Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Manam Kavarnthaval 6

               மனம் கவர்ந்தவள்  6

பெங்களூரில் இருந்து கிளம்பிய இரு ஜோடிகளும் விடியும் முன்னே இருள் பிரியா நேரத்தில் பொள்ளாச்சியை வந்தடைந்தனர்

பொள்ளாச்சியில் தேவ்க்கு சொந்தமான ஒரு வீட்டில் அவர்கள் இருந்தனர். மற்றவர்களை வீட்டில் ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டு விஷ்வா மருத்துவமனைக்கு கிளம்பினான்

ஏற்கனவே தாயிடம் பாட்டியை பற்றி தெரிந்து கொண்டதால் நேராக தீவிர சிகிச்சை பிரிவு இருக்கும் தளத்திற்கு சென்றான்



Advertisement

அவன் அங்கு சென்ற போது காரிடரில் இருவர் நின்று பேசி கொண்டிருந்தனர். இவன் படிகளின் அருகில் இருந்ததால் அவர்கள் இவனை கவனிக்க வில்லை. 

ஆனால் அவர்கள் பேசியதுஅவனுக்கு நன்றாக கேட்டது. அவன் சற்று அருகில் சென்றபோதுஅது தர்ஷினியும் அவள் தந்தையும் என்று தெரிந்து கொண்டான்

அப்போது தர்ஷினி இன்னிக்கு விஷ்வா வந்துடுவாங்க தானே பா ?  

Advertisement

இன்னைக்கு கண்டிப்பா வந்துருவான். இந்த தடவை கண்டிப்பா உன்ன அவன் கல்யாணம் பன்னிதான் ஆகணும்.

Advertisement

 உங்களுக்கு கண்டிப்பா தெரியுமா  பா அவங்களுக்கு கல்யாணம் ஆகலைன்னு

தெரியுமா நான் நல்லா விசாரிச்சுட்டு தான் சொல்றேன்

அவன் காலேஜ் படிச்ச இடத்துல இருந்து இப்ப வரைக்கும் நல்லாவே விசாரிச்சுடேன்

Advertisement

நானும் நேத்து மாமாகிட்ட விஷ்வா பத்தி பேசிட்டேன். அவங்களும் இந்த தடவ விஷ்வா வந்தவுடனே கேட்கறேன்னு சொல்லி இருக்காங்க

ஆன அப்பா அம்மா நடுவுல கொஞ்சம் குழப்பம்  பண்ணிட்டாங்க

என்ன பண்ணா உங்க அம்மா

மாமா கிட்ட என் பொண்ணு உங்க வீட்டு மருமகளாக தான் வரணும். விஷ்வா இல்லைன்னா என்ன அதான் சாய் இருக்கான்ல அப்படின்னு சொல்லிட்டாங்ka.

 சரியா தான் அம்மா சொல்லி  இருக்கா?

அப்பா அதெல்லாம் நடக்காது. நான் விஷ்வாவை தான் கல்யாணம் பண்ணிப்பேன்”. 

அப்பா எனக்கு  விஷ்வா வேணும் என்றாள் பிடிவாதத்துடன்.

சரி மா கண்டிப்பா  விஷ்வா உனக்குத்தான்.  

ஆனா உன்ன பத்தி அவங்க யாருக்கும் தெரியாம பார்த்துக்கோ

சரிப்பா அதெல்லாம் நான் பார்த்துப்பேன். இத்தனை வருசமா பண்ணலையா?  

இப்ப வரைக்கும் நம்ம மேல யாருக்காவது சந்தேகம் வந்து இருக்கா? அதுவுமில்லாம பாட்டி என் பக்கம் இருக்கும் போது எனக்கு என்ன கவலை

பேசுறதெல்லாம் இருக்கட்டும். உன்னோட ஆட்டத்தை எல்லாம் கொஞ்சம் குறைச்சி வச்சுக்கோ, அப்பதான் நாம நெனைச்சது நடக்கும்

சரிப்பா

அவர்கள் அந்த பக்கம் நகர்ந்து சென்று விட்டார்கள். 

இவர்களின் பேச்சை கேட்ட விஷ்வாவிற்கு மிகவும் கோபமாக வந்தது. ஆனால் இருக்கும் சூழ்நிலை கருதி அமைதியாக நகர்ந்து விட்டான்.

பாட்டியை பார்க்க. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளே சென்று பாட்டியின் அருகில் அமர்ந்தான், பாட்டியின் மீது சில கோபங்கள் இருந்தாலும் அவனுக்கு அவன் பாட்டியை ரொம்ப பிடிக்கும்

பாட்டிக்கும் அவனைத்தான் மிகவும் பிடிக்கும்.எவ்வளவு பிடிவாதமாக இருந்தாலும் பாட்டி சில நேரங்களில் விஷ்வாவிற்காக விட்டுக் கொடுப்பார்.

விஷ்வாவும் அதுபோல தான் வீட்டில் மற்றவர்களிடம் தன் பிடிவாதத்துடன் இருப்பவன்   பாட்டி என்று வரும்போது தன் பிடிவாதத்தை தளர்த்தி கொள்வான். 

பாட்டியுடன் அவன் வேறுபட்டது அவன் கல்யாண விஷயத்தில் மட்டுமே.மனம் கனக்க அவரருகில் சிறிது நேரம் அமர்ந்து இருந்தான்

பின்பு அங்கிருந்து சென்று விட்டான். அவன் வந்தது  யாருக்கும் தெரியாமல் போனது

அவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றபோது தேவ் மற்றும் கவி பயண களைப்பில் உறங்கி கொண்டிருந்தார்கள். 

அவன் மித்ராவின் அறையை கடக்கும் போது உள்ளே மித்ரா   உறங்காமல் அமர்ந்து இருந்தாள்

உடனே விஷ்வா, என்ன மங்கை எதுவும் வேண்டுமா?  

ஏன் தூங்காமல் அமர்ந்து இருக்கிறாய்?  என கேட்டுக் கொண்டே உள்ளே சென்றான்.

 மித்ரா பல விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருந்ததால் விஷ்வாவிடம் பேசி தெளிவுபடுத்தி கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தாள்

அதேநேரம் அவனின் மங்கை என்று அழைப்பில் கோபம் வர பெற்றவளாக உங்கள தான் எதிர் பார்த்திட்டு இருந்தேன். 

உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் விஷ்வா என்றாள் கோபமாக. சொல்லு மங்கை

முதல்ல என்னை  மங்கையின் கூப்பிடாதீங்க”  நா மித்ரா, மித்ரா மட்டும்தான். நீங்க என்ன அப்படியே கூப்பிட்டால் போதும்

அதுபோல நான் பெங்களூரில் சொன்னது போல் மற்றவர்கள் முன் நடித்தால் மட்டும் போதும். அனாவசியமாக என்னிடம் நெருங்காதீர்கள்  என்று கோபமாக  கூறினாள்

அவள் கோபத்திற்கு காரணம் அவர்கள் அங்கு வந்த போன்ற மித்ரா காரில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தால்.

அதனால் அவளை எழுப்பாமல் அவளை தூக்கிக்கொண்டு வந்து அவள் அறையில் படுக்க வைத்து இருந்தான்

விஷ்வா ஏற்கனவே தர்ஷினி மற்றும் அவள் தந்தையின் பேச்சில் கோபமாக இருந்தவன் இங்கு வந்த உடனே மித்ராவின் கடினமான வார்த்தைகளின் மேலும் கோபமுற்று நான் ஒன்னும் உன்னை நெருங்கி வரல”.

உன்னோட  இக்கட்டான சூழ்நிலையில் உனக்கு ஹெல்ப் பண்றேன். அதுபோல எனக்கு நீ ஹெல்ப் பண்றேன்.சும்மா தேவை இல்லாம பேசிட்டு இருக்காத என்று கடினமாக கூறினான்.

 உனக்கும் எனக்கும் இடையில் வேறு ஒன்றும் இல்லை. நீயும் எதையும் கற்பனை பண்ணி கொள்ளாதே

உன்ன மாதிரி பொண்ணுலாம் நான் திரும்பி கூட பாக்க மாட்டேன். என் குடும்பத்துக்கும் சரிவராது என்றான் அவளை காயப்படுத்தும் வேகத்துடன்.

அவனின் வார்த்தைகள் உள்ளே வலித்தாலும் முகத்தை கோபமாக வைத்து கொண்டு சரிதான் மிஸ்டர் விஷ்வா நமக்குள்ள இருக்கிறது நாடகம் மட்டும் தான்”.

நம்ம பிரச்சினைகள் முடிஞ்ச உடனே நாம நம்ம வழியில் போலாம்.

விஷ்வாவின் கெட்ட பழக்கம் தன்னை யாரும் சீண்ட விடுவதுமில்லை தன்னை சீண்டியவரை காயப்படுத்தாமல் விட்டதும் இல்லை

இப்போது தர்ஷினி மற்றும் அவள் அப்பாவின் மீது இருந்த கோபம் முழுவதும் மித்ராவிடம் பாய்ந்தது

அதன்பின் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. காலை உணவை முடித்துக் கொண்டு விஷ்வா வெளியில் சென்று விட்டான்.

 அவன் திரும்பி வந்தபோது அவன் கையில் மித்ராவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருந்தன

தேவுடன் அமர்ந்து மித்ராவின் உடல்நிலை பற்றி கேட்டுக் கொண்டிருந்தான்

தேவ் மித்ராவுக்கு சரியாக இன்னும் எவ்வளவு நாள் ஆகும்?

 இன்னும் இரண்டு வாரங்களாவது ஆக வேண்டும் அவள் நடக்க.

கை சரியாக இன்னும் ஒரு மாதம் ஆகும். மற்றபடி வேறு ஏதும் ப்ராப்ளம் இல்லை.

 என்ன ஆச்சு விஷ்வா டென்ஷனா இருக்கு

விஷ்வா அன்று காலையில்  நடந்ததை  கூறினான்.

 ஏண்டா தர்சினிக்கு உன் மேல அவ்ளோ லவ் வா?

  பேசாம அவளையே கல்யாணம் பண்ணிக்கோ  மச்சி.

 நாம விரும்புற பொண்ண விட நம்மள விரும்புற பொண்ண கல்யாணம் பண்ணா ரொம்ப நல்லா இருபோம்னு என் தலைவரே சொல்லி இருக்காரு

நீ காலையிலேயே என்கிட்ட அடிவாங்கி சாக போற பாரு என்றான் கொலை வெறியோடு.

 சரி சரி உங்க குடும்பத்து  பிரச்சனைல என்னை ஏன் சாகடிக்க பார்க்கிர

என்ன சாய் நினைச்சாதான் பாவமா இருக்கு. அது அவன் தலையெழுத்து என்றான் கிண்டலாக.

அடிங்க உனக்கு எங்கள பாத்தா கிண்டலா இருக்கா?   

சரி சரி விடு. உன்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும் டா

என்னது எதுவும் சீரியஸா விஷயமா?

மித்ரா கொடுத்த நம்பர்ல இருந்து எனக்கு கால் வந்துச்சு

அந்த கடத்தல் கும்பம்பல மித்ராவுக்கு ஹெல்ப் பண்ண ஆளு இப்போ உயிரோட இல்லையாம்”. மித்ராவை ரொம்ப ஜாக்கிரதையா இருக்க சொன்னாங்க.

 ஓ சரிடா பாத்துக்கலாம். பாட்டிக்கு முதலில் சரி ஆகட்டும்

அப்போது சாய் அவனுக்கு கால் செய்தான்.

சொல்லு சாய்,.

அண்ணா பாட்டி கண்முழிச்சுட்டாங்க.இப்போ நல்லா இருக்காங்க. உங்கள உடனே கிளம்பி வர சொல்லி இருக்காங்க

சரி டா வீட்ல யாராவது கேட்டா நா இன்னிக்கு வந்து விடுவேன் சொல்லு.

 சரி அண்ணா.

 தேவ்  நீ நாளைக்கு அந்த ஹாஸ்பிடல்ல தானே  ஜாயின் பண்ண போறேன்

ஆமாண்டா, பாட்டிக்கு எப்படி இருக்கு. கண்முழிச்சுடாங்க. இரண்டு நாளைக்கு அப்புறம் ஆபரேஷன் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க. 

பாட்டி  என்னை பாத்துட்டு அதுக்கப்புறம் தான் ஆபரேஷன் சொல்லி இருக்காங்க

மித்ராக்கு அந்த ஹாஸ்பிடலில் ஸ்பெஷல் கேர்  ரூம் எடுத்து அட்மிட் பண்ணி விடலாம்

நான் சிவா கிட்ட பேசுகிறேன். சிவா விஷ்வாவின் கல்லூரி கால நண்பன். அந்த மருத்துவமனை அவனின் அப்பாவுடையது.

நீயும் உன் சைடுல இருந்து என்ன செய்ய முடியுமோ அதை செய்

அப்போது அங்கு வந்த  கவியிடம்  நீ எந்த  ஹாஸ்பிடல்ல ஜாயின் பண்ணப்போற?

என் பிரெண்டு ஹாஸ்பிட்டல்ல ஜாயின் பண்ண போறேன் விஷ்வா

பத்திரமா இருந்துக்கோ

என்ன பிளான் விஷ்வா

எப்படி மித்ராவை உங்க வீட்டுக்கு காண்பிக்க போற

தேவ் நாளைக்கு நீ மித்ராவை  ஹாஸ்பிடல அட்மிட் பண்ணிடு. 

நான் உன்ன அங்க மீட் பண்றேன். நீ மித்ரா கூட இருக்கும்போது. 

அப்போ நீ நாளைக்கு தான் என்னையும் மித்தரவையும் அங்க எதேச்சையாக சந்திக்க போறே. 

மித்ரா உன் மனைவி. ரொம்ப நாள் கழிச்சு இங்கேதான் பார்க்குறேனு  

உன் குடும்பத்துக்கு சொல்லப்போற. அப்படித்தானே

ஆமாம் அதுதான் என்னோட பிளான். சரி டா. 

கிளம்பறேன் நாளைக்கு பாக்கலாம். கிளம்பறேன் கவி . 

ஏண்டா விஷ்வா  உன் மனைவிகிட்ட சொல்லிட்டு போகலையா? என்றான் கிண்டலாக

நீ அடிவாங்க போற என்கிட்ட. நாங்க என்ன உண்மையான புருஷன் பொண்டாட்டியா   சொல்லிவிட்டு போக. 

நாடகம்  நாளைக்கு தான் ஆரம்பிக்குது.

தேவ் வேறு ஏதும் கேட்பதற்கு முன்பு அங்கிருந்து கிளம்பி விட்டான்

அவன் மருத்துவமனைக்கு வந்தபோது அவனது குடும்பத்தினர் அனைவரும் அங்குதான் இருந்தனர்.

நேராக அவன் தாத்தாவிடம் சென்றான்.                                                                                                                                          தாத்தா பாட்டி எப்படி இருகாங்க?   டாக்டர் என்ன சொல்ராங்க?                             விஷ்வா வா வா பாட்டி இப்போ நல்லா இருக்கா. டாக்டர் ஆபரேஷன் பண்ணனும் சொல்ராங்க. உன் பாட்டி தான் ஒத்துக்க மாட்டேங்கற. நீ வந்து பேசு

 சரி தாத்தா நான் போய் பாத்துட்டு வரேன்.

நானும் வரேன்.

சரி வாங்க தாத்தா.

வடிவு இங்கபாரு விஷ்வா வந்துட்டான்

அவன் பாட்டி அருகில் சென்றபோது கண் முழித்து அவனை பார்த்தார்.

கண்ணா வந்துட்டியா வா

இப்போ எப்படி இருக்கு பாட்டி

நான் நல்லா தான் இருக்கேன். 

இப்பவாது ஆபரேஷனுக்கு சரி சொல்லுமா. 

சரிங்க நா விஷ்வா கிட்ட கொஞ்சம் பேசிட்டு சொல்றேன்.

என்னனு சொல்லுங்க பாட்டி ஏன் இப்படி பண்றீங்க

என்னால உனக்கு தர்சினிக்கு தான் கல்யாணம் பண்ணி பாக்க முடியல. ஆனா உன்னை குடும்பமா பார்க்கணும்  கண்ணா.

நான்தான் எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்லி இருந்தேனே பாட்டி..

என்னடா சொன்ன பாட்டி கிட்ட. கல்யாணம் பண்ணிட்டேனு மட்டும் தானே சொன்னேன். 

இல்ல தாத்தா எனக்கும் அவளுக்கும் ஒத்து வரல. அதனால நாங்க பிரிந்து விட்டோம். இனிமேல் அவளை பத்தி பேசக்கூடாது. 

பாட்டி தான் கல்யாணம் முடிஞ்சுருச்சு மட்டும் சொல்லு. வேற எதுவும் சொல்லாதனு சொன்னாங்க. 

சொன்னா எல்லாரும் வருத்தப்படுவார்கள் அப்படின்னு சொன்னாங்க.

நீ இன்னும் அந்த பொண்ண நினைச்சு இருக்கியா விஷ்வா. 

அப்படின்னு இல்ல தாத்தா ஆனா எனக்கு கல்யாணம் வேண்டாம்”.

உடனே பாட்டி இல்ல கண்ணா நீ உன் மனைவியை கூட்டிட்டு வா, நான் உன்ன குடும்பமா பாக்கணும்.

என் பேரப் பசங்க குடும்பமா வாழறது பார்க்கிற ஆசை எனக்கு இருக்காதா

அப்படி முடியாதுனா, உனக்கு உன் மனைவியோட சேர விருப்பம் இல்லனா வேறு ஒரு கல்யாணம் பண்ணிக்கோ.

இப்பவாது நான் சொல்றதை கேளு விஷ்வா. 

அது எப்படி பாட்டி முடியும். 

இல்ல கண்ணா நான் எவ்வளவு நாள் இருப்பேன் எனக்கு தெரியல. அதனால நீ எனக்காக இதை பண்ணிதான் ஆகணும்.

என்னங்க நீங்களும் சொல்லுங்க. 

அவ சொல்றது சரிதானே விஷ்வா. நீ எவ்வளவு நாள் இப்படியே இருக்க முடியும்.உனக்குன்னு ஒரு குடும்பம் வேணும். 

அதெல்லாம் வேணாம் தாத்தா அதான் நம்ம வீட்ல எல்லாரும் இருக்காங்களே. 

உடனே பாட்டி உனக்கு ஒரு வார கால அவகாசம் தரேன் நீ உன் மனைவியை கூட்டிட்டு வா. இல்லனா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு

உனக்கும் தர்ஷினிகும்  கல்யாணம்  பண்ணிடலாம். உங்க கல்யாணம் முடிஞ்சப்புறம் தான் ஆப்பரேஷன் பண்ணிப்பேன். 

இதெல்லாம் நியாயமே இல்லை பாட்டி. இப்ப என்ன   நான் போய்   மனைவியை கூட்டிட்டு வரணும்  அதானே.

 கண்டிப்பா கூட்டிட்டு வரேன். நீங்க ஆப்ரேஷனுக்கு சரி சொல்லுங்க. அப்புறம்  கண்டிப்பா நான் என் வைஃப் கூட்டிட்டு வரேன்.

இல்ல அது சரிவராது. 

என்ன நம்ப மாட்டீங்களா பாட்டி..

 இந்த விஷயத்துல நான் உன்ன நம்பரதா இல்ல. ரெண்டு வருஷமா நான் சொன்னால்தான் உன் கல்யாண பேச்சு உன் அப்பா எடுக்கல. 

நானும் நீ மாறிடுவேன் நினைச்சு தான் உனக்கு இந்த அவகாசத்தை கொடுத்தேன்.

ஆனா இப்ப வர அந்த பேச்சை எடுக்க விட மாட்டேங்கற. அதனால இந்த தடவை உன்ன நம்பறதா இல்ல.நீ உன் மனைவியை கூட்டிட்டு வந்து தான் ஆகணும். 

இல்ல அது முடியாது உனக்கும் அவளுக்கும் சரி வராதுனு சொன்ன தர்ஷினிய கல்யாணம் பண்ணிக்கோ. 

இரண்டு பேர பசங்க கல்யாணத பார்த்துட்டு ஆப்பரேஷன் பண்ணிக்கிறேன். 

அவன் எவ்வளவோ பேசிப் பார்த்தும் அவன் பாட்டி அவர் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

 நீ இன்னிக்கே கிளம்பு. 

சரி பாட்டி நான் யோசிச்சு சொல்றேன். 

யோசிக்க ஒண்ணுமே இல்ல. இந்த ரெண்டுல ஏதாவது ஒன்னு பண்ணு. அது வரைக்கும் என்ன பாக்க வராது. 

என்ன பாட்டி இப்படி எல்லாம் பேசுற. 

இல்ல கண்ணா இதுல பேசு ஒண்ணுமே இல்ல. நீ போ  என்று கூறி கண் மூடி கொண்டார்.

போ விஷ்வா உன்  பாட்டியோட பிடிவாதம் உனக்கு தெரிந்ததுதானே.

அவனும் கோபத்துடன் சரி தாத்தா என்று  கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகு கண் விழித்த பாட்டியிடம் வடிவு அவன இப்படி கார்னர் பண்றது சரி இல்ல மா. அவனுக்கும் கொஞ்சம் நிறைய அவகாசம் கொடுகணும். ரொம்ப கோபமா போறான் பாரு. 

இல்லங்க அவன் பிடிவாதம் நமக்குத் தெரிந்ததுதானே இந்த சூழ்நிலையை விட்டால் அவனை குடும்பமா வாழ வைக்க முடியாது. 

தர்ஷினி பத்தியும் நாம யோசிக்கணும். அதுவுமில்லாம விஷ்வா நாம  இல்லாம கல்யாணம் எல்லாம் பண்ணி இருக்க மாட்டான்.என் பேரன் பத்திஎனக்கு தெரியும்.

தர்ஷினி  மேலே உள்ள ஏதோ சின்ன கோபத்துல அவள கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றான்.

 தர்ஷினிய அவனுக்கு எவ்வளவு பிடிக்கும்னு நாமதான் பார்த்து இருக்குகோமே.

சரிமா நல்லது நடந்தால் சரிதான். உன் முடிவு எப்பவும் தப்பாகாது என்கிற நம்பிக்கை எனக்கு  இருக்கு. 

எல்லாத்தையும் விட நீ எனக்கு ரொம்ப முக்கியம்.உடம்ப பாத்துக்கோ. உன்னோட உடல்நிலையை வச்சு கார்னர் பண்றது இதுவே கடைசியாக இருக்கட்டும்.

சரிங்க இனிமேல் இதுபோல் பண்ண மாட்டேன்

அப்போது அங்கு வந்த நர்ஸ்  சார் அவங்க ரொம்ப நேரம் பேசக்கூடாது. அவங்களுக்கு மாத்திரை சாப்பிடும் நேரம் இது. 

சரி மா நான் வெளியிலே இருக்கேன். தாத்தா வீட்டில் உள்ளவர்களிடம்  பாட்டி விஷ்வாவின் மனைவியைபார்த்த பின்பு தான் ஆபரேஷன் செய்ய முடியும் என்று கூறி விட்டதாக மட்டும் சொன்னார்.

 குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஓர் மனநிலையில் இருந்தனர்.அந்த நாள் அவ்வாறே சென்றது.மறு நாள் காலை விஷ்வா மருத்துவமைக்கு வந்தான்

அவன் வந்தபோது அப்போதுதான் விபத்து ஏற்பட்ட ஒரு பெண்ணை  அவசரமாக  தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு சென்றனர். 

எதேச்சையாக திரும்பிபார்த்த விஷ்வா அந்த பெண்ணை பார்த்து அதிர்ச்சியடைந்தான்.

மங்கை என்று கூறியவாறு அந்த பெண்ணின் அருகில் சென்றான். 

அவன் குரலில் இருந்த பதட்டத்தை  அப்போது அங்கு வந்த அவன்  அப்பாவும் அம்மாவும் பார்த்தனர் . 

அவனின் அம்மா அவன் கூறிய மங்கை என்ற பெயரில் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார். 

இவன் ஏன் இவ்வாறு பதட்டத்துடன்  செல்கிறான் என்று அவர்களும் அவன் பின்னே சென்றனர்

மித்ராவின் அருகில் சென்று விஷ்வா என்ன ஆயிற்றுஇவள் எப்படி இங்கே என்று கேட்டான். 

அப்போது அருகில் இருந்த நர்ஸ் இவர்கள் வந்த கார் ஆக்சிடன்ட் ஆகி விட்டது. அதில்  இந்த பெண் அந்த இடத்திலேயே மயக்கம் அடைந்து விட்டதாகவும் அவருடன் வந்தவர் சில காயங்களுடன் வேறு ஒரு அறையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். 

பின்பு அவளை  தீவிர சிகிச்சைப் பிரிவில் கொண்டு சென்றனர். மறுபடியும் வெளியே வந்த அந்த நர்ஸ் நீங்கள் அந்தப் பெண்ணுக்கு என்ன வேண்டும்என்று கேட்டார். 

விஷ்வா நான் அவள்  நண்பன் என கூற வந்தவன் அருகில் அவன் தாய் நிற்பதை பார்த்து அதிர்ந்தான்.

அப்போது அவன் அம்மா அந்த பெண்ணின் கணவன் என்று கூறினார்.

அதிர்ச்சியில் இருந்து மீண்டு விஷ்வா அம்மா என்ன பேசுறீங்க என்றான் கோபத்துடன். 

அப்போது  நர்ஸ் சார் இதுல கொஞ்சம் சைன் பண்ணுங்க.அப்புறம் நீங்க பேசிட்டு இருங்க என்றாள். 

அந்த படிவத்தை வாங்கிய விஷ்வா தன்னையுமறியாமல் கணவன் என்ற இடத்தில் கையெழுத்திட்டு  கொடுத்தான். அங்குவந்த அப்போது டாக்டரிடம்  இப்போ எப்படி இருக்காங்க?

 Konjanal mna than or vibathila mati ipa than குணமாகிட்டு இருக்கா.

 அவங்க சுயநினைவை இழந்துட்டாங்க . இப்போதைக்கு ஒண்ணும்  சொல்ல முடியது என்று கூறிசென்று விட்டார்

அவன் கணவன் என்ற இடத்தில்  கையெழுத்து  போட்டதையும், மருத்துவரிடம் கவலையுடன் பேசுவதையும் அருகில் இருந்த அவன் அப்பா பார்த்துகொண்டே இருந்தார்.

அருகில் தந்தையைப் பார்த்த விஷ்வாதான் ஏதும் செய்யாமலே சூழ்நிலையை தனக்கு சாதகமாக மாறுவதை பார்த்து அமைதியாக நின்றான்.

மனதில் மித்ரா மற்றும் தேவ்க்கு என்னாயிற்று என்ற பதட்டம் அதிகமாய் இருந்தாலும் இந்த சூழ்நிலையில் தான் பேசுவது தனக்கு மேலும் பிரச்சனை கொடுக்கும் என்பதால்  அமைதியாய் நின்றான். 

சுந்தரம் நீ எப்படி ஜானகி அந்த பொண்ணு அவனோட மனைவினு சொல்ற

இவன் யாருகாகவும் இவ்வளவு பதட்டப்பட்டு நா பாத்ததில்ல. அதுவும் இல்லாமல் ஒரு தடவ அவன் மனைவி பேர் என்னன்னு கேட்டேன். மங்கை என்று தான் சொன்னான். 

நர்ஸ் சில மருந்துகளை வாங்கி வருமாறு  சொன்னார்.விஷ்வா இதுதான் சமயம் என்று நாம் அப்புறம் பேசலாம் அம்மா என்று  கூறி நகர்ந்துவிட்டான்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!