நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 26. 3
நாம் 26(3)
பின் அங்கு இருப்பவர்களிடம் தன்னவளை அறிமுகம் செய்து.. அவள் இங்கு இனி என்ன செய்யப்போகிறாள்?. அரசி கூறியது.. அவர்கள் என்ன செய்ய வேண்டும்?.. கூறிவிட்டு சில நிமிடங்கள் அங்கு நடப்பவற்றை பார்த்திருந்தனர். பின் அங்குயிருந்து இனிப்பகத்தின் கட்டிடத்திற்கு இடத்திற்கு வந்தனர். அங்கு அஸ்திவாரம் போட ஆரம்ப கட்டவேலைகளை செய்துக்கொண்டுயிருக்க.. அங்கு சில நிமிடங்கள் இருந்துவிட்டு மாடிபகுதியிலும் பார்வையிட்டு.. மாதுளைஜூஸ் குடித்துவிட்டு அவர்களின் அறைக்கு வந்தனர்.
Advertisement
வேந்தன் லாப்டாப் கொண்டு வந்துயிருக்க ஆபிஸ் வேலை செய்ய ஆரம்பித்தான். அரைமணிநேரம் சென்றிருக்க.. அரசி அவன் கூறிய ஒருவார பிளான் போட்டும், பின் அவளிடம் கொடுத்தயிருந்த இனிப்பகம், உணவுபொருட்கள் பிஸ்னஸ் பற்றிய அனைத்து விவரங்களை பார்வையிட்டு கொண்டுயிருந்தவளின் கண்கள் எப்போது தன்னவனின் ரசிக்க ஆரம்பித்தது என்றே தெரியவில்லை.
அவனின் முன்நெற்றியில் அடங்காத சில முடிகள் பறக்க.. அடர்த்தியான புருவங்கள், அவளை எப்போதும் காதலுடனும், பல சமயங்களில் கள்ளத்தனத்துடன் பார்க்கும் கருவிழிகளும், சிலசமயங்களில் செல்லகோபம் கொள்ளும் கூர்நாசி. அடுத்த ஒரு நிமிடம்.. இன்று அவளை புதுஉணர்வில் ஆட்டிவித்த அவளிற்கும் மட்டும் சொந்தமாகும் கூந்தல் குழந்தையான மீசையையும், ஜூஸ் குடித்து வந்ததால் செந்தாமரை இதழ்கள் இன்னும் பளபளக்க.. இரண்டையும் கண்கள் இமைக்க மறந்து பார்த்தாள்.
காலையில் அவளின் முதுகில் முத்தம் கொடுத்த தன்னவனின் இதழ்கள்.. கூடவே தன் மீசைரோமத்தால் மச்சத்துடன் சிறுவிளையாட்டை நடத்திய பிறகு தான் அவளவன் அவளை தன்பக்கம் திருப்பினான். அப்போது அவள் உணர்ந்த ரோமத்தின் வருடலை இப்போது நினைத்து உணர்ந்தவளின் உடலில் சிறுசிலிர்ப்பை உருவாக்கியது.
Advertisement
அவளை எப்போதும் தனக்குள் அடக்கி வைத்தும் கொள்ளும் அவனின் தோள்கள், மார்பு, கைகள், மடி அனைத்தையும் தாங்கி நிற்கும் கால்கள் பார்த்திருந்தவள்.. அவளின் கைகளுக்கு கன்னம், உதட்டை போல இன்று புதிகாக மீசையை இழுக்கத் தோன்றியது. இதழில் சில நொடிகள் நிலைக்க மீண்டும் ஒரு தடவை அவளவனை இஞ்ச், இஞ்சாக ரசித்துயிருந்தளை..
Advertisement
அவளவனோ கண்டுக்கொண்டு அவளிடம் வந்தவன் இமைக்கும் நொடி பொழுதில் அவளின் இடையை பற்றி தூக்கி உள்நுழையும் கதவு, சமையல்அறை சொல்லும் கதவு இடைபட்ட இடத்தின் சுவரில் சாய்த்து நிறுத்திய.. அடுத்த நொடி அவளின் இதழ்களில் தன் இதழிலை ஆழ்ந்து பதித்தான்.நிமிடம் கடந்து எடுத்தவன் அவளின் கண்களுக்கும் ஆழந்த முத்தத்தை கொடுத்து விடுவித்தவன்.. அவனவளை கன்னத்தை மீசைரோம்மத்தால் வருடியவன்..
காதினுள் மெல்லிய குரலில்.. ” என்னால என்னைய கட்டுபடுத்துவே ரொம்ப கஷ்டமா இருக்குடி. இப்படியெல்லாம் இனி பார்த்து சோதிக்காத முயல்குட்டி. ” கெஞ்சி கேட்க..
அதனை கேட்ட அரசி சரி என தலையாட்ட.. அவளின் முகத்தை பார்க்க ஆசைபட்டு அவளை பார்த்தவன்.. அங்கு அடங்கப்பட்ட புன்னகையுடன் இருந்தாள்.
Advertisement
அவளை முறைத்தவன்.. பின் என்னடி?. என்பது போல பார்க்க..
” ம்.. இந்த இடத்தில் நீங்க இப்ப கொடுத்த முத்தத்தை பார்த்தா.. நான் பார்த்தபின் கொடுத்த மாதிரி தெரியலையே.. நான் எப்படா உங்களை பார்ப்பேனு காத்துயிருந்தது.. இங்க கொடுத்தது போல இருந்துச்சு. இந்த மாதிரி சந்தர்ப்பம் கிடைக்கும் என்று இந்த இடத்தை எத்தனை வருடத்திற்கு முன் பார்த்து வைத்துயிருந்தீங்க. ” புன்னகையுடன் கேட்க..
இப்போது அவன் முகத்தில் அசட்டு புன்னகையை வெளிப்படுத்தி.. ” கண்டுபிடிச்சுட்டியா முயல்குட்டி. ஒரே தடவைதான் உனக்கு முத்தம் கொடுப்பது போல நினைத்துயிருக்கேன். எப்பனு தெரியல.. தனியா இருந்தப்ப தலைவலினு கண்முடி உட்கார்ந்து இருந்தேன். அதுவும் நானா நினைக்கல.. உனக்கு அப்ப கொடுக்கனும் என் மனசு சொல்லுச்சு.. கொடுத்த பிறகு நிமிர்ந்தா ஏதோ கனவுபோல இருந்தது. அதன்பிறகு நான் இங்க தனியா உட்காருவதே கிடையாது. ஆனா இன்னைக்கு நான் மாட்டிக்கிட்டேன். “
” நீ பார்க்க ஆரம்பித்தவே பார்த்தேன். சரி முயல்குட்டி ரசிக்கட்டும் விட்டேன். ஆனா நீ மீசை, உதட்டையும் இரண்டு தடவை ரொம்ப நேரம் பார்த்தியா. ம்ஹூம்.. முடியல.. அதான் முயல்குட்டியிடம் ஓடி வந்துவிட்டேன். ஆனா அப்ப முத்தம் மட்டும் தான் கொடுத்தேன். இந்த இடம், கன்னத்தில் செய்ததெல்லாம் நீ இப்ப பார்த்தால் கொடுக்க தோன்றியது தான். ”
தான் கூறியதற்கு அரசியிடம் இருந்து பதிலோ, தலைசைப்போ இல்லாமல் இருக்க அவளின் கண்களை பார்க்க அது யோசனையில் இருந்தது.
பின் ” அரசி அரசிம்மா.. ” அவள் கன்னத்தை தட்ட..
ஏதோ கனவுலகத்தில் இருந்து நிகழ்வுலகத்திற்கு வந்தவள் போல் அதிர்ந்து!. அவனை பார்த்து.. ” ம் சொல்லுங்க தனு. ”
அவளை ஆழ்ந்து பார்க்க.. அது அவளை ‘ நீ தான் சொல்லனும் என்றுயிருக்க. ‘
” அது அதுவந்து நீ சொன்னீங்கள கொடுக்க வேண்டும் தோனுச்சுனு. அதான் எனக்கு எப்பயாவது நடந்து.. அதை நான் உணர்ந்துயிருக்கனா?. என்று யோசித்து பார்த்தேன். ” அவனை பாவமாக பார்க்க..
இவள.. ” நான் சொல்லுற ஒவ்வொன்றிக்கும் இந்த மாதிரி பழச நினைக்காத அரசி. நான் வேற ஏதாவது யோசித்துக்கொண்டே இருந்துயிருப்பேன். அப்ப தலைவலி வந்து என் மனசு உன்னைய மருந்தா நினைத்து உனக்கு முத்தம் கொடுத்த நான் நார்மல் ஆகிவிடுவேனு கொடுக்க சொல்லியிருக்கும் கொடுத்துயிருப்பேன். இல்ல உனக்கு மருந்தா நான் தேவையினு நான் உணர்ந்துயிருப்பேன்!.. அப்ப கொடுத்து இருக்கலாம். ஆனா இதெல்லாம் ஒரு யூகம்தான். ”
” நீ இப்படி நான் ஏதாவது சொன்னா.. நாம்ம அப்ப என்ன பண்ணினோம்.. நமக்கு நடந்ததா?. நமக்கு என்ன வயசு?.. இப்படி நீ தேவையில்லாம யோசிக்காத. ஏன் என்கூட இருந்த அந்த தருணத்தைகூட இனி யோசிக்க வேண்டியது இல்ல. இப்படி நினைத்தா உனக்கு தேவையில்லாத டென்சன் தான் வரும். இப்படி தான்.. நான் யோசித்து பார்ப்பேனா!.. பின்ன நான் என்னோட முயல்குட்டியுடனான நினைவுகளை உனக்கு சொல்லவே மாட்டேன். ” சாதாதணமாக ஆரம்பித்து.. கோபமாக கூறி தன் இடத்தில் அமர.. அவனின் கோபத்தில் பயமும், தன் மேல் குழப்பமும் இருந்தது.
தனு கூறியது உண்மைதானே. தனு சொல்வது போல.. அவன் எது கூறினாலும் நினைக்க தோன்றியது. எல்லாவற்றையும் நினைத்ததால் தானே.. முதல்நாள் அழுதுஅழுது வயிற்றுவலி அதிகமாகியது. அன்றிலிருந்து சற்று குறைத்து இருந்தாலும்.. தானாகவே அவன் பழைய நாட்களை பற்றி கூறும் போது.. அப்போது தான் என்ன செய்துயிருப்பேன்?. ஏன் அவன் என்னை பார்க்கவரவில்லை?. இல்லை நான் ஏன் பார்க்கும் சூழ்நிலை அமையவில்லை.?. தேவையில்லாமல் யோசிக்கதானே செய்கிறேன். இப்போதுகூட யோசித்ததை தன்னவன் சரியாக கூறுகிறான். நாம் தேவையில்லாமல் யோசிக்க வேண்டாம்.
அவனுக்கோ நேற்று மாலை, இன்று காலையில் வீட்டில் நடந்தவைகளில் சிறு வருத்தத்தை.. கஷ்டப்பட்டு மறைத்து வைத்துயிருக்கிறான். தன் விருப்பங்களை வெளிப்படையாக செய்வேன் என கூறியும் செய்ய முடியவில்லை. செய்தால் யாருக்காவது வருத்தம் ஏற்படுகிறது. முன் வசுந்தரா.. நேற்றிலிருந்து அம்மாவிற்கு. நான் சிறிதளவே உணவு போதும்.. அதற்கான காரணத்தை கூறிய பின்பும் நான் சாப்பிடவில்லை என அவருக்கு வருத்தம் உண்டாகி..
தாங்கள் இன்று ஸ்விட் டிரையல் செய்ய ஆரம்பிக்கிறேன் என்பதை கேட்டுக் கொண்டுயிருந்தவர்.. அதனை பற்றி ஒன்றும் கூறாமல் சாப்பாடு எடுத்து வைப்பதில் குறியாக இருந்தார்கள். இதற்கு வசுவும் ஒரு காரணம்.
இவர்கள் அரசிக்கு இப்போது செய்வதை பார்த்து வருத்தம். அரசிக்கு பழசைகூறி ஏதாவது செய்தால், கூறினாள்.. அப்போது தன்னுடன் அவள் இல்லை என நினைத்து.. இப்போது வருத்தம்.
ஆனால் தான் பழசை நினைத்து எதுவும் செய்ய வேண்டாம்.. வாங்கியதை கொடுக்க வேண்டாம் என நினைக்கவும் முடியவில்லை. பின்தான் இதில் தன்னவளிற்கு எந்த பயனும் இல்லாத.. வருத்தம் தரக்கூடிய தேவையில்லாமல் நினைப்பதை நினைக்க வேண்டாம் என கூறி முதலில் அவளை சரிசெய்ய வேண்டும் என நினைத்து.. அவளிடம் சற்று கடுமையாக கூறிவிட்டான்.
இவ்வளவு நேரம் குழந்தைபோல திருதிரு முழித்து யோசிச்துக் கொண்டுயிருந்தவள்.. தயங்கிதயங்கி தன்னவன் முன் வந்தவளிடம்.. அவன் யோசனையில் வேகமாக டைப் செய்துக் கொண்டுயிருந்தவன்.. தன்னவள் எங்கு நிற்கிறாள் என்று கூட பார்க்காமல்..
” அரசி.. இந்நேரம் ஸ்விட் ரெடியா இருக்கும். சாமிக்கிட்ட வைத்துவிட்டு தான் டிரையல் வைக்கனும். நீ போய் பார்த்துட்டு ஒருதட்டில் எடுத்துவா. ” எழிலரசி அருகிலே தான் நின்றாள். அவன் பார்க்காமலையே கூறியதால் அவளின் கண்கள் கலங்கிவிட்டது.
தன் அரசி அருகில் நின்றுயிருந்ததை அப்போதுதான் உணர்ந்தான். எந்த பதிலும் கூறாமல் திரும்பியவளை ‘ அய்யோ ‘ என நினைத்து வேகமாக அவள் கைபற்றி நிறுத்தி.. குனிந்துயிருந்தவளின் முகத்தை பார்க்க எண்ணினான். ஆனால் அவள் நிமிரவில்லை. அவனிற்கு ஏற்கனவே அவள் கூறியது வேற ஞாபகம் வந்தது. ஏதாவது தன் மீது வருத்தம், இல்லை மாற்றவேண்டும் என இருந்தால் பொறுமையாக புரிய வையுங்கள் நான் மாற்றிக் கொள்வேன். கடுமையாக கூற வேண்டாம் என கூறினாள். இப்போது கோபமாக பேசியதும் இல்லாமல்.. முகத்தை பார்க்கமலையே கூறியது அவளை கலங்க வைத்தயிருக்கிறது.
விவரம் அறிந்த, புரிந்துக் கொள்ளக்கூடிய தன்னாலே.. ஞாபகங்களில் இருந்து வெளிவந்து.. தெளிவான ஒன்றை செய்ய தடுமாறும் போது.. அவள் இரண்டிற்கும் நடுவில் நிற்கிறாள். இன்னும் சிலநாட்களுக்கு.. தான் கூறியதும்.. கூறுவது.. இவையெல்லாம் அவளின் நாட்களும் தானே சேர்ந்தும் வரும். தான் சற்று பொறுமையாக கையாண்டு இருக்க வேண்டுமோ!. இவள் வேறு நிமிரமாட்டேன் என்கிறாள். சாமியிடம் வைத்து.. பின் தன்னவள் தான் முதலில் சாப்பிடவேண்டும் என நினைத்துயிருந்தான். டிரையல் தானே என்று நேராக சாபிட்ட கொடுத்துவிட்டால்?. நேரம் ஆகிவிட்டது.
தனனவளை பின் பார்க்கலாம் என.. ” சாரி முயல்குட்டி.. ஏதோ ஞாபகத்தில் உன்ன பார்க்காம கூறிட்டேன். நீ இங்கேயே இரு. நான் பார்த்து எடுத்து வருகிறேன். ” இறுக்க அணைத்து அவளின் கன்னத்தில் மென் முத்தம் கொடுத்து.. சேரில் அமர வைத்து திரும்பும் போது அவனின் கையைபிடித்து இழுத்து.. அவளை பார்க்க வைத்தாள். அவள் தலைநிமிர அவள் நோக்கம் புரிந்து.. ” ஐ லவ் யூ முயல்குட்டி!. ” நெற்றியில் முத்தமிட்டு.. சமையல்அறை நோக்கிச் சென்றான்.
வேந்தன் முதல்முறை இனிப்பு செய்ததை வாங்க.. மகிழ்ச்சியாக செல்லாவிடினும்.. மனக்குறையுடன் சொல்லக்கூடாது என எண்ணி அவள் தலைநிமிர்ந்தாள்.
ஸ்விட் பார்க்க சென்றவன் அவன் நினைத்ததுபோல முடிந்துயிருந்தது. பின் ஸ்விட்டை அவன் எடுத்துக்கொண்டு.. ‘ தான் கால் செய்த பிறகு அனைவருக்கும் கொடுக்கலாம்.. ‘ எனக்கூறி வேகநடையுடன் வந்தான்.
எழிலரசி விளக்கு ஏற்றி.. தட்டில் வாழையிலையில் வைத்துயிருந்த ரவைஅல்வா சாமியின் முன்வைத்து படைத்துவிட்டு.. எல்லோருக்கும் பிடிக்க வேண்டும்.. இனி எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும் வேண்டி கண்திறக்க.. வேந்தன் அவன் அரசிக்கு.. அவள் தன் மன்னவனிற்கும் ஊட்டிக் கொண்டனர்.
பின் கால் செய்தவன் முதலில் பெரியப்பா, அப்பா ,அண்ணாவிற்கும் கொடுக்க எடுத்து வரக்கூறியும்.. பின் அவரும் சாப்பிட்டு.. பின் வேலை செய்பவர்களை அருகில் அழைத்து அவர்களுக்கு அனைவருக்கும் கொடுத்ததன் பிறகு வெளியில் மக்களுக்கு பகிரலாம் என தகவல் கூறிமுடித்து..
தானே மூவரும் கொடுத்து அவர்களின் கருத்தை கேட்டறிந்து.. மேலும் சிலவற்றை கேட்டு, கூறிபின் தன்னவளிடம் வந்தவன் இரு கதவுகளையும் திரையுடன் மூடியவன்.. மடிக்கும்படியான மெத்தை ஒன்று இருக்கும் அதைவிரித்து தன்னவளை உட்காரவைத்து..
அவளே எதிர்பார்க்காத செயலான.. அவளின் மடியில் கைகுட்டையை விரித்து இடுப்பை அணைத்தபடி படுத்துக் கொண்டான். இருவரும் ஒன்றும் பேசவில்லை. அவள் தலைகோதிவிட சில நிமிடங்கள் படுத்திருந்தவன்.. பின் எழுந்து அவளை தன் தோள்வளைவில் வைத்துக்கொண்டான்.
நேற்றுமாலையில் இருந்து தற்போது வரை நடந்ததை பற்றியும், அவளையும் சேர்த்து தான் எண்ணியதை அவளிடம் பகிர்ந்துக் கொண்டவன்.. ” நீ பார்த்ததை நான் ரசித்து பின் முத்தம் கொடுத்ததை எவ்வளவு ஆசையா!. உன் முகத்தை பார்த்து எல்லாம் சொல்லிட்டு இருந்தேன். ஆனா நீ யோச்சிட்டு இருக்க முயல்குட்டி. அதான் அப்படி பேசிட்டேன். சாரி சாரி சாரிமுயல்குட்டி. ” அவளின் நெற்றிமுட்டியும், முத்தமிட்டும் கூறினான்.
அவள் ஏதோ கூறவர.. ” சரி அரசி நான் போய் கொஞ்சம் நேரத்தில் சாப்பாடு எடுத்துட்டு வறேன். சாப்பிடும் போது பேசலாம். அண்ணாவும், அப்பாவும் வீட்டுக்கு போயிருக்காங்க. இருவரும் வந்தவுடன் தான் நாம்ம கிளம்பனும். கதவு திரையை ரொம்ப நேரம் மூட முடியாது அதான் முயல்குட்டி. நீ இப்படியே உட்கார்ந்து இரு. ” அவளை பேசவிடாமல் எழுந்து சென்றுவிட்டான்.
அரசிக்கு.. அவர்களை எண்ணியே வருந்திக்கொண்டாள். தான் முத்தம் கொடுத்ததை கேட்க போய்தான் இருவருமே வருத்தம் கொண்டது. இனி இருவருமே கடந்த நாட்களை பற்றி பேசக்கூடாது. அப்படியே அவன் சொன்னாலும் ஒன்றும் இல்லை.. அவன் கூறுவதை மட்டும் கேட்டுக்கொண்டு போய்விட வேண்டும்.
அவன் அந்த நேரத்தில் எவ்வளவு வருத்தப்பட்டு இருப்பான். தன்னிடம் கூறி அந்த நாட்களை.. இனிமையான தருணமாக மாற்றிக் கொள்கிறான். அவன் இனி என்ன செய்தாலும், பொருளையும் கொடுத்தாலும்.. பழையதை மறந்து கொடுக்கும் அன்றைய நாளையை.. இருவருமாக அனுபவித்து!. இருவரின் நினைவு பெட்டகத்தில் சேகரித்துக் வைத்துக்கொள்ள வேண்டும். ‘
வருங்காலத்தில் தங்களுக்காகவே ஆரம்பிக்கப்பட உள்ள வியாபாரம், வசு, அத்தை போல பலபல.. இருவரும் சமாளிக்க வேண்டியவர்கள்.. வேண்டியவைகள் நிறைய இருக்க.. முடிந்த மட்டும் பழைய நாட்களை தேவையில்லாமல் கொண்டு வரக்கூடாது. அப்படி தற்போது நினைத்து.. இன்றையநாளை போல.. வருங்காலத்தில் இருவரும் மனம் வருந்தக்கூடாது.
சரி தன்னவனுடன் இன்றைய நாள் இன்னும் இருக்கிறது. வருந்தியதையும் சேர்த்து மூன்றுமடங்கான சந்தோஷத்தை இருவரும் அனுபவிக்க வேண்டும் தெளிவான முடிவு எடுத்து தன்னவனை எதிர்பார்த்து அவர்களின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டுயிருந்துவள் அப்படியே உறங்கியும் போனாள். ‘
