Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 29.2

 

நாம் 29(2)

 



Advertisement

    வேந்தனின் கார்  மலைக்கோட்டையில் இருந்து அடுத்து தங்கும் விடுதியின் முன் நின்றது. எழிலரசியை அழைத்து சென்றவன்.. ஏற்கனவே பதிவு செய்திருப்பதால்.. உடனே அறை சாவி கொடுக்கபட..  இன்னும் அவன் தன்னவளிடம் எதுவும் கூறாமலே வாட்சை பார்த்து பின் வேகநடையுடன் அறையில் நுழைந்தவன்..தாங்கள் கொண்டு வந்த பெட்டியில் இருந்து இருவருக்குமான உடையை எடுத்து வைத்தான்.

     அரசி நீ உடை மாற்றிக்கோ. சின்ன வேலை.. நான் பத்து நிமிடத்தில் வந்துடுவேன். ” அவனை முறைத்தவள்..

   ” வெளியதான் நிப்பேன். திலகனுக்கு நல்லா தெரிந்த ஹோட்டல் தான் பயம் இல்ல. உள்ளே இருப்பேன் உனக்கு சேலை மாற்ற பாத்ரூம் வசதியா இருக்காது அதனால்தான். ”

Advertisement

   அதற்குமேல் பதில்கூறாமல் அவளின் அருகில் வந்தவன்.. ” சேலையில் ரொம்ப அழகா இருக்கடி. ” அவளின் இறுக்க அணைத்து.. மென்மையான இதழ்முத்தத்துடன் கூறி அறையின் வெளியே சென்றுவிட்டான்.

Advertisement

    இவன் வேற ஆவுனா கட்டிபிடித்து..  நான் அதை உணர்ந்து! அனுபவிக்கும் முன்ன ஒடிடுவான். அடுத்து இந்த மாதிரிபண்ண.. அப்ப இருக்குடா உனக்கு. செல்லமாக திட்டிக்கொண்டே

   ‘ மெரூன் வண்ண ஆங்காங்கே பாசிகள் இருக்கும் டாப், சிவப்பு வண்ண பேன்ட், கீர்ம் கலர் அதில் சிவப்பு, மெரூன் பூநூல் வேலை பாடு செய்த ஷால். ‘

   அதை ஒருபக்கமாக பின் செய்து.. தலைமாற்றி சிவிக் கொள்ள. அணிந்திருந்த நகைகளை கழட்டி எடுத்து வைத்துக் கொண்டுயிருக்க.. அப்போது வேந்தன் கதவை தட்ட அவனுக்கு கதவு திறந்துவிட அவன் தன்னவளை பார்த்தான்.

Advertisement

   அரசி சுடிக்கான வளையல்தோடு பேக் முன் பக்கத்தில் இருக்கு. ” கூறிவிட்டு..

   தன் உடையை எடுத்துக் கொண்டு குளியலறை சென்றுவிட்டான். அவளும் சிவப்பு வண்ணத்தில் டிசைனர் தோடும், இரண்டு வளையலும், வாட்ச் இருந்தது.

   இரண்டு வளையலை பார்த்து.. ‘ சுடிக்கு நான் இப்படிதான் போட பிடிக்கும் என்று.. எப்ப தனுமாமா இதெல்லாம் எண்ணி எடுத்து வைத்த?. ‘ ஆனந்த புன்னகையுடன்!.. நினைத்திருந்தவள்.. கதவு திறக்கும் சத்தம் கேட்டதும்..

   அவனின் நிலையை பார்க்காமல் முகத்தை மட்டும் பார்த்து அவனை சட்டென்று கட்டிக்கொள்ள.. ஏதோ நினைப்பில் வந்த அவனோ எதிர்பாராத அணைப்பில் தடுமாறி  கட்டியில் அவன்விழ.. பனியன் மட்டும் அணிந்த அவனின் மார்பில் விழுந்தால் அவனின் அரசி.

   இருவரின் இதயமும் வேகமாக துடித்தது. அவனின் மார்பில் நீண்ட நேரம் இருந்துயிருக்கிறாள்.. ஆனால் அவனின் இந்நிலை, அதில் உணரும் கதகதப்பு அவளை ஏதோ செய்தது. அவனிற்கோ இன்னும் மோசம் அவளை பார்க்ககூட முடியாத நிலை. இருந்தும் கண்கள் பார்க்க தூண்ட.. அவனின் கண்ணிற்கு முதலில் விருந்தாக  தெரிந்தது அவனிற்கான மச்சம்.. அவளை இறுக்கி அணைத்து மச்சத்திற்கு முத்தம் வைக்க சென்ற நொடி அவனின் போன்  சத்தம் விடாமல் கேட்க.. அப்போதுதான் தன்நிலைக்கு வந்தான்.

    வேந்தா என்ன பண்ணுற?. முத்தம் மட்டும் கொடுத்துயிருந்த அவ்வளவுதான் முயல்குட்டி நம்மள இந்நேரம் என்ன பண்ணியிருப்பாளோ?. அவ ஏற்கனவே ஒருலெவலா சுத்துறா.. அடியும் கிடைக்கலாம்?. இல்ல அதிரடியும் நடக்கலாம். தப்பித்துவிடு வேந்தா. அவளை பார்க்காமலே அவளை பக்கவாட்டியில் படுக்க வைத்தவன்..

   முன் தன் தோளில் இருந்த தூண்டை மெத்தையிலிருந்து எடுத்து போர்த்திக் கொண்டு. ” ஓய் முயல்குட்டி!. மாமா என்ன மாதிரி வரேனு கூட பார்க்காம அப்படியே வந்து கட்டிபிடிக்கிற. ”

     தன்னவனின் கேள்வியில் நிகழ்காலம் உணர்ந்த அவளும்.. படுத்தபடியே அவனை முறைத்தவள்.. ” இப்படி வருவருவீங்கனு.. நான் என்ன கனவா கண்டேன்?. ” அவனை பார்க்கவில்லை.. ஆனால் பார்த்தவள் போல்.. ” ஆனாலும் தனுமாமா உங்க.. ”

   அவள் ஏதோ இடக்காக கூற வருகிறாள் என்பதை.. அவள் முகத்தில் அறிந்து எழுந்துவிட்டான்.

   ” முயல்குட்டி ஏதாவது தேவையில்லாம பேசிட்டுயிருக்காம.. ரெஸ்ட் ரூம் போய்ட்டு கொஞ்சம் பிரஷ் ஆகிட்டுவா. இன்னும் ஐந்தே நிமிடத்தில் கிளம்பனும். ” அவளை இழுத்து நிற்க வைத்து.. தலையில் செல்லமாக கொட்டி கூறி.. பாத்ரூம் அனுப்பிவைத்தான்.

    போடா.. என சத்தமில்லாமல் வாயசைத்து உள்சென்றாள். அவனும் சத்தமில்லா போடி கூறிவிட்டு.. டேமேஜ் ஆகியிருந்த சட்டையை வைத்து விட்டு..   ‘ நீலநிற ஜீன்ஸ், அடர்சாம்பல் நிற சட்டை அணிந்தான். ‘

   திலகன் கால் செய்திருக்க.. அவனுக்கு மெசேஜ் அனுப்பிட்டு.. அவளின் சேலையை மடித்தும், அனைத்தும் எடுத்து வைத்துவிட்டு கிளம்ப.. அவளும் கிளம்பி இருவரும் விமானநிலையும் சென்று.. பெங்களூர் சொல்லும் விமானத்தில் பறந்து கொண்டுயிருந்தனர்.

 

    விமானத்தில் மூவர் இருக்கையில் இருவர் மட்டும் தான் இருந்தனர். அரசி ஐன்னலில் சாய்ந்து.. அவளின் கையை பிடித்தபடி பேசுபவனை பார்த்துக் கொண்டுயிருக்க.. அவளின் பார்வை அவனை வெக்கம்பட வைத்தது. ஏனெனில் அவளின் பார்வை முழுவதும் அவனின் கண்கள், மற்றும் இதழின் மீது என மாற்றி மாற்றி பயணம் செய்தது.

   ” ஏன்டி இப்படி பார்க்குற?. “

    பெருமுச்சு ஒன்றை வெளிபடுத்தி.. ” ம்.. நீங்க சொல்வதை கேட்க கேட்க.. இப்ப பார்க்க மட்டும் தானே முடியும் அதான். ”

    ஏன் கட்டிபிடிச்சுக்கோ. வேற என்ன பண்ணணுமா என் முயல்குட்டிக்கு ?. ” கண்ணில் கள்ளமும்.. வார்த்தையில் புன்னகையுமாக கேட்க..

   வேற என்னவா?. ” அவனை பட்டும்படாமல் தோள்சாய்ந்து.. ” எனக்கு இப்ப அழனும் போல இருக்கு தனு. ”

    ஏன்டி?. என்பது போல அவளை முகம்சாய்ந்து பார்க்க..

     என் பிறந்தநாள் அன்னைக்கு தான்.. நான் உங்களுக்கு மனம் விரும்பியவளாக இருந்தவ.. மனைவியா மனதில் பதிந்து.. அதன்பின்ன சந்தோஷமா!. குதுகலமா பெங்களூரில் வேலைக்கு சேர தனியா போனீங்க. அந்த சந்தோஷ நினைவ.. இன்னும் மிக சிறப்பாக்க.. இப்ப அதேநாளில் இரண்டுபோரும் அங்க போறோம்.

    இதைகேட்டா உங்க முயல்குட்டி என்ன பண்ணுவா சொல்லுங்க?. முதலில் தனுமாமா கட்டிக்கிட்டு அழுவா!.. பின்ன அவனுக்கு ஸ்விட்டா முத்தம் கொடுப்பா. இப்ப இங்க பண்ணமுடியும்மா?. ம்.. அழுதா நீ திட்டுவ. முத்தமும் கொடுக்க முடியாது. அதான் உன்னை பார்த்து..  இரண்டையும் கட்டுப்படுத்த பார்க்கிறேன். ” எவ்வளவு கட்டுபடுத்தியும் அவளின் கண்கள் கலங்கியது.

     என்னிடம் இப்ப போறத முன்னாடியே.. இல்ல காலையில் கிளம்ப முன்ன சொல்லியிருக்கலாம். அவ்வளவு சந்தோஷமா இருக்கு தனு. எனக்கு எனக்கு இப்ப உன்ன இறுக்க கட்டிபிடிச்சு மார்பில் சாய்ந்து நம்ம ஊஞ்சலில் உட்காரனும் போல இருக்கு. ” தன்னவனின் தோளில் முத்தம் வைத்து சாய்ந்துக் கொண்டாள்.

    அவளின் தலையில் தலைசாய்த்து.. ” முயல்குட்டிக்கு சஸ்பென்ஸா!. இருக்கனும் நினைச்சேன். இன்னைக்கு உனக்கு என்ன தோனுதோ.. மொத்தமா வீட்டல போய் எவ்வளவு நேரம் வேண்டுமோ.. மாமாவ கட்டிபிடித்து என்ன பண்ணதோனுதோ?. பண்ணு. நான் உன்னைய எதுக்கும் தடுக்கமாட்டேன். சரியா. ”

   ம்.. நிஜம்மா. ” கையில் அழுத்தம் கொடுத்து.. ” ம்ம்.. ” கூற.

   அரசி புன்னகையுடன் நிமிரிந்து.. அவனின் கைகளை கிள்ள.

   ” முயல்குட்டி.. இத நான் எதிர்பார்க்கல டி. ” கையை தேய்த்தவாறு கூற.. ” பின்ன கொஞ்சுவேனு மட்டும் நினைத்திங்களா. நடுவில் இதுபோல நிறைய கிடைக்கும். ”

    அப்படியா!. என்பது போல பார்க்க.. ஆம்!. என தலையாட்ட..

   ” பரவாயில்ல கொஞ்சுவதற்கு நடுவில் தானே.. ம்.. இது இன்னும் சூப்பர்!. சும்மா ஒருவேலையை மட்டும் பண்ணினா நல்லாயிருக்குமா.. எனக்கு டபுள்ஓகே. ” புன்னகையுடன் கூற..

   சிரிப்பும் முறைப்புமாக அவள்.. அவனை பார்க்க.. அவனோ அவளின் இடைபிடித்து தன் பக்கம் இழுத்து.. தரையிறங்கும் வரை.. அவளை தோளில் சாய்த்துக்கொண்டு..  அவளின் கல்லூரி நாட்களை பற்றி பேசியபடி வந்தனர்.

 

    பெங்களூர்.. இதமான குளிர்த்த காற்றுடன் சேர்ந்த மண்வாசனை.. எழிலரியின் மனதையும், உடலையும்  சிலிர்க்க வைக்க.. தன்னவனின் கையை இறுக்க பற்றிக்கொண்டாள்.

    இருவரும் நாள் முழுவதற்கு என்று முன்பே புக் செய்த காரில்கெம்ப்போர்ட் சிவன் சிலை, கப்பன்பார்க், லால்பாக் பொட்டானிக்கல் கார்டன், MG ரோடுதன்னவளுடன் கைகோர்த்து சிலஇடங்களை  சுற்றி பார்த்தும்.. அவளின் சோர்வு வராமல் இருக்க. நடுநடுவே உணவு வாங்கிக் கொடுத்து பார்த்துக் கொண்டான்.

    கருடா மாலில் ஷாப்பிங் செய்து கொண்டுயிருந்தனர். ” தனு இந்த சாட் எல்லாம் போய் டிரையல் பார்த்து வா. ” ஐந்து சட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டு அவனிடம் கொடுத்தாள்.

    அவளை முறைத்தவன்.. ” அரசி என்னால இதுக்குமேல முடியாது. இத்தோடு சேர்த்து 30 டீசேட், சட்டை . சரி நிறைய எடுத்தியானா?. அதுவும் இல்ல. 3 சட்டை, 3 டீசேட் எடுத்து வைத்துயிருக்க. என்னைய மாதிரி எடுத்தோமா.. பார்த்தோமா.. வாங்கி வைத்தோமானு இல்லாம. என்னைய சட்டை மட்டும் போட்டே டையடு ஆகிட்ட. இதுதான் கடைசி. சரியா. “

   சரி என தலையசைத்தவள்.. மேலும் உடையை பார்க்க ஆரம்பிக்க.. வேந்தா உன்னைய காப்பாத்த முடியாது போலவே.. அவளை பாவமாக பார்த்துவிட்டு சென்றான்.

    பார்த்துக் கொண்டுயிருந்தவளின் கண்கள் சுற்றி பார்வையிடும் போது ஒரு இடத்தில் நிலைகுத்தி நின்றது.

   அடர்நீலநிற ஜீன்ஸ், மஞ்சள்நிற டாப், சிறிய சுருளில் விரித்த கூந்தல், கேசுவல் சூ அணிந்த அழகான யுவதியாக நந்தினி.. அவளின் முன்பாக இருந்த ஆண் ஒருவருடன் சிரித்து பேசியபடி நின்றிருந்தாள்

    அரசி இதெல்லாம் சரியா இருக்கு. ” அவள் அதனை வாங்கி அதிலிருந்து ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.. அவளை அவன் முறைக்க..

  அதனை புன்னகையுடன் புறக்கணித்தவள்.. ” தனு நமக்கு சைடா நந்தினி நிக்குறாங்க.. கூடவே ஒரு பையனோட. ”

   ஜீன்ஸ் பார்த்திருந்தவன்.. அப்படியா!. என்பது போல ஒரு தடவை அரசியை பார்த்து.. பின் தலையசைத்து தன் வேலையை தொடந்தான்.

   அவனின் அமைதியில் கடுப்பாகி.. ” தனு நான் சொல்லிட்டுயிருக்கேன். ”

   உடைகளை  பார்த்தவாறே.. ” என்ன பதில் சொல்லனும் உனக்கு?. வார இறுதியில் இதுபோல ஆண் நண்பர்களுடன் வருவது.. இங்க சாதாரணமான விஷயம் தானேடி. இதில் தப்பா நினைக்க ஒன்னும் இல்ல. ”

   அவனை கையில் கிள்ளி.. ” .. அப்ப நீயும்.. ”

   ஏய் அரசிம்மா.. இந்த மாலிற்கு வருவது இதுதான் இரண்டாவது தடவ. ”

    அவனை முறைத்தவள்.. ” எனக்கு உன்ன பார்க்க முடியலையேனு..  முழுநேரமும் வேலைய மட்டும் செய்தவன். என்னைய பார்த்து.. நீ இந்த கேள்வி கேட்குற?. இதுதானே.. நீ சொல்ல வர தனுபோற எல்லா இடத்திலும் இதையே சொல்லி என்ன கடுப்பேற்றிக் கொண்டுயிருக்க. சரிவிடு உன்னைய அப்புறம் பார்த்துகிறேன்.

   நான் என்ன சொல்ல வந்தனா.. அவங்க பேசியபோது இருந்த முகத்தை பார்த்தா பிரண்ட்ஸ் கிட்ட பேசுவது போல இல்ல. அதான். ” அவள் கூறியதை கேட்டு புன்னகையுடன் பார்த்திருந்தவன்..

    கடைசியில் கூறியதை பற்றி எதுவும் கூறாமல்.. துணிகளை வாங்கி விட்டு.. அவளை அழைத்துக்கொண்டு அந்த இடத்தையும் , மக்களையும் பார்த்தவாறு வேறு நிகழ்வுகளை பேசியபடி.. உணவு வாங்கிக் கொண்டு ஓரமாக இருக்கும் டேபிளில் அமர்ந்தார்கள்.

 

   அவளிற்கு ஊட்டிவிட்டவாறே.. ” அரசி.. கணேஷ் மாமா.. இன்னும் அவர சுற்றி இருப்பவர்களுக்கு.. காதல் கல்யாணம் பண்ணுவதை பெரிய குற்றமா நினைப்பாங்க. ஒரு காலத்திலும் கணேஷ் மாமா.. காதல் கல்யாணத்தை ஏத்துக்கமாட்டார்அவங்களுக்கு சொத்து, மரியாதை கிடைக்க வாய்பேயில்ல. இதெல்லாம் நந்தினிக்கு நல்லாவே தெரியும். அதனால நந்தினி கண்டிப்பா காதல் பண்ண வாய்ப்பே இல்ல. அப்படியே காதல் கல்யாணம் செய்தாலும்..  அதல ஆதாயம் இல்லாம இருக்காது. ” அவள் யோசனையுடன் இருந்தாள்..

    அரசி அப்படியே நந்தினி காதல் செய்து.. கல்யாணம் பண்ணினா அதனால வர சந்தோஷமும், பிரச்சனையும் அவங்களோடது டி. அதபத்தி நீ  யோசிக்க தேவையில்லை.  முயல்குட்டி நீ இவ்வளவு நேரமும்.. சப்பாத்தி கால்வாசி தான் வாங்கியிருக்க. ”

   போதும் தனு வயிறு ஒருமாதிரி இருக்கு. ” முகம் சோர்த்து கூற..

   சரி என தலையசைத்தவன். அவளின் விரிந்த கூத்தலை தொட்டு பார்க்க.. ” அரசிம்மா முடி இன்னும் காயாம இருக்கு.. டிரையர் வாங்கிட்டு வரவா?. காய வச்சுகிறியா?. ” கூடவே அவளின் கழுத்து, தலையையும் கை வைத்து பார்த்தான்.

     பார்க்கில் இருந்தபோது வந்த மழையில்.. சொல்ல சொல்ல கேட்காமல்.. மரத்தின் கீழ் நின்று கொண்டுயிருந்தார்கள். உடையை மாற்றிவிட்டனர். ஆனால் அவளின் கூத்தல் மட்டும் ஈரமாக இருந்தது. அவளுக்கு பெங்களூரின் புதிதான தட்பநிலைக்கு.. தலைவலி, காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது. அதைவிட வேறு ஒன்றை நினைத்து பயம். எல்லாம் ஒன்றாக வந்தால்?. ‘

   இல்ல தனு வாங்கிட்டு வந்து.. காய வைக்க லேட்டாயிடும். நான் காரில் போகும் போது நல்லா தூண்டு வைத்து துடைத்தா போதும். ”

   சரி.. நீ ரெஸ்ட் ரூம் போய்யிட்டு வா. ” அவளின் பேக்கை கொடுக்க..

   அவளும் சென்றபின்.. அனைத்து பொருட்களை சரியாக எடுத்து வைத்துவிட்டு.. காரை மாலின் முன் வரச்சொல்லி.. தன்னவள் வந்தவுடன் அங்கிருந்து கிளம்பினார்கள்.

   இவர்கள் யாரை பற்றி பேசினார்களோ அவள் நந்தினி சரியாக வேந்தன் எழிலரசிக்கு உணவை ஊட்டிமுடித்து.. அவளின் கூந்தல், உடல்நிலை பார்த்துக் கொண்டுயிருந்த போது.. அவளும் ஓரமாக உட்காரலாம் என வந்தபோது இவர்களை பார்த்துவிட்டாள். பார்த்தவுடன் அதிர்ந்து..

    பின் இவர்கள்தானா?.. என்று உறுதி செய்துவிட்டு அவ்விடத்தில் இருந்து சென்று.. ” வசு.. உங்க அண்ணா, எழிலரசி பெங்களூர் வந்துயிருங்காளா என்ன?. ”

    ம்.. ” கூறி அமைதியாக இருந்தாள்.

    ” என்ன வசு அமைதியா இருக்க?. ஒன்னும் பிரச்சனை இல்லையே.?.  ” வருத்தம்போல கேட்க.

   பிரச்சனை ஒன்னும் இல்ல அண்ணி. என்ன சொல்றதுனு தெரியல?. அவங்களுக்கு இன்னைக்கு பிறந்தநாள்அதனால அண்ணா வீட்டில் சொல்லிட்டுதான் அங்க வந்துயிருக்காங்க. ஆனா அண்ணா இங்கு இருந்து செலப்ரேட் பண்ணியிருக்கலாம். அங்க வந்துயிருப்பது கொஞ்சம் அதிகமா இருக்கு. எனக்கு சுத்தமா பிடிக்கல அதான். ”

   ம்.. இது கொஞ்சம் அதிகம்தான். சரி வசு நான் பிறகு கால் பண்ணுறேன். ” பேசியை வைத்தவள்.. அவர்களின் நெருக்கம் அவளை பலவாறு சிந்திக்க வைத்தது.

 

    வேந்தன் நினைத்து பயந்ததும்!. நடந்துவிட்டது.

     மாலில் இருக்கும்போதே அவளின் பீரியட்ஸ் வருவதற்கான அறிகுறி எழிலரசிக்கு தெரிய.. அவள் சோர்வு ஆரம்பிக்க..  சரியாக தலை துவட்டாமல் இருக்கபோய்.. இவ்வளவு நேரமும் இருந்த ஈரகூந்தல், அதனுடையே மால்கடைகளில் இருக்கும் குளிர் என அவர்கள் திருச்சி விமானம் ஏறும் முன்பே அவளிற்கு காய்ச்சல் அடிக்க ஆரம்பித்துவிட்டது.

   அதனால விமானம் கிளம்பும் முன் வேந்தன்.. இன்பா, திலகன், வினோத் மூவரும் கால் செய்து யாரேனும் உடனடியாக கிளம்பி திருச்சிக்கு வரக்கூறிவிட்டான்.

    திருச்சியில் அவர்கள் இறங்கும் பொழுது.. அவளிற்கு வயிற்றுவலி, இடுப்புவலியும் ஆரம்பித்துவிட.. அவளை அணைத்தவாறே..  முறைத்துக் கொண்டே வந்தான்.

    பீரியட்ஸ் இன்று இல்லை நாளை வந்துவிடும்.. பின் ஒருநாள் மழையில் நனையலாம்.. காய்ச்சல், பீரியடஸ் இரண்டும் வந்தால் உன்னால் தாங்கமுடியாது என்று.. எவ்வளவோ சொன்னான்.

    அவளோபோ தனு.. இங்கேயும், அங்கேயும் ஒன்னா?. இது என் பிறந்தநாள் வேண்டுகோள். ” அவனை கட்டிக் கொண்டு நின்றாள்

   சிறிது நேரம் மழையில் நின்றுவிட்டு.. குடையை பிடித்தவாறே வந்து காரில் ஏறிவிட்டார்கள். மழைகாற்று, குளிர்காற்று இரண்டும் சேர்ந்து காய்ச்சல் வந்துவிட்டது. விமானத்தில் ஈரகூந்தலை அவன் நன்றாக துவட்டி விட்டான்.

    இன்பாவும், திலகனும் பஸ்சில் வருவதாக கூறினார்கள். அவர்களின் நேரம் திருச்சியிலும் நல்லமழை. விமான நிலையத்தில் நின்ற காரில் அவர்களுடைய காருக்கு சென்று.. இருவரும் வர இன்னும் சில நிமிடங்கள் இருக்க.. காரில் பின்புறத்தில் அமர்ந்தார்கள்.

    அரசி அவனை இறுக இறுக கட்டிக்கொண்டாள். ஏன் என உணர்ந்தவன்.. அவளின் உடல்குளிர்ந்து நடுங்க ஆரம்பித்தது. அவளை படுக்க வைத்து.. காரின் ஹிட்டர் ஆன் செய்ய.. அது வேலை செய்யவில்லை. அவனிற்கு ஒன்றும் புரியவில்லை.

    திலகனிற்கு கால் செய்ய.. ” திலகா கார் ஹீட்டர் வேலை செய்யலையா?. ”

   ” ஆஆமாம் டா. நான் சொல்ல மறுந்துடேன். ” வேந்தனிற்கு சுள் என கோபம் வந்தது.

   ” ஏன்டா.. காரை எதுக்காக டிராவஸ் விட்டுயிருக்கு.. பயன்படுத்திட்டு இருப்ப, எல்லா சர்வீஸ்சும் சரியான நேரத்திற்கு பண்ணமுடியும். உடனே எப்ப எங்க போனாலும் எந்த பிரச்சனையும் வராதுனு தானே. இப்ப பெங்களூர் போயிட்டு வரும்போது அரசிக்கு எப்படி வேண்டுனாலும் இருக்கு தெரியுமில்ல.. இதை  சொல்லிட்டு.. வேற காரரை தானே கொடுத்துயிருக்கனும். இதைகூட சரியா பண்ணாம.. நீ என்னடா டிராவஸ் நடத்திட்டு இருக்க. “  அவளின் நடுக்கம் அவனை நண்பனை சற்று அதிகமாகவே கோபத்துடன் கேட்டுவிட்டான்.

    ” தனுதனு” மெல்லிய முனகல் தன்னவளிடமிருந்து வர…

   ” டேய் அரசிக்கு பீரியட்ஸ்யோட காய்ச்சலும் அடிக்குது. நீங்க இறக்கியவுடன் கால் பண்ணுங்க. சீக்கிரம் வாங்க. ” அப்படியே கவலையுடன் கூறி நண்பனிடமே ஆறுதல் தேடினான்.

     உடனே வைத்தவன்.. வேகமாக சட்டை பட்டனை அவிழ்த்து விட்டு.. தன்னுள் புதைத்துக் கொண்டான். அவனவளோ எதையும் உணரவில்லை. அவனை இறுக்க அணைத்து மார்பில் சூட்டில் இதம் பெற.. அவனின் முதுகில் தன் வலியை அவனுக்கு உணர்த்தினாள்.

   அவனிற்கு தான் ஆச்சரியம், அதிர்வாக இருந்தது. மூன்று மணிநேரம் முன் இருந்தவளா?. இவள் என்பது போல இருந்தாள். காலையில்  இதே மாதிரி சூழ்நிலையில் எப்படியிருந்தோம்?. இப்போது?. 

    அவளை மடியின் மீது  அமர்த்தி.. மெல்லிய சால்வையை அவளை சுற்றி போட்டுக்கொண்டவன் அவளைர தன்னுள் வலிமையாகவே புதைத்துக் கொண்டான். இதுக்கே இப்படியென்றால்.. அவளிற்கு  முழுதாக வலி எடுக்கும் போது எப்படியிருப்பாளோ?. என்ற பயம்வர.. பின் தன் போனை எடுத்து சில தகவல்களை பார்த்து மனதில் பதிய வைத்துக் கொண்டான். 

    சிறிது நேரத்தில் கதவு கண்ணாடி தட்டும் சத்தம் கேட்டு பார்க்க.. இன்பா தெரிந்தான். காரை அன்லாக் செய்ய.. முகம் பதட்டத்துடன் முன்பக்கமாக உள் உட்கார்ந்தவன்.. தங்கையை பார்த்து பயந்தே விட்டான்.

   ” மாமா.. ஹோட்டல் புக் பண்ணி தானே இருக்கு.. அங்க போயிருக்க வேண்டியது தானே?. ” இருவரும்  இந்நிலையில் இருந்தால் எழிலரசியின் காய்ச்சல்.. வேந்தனிற்கும் பரவிவிட்டால்.

    ” வேண்டானுதான்  போகல இன்பா. நான் பீரியட்ஸ் வந்தா அரசி காரில் வரமுடியாது என்று.. ஏதாவது சொன்னா தேவைபடும் என்று தான் ரூம்மகாலி பண்ணாம இருந்தது.  காய்ச்சல் வந்து கண்ணே திறக்கமாட்டேங்கறா. வீட்டுக்கு ஒருமணி நேரத்தில் போய்விடுவோம்.  அவளுக்கு ஒன்னும் தெரியாது. அதான். இந்த நிலையில் அரசி வீட்டில் இருந்தாதான் நல்லது. சரி திலகன் எங்க?. “

    ” மெடிக்கல் ஷாப் போய்யிருக்காங்க. “வேந்தன் கூறியதை கேட்டு சரியென தலையசைத்து.. இன்பா வண்டியை எடுத்தான். 

  வேந்தனும் சரி என தலையசைத்து.. அரசியின் நடுக்கம் குறைந்திருந்துப்பதை உணர்ந்து.. தன்னவளை மடியில் சால்வை மட்டும் போட்டு படுக்க வைத்து.. அவனின் சட்டையை சரி செய்துக் கொண்டான்.

    கார் திலகன் கூறிய இடத்தின் முன்நிற்க.. அருகில் வந்தவன்.. ” வேந்தா ஏதாவது எழில் குடிப்பாங்களா?.. உனக்கு பாதாம்பால் வாங்கி வரேன்.. அத குடிச்சுட்டு இந்த மாத்திரைய போட்டுக்க. ஆனந்த்திடம் கேட்டுதான் வாங்கினேன். உனக்கு காய்ச்சல் வராம இருக்கும். ” திலகனை முறைக்க..

   ” டேய் நீ இப்படி.. அவங்க கூட உட்கார்ந்தா உனக்கும் வர வாய்பபு இருக்கு. பின்ன உனக்கு காய்ச்சல் வந்தா.. இதெல்லாம் முன்னமே தெரியாத.. ஏன் எதுவும் கொடுக்கலனு?. அரசி எங்களல தான் திட்டுவாங்க. உன்னிடம் திட்டு வாங்கியது பத்தாதுனு.. அவங்களிடமும் நான் வாங்கனுமா?. ”

     திலகன் கூறுவது மிகவும் சரி என்பதால்.. ” அரசிக்கு இப்ப எதுவும் வேண்டாம்.. வீட்டுக்கு போய்  கொடுத்துக்கலாம். மூனுபேருக்கு இப்ப குடிப்பது போல.. இதில தனியா வாங்கிக்கோ. ” பேக்கில் இருந்த பிளாஸ்க்கை கொடுத்தான். சரி என தலையசைத்து திலகன் சென்று வாங்கி வந்ததை குடித்து முடித்து.. மாத்திரை போட்டுக் கொண்டான். பின் கார் திலகன் கையில் சீறிபாய்ந்து எழிலரசியின் வீட்டின் முன் நின்றது.

    வீட்டில் உள்ளவர்களில் அருணாச்சலமும், லட்சுமியும் தொழில்முறையில் நண்பரின்  மகள் திருமணத்திற்கும், தாத்தா, பாட்டி பெரியமகன் வீட்டிலும் இருப்பதால்.. யாருக்கும் அரசியின் காய்ச்சல் பற்றி தெரிவிக்கபடவில்லை.

   தன்னவளை அளிக்க கொண்டவன் அவளின் அறையில் படுக்க வைத்தான். இன்பா, திலகனும் அவர்களின் பொருட்களை எடுத்துவைத்து அவன் நிலை உணர்ந்து காலை பார்க்கலாம் என கூறி.. திலகன் தன் காரிலேயே வீட்டிற்கும், இன்பா அறைக்கும் சென்றுவிட்டான்.

     வேந்தன் அவளிற்கு தேவையானதை  பாத்ரூம்மிலும், அறையிலும் எடுத்து வைத்துவிட்டு.. ” முயல்குட்டி, முயல்குட்டி ” அவளின் கன்னம் தட்டி எழுப்ப.. அவளும் மிகவும் கடினப்பட்டு கண்திறக்க.. ” தனு வீட்டிற்கு வந்துட்டோமா?. ”

     ” ம்.. வந்துட்டோம். நீ பாத்ரூம் போய்யிட்டு நாப்கின், டிரஸ்  மாத்திக்கோ. உன்னாலேயே இதெல்லாம் பண்ண முடியும்தானே?.. “

    முடியும் என தலையசைக்க.. அவளை பாத்ரூம் முன் விட அவள் உள் சென்றதும்.. கதவை தாள் போடாமல் சாற்றி..

    கதவின் அருகில் நின்றுக்கொண்டான். அந்த இடத்திலேயே தன் உடையை மாற்றிவிட்டு.. பத்து நிமிடங்கள் பின் வந்தவளை கட்டியில் அமர வைக்க.. பாலை குடிக்க வைத்து சற்று நேரம் அமரும்படி கூறி விட்டு.. அவனும் தன்னை சுத்தம் படுத்திவிட்டு வந்தான்.

    ஊஞ்சலில் தனுமாமா மார்பணைப்பில் புதைந்தும், மடியில் அடங்கியும் இருக்க வேண்டும் என்று தன்னவள் காலையில் கூறிய ஆசையையும் நிறைவேற்றி.. தன் அரசியின் பிறந்தநாளை பல முத்தங்களை அவளிற்கு வாரியிறைத்து கொண்டாடி முடித்தான். 

     

    

   

   

   

    

    

    

   

  

   

   

    

  

   

    

  

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!