Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ரஞ்சிதாவின் ராம் வெட்ஸ் சீதா – 7 (1)

ராம் வெட்ஸ் சீதா -7(1).

 

வெளியே வந்தவளை பார்த்து ஊரே ஆவென வாயில் கைவைத்து ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்ததென்றால், ராதாவோ ஒரு படிமேலே அதிர்ச்சி அடைத்தாள்.

 



Advertisement

அங்கிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்த ராதா  “என்ன இது பொண்ணு பார்க்க தானே வராங்கன்னு அம்மா சொன்னாங்க, எதுக்கு இம்புட்டு கூட்டம் வந்திருக்கு, இந்த மண்டை பக்கத்துல வால் தொங்குற ஐயரு வேற உட்கார்ந்து இருக்காரு “என்ற யோசித்தவள்  அவளின் தாய் சிவகாமியை ஏறிட்டு பார்த்தாள், அவள் தாயோ மகளின் பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்டு கண்களால் அவளிடம் கெஞ்ச அவளோ தாயை தீயென முறைத்தாள்..

 

“உனக்கு அப்புறம் வச்சிக்குறேன் ஆப்பு”, என்று கண்களாலே கூறியவள், ஐயரிடம் வந்து நின்று அனைவருக்கும் நமஸ்காரம் வைத்து விட்டு அமர்ந்து கொண்டாள், அவளுக்கு நிச்சியதார்தத்தின் பட்டு புடவையை, முனுசாமி -கமலம் தம்பதியினர் கொடுக்க அதை அவளோடு நின்று இருந்த ஹரிணி  வாங்கிக்கொண்டு அவளை அறைக்கு அழைத்து செல்லும் போது ராதாவின் விழியோரத்தில் கண்ணீர் சிந்தியது.

Advertisement

 

Advertisement

படிக்க வேண்டிய வயதில் இந்த திருமணம் தேவையா? பெண்கள் படித்து சாதிக்க பிறந்தவர்கள். பள்ளி படிப்பு முடிக்க இன்னும் இரண்டு மாதமே இருக்கும் நிலையில் திடீரென இந்த திருமண ஏற்பாடு அவளை மேலும் வருந்தியது..

 

அவளின் அத்தை மகன் வெற்றியை சிறுவயதில் இருந்து பார்த்தவள் தான், ஆனாலும் அவனை மிகவும் பிடிக்கும் ராதாவிற்கு. கடைசியாக அவளின் பூப்பெய்தல் நாளன்று பார்க்கும் போது  பெண்ணவளின் விழிகள் ஆண்மகனின் மீது தான் இருந்தது…

Advertisement

 

இதோ மாப்பிள்ளை ரெடியாக சீதாவின் அண்ணனிடம் ” நீங்க யாரு இதுவரைக்கும் நான் உங்களை பார்த்ததே இல்லையே “என்றவனின் கேள்விக்கு ” நான் ராதாவோட பிரண்ட் என்று சொல்ல வருவதை முழுதாக செவியில் வாங்காமல் “என்னது பிரண்ட்டா, எப்படி பட்ட பிரண்ட்  “என்று புருவம் தூக்கி சேதுபதியிடம் கேட்க அவனோ “யோவ் நான் சொல்லறத்தை முழுசா கேளு, அப்புறம் ஷாக் ஆகு “என்றவனிடம் “என்ன ன்னு முதல்ல சொல்லு ” என்றான் வெற்றி.

 

“நான் ராதா பிரண்ட் சீதாவோட அண்ணன், ராதா எனக்கும் தங்கச்சி முறை தான், நீ எதுனாவது கற்பனை பண்ணாத, இன்னைல இருந்து நீ எனக்கு மச்சி, நான் உனக்கு மாமா “என்று மாப்பிள்ளையின்  தோள் மேல் கை போட்டு கொண்டு இருக்கும் போது ” மாப்பிள்ளையை அழைத்து கொண்டு வாங்கோ நாழியாகுது சீக்கிரம் “என்று ஐயரின் குரல் கேட்க வெற்றியை கையோடு அழைத்து வந்து அங்கிருந்து அலங்கார நாற்காலியில் அமர வைத்தான் சேதுபதி..

 

அடுத்து பொண்ணை அழைத்து கொண்டு வாங்கோ என்று நொடிக்கொரு முறை வாங்கோ வாங்கோ என்று கூவும் ஐயரை பார்த்து நகைப்பு தான் வந்தது வெற்றிக்கு..

 

இதோ அறையில் இருந்து புத்தம் புதியதாய் பூத்த பொன்மலர் போல், இளம்பச்சை நிறத்தோடு தங்கஜரிகையால் ஆனா பட்டுசேலையில் தேவதை போல் அண்ணநடையோடு வந்து வெற்றியின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்..

 

பக்கத்தில் இருந்த பெண்ணை பார்த்ததும் அவனுக்கு அந்த கன்னிப்பெண் பேசியது நினைவுக்கு வந்தது. உடனே தலையை நிமிந்து ராதாவை உற்று நோக்கி பார்த்தான் வெற்றி.

 

“என்ன இவ இந்த சிவப்பு கலர்ல இருக்குறா, ஒரு வேளை மேக்கப் போட்டு இருக்காளோ, என்று அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன், அப்படிலாம் ஒன்னும் தெரியலியே,ஆனா அந்த பொண்ணு ஏன் இவளை கருவாச்சி ன்னு சொல்லணும் “என்று மனதில் புலம்பி கொண்டு கூட்டத்தில் அங்கும் இங்கும் தலையை திருப்பி பார்வையால் தேடினான் அந்த கன்னிப்பெண்னை,..

 

“இருக்கட்டும் எப்படி இருந்தாலும் இவளை பார்த்து தனியா பேசிட்டு தான் ஊருக்கே கிளம்பனும் “என்று  நினைத்தவனின் கையில் ஒரு கிள்ளு வைத்தாள் ராதா.

 

“ஸ்ஸ்ஸ் ஆ வலிக்குது “என அவன்  முனங்க, பென்னவளோ அவனை பார்த்து சிரித்து வைத்தாள்.

 

ஆடவன் அவளின் முகத்தை பார்த்து “அத்தனை, எத்தனை அழகு என் ரதி குட்டி, இந்த தேவதையையா கருவாச்சி ன்னு சொல்லுது அந்த பொண்ணு “என்று மீண்டும் அந்த கன்னிப்பொண்ணை தேட, அந்த பொண்னோ கூட்டத்தின் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருக்க, அவளின் பக்கத்தில் நின்றிருந்த ஒரு பெண்  உருவம் ராதாவை கொலைவெறியில் பார்த்துக்கொண்டிருந்தது…

 

“சரிங்கோ பொண்ணு வந்தாச்சு, மாப்பிள்ளையும் வந்தாச்சு, பெரியவங்க வந்து நலங்கு வைக்க ஆரம்பிக்கலாம்!”என்று ஐயர் கூற முதலில் அங்கிருந்த வயதான சுமங்கலி பெண்கள் முதல் உறவினர்கள் வரை நலங்கு வைத்து விட்டு, கடைசியாக கமலம் தனது மருமகளுக்கு எடுத்து வைத்திருந்த ஐந்து பவுன் சவரன் செயினை பையில் கைவிட்டு தேடினார், அது இல்லாமல் போகவே பதற்றத்தில் தனது மகன் வெற்றியிடம் வந்து அவனின் செவியில் “மவனே நகையை எடுத்து பையில வச்சியா நீயி,”என்றதும்  தாயை முறைத்து பார்த்து அவரிடம் “ம்மா உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா இல்லையா, நான் வூட்டுல இருக்கும் போதே சொன்னேன், எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியா ன்னு செக் பண்ணுங்க ன்னு, அப்போ செக் பண்ணாம இப்போ என்கிட்ட வந்து நகையை எடுத்து வச்சியா ன்னு கேட்கற “என்று தாயும் மகனும் ரகசியமாய் பேசிகொண்ருக்கும் போது, அங்கேவந்த ஹரிணி அவளின் தாயின் கரத்தை பிடித்து இழுத்துக்கொண்டு ஒரு ஓரத்தில் வந்தவள், தான் கழுத்தில் அணிந்திருந்த அந்த ஐந்து பவுன் சவரனை கழட்டி அவள் தாயிடம் கொடுத்துவிட்டு ” அம்மா நான் தான் நகையை எடுத்து பையில வச்சேன் ஆனா இங்க வந்ததும் நீ வேலையில எங்கே பையை மறந்து ஒரு இடத்துல வச்சிட்டு போயிட்ட,  பையில நகை இருக்குதுனு எனக்கு தெரியும் மா, இங்க வேற நிறையா கூட்டம் இருக்கு, அதுக்கு தான் நான் இந்த செயினை எடுத்து என் கழுத்துல போட்டுக்கிட்டு யாரும் பார்க்காத மாதிரி துப்பட்டா வச்சி கழுத்துல இருந்த செயினை மறைச்சிகிட்டேன், “என்று கூறும் பெருமையோடு மகளை பார்த்து அவளின் உச்சி நெற்றியில் ஒரு முத்தத்தை வைத்து விட்டு நகையை எடுத்துக்கொண்டு மருமகளின் அருகில் வந்து அதை ராதாவின் பொன்கழுத்தில் அணிவித்து,

 

“எம்புட்டு அழகு என் அண்ணன் பெத்த ரத்தினம்,”என்று கூறி அவளின் கன்னத்தில் ஒரு முத்தம் வைக்க, அதை பக்கத்தில் அமர்ந்து இருந்த ஆடவனின் பார்வைவில் சொன்னது,” இனி அவ எனக்கு தான், நான் தான் அந்த முத்தம் கொடுக்கறதுக்கு உரிமையானவன், நீ ஏன்மா வந்து முத்தம் கொடுத்த, நகையை போட்டதுக்கு அப்புறம் கம்முனு ஓரமா போயி நிக்கணும் ” என்று அவனின் தாயை பார்த்து கொஞ்சம் சத்தமாகவே கூற, அந்த ஊராரின் செவியில் கேட்க அனைவரும் நகைத்தனர், ஒரு வரை தவிற…

 

பிறகு ராதாவிற்கு உடன் பிறந்தவர்கள்  யாரும் இல்லாததால், சீதாவின் அண்ணன் சேதுபதி ராதாவின் அண்ணனாக செய்யும் பொறுப்பை ஏற்று வெற்றியில் கழுத்தில் மூணு பவுன் சவரன் அணிவித்தும் இந்த நிச்சியதார்தம் இனிதே நிறைவேறியது.. வந்தவர்கள் ஐந்து மாதத்தில் புதுமண தம்பதிகளாக போகும் வெற்றியும், ராதாவும் ஊர் மக்களின் முன்னால் நின்று அனைவரின் பாதங்களின் முன்னால் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, அந்த ஜனங்களும் அட்சதை தூவி மணமக்களை மனநிறைவோடு வாழ்த்து சென்றனர்..

 

அனைவரும் சாப்பிட பந்தியை நோக்கி செல்ல வெற்றியோ யாருமறியாமல் ராதாவின் கரங்களை பிடித்து வீட்டில் உள்ளே அழைத்து வந்து அறையினுள் கதவை தாழ்ப்பாள் போட்டவன், அவளை விட்டு இரண்டடி தள்ளி நின்று தனது சந்தேகத்தை கேட்டான் ” ரதி குட்டி, நீ கறுப்பு, கருவாச்சி ன்னு ஊருல பேசிகிட்டு இருந்தாங்க, ஆனா நீ இம்புட்டு சிவப்பா இருக்கற, ஆமா நீ எதுக்கு என்னைய புடிச்சி கிள்ளுன ” என சிறு பிள்ளை போல் பேசும் தனது அத்தையின் மகனை விழிகளால் அளந்து கொண்டுஇருந்தாள் ராதா.

 

அவளின் பார்வை தன் மீது தன் இருக்கிறது, என்ற ஆடவனுக்கு தோன்ற அடுத்த நொடியே கதவின் தாழ்பாளை திறக்க செல்ல, ராதாவின் “அத்தான் “என்ற ஒன்றை சொல்லில் அவளை என்னவென்று திரும்பி பார்த்தான்..

 

“நான் பள்ளிக்கூடத்துக்கு போகும் போது முகத்துல மை பூசிக்கிட்டு போவேன், அது அம்மாக்கும் சீதாவுக்கும், அப்பத்தாவுக்கும், சீதா வீட்டாளுங்களுக்கும் மட்டும் தான் தெரியும் “என்ற பெண்ணவளே பார்த்து,  “அதான் ஏன் அப்படி, உன் உண்மையான முக அழகை நீயே மறைக்குற “என்றவனின் கேள்விக்கு என்ன பதில் கூறுவது, உண்மையை கூறினால் எங்கே தன்னை வெறுத்துடுவானோ, என்று அச்சம் தான் வந்தது ராதாவுக்கு..

 

“ஏலேய் பாண்டி இங்கன வா டா, அந்த புள்ள ராதா கருப்பு இல்லை டா, சிவப்பு எம்மா அழவு டா அது, என் புள்ளைய சாக தூண்டினவள நான் சும்மா விட போறது கிடையாது, அவளுக்கு கல்யாணம் எப்படி நடக்கும் ன்னு பாக்குறேன், என் புள்ளைக்கு அழவனா பொண்ண பார்த்தாலே அவன் எதையும் நினைச்சி பாக்க மாட்டான், அவன் நல்ல புள்ள,”அவனை போயி அந்த ராதா சாவுன்னு சொல்லிட்டா “என்று தனது அடியாட்களின் ஒருவரான பாண்டியிடம் கூறிக்கொண்டே புடவையின் முந்தானையால் வாயை பொத்துக்கொண்டு கண்ணீர் விட்டார் கோமளம்…

 

இனிதான் கதையில அதிரடி திருப்பம் ஆரம்பம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!