Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 39.6

 

நாம் 39(6)

 

    வேந்தனின் செயல் ஏன்?. என முதலில் புரியாமல் இருந்தவர்கள்.. பின்தான் கால் சுளுக்கு வலிபுரிந்து.. போச்சு எழிலரசி பாவம் என நினைத்தார்கள். ம் எழிலரசி பாவம் தான்.. உள்ளே சென்றவன்.. ஒரத்தில் இருந்த டேபிள் உட்கார வைத்து.. சேரில் அவன் அமர்ந்து தன் பரிசு மற்றும் முயல்குட்டியின் காலில் ஒத்தடமாக அழுத்தமான முத்தங்களை முத்துமுத்தாக கொடுக்க.. அவளின் பெண்மை உணர்வுகளை அடக்க வழி தெரியாமல் தன்னவனின் கூந்தலில் அதனை உணர்த்தி.. தன்னவனை கிறங்க வைத்து கொண்டுயிருந்தாள். அவனும் அதில் இருந்து கஷ்டப்பட்டு வெளிவந்து.. கண்களை மூடி உணர்வுகளின் பிடியில் இருப்பவளை ஒருநொடி ரசித்து.. நெற்றில்முத்தம் பதித்து நிகழ்காலத்திற்கு வரவைத்து.. புன்னகையுடன் குடிக்க நீர் கொடுத்துவிட்டு.. அனைவருக்கும் கொடுத்துவிட்டு வந்தான்.



Advertisement

 

   முயல்குட்டி நீ எப்ப பழகுன?. ” முறைப்பா?. ஆச்சரியமா?. புரியாத பார்வை கழுத்தில் பார்த்தபடிகேட்க..

    தன்னவனை புன்னகையுடன் கண்களை பார்க்க வைத்து.. ” தனு சத்யா, தர்ஷினி  நம்ம வீடு ரெனவேஷன் முடிந்து வந்த சமயம் என் போனை போட்டு சும்மா.. எப்போது போல ஆடினாங்க. நான் அதை பார்த்து இரண்டு தடவை சேர்ந்து ஆடியிருப்போம். பிளான் எதுவும் இல்ல.. அண்ணா எல்லாம்ஆடவும்..

Advertisement

   சத்யா, தர்ஷினி மெசேஜ் பண்ணி கேட்டாங்க. நானும் தனுமாமாவிற்காக ஒத்துக்கிட்டேன். இரண்டுபேருக்கும் பரதநாட்டியத்தோட மற்ற டான்ஸ் நல்லா தெரியும். அதனால அவங்க அளவிற்கு ஆடியிருக்க மாட்டேன். இருந்தாலும்.. ” முடிக்கும் முன்.. அவளின் இதழில் இதழ் பொருத்தி.. மீதி வார்த்தை அவளினுள் அனுப்பிவிட்டு.. கழுத்தில் மென் முத்தம் பதித்து எடுத்தான்.

Advertisement

   முயல்குட்டி எப்படி இருந்தது அவசியம் இல்ல. என்னக்காக ஆடின.. அது போதும். உனக்கு அப்படியும் தெரிய வேண்டும் என்றால்.. இன்னும் மூன்று இரவு காத்திரு.. அப்ப செயல்முறை.. ” அவனின் வாயை பொத்தி.. நாணப்புன்னகையுடன் போகலாம் என சைகை செய்தாள். சிரிப்புடனே டேபிள்மேல் இருந்து இறங்க நினைத்த நேரம் நந்தினி, வசு, மேகா தன் தோழிகளை சாப்பிடும் இடத்தில் இருக்க வைத்துவிட்டு.. மூவருடன் பார்த்தி, கமலேஷ், அஸ்வினுடன் உள்ளே வந்தார்கள்.

   அரசியின் அருகில் நின்றபடி யோசனையுடன் வருபவர்களைஎன்ன டா?. ‘ என்பது போல பார்க்க.. ” மாமா இன்னும் சாப்பாடு வரல?. ”

   கமலேஷ் நீ அரசி வீட்டில் இருந்து.. இங்க வரனும் என்று இடம் மாத்தி அண்ணாகிட்ட சொல்லீட்டிங்க தானே?. ”

Advertisement

   மூவரும் ஓருவரை ஒருவர் பார்த்து ஒருசேரநீங்க சொல்லியிருப்பீங்கனு நினைத்தோம். ”

  பெண்கள் மூவரும் வேந்தனை.. ஏனோ ஏற்பாடு கவனிக்கும் ஆள் போல்இதக்கூட பண்ணமா அப்படி என்ன பண்ணீங்க?. ‘ என்பது போலனான பார்வையை வேறு ஒன்றை நினைத்து கோபமும், நக்கலான பார்வையை கண்களில் காண்பிக்க..

   இதை கவனித்தவள்.. அண்ணாக்களை முறைத்திருந்தவனிடம்.. ” தனுநீங்களா இங்க மெஹந்தி வைப்பவர்களை வரச்சொன்னீங்க? “

    வேந்தன்இல்லைஎன தலையசைக்க.. இப்போது ஆண்கள் பெண்களை பார்க்க.. ” நாங்க பேசிஷயல் செய்துட்டு போகும்போதே இங்க வரசொல்லிட்டோம். ” பொறுப்பாக செய்துவிட்டேன் என்ற குரலில் நந்தினி கூற..

   இவர்கள் மாறி மாறி உடை, நகை, மெஹந்தி டிசைன் என அதை பற்றி யோசிக்கவிடமால் செய்து தேவையில்லாத சடங்கத்திற்கு ஆளக்கிவிட்டனர்.

   ” வேந்தா.. ” சடங்கமாக கமலேஷ் அழைக்க..

   கல்யாண நிகழ்வில் இதுபோலானா பதில் கூறமுடியாத சில சடங்கடங்கள் வரும். நல்லவேளையாக எழிலரசிக்கு.. ” அண்ணா சாப்பாடு வீட்டில் இருந்து இங்க வருதா. கூடவே சித்தியும், கார்த்தி அண்ணாவும் வரங்களா. அமுதா அண்ணா மெசேஜ் செய்துயிருக்காங்க. ”

   தனுவிடம் திரும்பிநாம்ம ஹாலிற்கு போலாம். ” அங்கு இருக்க பிடிக்காமல் கூற..

   ” இரு அரசி. சக்கரை தண்ணி எடுத்துட்டு போகலாம். ” அவளின் முகம் சிறு கோபத்தை காட்டியதை பார்த்தான். ஏன் என தெரியவில்லை. இருந்தாலும் கையில் நன்றாக, காலில் சிறிது மட்டுமே உதிர்ந்து இருக்கிறது.

   அதற்கு வைக்க வேண்டுமே என கமலேஷை பார்க்க.. ‘ அப்பாடாஎன அவனே தேடி எடுக்க.. கப்பில் சக்கரை கலந்து கொடுத்தான்.

   கமலேஷ் செயலை கோபத்துடன் பார்த்திருந்த நந்தினியை பார்த்து.. எழிலரசியின் கோபம் அதிகமாக..

   தன் அண்ணாவை பார்த்தவள்.. ” தீபன் அண்ணா.. ” என்ன எழில்?. என பார்க்க..

   அண்ணா பங்ஷனிற்கு தேவையானதை நீங்க கடைசி நேரத்தில் சொன்னா கூட தனு.. அதை முடிந்தளவு நிறைவேற்றி கொடுப்பார். ஆனா நீங்க கூறியதற்கு.. அவரா வேறு என்ன தேவைகள் வேண்டும்?. என்று யோசித்து செய்ய மாட்டார்.

   நமக்கு தேவையான மாதிரி மாற்றினா.. அதற்கு அழைத்தவர்களுக்கு வேண்டியதை யோசிக்க.. கவனிக்க வேண்டியதும் அனைத்திற்கும் யார் மாற்றினாங்களோ அவங்கதான் அதற்கு முழுபொறுப்பு. “

   அவளின் எண்ணம் சரிதான்.. இருந்தாலும் மச்சான்களின் மேல் அக்கறையில்.. ” அரசி அவங்க ஏதோ வேலையில் மறந்துயிருப்பாங்க. ”

   அவனை முறைத்து.. ” ஆமாம்.. மறந்துட்டாங்க தான்.. நீங்களும் கல்யாண மாப்பிள்ளை என்பதையும் மறந்துட்டாங்க போல. ” சற்று கோப குரலில் வார்த்தை ஆண்களிடமும் பார்வை பெண்களிடம் இருக்க..

  யாரிடமும் சொல்லும் முன்னமே மெஹந்திக்கு ஆட்களை அழைக்க.. போட வரவங்களை சரியா.. இங்க மாற்றி வரச் சொன்னவங்களுக்கு.. அவங்க வீட்டிற்கு வந்துட்டு போகும் போது சாப்பிட வைத்துதான் அனுப்பனும்.. அதையும் மாற்றி கூறனும்.. இல்ல ஞாபகம் படுத்த வேண்டும் என்ற விஷயம் கூட தெரியாத?. ” இப்போது நேரடியாகவே பெண்களை பார்த்து கேட்டாள்.

 

   கல்யாண ஏற்பாடு பண்ணுறவங்க டீலைலஸ் கொடுத்தாச்சு. யார் யாருக்கு என்ன தேவையே இனி அவங்களிடம் சொல்லி எல்லாம் சரியா நடக்குதா?. நாம்ம சொன்னது நம்ம கிட்ட அது வந்துருச்சா.. என்று சரி பார்த்துக்க வேண்டியது அவங்க அவங்க பொறுப்புதான். “

 

    முயல்குட்டி கோபத்தில் கூட அழகாக கண்ணை உருட்டி பேசுவதை பார்த்துட்டே இருக்கனும் போலதான் இருக்கு.. ஆனா முச்சும் வாங்குறாளே.. இவள பேசவிட்டா எல்லோரையும் தனித்தனியா எல்லாவற்றையும் செய்துக்க வச்சுருவா. மூன்று மச்சான்களும் பாவமாக தன்னை பார்ப்பதில் சிரிப்புதான் வந்தது.

   சரி அரசி சொல்லி முடிச்சிட்டியா. போலாமா?. ” சிரிப்புடனே கேட்க..

   அவனை கிள்ளி.. ” அண்ணாகிட்ட வாங்கிட்டு வாங்க. ” அவனை முறைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டாள். அவள் சென்றவுடன் மற்ற பெண்கள் செல்ல பார்க்க.. அஸ்வின் அவர்களை நிற்க கூறிவிட்டான்.

   கிள்ளிய இடத்தை தேய்த்து விட்டாவாரு. கமலேஷிடம் சர்க்கரை கரைசலை வாங்கியவனிடம்.. ” வேந்தன் சாரி.. டெகரேஷன் மாற்றி சொல்லும் போது இதை மாற்றி இருப்பீங்கனு நினைச்சேன். ”

   அஸ்வின் இது சின்ன விஷயம்.. இதுக்கு போய் சாரி சொல்லுறீங்க. நான் தான் அதை யோசித்து பண்ணியிருக்கனும். அந்நேரத்தில் அதுபற்றி நினைவு வரல. ”

   அருகில் சென்று மூவரையும் பார்த்து.. இனி நான் அரசி பக்கத்தில் இருக்கும் போது மட்டும்.. இந்த மாதிரி ஏதாவது சொன்னா மறக்காம செய்துட்டனா கேட்டுவிடுங்க. அவ சொன்னத்திற்காக என்கிட்ட கேட்க யோசிக்காதிங்க. சரியா. “

 

   கமலேஷ் அவனை போல மெல்லிய குரலில்.. ” ஏன்டா எழில் கைய பிடித்திருப்பதால் எல்லாம் மறந்து போய்விடுவாயா? ”

   புன்னகையுடன்.. ” ம்.. நீயே பக்கத்தில் வந்தா கூட யார்டா நீ?. கேட்பேன். ”

   மூவரும் புன்னகைத்து.. ” மாமா.. அந்த அளவிற்கு முத்திவிட்டாதா?. ”

   ஆம் என தலையசைத்து.. ” அப்படி ஆகி பல வருடம் ஆச்சு தீபன். ஏதோ உங்க தங்கை புண்ணியத்தில் தான் இத்தனை நாள் இவனை ஞாபகம் வைத்துயிருந்தேன். இனி சந்தேகம் தான். ”

   வசு, நந்தினியின் மீது அரசியின் நேரடியான பார்வை, வார்த்தை தாக்குதலில் கடுப்புடன் இருந்தவள்.. அஸ்வினின் நிறுத்தம் அவள்மேல் இன்னும் கூடுதல் கோபத்தை கொண்டு வந்தது.

   இப்போது மூவரும் எழிலரசியே பற்றி  புன்னகையுடன் பேசிக் கொண்டுயிருப்பதை பார்க்க முடியாமல்.. ” அது எப்படி அண்ணா என்ன சொல்லுறோமோ? அது மட்டும்தான் செய்யவனு சொல்லுறாங்க?. தங்கை கல்யாணத்திற்கு செய்யும்போது எல்லாவற்றையும் யோசிக்க வேண்டாம்மா?. “

 

   அவள் முகத்தில் ஒருவர் மீதான அடங்கபட்ட வெறுப்பு, கோபம்.. யார் மீது?. அது எதனால் என்பது புரிந்து.. ” ம்.. யோசிக்கனும் தான். ”

   அவனின் பார்வை ஆண்களிடம் இருக்க.. ” நான் உங்ககிட்ட கேட்டா.. எதுக்கு அவங்கள பார்த்து பதில் சொல்லுறீங்க?. “

 

  ஏன்னா?. இவங்க யார்?. நான் யாரு?. நாங்க எல்லாம் அண்ணாகள் தான். நானும் கல்யாணமாப்பிள்ளை தான்.. என்னைய மாதிரி பல வேலை செய்யாட்டியும்.. ஒருசில வேலையவாது பொறுப்பா.. செய்ய மாட்டீங்களானு அரசியும் இவங்க தங்கைய ஞாபகபடுத்திட்டு போனா. “.

   இனி இதுபோலநடக்கமா பார்த்துக் கொள்ளனும். சரியா. ” ஆண்களை பார்த்து கூறிய படியே..

   வசுந்தராவின் கைகளை பார்த்துவிட்டு.. கால்களை சற்று தள்ளி நின்று பார்த்தான். தங்கையின் மேல் கோபமும் வருத்தமும் இருக்கிறது தான். ஆனால் திரும்ப கிடைக்காத இந்த நிமிடங்களை இழக்க விரும்பவில்லை. கேட்டதற்கு பதில் கூறினான்.. மெஹந்தியை பார்த்தவன் எதுவும் தெரிவிக்கவில்லை. அவளும் அவ்வாறே.

     அப்போது மெசேஜ் டோன் கேட்க பார்த்துட்டுவிட்டு.. ” கமலேஷ் அரசி தான். சாப்பாடு வந்துடுச்சா. கூடவே எடுத்து வைக்கவும் ஆட்கள் வராங்க போல. அவங்க எல்லாம் பார்த்துப்பாங்க. சரியா பண்ணுறாங்களானு கவனித்தா போதும். ”

   கையில் இருப்பதை காண்பித்து.. ” அஸ்வின் நான் இதைவைத்த பின் உடனே கிளம்புறோம். நீங்க இங்க சாப்பிட்டு அங்க கிளம்பி வாங்க. நைட் அங்கதான்இருப்பீங்க. நான் சித்திட்ட சொல்லிடுவேன். “

  பார்த்திபனிடம் கமலேஷ் உடன் வெளியே சென்று கொண்டுயிருந்த பெண்களுடன் இருந்த மேகாவை காண்பித்தும் கூற.. புன்னையுடன் இருவரும் சரி என தலையசைத்தனர்.

   கல்யாணம் முடியும் வரை யார் வீட்டிலாவது முடிந்த அளவு அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது அவனவளின் விருப்பம். வசு, நந்தினி வரமாட்டார்கள்.. அவர்கள் கூட கமலேஷ் இருக்க வேண்டும் என அவர்கள் சென்றவுடன் கூறினான்.

   அஸ்வின் மட்டும் சாப்பிடும் இடம் மாடிக்கு செல்ல.. அங்கு ஸ்பூனில் சாப்பிடும் படியான உணவவை சாப்பிட ஆரம்பித்து இருந்தனர்.

   வேந்தன், பார்த்திபன் ஹாலிற்கு வர.. அங்கு போட்டோ எடுத்துக் கொண்டவர்களுடன் அவர்களும்இணைந்து.. சில நிமிடங்களில் அங்கு இருந்தவர்கள் இரண்டு பெரிய காரில் கிளம்பினர். தன்னவளை மடியில் வைத்துக்கொண்டான்.

    வேந்தன், எழிலரசி, இன்பா,திலகன், சத்யா, வினோத்  மட்டும் ஒரு அறையில் இருந்தார்கள். தர்ஷினி மருதாணி கைகளை கழுவிவிட்டாள். வேந்தன் தன்னவளை வேண்டும் என்றே கழுவ அனுமதிக்கவில்லை. இங்கும் அவர்களுக்கு இரண்டு இனிப்புடன் இரவிற்கு ஏற்றவாறு 16 வகை உணவு தலைவாழை இலையில் இருந்தது.

   வேந்தன் இருவருக்கும் சேர்த்து ஒரு இலையில் வைக்ககூறி.. அவள் அத்தைகளின் முறைப்பை பெற்று.. புன்னகையுடன் தன்னவளிற்கு போதுமாக அளவு அனைத்து உணவையும் ஊட்டினான். இவன் இப்படிதான் செய்வான் என தெரிந்ததால் தான் தனிஅறை.

   அனைவரும் சாப்பிட்டவுடன் வேந்தன், எழிலரசி, பிரியதர்ஷினி, பார்த்திபனிற்கு உடைகள் கொடுத்துவிட்டு பெரியவர்கள் கிளம்பி விட்டனர். சித்ராவிற்கு அஸ்வின், பார்த்திபன், நண்பர்கள் என அனைவரும் இங்கு இருப்பார்கள் என்று கூறியதால் வேந்தனை பற்றிய நிம்மதியான உணர்வுடனே பெரிய வீட்டிற்கு சென்றார்.

   தன்னவளின் அறைக்கு சென்ற வேந்தன்.. தான் ஊஞ்சலில் அமர்ந்து தன் முன் அவளை நிற்க வைத்து.. தாவணியில் இருப்பவளின் இடையில் ஒட்டியானம் மாட்டி அழகு பார்த்து.. பின் மடியில் அமர்த்தி அவனின் முத்த பாக்கியை கொடுத்தபின் அவளை முடியும் மட்டும் தனக்குள் புதைத்துக்கொண்டான்.

 

   தனு நீ வெளிய போ.. எல்லாம் டிரஸ் மாற்றி வந்துயிருப்பாங்க. ”

    ம்.. போறேன். நீ ஏன் மாமா வீட்டில் அப்படி பேசின. தனித்தனியானு எல்லாம் செய்துக்கொண்டா நல்லாயிருக்குமா?. அவங்க எல்லாம் நகை, புடவை என்று பெண்ணுங்களுக்கு பார்த்து எடுத்து.. உதவி செய்து மறந்துட்டாங்க. எல்லாம் நம்மள மாதிரியே இருப்பாங்களா. ” அவளின் இப்போது அணிந்து இருக்கும் உடை கூட அவன் மூவருக்கும் எடுத்து கொடுத்த உடை தான்.

   அவனின் கன்னத்தை பிடித்திழுத்து.. அவனிற்கு முத்தம் கொடுத்தபடியே.. ” ம்.. என் தனுமாமா எனக்கு பிடித்தமாதிரி பார்த்து பார்த்து அவர போல யாரும் எடுக்க முடியாதுதான். ஆனா அண்ணாக்கள் செலக்ட் செய்ததை அப்படியே அவங்க எடுத்து வைச்சுட்டாங்களா?. “

    இல்லைஎன அவன் பாவமாக தலையசைக்க..

   புன்னகையுடன்.. ” தனு ஒரு கல்யாணம் நடந்தாலே கல்யாண பொண்ணுக்கு புடவை, நகை எடுத்து வைப்பதில் குழப்பம் வரும்.

   இதில் நாலு ஜோடிக்கு. தர்ஷினி தவிர.. மீதே மூனுபேரு ஒரே குணம், நிறம் இருப்பவங்க. அதனால யார் போடுவது மற்றவர்களை விட நல்லாயிருக்கும் என்று அதை போடும் நேரம் வரை மாற்றிக்கொண்டேஇருப்பாங்க.

   இதை நான் கடையில் அவங்க வாங்கும் போதே பார்த்து புரிந்து கொண்டது. எனக்கே தெரியுது.. ஆனா அவங்க இதை புரிந்துக்கொள்ளமா.. அவங்களோடவே இருந்துட்டு.. என் தனுமாமாவை குறை சொல்லும்படியா நடந்து கொண்டாங்க. அதவிடசற்று கலக்கிய குரலில்..

      நம்ம பிரச்சனைக்கு காரணமான நந்தினி கூட சேர்ந்து வசுந்தராவும், மேகாவும்.. அண்ணா என்ற உணர்வு இல்லாம.. ஏதோ அவங்களுக்கு வேலை செய்து கொடுக்கும் ஆள்போல பார்த்தாங்க. அதான் அப்படி பேசிடேன். “

   அவனின் கழுத்தில் கண்ணீரை உணர்ந்தான். வேந்தனிற்கு அவளின் கோபத்திற்கும், கூறியதற்கும் காரணம் அறிய வேண்டியிருந்ததால் கேட்க.. முயல்குட்டி அழுவாள் என எதிர்பார்க்கவில்லை.

 

   ஓய்.. இப்ப நீயா அழுகைய நீப்பாடிட்டு நிமிரனும். இல்ல என்னைய உணர வைக்க ஆரம்பித்துவிடுவேன். ” சில நொடிகள் கடக்க.. அவளவன் அவள் இடையின் இடையில் சுண்டுவிரலால் சிறுகோடு போட.. அரண்டு எழுந்து அவனை முறைப்புமாய் பார்க்க.. அவன் புருவத்தை  ஏற்றி இறக்கி புன்னகைத்தான்.

   பின் கண்டிப்பான குரலில்..முயல்குட்டி உனக்கு எந்த ஞாபகமும் வரக்கூடாது சொல்லியிருக்கேன். சிலரோட அர்த்தமற்ற பார்வை எல்லாம் மதிப்பு கொடுத்து என் முயல்குட்டி பேசினா.. இல்ல அதை நினைத்து வருந்தினாதான்.. அது உண்மையோ.. ” முடிக்கும் முன் இதழில்இதழ் பதித்து மன்னிப்பு வேண்டினாள். அவளவனும் தன் முயல்குட்டியை மன்னித்து ஆழந்த முத்தம் பதித்தான்.

     சில நொடிகள் அணைப்பில் வைத்து பின் அவளை இறக்கி விட்டு.. லைட்கீரின் ஜீன்ஸ், லைட்புளூசட்டை அணிந்தவன்.. தன்னவளுடன் அவ்விடத்தில் மருதாணியுடன் புகைபடம் எடுத்துக்கொண்டு.. பின் கைகளை கழுவி வரக்கூறி.. கைகளில் பல முத்தங்களை பதித்து.. மீண்டும் புகைபடம் எடுத்தபின்.. இரவு அணியும் தாவணியை எடுத்து கொடுத்தான்.

 

    தன்னவள் அறையில் இருந்து உடை மாற்ற வெளிவந்தவன்.. அங்குயிருந்த சிலரின்ம்.. தைரியம் ஜாஸ்தி!. ‘ என்ற பார்வையை..  புன்னகையுடன் ஏற்று.. இன்பா அறையில் தனக்கு என்று இருக்கும் அலமாரியில் இரவு உடையை எடுத்துக்கொண்டு.. தன்னவளின் பூவாசம் அதிகம் இருக்க.. நண்பர்களின் பக்கம் உட்கார்ந்தால் ஏதேனும் கூறுவார்கள் என குளிந்துவிட்டு ஹாலிற்கு வந்தான்.

   திலகன் வருபவனை அர்த்தம் புரிந்து புன்னகையுடன் பார்த்தான். ‘ போடாஎன பார்த்துவிட்டு இன்பாவின் அருகில் அமர்ந்தான். கமலேஷ், அஸ்வின், கதிரவன், திலகன் இருக்க.. மேகா நந்தினி வீட்டிலே இருந்து நேராக அவள் வீட்டிற்கு சென்றுவிட்டாதால்.. பார்த்திபன் தங்கையுடன் இருக்கிறேன் என கிளம்பிவிட்டான்.

 

   வேந்தன் எங்கள வர சொல்லுட்டு.. நீங்க வர இவ்வளவு நேரம்?. தூங்கிட்டீங்களோ நினைத்தோம். ”

   எல்லாம் உங்களாலதான் நான் வர நேரம் ஆகிவிட்டது. ” அவள் வருத்தபட்ட காரணம் கூற.. அஸ்வின் முகம் வருத்தத்தை தத்தெடுக்க.. கடவுளே என அவரை அழைத்துவிட்டு..

   அஸ்வின் நீங்களும் அரசி மாதிரி தேவையில்லாம நடந்து முடிந்ததை யோசிக்காதீங்க. அரசிக்கு மட்டும் இல்ல நான் யாருக்கு அந்த நினைவு வரும்படியா.. எதுவும் நடந்துவிடக் கூடாதுனு என்றுதான்.. எல்லோருக்கும் முன் இதை சொன்னேன்.

   உங்க கல்யாணம் மூலம் அடுத்தடுத்த மாசம் நடக்கவேண்டிய கல்யாணம் எல்லாம் ஒன்னாவும்.. அதைவிட நீங்க எங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா உணர்வை கொடுத்து.. எங்க கல்யாணம் நடக்க போகுது.

   அதற்கு முன்ன இது பெரிய விஷயம் இல்ல. அவளுக்கு எல்லோரும் இந்த நேரத்தில்..  நடந்த சூழ்நிலை புரிந்து.. எல்லோருமே சரியா நடந்துக் கொள்ளனும் எதிர்பார்க்காறா.

   அப்பதான் நடந்தது..  யாருக்கும் ஞாபகம் வராது நினைக்கிறா. ஏன்னா அவளுக்கு யார் நினைவில்கூட அவளை வே.. ” ண்டாம் என்று கூறியது.. ‘ முடிக்க முடியாமல் திணற..

   திலகன் அருகில் அமர்ந்து அவனின் தோள்அணைத்தான்.. குனிந்து தன்னை நிலைப்படுத்தி கொண்டு..

   “நினைவு வர பிடிக்கல. சடங்குகள் எல்லாம் எப்போது நடக்கும் கல்யாணத்தில் நடப்பது போல எல்லாம் முறையா.. சரியா இருக்கனும். அப்படி இல்லையென்றால் பிரச்சனை நாள் நடந்த அனைத்தும் ஞாபகம் வந்து விடுமோ என்றுதான் அவ வருத்தமே. “

 

  ம்.. எழிலரசி வருத்தம் புரியுது வேந்தா. சடங்குகள், அதற்கு வருபவர்களுக்கு குறை இருக்ககூடாது மாதிரி தான்.. கல்யாண பெண்களுக்கும் எந்த குறையும் வரக்கூடாதான் நாங்க அவங்களுக்கு செய்ய பார்க்கிறோம். உன்ன மாதிரி பழகல இல்லையா அதான் எல்லாம் சொதப்பி.. நாங்க டென்ஷசன் ஆகி.. எதையும் யோசிக்கும் நிலையில் இல்ல.” வருந்தமும், மெல்லிய புன்னகையுடன் கூற..

 

   ம்.. அதுக்கும் அரசி உங்களை திட்டினா. ” அவள் கூறியதை சிரிப்புடன் கூற..

   ” வேந்தன் இப்படியெல்லாம் நினைப்பாங்கனு தெரியுமா?. எழில் ஆரம்பத்திலே ஒரு ஹின்ட் கொடுத்துயிருந்தா.. இன்னைக்கு அவங்களை அழகா சமாளித்து இருப்போம். “

 

   அஸ்வின் இந்த ஒரு விஷயம் அரசி சொல்லாம்.. மற்றது?. அதான் அவ கேட்குறா. அவங்களோட நடவடிக்கை பார்த்து அவங்க பிளாஸ் அண்ட் மைனஸ் என்னவென்று நீங்களாதான் புரிந்து கொண்டு.. அவங்களையும் சமாளிக்கனும்.. வீட்டிற்குள்ள இருந்த படி என்ன கல்யாண வேலையும் செய்ய வேண்டும்.. என்று சொல்லுறா. ” தன்னவளின் கொலுசு சத்தம் அடங்கியது போல இருப்பதை கவனித்த வேந்தன்.. சட்டென்று பேச்சை நிறுத்தி..

   இன்பா பால் எடுத்து வந்தில்ல.?. “

 

    இவர் தான் இங்கு இருக்காரு. காது, உணர்வு எல்லாம் எழிலரசி கிட்ட இருக்கு.. மாமாவை எப்போதும் போல பூரித்து.. ‘ ஆம்என தலையசைத்து இன்பன் பால் வைத்துயிருக்கும் பிளாக்ஸ் கொடுக்க.. ‘வந்துவிடுகிறேன்என்ற பார்வையை செலுத்திவிட்டு தன்னவள் அறைக்கு சென்றான்.

 

   டேய் இன்பா.. முன்னாடிதான் யாருக்கும் தெரியாது.. மாமா மாடிக்கு வரமா இருந்ததாரு. இப்பவர வாய்ப்பு இருக்குடா. இன்னைக்கு அண்ணாவ நம்ம கூட படுக்க சொல்லு. ”

   இன்பா ஏதோ கூற வர.. அதற்குமுன்.. ” ஆமாம் ஆமாம்.. நீ சொல்வதை கேட்டு அப்படியே அவன் மாமாவிற்கு எதிரா பேசிடுவான். சத்யாவும், இவனும் ஒரே மாதிரி. கதிரவன் அவன் எழிலரசி தூங்க வைச்சுட்டு.. நம்ம மேல பாவம்  பார்த்து கொஞ்ச நேரத்தில் வருவான். பின்ன நம்மள தூக்கவச்சுட்டு திரும்பி உள்ள போயிடுவான். “

 

   என்ன மாமா..  எழில் குட்டி ரூம்மிற்குள் இருக்கா என்ற தைரியமா?. ”

   அவனை முறைத்து.. ” ஆமாம்டா.. இன்னும் இரண்டும் பேரும் எழிலரசிய எழில் குட்டி, முயல்குட்டி கூப்பிட்டே இருங்க. அதான் ஆவுனா அழுத்துட்டு இருக்காங்க. ”

   கமலேஷ் பக்கம் திரும்பி திலகன்.. ” கமலேஷ் வசு பற்றி சொல்லனும். ” தயக்கமாக கேட்க..

   அவனை முறைத்து.. ” சொல்லுடா. ”

   வேந்தன் நீங்க எல்லாம் கிட்சனில் இருந்தப்ப.. சத்யா.. சாருவிடம் ஏன் வர இவ்வளவு நேரம்?. என்று கேட்டாங்க. உன் தங்கை சொன்ன விஷயம் கேட்டு பயந்தே போட்டேன்.

   உன் தங்கை பிரண்டஸ் வசுந்தராவை பார்த்தவுடனே.. என்ன உன் அண்ணா.. எனக்காக எதுவும் செய்வாங்கனு!. சொன்ன.. இப்ப என்னடானா.. உன் கல்யாணம் சடங்குகள் எதுவும் நீங்க இருக்க வீட்டில் நடக்கலபோலனு நக்கலா பேசினாங்களா..

    எழிலரசி வந்தால தான் இப்படி உன் வீட்டை விட்டு பெரியப்பா வீட்டில் இருக்க., ஆரம்பத்தில் உறுதி அன்று பிரச்சனை வந்தவே.. நீ எழிலரசியை வேண்டானு வீட்டில் எல்லோரிடமும் சொல்லி உறுதியே நடக்கவிடமா பண்ணியிருக்கனும் சொன்னாங்களா.

   இப்ப இப்படி கல்யாணம் அவரசமா நடக்கபோகுது. நீ எப்படி வேலைக்கு போவனு. கேட்டாங்களா. அதற்கு வசு.. நான் கண்டிப்பா சென்னைக்கு வேலைக்கு போவேன்.. இல்லையென்றால் யாரும் என்னை மதிக்க மாட்டாங்க. போககூடாது சொன்னா திரும்ப நான் ஏதாவது பண்ணிப்பேன் என்று சொன்னுச்சா. மேலும் அதற்கும் ஏதோ பேச வந்ததாங்களா.. அதைதடுத்து வசு கூடவே இருந்தேன் சொன்னாங்க. ”

   அஸ்வின் அதிர்வாகவும்.. அவள் இப்போது இருக்கும் மனநிலையில் எதிர்பார்த்தேன்!. என்ற உணர்வில் கமலேஷ் திலகனை பார்த்தான்.

  

 

  

   

  

   

  

   

   

  

  

   

   

  

   

   

  

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!