Kanavellam nee thanae episode-6
கனவெல்லாம் நீ தானே
எபிசொட்-6
விக்ரம் அவளை பார்க்க மருத்துவமனை சென்றான் . அவள் தூங்கி கொண்டிருந்தாள் . அதன் பின் மருத்துவரை பார்த்து எப்போது அவளை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று கேட்டான் , அவரோ அவளை இப்போது கூட அழைத்து செல்லலாம் என்று கூறினார் . அவன் அவளை அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்தான் . அவன் அவளிடம் வீட்டுக்கு போக சொல்லி டாக்டர் சொல்லிவிட்டார்கள் என்று கூறி கிளம்ப சொன்னான் . அவளிடம் உடை ஏதும் இல்லை . அவளிடம் மருத்துவமனை உடை மட்டும் தான் இருந்தது . அவள் அவனிடம் தனக்கு மாற்று உடை ஒன்றும் இல்லை என்று கூறி வீட்டில் இருந்து தனக்கு ஏதும் உடை எடுத்து வர முடியுமா என்றாள். அவன் முழித்தான் வீட்டில் ஏது இவள் உடை என்று . உடனே அவன் வீட்டுக்கு போன் செய்தான் . ஒரு வேலைக்காரன் போனை எடுத்தான் . அவனிடம் ஒரு நல்ல துணி கடைக்கு பொய் ஒரு புடவை எடுத்து கொண்டு வர வேண்டும் என்று கூறினான் பின் ஒரு 20 புடவை எடுத்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என்று கூறினான் . பின் அவளிடம் வந்து தனக்கு உடை எடுத்து வர சொன்னதாக கூறினான் . அவளும் சரி என்று காவல் இருந்தாள் . வீடு வேலை காரனும் ஒரு புடவை எடுத்து கொண்டு வந்தான் , அது ஒரு எலுமிச்சை நிறம் புடவையும் பார்டர் மெஜந்த கலர் உடைய புடவை . அவள் நன்கு நிறமாக இருப்பதால் அவளுக்கு எடுப்பாக இருக்கும் . அதற்கு ஜாக்கெட் சேர்ந்தே இருந்தது . அவன் இதை கொண்டு உள்ள போனான் . அவள் அமர்ந்திருந்தாள் . அவனிடம் அவள் தனக்கு உடை வந்து விட்டதா என்று கேட்டாள் அவனும் புடவையை அவளிடம் நீட்டினான் . அவள் அவனை பார்த்து முழித்தாள். அவன் அவளிடம் உங்களுக்கு இந்த புடவை பிடிக்க வில்லையா என்று கேட்டான் . அவளோ அவனை பார்த்து தனக்கு புடவை உடுக்க தெரியாது என்றாள் . அவன் அதிர்ந்தான் . இப்போது என்ன செய்வது என்று . அவள் அவனை பார்த்து நான் இதுவரை புடவை உடுத்திருக்கிரேன என்று கேட்டாள் . அவனுக்கு தூக்கி வாரி போட்டது என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை . அவன் சமாளித்தான் , ” நீங்களும் நானும் புதிதாக கல்யாணம் ஆனவர்கள் கல்யாணத்திற்கு பிறகு புடவை தானே உடுக்க வேண்டும் அதனால் வீட்டு வேலைக்காரன் புடவை எடுத்து வந்தான்”. அவள் அவனிடம் , ” அப்படியா ! நாம் புதிதாய் கல்யாணம் ஆனவர்களா என்னுடைய பெற்றோரோ இல்லை உங்களுடைய பெற்றோர் யாரையுமே இங்கு காண வில்லை என்னுடைய விபத்து அவர்களுக்கு தெரியாத ” என்று கேட்டாள் . அவன் குழம்பி போனான் . அவனுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை . இருந்தும் சமாளித்தான் . அவளிடம் , ” உன்னுடைய பெற்றோருக்கு தெரியாது ! நமக்கு காதல் திருமணம் அதனால் அவர்கள் நம்மை ஏற்கவில்லை எனக்கு பெற்றோர் இல்லை ” என்றான் . அவள் சரி என்று அவனிடம் தனக்கு புடவை கட்டி விடுமாறு சொன்னாள். அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை . அவளுக்கு புடவை கட்டிவிட சம்மதித்தான் . அவனுக்கு மனது சங்கடமாக இருந்தது . இருந்தும் வேறு வழி இல்லை என்ன செய்வது . அவன் அவள் இடுப்பை பார்த்து மெய் சிலிர்த்து போனான் அவ்ளோ அழகாக இருந்தது . அவன் இதுவரை கனவில் கூட நினைத்தது இல்லை இப்படி ஒரு திருமணம் நடக்கும் என்றும் இப்படி ஒரு பெண் தனக்கு கிடைப்பாள் என்றும் . ஆனால் என்ன செய்ய அவனுக்கு இப்படி ஒரு பெண் கிடைத்தது . அவனும் அழகுக்கு குறைச்சல் இல்லை , அவனும் பேரழகன் தான் . நல்ல செல்வமுடைய மனிதன் தான். அவன் அவளுக்கு புடவை கட்டி விட்டு முடித்ததும் , அவள் தன் நெற்றியில் அவனை குங்குமம் வைத்து விட சொன்னாள் . அவன் இது வரை செய்தது பரவாயில்லை ஒரு பெண் நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும் என்றால் அது அவளது கணவர் மட்டும் தான் , தான் எப்படி வைக்க என்று தடுமாறினான் . ஆனால் அவனுக்கு தெரியும் வேறு வழி இல்லை என்று . வைத்து விட்டான் . அவள் முகத்தில் அப்படி ஒரு கலை , அவள் ஒரு குடும்ப பெண் போல் காட்சி அளித்தாள். அவன் மனதில் ஒரு எண்ணம் அவளுக்கு பழைய நினைவுகள் வந்தாலும் தன்னை ஏற்று கொண்டால் நன்றாக இருக்கும் என்று . அவன் எண்ணம் நிறைவேறுமா ? அவளுக்கு உண்மை தெரிந்தால் என்னவாகும் ? ………….
தொடரும் ……………..
