Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 29.1

 

நாம் 29(1)

   

     எழிலரசி தன் அறையில்.. தன்னவனின் தோள்வளைவில் கழுத்தை கட்டிக்கொண்டும்.. வேந்தனும் தன்னவளின் இடையை மென்மையாக பற்றியவாறு  என இருவரும் ஆழந்த உறக்கத்தில் இருந்தனர்.



Advertisement

     தலையணையின் அடியில் வைப்ரேஷனில் ஒலித்த அலாரத்தின் சத்தம் கேட்டு.. அதனை அணைத்துவிட்டு.. மெதுவாக கண்திறந்தவனின் கழுத்தில் புதைந்திருந்த தன் அரசியை பார்த்தவன்.. 

    அவள் நெற்றியில் அழுத்த முத்தமிட்டு.. ” பிறந்தநாள் வாழ்த்துக்கள் முயல்குட்டிமுகம்முழுவதும் மெதுவாக முத்தமிட..  முத்தம் வாங்கியவளோ மெல்லிய புன்னகையை உதித்து அவனை இன்னும் இறுக்க கட்டிக்கொண்டு.. அவனுக்கு இன்பமான அவஸ்தையை உருவாக்கினாள் அவனின் அரசி.

 

Advertisement

    இரவு 8.30 வீட்டில் உள்ளவர்களில்.. அம்மா சக்கரவர்த்தி மாமா வீட்டிற்கு சென்றிருக்க.. பாட்டி, தாத்தா பெரியப்பா வீட்டிற்கும், அப்பா, அண்ணா கீழ்யிருந்தார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் தன்னவன் ஏதாவது இன்ப அதிர்ச்சி தருவான், கால் செய்வான் என்ற ஆர்வத்துடன்.. அவனின் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டு இருந்தாள். நேரம் கடந்துதே தவிர.. ம்ஹூம்.. தன் ஆளிடமிருந்து எந்த ஒரு தகவலும் இல்லை. இவனை என்ன பண்ணலாம்?. என திட்டியவாறு திரும்பி படுத்தாள்.

Advertisement

    சில நிமிடங்களாக கதவில் சாய்ந்து அவனவளை கள்ளத்தனமாக கண்களால் பருகியபடி இருந்தவனை பார்த்து அதிர்ந்து!. அவனையே பார்த்தவள்.. பிறகு அவனின் கண்களில் தெரிந்த ஒன்றை கண்டுகொண்டு.. அதன்பின் தான் உணர்ந்தாள்!. தான் படுத்துயிருக்கும் அழகை. அவனை முறைத்தபடி வேகமாக எழுந்து அமர நினைக்கையில் எதிரில் புன்னகையுடன் பார்த்திருந்தவனோ..

 

    திருமணத்திற்கு முன்னான தன்னவளின் பிறந்தநாளை.. பல வருடங்களுக்கும் சேர்த்து கொண்டாட!. வேண்டும் என்ற ஆசையை முன்னிட்டு இருவரின் பெற்றோர்களிடம் இருந்து.. பல அனுமதிகளை வாங்கி.. இரவுவே அரசியின் வீட்டிற்கு வந்தவனை யாரும் இல்லா வீடுதான் வரவேற்றது. இது எல்லாம் அவனின் ஏற்பாடுதான்.

Advertisement

    தன்னை போல் தானே.. தன்னவளின் குடும்பத்தினருக்கும் மகளின் திருமணத்திற்கு முன்னான பிறந்தநாள். அதனால எழிலரசியிடம் ஏதேனும் ஒரு காரணம் கூறி பல பரிசுகள், உணவு செய்து கொடுத்தல், கொஞ்சல்கள் என தன்னவளிற்கே தெரியாத மாதிரி சென்றவாரம் முழுவதும் தினம் தினம் தன் பேத்தி, மகள், தங்கை பிறந்தநாளை!. மாப்பிள்ளையின் இன்றைய வேண்டுக்கோளை நிறைவேற்ற வேண்டி ஒருவாரம் கொண்டி மகிழ்ந்தார்கள்!. அதில் இவனும் அவர்களுடன் சேர்ந்து செய்துக் கொள்வான். ‘

     இன்று இவனிற்காக காத்திருந்து வேந்தன் கிளம்பிவிட்டேன்.. என்ற மெசேஜ் அனுப்பியவுடன்.. இன்பா இருப்பான் என நினைத்து பல அறிவுரைகள் கூறி அருணாச்சலமும்.. மனைவியின் அண்ணாவிற்கு வீட்டிற்கு செல்ல.. புன்னகையுடன் கேட்டிருந்த இன்பா.. அப்பா சென்ற சில நிமிடங்களில் இரண்டு வீடு தள்ளி இருக்கும் தன் நண்பனின் வீட்டிற்கு சென்றுவிட.. வேந்தனை தன்னவள் மட்டுமே இருக்கும் வீடு தான் வரவேற்றது

    தன் அரசியை அறையில் பார்த்தவன் மஞ்சள், இளம்நீலநிற பாவாடை தாவணி அணிந்து.. முதுகுபுறம் காண்பித்த படி கால்களை ஆடியவாறு.. அவள் அவனின் புகைபடத்தில் நெற்றி, கண் என தொடங்கி அவனை அங்குலம் அங்குலமாக கொஞ்சி கொண்டுயிருக்க.. அவள் ஊஞ்சலில் அமர்ந்துயிருப்பாள் என நினைத்து வந்தவன் தன்னவளை இந்நிலையில் எதிர்பார்க்கவில்லை.

    அவள் கால்களை ஆட்டியவாறு புகைபடத்தில் அவனை தொடதொட அவனிற்கு தன்னையே தொடுவது போன்ற உணர்வை தந்து.. அவளின் பின்கழுத்து, ரவிக்கைக்கும், தாவணிக்கும் இடையே தெரியும் இடையில் முத்தமிட வேண்டும், ஆடும் கால்களை தடவி அவளின் மென்முடிகள் கூசிசிலிர்வதை பார்க்க வேண்டும். பாதங்களில் உள்ள கொழுசுடன் அவளை முத்தமிட வேண்டும் என கதவில் சாய்ந்தபடி அவளை  கண்களால் பருகிக் கொண்டுயிருந்தவனிற்கு.. மேலும் சிறப்பு பரிசாக அவள் முன்னால் திருப்ப அவனுள் இருந்த காதலன் பார்வை கணவன் பார்வையாக மாற நினைக்கையில்.. அவனின் விருப்ப முறைப்பு பார்வையை காண்பித்து.. இன்னும் அவனை கிறங்கடித்து.. அமர நினைத்தவளை அவள் உணரும் முன் அவளை அந்நிலையிலேயே அள்ளி எடுத்து ஊஞ்சலில் அமர்ந்து தான் உணர்ந்த அதனையையும் அவளின் இதழ்சுவை மூலம் பருகி முடித்தபின் அவளை விடுவித்தான்.

    அரசியோ இதனை சற்றும் எதிர்பார்க்காததால் அவனின் இந்த அதிரடியில் முழுவதும்.. தன்வசம் இழந்து தன்னை அவனின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக்கொண்டு தன்னவனின் ஒரு முத்தத்திலேயே!. உருகி கரைத்து அவனின் காதலை, தாபத்தை, ஆசையை தெரிந்துக்கொண்டு, பின் பெண்ணாக உயிர்த்தெழுந்து தன்னையும் உணர வைத்து..  அவனும் அதை உணர்த்து உருகி, பருகி அவளில் இருந்து வெளிவந்து.. அவளை தன்னுள் முழுவதும் புதைத்துக்கொண்டான்.

    சில நிமிடங்கள் கடந்த பின்தான் இருவரும் தன் உணர்விற்கே வந்தார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கவே நாணம் கொண்டார்கள். யார் முதலில் பேசுவது?. என்று கண்களாலே சில நிமிடங்கள் பேசினர்.. பின் அவளிற்கு ஞாபகம் வந்து.. ” தனு கீழ கீழழ.. ” வார்த்தை வரவில்லை.

   புன்னகையுடன் நெற்றி முட்டியவன்.. ” கீழ யாருமே இல்ல முயல்குட்டி. இங்க நானும், நீயும் மட்டும்தான். ”

   அவனை முறைத்தவள்.. ” எல்லோரையும் வீட்டை விட்டு அனுப்பிட்டு தான் மேலே வந்தீங்க. அதன்பிறகு இந்த வேல பண்ணிங்க. ” சிவந்துயிருக்கும் அவன் உதடை இழுத்துபிடித்து விடுவிக்க.

    அவளை மேலிருந்து கீழாக பார்த்து.. ” ஏன்டி நான் பாட்டுக்கு ரொம்ப நல்லபிள்ளையா வந்தவனை.. நீ என்ன பண்ண? ” தலையாட்டி கேட்க..

    நான் என்ன பண்ணினேன்?.  என அவளும் தலையசைத்து கண்ணால் கேட்க.. அவன் பார்வை அவனின் புகைபடத்தில் நிலைக்க.. அதனை அவளும் பார்க்க. அய்யயோ!.. என அவள் செய்துக் கொண்டுயிருந்த செயலை நினைத்து ஒன்றும் கூறமுடியாமல் சிறு புன்னகையுடன் முகத்தை தேய்த்து, முடியை ஒதுக்கி, தன் அறையை பார்வையிட்டு பேச முடியாமல் திணற..

    அவன் அவளின் தாடையை பிடித்து தன் முகம் பார்க்க வைத்து.. அவனும் அவளின்  உதட்டை பிடித்திழுத்து.. ” ம்.. நீ பண்ணியதை விட நான் ஒன்னும் அதிகமா பண்ணல. இனி உனக்கு மாமாவ தொட்டு பார்க்க தோன்றினால் ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பு.. அடுத்த பத்தாவது நிமிடத்தில் நான் இங்கு இருப்பேன். ஆனா ஒரு கண்டிஷன் மட்டும். இப்போதைக்கு முகம் மட்டும்தான் அனுமதி. மற்றதெல்லாம் என்னை மாதிரி பார்ப்பதோட நிப்பாடிகனும். சரியா. ” கள்ளபுன்னகையுடன் கூற..

   ‘ சரிஎன அவள் தலையசைக்க.. ஏதோ புரிந்தும், புரியாமலும் தலையாட்டும் முயல்குட்டியை நினைத்து!. புன்னகையுடன் அவனும் தலையசைத்து அவளிற்கு மீண்டும் மென்முத்தம் வழங்கி தான் அவள் உதட்டை விடுவித்தான்.

    அவனை முறைத்துக்கொண்டே.. ” சரி சரி.. நான் கேட்டத இன்னைக்காவது எடுத்து வந்திங்களா?. ” அதிகாரமாக கேட்க.

    அவளை கட்டியில் நடுவில் அமர வைத்து.. அவனும் கட்டியில் சுவற்றில் சாய்ந்தமர்ந்து அவளை தன்னில் சாய்த்துக் கொண்ட பின்.. அவள் கேட்டு தொல்லை செய்த.. அவனின் பள்ளிகால போட்டோ.. அதிலும் அவன் பள்ளி பருவத்தின் கடைசியில் எடுத்த போட்டோக்களையும், சில கல்லூரியில் எடுத்ததையும் கொடுத்தான்

   எதிர்பார்ப்புடன் போட்டோக்களை வாங்கி பார்த்தாள்..  பின் அருகில் இருப்பவனை பார்த்தவள்.. சட்டென்று அவனின் முகம்முழுவதும் முத்தமழை பொழிந்தவள்..

   ” எனக்கு.. எனக்கு போட்டோ பார்த்த பிறகும்..  உங்க முகம் ஞாபகம் வரவேயில்ல தனு. “  அவனை கழுத்தை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

    அவள் அழுகையில் அவனிற்கு கோபம் வந்தது. சில நொடிகள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தவன்.. ” இத சொல்லுவதற்கும், இப்படி அழுவதற்காக தான்.. என்னைய நச்சரித்து எடுத்துவர சொன்னியா?. அந்த நேரத்தில் என்னைய ஞாபகம்.. வைத்துக்கொள்வது கஷ்டம் சொன்னாதை கேட்காம.. ஏன் முயல்குட்டி?. நீ திருப்பி திருப்பி யோசிக்கிற.

    நானே என் முயல்குட்டிய விட நான் ரொம்ப சுமார இருக்கேனு கவலையா இருந்தா. ” கோபம் வந்து சத்தம் போட்டாலும்.. அடுத்த நொடியே அவளின் ஏக்கத்தை உணர்ந்து அவளை மாற்ற.. தலையை தடவி விட்டவாறே வருத்தம் போல் கூறி முடிக்க.

    அரசி.. அவளவன் சத்தமாக பேச ஆரம்பிக்கும் போதே தன் அழுகை குறைத்துயிருக்க.. அவன் தலைதடவலில் அமைதியாகி.. தன்னை மாற்ற வேண்டி வருத்தம் போல கூறியதை கேட்டவள்..

   அவள் சாய்ந்திருந்த நிலையிலேயே.. தலையை மட்டும் தூக்கி.. ” யாரு நீங்க என்னைய விட சுமாரா இருக்கீங்க?.. ” ஆம் என அவன் தலையசைக்க..

    அவனின் புகைபடங்களை கையில் எடுத்தவள்.. ” கொஞ்சம் அதிகமான முடி.. அரும்பு மீசை, வழுவழு கன்னம், இப்பவிட உடம்பு கொஞ்சம்  ஒல்லியா, அப்பவே இதே ஹைட் இருக்கீங்க. ”

   அவன் கன்னத்தை பிடித்து.. ” தனுமாமாவோட புன்னகை இன்னும் சூப்பரா இருக்கு. தனு இதில லைட்டா தாடியோட செம்ம ஹேன்சம்மா, ரொம்ப ரொம்ப கியூட்டா இருக்கிங்க. ” அவனின் கல்லூரி போட்டோவை பார்த்து கூறியவள்..

   ஆனா எப்படி உங்களுக்கு.. என்னைய பிடித்தது தனு?.  நான் அப்ப இன்னும் குட்டியா.. கொழுகொழுனு உங்களுக்கு அப்படியே ஆப்போசிட்டா இருக்கேன். அதுவும் அழுதுட்டு வேற இருந்துயிருக்கேன். ம்.. எப்படி?. “அவன் கண்களை பார்த்துக் கேட்க..

    அவனோ கால்களை மடக்கி அமர்ந்து.. அவளை அள்ளி மடியில் வைத்துக் கொண்டான். ” இப்படி எப்பவும்.. என்னுக்குள்ளோயே வைச்சுக்க.. உன்னைய மாதிரி ஒருமுயல்குட்டி பொண்ணுதான் சரியா இருக்கும்னு அப்பவே தோனியிருக்கும் போல. ஏன் இந்த முயல்குட்டிய பிடித்ததுனு?. எனக்கு இன்னும் விடைகிடைக்கல. தேடனும்.. அதுக்கான விடையும் உனக்கிட்டதான் இருக்கு. ஆனா எனக்கு விடைய தெரிந்து கொள்ள பிடிக்கல.. எனக்காவே பிறந்த முயல்குட்டிகிட்ட.. நான் எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாளும் தேடுவேன். தேடிக்கிட்டே இருப்பேன். ” அவளின் இடையை இறுக்கி கூற..

     தன்னவனின் மார்பில் சாய்ந்திருந்தவள் அவனின் பதிலில் உரைந்து.. அவனின் கண்களை பார்த்தவாறே.. தன் பின்னால் அவனை இழுத்தவாறு படுத்தவள் தன் மார்பில் சாய்த்து தலையை கோதி.. தன்னை தெரிவித்து பாட ஆரம்பித்தாள்..

 

 நான் முழுசா

உன்ன எனக்குள்ள பொதச்சேன்

என் உசுரா அழகே

உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்

நான் முழுசா

உன்ன எனக்குள்ள பொதச்சேன்

என் உசுரா அழகே

உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்

இனி வரும் ஜென்மம் மொத்தம்

நீயும் தான் உறவா வரணும்

மறுபடி உனக்கென பிறந்திடும்

வரம் நான் பெறனும்

கண்ணே கணவா

வாழ்க்கை நீள

என் கூட நீ மட்டும்

போதும் போதும்

நீ நாளும்…

 

     ‘ தன்னவளின் மார்பில் சாய்ந்திருந்தவன்.. ஏன் உன்ன பிடித்ததுனு?. இந்த ஜென்மம் முழுவதும் தேடனும் சொன்னேன்.. ஆனா நீ எல்லாம் ஜென்மமும் என் தேடுதல் வேண்டும் கேட்கிற. இது இதுதான்டி என் முயல்குட்டி!.

   பூரித்து கண்கள் கலங்கியவாறு.. அவளின் கழுத்தில் புதைத்துக் கொண்டான். எப்போது தன்னவளின் தலைகோதல் நிறுத்தம் பெற்று.. தன்னவளை தனக்குள் புதைத்துக்கொண்டு உறங்கினான் என்று தெரியவில்லை.. அலராத்தின் ஒசையில் தான் கண்விழித்து தன்னவளிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினான்.

 

   ” அரசி எழுந்திரி நாம்ம இப்ப கிளம்பனும். ” அவளின் கன்னத்தை கிள்ளி எழுப்பினான்.

   ” ஐந்தே நிமிடம் தனுமாமா. காபி எடுத்து வருவீங்களா.. நான் பல்தேய்த்து வருவனா. ” கன்னத்தை தேய்த்துவிட்டு கூறி திரும்பி படுக்க..

   ” அதுக்கெல்லாம் நேரம் இல்லடி.. நீயா எழுந்தா?. நடந்து போய் எல்லாம் வேலையையும் முடித்து குளிக்க போவ.. நான் போய்விட்டனா முதலில் குளியல் பின்னதான் எல்லாம். இரண்டே நிமிஷம் தான் உனக்கு. ” அவள் காதில் உதடு உரச கூற..

     சுகமாக கேட்டு.. ” இரண்டு நிமிடம் கழித்து எழுப்பு தனு. ” போர்வையை போர்த்த போக..

   ம்ஹூம்.. அவனோ அதை உருவி எடுத்து வைத்து விட்டு.. முதலில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அவளை எழுப்ப.. நல்ல பிள்ளையாக எழுந்து அவனை கட்டிக்கொள்ள..

   ” அரசி கோயிலுக்கு போகனும் நேரம் ஆச்சு. 45 நிமிடத்தில் கிளம்பி இருக்கனும். நான் ரெடியாகி விட்டு காபி எடுத்துட்டு வரேன். ” நெற்றியில் முத்தமிட்டு.. இறுக்கி அணைத்து விடுவித்து.. தன்னுடைய முதல்பரிசை கொடுத்து.. பின் அவனே வாங்கி கட்டிலில் வைத்து விட்டு அவளை குளியல் அறைக்கு முன் விட்டான்.

    புன்னகையுடன் சென்றவள்.. அரைமணி நேரத்தில் தலையை டிரையரில் காய வைத்து.. பின் சீவியபடி வந்தவள்.. தன்னவனின் பரிசை பார்க்க அது தன்னவனால் முந்தி மட்டும் மடித்து பின் செய்திருக்கும்..

   ‘ அக்வாநிறம் அதில் சாம்பல்கலரில் இருமயில்கள் இணைத்தது உடல்முழுவதும் இருக்க.. பாடர் மற்றும் பிளெளஸ் இளம்ஆரஞ்சு வண்ணம் அதில் தங்கசரிகை இருக்கும் பிளெளஸ்..  சில்க் சேலை. ‘

   அதை ஐந்தே நிமிடத்தில் உடுத்தியவள்.. கூந்தலை இருபக்க சில முடிகளை எடுத்து கிளப் மட்டும் போட்டு..

     தன்னவன் சேலையோட கொடுத்த  பாக்ஸில் ‘ இருபக்கமும் பல பூக்களின் மேல் பல கற்களில் பதித்து.. அதனை நடுவில்  பெரிய பூவில் இணைத்து.. அதில் மரகதம், ரூபி கற்களை பதித்து.. பெரிய முத்துகள் தொங்க என அழகான வேலைபாடு பதக்கமுள்ள நெக்லஸ், பதக்கம் போல தோடும், நான்கு தங்க வளையல் இருந்தது. ‘

    தன்னிடம் உள்ள ஆரஞ்சு வண்ண கண்ணாடி வளையல்கள் சில எடுத்து தங்க வளையலின் நடுவே வைத்து அணிந்துக் கொண்டாள். அவளின் வயிற்றில் பசிக்கான சத்தம் கேட்கவும்.. சரியாக காபி வாசனை வரவும் சரியாக இருந்தது. வேகமாக அறையின் வெளியே வந்து பார்த்தாள்.

    அவளின் மன்னவன் ‘ பட்டு வேஷ்டி சட்டை அணிந்து..  கையில் காபி உடன் காரட், பொடி போட்ட ஊத்தாப்பம் ‘ இருவருக்கும் கொண்டு வந்து வைத்தான். தன்னுடைய வளையலின் சத்தத்தில் நிமிர்ந்தவன்.. கண்களால் ‘ வா ‘ என அழைக்க..

    புன்னகையுடன் சென்று அவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்தாள். தன்னிடம் புதைந்தவளை தன் உயரத்திற்கு தூக்கி அவள் இதழில் மென்மையாக இதழ் பதித்து.. 

   ” எனக்கென்னு இன்நாளில் பிறந்து வந்த.. என் அரசியே.. ஐ லவ் யூ ” மீண்டும் இதழ்பதித்தான்.

   சில நொடிகள் கழுத்தை கட்டிக் கொண்டு அவள் இருக்க.. அவன் கால்களை பிடித்தபடி இருக்க.. இருவரும் நெற்றி முட்டி நின்றிருந்தனர்.

    புன்னகையுடன் இறக்கிவிட்டு.. பின் இருவரும் பழைய இந்நாளைய நிகழ்வுகளை பேசியபடி சாப்பிட்டு, காபி அருந்தி முடித்தார்கள். வேந்தன் தன்னவளிற்கு பூ வைத்துவிட்டு மீண்டும் வாழ்த்துகளை… பல முத்தங்கள் பதித்து கூறினான்.

    அனைத்தும் எடுத்துக் கொண்டு அரசியின் அறையிலிருந்து வெளி வந்தவர்கள். கால் செய்து மேலே வருகிறேன் என கூறிய.. இன்பா மாடி ஹாலிற்கு வர அண்ணாவை பார்த்தவுடன் கட்டிக்கொண்டாள்.

   அவனும் தலைதடவி ” பிறந்தநாள் வாழ்த்துக்கள் எழில்மா ” தான் வைத்துயிருந்த திருநெல்வேலி ஸ்பெசல் ஸ்விட் அல்வா மற்றும் திருபாகம் கொடுக்க.. ( இன்று வேறு எதை கொடுத்தாலும் மாமாவின் முறைப்பை பெறவேண்டுமே என்று முன்னேற்பாடாக நண்பன் மூலம் வாங்கி வரவைத்தான். )

    தன்னவனை பார்த்து அடங்கப்பட்ட சிரிப்புடன் வாங்கி தானே சாப்பிட்டு கொண்டுயிருந்தாள். ( இருவருக்கும் கொடுக்கவில்லை.. யாருக்கு முதலில் கொடுக்க என்ற யோசனையே நமக்கு வேண்டாம்பா. ) ஒருவன் ஆசையாக சாப்பிடும் தன் தங்கையை பார்த்து.. பின் காரை வெளியில் எடுத்து வைக்க சென்றான்.

     அவளவனோ தனக்கு கொடுக்காமல் சாப்பிடும் தன் அரசியை பார்த்திருந்தவன்  விடுவான அவன்.. வேட்டியை  மடித்துகட்டி.. அவளை அள்ளி சென்று தங்களின் ஆஸ்தான படிகட்டின் வளைவில்.. ( கீழே தூக்கி செல்கிறான் என்ற நினைப்பில் வந்தாள். )  அவள் உணரும் முன் சத்தமின்றி முத்தமிட்டு இனிப்பின் சுவையோடு  தன்னவளின் இதழ் சுவையையும் சேர்த்து சுவைத்து முழுங்கிவிட்டு.. எப்படி!. என்று பார்வையை செலுத்தி.. அவன் கார் இருக்கும் இடம்  வந்துவிட்டான்.

     சில நிமிடங்கள் கழித்து தன்னில் இருந்து வெளிவந்து.. தனுமாமா என்று கடுமையாக செல்லம் கொஞ்சி.. பின் இருவரும் இன்பாவிடம் கூறிவிட்டு கிளம்பினார்கள்.

   இதில் எழிலரசிக்கு கோயில் என்று மட்டுமே கூறி.. எங்கு?. என கூறவில்லை. வேந்தன்  அவளை இன்னும் சிறுபுன்னகையுடன் பார்த்திருக்க.. அவள் அவனை பார்க்கவில்லை.

     ” முயல்குட்டி இன்னும் ஸ்விட் சாப்பிடாம பாக்கி ஏதாவது வைத்துயிருக்கியா?. ஸ்விட் இல்லையா. நீ தனியா சாப்பிட நான் வேண்ணா வேற ஸ்விட் வாங்கட்டா?. ” அவனை முறைத்து திருப்பிக் கொண்டாள்.

    ” உன் முறைப்புக்கு என்ன அர்த்தம்?. ஓஓ.. ஏன்டா கேட்குற.. வாங்கிவா சொல்லுறியா?. ”

    அதிகாலை நேரத்தில் கிடைக்காது என்ற தைரியத்தில்.. ” ஆமா தனு..  வாங்கிவா.. எங்க போறோனு சொல்ல மாட்டேனு சொல்லிட்ட.. நான் அதையாவது சாப்பிட்டு வருவேன். ஆனா இப்ப 3.30 மணிக்கு கிடைக்காதே என்ன பண்ண?. ” பாவமாக கேட்க..

    புன்னகையுடன்.. ” ம் இப்படியெல்லாம் நீ கேட்பனு தெரிந்து.. நான் நைட் வரும்போதே விதவிதமான ஸ்விட் வாங்கி.. பின்சீட்டில் வைத்துயிருக்கேன். இப்ப எனக்கு இருக்க மூடில் பால்கோவா சாப்பிடா நல்லாயிருக்கும். சாப்பிடுறியா?.. ” சாதாரணமாக கூற..

    என்ன என்ன சொன்னீங்க?.. அதிர்ந்த பார்வை பார்க்க.. ” ம். சரிவிடு காலையில் இருந்து கொஞ்சம் ஓவரா ஸ்விட் சாப்பிட்டேன். இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டும். உனக்கு ஓகே தானே. இல்ல வேண்டும் என்றாலும் பரவாயில்ல.. என் முயல்குட்டிக்காக தாராளமா சாப்பிடலாம். ” மெல்லிய புன்னகையுடன் அவளை பார்க்க.. 

   ” வேண்டாம் தனு.. நான் அடக்க ஒடுக்கமா நல்லபிள்ளையா வரனும் என்று நினைக்கிறேன். ”

    ” ம்.. எனக்கும் என் முயல்குட்டி அடக்க ஒடுக்கமா இருந்தா பிடிக்காதே. என்ன பண்ணுவ?. நானும் பார்க்கிறேன். ”

   இப்படி கூறுவான் என்று எதிர்பார்க்காதவள்.. இவளிற்குதான் எந்த ஐடியாவும் இல்லையே என்ன சொல்வாள்?. என்ன சொல்ல?..

    கவனமாக வண்டியை ஓட்டியவாறே திருதிரு என முழிக்கும் தன்னவளை பார்த்தவன் புன்னகையுடன்.. ” சரி விடு முயல்குட்டி ரொம்ப யோசித்து.. உன் குட்டி மூளைக்கு வேல கொடுக்காத. வா என் தோளில் சாஞ்சுக்கோ.” கைநீட்டி அழைத்தான்.

   கண்டுபிடித்து விட்டானே என அசட்டுபுன்னகை புரிந்தவள்.. தனு கார் ஒட்ட எந்த இடையூறும் இல்லாத அளவிற்கு கவனமுடன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

    இருவரும் ஒருநொடி பார்த்து திரும்பிக் கொண்டனர். நேற்று இரவு முதல் தன்னில் புது தாக்கத்தை உணர்கிறார்கள். தாங்கள் தன் இணைகளுடன் இன்னும் இன்னும் நெருங்கியது போன்ற மனநிலையையில்.. இருவர் மட்டுமேயான ரம்மியமான அதிகாலை கார் பயணம்.. அதனுடன் இனியான பாடல் ஒலிக்க இருவரும் மிகவும் ரசித்தபடி இருக்க.. சில நிமிடங்களில் எழிலரசி உறங்கிவிட்டாள். அவனும் மிதமான வேகத்தில் வண்டியை செலுத்தி.. தாங்கள் வந்து சேரவேண்டிய இடத்தை அடைந்தார்கள்.

        

    அவனின் நீண்டவருட ஆசை.. தன்னவளுடன் இங்கு வரவேண்டும் என்பதற்காகவே பல வருடங்கள் கழித்து வருகிறான். இதை அவளிடம் கூறமுடியாது. பின் யார் திட்டுவாங்குவது. ஏன்டா?.ஏன் ?. என கேட்டு அடிக்ககூட வாய்ப்பு இருக்கிறது. தனக்கு இந்த இடம் போல்.. பல இடங்களுக்கு தன்னவளுடன் தான் செல்ல வேண்டும் என நிறைய இடங்கள் ஒதுக்கி வைத்துயிருந்தேன். இனி எல்லாம் இடங்களுக்கும்.. என்னவளுடன் செல்வேனே என்ற சந்தோஷத்துடன்!.. அரசியை எழுப்பினான். 

     சிறு வெளிச்சம் வந்திருக்க.. எழுந்து சுற்றும் ஒருமுறை பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் பார்த்தாள் அவளும் வந்து இருவருடங்கள் இருக்கும்.

   ” தனு இந்த இடம் உங்களுக்கும் பிடிக்குமா?. ”

    யாருக்குடி இந்த இடம் பிடிக்காது..  என்பது போல லுக்விட.. ” இல்ல இல்ல எல்லோருக்கும் பிடிக்கும்தான் இருந்தாலும்… ”

   ” ம்.. எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் முயல்குட்டி. சரி காரை இங்க நிப்பாட்ட முடியாது.. கொஞ்சம் தள்ளிதான் போகனும் கிளம்பலாம். “ம் தலையசைத்து.. போகும் வழியில் தன்னை சரிப்படுத்திக் கொண்டாள்.

    இருவரும் வேண்டியவற்றை வாங்கி.. அதனை வேந்தன் வைத்திருக்க.. அரசி ஒருகையால் சேலையை சற்று தூக்கி பிடித்தபடி.. மறுகையை தன்னவனுடன் கோர்த்து.. இந்த இடம் மற்றும் பலபல தங்கள் நினைவுகளை பேசி மகிழ்ந்து!.. திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாரை தரிசித்து நின்றனர். 

    அப்போது தான் ஆதவனும் தன் கதிர்களுடன்.. விநாயகரை பார்த்தார். அந்த நிகழ்வை இருவரும் கண்களாலும், கேமராவிலும் பதிவு செய்துக் கொண்டனர்.

    பின்னர் முழுமுதற் கடவுளை மனதார வேண்டி வேந்தன் தங்களுக்காக வாங்கியிருந்த அவர்கள் பெயர்களின் தமிழில் முதல்எழுத்தை டாலராக கொண்ட.. எப்போதும் போடுவதற்கு ஏற்றதாக உடைய செயினை..

    வேந்தன்.. எழிலரசியான தன் அரசியிடம் தலைசாய்க்க.. ஐயர் தவிர யாரும் அந்நேரத்தில் இல்லை.. புன்னகையுடன்  அவளும் தன்னவனின் நெற்றியில் மென்முத்தம் பதித்து அவளவனிற்கு செயினை போட்டுவிட்டாள்.

    ” முயல்குட்டி நீ இந்த பாட்டை.. என் குரலில் பாடியிருக்கேன் கேளு.”

   அவன் தன் வயர்லெஸ் இயர்போனை கொடுக்க.. அரசி கேட்க ஆரம்பித்தவுடன். வேந்தன் தன் முயல்குட்டிக்கு செயினை போட்டுவிட்டு..

    ‘ சில வருடங்கள் முன் தன்னவளின் பிறந்தநாளில் தான்.. அதுவரை மனம் விருப்பியவள்.. குட்டி பொண்ணாக மனதில் பதித்திருந்தவள்.. பாவையாக!. தன் கண்முன் தோன்றி மனைவியாக உணர வைத்த.. இந்நாளிற்காக காத்திருந்து தன் அரசிக்கு.. முதன்முறையாக குங்குமம் எடுத்து அவளின் நெற்றியில் வைத்து.. தன் உரிமையை பதித்தான். ‘

   ( தாரமே தாரமே ) பாட்டை கேட்வளுக்கும், பாட்டை உணர்த்து தெரிவித்தவனுக்கும்.. கண்களில் மெல்லிய நீர். மகிழ்ச்சி, சந்தோஷத்திற்கான நீர் கண்ணீர்!. ‘

    மலையின் மேல்பகுதியில் தன்னவனின் தோள் சாய்ந்தமர்ந்து.. தென்றல் காற்றை சுவாசித்தபடி.. அங்குயிருந்து தெரியும் காவிரி ஆறு, அதன் குறுக்கே அமைந்துயிருக்கும் பாலத்தில் வந்துக் கொண்டுயிருக்கும் தொடர்வண்டியின் அழகு, ஓசை கேட்டபடி இருவரும் கைகோர்த்து அமைதியாக அந்த சுழலிலை அனுபவித்தனர். 

    சமதரையாக உள்ள திருச்சி பூமியில் துருத்திக்கொண்டு.. இந்த 83 மீட்டர் உயர பாறை  கம்பீரமாக நிற்கிறதுஉலகின் அதிகபட்ச பழங்கால பாறைகளில் இதன் காலம் 3800  மில்லியன் வருடங்கள் (ஒரு மில்லியன் வருடம் என்றால் 10 லட்சம் ஆண்டுகள்நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்கள் இதன் பழமையை).  இந்த வகையில் பார்த்தால் கிரீன்லாந்து மற்றும்  இமயமலை பாறைகளை விட மிக மூத்த பாறை. மொத்தம் 344 படிக்கட்டுகள்கொண்டது இந்த மலைக்கோட்டை.

    மலைக் கோவிலின் மீது வீற்றிருக்கும் இறைவியின் பெயர் மட்டுவார்குழலம்மை. இறை லிங்கவடிவில் இருக்கிறார்

    மலைக்கோட்டையில் லிங்க வடிவில் எழுந்தருளி ஆசி வழங்கும் தாயுமானவர்.. இன்றைக்கும் கர்ப்பிணிப் பெண்கள் தாயுமானவரை வேண்டிக்கொள்வார்கள். அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதாக சொல்கிறார்கள். இத்திருக்கோயில் ஒரு கலை கோயிலாகவும் விளங்குகிறது.

   கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சங்கிலிகள் தொங்குகின்றன. இது சிற்பக்கலையின் அதிசயம். அழகிய கண்ணைக் கவரும் ஓவியங்களும் உள்ளன. ஒரே தலையுடன் இருபசுக்கள் வரையப்பட்டுள்ளன. இந்த கலையழகை காண மலை மீது ஏறிச் செல்ல வேண்டும்.

     இக்கோயிலுக்கு கீழே ஆறு மற்றும் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால குகைக்கோயில்கள் இரண்டு உள்ளனஇக்கோயில்களில் அற்புதமான கலைச் சிற்பங்கள் உள்ளன. இப்பாறையின்  அடிவாரத்தில் ஒரு திருக்குளம் இருக்கிறதுபங்குனியில் பத்து நாட்கள்.. தெப்பத்திருவிழா நடைபெறும்.

     திருச்சி நகரின் மையத்தில் இருக்கும் இந்தமலையே ஒரு அழகுதான். வடபுறத்தில் இருந்து பார்த்தால், பிள்ளையார் போன்று தோன்றும்.  தென் பக்கம் இருந்து பார்த்தால், நந்தி அமர்ந்துஇருப்பது போல காட்சி தரும். கிழக்கிலிருந்து கண்டால், கப்பல் போல தெரியும். மேற்கில் இருந்து பார்த்தால், யானை படுத்திருப்பது போல தெரியும். மலை உச்சியில் ஒரு குகை இருக்கிறது. குகைக்குள் நிறைய கல்வெட்டுக்கள் உள்ளன. சமணத்துறவிகள் பயன்படுத்திய கற்படுக்கைகளும் இருக்கின்றன

 

    சில நிமிடங்களில்.. தாயுமானவர், மாணிக்க விநாயாகரையும் வணங்கியவர்கள்,  அங்குயிருந்த கடைகளில் விதவிதமான விநாயர் சிலைகள் வாங்கியபின்.. உணவு சாப்பிட்ட பின்.. தன்னவளுடன் விமானத்தில் பறந்து செல்ல சென்றுக் கொண்டுயிருந்தான்.

     

    

   

    

    

  

   

   

    

    

    

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!