தான் ஆத்தா எனக்கு நிம்மதியா இருக்கு. நிஜமாவே நீ சொன்ன படியே நடந்துருமா மித்ரா?”, என்று கேட்டாள்.

 

கண்டிப்பா பாட்டி. நீ வேணா பாரு. எல்லாம் நல்ல படியா நடக்கும்”

 

அப்படி நடந்துட்டுனா ரொம்ப சந்தோசமா இருப்பேன் மித்ரா. பாவம் உங்க அப்பா மேல அவ உயிரையே வச்சிருந்தா. அவங்க காதலிச்ச பின்னாடி தான், உங்க அத்தைக்கும், மாமாவுக்கும் கல்யாணம் நடந்தது. பார்த்தி பார்வதி வயித்தில் இருக்கும் போது, உங்க அப்பாவுக்கும், நந்தினிக்கும் தான் கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு முடிவு பண்ணுனோம். அப்புறம் நடந்தது தான் உனக்கு தெரியுமே? இப்ப நீ சொன்னது  நடந்துச்சுன்னா    நான் நிம்மதியா கண்ணை  மூடுவேன்   மித்ரா”

 

கண்டிப்பா நடக்கும். சரி வா வீட்டுக்கு போவோம். அப்புறம் இவ்வளவு சீக்கிரம் கண்ணை மூட போறியா? அப்ப என்னோட பிள்ளைங்க எல்லாத்தையும் யாரு பாத்துக்குவா?”, என்று சிரித்து கொண்டே எழுந்து பாட்டிக்கு கை கொடுத்தாள்.

 

இருவரும் சந்தோசமாக வீட்டுக்கு சென்றார்கள்.

 

இரண்டு நாள் பார்த்திபன் கையில் தனியே சிக்காமல் இருந்தாள் மித்ரா.

 

நீ என்கிட்ட நெருங்காம இருக்குறது நல்லது தான் மித்ரா. இல்லைனா ரொம்ப கஷ்ட படுவ. நானும் நிறைய நடிக்க வேண்டியது இருக்கும். இப்ப அந்த பிரச்சனை இல்லை”என்று தனக்குள் பேசி கொண்டான் பார்த்திபன்.

 

இரண்டு நாள் கழித்து கிளம்பும் போது “நந்தினி அம்மாவும் வரணும்”, என்று அடம் பிடித்தாள் மித்ரா.

 

தர்ம சங்கடமாக விழித்தாள் நந்தினி.

 

அம்மா எனக்கு அம்மா நீங்க தான? அப்ப என்னோட கல்யாணத்துக்கு பொருள் எல்லாம் வாங்கணும்னா நானே போய் வாங்க முடியுமா? நீங்க வந்தா எனக்கு உதவியா இருக்கும். அத்தை சொல்லுங்க. பாட்டி அம்மாவை எங்க கூட வர சொல்லுங்க”

 

போய்ட்டு வா நந்தினி. அப்புறம் நம்ம எல்லாருக்கும் அங்கேயே புடவை எல்லாம் எடுத்துரு”, என்றாள் பார்வதி.

 

ஆமா நந்தினி போய்ட்டு வா”, என்று சொன்னாள் வள்ளி பாட்டி.

 

விருப்பம் இல்லைன்னா வற்புறுத்த கூடாது மித்ரா”, என்று சொன்னார் மோகன்.

 

அவர் குரலிலும் விருப்பம் இருப்பது போல உணர்ந்து “நான் வரேன் மித்ரா”, என்று சம்மதம் சொல்லி விட்டாள் நந்தினி. மூவரும் கிளம்பி செல்லும் போது வள்ளி பாட்டிக்கு கண்கள் நிறைந்தது. 

 

தன் நண்பர்களுடன் ஆல மரத்தடியில் அமர்ந்திருந்தான் பார்த்திபன்.

 

என்ன டா பார்த்தி அன்னைக்கு முத்தம் கொடுத்தான்னு சொன்னா. இப்ப கடைசில அவளை உனக்கே கல்யாணம் செஞ்சு வைக்க போறாங்க?”, என்று கேட்டான் ராசு குட்டி.

 

அட பாவி இது எப்ப நடந்தது? சொல்லவே இல்லை”, என்றான் கதிர்.

 

எருமை இதை சொல்ல கூடாதுன்னு தான அன்னைக்கு ரெண்டு பீர் வாங்கி தந்தேன். இப்படி உளறிட்டேயே”, என்று ராசுவை ஒரு குத்து குத்தினான் பார்த்திபன்.

 

உங்க சண்டையை அப்புறம் வச்சிக்கோங்க. இப்ப மேட்டரை சொல்லு பார்த்தி? உன் அத்தை மக முத்தம் கொடுத்தாளா? இல்லை நீ கொடுத்தியா?”, என்று கேட்டான் கதிர்.

 

அவ தான் டா குடுத்தா”

 

குடுத்து வச்சவன் டா. அம்சமா அழகான அத்தை பொண்ணு, இப்ப பொண்டாட்டியாவே வர போறா. இது எப்படி நடந்துச்சு?”

 

நானே இதை எதிர் பார்க்கலை மாப்பிள்ளை. ஆனா காத்து என் பக்கம் வீசுது போல? அதான் எனக்கு சாதகமா  எல்லாம் நடக்குது”

 

என்ன டா பார்த்தி சொல்ற?”

 

ஆமா டா. என்னை எத்தனை தடவை அசிங்க படுத்துனா தெரியுமா? என்னை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமான்னு இளக்காரமா பேசுனா. இதுக்காகவே அவளை கல்யாணம் செய்யணும்னு நினைச்சேன். ஆனா எப்படி நடக்கும்னு நினைச்சு அமைதியா இருந்துட்டேன். ஆனா கடவுளா  பாத்து  வாய்ப்பு  ஏற்படுத்தி கொடுத்திருக்கார்”

 

என்ன டா பார்த்தி? பழி வாங்க  போறவன் மாதிரியே பேசுற?”

 

ஆமா டா தாலி  கட்டிட்டு   அவ கிட்ட, அவ சொன்ன வார்த்தையை சொல்லி காட்டுவேன் பாரு?”, என்று வீரமாக  சவால்   விட்டான் பார்த்திபன்.

 

அப்ப உனக்கு அவளை பிடிக்கலையா பார்த்தி?”, என்று கேட்டான் ராசு.

 

அதெல்லாம் பிடிக்க தான் செஞ்சிருக்கு. வாய் மட்டும் அவளுக்கு கொஞ்சம் அதிகம். அதை சரி கட்டலைன்னா எப்படி?”

 

சரி டா புது மாப்பிள்ளையா ஆக போற? பார்ட்டி எப்ப?”

 

அலையாத. கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி வச்சிக்கலாம். எங்க கிழவிட்ட தான் ஆட்டையை போடணும். சரி டா வீட்டுக்கு கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு எழுந்து போனான் பார்த்திபன்.

 

அங்கே சென்னைக்கு சென்றவுடன் “உள்ள வாங்க மா”, என்று நந்தினியை வீட்டுக்குள் அழைத்தாள் மித்ரா.

 

தயக்கத்துடன் உள்ளே கால் எடுத்து வைத்தாள் நந்தினி. நேராக தன்னுடைய  அறைக்கு  கூட்டி சென்றவள் “போய் குளிச்சிட்டு வாங்க”, என்று சொல்லி நந்தினியை உள்ளே அனுப்பினாள்.

 

எல்லாத்தையும் அமைதியாக பார்த்து கொண்டிருந்த மோகன்  “நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு வெளியே போய் விட்டார்.

 

அடுத்த நொடி நேராக கீதா வீட்டுக்குள் சென்றாள் மித்ரா.

 

ஏய் மித்ரா வா வா. அதுக்குள்ள வந்துட்டியா? போன காரியம் என்ன ஆச்சு? காயா பழமா?”, என்று கேட்டாள் கீதா.

 

அதுக்கு தான் அஸ்திவாரம்  அழுத்தமா போட்டுட்டு வந்துருக்கேன் அத்தை. அநேகமா பழமா தான் இருக்கும்”

 

என்ன மித்ரா சொல்ற?”

 

ஆமா அத்தை, எங்க அத்தையோட பையனுக்கும், எனக்கும் கல்யாணம் ஆக போகுது. அப்ப என்னோட பிளான் சக்க்ஸஸ் தான?”

 

வெரி குட், வெரி குட். கல்யாணம் பிக்ஸ்  ஆகிட்டா. அப்ப இனி எல்லாம் சந்தோசம்ன்னு சொல்லு. ஆனா மித்ரா இந்த காரணத்துக்காக தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியா? மாப்பிள்ளை எப்படி? என்ன பன்றாரு?”

 

அத்தான் விவசாயம் பண்றாங்க அத்தை. அப்படியே ஹீரோ தான். இருங்க போட்டோ காட்டுறேன். முதல்  நாளே மயங்கிட்டேனா பாத்துகோங்களேன்”, என்று சொல்லி போட்டோவை காண்பித்தாள்.

 

அப்ப சந்தோசம் மித்ரா. ஆளும் செமையா இருக்காரு. நீ சந்தோசமா இருக்கியா?

 

ஆமா அத்தை ரொம்ப சந்தோசம். அப்புறம் இன்னொரு விஷயம் சொல்ல தான் ஓடி வந்தேன். இப்ப எனக்கு டிரெஸ் எடுக்கன்னு அம்மாவை இங்கயே கூட்டிட்டு வந்துட்டேன்”

 

ஏய் நிஜமாவா? ரொம்ப நல்ல விஷயம் செஞ்ச மித்ரா. சரி நான் வந்து அவங்களை பாக்கட்டுமா?”

 

வேண்டாம் அத்தை. நீங்க அப்புறம் தற்செயலா வாங்க. இப்ப வேண்டாம். அப்புறம் நீங்க நாளைக்கு  எங்க கூட கிளம்பனும். கல்யாணத்துக்கு டிரஸ் வாங்கணும்”

 

சரி மா”

 

வரேன் அத்தை”, என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வந்த மித்ரா “என்ன அம்மா குளிச்சிட்டிங்களா?”, என்று நந்தினியை பார்த்து கேட்டாள்.

 

ஆமா மித்ரா. உங்க அப்பா எங்க காணும்?”

 

சாப்பாடு வாங்க போயிருக்காங்க”

 

வீட்லயே எதாவது செஞ்சிருக்கலாமே மித்ரா?”

 

என்ன பொருள் எல்லாம் இருக்குன்னு தெரியலை மா. அதான் மதியத்துக்கு வேணா வீட்லயே செஞ்சிக்கலாம். நீங்க இருங்க நான் குளிச்சிட்டு வரேன்”

 

ஹ்ம்ம் சரி மித்ரா”, என்று நந்தினி சொன்னவுடன் குளிக்க சென்றாள் மித்ரா.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!