Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 26. 2

 

நாம் 26(2) 

  

    இன்று அவனுடனே வருவதால் சாமி கும்பிடும் நேரம் தவிர.. அர்ச்சனை தட்டு வாங்கியதில் இருந்து அடிபிரதஷ்ணம் செய்யும் போதுகூட அவனின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டேதான் இருந்தாள்.



Advertisement

   புன்னகையுடன் அவர்களின் இடத்தில் இருவரும் அமர.. ” என்னைய ரொம்ப மிஸ் பண்ணியா முயல்குட்டி?.. ”

    ம் என தலையசைத்து அவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள். சில நிமிடங்கள் கழித்து..

   தனு உங்க நினைவிற்காக நான் இந்த கோயில் வருவது.. அதிலும் இந்த இடம் ரொம்பவே ஸ்பெஷலா இருந்தது. ”

Advertisement

    அவனும்ம்.. எனக்கும் தான்இப்ப நீ என்னைய பார்த்தபின்.. நினைக்கும்போது ரொம்பவே ஸ்பெஷல். உனக்கு என்னைபற்றி.. என் காதலை பற்றி தெரியாமலையே.. ஒருநம்பிக்கையான உணர்வில்..  நீ என் கைகோர்த்து அருகில் அமர்ந்துயிருந்து, உரிமையா சாப்பாடு வாங்கி வரச்சொன்னது. அதெல்லாம் நான் பண்ணும் போது எனக்கு எப்படி இருந்தது தெரியாமா முயல்குட்டி. ”

Advertisement

   அவனவளோ புன்னகையுடன்.. ” எப்படி இருந்திங்க தெரியுமா?.. அப்படியே எனக்கு உங்கள கொஞ்சனும் போல இருந்தீங்க தனு. ஒவ்வொரு வரி முடியும் போதும் அரசிம்மா!. அரசிம்மா!. தான். ஸாரிம்மா.. சொன்னப்ப அவ்வளவு வருத்தம் உங்க முகத்தில்..  மடையா தண்ணிகூட கொடுக்காமா.. இப்படியா மறந்து போய் முயல்குட்டியோட பேச எப்படானு இருப்பனு.. உங்கள திட்டிக்கொண்டே தானே போனிங்க?. 

    ஆம் என புன்னகையித்தான்.

  இந்தமாதிரி தான் தனு.. எனக்கு நீங்க இங்க பண்ண.. ஒன்னும் ஓன்னும் நினைக்கும் போதும், என்ன பார்ப்பதற்கு முன்னாடி உங்களுக்கு என்னுடன் பேச, எனக்கு எதையும் செய்ய வேண்டும் என்று.. எவ்வளவு ஏக்கம் உங்களுக்கு இருந்துயிருக்கும். அதுமட்டும் இல்ல என்னைய பார்த்ததும் ஒரு ரியாக்ஷ்ன் கொடுத்திங்களே.. அந்த பார்வைக்கு என்ன அர்த்தம்..  தனு!.. ” அவனின் கண்களை பார்த்துக் கொண்டே கேட்க.

Advertisement

    அவன் கண்கள் கலங்கியிருந்தது. ” அப்ப எனக்கு இத்தனை வருடம் என் முயல்குட்டிய பார்க்காம இருந்த வருத்தம்.. ஒரே நொடியில் மாயமா பறந்துபோய்.. முயல்குட்டிய அத்தனை வருடத்திற்கு சேர்த்து உன்னைய பார்த்த சந்தோஷம், ஆனந்தம். குட்டி முயல்குட்டியா இருந்தவ.. அதே கடித்து சாப்பிடும் கன்னத்தோட.. கொஞ்சம் பெரிய முயல்குட்டியா.. அப்ப என்னைய நீ வேற விழிவிரித்து பார்த்துடே போனியா.. அந்த குதுகலம் தான் அந்த பார்வை. ” புன்னகையுடன் முடித்தான்.

   கேட்டவளோ பல வருடங்கள்.. முன்னும் பின்னும் சென்று வந்தாள்.

    ம்.. இப்படிதான் தனு உங்களை பற்றி தெரியாமலையே நாம்ம இந்த இடத்தில் உட்கார்ந்துயிருந்த ஞாபகம், நீங்க சொன்னது, எனக்கு ஞாபகம் இருந்தது எல்லாம் சேர்ந்து.. ”

   அரசி சொல்ல வருகிறாள் என்று கணித்தவன்.. ” போதும் முயல்குட்டி இதை பற்றி பேச வேண்டாமே. ”

   அவனின் வருத்தம் தேய்ந்த முகத்தை பார்த்த பின்தான் தன் தவறை உணர்ந்தாள். ” சாரி தனு. ” அவனின் மடியில் தலைசாய்ந்து கொண்டாள்.

    அவளின் செயலில்.. இப்போது அவன் தவறை உணர்ந்தான். அவள் இங்கு வரும்போதெல்லாம்.. என்னுடன் பேசுவது போல தனியாக அமர்ந்து மனதில் இருக்கும் எல்லா உணர்வுகளையும் பகிர்ந்துயிருப்பாள் போல அந்த ஞாபகத்தில் அவளா கூறவர..

    நான் அவள் மீண்டும் கடந்த சிலநாட்கள் முன் வந்த வயிற்றுவலியின் அந்நாளை பற்றிய நினைவு.. உனக்கு வரக்கூடாது என்ற வருத்தத்தை காண்பித்து அவளை தன்னிடம் போய் மன்னிப்பு கேட்கும்படி செய்துவிட்டேன்.

    அதுவும் சரிதான். இப்போது அவளுடன் நான் கூடவே இருக்கும்போது.. அவள் எதற்காக?. நான் இல்லாத அந்நாட்களை நினைத்து வருந்தவேண்டும். அவளின் தலையை தடவிவிட்டான்.  சில நிமிடத்திலே அவள் எழுந்து அமர்ந்துவிட்டாள்

    நான் இனி அந்த நாளை பற்றி வருத்தப்படமாட்டேன் தனு. “

    ரொம்ப நன்றி கடவுளே என்ற மனநிலையில் புன்னகையுடன் தலையசைக்க.. அடுத்த சில நிமிடங்களில் புகைபடம் எடுத்துவிட்டு.. இன்றும் இருவரும் ஒருசேர  கோயில்மணி அடிக்க வேண்டும் என நினைத்துயிருந்தவன்.. பின் காலையில் கொடுத்த முத்தத்தை எண்ணி!.. ஒருநாளைக்கு ஒன்னுபோதும் டா வேந்தா..

    அவளை தூக்கி வீண் விஷபரிட்சை செய்ய விரும்பாமல்.. அவன் மட்டுமே இன்று மணியடித்தான். ஆனால் என்ன.. தன்னவளை தூக்கி ஒருமணி அடிப்பதற்கு பதிலாக கடந்த மாதத்திற்கும் சேர்த்து வைத்து.. மொத்தமாக அவனை கோயில் மணியை அடிக்க வைத்தாள் அவனின் அரசி. புன்னைகயுடன் அதனையும் அவள் கண்களை பார்த்தவாறு செய்து முடித்தான். பின் பிரசாதம், பூ வாங்கிக் கொண்டு தங்களின் உணவகத்திற்கு கிளம்பினர்.

    ஆனால் இவர்களின் நடவடிக்கைகளை மூவர் கோயில் உள்நுழைந்தது முதல் காரில் ஏறிச் சென்றது வரை பார்த்து.. குழப்பம், சந்தேகம், பொறாமை உணர்வுடன் பார்த்து இருந்தவர்களுக்கு.. வேறு ஒன்றும் தெரியவரும் போது என்ன நிலையில் இருப்பார்கள் தெரியவில்லை.

 

  வேந்தனும் எழிலரசியும் தங்களின் ஹோட்டலின் முன் இறங்க அவர்களுக்காக இன்பா, திலகன், சத்யா காத்திருந்தனர். எழிலரசி சத்யாவை பார்த்ததும் பலநாள் பிரிந்தவள் போல கட்டிக்கொண்டாள்.

    அவளை கலாய்க்கும் விதமாக.. ” என்னடி ஒருமார்க்கமா கட்டிபிடிக்கிற.. நான் என்று நல்லா தெரிந்துதானே பிடிக்கிற.. இல்ல அண்.. ”

    அவளின் கையை கிள்ளி.. ” கொழுப்பாடி.. நான் எதுக்கு உன்னைய போய் தனு நினைக்கனும். எனக்கு தோணிணா தனுவையே கட்டிபிடிப்பேன். எனக்கு என்ன பயமா?.. ஆனா உனக்கு எப்படி தெரியும் நார்மலவிற்கும்.. மார்க்கமாவிற்கும் உள்ள வேறுபாடு. ம்.. எப்படி தெரியும்?.. ” எழிலரசி கேட்டதும் சத்யா திருதிரு முழிக்க..

    புன்னகையுடன்ரொம்ப கனவு காணாதடி.. என் செல்ல அண்ணி அவர்களோ. தனுவ சீக்கரமா.. திலகன் அண்ணா வீட்டில் பேசி.. பின் நம்ம வீட்டில் சம்மதம் வாங்கி விடலாம். ” சத்யாவிற்கு தான் ஏன்டா.. இவளிடம் கேட்டோம் என்று ஆகிவிட்டது. சற்று திரும்பி பார்த்தவள் அதிர்ந்து நின்றாள்.

   வாங்கலாம்.. வாங்கலாம்.. ஒருத்தவங்க என்னைய கண்ணால எரிக்காத குறையா பார்க்கிறாங்க. நீ கொஞ்சம் கைய எடுமா தாயே. ” அவளின் கைகளை எடுத்துவிட்டவாறு எழிலரசியின் தலை திருப்பி கண்பிக்க.

   அங்கு நின்றுயிருந்த அவளின் வேந்தன் பேன்ட் பாக்கெட்டில் கையை வைத்தபடி தோள்பிடித்துக் கொண்டு பேசியபடி இருந்தவளை..வரவர தைரியம் கூடிப்போச்சு உனக்கு. என் முன்னாடி நேற்று போய் உட்கார்ந்த.. இப்ப கட்டி கட்டிபிடித்து பேசுற. தனியா மாட்டுவில்ல அப்பயிருக்குடி. ‘ என்றபடி மூவரும் பக்கத்தில்வர.. அவனவளோ ‘ மாட்டும்போது பார்க்கலாம். ‘  என்று புன்னகையுடன் பார்த்தாள்.

   சரிசரி கடைக்கு உள்ளே போகும் ஐடியா இருக்காஇல்ல உங்க கண்ணால சண்ட போடுவதை கொஞ்சம் ஓரமா நின்னு போட்டு வரீங்களா?. நாங்க அதோ தெரியுதே அந்த டீ கடைக்கு போய்.. காபி, டீ குடித்துவிட்டு வருகிறோம். ” சாதாரணமாக கூற.. இப்போது இருவரும் திலகனை முறைத்தனர்.

   டேய் உங்க கடைக்கு வந்தும் காபி குடிப்போம் டா. ”

   அண்ணா ரொம்ப பேசுறிங்க. இப்பதான் இவகிட்ட சொன்னேன் சீக்கரம்மா உங்க வீட்டில் பேசி..  பின் இந்த மேடம் வீட்டில் பேசி முடித்து சம்மதம் வாங்கிவிடலாம் என்று. ஆனா அதுக்கு இப்ப உடனே அவசியம் இல்ல போலவே. தனு இன்னும் 6மாதம் கழித்து பேசிக்கலாம். “  தன்னவனின் கேட்க..

   ” ம்.. என் அரசி கட்டளையிட்டா நான் மறுப்பேனா. ” அவனை நக்கல் பார்வை பார்க்க..

    டேய் டேய் ஏன்டா?.. இனி நான் எதுக்கும் வாய திறக்கலடா. என் வாழ்க்கையில் விளக்கேத்த வந்த தெய்வங்கள் நீங்க. அதிலும் இந்த பெண் தெய்வம்தான் முதலில்.. வாங்க வாங்க வந்து உங்க பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்க. ” புன்னகையுடன் ஐவரும் ஆபிஸ் அறைக்கு சென்றார்கள்.

    அங்கு வேந்தனின் அப்பா, ராகவன் மாமா, பெரியப்பா, ஈஸ்வர் அண்ணா ஆகியோர் புன்னகையுடன் வரவேற்க.. எழிலரசி வேந்தனின் அப்பா அருகில் சத்யாவுடன் நின்றுக் கொண்டாள்.

   என்னடா எழிலரசி உன் பக்கத்தில் நிற்காமா உங்க அப்பா பக்கத்தில் நின்றுக் கொண்டாங்க. கூடவே சத்யாவை கூட்டிட்டு போயிட்டாங்க. நீயும் அதிசயமா சிரித்துக்கொண்டு நிற்கிற!.. ”

   எங்களுக்கு நிச்சியம்தானே ஆகியிருக்கு. அதனால மாமா, பெரியப்பா இருப்பதால் அவங்களுக்கு மரியாதை கொடுத்து அப்பா பக்கத்தில் இருக்கா. அவளே அப்படி நிக்கும்போது சத்யாவ இங்க விடுவாளா?.. ” சரி என்பது போல தலையசைத்து அறையை பார்வையிட்டான்.

   முன்பு இருந்த டேபுள் சேர் இருக்கும் இடமும் பொருட்களும் மாற்றி அமைக்கப் பட்டு.. சற்றுதள்ளி வலதுபுறத்தில் புதினான அளவான கேஷ் டேபிள் மற்றும் சேர் இருக்க..  பக்கத்தில் பிரின்டரும் டேபிளும் இருந்தது. பின் பெரியவர்கள், நண்பர்கள் என அனைவரும் வேந்தன், எழிலரசியை வாழ்த்தியும், ஆசி வழங்கியும் சென்றனர்

    அவர்கள் சென்றதும் இருவர் மட்டுமே அந்த அறையில் இருக்க. சிறுவயது முதல் அவனது பெரும்பான்மையான நேரங்களை இந்த அறையில் தான் கழித்துயிருக்கிறான். அதில் பாதி தன்னவளுக்காக இங்கே இருந்துயிருக்கிறான். இப்போது அவளே இங்கு தன்னுடன் இருக்கிறாள் என்று..

    புன்னகையுடன் வேந்தன் தன்னவளின் கைபிடித்து அவள் உணரும் முன் மென்மையாக இடைபிடித்து அவளுடன் அறைமுழுவதையும் சுற்றி முயல்குட்டி!. முயல்குட்டி!. என்ற பெயரை பாடலாக வைத்து.. அதற்கு நடனமாடி தன் எல்லையில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி தன்அரசியை மூன்றுநிமிடம்.. அவன் ஆழுகைக்குள் வைத்து அவளை தித்குமுக்காட வைத்தான். அவளும் தன்னவனிடமிருந்து வெளியேறும் எண்ணம் இல்லாமல் அவன் கரங்களுக்குள் தன்னை ஒப்படைத்தாள்

    ஆனால் இவர்கள் இருவருவரையும்.. அவர்களுக்கு காபி கொடுக்க வந்தவர் இவனின் இப்படியான சந்தோஷ புன்னகையை இதுவரை கண்டிறாததால் அப்படியே கதவின் கண்ணாடி வழி பார்த்து நிற்க.. இவர் ஏன் இவ்வாறு நிற்கிறார்?. என மற்றவர்களும் பார்க்க.. தங்கள் முதலாளியின் மகன் வேந்தனா இவர் என்று?. அனைவருக்குமே ஆச்சரியம்!. அவனையும் அவன் புன்னகைக்கு காரணமானவளையும் பார்த்து மகிழ்ந்தனர். பின் வேலையை பார்க்க சென்றுவிட்டனர்

    அரசிக்காக தான் செய்யவேண்டும் என்று நினைத்தை.. அப்பா சொல்லாமலே இதை செய்தற்காக அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு.. அவளுக்கு என்று இடம் ஒதுக்கி அங்கு அமைக்கப்பட்டு இருந்த சேரில் அமர வைத்தான்.

   அவள் முன் இருந்த டேபிள்மீது சாய்ந்து அவள் வலதுகையின் பிடித்து மோதிரவிரலை தடவியவாறே.. ” முயல்குட்டி.. நான் காலேஜ் படிச்சப்ப இந்த இடத்தில்தான் ரைட்டிங் டேபிள் இருந்தது. இங்க வந்தா அதில தான் உட்காருவேன். சரி உன் காலை காண்பி. ” எதுக்கு என்பது போல அவள் பார்த்தாளும் காண்பித்தாள்.

    வேந்தன் அருகில் இருந்த சேரை இழுத்து அவள் முன் அமர்ந்தவன். அவளின் கால்களை மடியில் வைத்து பிடித்து.. அவள் சுடி பேன்ட்டினுள் இருந்த வெள்ளி கொலுசை கழட்டி..  சிறுசலங்கை ஒலிகொண்ட ஐம்பொன் கொலுசை மாட்டிவிட்டான்.

    ” அரசி  தாவணி, சேலை கட்டும்போது.. இந்த வெள்ளி கொலுசை போட்டுக்க. சுடி, லெக்கின் போடும்போது இதை போட்டுக்க. காலையிலேயே  கொடுக்க மறந்துடேன். நல்லாயிருக்கா. ”

    புன்னகையுடன்.. ” ம் சூப்பரா இருக்கு. நானே சுடிக்கு போடுவது போல மெல்லிசா வாங்கிக் கொடுக்க சொல்லனும் நினைத்தேன். என் தனு செல்லம்..  முன்னாடியே வாங்கி வைத்துயிருக்கிங்க. சரி சொல்லுங்க இதை எப்ப வாங்கியது?. ” சற்று கடுப்புடன் கேட்டாள்.

   அவளை ரசித்துவிட்டு புன்னகையுடன்.. ” ம்.. வினோக்கு குழந்தை பிறந்தவுடன் நகை வாங்கினப்ப.. என் முயல்குட்டிக்கும் வாங்கினேன். நான் பெங்களூரில், சென்னையில் இருந்தப்ப.. யாருக்காவது வாங்க போனா.. உனக்கும் ஏதாவது வாங்கிவிடுவேன். ”

    புன்னகையுடன்.. ” ம்.. விவரம்தான். இங்க வாங்கினா நீங்க மாட்டிப்பீங்கனு.. அங்க இருக்கப்ப வாங்கியிருக்கிங்க. ”

   இங்கயும் வாங்கத்தோனும் தான் அரசி. ஆனா இங்க வாங்கி என்ன பண்ண?. எல்லோருக்கும் வாங்கியதை உடனே கொடுத்துவிடுவேன் .. ஆனா உன்னிடம் கொடுக்க முடியாதேனு கஷ்டமா இருக்கும். ஆனா அங்க வாங்கினா.. நான் வீட்டில் வந்து கொடுக்க.. எப்படியும் ஒருவாரம் ஆகிடும்.  அதுக்குள்ள நான் கொஞ்சம் சமாதானம் ஆகிவிடுவேன்.. அதனால்தான். ” வருத்தத்துடன் கூற..

    மேலும் கடுப்பானாள்.. ” ம்.. ரொம்ப அறிவுதான் நீங்க. என்னம்மா யோசித்து.. ஒரு முடிவோட இருந்து.. நீங்க மட்டும் ஸ்கூல், காலேஜ், வேலைபோகும் போதுனு.. இத்தன வருஷம் லவ் பண்ணி.. உங்க முயல்குட்டிய கல்யாணம் பண்ணப்போறிங்க. ஆனா நான் மட்டும் கல்யாணம் முடிவாகி லவ் பண்ண வேண்டியிருக்கு. ”

    உங்க இந்த யோசனையை.. என்கிட்ட எப்படிடா!.. பதமா பக்குவமா பேசி.. பிரச்சனை எதுவும் இல்லாம.. இவள நம்ம வழிக்கு கொண்டு வரலாம் யோசித்து இருக்கலாம். நானும் காலேஜ் படிக்கும் போதே..  என் தனுவ சூப்பரா லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்கலாம். ம்.. எழிலரசி நீ குடுத்து வச்சது அவ்வளவுதான். ” அவள் திட்டியபடி எழுந்து அவன் முகத்திற்கு நேராக பேச.. அவன் பின்னோக்கி செல்ல.. பின் ஆதங்கதுடன் கூறி அமர்ந்தாள்.

   ம்.. கொழுப்புடி உனக்கு. நான் வந்துயிருக்னும். அப்பவே இவ்வளவு வாய்யடிக்கும் வாய ஒருவழி பண்ணியிருப்பேன். ” அவள் காதில் மெல்லிய குரலில்.. ” முயல்குட்டி இப்பவே சாதாரணமான இதழ்முத்தம் கொடுத்தாலே சீக்கிரம் முச்சுவாங்குற.. 3 வருடத்திற்கு முன் கொடுத்தா தாங்கி இருப்ப. அதான் பாவம் முயல்குட்டிய கஷ்டப்படுத்த கூடாது என்பதால்தான் வரல. புரிந்ததா. ”

   இருவருக்குமே 3வருடம் முன்பா!.. பல அருமையான கற்பனைகள் வந்தது. அவள் முகத்தை பார்க்க.. ஒப்பனையே இல்லாமல் அவளின் கன்னங்கள் சிவப்பாகி அவனிற்கு முத்தமிட தூண்டியது. ஆனால் தன்னவனை காணமுடியாமல் தன்னவளிற்கு வெக்கம் வந்துவிட.. 2நிமிடங்களுக்கு அவள் நிமிரவில்லை.

    ம்.. இனிமே இங்கு இருந்தா!.. நான்தான் முச்சுவிட கஷ்டப்பட வேண்டியிருக்கும் போல. ‘

    புன்னகையுடன்.. ” போதும்டி.. எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்துயிருக்க போற?.. நாம்ம சீக்கிரமா வந்த வேலைய முடித்தா!. எங்காவது வெளிய போய் என் முயல்குட்டி ஆசைபட்ட மாதிரி லவ் பண்ண ஆரம்பிக்கலாம். ” உடனே தன்னவளின் ஆசையை நிறைவேற்ற ஆரம்பித்துவிட்டான்.

   அவளிடம் இருந்த வெக்கம் வெளியேறி.. ” என்ன!.. நிஜமா லவ் பண்ண வெளிய போறமா?. எங்க தனுமாமா?. ” தன்னவனுடன் வெளியே வா!.. ஆர்வம் குடிபுகுந்தது.

   அடிப்பாவி!.. காலையில் பார்த்ததில் இருந்தது இவ்வளவு நேரமா மாமானு சொல்லாமா இருந்தவ.. வெளிய போறோம் சொன்னவுடனே மாமானு கூப்பிடுற. அதிலும் லவ் பண்ண என்றவுடன் இந்த முயல்குட்டி ஆர்வத்தில் கண்களை விரித்து பார்க்கிறிங்க.

   இப்ப இருக்க உன்னைய வைத்துக்கொண்டே.. இந்த மூன்று மாதம் கழிப்பதை நினைத்தாலே பெரும்பாட இருக்கு. 3வருடம் முன்.. நல்லவேளை நான் அப்பவே வரல பா. வந்துயிருந்தா நான் ரொம்பே பாவமாகியிருப்பேன். சரி சரிவேலைய பார்ப்போமா?.. ” சிரிப்பும், முறைப்புமாக சரி என்று வேகமாக தலையசைத்தாள்.

     வேந்தன் அவளின் தலையை செல்லமாக முட்டி கொஞ்சிய பிறகு.. ரவைஅல்வா செய்துவிடலாம் என முத்தண்ணா கூறியதால் இருவரும் ஆபிஸ் அறையில் இருந்து நேராக ஸ்விட்  செய்யும் இடத்திற்கு போகும் வழியில் பார்ப்பர்களை பற்றிய சில முக்கிய விவரங்களை தன்னவளிடம் கூறிக்கொண்டே வந்தான். அப்போது சிலர் அவர்களை பார்த்து சிரிப்பது போல இருக்க..

   வேந்தனின் கையை தட்ட.. அவன் என்னவென்று பார்க்க.. ” தனு நம்மள பார்த்து ஏன் சிரிக்கிறாங்க?.. ” அவனும் கவனித்தான் தான்.. அவனுக்கும் புரியவில்லை.

   ” தெரியல அரசி. ஒருவேல இப்படி இருக்குமோ?.. ” என்ன?.. அவள் பார்க்க..

   ” அப்பா நமக்கு ஏதாவது குடிக்க கொடுக்க கூறியிருப்பாரு. யாராவது வந்து அப்ப நாம்ம உள்ள டான்ஸ் ஆடினத பார்த்துயிருப்பாங்க.. அவங்க இவங்களிடம் கூறியிருப்பாங்க. அதனால பார்த்தவுடன் சிரிப்பாங்களா இருக்கும் என நினைக்கிறேன். ஆனா முயல்குட்டி.. உன்னைய பார்த்திலிருந்து என்னைய பார்த்து சிரிக்காத.. ஒருஆள் பாக்கியில்ல. ” வருத்தம் போல சொல்ல..

   அவனை அப்படியே நிற்கவைத்து.. ” என்ன என்ன சொன்னீங்க?. சிரிக்காத ஆள் பாக்கியில்லையா. பின்ன அவங்க என்ன பண்ணுவாங்க?. இத்தனை வருஷமா பாதிநேரம்.. உம்மு முகத்தை வைத்து.. அமைதியா சுத்தியிருப்பீங்க. இப்ப 1000வாட் பல்பு  முகத்தில் வைத்து சுத்துறிங்க. அவங்களுக்கே.. எப்படியிருந்த வேந்தன்?. இப்ப இப்படியிருக்கானு!. சந்தேகம், சந்தோஷம் கலந்த கலவையா சிரிப்பாங்க. இப்ப உங்களோட சேர்த்து என்னய பார்த்து சிரிக்கிறாங்க. ” அவளும் கோபம்போல மெல்லிய குரலில் கூற..

   புன்னகையுடன்.. ” ம்.. நாம்ம போலாம் வா. லைட்டா சிரித்தவர்கள்.. இப்படி கண்ண உருட்டி என்ன மிரட்டினா?. இந்த கோபகார குட்டிபொண்ண நான் கல்யாணம் செய்ய போறேன். பாவம் நான் வசமா மாட்டிக்கிட்டேனு இன்னும் சிரிப்பாங்க முயல்குட்டி. ” அவள் ஏதோ கூறவர புன்னகையுடன் அவள் கைபிடித்து அவ்விடத்தில் இருந்து கூட்டிச் சென்றுவிட்டான்.

    அவன் நினைத்தில் உண்மைதான் இந்த பெண்ணை வேந்தா அண்ணாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது. அண்ணியின் அன்பான இதயத்தில் வசமா மாட்டிக்கொண்டார் என மகிழ்ச்சியில் சிரித்தார்கள். ‘

    எழிலரசி ஹோட்டலில் எல்லா பகுதிகளை பார்வையிட்டவரோ வந்தவளை பார்த்தவன்.. விளக்கிகூற ஆரம்பித்தான். உணவு செய்யும் இடங்கள் வெஜ், நான்வெஜ், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டும்.. அதிலும் பல பிரிவுகளாக பிரிக்கபட்டு அனைத்தும் உணவுகளும் உரிய நேரத்திற்கு முன்னே கொண்டு செல்வதற்கு ஏற்றவாறு அனைத்தும் நேர்த்தியாக இருந்தது. ஹோட்டல் முக்கிய சாலையில் இருப்பதால்.. வாகனங்களில் வந்தவர்கள் அதிகநேரம் அங்கு இருக்க முடியாது அவர்கள் விரைவாக செல்ல நினைப்பார்கள் அதனாலே உணவு தயாரிப்பவர்கள் மட்டுமே 30க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். மற்ற பணிகள் செய்ய என அதில் பலர் இருந்தனர். ‘

    இதே போல்தான் மாடியில் உள்ள  a/c பிரிவிலும் இருப்பார்கள். அது தவிர முக்கிய நிகிழ்ச்சிகளுக்கு பல ஆடர்கள் வரும். அதற்கு என்று சிலர் இருப்பார்கள். இவர்களையெல்லாம் வழிநடத்த என மூன்று பிரிவிற்கு என்று ஒருவரும்இப்போது புதிதாக இனிப்பகத்திற்கு என்று.. ஆரம்ப கட்டமாக ஸ்விட் செய்து பயிற்சி எடுக்க என்று 20பேர்.. 15நாட்களாக உள்ளனர். அதற்கு இப்போதைக்கு தலைமையாக முத்தண்ணா இருக்கிறார். ‘ என ஒவ்வொரு இடத்திலும் ஒருசிலநிமிடம் நின்று விரிவாக கூறியபடி அழைத்துச் சென்றான்.

   தன்னவனை இன்று புதிதாக பார்த்தாள். தன்னிடம் கொஞ்சியும், பிடிவாதம் பிடிக்கும் தன் தனு இல்லை இவன். அவளே அடுத்த இரண்டுதடவை வந்தால்போதும் அனைவரையும் பலவருடங்கள் தெரிந்தவர்கள் போல.. அவளுக்கே எண்ணம் வந்துவிடும் அந்த அளவிற்கு!.. மிகவும் பொறுமையாக, ஒருதடவையே புரியும் படியாக விரிவாக, மனதில் பதியும்படியாக அழுத்தமாக அங்கு இருப்பவர்களின் அனைவரின் பணியை பற்றி கூறினான். ‘

    அவர்கள் ஸ்விட் செய்யும் இடம் வந்த போது அப்போது ஆரம்பிக்கும் நிலையில் இருக்க.. இருவரையும் பார்த்தவர் நலம் விசாரித்து.. ” வேந்தன் தம்பி ஆரம்பித்து வைங்க. ” அவனிடம் அடுப்பின் லைட்ரை கொடுக்க.. அவன் தன்னவளை அருகில் நிறுத்தி புன்னகையுடன் இருவரும்மாக ஆரம்பித்து வைத்தனர்.

    

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!