Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kaadhala AppadinaUncategorized

காதலா?? அப்படின்னா?! – 5

காதல் – 5

மதுரையில் கல்லூரி விடுதியில் கோவிலில் இருந்து வந்ததில் இருந்து அந்த உணவகத்தில் இவள் செய்த வேலைக்கு அனைவரும் மாற்றி மாற்றி அவளை வறுத்துக்கொண்டிருந்தனர். 

உனக்கு எதுக்குடி தேவையில்லாத வேலை. அவனுங்களுக்கு இது உன் வேலைன்னு தெரிஞ்சதுன்னா எதாவது பிரச்சனை பன்னாலும் பன்னுவானுங்கடீ.” 

இங்கே தனியாய் இருக்கும் பொழுது எதற்க்கு உனக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தில் எல்லாம் தலையிடுற.” 



Advertisement

அட்லீஸ்ட், அவனுங்க உனக்கு எதுவும் தொல்லை கொடுத்து அதற்கு நீ இப்படி ரியாக்ட் ஆகியிருந்தால் கூட பரவாயில்லை.”

எப்பொழுதும் உன் ஹீரோ வந்து காப்பாத்துவார் என்று நினைப்பா?” என ஆளாலுக்கு மண்டகப்படி நடத்திக்கொண்டிருந்தனர் விதுனாவை தவிர்த்து. அவளுக்கு தான் இவளின் குணம் தெரியுமே! 

ஹேய் விடுங்கப்பா, எனக்கு சரியான தலைவலி. ஏப்படி தான் இந்த வெயிலில் வாரவாரம் வெளியே போறிங்களோ.” என தலைவலியை என்று சாக்கிட்டு இவர்களை அடக்கியவள். அவர்கள் சொன்ன ஹீரோவை கவணிக்காமல் விட்டுவிட்டாள். அதற்கு எதுவும் பதில் சொல்ல போய் அது ஒரு விவாதமாக ஆக்க விருப்பமில்லை. அதையுவிட, ஒரு ஆணும் பெண்ணும் சிரித்து பேசினால் உடனே அவர்களை இப்படி கலாய்க்கும் இந்த வழக்கம் அவளுக்கு சுத்தமாய் பிடிப்பதில்லை. 

Advertisement

ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்லூரிகளும், பள்ளிகளும் மாணவர்களுக்கு எதை சொல்லி தருகிறதோ இல்லையோ எதிர் பாலினதினருக்கு அடுத்தவர்களின் உலகம் எத்தகையது என்று ஒரு சிறு அறிமுகபடுத்துகிறது. 

Advertisement

ஆண்பெண் இணைக்கல்வி முறையில் படித்தவர்கள் குறைந்த பட்சம் அடுத்தவர்களின் குணநலன்களை ஒர் அளவேனும் புரிந்துகொள்பவர்களாக இருப்பர்.  அப்படி இருக்கும் பொழுது கல்லூரியில் ஒரு ஆணுடன் பேசினாலோ நட்பாய் இருந்தாலோ முதலில் தோன்றும்காதலர்களோஎனும் கேள்வியே கசந்தது நம் ரூல்ஸ்க்கு. 

அனைவரையும் ஏருகட்டி அனுப்பியவள் அறையை சாற்றிவிட்டு ஒரு ஆழ்மூச்செடுத்தவள் கையில் ஒரு புத்தகத்துடன் கட்டிலில் சாய்ந்துவிட்டாள்.  எப்படியோ ஒரு மணி நேரம் தூங்கியவள் மாலை காபி நேரத்திற்கு வந்து விதுனா எழுப்பும் வரை நல்ல தூக்கம்!!!

அவர்கள் விடுதியில் ஞாயிறு ஒரு நாள் தான் மாலை எதேனும் சிற்றுண்டி கிடைக்கும் அதுவும் எதேனும் பயிரு வகைகளோ இல்லை சேமியாவாக தான் இருக்கும், ஞாயிறு வழக்கமாக அனைவரும் காபி மற்றும் சிற்றுண்டியுடன் மொட்டை மாடியில் அய்க்கியமாக தோழிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்த்து அமர்ந்த படி அடுத்த வாரம் எங்கு போகலாம் என ஆரம்பிக்க 

Advertisement

ஆள விடுங்க சாமிங்ளா! நம்மலால் எல்லாம் முடியாது!” என முதல் ஆளாய் கலண்டு கொண்டது வென்ஸி. 

ஹேய் படத்துக்கு போகலாம்ப்பா yyy – படம் ரொம்ப நல்லா இருக்காம்.” என ஸன்ஜனா கூற

ஓடிடு ! உருப்படாத படத்த கூட நீ நல்லா இருக்குதுன்னு தானே சொல்லுவ. உன் பேச்சையெல்லாம் நம்ப முடியாது! போன் முறை இப்படி தான் ஏதொ ஒரு படத்துக்கு கூட்டிடு போனா.. தெய்ட்டர்ல எங்களையும் சேர்த்து மொத்தமே பத்து பேர் தான் இருந்தோம். இனி நீ எதவது படம் பேர் சொல்லு அப்படியே இங்க இருந்து தள்ளிவிட்டுடுவேன். ” என்று ஒற்றை விரல் நீட்டி பத்திரம் சொன்னாள் அபி.

ஹீ ஹீ அது சிவா அந்த படம் நல்ல இருக்குன்னு சொன்னான்டீ!அதுனால தான் ஏமாந்து போய்ட்டேன். இந்த படம் நம்ம மொட்ட baddy கூட நல்லா இருக்குன்னு சொன்னார்!” என்றவாறு கண்சிமிட்ட

சிவா, அவன் ஆள் கூட போய் இருப்பான் அதுனால அவனுக்கு அந்த படம் பிடிச்சிருக்கும்!” என நந்திதா கையைய் தூக்கி பக்கத்தில் இருந்த சௌஜன்யாவிடம் ஹைபை(hi-five) செய்ய அனைவரும் அமோதிப்பாய் தலை அசைத்து சிரித்துக்கொண்டிருந்தனர். 

ஹேய் இன்னைக்கு நம்ம வென்ஸிக்கு ஏகப்பட்ட ஃபன்ஸ்.. தெரியுமா? அதுவும் அந்த ரெஸ்டாரண்ட்ல செம! அவனும் ஆள் சூப்பரா  இருந்தான் தெரியுமா?” என அவர்களுடன் வெளியே வராதவர்களுக்கு இன்று நடந்ததை விவரிக்க 

ஹேய் நம்ம் வென்ஸிக்கு இங்க காலேஜ்ல இல்லாத ஃபன்ஸா புதுசா வந்துடபோறாங்க்?” 

இல்லைடீ நீ வேற இவனுங்க எல்லாம் பக்கத்துல வந்து பேசுறதுக்கே அல்லு விடுவானுங்க! நான் சொல்றது கண்ணுலயே காதல் செய்யுறத!”

என்னடீ சொல்ற ! அந்த மாஸ்டர் செஃப்( master chef)(அதாங்க நம்ம பாலாஜி)  தான் வந்து பேசினானே! அப்படியெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியலையே!”

அவன் இல்லை அவனுக்கு பக்கத்துலயே ஒருத்தன் இருந்தானே. நல்ல உயரமா ரெட் அண்ட் வொய்ட் டிஷிர்ட் போட்டுட்டு அவன். விட்டா வென்ஸிய கண்ணுக்குள்ள தூக்கி வச்சுகொண்டு போயிருப்பான்! ”

என்னடி சட்டை கலர் எல்லாம்  கரக்டா சொல்றத பார்த்தா நீ செமய சைட் அடிச்சுருப்ப போல இருக்கே!”

நம்ம பார்த்து என்ன பண்ண அவன் கண்ணு இங்க அங்க நகரலையே! நிலா பூமிய சுத்தி வர்ற மாதிரி ஒரு நிமிடம் விடாம சுத்திக்கிட்டே இருந்துச்சு!

ஹேய் அபி, பசங்க பார்வையை சூரியனோட தானே ஒப்பிடுவாஙக?”

இப்போ அது தான் ரொம்ப முக்கியம்! கதையை கேளு

எனக்கு என்னமோ அவன் லேசுல விடிற ஆள் மாதிரி தெரியலை! அப்படி ஒரு பார்வைஎன ஒருவர் மாற்றி ஒர்வர் சொலிக்க்கொண்டே இருக்க அதில் அபி, “வென்ஸி ஆளும் சும்மா சுப்பரா இருக்கான்.. பேசாம ஒக்கே பண்ணிடு.” என.

அதுவரை அமைதியாய் இருந்தவள் அவளுமே அந்த பார்வையை உணர்ந்தே இருந்தாள். ஆள் யாரேன்று தெரியாதென்றாளும் பெண்களின் உள்ளுணர்வு அது. யாரோ நம்மை பார்க்கிறார்கள் என்பது நாம் அவர்களை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை .. எதோ ஒரு விதமான அன்ஈசினஸ் (uneasiness) அவர்களை அறியாமலே உணர செய்யும்.  அதுவரை அமைதியாய் இருந்தவள், அபி ஒக்கே பண்ணிடு என்றதும் கடுப்பாக…. 

என்னத்த பெரிய பார்வை.. தீடிரென ரோட்டில் ஒரு பெண்ணை பார்த்ததும் மிட்டாய் கடையில் குழந்தை பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தால் காதலா? எனக்கு முதல்ல இந்த காதலே புரியலை! எப்படி வருது காதல்? எதை வச்சு இது காதல் தான்னு காதலிக்கிறவங்க முடிவு பண்றாங்கன்னே எனக்கு புரியலை! இதுல வந்து சொன்னா ஒக்கே சொல்லிடுன்னா என்ன அர்த்தம்? ஒரு பொண்ணுக்கு பின்னாடி தேவையில்லாமல் சுற்றி அவளை தொந்தரவு செய்தால் அதற்கு பெயர் ஸ்டாக்கிங்.(stalking) காதல் இல்லை.”

சொ நீ லவ் பண்ணமாட்ட?” என சௌஜன்யா அவளிடம் கேட்க்க 

கண்டிப்பா பண்ண மாட்டேன். ” என உறுதியாய் சொல்ல 

ஹேய் நெவர் சே நெவ்ர் ரூல்ஸ்.. (Never say never)” என கிலுக்கி சிரித்தாள் அபி.

எனக்கு இப்பொழுது இருக்கும் காதல் மேல் எல்லாம் நம்பிக்கையே இல்லை! எங்க அப்பா அம்மா இடையே இருக்கும் அனுசரனை தெரியும்,  ஆச்சி, தாத்தா இடையே இருக்கும் அன்யோன்யம் தெரியும்.. இப்போ நீ சொன்னது எல்லாம் வெறும் கவர்ச்சி தான்! அவன் இன்னைக்கு என்னை பார்த்த மாதிரி நாளைக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்துக்கொண்டிருப்பான்.”

வென்ஸிஎனக்கு என்னமோ நீ எல்லா பசங்களையும் ஒரே தராசுல வச்சு பார்க்குறன்னு தோனுது!  ஐ அக்ரீ, சில ரோட் சைட் ரொமியோஸ் இருக்காங்க! ஆனால் உண்மையாய் நேசிக்கிறவங்களும் இருக்காங்கஎன ஸன்ஜனா அவளுக்கு புரியவைக்க முயற்ச்சிக்க

எதோ கலாய்க்க ஆரம்பித்தது கடைசியில் ஒரு விவாதமா மாறிக்கொண்டிருந்தது. 

நீயே நம்ம காலேஜ் சிர்க்க்ள்ள எத்தனை ப்ரெக்அப்ஸ் பார்த்து இருப்ப இந்த மூனு வருஷத்துல? ”

நம்ம சீனியர்ஸ் லவ் பண்ணி கல்யாணம் ஆனதையும் தான் பார்க்குறோம்!”

ரெண்டும் கூட்டி களிச்சு பாரு!! எது ஜாஸ்தின்னு ஒனக்கே தெரியும்என தன் பக்கத்து நியாயத்திற்கு ஸ்டாடிஸ்டிக்ஸை துனைக்கு இழுக்க

இல்லை வெண்ஸ்! என்னால ஒத்துக்கவே முடியாது! நீ சொல்ற மனிதம் மனிதத்வதிற்கு எதிரா இருக்கு நீ பேசுறது! நீ சமுகத்தின் ஒரு பாலரை நம்பமாட்டேன்னு சொல்றா மாதிரி இருக்கு! ”

கண்டிப்பா இல்ல! என்னோட வாதம் பார்த்தால் காதல்பேசினால் காதல் என்கிறா உங்களோட இந்த எண்ணத்தை தான்.”

நிறைய காதல் நண்பர்களின் தூண்டிதலின் பேரில் தான் முக்கால் வாசி  ஆரம்பிக்குது! ‘மச்சி அவ உன்ன பார்க்கிறா டா’ , ‘ஹேய் அவனுக்கு உன் மேல ஒரு க்ரஷ் போல’. இப்படி  இரு பக்க நட்புகளின் தூண்டுதலின்  பேரில் தான் ஆரம்பிக்குதே! நாளடைவில்.. பழக பழக தான் அவன் எதிர்பார்க்கிற மாதிரி அவள் இல்லைன்னோ இல்லை இவள் எதிர் பார்த்த மாதிரி அவன் இல்லைன்னோ தான் ப்ரெக்அப்ஸ் வருது! சும்மா பார்தால் சிரித்தால் எல்லாம் காதல்ன்னு பேர் பண்ணக்கூடாதுங்குறது தான் என்னோட பாய்ண்ட்.”

அக்சப்ட் பண்ணிக்கிறேன் வென்ஸ்ஆனால் அதில் ஒரளவேனும் உண்மை இல்லாமல் இருப்பது இல்லை. இதே நப்புகளால் தான் இப்படி ஒருத்தருக்கு நம்மேல் பிடித்தம் இருக்கிறது என்பதும் பெரும்பாலும் தெரியவருதில்லையா?”

மே பீ!  At the end of the day , இது அந்த சம்பந்த பட்ட பையனும் பொன்னும் எடுக்கும் முடிவு சார்ந்தது. Its up to them whether they want to fall for it or not!” என முடித்தவள். 

அடுத்து திரும்பவும் ஒரு விவாதம் தொடரும் முன்விடுங்கப்பா! விட்டா ஒரு பட்டிமண்றமே நடத்திடுவிங்க போல இருக்கு.” என விது பேச கொஞ்சம் கொஞமாய் எல்லோரும் வேறு வேறு சங்கதிளை பற்றி பேசியவாறு மாடியில் இருந்து கலைந்தனர். 

செவ்வாய் கிளமை காலை:  வார இறுதி இருக்கும் சொம்பேறித்தனம் இன்னும் விலகாததால் அனைவரும் கடைசி நேர பரபரப்பில் இங்கு அங்கும் ஓடிக்கொடிருந்தனர். வென்முகில் தன் காலை உடற்பயிற்சி முடித்து குளித்து கிளம்பியவள் வழக்கம் போல் விதுவுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாள். கல்லூரிக்கு விடுதியில் இருந்து போகும் பேருந்து இன்னும் 5 நிமிடத்தில் கிளம்பிவிடும் இல்லை என்றால் நடந்தோ இல்லை சைக்கிள்ளிலோ தான் கல்லூரி போக வேண்டும். அதற்காக தான் இந்த பரபரப்பு. மொத்ததில் ஒரு வழக்கமான் கல்லூரி நாள். 

இன்னும் இரண்டு மாதம் தான் கல்லூரி அதன் பிறகு திஸிஸிற்க்கு மற்றும் ப்ரக்டிக்கல் டிரைனிங் தான்.(thesis and practical training) அதற்க்கான கம்பேனிகளை தேடுவது அவர்கள்க்கு மின்னஞ்சல் அனுப்புவது என்று அது  ஒரு பக்கம் நடந்துக்கொண்டிருந்தது. 

இன்னும் இரண்டு மாதம் தான் கல்லூரி என்பதினால் அவர்களுக்கு பாடம் இருக்கும் பொழுது மட்டும் கல்லுரிக்கு போனால் போதும் மற்ற நேரங்களில் விடுதியிலோ அல்லது நூலகத்திலோ தான். இந்த வாரத்தில் செவ்வாய் மற்று வியாழன் மட்டும் தான் அவர்களுக்கு க்ளாஸ். மற்ற நாட்கள் டிசைன் பண்ணும் வேலைகள் இருக்கும். அதை அவர்கள் அறையிலேயே செய்யமுடியும் கல்லூரிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. 

இன்று க்ரிஷ், பாலாஜி மற்றும் சுதர்ஷன் கல்லூரிக்கு செல்வதாக முடிவு செய்திருந்தனர். வருட வருடம் நடக்கும் அலுமினி மீட்டிங்க்றகு முடிந்த பொழுது வருவதை வழக்கமாக்கி கொண்டிருந்தனர். இந்த வருடம் கல்லூரி விழாவில் முன்னாள் மாணவர்களை அழைத்து பேச சொல்லுவதற்காக கேட்டு இருந்தனர். அதை பற்றி பேசுவதற்க்காக தான் வீரேஷும் வருவதாக இருந்தது. ஆனால் நடந்தது வேறு! 

நாம் படித்த கல்லுரிக்கு திரும்பவும் வரும் பொழுதோ அல்லது பேருந்தில் கடக்கும் பொழுதோ ஏற்படும் உஉணர்வு அலாதியானது. அதை கடக்கும் சில நொடிகளில் படித்த ஆண்டுகளை மனதில் ஒட்டிப்பார்க்கும் பொழுது மனதில் அதை மிஸ் செய்யாதவர்கள் இருக்கவே மாட்டார்கள். 

மூவரும் பாலாஜியின் BMW Q5-l வந்திருந்தனர். பின் பக்கம் தான் கார்களை நிறுத்தும் இடம் அதலால் பின் வாசல் வழியாகவே உள்ளே வந்துகொண்டிருந்தனர். அவர்கள் வந்ததே கல்லூரியின் துனை தலைவரை பார்த்து பேசிவதற்க்காக தான்.  ஆனால் முதலில் போய் நின்னது என்னமோ கேண்டீனில்! அப்பொழுது தான் கேண்டீனில் இருந்து கலகலத்தபடி வெளியேரினர் அபியும், சௌஜன்யாவும்.  

வர வர நம்ம கேண்டீன் வடை சைஸ் சின்னமாகிட்டே போகுது ! அதுவும் டையட்ல இருக்கு போல!!!”

அவர்கள் பேசியதை கேட்டவாறு உள்ளே நுளைந்த சீனியர்களுக்கு அவர்கள் இங்கே செய்த அட்டகாசங்கள் ஞயாபகத்தில் புன்முறுவல். 

சுதர்ஷனுக்கு மட்டும் அபியை பார்த்ததும் எங்கயோ பார்த்த முகமாக தோன்ற அவளை திரும்பவும் திரும்பி பார்க்க அவனால் நினைவில் கொண்டுவரமுடியவில்லை. நம்ம எங்க பொன்னுங்களை பார்த்தோம். கானாததை கண்ட மாதிரி நண்பன் வழிவதை பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி மற்றவர்களை கண்ணுக்கு தெரியும்.  

உள்ளே சென்றவர்கள்  துனை துனை தலைவரை சந்தித்து அவரிடம் வீரேஷ் வர முடியாத காரணத்தை சொல்ல. அவரும்ஆமாம் எனக்கும் தகவல் சொல்லியிருந்தான்”.  வரும் கல்லூரி விழாகள் பற்றி கூறியவர், அதற்கு வீரேஷை முக்கிய விருந்தினராக அழைத்திருப்பதையும் பாலாஜியையும் சுதர்ஷனையும் ‘lateral /tangent thinking ’ பற்றி பேச முடியுமா என கேட்டுக்கொண்டார். கிர்ஷிடம், மாதம் ஒரு நாள் என ‘Onfield view’ என பாடதிட்டத்தை தாண்டி கட்டிட தொழிலில் இருக்கும் நுனுக்கங்ளை மாணவர்க்ளுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா என கேட்டுக்கொண்டார். யார் யார் எப்பொழுது வர முடியும் என அதற்கு ஒரு அட்டவனை போட்டுகொண்டவர்கள் அவர்கள் கல்லூரி காலத்தில் கேட்டது இப்பொழுது அவர்கள் முலமாகவும் நடப்பது ஒரு சந்தொஷத்தை கொடுத்தது. துனை தலைவரிடம் விடை பெற்றுக்கொண்டவர்கள் வெளியே வந்து சிறிது தூரத்தில் ஹாஸ்ட்டலுக்கு போகும் வழியில் இருக்கும் அவர்களின் ஆஸ்தான் மரத்தினடியே இருக்கும் பென்ச்ஜ்(bench) – ல் அமர்ந்தனர். கேலி கிண்டல்கள் வரைமுரைக்கு உட்ப்பட்ட ரக்கிங் என பல விஷயங்கள் அறங்கேறிய பென்ச் அது! அப்பொழுது கல்லூரியில் இருந்து வந்துகொண்டிருந்த கூட்டத்தில் விதுனாவும் வர, பாலாஜி, 

மச்சான் ஹோட்டலுக்கு வந்த பொன்னு!” என சொன்னதும் 

யார்டா மேஹாவா? எங்க?”

இல்லைடா மேஹா கூட வந்த பொண்ணு.” 

கூட வந்த பொண்ணையெல்லாமா நோட் பண்ண மச்சான்.” 

கடைசியில நம்ம காலேஜ்ல தான் படிக்கிறாங்களா?” 

டேய் அரசாங்கம் கேட்டா property acquisationnu தூக்கிட்டு போய்டுவாங்க!” 

நீ வேற எண்டா! போய் பேசலாமா? கூட மேஹா எங்கையாவது தெரியுதான்னு பாரு!” 

நீவேற அவன் நேற்று ஆராய்ச்சியெல்லாம் பண்ணி முகில்ந்னு சொல்லிகிட்டு இருக்கான். இந்த காதல் வந்தாலே இவனுங்க எல்லாம் பகுதி நேர கவிஞர் ஆகிடுறானுங்க! ” 

இந்த கூட்டத்தில மேஹா இல்லைடா ஆனா I am sure , அந்த க்ரீன் சல்வார் போட்டு இருக்குற பொண்ணு மேஹா கூட வந்த தோழி தான்.” என்றபடி எழுந்து மெதுவாய் மரதடியயை விட்டு வெளியேறிய பாலா கூட்டத்தின் நடுவே நுளைந்தவன் விதுனாவின் எதிரே போய் நிற்க அவனை பார்தததும்ஹையோ கடோத்கஜண்!!!” என முனுமுனுக்க ஒரு வேலை ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரச்சனைக்காக வேண்டி வந்திருக்கிறானோ என இதயம் தடதடக்க அவனோ சாவகாசமாய்

ஹாய், மிஸ்சாரி உங்க பேர் தெரியலை. இங்க தான் படிக்கிரிங்களா?”

இல்லை சார்! இதுங்களை மேய்க்க வந்திருக்கேன்என அவளை சுற்றி நடந்து போனவர்களை கண்ணால் காட்டி சொல்ல

அவளின் கேலியில் சிரித்தவன், “ஒக்கேஒத்துக்கிறேன் அது ஒரு மொக்கை கேள்வி தான்!  எந்த டிபார்ட்மேண்ட்? நானும் இதே கல்லூரியில் தான் படித்தேன்!”

ஹோ நான் . CS. ” என கவனாமாய் அவன் பெயர் கேட்டதை மட்டும் சாய்ஸில் விட்டு அவளுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு டிபார்ட்மேண்டை சொல்ல. 

எங்க உங்க பிரண்ட்ஸ் எல்லாம் காணோம் நீங்க மட்டும் க்ளாஸ்க்கு மட்டமா?”

ஹெல்லொ.. என்ன சார் வேணும் உங்களுக்கு… ”

நீ தான்னு சொன்னா என்ன பண்ணும் இந்த ஆளாக்கு என்று எண்ணியபடிதோலை குலுக்கியவன்,  எங்க உங்க தோழி மேஹா ? அவங்க உங்க டிபார்ட்மெண்ட் இல்லையா ? என காரியமே கண்ணாய்! 

விதுனாவோ  என்னடா இது அபி சொன்னது உன்மை ஆகிடும் பொலா இருக்கு.. ஒருவேளை கடோத்கஜன் வென்ஸிகு ரூட் போடுறானோ? (அட மண்டு அவன் உனக்கு போடுறான்… ) ஆனா அவ வேறு யாரையோல்ல சொன்னா.. யாருக்கு தெரியும்யாரைருந்தாலும் நம்ம் ஆளு வந்து பாருன்னு தான் நிக்க போகுது! தான் பிடிச்ச முயலுக்கு மூனு காதுன்னு! சிக்கி சின்னபின்னம் ஆகாம் கிளம்பிடலாம். “ஹேய் ஸ்பி(SP)!!! இரு நானும் வர்றேன் விட்டுட்டு போய்டாத!” என முன்னால் போய்க்கொண்டிருந்த ஒரு பெண்ணை பார்த்து கையாட்டி கத்தியவள்ஒக்கே பாக்கலாம் சார்!” என ஒரே ஓட்டமாய் அவளுடன் சென்று இனைந்துக்கொண்டாள். சிறிது தூரம் சென்று மேதுவாய் திரும்பி பார்க்க பாலாஜி முகத்தில் உறைந்த சிரிப்போடு அதே இடத்தில் நின்றவாஅறு அவளை பார்த்து கை அசைக்கஹையயோ ஆள விடுப்பா கடோ!!” என்று கூறியவாறு 

சென்று மறையநண்பர்கள் இருந்த இடம் நோக்கி நடந்தவன், 

ஹேய் மேஹாவும் இதே காலேஜ் தான் போல இருக்குடா! ஆனால் அந்த பொண்ணு ஒரு கேள்விக்கு கூட உறுப்படியான பதிலே சொல்லலைடா! நம்மளை பார்த்தா அப்படியா இருக்கு?! ”

நம்ம்ளை இல்லைடா உன்னை. என கலாய்த்தவர்கள் வீரேஷுக்கு இப்போதைக்கு சொல்லவேண்டாம்.. இன்னும் ஒரு மாசத்துல காலேஜுக்கு ஃப்ங்ஷனுக்கு வருவான்ல அப்போ தெரிஞ்சுக்கட்டும்!  Let it be a surprise என முடிவெடுத்துக்கொண்டனர். இது மட்டுமா ஆச்சர்யம் ??

இங்கே தடா!! அங்கே?

காதல் வருமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!