Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 39.5

 

நாம் 39(5)

 

   அஸ்வின் இங்க நீங்கயெல்லாம் இருப்பீங்க தானே?. ” கல்யாணமான பெண்கள் யோகா, காவ்யாவின் மீதும் தேவகியின் பார்வை இருக்க.. எழிலரசிக்கு இன்று வைக்கவில்லை.. அதனால ஆர்த்தியோட யாரும் வர மாட்டார்கள். தங்கள் என்ன செய்ய?. என யோகா எழிலரசியை பார்க்க.. அவள் வேந்தனை பார்க்க. அவன் சரி என தலையசைக்க.. பின் அனைவரும் சம்மதம் கூறி..



Advertisement

   இளையவர்கள் அனைவரும் இங்கு இருக்க ஒத்துக்கொண்டனர். இதில் எழிலரசியை வைத்து அஸ்வின் உட்பட அனைவரும் இங்கு இருக்க சம்மதம் கூறியதில் நந்தினிக்கு கோபம் தான். பின் தன் வீட்டில் நடக்கிறதே அதுபோதும் என தேற்றி புன்னகையுடன் வீட்டை அலங்கரிக்க வேண்டி.. கமலேஷ், அஸ்வினிடம் கூற.. அவர்கள் வேந்தனிடம் கூற..

   புன்னகையுடன்.. தேவையான இடத்தை போட்டோ, வீடியோ எடுக்க கூற.. வந்தபின் தன்னவள் வீட்டை அலங்கரிப்பவர்களிடம் அனுப்பி.. பின் கால் செய்துஅங்கு வாசல், ஹாலில் மட்டும் போதும்.. இங்கு செய்ய வர வேண்டும்என தன்னவளை யாரும் அறியவண்ணம் மென்மையாக கைபற்றியவாரே அமர்ந்த இடத்தில் இருந்து கட்டளையிட்டான்.

   அனைத்தும் முடியவும் கணேஷ், ரவிந்திரன் வந்தனர். சுந்தர்ராஜன் நேரம் ஆகும் என சாப்பிட கூறிவிட.. சாமிக்கு வைத்துவிட்டு.. நந்தினி , வசு, கமலேஷ், வேந்தன் தன் அரசியுடன் அமருவேன் என கூறியதால் திருமண ஜோடிகள் அனைவரையும் தனியாக ஒரு அறையில் அமர வைத்து தலைவாழை இலையில்.. இனிப்பு மூன்றுவகையில் ஆரம்பித்து 21 உணவு சாப்பிட்டனர். வேந்தன் எழிலரசியுடன் சுவர் ஓரமாக அமர்ந்து.. வேந்தன் தன்இலையில் மட்டும் வைக்ககூறி..

Advertisement

   அவள் சாப்பிடும் அளவு மட்டுமே அவள் இலையில் எடுத்து வைத்து.. செய்த அனைத்தையும் சாப்பிட வைத்துவிட்டான். இதை பார்த்த அனைவரும் அவனின் எழிலரசியின் மீது இருக்கும் உரிமையான அன்பை தன் இலையில் இருந்து கொடுத்தும்.. மற்றவர்களின் மீதியிருக்கும் அன்பை செய்த உணவு அனைத்தையும் சாப்பிட வைத்திலும்..

Advertisement

 

    சித்ரா மற்றும் வசுந்தரா மீது கோபத்தில் இருந்தும்கூட.. தங்கை கல்யாணத்திற்கு  உடைகள், நகைகள் அனைத்தும் வாங்கியும், சீர்பாத்திரங்கள், வீட்டு பொருட்கள் மற்றும் வினோ, யோகாவிற்கும்.. கால்பகுதி பொருட்கள் என அனைத்தும் லிஸ்ட் அனுப்பி புதுக்கடையில் இறக்கிவிட்டானே என பூரித்தும் போனார்கள். அவர்களில் சிலர் சித்ரா மட்டும் அந்நேரத்தில் தன் அண்ணா இல்லை வசுவை பொறுமையாக கையாண்டு இருந்தால் நான்கு கல்யாணம் அவசரத்தில் நடக்க வேண்டிய சூழ்நிலை வந்துயிருக்காது என்ற குறை.. அனைவரிடத்திலும் இருக்கதான் செய்தது. 

 

Advertisement

   பின் வேந்துக்கு உரிய உடையை எழிலரசிக்கு கொடுக்கும் போது கொடுக்கலாம் என நந்தினி, வசு, கமலேஷிற்கு மட்டும் கொடுத்து மாலை பார்க்கலாம் என கணேஷ் வீட்டினர், வசு, சித்ரா மட்டும் இருக்க.. அஸ்வினும் தன் அம்மா, அப்பாவுடன் என அனைவரும் கிளம்பிவிட்டார்கள்.

   வேந்தன் தன்னவளுடன் அவள் அறையில் உடை மாற்றமாலே அவளை கட்டிக்கொண்டு படுத்த அடுத்த நொடி உறங்கிவிட்டான். எழிலரசி தன்னவனின் முகத்தை சில நிமிடங்கள் விரலால் அளந்து.. அவளும் சிலநிமிடங்களில் உறங்கிவிட்டாள்.

 

    மாலை கமலேஷ், நந்தினியின் வீடு..  மணப்பெண்களின் பள்ளி, கல்லூரி தோழிகள் மற்றும் ஆண்களில் மணமகன்களின் ஒருசில நண்பர்களால் நிரம்பி இருந்தது.

    நந்தினி யாருக்கும் தெரியாது செய்த திருமணத்தை.. அவளின் தோழிகள் எதிர்பார்க்கவில்லை. பின் அஸ்வினை பார்த்தும்.. அதில் இருந்த ஆதாயத்தை அறிந்து.. ம்.. தாராளமாக செய்யலாம் என எண்ணி அவளுடன் இணைந்துக் கொண்டனர்.

   நந்தினி, மேகா, வசு மூவரும் அடர்பச்சை, நீலம், ஆரஞ் வண்ண டாப், முட்டிவரை இருக்கும் லைட் புளூ வண்ண பேட் அணிந்து தனித்தனியாக தன் தோழிகளுடன் அழகுநிலைபெண்கள் மற்றும் மெஹந்தி போட என்று சிலரை வரவழைத்து கை, காலில் முட்டி வரை மாடியில் போட்டுக் கொண்டுயிருக்க.. வசுவுடன் சாருலதா இருந்தாள்.

 

    கீழே அரைத்து கொண்டு வரக்கூறிய மருதாணியை தர்ஷினியும், எழிலரசியும் மஞ்சள், வைலட் பட்டுபாவாடை  தாவணி உடையை ஒன்றுபோல அணிந்து.. தன் துணைகளின் கையால் வைத்துவிட்ட மருதாணியை வைத்திருந்தனர்.

   எழிலரசி திருமணத்திற்கும் ஏற்றவாறு என கை மற்றும் கால் விரல்களின் நுனி மற்றும் கையின் நடுவில் மட்டும் வைத்தும்.. தர்ஷினி அதுபோல இன்னும் சற்று கூடுதலுடன் வைத்துயிருந்தாள். யோகா, சுரபி, கூடிய பெண்களும் தங்களுக்கு பிடித்த அளவு அழகுநிலை பெண்களின் கையில் மட்டும் போட்டுக் கொண்டனர்.

  

   சத்யாவுடன் வந்த திலகன்.. ” என்னடா நீங்க இங்க உட்கார்ந்து இருக்கீங்க. ” ஹாலில் அமர்ந்துடிவி பார்த்துக் கொண்டுயிருந்த கமலேஷ், அஸ்வின், பார்த்திபனை பார்த்து கேட்க..

   கடுப்புடன் பார்த்திபன்.. ” ஏன் வாசலில் போய் உட்கார்ந்து இருக்கனும்மா?. ”

   புன்னகையுடன்.. ” அதுக்குள்ள என்ன அவசரம்.. அதுக்கெல்லாம் இன்னும் நாள் இருக்குனு நினைக்கிறேன். ”

   திலகா கடுப்பேற்றாம ஓடி போயிடு. வெளிய எங்கயும் போககூடாது வீட்டில்தான் இருக்கனும் என்று சொல்லிட்டாங்க. இங்க இருந்தா.. இந்த சேலை, நகை நல்லாயிருக்கானு மாற்றி மாற்றி கேட்டு.. சொன்னதை எடுத்து வைக்காமா.. அப்படியே மாற்றி வைச்சுயிருக்காங்க.

   தலைவலி வந்துகாபி, டீ இத்தோடு நாலு குடுச்சுட்டேன். ” பார்த்திபன், அஸ்வினின் நிலையும் அதே என அவனை பார்த்து பின் கிரிக்கெட் பார்த்துக் கொண்டுயிருந்தனர்.

 

   அப்ப வேந்தன் கூட.. ” முடிக்கும் முன்..

   வேகமாக திரும்பிய அஸ்வின்.. ” வேண்டாம் திலகன்.. அவர் பண்ணுற கூத்து அதைவிட இருக்கு. ”

   புன்னகையுடன்.. ” என்ன இங்கும் வந்து எழிலரசிக்கு முட்டை தோசை ஊற்றி.. ஊட்டிவிட்டுட்டு இருக்கானா?. “

 

   ஆமா அண்ணா.. அதில இங்க ஊற்றக்கூடாதுனு.. ஹோட்டலில் இருந்து ஊற்றி எடுத்துவந்து ஊட்டிட்டு இருக்கார். இவரோட காலையில் இருந்து மேகா இப்ப என்ன சொல்லப்போறா?. கொஞ்ச நேரத்தில் என்ன கேட்பானு?. ஒரு அதிர்ச்சி நிலையிலேயே இருக்கேன். “

 

   ரொம்ப பேசாதடா.. மேகா கேட்பது உனக்கு அது பிடிக்காத மாதிரி சலுச்சுக்கிற. ” மெல்லிய குரலில் கேட்க.

   புன்னகையுடன்.. ” ம்.. பிடிக்கிதுதான்.. ஆனா அவர மாதிரி வெளிப்படையா செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தா அதுமுடியுமா?. ”

   ம்.. அது வாஸ்தவன்தான். “

 

   அவன் நிமிர.. பேச்சின் நாயகன் தன்னவளை அள்ளிக்கொண்டு அவர்கள் எதிரில் இருந்த ஷோபாவில் அமர வைத்து.. பின்னால் வந்த இன்பா சேர் வைக்க அதன்மீது கால் நீட்டிவிட்டான். தர்ஷினி காலிற்கு இரவு படுக்கும் முன் வைக்கலாம் என கைக்கு மட்டுமே வைத்துக்கொண்டு கதிரவனுடன் வந்தாள். சத்யா மற்ற பெண்களுடன் இருந்தாள்.

 

   அஸ்வின்.. வேந்தன், எழிலரசியை முறைக்க முடியாமல் இருவருக்கும் சேர்த்து இன்பாவை முறைத்தான். இதை கவனித்தவன்..

   மெல்லிய புன்னகையுடன்.. ” என்ன மாமா என்மேல பார்வையெல்லாம் பலமா இருக்கு?. ”

   சம்பளம் கொடுக்கும் முதலாளிய பகைத்துக் கொள்ள கூடாதுனு.. உன்னைய பார்க்குறேன். “

 

   இதை கவனித்த திலகன்.. சத்யா கூறியதை வேந்தனிடம் கூறினான்.

   ” தீபன் நீங்களும் அஸ்வினும் ஓரே கம்பெனி தானே?. ”

   ஆமாம் மாமா. சேர்ந்து ஆறு மாதம்தான் ஆகுது. ”

   நீங்க வேண்ணா.. ” முடிக்கும் முன்..

   ” ஆஆ.. ” எதிர்பாராமல் கிடைத்தால் கத்தி.. ‘ என்னடிஎன்ற பார்வையில் தன் முயல்குட்டியை முறைக்க.. கத்தியதற்காக மீண்டும் கிள்ளி..

   ” என்ன அண்ணா சென்னைக்கு வர ஏற்பாடு பண்ணப்போறிங்களா?. ”

   ஆமாம்.. ” மீண்டும் கிள்ள போக.. அவள் கையை பிடித்து.. ” இருடி.. முழுசா கேட்டுட்டு மொத்தமா ரூம்மில் போய் கிள்ளு. ” கடைசியை மெல்லிய குரலில் கூற..

   அவனை முறைத்துவிட்டு.. பார்த்திபன் மற்றும் மற்றவர்களை பார்க்க.. நடுஹாலில் அமர்ந்து இவர்கள் செய்யும் கூத்தை அனைவரும் முறைப்பும் சிரிப்புமாக பார்த்தனர்.

    அதனை புன்னகையுடன் ஏற்று.. ” அண்ணா உங்களுக்கு சென்னைக்கு டிரான்ஸ்வர் வாங்கிகொடுத்தா.. வர விருப்பம் இல்லைதானே?. ”

   என்ன இல்லையாவா.. கொடுத்தா அடுத்த வாரம் அங்க இருப்பேனே. ஆனால் எழிலரசிஇல்லைஎன தலையாட்டா கூற.. புரியாமல் அவன் பார்க்க.. அய்யோ என அண்ணா என அவள் பார்த்தாள். இதனை கண்டுக்கொண்டான் அவளின் தனு.

    அவளின் தலையில் செல்லமாக கொட்டி.. பின் அவனே தேய்த்து.. பார்த்திபனிடம் திரும்பி.. ” தீபன் அரசி மேகாவிற்காக நீங்க இன்னும் ஆறுமாதம் அங்கேயே இருந்து.. பின் சென்னை மாறிவந்தா நல்லாயிருக்கும் என்று நினைக்கிறா. “

  ‘ அப்படிதானே?. ‘ என பார்க்க.. ‘ ஆம்என அவள்தலையசைக்க..

   அரசி நானும் மேகாவிற்காக தான் உடனே வர விருப்பமானு கேட்கிறேன். அங்க இருந்தா அதிகம் புரிந்துக்கொள்ள முடியும்தான். ஆனா இங்க எல்லோர் கூடவும் இருந்திட்டு.. தீடிர் என்று கல்யாணம் முடிந்து வேற மாநிலத்தில் தனியா இருந்தா ஆரம்பத்திலே மனதளவில் பிரச்சனை வரும். அதுக்கு தனியா அதே சமயம் கொஞ்சம் தூரமா சென்னையில் இருந்தா எல்லோருக்கும் வசதியா, திருப்தியா இருக்கும். ” சரிதானே பார்த்திபன், அஸ்வினை பார்க்க..

     அப்படிதான் நினைச்சேன் மாமா. “

   இதை கேட்டவுடன்.. எழிலரசி வேகமாக கால் எடுத்து எழபோக.. அவளை அவளவன் கைகட்டி முறைக்க.. கால்வலியைமறந்துட்டேன்என்ற பார்வையுடன் மெதுவாக கால்நீட்டி அமர்ந்தாள். இன்பா புன்னகையுடன் பாவாடையை சரி செய்துநீ பேசுஎன பார்த்தான்.

   எழிலரசி பார்த்திபனை இன்பாவின் பக்கம் வரக்கூற.. வேந்தனின் அக்கறையான முறைப்பை பார்த்து புன்னகையுடன்.. ” அங்க இருந்தே சொல்லுஉன் பக்கம் ஓவர் ஹீட்டா இருக்கும் போல. ”

   இன்னும் முறைக்கிறேன் என கன்னத்தை பார்க்கும் தன்னவனை.. போடா ‘ என பார்த்துவிட்டு.. ” அண்ணா நீ மட்டும் சென்னை மாறின.. அத்தைங்க மாறி மாறி வந்து அங்கு இருப்பாங்க. இல்ல மேகா அவங்களை அங்க வரவச்சு விடுவாங்க. தனு சொன்ன எல்லோர் கூடவும்.. கூடவே நாலு பசங்க ஒரு பொண்ணா வளர்ந்ததால சொல்லுறேன்.

   சென்னையில் உங்களுக்கு நார்மலான வாழ்க்கை இருக்கும்.. ஆனா மேகாவிற்கு உங்கிட்ட புரிதல் கண்டிப்பா வராதது. நீங்கதான் அவள புரிந்துக் கொள்ளனும் மட்டும் நினைப்பா. ஆரம்பத்தில் விட்டா பின்னாடி உங்களுக்கு தான் அவளவிட மன அழுத்தம் ஜாஸ்தி ஆகும்.

   அண்ணா மேகாவிற்கு அந்த இடம் பிடிக்கும்படியா ஆக்குவது நீங்க நடந்துக்கொள்வதில் தான் இருக்கு. அங்கயிருந்தா தான் இரண்டுபேருக்கும் நல்லது. ” இன்பாவிடம் அவள் நடந்துக்கொண்டதை பார்த்து புரிந்ததால் கூறினாள். தன்னவனையும் மேகாவின் துணை மற்றும் அண்ணாக்களை பார்க்க.. யோசனையுடன் இருப்பது போல இருந்தது.

   தங்கையின் குணத்தை நன்றாகவே புரிந்து வைத்துயிருக்கும் எழிலரசியை புன்னகையுடன் பார்த்து.. பின் திரும்பி.. ” பார்த்தி.. ஆபிஸ் பக்கத்தில் வீடு பார்த்து அங்க போய் இருங்க.. பிறகு தேவையான யோசிக்கலாம். ”

   சரி என தலையசைத்து.. தங்களுங்காக கேட்க வேந்தனை பார்க்க.. அவன் அருகில் இருந்த திலகன்.. ” பார்த்திபன் அதான் மேடம் சொல்லிடாங்கல. இனி மறுத்து பேசமாட்டான். ” நக்கல் போல கூற..

  அவனை முறைத்து.. ” சத்யா இங்க வாயேன். ” சத்தமாக தோழியை அழைக்க..

   வேகமாக எழுந்தவன்.. ” ஏம்மா அவ பாட்டுக்கு அங்க இருக்கா. ” கூறிக்கொண்டுயிருக்கும் போதே..

   ” என்ன எழில் செல்லம்.. திலகன் என்ன பண்ணாரு?. ” அவளும் எழில் போல ஒரே கலரில் உடையணித்து கையில் மட்டும் வைத்துவர.. இன்பா எழில் அருகில் இடம் கொடுத்து அமர வைத்தான்.

   சத்யா எப்படி திலகன் பற்றி கூறதான் எழில் அழைத்தா என்று சரியா கேட்கிறீங்க?. ”

   அஸ்வின் அண்ணா.. அவ அழைத்த விதத்திலே புரிந்தது. ” என்னடி என பார்க்க..

   புன்னகையுடன்.. ”  நாள் குறித்தாச்சுனு.. பயம் போன மாதிரி இருந்தது. அதான் டெஸ்ட் பண்ணி பார்த்தேன்.. இருக்கு. ” திலகனை பார்க்க..

   அவன் பார்த்திபன் வாசலை காண்பித்து புன்னகையை அடக்குவதை பார்த்திருந்தவனை முறைத்திருக்க.. அண்ணாவை அழைத்து ஏன்? என்ன கேட்க.. திலகன் கூறியதைகூற.. அனைவருக்குமே சிரிப்பு வந்தது.

    புன்னகையில் கலந்துவிட்ட திலகன் அப்படியே பெண்களின் மருதாணி காய்ந்ததா என பார்க்க.. காய்ந்திருந்தது.

   பின் அனைவரையும் பார்த்து.. ” ஹேய் இன்னும் கிளம்ப நேரம் இருக்குல.. அதுவரை கேம் விளையாடலாம்மா?. ”

   இங்க என்ன விளையாட என பார்க்க.. அவன் அருகில் இருந்த வேந்தன்.. ” டேய் புரியும்படியா சொல்லுடா. “

 

   இரு என டிவி ரிமேட் எடுத்து.. மியூஸ்க் சேனல் வைத்து அனைவரையும் பார்த்து.. ” இதில் இப்ப பாட்டு வரும் இல்ல.. அது கல்யாண சம்பந்தமா பாடலா இருந்தா அதையே பாடலாம்.. இல்ல டானஸ் ஆடா தோன்றினா ஆடலாம். அப்படி சாங் வரலனா?. அதில் வரும் ஹீரோ, ஹீரோயின், மியூசிக்போட்டவங்க படத்தில் வர சாங் பிடித்ததை செலக்ட் செய்து பண்ணலாம். இதை தனித்தனியாவும் பண்ணலாம் இல்ல இரண்டு மூன்றுபேர் சேர்ந்தும் பண்ணலாம்.”

 

    ஒருவரை ஒருவர் பார்க்க.. எழிலரசி வேந்தனை பார்க்க.. மெல்லிய புன்னகையுடன் சம்மதம் தெரிவித்தான். மற்றவர்களும் சரி என கூற.. வினோத், கமலேஷ் , அஸ்வின், பார்த்திபன், இன்பா, வேந்தன், எழிலரசி, சத்யா, திலகன், கதிரவன், பிரியதர்ஷினி அமர்ந்தனர்.

 

   மெல்லிசை பாடல்களாக வர..நீயும்நானும் சேர்ந்தே செல்லும் தூரமே.. ‘ பாடலை அஸ்வின் தனித்தனியாக பாட ஆரம்பித்து.. அதில் எழிலரசி இப்பாடல் பாட..

உன்னால் உன்னால் உன் நினைவால்

உலகில் இல்லை நான் தானே

உள்ளே கேட்கும் ஓசையிலே

உன்னை உன்னை கேட்டேனே

உன்னோடு சேர்ந்து நெடுந்தூரங்கள்

காலாற நடந்து மிதந்ததேனே

உன்னிடம் தந்த இதயத்தை தேடி

உன்னில் என்னை தொலைத்தேனே

எந்தன் விழி ஓரங்கள்

உன் இமையே சாயுதே

என் கண்களை மூடினால்

உந்தன் முகம் தெரியுதே

என் பகல் உன் கண்ணில்

நீ இல்லை என்றாலே

நான் ஏதும் இல்லா இரவு தான்

நான் உன்னை உனக்கே தெரியாமல்

கொஞ்சம் கொஞ்சமாக படித்தேனே

பூமியில் உள்ள காதலை எல்லாம்

உன்னால் வாழ்ந்தாய் ரசித்தேனே

இன்னும் இன்னும் கனவுகள்

உன்னைப் பற்றி வேண்டுமே

என்னென்னமோ ஆசைகள்

உன் நினைவும் தூண்டுமே

என் மழைக்காலங்கள்

வெயில் நேரங்கள்

எல்லாமே உன்னில் தொடங்குதே

ஓரேயொரு புன்னகை போதும் அன்பே

உனக்கென காத்துக்கிடப்பேனே

ஆயிரம் கோடி ஆண்டுகள் தாண்டி

உன்னில் வாழத் துடித்தேனே..

 

   அவள் தனுவின் கைபிடி இறுக்கும் பாடல் முழுவதும் கூடிக்கொண்டு சென்று இறுதியில் மோதிரவிரலிலை பிடித்தான்.

   திலகன்தாவணி போட்ட தீபாவளி.. ‘ பாடலுக்கு தன்னவளை பார்த்து ஆட.. இன்பா, கமலேஷ், பார்த்திபன் வரும் பாடலுக்கு பாடிய படியே சிறு நட அசைவுகள் கொடுக்க.. அதுவே அழகாக இருக்க..

   திலகன், கதிரவன் வீசல் அடிக்க ஆரம்பிக்க.. இதை கேட்ட யோகா,இளமதி அவர்களுடன் இருந்த பெண்கள் வந்துவிட்டனர்.

   வேந்தன் தன்னவளுடன் சித்ஶ்ரீராம் பாடலுக்கு பாடியபடியே நடனம் ஆடினான்.

தீராதே.. உன் இசையே

தீ மூட்டும்.. உன் அலையே

நானே இல்லாத நானாய்….

உன்னாலே ஆனேன் உயிரே….

கண்ணீரின் ஆழத்தில்

கண்கொண்ட காயத்தில்

விண்மீன்கள் வாசத்தில்

உன்னை நான் பார்ப்பேன்

காணாத தேசத்தில்

கேட்காத தூரத்தில்

அன்பே நீ போனாலும்

உன்னை நான் சேர்வேனே…..

உன் பார்வை உரசாத

எல்லைக்குள் நானில்லை

உன் பார்வை உரசாமால்

என் காலை பொழுதில்லை

நெஞ்சத்தை அடியோடு

ஈர்க்கின்ற பெண்ணே நீ

எனை தாக்கும் உசுராலியே

ஹே.. ஹே..

உசுராலியே….ஹே…..ஹே

 

   அவனின் இத்தனை நாளின் காதலின் பாடல்.. அரசியை கர்வம், மகிழ்ச்சியை சேர்த்து அனைவரையும் அவனின் காதல் உருக வைத்தது.

 

   இளமதி, சுரபியும் கூட அவர்களுடன் இணைத்து தனித்தனியாக வரும் பாடலை பாடினர்.

   இன்பா, பார்த்திபன்தொடக்கம் மாங்காலம்பாடல் வர..

    சட்டென்று திருமண பெண் பிரியதர்ஷினியை நடுவில் இழுத்து பாடிய படியே ஆட ஆரம்பித்து அனைவரையும் துள்ளி எழ வைத்தது.

 

   அடுத்து என்ன?. நினைக்கும் வேளையில்.. சத்யா தீடீர் என்று டீவியை ஆப் செய்தாள்.

 

   அடுத்த நொடி  எழிலரசியின் குரல் போனில் ஒலிக்க..

 

நாரே நாரே நாரே நாரே

நன்னநாரே நாரே நாரே நாரே

நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே

வெண் மேகம் முட்ட முட்ட

பொன் மின்னல் வெட்ட வெட்ட

பூவானம் பொத்துக் கொண்டதோ

பன்னீரை மூட்டை கட்டி

பெண் மேலே கொட்டச் சொல்லி

விண் இன்று ஆணை இட்டதோ

மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாடப் போகின்றேன்

ஆகாயச் சில்லுகளை அடிமடியில் சேமிப்பேன்

மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாடப் போகின்றேன்

ஆகாயச் சில்லுகளை அடிமடியில் சேமிப்பேன்

ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில்

ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில்

மனசெல்லாம் ஜில்..

 

   எழிலரசி மட்டும் முதலில் ஆட ஆரம்பித்து..

   சத்யா, பிரியதர்ஷினி அழகாக இணைந்து ஆட ஆரம்பித்தனர்..

 

மழையோடு நான் கரைந்ததுமில்லை

வெயிலோடு நான் உருகியதில்லை

பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே

தலை காட்டும் சிறு பூவைப்போலே

பொல்லாத இளம் காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலையே

நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலையே

என் காதலா என் காதலா

நீ வா நீ வா என் காதலா

 

   தன் முயல்குட்டியை அள்ளி கொஞ்ச தோன்றிய நிலையில் இருந்தவனின் முன்..

 

சரட்டு வண்டில சிரட்டொளியில      

ஓரம் தெரிஞ்சது உன் முகம்     

உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிரிப்புல      

மெல்லச்சிவந்தது என் முகம்

     

அடி வெத்தலபோட்ட ஒதட்ட எனக்கு     

பத்திரம் பண்ணிக்கொடு     

நான் கொடுத்த கடனத்திருப்பிக் கொடுக்க     

சத்தியம் பண்ணிக்கொடு    

என் இரத்தம் சூடு கொள்ள      

பத்து நிமிசம் தான் ராசாத்தி     

     

ஆணுக்கோ பத்து நிமிசம்     

பொண்ணுக்கோ அஞ்சு நிமிசம்     

பொதுவா சண்டித்தனம் பண்ணும் ஆம்பளைய     

பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா     

     

சேலைக்கே சாயம் போகும் மட்டும்     

ஒன்ன நான் வெளுக்க வேணுமடி     

பாடுபட்டு விடியும் பொழுது     

வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி     

புது பொண்ணே……………      

அது தான்டி தமிழ் நாட்டு பாணி………

    

   வேந்தனை தவிர இருவரும் புன்னகையுடன் பார்த்திருந்தார்கள். வேந்தன் தான் தன்னவளால் ஒருவழி ஆகிவிட்டான்.

 

    சத்யா, தர்ஷினி நடனம் ஆடுவதை பார்த்திருக்கிறான். தன் அரசி தன்னுடன் ஆடும்போது தன்பிடியின் கட்டிப்பாட்டில்.. அவள் அழகாக ஆடும்போதே தன்னவளின் நடனம்.. அவளிற்கு ஆடபிடிக்கும் என்பதை உணர்ந்தான்.

   ஆனால் மிகவும் ரசிக்கும் வண்ணம் முகபாவனையும், அழகான உறுத்தா உடல் அசைவுகளுடன் தனியாக ஆடுவாள் என நினைக்கவில்லை. மற்றவர்களும் அவ்வாறே நினைத்தனர். எழிலரசி ஆடுவது அவர்கள் இருவர் மற்றும் இன்பாவிற்கு மட்டுமே தெரியும் அவர்களுடன் மட்டும் தான் ஆடுவாள்.

    அவர்கள் முடித்து நின்ற அடுத்தநொடி.. சில நொடிகள் மூவரும்.. தங்களின் துணைகளுக்கு கொடுத்த திருமணபரிசை.. வாழ்த்தி கைதட்டியும், வீசல் சத்தமும் கொடுத்தனர்.

 

   வேந்தன் உடனே எழுந்து அவர்களிடம் சென்று தர்ஷனி, சத்யாவை அழகு என சைகை செய்ய.. அவர்கள் அடுத்து அவன் செய்யும் காரியம் அறிந்து ஓடி தன் துணைகளின் அருகில் அமர.. தன்னவளை தோள் வளைவில் அணைத்து விடுவித்தவன்.. அடுத்த நொடி முறைத்தபடியே அவளை அள்ளிக்கொண்டு சமையல்அறைக்கு சென்றுவிட்டான்.

 

    இதனை மாடியில் இருந்தவர்களும் பார்த்தனர். பேசிய படி இருந்தவர்கள் டிவி ஓடும்போது நார்மலாக பாடி மகிழ்கிறார்கள் என அதை பொருட்படுத்தவில்லை. டிவி அணைத்து எழிலரசி குரல் நன்றாக கேட்கவும்.. சாருபாலா தான் முதலில் அறிந்து..

   கீழே வரமுடியாமல் அங்கிருந்தே புன்னகையுடன் பார்த்திருந்தவளை கவனித்த மூவரும் அவளின் அருகில் வர.. எழிலரசியை ஆடுவதை எதிர்பார்க்காதவர்கள் மற்ற இருவரும் சேர்ந்து ஆட.. அதற்கு தன் துணைகளும் மகிழ்வுடன் ரசித்தது பார்க்க முடியவில்லை. அவர்கள் தங்களுடன் இருந்துயிருக்க வேண்டும்.. பெண்களாக இருக்கபோவதால் வரவில்லை என கூற.. அதனை புரிந்து விட்டுவிட..

   தங்களுக்கு இந்நேரம் வரை மெசேஜ் கூட அனுப்பவில்லை என நினைந்திருந்தவர்கள்.. வேந்தன் செய்த செயலை பார்த்தபின் பெருமுச்சு ஒன்றை செலுத்தியபடி வசு முதலில் செல்ல.. மற்ற இருவர் சென்றுவிட.. சாருலதாவால் அங்கு இருக்க முடியாமல் கீழே வந்துவிட்டாள்.

    அவர்களுக்கு தெரியாது.. அவர்களிடம் கேட்டு ஒரு மெஹந்தி டிசைன் செலக்ட் செய்துகொடுத்தால்.. அதை மாற்றி இதை போட போகிறோம் என அனுப்பியதில் இருந்த கோபத்தில் இவற்றை முதலில் மறந்துவிட.. பின் காலில் போடுவதால் அதிகம் நேரமும்.. காய நேரம் எடுக்கும் என்பதால் வரமுடியாது என கூறுவார்கள் என்று தெரிந்துதான் மெசேஜ் செய்யவில்லை. இப்போது ஏன் என கேட்டால்?. பெண்கள் தான் மாட்டுவார்கள்.

  

     

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!