Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 30.1

 

நாம் 30(1)

 



Advertisement

   அத்த.. அத்த எங்கயிருக்கிங்க?.. எங்க யாரையும் காணோம்?.. ”

   தாழ்பாள் போடாமல்.. சாற்றியிருந்த கதவை திறந்து வந்து.. அழைத்தும், வாய்விட்டு கூறியவாறு மாடிக்கு சென்று எழிலரசியின் அறை கதவை திறக்க.. ஒரு நிமிடம் அதிர்ச்சியுடன் பார்த்து நின்றாள் மேகா.

 

Advertisement

    எழிலரசி இரவில் நடுநடுவே வலியில் கண்விழித்தும், முனங்கியும், அழுதும் இருக்க.. வேந்தன் தன்னவளை அணைத்தபடியே.. விளக்கெண்ணெயை அவளின் அடிவயிற்றில் தேய்த்து விட்டு.. அவள் முனங்கும் நேரம் எல்லாம் கைகளால் மசாஜ் செய்தபடியும் இருந்தான். இருவருமே அதிகாலைக்கு மேல்தான் ஆழந்த உறக்கத்திற்கு சென்றனர். ஆனால் வேந்தன் ஒருபக்கமாக படுத்தபடி.. அவனின் கையை மட்டும் தன்னவளின் வயிற்றில் இருந்ததை எடுக்கவில்லை. அரசியும் தன்னவனின் தோள்வளையில் நேராக அவனிடம் மிகநெருங்கி படுத்துயிருந்தாள்யாரும் வரமாட்டார்கள் என்பதால் கதவு திறந்துபடியே இருக்க..

Advertisement

    எழிலரசி உறங்கிக் கொண்டுயிருந்தால் எழுப்ப வேண்டும்.. என  நினைத்து உள்ளே வந்தவள்.. இவர்களின் இந்நிலையை பார்த்து அதிர்வு நிலைக்கு சென்று விட்டாள்.

 

     மேகா.. தன் அம்மா தேவகி, சித்தி ராதா போதனையில்.. இனி எழிலரசி இருக்கும் நாட்களில்.. அடிக்கடி வந்து தன் உரிமையை நிலைநாட்ட விரும்பியும்.. விடுமுறை என்பதால் இன்பா வீட்டில் இருப்பான்.. அவனுடனும் பேசலாம் என எண்ணி அவள் வர.. யாரும் வீட்டில் காண்னோம் என்பதே ஏமாற்றம்.. இதில் எழிலரசியின் அறையில் வேந்தன் தன்னவளின் வயிற்றில் கைவைத்தவாறு படுத்துயிருந்ததை பார்த்தவுடன் முதலில் கூச்சம்.. பின் கோபம், ஆத்திரம் என நிலையில் வெளியே வந்துவிட்டாள்.

Advertisement

    ஜார்ஜரை எடுக்க மேலே தன் அறையில் எடுக்க வந்த இன்பா.. மேகா வெளிவரவும்.. அவன் தன்அறையில் இருந்து போன் பேசியபடி வெளிவரவும் சரியாக இருந்தது. மேகாவை எதிர்பாராமல் அதுவும் தங்கையின் அறையில் இருந்து வெளிவருவதை பார்த்தவனும் ஒரு நொடி.. போனில் பேசுபவருடன் பேசவில்லை.

   அவளை ஏதற்கு வந்தாய்?. என்பது போல பார்வையை செலுத்திவிட்டு.. மீண்டும் பேச்சை தன் அறையினுள் சென்று தொடர்ந்தான்.

     அம்மா தேவை இல்லப்பா. மாமா இருக்காரு இல்ல. நாங்க பார்த்துக்குவோம். நீங்க அம்மாவோட மாப்பிள்ளை வீட்டிற்கு போயிட்டு.. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போயிட்டு பொறுமையாவே வாங்க. அம்மாவிடம் எதுவும் சொல்ல வேண்டாம்.. எங்கையும் போக வேண்டானு உங்களை அழைந்து வந்துவிடுவாங்க. ம்.. ம்.. சரிப்பா. வரும்போது பால்பன் மறக்காம வாங்கிட்டு வாங்க. எழில் கேட்பா. ம்.. சரிப்பா வைக்கிறேன். ”

    இன்பா முதலில் எழிலரசியை பார்க்க அறைக்கு சென்றான். இருவரின் நெற்றையும் தொட்டு பார்த்தான். தங்கையின் தற்போதை நிலை மற்றும் வேந்தனிற்கு காய்ச்சல் வரவில்லை என்பதை உறுதி செய்துவிட்டு, வெளிச்சம் தெரியாத அளவிற்கு திரையை முடியும், போர்வையை போர்த்திவிட்டு சத்தமில்லாமல் கதவை மூடிவிட்டு வந்தான்

   இந்நேரம் வரை மாடி ஹாலில் அமர்ந்திருந்த மேகாவிடம் கீழபோகலாம் என சைகை செய்துவிட்டு.. அவன் முன்னால் சொல்ல.. அவள் பின்னால் வந்தாள். நேராக சமையல் அறையினுள் நுழைந்தான். பால் எடுத்து வைத்துவிட்டு.. ” மேகா உனக்கு காபியா?. டீயா?. ”

   இதை கேட்டவளிற்கு  இத்தனை வருடத்தில் இதுகூட தெரியாத என?. கடுப்பாக இருந்தது. இதுவே எழிலரசி என்றால் ஆதி முதல் அந்தம் வரை தெரியும்.

   எனக்கு எதுவும் வேண்டாம் மாமா. வரும்போது தான் குடிச்சேன். ”

    அவளை ஒருபார்வை பார்த்தவன்.. எதுவும் கூறாமல் சரி என்பது போல பார்த்துவிட்டு  காபி போட ஆரம்பித்தான்.

   ” மாமாவும், அத்தையும் மதுரைக்கு போய்யிருக்காங்களா?. ”

   ம்ம்.. ” என தலையசைக்க.. 

   வாய திறந்து பதில் சொல்ல மாட்டாங்களோ. அவனிடம் வேறு எதுவும் கேட்காமல்.. சமைக்கலாம் என பிரிட்ஜ் திறக்க.. சாதாரணமாக பார்க்கிறாள் என நினைத்தவன்.. மாவு எடுத்து வைக்கவும்..

   ” மேகா.. சத்யா இன்னும் கொஞ்ச நேரத்தில் சாப்பாடு எடுத்துட்டு வந்துடுவா. ” காபியை ஆற்றிக்கொண்டே கூறினான்.

    சரி மாமா. ”

    சத்யா.. என கூறியதை கேட்டதும் அவளிற்கு கோபம் வந்தது. இன்பா ஏனோ இன்னொரு தங்கை போல பாவிப்பதால் சத்யாவை பிடிக்காது. சில சமயங்களில் ஒரு தங்கையே ஏன்டா?. என நினைப்பவள்.. சத்யாவை எவ்வாறு நினைப்பாள். தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு ஹாலில் வந்து அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தாள்.

   அங்கு வந்தவன்மேகா.. சத்தம் கம்மியா வைத்து பாரு. எழில் முழித்துக் கொள்வாள். ”

   அவங்க இரண்டுபேரும் படுத்துயிருக்கும் அழகை பார்த்தா.. அவ்வளவு சீக்கிரம் எழுந்துக்க வாய்ப்பே இல்ல. அதனால நான் சத்தம் குறைக்க வேண்டியதில்ல. ” அவங்க தூக்கும் லட்சணத்திற்கு எழுந்தா என்ன இப்போ?. என்னால குறைக்க முடியாது என மனதில் நினைத்தாள்.

    அவளை முறைத்துக்கொண்டே டிவியை ஆப் செய்துவிட்டு.. முன்பக்கம் போய் அமர்ந்துக்கொண்டான்.

   வேகமாக வெளியே வந்தவள்.. ” எதுக்கு இப்ப ஆப் செய்திங்க?. நான் இப்ப தப்பா சொல்லிட்டேன். அவங்க இரண்டுபேரும் நல்லா கட்டிபிடித்து தூங்குறாங்கஅதனால எழுத்துமாட்டாங்கனு சொன்னேன். ”

    அவங்க எப்படி வேண்டுனாலும் தூங்கட்டும் உனக்கு என்ன இப்ப?. ” அழுத்தமாக கூற..

   ம்.. மற்றவங்க எப்படி தூங்கினா?.  எனக்கு ஒன்னும் இல்ல. ஆனா இந்த வீட்டு பொண்ணு.. இவங்க இப்படி கல்யாணம் முன்பு தூங்கினா தப்பாதான் தோனுது. ”

    நீ எப்படி வேண்டும் என்றாலும் நினைத்துக்கொள். எனக்கு ஒன்னும் பிரச்சனையில்ல. எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று.. திருமணநிச்சியம் ஆனவங்களுக்கு தெரியும். ”

   .. எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என நிச்சியம் ஆனவங்களுக்கு தெரியும்மா?. அப்ப நாம்ம யாரு?. நமக்கு நிச்சியம் முடிந்து ஒருவருடத்திற்கு மேல ஆகபோகுது. என்னைய பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?. எப்ப பார்த்தாலும் கடை, மில் இல்லைனா எழில், எழில் தான். ”

    காபி கப்பை பக்கவாட்டில் வைத்தவன்… ” மேகா நமக்கு நிச்சியம் முடியல.. உன் ஜாதகத்திற்கு எதுவும்  பண்ணக்கூடாதுனு சொல்லிட்டாங்க. இரண்டு பேருக்கும் கல்யாணம் செய்யலாம் என்று பெரியவங்க.. பேசி தான் வைத்துயிருக்காங்க. அதனால நான் இதுநாள் வரை எப்படியிருந்தனோ.. அப்படிதான் கல்யாணம் முடியும் வரைக்கும் இருப்பேன். அதுவரைக்கும் உன்னை பற்றி என்ன தெரிய வேண்டுமோ அதை நான் தெரிந்துக் கொண்டா போதும்.

   பின்ன என்ன சொன்ன?. சரி உன்னைய பற்றி தெரியாதானு கேட்டியே.. அப்ப என்னை பற்றி உனக்கு நல்லாவே தெரியும் அப்படிதானே?. ”

   ஆம் என்பது போல தலையாட்ட..

    சிறிய எள்ளல் புன்னகையை காண்பித்து.. ” நீ என்னைய பற்றி தெரிந்த கொண்ட அழகதான் இப்ப பார்த்தேனே. உனக்கு என்னைய பற்றி தெரிந்துயிருந்தா.. இப்ப நீ எழிலையும், மாமாவையும் பற்றி தப்பா பேசியிருக்க மாட்ட. சரி முதல்தடவை பார்த்தப்ப உனக்கு தப்பாவே தோன்றியதாகவே இருக்கட்டும். ஆனா நான் எழில் அறைக்கு போய் ஐந்துநிமிடம் கழித்து தானே வந்தேன். அதன்பிறகு நீ அவங்களை பற்றி தப்பாவும், எழில பற்றி குறையும் என்னிடமே சொல்லுற. நீ என்னை தெரிந்து வைத்துயிருந்தா?. என்னை நீ கேட்கும் முதல்கேள்வி.. “

     எழிலுக்கு உடம்பு முடியலையா?. என்று தான் கேட்டுயிருப்ப. இது ஒன்னு போதும்.. நீ என்னையபற்றி தெரிந்த கொண்ட விதத்தை.. நான் புரிந்துக்கொள்ள. “

   அதனால நீ நினைப்பது போல உனக்கு டீ பிடிக்கும்மா?. காபி பிடிக்குமா?. இந்த மாதிரி தெரிந்து கொள்வது கல்யாணத்திற்கு முக்கியமில்ல. நான் மனசுல என்ன நினைக்கிறேன்.. என் மனநிலை என்ன?. அதன்படி கொஞ்சமாவது நீ நடந்து கொள்வதுதான் முக்கியம். ஆனா நான் நீ என்ன நினைக்கிற?. இப்ப என்ன நினைத்து வந்துயிருக்க என்பது கூட எனக்கு தெரியும். ”

    அவன் கூறியதில் வருங்கால கணவனின் மனநிலையை கொஞ்சமாவது புரிந்து.. அவனிற்கு ஆறுதலாக இருக்க வேண்டிய நேரத்தில் இருக்க வேண்டும் என்பதையும்.. மற்றது அனைத்தும் விட்டாள். எழிலை விட தான் இந்த வீட்டிற்கு முக்கியமானவள் என்று காண்பிக்க..

   ” .. அப்படியா. நான் எதுக்கு வந்துயிருக்கேனு உங்களுக்கு தெரியும்?. ”

    ஆம்என இன்பா தலையாட்ட.. ” சரி நான் போய் மதியம் சாப்பாடு செய்ய என்ன இருக்குனு?. பார்க்கிறேன். ” என கூறி மனதில்..

   இப்ப பாருங்க. நான் இந்த வீட்டு மருமகளா நான் என்ன பண்ணுவேனு காண்பிக்கிறேன்.. என எண்ணிய படி அவள் உள் செல்ல..

    என் தங்கை எழில நீ இல்ல.. யாரும் அதிகாரம் பண்ணமுடியாது.. நான் பண்ணவும் விடமாட்டேன். அன்பால் மட்டும் அவள அதிகாரம் பண்ணமுடியும்.. ஆனா அதுக்கும்கூட அவளுக்கென்று பிறந்த.. என் வேந்தன் மாமாவால் மட்டும்தான் அதுவும் முடியும் மகிழ்வுடன் நினைத்தவன்.. தன் வருங்காலத்தை பற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்

 

    தன் காதின் மிக அருகில் ஒலித்த முனங்களிலும், தன் கையில் அழுத்தம் இருப்பது போல தோன்றியதும் வேந்தன் சட்டென்று கண் திறந்தான். அரசி அவனின் பக்கம் திரும்பி.. கால்களை குறுக்கிய படி இருந்தாள். அப்போது அவனின் கையில் சூடான கண்ணீரையும் உணர.. அவனும் கலங்கிவிட்டான். இரவில் இருந்து அவள் படும் வேதனையை பார்க்க முடியவில்லை. அவளை கால்நீட்டி படுக்க வைத்து.. அருகில் வைத்திருந்த எண்ணெய் எடுத்து வயிற்றில் தடவிவிட்டான். அவனின் டீசேட்டை பிடிப்பதினால்.. தன் கழுத்து இறுகும் இறுக்கத்தில் தெரிந்தது அவள் உணரும் வலியின் அளவு. அவளை தன் கையிலிருந்து தலையனையில் படுக்க வைத்துவிட்டு.. சிறிது நேரத்தில் குளித்து வந்திருந்தான்

    அரசி, அரசிம்மா.. ” அவளின் நெற்றி முடியினை ஒதுக்கி.. அழுத்த முத்தமிட்டு தன்னவளை  எழுப்ப ஆரம்பித்தான்அவள் இரவு சிறிது சாப்பிட்டது. சாப்பிட முடிந்தால் சாப்பிடலாமே. சற்று தெம்பு இருக்கவேண்டும் அல்லவா.

   அவளும் அவனை கட்டிபிடித்தபடி கண்களை மெதுவாக திறந்தாள். அவன் குளியறை சென்ற சில நிமிடங்களில் அவள் எழும்நிலைக்கு வந்துவிட்டதால்.. வேந்தன் அழைத்தவுடன் அவள் கண்திறந்தாள்கண்களில் கலக்கமும், உதடு புன்னகையையும் சுமந்த தனுமாமாவை பார்த்தவள்.. புன்னகையும், அழுகையுமாய் இறுக்கி கட்டிக்கொண்டாள்.

    தன் அரசியின் தலையை தடவியவாறே.. ” முயல்குட்டி எழுந்திறிங்க.. கீழ போகலாம். நான் டீ போட்டு வைத்துவிட்டு வரேன். நீ லைட்டா குளித்துவா. உனக்கு ஓகே தானே. ” ஓகே என தலையாட்டினாள்.

    அவளிற்கு சட்டை, பாவாடை, பிற உடைகள்,  பிற தேவைகளை எடுத்து வைத்து.. பாத்ரூம்மில் அவளை விட்டு.. அறையில் வெளிச்சம் பரவ செய்து கீழே வந்தான்.

    திலகனின் முகம் தெரிய.. ‘ இவன் என்ன இந்நேரத்திலே?. ‘  என நினைத்தபடி ஹாலிற்கு வர.. அவனின் எதிர்பக்கத்தில் சத்யாவை பார்த்தான். .. என நினைத்து புன்னகையுடன் அவர்களை நோக்கி சென்றவன்.. திலகனின் பின்புறமாக முதுகில் தட்டிவிட்டு.. அவன் பக்கத்தில் உட்கார்ந்தான்அவனை திரும்பி முறைத்தவன்.. ஏதோ கூறவரும் வேலையில்..

     ” வேந்தன் அண்ணா வாங்க. ” வேந்தனின் பின்புறம் இருந்து அழைப்பு கேட்க.. திரும்பியவன்.. அங்கு மேகா அவனை அழைத்தபடி வந்தாள். அவளை பார்த்தவன் மெல்லிய புன்னகையுடன் தலையசைத்தான் அவ்வளவே.

   திரும்பி.. ” சத்யா இஞ்சி அதிகமாக போட்டு.. டீ வைக்கிறீங்களா?. ”

   அவன் தன்னவளிற்காக டீ போட நினைத்தான். சரி மேகா இருக்கவும் முதலில் சத்யா முதலில் போனால்.. அதன்பின் நாம் போகலாம்.. என எண்ணியவன் சத்யாவிடம் கூறினான்.

    சத்யா தலையசைக்கும் முன்.. ” அண்ணா எதுக்கு அவங்கள கஷ்டப்படுத்துறிங்க. அத்த இல்லாத நேரத்தில்.. எங்க வீட்டுக்கு வரபோற மாப்பிள்ளைக்கு இந்த வீட்டு ஆள.. நான் தானே உங்கள கவனிக்கனும். நான் போய் எடுத்துட்டு வரேன்.. ” அவள் அவனின் பதிலை எதிர்பாக்காமல் திரும்பி சமையல் அறை செல்ல..

   என்ன இது?. ‘ நினைத்தபடியே திலகனையும், சத்யாவையும் பார்த்தவன்.. சத்யா சாதாரணமாகவும், திலகன் சற்று கோபமாக இருந்தான். அதிலிருந்தே தெரிந்து கொண்டான் தான் வரும்முன் ஏதோ நடந்துயிருக்கிறது?. என்று சமையல் அறைக்கு வேகமாக சென்றான். அவனின் பின்னால் இருவரும் சென்றார்கள்.

 

     சற்றுநேரம் முன் மேகா இன்பாவிடம் பேசிய பின் அவள் சமையல் அறை செல்ல.. இன்பா சிலநிமிடங்களில் கதவை சாற்றிவிட்டு அவன் அறைக்கு குளிக்க சென்றிருக்க.. அப்போதுதான் சத்யாவை அழைத்து வந்திருந்தான்  திலகன். வீட்டின் மணியை அழுத்திவிட்டு நின்றார்கள். கதவை திறந்த மேகா இருவரையும் பார்த்தவள்.. திலகனை மட்டும் பார்த்து மெல்லிய புன்னகையை உதித்து.. பின் ஒன்றும் பேசாமல் உள்சென்றவள் தான்.. அதன்பிறகு வேந்தன் வந்த போது தான் வந்தாள். ‘

    திலகன் ஹாலில் அமர.. சத்யா தான் கொண்டு வந்ததை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு.. அவள் திலகன் அருகில் ஒற்றை ஷோபாவில் அமர்ந்தாள்.

   அவன் சத்யாவை பார்க்க.. ” தியா.. ஏன் அவங்க உன்னை பார்க்காதது போல போனாங்க?.. “

   யாரும் இல்லாததால் அவர்கள் பேசினால் மேகாவிற்கு  கேட்கும் என்பதால்.. திலகனிடம்  ஒன்றும் கூறாமல் போனில் மெசேஜ் அனுப்பினாள்.

    என்கிட்ட அவ எப்போதும் அப்படிதான் நடந்துக்கொள்வா. ”

   அதை பார்த்தவுடன்.. ஏன்?.. என்பது போல அவன் பார்க்க..

   ” அது இன்பா அண்ணா.. என்னிடம் சொத்த தங்கை போல நடந்துக்கொள்வது அவளிற்கு பிடிக்காது. அவ எழிலிற்கு எல்லாம் பண்ணுவதையே மறைமுகமாம கிண்டல் செய்வது போல.. குறை கூறவா. இதில் எனக்கும் அண்ணா எது வேண்டும் என்றாலும் செய்வதை.. இப்படி என்னை பார்க்காதது போலவும், எதுவும் பேசாமல் இருப்பதில் காண்பிப்பாள். ”

    அவங்களுக்கு தான்.. நாலு அண்ணங்க இருக்காங்கள.. இதில் அவங்களுக்கு என்ன கஷ்டம், நஷ்டம் வந்தது?.. ”

   அவங்க அண்ணா எல்லாம் கேட்டு வாங்கி கொடுப்பாங்கதான். தெரியல?.. எப்போதும் எல்லாவற்றிற்கும் இன்பா அண்ணா கூட இருப்பதால இருக்கும். அவ முன்னாடியெல்லாம் ரொம்ப இந்த மாதிரி மற்றவர்களுக்கு வெளிப்படிப்படையா தெரியும்படி நடந்துக்க மாட்டா. ஆனா இந்த ஒருவருடமா தான் இப்படி நேரடியாவே காண்பிக்கிறா. ”

    அவளை முறைத்தவாறே.. இது பல வருடமா நடக்குதா?.. இதை எழிலரசி கவனிக்கலையா?. எதுவும் அவங்களிடம் சொல்லவில்லையா?. ”

    அவளிற்கு அந்த உரிமையான முறைப்பு மிகவும் பிடித்தது.  அதனை ஒரு நொடி ரசித்துவிட்டு.. ” அவளுக்கு தெரியும். ஆனா அவ என்னிடம் கண்டுகொள்ளாத.. பின்ன அவளுக்கு மதிப்பு கொடுப்பதுபோல ஆகிவிடுனு சொல்லுவா. அதனால அவள நான் பார்க்கவே மாட்டேன். அப்படி ஒருத்தி எங்க பக்கத்தில் இருக்கிறாள்.. என நினைக்க கூட மாட்டேன். ”

   ம்.. சரி ஏன் இப்ப வெளிப்படையா காண்பிக்கிறா?. ஏன் கேட்கிறேனா?. ஏன்னு தெரிந்துக்கொண்டால்.. இனி இதுபோல நடக்ககாம பார்த்துக் கொள்வேன். (பண்ண மனசுல கூட நினைக்ககூடாத அளவிற்கு.. தோன்ற வைக்கும் செயலை செய்ய வேண்டும். ) அதனால தான். ”

    அவளுக்கு எழில்.. அவங்க அண்ணா இரண்டுபேரையும் கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லைனு சொல்லிட்டதுனால.. அவளுக்கு இந்நேரம் இன்பா அண்ணா கூட நடந்துயிருக்க வேண்டிய கல்யாணம்.. அவ ஜாதக பிரச்சனையால் மூன்றுவருடம் தள்ளி போயிருக்கு. அதனால் இப்ப எழில்கிட்ட கூட சரியா பேசமாட்டா.

    அவளுக்கு நான் இப்ப இங்க வருவது தெரிந்திருக்கும். நீங்க கூட இருந்ததால் வேண்டும் என்றே.. உங்க முன்னாடி இப்படி என்னிடம் வெளிப்படையா காண்பித்தா.. நீங்க வேந்தன் அண்ணாவிடம் சொல்லுவிங்க. அவரு எழில்கிட்ட கேட்பாரு. சும்மா ஏதாவது நடக்காதனு பண்ணுவா. ”

   .. ஒரு பார்வைல இவ்வளவு நடக்குமா?. ”

   ஆம் என அவள் தலையாட்ட.. பின் அவன் மேகா சென்ற பக்கம் பார்த்தான்.  அப்போது உள் சென்றவள்.. இன்னும் தண்ணீர் கூட கொடுக்கவில்லை..

    தியாவை தேவையில்லாமல் இத்தனை வருடங்களா மனதில் என்னவெல்லாம் திட்டியிருப்பாள் என்ற கோபம் வந்தபோது தான்.. வேந்தன் வேகமாக தட்டினான். அவனை பார்த்து ஏன்டா?. என்று சிறு முறைப்பை வெளிப்படுத்த..

   அப்போது வேந்தன் எப்போதுடா வருவான்.. என எதிர்பார்த்து காத்திருந்து வந்து..  சத்யாவை அவமதித்தது.. தான் தான் இந்த வீட்டின் உறுப்பினர்போல் நடந்தகொண்ட விதம்.. வேந்தனை கோபம் கொள்ள வைத்தது.  

 

    வேந்தன் நண்பனின் முகம் பார்த்தும் ஏதோ?. என கணித்து உள்சொல்ல.. திலகன், சத்யா சுவாரசியம், சற்று கலக்கத்துடன் சென்றனர்

        

    

     

  

   

    

    

   

     

     

    

     

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!