Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 13. 1

 

நாம் 13 (1)

 

      வேந்தன், எழிலரசியின் திருமண உறுதி நிகழ்ச்சி மாலை நடைபெறுவதால்.. இளம்தலைமுறையினர் எல்லாம் எழிலரசியின் வீட்டில் தங்களின் இனிமையான நேரத்தை பழைய தோழிகளுடனும்.. புதிய வரவுகளுடன்  தங்களுக்கு என்று ஓதுக்கிய அறையில் பகிர்ந்து சிலர் ஓய்வு எடுத்தனர். அதில் சிலர் முதல்தள மாடி ஹாலில் அமர்ந்துயிருந்த போது..



Advertisement

   தனுஎன்ற அழைப்புடன் அந்த பெயருக்கு சொந்தமானவனை ஆட்சி செய்ய வரப்போகும் எழிலரசி அறையின் கதவு திறந்து வெளியே வந்தவள் ஒரு நிமிடம் ஆடாது அசையாமல் நிற்க.. ஹாலில் இருந்தவர்களான தர்ஷினி, சத்யா, திலகன், வினோத், கதிரவன் நின்றவளை கவனித்தனர்.

   அவர்கள் கூடவே.. ‘ பின்னல் முடிகளை தளர்த்தி.. இருபக்கமும் சிறிதளவு முடிகளை எடுத்து கிளிப்பில் அடக்கியும்.. முகத்தில் இருந்த மெல்லிய அலங்காரத்தை கலைத்து.. கண்ணிற்கு தெரியும் அளவிற்கே சிவப்புநிற பொட்டும்.. காதில் சிறிய அளவு ஜிமிக்கியும், கழுத்தில் மெல்லிய தங்கசெயினும்.. கைகளில் கண்ணாடி வளையலுடன்.. பன்னீர்ரோஜா நிறம் மற்றும் ஊதாநிற பட்டு  பாவாடை தாவணிஅணிந்திருந்தவளை..

   தன் அரசி கதவை திறந்ததில் இருந்து தன் போனில் வீடியோ எடுத்துக் கொண்டே அவளை உரிமை பார்வை பார்த்துக் கொண்டுயிருந்தான்!.. அவளின் மன்னவனான வேந்தன். இவர்களை எல்லாம் பார்த்து நின்றவளின் நினைவு ஒருமணி நேரம் முன் பின்நோக்கி சென்று வந்தது.

Advertisement

    இளையவர்கள் அனைவரும் சாப்பிட்டு மாடிக்கு வந்துக் கொண்டுயிருந்த போது.. அரசிக்கு மெசேஜ்.. ” முயல்குட்டி.. உன்னோட ரூம் வலதுபக்க கபோடில் மேலிருந்து.. இரண்டாவது ஷெல்வில் இருக்கும் உடையை.. ஒருமணி நேரத்திற்கு பிறகு அணிந்து ஹாலிற்கு வரனும். அணிந்தவுடன் கண்டிப்பாக மெசேஜ் பண்ணு. “

Advertisement

    ‘ அரசி மெசேஜில் கூறிய இடத்திற்கு சென்று பார்க்க.. அங்கு சிவப்பு பாக்ஸ் அதன் மேல் மஞ்சள்வண்ண ரிப்பானால் கட்டப்பட்ட பரிசு ஒன்று இருந்தது. அதனை போட்டோ எடுத்துவிட்டு.. ஆவலுடன் அந்த பரிசை பிரித்தாள். ‘ 

    பிரித்தவுடன் ஒரு மடித்த பேப்பர் இருக்க.. அதனை எடுத்து படித்தாள்..

 

Advertisement

    என்னுடைய முயல்குட்டி..

           நீ!.. தாவணிக்கு வந்த நேரம்.. உன்னுடன் இருந்த என்னால்..

          அன்று கொடுக்க முடியாத தாவணியை.. இன்று உன் மன்னவன் ஆக போகும் முன்.. 

           கொடுக்கும் ..   

                 உன் மாமா தனு என்ற வேந்தனின் அரசிக்கு முறைசீர். “

 

    ‘ அவளுக்கு பிடித்த உடையும்.. அதிலும் அவளுக்கு பிடித்த நிறங்களின் கலவையான.. கிளாசிக்கலர்களில் கிளிபச்சை, அடர்ரோஜா.. அடர்ஊதா, ஆரஞ்சு.. பன்னீர்ரோஜா,ஊதா நிறத்தில் என பட்டுபாவாடைதாவணி இருந்தது. ‘

    ‘ அரசிக்கு அவனின் பரிசு மிகுந்த சந்தோஷசத்தை அளித்தது.. அவள் பூப்பெய்த நாளில் உடன் இருந்ததை.. இப்போது உடன் இருப்பதை போலான.. அவளவனின் முறைமாமாவிற்கு ஆனா பரிசையும்.. அவள் நினைவில் எங்கோ இருக்கும் வேந்தனின் நினைவுகளான.. அவனின் குரல், கையின்அழுத்தம்.. மென்மையான தோளின் அணைப்பு.. தலை தடவல்  நினைக்கும் போது.. அவளின் உடலில் அன்பு, காதல், தாபம் என அறிந்த.. அறியாத உணர்வுகள் எல்லாம் அவளை ஆட்கொண்டு.. அதில் இருந்து விடுபடும் எண்ணம் இல்லாமல் நின்றிருந்தவள் கபோடின் மீது சாய்ந்து சிலநிமிடங்கள் உட்கார்ந்து இருந்தாள். ‘

    பின் அங்கு இருக்கலாம் என வந்தவர்களுக்கு தேவைகளை கவனித்து.. பின் அவர்கள் உறங்குவதற்கும்.. வேந்தன் கூறிய ஒருமணி நேரத்திற்கு முன் கால் மணிநேரம் இருக்க.. அவன் வாங்கி கொடுத்த உடைகளில்..

    ரோஜா, ஊதாநிற பாவாடைதாவணி.. இந்நேரத்திற்கு பொறுத்தமானதாக இருக்கும் என அதனை அணிந்து.. பின் வேந்தன் சரியாக ஒருமணி நேரம் என்று குறிப்பிட்டுயிருந்ததாள்.. யாரும் இல்லாமல் பார்த்துக் கொள்வான் என.. அவனை பார்க்க போகும் ஆர்வத்தில்.. ‘ நான் வெளியேவருகிறேன். ‘ என்று மட்டும் மெசேஜ் அனுப்பிவிட்டு.. கதவை திறத்தாள்

    அங்கு இருப்பவர்களை பார்த்து.. ஒருநொடி அதிர்ந்தவள் பின் அனைவரையும் பார்த்து புன்னகையித்தாள். ஒருவனை தவிர.

    ‘ அவனோ.. அவள் புன்னகைத்தாளா?.. இல்லையா?.. என்று கவனிக்கும் நிலையில் அவன் இல்லை. வேந்தனிற்கு.. தான் வாங்கி கொடுத்து.. அவளை இந்த உடையில் அருகில் இருந்தது பார்க்கவேண்டும். அதனால் தான் எடுத்துக் கொண்ட வேலையை புன்னகை முகத்துடன் அழகாக அதனை செய்து கொண்டே.. அவளின் கோபத்தையும் ரசித்தான். ‘

     ‘ எழிலரசி வேந்தனின் மீதான கோபத்திற்கான காரணம்?. ‘ யாரும் இருக்கமாட்டார்கள்.. என்று நினைத்துயிருப்பாள். ‘ என புரிந்தது.

     ‘ அவன் என்ன செய்ய?.. அவள் மெசேஜ் அனுப்பிய பிறகு.. தன்னுடைய பதிலுக்கு காத்துயிருந்துபின் வருவாள் என நினைத்தான். அவன் நினைத்தது.. அவளின் மெசேஜ் வந்தவுடன் இவர்களை சமாளித்து.. அந்த இடத்தில் இருந்து சிறிது நேரத்திற்கு பிறகு வரச்செல்ல வேண்டும் என நினைத்தான். அரசி அவசரப்பட்டு வருவாள் என நினைக்கவில்லை. இருந்தாலும் அரசி.. தன் பெயரை கூறிக் கொண்டே வந்ததது.. பின் அவளின் முறைப்பு.. இதனைபார்க்க அவன் நினைத்ததைவிட சிறப்பாகவும்.. கிக்காகவும் இருந்தது. ‘

    ‘ கணவனாக போகும் ஒருவனுக்கு இதுபோலான வாய்ப்பு கிடைக்கும்மா?.. அவனின் மடலின் வரிகள் ஞாபகம் வந்து.. பாவடைதாவணியில் இருக்கும் முறைபெண்ணை.. முறைமாமன் ஆசையாக பார்க்க.. அவளோ தன் கருவிழியால் முறைப்பையும்.. உதட்டை சுழித்து, கழுத்தை வெட்டிச் செல்லும் அழகை பார்க்க. அவனிற்கு இப்போது இருகண் போததென்று.. மூன்றாவது கண்ணாக காமிராவிலும்.. அவளின் ஒவ்வொரு நுண்ணிய உணர்வுகள்.. செயல்கள் என அமைதியாக புன்னகை முகத்துடன் அவளை கண்களால் அபகரித்துக் கொண்டுயிருந்தான்.’

    அந்த ஹாலில் இருந்த ஷோபா ஒரமாக வைக்கப்பட்டு.. அங்கும் தரையில் உட்காருவதற்கு ஏதுவாக மெத்தை போன்று விரிக்கப்பட்டு.. அதில் அனைவரும் அமர்ந்துயிருக்க.. வேந்தனை முறைத்துக் கொண்டே.. நேராக சத்யாவின் அருகில் சென்று அமர்ந்தாள்.

    இருவரையும் அனைவரும் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர். அவர்களில் கதிரவனை தவிர மற்றவர்களுக்கு இருவரின் நடவடிக்கைகள் ஏன்?. எதனால்?.. என்று அவர்கள் சொல்லாமலே புரிந்துக்கொண்டனர். அவர்களில் ஆண்கள் உடையை பார்த்ததும் அவன் வாங்கியதுதான் என்றும்.. அவளின் முறைப்பு எதனால் என்று?.. பெண்கள் வேந்தனின் நடவடிக்கை பார்த்ததாள்.. புரிந்து.. மெல்லிய சிரிப்பை சிந்தி.. அவள் உட்கார்ந்தவுடன். அரசியின் முறைப்பை பெற்றார்கள்.

    அவர்களில் கதிருக்கு.. வேந்தனை பற்றி தெரியாததால்.. அவன் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டுயிருந்தான்.. பின் தன் அருகில் இருந்த.. தர்ஷினி.. இங்க என்ன நடக்குது?.. “

    தர்ஷினி புன்னகையுடன்.. ” அதுவா.. கதிர் மாமா.. எழில் அக்கா போட்டுயிருக்கும் பாவாடைதாவணி.. வேந்தன் மாமா.. வாங்கி கொடுத்ததுனு நினைக்கிறேன். “

    என்ன?.. “

    எதுக்கு இப்ப சத்தம் மாமா?.. அக்காக்கு பிடிக்குமுனு எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு வாங்கிக் கொடுத்துயிருப்பாங்க. “

    பிறகு ஏன்?.. எழில்.. வேந்தன் அண்ணாவ பார்த்து முறைக்கிது. “

    அக்கா அதுக்காக முறைக்கல.. நம்ம இங்க இருப்போம் என எதிர்பார்த்து இருக்கமாட்டாங்க. அதனாலையா இருக்கும். ”

    .. அப்படியா. சரி. நீ எப்படி இதுவாகதான் இருக்கும் என உறுதியா சொல்லுற?.. “

     அய்யோ தர்ஷினி.. அக்காவ மாட்டிவிட பார்க்குற.. ” நான் எப்ப உறுதியா சொன்னேன்.. இருக்கலாம்முனு தான் சொன்னேன். சரி  அவங்கள விடுங்க.. எனக்கு எப்ப இது மாதிரி எடுத்து தரபோறிங்க?.. “

    தர்ஷினியை ஆசையாக பார்த்து.. ” ம்.. நான் எடுத்துக்கொடுத்தா?. அது நமக்கான கல்யாணம்புடவைதான். “

    சாதாரணமாக இருந்தவள்.. கதிரின் பதிலில்.. ” ம்..  அப்ப நான் அதுக்கு இன்னும் 2 வருஷம் நான் காத்துயிருக்கனும். ” என ஏக்கமாக கூற..

    காத்துயிருக்க மாட்டியா  பிரியா?.. ”

    என்ன கேள்வி மாமா இது?.. மேகா கல்யாணம் முடியற வரைக்கும் தானே மாமா. அதுவரைக்கும் நான் உங்களை.. அங்க பாருங்க வேந்தன் மாமாவ.. சத்தமே இல்லாம அக்காவ  சைட் அடிப்பதை. அது மாதிரி சைட் அடிக்கும் வேலைய பார்த்துட்டு போறேன். ” புன்னகையுடன் கூறி முடிக்க..

   ம்.. பாரு பாரு.. அதுக்கெல்லாம் தடையே கிடையாது. ” என அவனும் புன்னகையுடன் அனுமதி அளித்தான்.

    யாரை உதாரணமாக எடுத்து தர்ஷினி பேசினாலோ.. அவன் வேந்தன் தன் அரசியிடம் கண்ணால் பேசிக் கொண்டுயிருந்தான்.. எழிலரசி சத்யாவின் அருகில் அமர்ந்திருந்தாள். அவளை தன் அருகில் வந்து அமரும்படி கட்டளையாக கூற.. அவள் முடியாது என மறுத்து கூற.. கட்டளை பின் கெஞ்சல்.. கொஞ்சலாக என மாறி என பேச்சுவார்த்தை நடந்து கொண்டுயிருக்க..

   எழில் இங்கு வாஇளமதி அழைக்கும் குரல்.

   இதோ வரேன் க்கா. “

    அவள் இளமதியை பார்த்துவிட்டு பின் அவளின் ஒருவயது குழந்தையுடன் ஹாலிற்கு வர.. அவள் உட்கார்ந்து இருந்த இடத்தில் அரசிக்கு இடம் விட்டு மென் புன்னகையுடன்.. வேந்தன் உட்கார்ந்து இருந்தான்.

   அரசி சுற்றிப் பார்க்க.. அவரவர் தன் போனுடன் தன் வேலைகளை செய்வது போல பாசாங்கு செய்துக் கொண்டுயிருக்க.. இவளுக்கு ஒருபக்கம் புன்னகையாகவும்.. மறுபக்கம் சிறிது வெக்கமாகவும் கூட இருந்தது. ‘ இவனுக்கு எல்லோரும் ஒத்து ஊதுறாங்க பா.. ‘ என்று நினைத்துக்கொண்டே..

    அவனின் அருகில் சென்று அமர.. அவளின் இடபக்கம் வேந்தன் இருந்தான். அவள் காலை மடித்து அமர்ந்து.. பின் உறங்க முயன்ற குழந்தையை மடியில் வைத்து தட்டிக் கொண்டுயிருந்தாள். 

     அவளின் மன்னவன்.. ” முயல்குட்டி.. ” என்ற அழைப்புடன்.. அவளின் இடது கையை மென்மையாக பிடித்தியிருந்தான். ” உன் தனுமாமாவோட பரிசு பிடிச்சுயிருக்கா?..”

   ம்.. “

   ஏன் அமைதியா சொல்லுற?.. வாய்திறந்து பேசு முயல்குட்டி.. “

   அதான் பக்கத்தில் உட்கார வேண்டும் நினைச்சிங்க.. உட்கார்ந்தாச்சு. பாப்பா தூங்க முயற்சி பண்ணுறா தனு.. அமைதியா இருங்க. ” மெதுவாக கூற..

   ம்.. சரி. ” அவனிற்கு அருகில் உட்கார வேண்டும்.. அவனிற்கு இதுவே போதும். பேசுவதை எப்பபோது வேண்டும்மானலும் பேசலாம் என.. அவளின் விரலை தடவிக் கொண்டு இருந்தான்.

    ‘ அந்த விரலின் சொந்தகாரியோ.. சிறிதுநேரமாக வேறு உலகத்திற்கு சென்றுயிருந்தாள்.. எழிலரசி குழந்தையை தூங்க வைக்க ஆரம்பித்தவள்.. அவனிற்கான உரிமையான அழைப்பு, பரிசு, குரல், தொடுகை, அருகாமை, அவனின் அனைத்தும் சிறிதுநேரம் முன் மங்கலாக நினைவில் உணர்ந்தவள்.. இப்போது உணர்வு பூர்வமாக உணர்ந்து.. அவனை காதலுடன் பார்த்தாள். ‘

    அவனும் அவளையே பார்த்திருந்ததால்.. ” என்ன முயல்குட்டி?. என்ன இப்படி பார்க்கிறிங்க?.. நான் அமைதியா நல்லபையான உட்கார்ந்துயிருப்பது பிடிக்கலையா ?.. “

    இல்லைஎன அவள் தலையாட்ட..

    இல்லையா!. ‘ அவளின் கண்களை ஆழ்ந்து பார்க்க.. அவள் வேறு ஏதோ நினைவில் உள்ளாள் என்று உணர்ந்து.. பின் அவளிடம் போராசையுடன்.. ” முயல்குட்டி அன்றைக்கு நடந்தது.. ஏதாவது உள்மனசுல இருந்து உணருகிறாயா?.. ”

   ம்.. 

   அதிர்ச்சி மற்றும் மெல்லிய புன்னகையுடன்.. ” என்ன!. என்ன ?.. உண்மையா முயல்குட்டி.?.. “

   கண்கள் சிறு கலங்களுடனும்.. உதடு விரிந்த மெல்லிய புன்னகையுடனும்.. ” ஆமாம் 

    அரசியின் கைகளை அழுத்தமாக பற்றிக்கொண்டே.. ” .. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு முயல்குட்டி. நான் உன்னைய கைய தொடும் போதெல்லாம்.. அன்னைக்கு என் கைவிரலோட.. உன் பிஞ்சுவிரலை பிடித்துயிருந்த.. அந்த நேரத்தில் இருந்த உணர்வு தான் எனக்கு வருது. ”

    அன்னைக்கு நீ ரொம்ப அழுதியா அதனால. உனக்கு இனி ஞாபகம் வரக்கூடாது.. உனக்கு இல்லையெனா என்ன?.. எனக்கு இருக்குல.. போதும் நினைந்தேன். ஆனா நான் இன்னைக்கு சொன்னபிறகு.. உனக்கு எதுவும் ஞாபகம் இல்லைனு சொன்னியா.. ஏன் முயல்குட்டி ஞாபகம் இல்லை?. இருந்தா நல்லாயிருந்து இருக்கும் என்றும் நினைத்தேன். இது எனக்கே கொஞ்சம் ஓவர்தானு தெரியுது. நீ இப்ப உணர்கிறாய் தானே?.. கோச்சுக்காத முயல்..  ரொம்ப ரொம்ப சின்ன குறையிருந்தது.. இப்ப எதுவும் இல்ல.. என் முயல்குட்டிக்கு கொஞ்சம் ஞாபகம் வந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். “

   ” முயல்குட்டியால!.. ரொம்ப ரொம்ப சந்தோஷமா!.. இருக்கேன். உனக்கு இப்ப ஏதாவது வேண்ணும்இல்ல பிடித்து உடனே செய்ய வேண்டும் என தோனினா.. சொல்லு முயல்குட்டி.. நான் நிறைவேற்றி வைக்கிறேன். “

    ‘ அவன் மனதில் இருப்பதை படபடவென்று கூறியனைத்தையும்.. ரசித்தவள்.. கடைசியாககூறியதை கேட்டு.. அவளின் தற்போதைய குறையை நிறைவேற்றிக் கொள்ள நினைத்தாள். ‘ 

    தனு.. .. எனக்கு இப்ப தூக்கம் வருவது.. நைட்டு பிளவுஸ் வேலை முடித்து தூங்க நேரஆகிடுச்சு. அதனால.. “

   அதனால என்ன முயல்குட்டி?.. உள்ளே போய் நல்லா படுத்து தூங்கு. “

   எனக்கு.. எனக்கு.. .. உங்க..  தோளில் சாய்ந்து தூங்கனும். ” என வெக்க புன்னகையுடன் கூற..

    சட்டென்று அவளின் வெக்கத்தை பார்த்தவன்.. அய்யோ முயல்குட்டி!.. போதும் டி.. பாவம் நானு.. ” அரசி.. நீ சாதாரணமா என் மேல சாய்ஞ்சு தூங்கனும் சொன்னாலே நான் ஒருநிலையில் இருக்கமாட்டேன்.. இப்படி வெக்கத்தோட சொன்னா!.. இதையே நீ ரூம்மல வைத்து சொல்லியிருந்தாலாவது.. செம்மையா ஒரு சிறப்பு முத்தம் வாங்கிட்டு.. ” என்ன?.. என்பது போலபார்க்க..

  கன்னத்தில்தான் கொடுத்து.. தூங்க வைத்துயிருப்பேன். ஹாலில் வைத்து சொல்லிட்ட. 

     நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு.. ” ம்.. சாய்ந்து தூங்கு.. பேசிட்டு இருக்கலாம். தூக்கம் வந்தா அப்படியே தூங்கிவிடு.. சரியா. “

   ம்.. சரி தனு.. சொல்லுங்க.. உங்க ஆபிஸ் வேலைபற்றியும்.. கூட வேலை செய்பவர்கள் பற்றி சொல்லுங்க. “

   ம். ”

    ‘ அவன் கூறுவதை கேட்க ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலே.. அவனின் தோளில் தூக்கியிருந்தாள். அவளை பார்த்த வேந்தன் புன்னகைத்துவிட்டு.. பின் இன்று எடுத்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டுயிருந்தவனின்.. காலின் மீது குழந்தையின் கை படவும்.. இளமதி கூறியது அவனிற்கு நினைவில் வர.. மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டான். ‘ 

     ‘ அரசி உட்கார்ந்த இருந்தபடியே உறங்குவதால்.. உடல்வலிக்கும் என எண்ணி.. அவன் சத்யாவை பார்க்க.. போனில் ஏதோ டைப் செய்துக் கொண்டுயிருந்தாள். மற்றவர்களில் கதிரவன், தர்ஷினி அங்கு இல்லை. தன் நண்பர்களும்.. போனில் ஐக்கியமாகி இருப்பதால்.. வீடே அமைதியாக இருக்க.. அனைவரும் ஓய்வு எடுப்பார்கள் போல.. வேறு யாரும் இப்போதைக்குவரமாட்டார்கள் என நினைத்து.. ஒரு முடிவு எடுத்து.. ‘

   சத்யா.. சத்யா.. ”

   சொல்லுங்க அண்ணா.. ” திரும்பியவள்.. எழில் வேந்தனின் தோளில் உறங்குவதை பார்த்து மென்புன்னகை புரிந்தாள். 

   இங்க கொஞ்சம் வாங்க. “

    எழுந்து அருகில் வந்தவள்.. ” எழில்ல ரூமுக்கு அழைத்து போகவேண்டுமா?.. “

   இல்லங்க.. ஒருநிமிடம் பாப்பாவ தூக்கிக்கோங்க. ”

   ம்.. சரி ண்ணா. ”

      குழந்தையை சத்யா தூக்கிங்கொள்ள.. அரசியின் தலையை நிமிர்த்தி.. பின் அவன் எழுந்து.. அவளின் தலைபகுதியை மெத்தையில் படுக்க வைக்க போகும் நேரம்.. அரசியின் காதில்அரசிம்மா.. காலைக்கொஞ்சம்மா நீட்டு. ” என்று கூறவும்.. அவள் அதனை கேட்டு.. நீட்ட போகும்நேரம்.. அவளை படுக்க வைத்து.. பின் அவள் காலில் போர்வையை விரித்துவிட்டான். அதன்பின் வேந்தன் அவள் தலையை மட்டும் தூக்கி.. அவன் கால்நீட்டி அமர்ந்து.. அரசியின் தலையை அவன் மடியில் வைக்க.

   சத்யா இப்ப அரசி பக்கத்தில் குழந்தைய படுக்கவைங்க. ”

    இவ்வளவு நேரம் சத்யா.. வேந்தன் செய்தை பார்த்து.. ஆ!.. என்று திறக்காத குறைதான்.. அவனை  இமைக்காமல்!. பார்த்துயிருந்தாள். ” சத்யாதிரும்ப அழைக்க..

   இதோ ண்ணா.. ” என்றுக் கூறி.. அரசியின் அருகில் படுக்க வைத்தாள். பின் அவள் உட்கார செல்லும் போது..

   சத்யா இங்க வாங்க.. ” என்ற மெல்லிய அழைப்பு சத்தம்.

    அவள் திரும்ப.. அங்கு தன் அருகில் அமருங்கள் என திலகன்வாங்கஎன்று சத்தம் வராமல்.. சைகையில் அழைக்க.. சத்யா அவள் முன்பு உட்கார்ந்து இருந்த இடத்தை பார்த்தாள். இடம் சற்று நெருக்கலாக இருப்பதுபோல இருக்க.. நினைத்தால் உட்காரலாம்.. சரி பரவாயில்லை அவள் வசதியாக உறங்கட்டும் என நினைத்து.. திலகனின் அருகில் சென்று அமர்ந்தாள்.

    காலையில் வேந்தனும், எழிலரசியும் பேசும் போது.. வெளியில் அமர்ந்துயிருந்தவர்கள்.. சற்று நன்றாக உரிமையுடனும், மனதில் இருப்பதை வெளிப்படையாக பகிர்ந்து பேசும் அளவிற்கு.. திலகனும், சத்யாவும் முன்னேறியிருந்தனர். அதனால்தான் சத்யா அவன் அங்கு அமர்வதற்காக அழைக்கவும் உடனே சென்றாள்.

   வேந்தன்  திலகன் சத்யாவை அழைத்ததை கவனிக்கவில்லை.. அவன் அரசியும், குழந்தையும்.. படுத்துயிருக்கும் நிலை எல்லாம் சரியாக உள்ளாதா?.. எனப் பார்த்துயிருந்தான். அவன் நன்றாக நிமிர்ந்து அமர்ந்து.. எதிரில் இருப்பர்களை பார்க்க.. சத்யா அங்கு இருப்பதை பார்த்து.. திலகனை பார்த்து ஒரு லுக் விட்டான்.

    திலகன் வேந்தன் தன்னை பார்ப்பதை  உணர்ந்து..  எழிலரசி.. நல்லா படுக்கட்டும் என்று தான்டா. ”

   அப்படியா திலகா?.. “

   ம்.. வேந்தா. உனக்கு வந்த அதிஷ்டம் பாரேன்..  கல்யாணத்திற்கு முன்.. கட்டிக்க போற பொண்ணோட வீட்டின் ஹாலில்.. அவங்க உன் மடியில தூங்குறாங்க.. அதை என்னடா என்று?.. பார்த்தேனா?.. இல்ல கேள்வி தான் கேட்டேனா?.. “

   ஏன்?.. கேட்டுதான் பாரேன். “

   ம்ஹூம்.. நான்னெல்லாம் ரொம்ப டிசன்டானவன்னாக்கும்.. பார்த்திட்டு போய்யிட்டே இருப்போம். ” எனக் அவன் கூறிக் கொண்டுயிருக்கும் போது அங்கு வந்து நின்றான் இன்பா.

    ‘ வேந்தன், வினோத், திலகன் மூவரும்.. இன்பாவை ஒருபார்வை.. எழிலரசியை  ஒரு பார்வை என பார்த்தனர். அவர் வேந்தனின் மடியில் படுத்துயிருப்பதை பார்த்து.. ஏதாவது நினைத்துக் கொள்வான?.  என அவர்கள் மூவரும் நினைக்க.. சத்யா மட்டும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டுயிருந்தாள். ‘ 

   அவள் அருகில் இருந்த திலகன்.. தியா இப்ப எதுக்கு அவரை பார்த்து சிரிக்கிறிங்க?.. நாங்களே அவர் வேந்தனின் மடியில் படுத்துயிருப்பதை பார்த்து.. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ.. என நாங்க நினைச்சா!.. நீங்கஅவரை பார்த்து சிரிக்கிறிங்க?.. “

   என்ன அவர் ஏதாவது நினைத்துக் கொள்வாரா?.. அவர் முகத்த நல்லா பாருங்க.. அவரு எப்படி எழில்?.. பார்த்த இரண்டுநாளில் அண்ணா மடியில் தூங்குறானு?.. பார்க்குறாரு. எழில்.. இன்பாஅண்ணா, அப்பா மடியில மட்டும்தான் படுப்பா. மத்த இரண்டு அண்ணாக்கூட நல்லா பேசுவா.. ” 

    ”  ஆனா இன்பா அண்ணா இல்லாத போது.. ஹாலில் டிவி பார்க்கும் போது..அப்படியே தூக்கம் வந்தா.. அவங்க படுக்க சொன்னாலும்.. அவங்க மடியிலயெல்லாம் படுக்கமாட்டா. இதையாரவது கூறினா.. அப்பயெல்லாம் அண்ணாவ பார்க்கமே.. அப்படியே  பெருமையா மத்த இரண்டுபேரையும் பார்ப்பாரு. அதான் இப்ப எழில் தூங்குவதை பார்த்து அழுவதா?.. ஆனந்தபடுவதா?.. என தெரியாம முழிச்சுக்கிட்டு நிக்கிறாங்க. ” என கூறிவிட்டு..

    சிரிப்புடனே.. ” இன்பா அண்ணா.. இன்பா அண்ணாஅவள் கூப்பிட.. அவன் சத்யாவிற்கு பதில் அளிக்காததை பார்த்த திலகன்.. ‘ அவள் கூறியதில் உண்மைதானோ.. ‘ என்று நினைத்தான்.

   இன்பா.. இன்பாதிலகன் சற்று சத்தமாக அழைக்க..

   என்ன.. என்ன திலகன் அண்ணா?.. ” என்று இன்பா திலகனிடம் திரும்பி கேட்க..

   என்ன நான் உனக்கு அண்ணாவா?.. டேய் டேய்.. சத்யாவிற்கு அண்ணா நீ.. உனக்கு நான்அண்ணாவா?.. உறவுமுறையே மாற்றி விடுவான் போல.. ‘ அதிர பார்க்க.. 

   இவனை பார்த்த வேந்தனிற்கு.. அவன் முகமாற்றத்தை கவனித்து.. அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்து.. சிரிப்புவர.. சிரிப்புனே.. ” திலகா.. திலகன் அவர்களோ உங்க தம்.. ” அவன் முழுவதும் முடிப்பதற்குள்ளாக அவனை ஒரு முறைப்பு பார்வை பார்த்தான்.. திலகன்.

   அதே சிரிப்புனே வேந்தன்.. “இன்பா 

   ம்.. சொல்லுங்க மாமா. “

     உங்கள சத்யா கூப்பிட்டாங்க.. நீங்க பார்க்கலை என்று திலகன் உங்களை கூப்பிட்டாங்க. அப்புறம் இன்பா.. திலகனை அண்ணா என்று மட்டும் கூப்பிட வேண்டாம். டா வேண்டும் என்றாலும் கூட கூப்பிடுங்க.. அவன் பொறுத்துக்குவான்.. ஆனா நீ அண்ணா கூப்பிடா.. அவ்வளவுதான். யாராவது அண்ணா கூப்பிட்டாலே பிடிக்காது.. அதிலும் நீங்க.. ம்ஹூம்.. கூப்பிட்டு விடாதிங்க. “

   இன்பாவும் வேறு நினைவில் இருந்ததால்.. அவனின் மறைமுக கூற்றை கவனிக்கவில்லை.. ” ம்.. சரிமாமா. ” பின் சத்யாவிடம் திரும்பிஎன்ன சத்யா?.. எதுக்கு டா கூப்பிட்ட

   அது ஒன்னுல அண்ணா.. கையில என்ன வைத்துயிருக்கிங்க?.. வாசனை கமகமனு வருதே!.. அதை கேட்க கூப்பிட்டேன். ”

   அது.. அதுஎன்று எழிலரசியை பார்க்க

   முறைப்புடன்.. ” என்ன எழிலுக்கு ஏதாவது வாங்கிட்டு வந்திங்களா?.. ”

   ம்.. என தலையை ஆட்டவிட்டு.. எழிலரசி  காலின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

  எழிலுக்கு பிடிக்கும் இல்ல.. கோதுமைமாவு புட்டு.. நாட்டுசர்க்கரை போட்டது. அதுதான். “

   .. அப்ப என்னோட பங்கு. ”

   ம்.. ” என்று கூறி சத்யாவிடம் கொடுத்துவிட்டு.. மீண்டும் அமர்ந்து.. வேந்தனை பார்த்தான்.

    மெதுவாக புன்னகையுடன்.. ” மாமா.. எங்களோட இரண்டு அண்ணா மடியில கூட எவ்வளவு சொன்னாலும் படுக்கமாட்டா. நான்.. இல்ல அப்பா அவளுக்கு வேணும். ஆனா இப்ப எழிலுக்கு உங்களை எவ்வளவு பிடிச்சுயிருக்கு என்று.. உங்க மடியில் படுத்துயிருப்பதில் இருப்பதில் இருந்தே தெரியுது

    நீங்க ஆரம்பத்தில் இருந்து அக்கறையுடன் நடந்துக் கொள்வதை பார்க்கும் போது.. இதை நீங்க கண்டிப்பா தெரிந்துக் கொண்டால் நல்லாயிருக்கும். அதனால எழில் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.. நான் சொல்லட்டா?.. இல்ல இது அவள் உடல்நிலை சம்பந்தப் பட்ட விஷயம்.. அதான் நீங்களே பார்த்து தெரிந்துக் கொள்ள வேண்டும் என விரும்பினாலும்.. எனக்கு பிரச்சனை இல்ல. “

    புன்னகையுடன்.. ” அப்படி எல்லாம் இல்ல இன்பா. நமக்கு பிடிச்சவங்கள பற்றி.. அவங்களுக்கு பிடிச்சவங்க குறையே சொன்னாலும்.. அது நல்லதுதான். அவங்க குறைய சரி செய்ய உதவும். நீங்க அரசியோட உடல்நிலைய கூறி.. நல்லா பார்த்துக்கதானே சொல்லவரிங்க. சொல்லுங்க. “

  இல்ல அரசிக்கு மன்திலி பிரியட்ஸ் முதல் நாள் வயிறு வலிக்கும். “

    வேந்தன் பதட்டத்துடன்.. ” இன்னும்மா வயிறு வலித்து.. அழுகுறா?.. ஒழுக்கா சத்தான சாப்பாட்டை சாப்பிடுறாளா?.. இல்லையா?.. ”

   ‘ வேந்தன் சற்று சத்தம், பதட்டம், கோபம், வருத்தம் கலந்த கலவையில் இன்பாவிடம் கேட்டான்.. வேந்தனின் சத்தால்.. பக்கத்தில் இருந்தவர்களை திரும்பி பார்க்க வைத்தது.. பின் அவர்களும் இவர்களின் பேச்சை கேட்க ஆரம்பித்தார்கள். ‘

    இன்பா வேந்தனின் பதட்டத்தை பார்த்து.. அது ஏன் என்று உணரவில்லை?.. உடல்நிலை பற்றிய கவலை என்று மட்டும் நினைத்து.. ” நீங்க பதட்டப்படும் அளவிற்கு ரொம்ப பிரச்சனை ஒன்னும் இல்ல. எழில் பூப்படைந்த அதே நாளிலே ரொம்ப அழுதா!.. அப்பவே.. என்னைய தான் பார்த்துக் கொள்ள சொன்னா. அவளை வீட்டல கூட. என்னைய பண்ண சொல்லுறா என்று திட்டுனாங்க. அதுக்கு எல்லோருக்கும் ஒரு விளக்கம் கொடுத்தா. ”

   அக்கா ஸ்கூல் முடிந்த பிறகு.. எனக்கு இப்ப போல ஸ்கூல வலிச்சா?. யார் பார்த்துப்பா?.. யார் வீட்டுக்கு கூட்டி வருவா?.. இன்னைக்கு மாதிரி உங்களையா நான் ஒவ்வொரு தடவையும்.. போன் பண்ணி கூப்பிட முடியும்.. அதனால அண்ணா எல்லாம் தெரிந்துக் கொள்ளட்டும். எனக்கும் வேற பொண்ணுங்களுக்கும்.. வேறு யாரும் உதவி பண்ண முடியாத சூழ்நிலையிருந்து.. அந்த இடத்தில் அண்ணா இருந்தா?.. அந்த பொண்ணுக்கு எவ்வளவு உதவியா இருக்கும். ”

    அதனால அண்ணா தான் எனக்கு எப்போதும் பண்ணணும்.. எனக்கு தேவையானது.. சாப்பிட தேவையானது எல்லாம் நான் மறந்தாலும்.. அவங்க மறக்காம பண்ண வேண்டும் சொன்னா. அப்ப எழில் சொன்ன கேட்ட எல்லாத்தையும் பார்க்கமே வாய்யடச்சு!. போய் நின்னாங்க. ”

     எனக்கு இன்னும் அது ஞாபகம் இருக்கு மாமா. அவ அப்ப 6வது படிச்சா.. அன்னைக்கு எழில ஸ்கூல் இருந்து வீட்டிற்கு அழைத்துவரும் போது அழுத அழுகை. பிறகு அவளோ!.. இவ்வளவு புரியும்படியா சொன்னதும் எனக்கு  வீட்டில் இருப்பவர்கள் பதில் சொல்லும் முன்னே வேகமா!. சரி உனக்கு எல்லாம் நானே பண்ணுறேன். அதுக்கு டீலிங்கா.. நீங்க அழக்கூடாதுனு நான் சொன்னேன். அப்ப சிரிச்சுக்கிட்டே.. சரினு சொன்னா. அப்ப இருந்து இப்ப வரைக்கும் நான்தான் அவளை பார்த்துப்பேன். சிலசமயம் அப்பாவையும் இழுப்பா. அதுக்கு அவரு.. நான் அம்மா, அக்காவபார்த்துக்கனும்.. அதனால உன் முழுப்பொறுப்பும் என்னோடதுனு எழில்கிட்ட சொல்லிட்டாரு. “

     ” அதன்பிறகு அவ சில சாப்பாடு சொன்னா.. வீட்டலை அதைதான் அப்ப கொடுத்தாங்களா.. அதனால சத்தான உணவு எல்லாம் கேட்டு வாங்கி கொடுப்பேன். அப்படி வாங்கி கொடுப்பது தான் இந்த புட்டு கூட. நான் தான் எழில் கூடவே.. இந்த சத்யா மேடத்தையும் பார்த்துக்குவேன். சத்யாக்கு அண்ணா இல்ல.. அதனால நீதான் பார்த்துக்க வேண்டும் என்பது.. இந்த எழிலரசியோட கட்டளை. அதான் நான் என்ன சொல்ல வந்தேன்னா!.. இத்தனை நாளா நான் பார்த்துக் கொண்டு இருந்ததை.. நீங்க.. ” என கூறும் போது வேந்தன் தன்னை கவனிக்கவில்லை என உணர்ந்து..

    ‘ இன்பா வேந்தனை பார்க்க.. மெல்லிய புன்னகையுடன் அவன்.. தன் அரசியின் தலையை தடவிக் கொண்டுயிருந்தான். ‘

   எழிலை பற்றி ஏதோ நினைக்கிறார் போல.. எதார்த்தமாக இதனை எடுத்துக் கொண்ட இன்பா மாமாவிடமே.. ” மாமா எழில பற்றி என்ன நினைக்கிறிங்க?.. “

   அவன் ஏதோ நினைவில்.. ” அது இன்பா என் அரசிம்மா!.. நான் சொன்னதை எவ்வளவு அழகாக!.. புரிந்துக் கொண்டு.. அதை உங்களிடம் சொல்லி.. அதையும் நீங்க புரிந்துக்கொண்டு.. அரசிக்கு மட்டும் இல்லாம சத்யாவையும் பார்த்து இருக்.. ” கிங்க.. என சொல்ல வந்தவன். பிறகு தான் தன் சுயநினைவிற்கு வந்தான்.. பின் சுற்றியிருப்பவர்களை பார்க்க..

   சத்யா, இன்பா, திலகன், வினோத்.. நால்வரும் ‘ என்ன?.. நான் சொன்னதா?.. இது எப்போ?.. ‘ என்பதுபோல பார்க்க.. இன்பா அவனை அதிர்ச்சி, ஆச்சரியத்துடன் பார்க்க..

   அது.. அது வந்து.. அதுவந்து.. ”

    

  

  

    

    

   

    

   

   

    

  

   

   

   

   

  

   

   

      

  

   

   

    

   

   

   

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!