Ram weds Seetha 9 1
ராம் வெட்ஸ் சீதா -9(1)
அங்கு ரத்தினத்தை எதிர்பார்க்காத இளவரசனோ தப்பிக்கும் முயற்சியில் இருக்க அவனிடம் வேலை பார்க்கும் ஆண்களோ ரத்தினத்தை பார்த்து அரண்டு தான் போனார்கள்.
Advertisement
அவன் ஒரு உதை அடித்தால் கூட ரத்தம் வழியும், அவனின் முகத்தை பாத்து அங்கிருந்தவர்கள் எச்சிலை விழுங்கி கொண்டு ஓட, அவனின் பார்வையோ இலக்கியா எங்கே இருக்கிறாள் என்று தான் சுற்றி தேடியது.
இளவரசனோ அவனின் குடிசையில் இருக்கும் மஞ்சத்தின் அடியில் இலக்கியாவை அடைத்து வைத்திருக்க, அவளோ முனங்கி கொண்டு காலால் மஞ்சத்தின் கால்களை எட்டி உதைக்க, அவளின் கொலுசொலி சத்தம் கேட்டு குடிசையை நோக்கி நடந்தான் ரத்தினம்.
Advertisement
Advertisement
அவன் இலக்கியாவை கண்டு கொண்டான் என்பதை உணர்ந்த இளவரசன் ” இந்தா பாரு டா, ரத்தினம் தேவையில்லாம எங்க வழிக்கு வராத, உனக்கு எவ்வளவு வேணுமோ கொடுக்கறேன் அதை வாங்கிட்டு கம்முனு போயிடு டா, என்னே டே நான் சொல்லிட்டு இருக்கேன் நீ உன் இஷ்டத்துக்கு கிட்ட வர, “என்ற இளவரசனை நோக்கி வந்த ரத்தினம் அவனின் வாயில் ஓங்கி ஒரு குத்து குத்த அங்கிருந்தவர்கள் அனைவரும் தப்பித்து ஓடிவிட்டார்கள்.
அவன் குத்திய குத்தலில் இளவரசனின் வாயில் குருதி வழிய, அதையும் தாங்கிக்கொண்டு கீழே இருந்த மண்ணை அள்ளி ரத்தினத்தின் விழியில் போட்டு விட்டு ஓடினான் குடிசையை நோக்கி.
Advertisement
அங்கு இலக்கியாவோ அவனை பார்த்ததும் அச்சத்தில் அமைதியாக இருந்தாள்.
வெளியே ரத்தினம் அழைத்து வந்த நாய் தனது எஜமான் கண்ணை பார்த்துவிட்டு ஏதோ புரிந்தது போல், இளவரசனை நோக்கி வந்து அவன் அணிந்து இருந்த லுங்கியை அதன் வாயால் பிடித்து இழுக்க, அவனோ நாயை கையால் அடித்துக்கொண்டிருக்கும் சமயம் பார்த்து இலக்கியா அவனை காலால் எட்டி உதைக்க அவனோ நிலைதடுமாறி கீழே விழுந்தான்.
கண்ணில் இருந்த மண்ணை அங்கிருந்த ஒரு பானையில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்து கொண்டு நன்றாக கண்ணில் இருந்த மண்ணை தூசி போல் தட்டி விட்டவன் நேராய் நுழைந்தான் குடிசையில்.
உள்ளே வந்தவன் இலக்கியாவிடம் சென்று அவளின் கை கட்டையும், வாயில் அடைத்து வைத்திருந்த துணியையும் எடுத்து விட்டு அவளை போக சொல்லி கூடவே நாயை துணைக்கு அனுப்பிவிட்டவனின் பார்வை இளவரசனை நோக்கியது.
அவனோ அவனை கோபத்தோடு பார்த்து ” ரத்தினம் வேணாம் டா, என் மேல கையை வச்ச நாளைக்கு உன் ஐயா இருக்கமாட்டாரு டா, அந்த புள்ள தான் ஓடிப்போச்சுல அப்புறம் என்ன வந்த வழியாவே ஓடிப்போயிடு அவ பக்கத்துலே “என்றவனை அங்கிருந்த பானை கொண்டு அவனின் மண்டையை உடைத்தவன், அவனின் கைகால்களை கயிற்றால் கட்டி, அந்த காட்டு பாதையில் தர தரவென இழுத்து சென்றான்.
அங்கிருந்து தப்பித்தவர்கள் நேராக சென்று நின்றது என்னவோ கோமளத்திடம் தான்.
“அம்மா அந்த ரத்தினத்து கிட்ட, நம்ம தம்பி இளவரசன் மாட்டிகிட்டான் மா , “என்றவனை நோக்கி வந்த கோமளம் அவனின் சட்டையை பிடித்து “என்னடே சொல்லுறவன் நீயி , என் புள்ள மேல யாரும் கையை வச்சா என்ன நடக்கும் ன்னு தெரியும்ல, அந்த ரத்தின மட்டும் என்புள்ள மேல கையை வச்சிட்டான், அவன் கையை துண்டு துண்டா வெட்டி போட்ருவேன் “என்று நரி போல உறுமினார் கோமளம்.
அங்கே இளவரசனை தரதரவென இழுத்து கொண்டு ஊரில் எல்லையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் அவனை போட்டு விட்டு அந்த ஆலயத்தின் மணியை அடித்தான் ரத்தினம்.
ஊரில் ஏதாவது பிரச்சனை என்றால் பஞ்சாயத்துக்கு அழைக்க வேண்டுமானால் அந்த ஆலயத்தின் மணியை தான் அடிப்பார்கள் அந்த ஊர் மக்கள்.
அவன் அடித்த மணியின் சத்தம் கேட்டு ஊரில் உள்ள அனைத்து பெரியவர்களும் அங்கு கூட்டம் கூட, அங்கிருந்த ஒருவனோ அடிவாங்கி ரத்தம் கசிவோடு மல்லாந்து படுத்துக்கொண்டிருந்த இளவரசனை பார்த்துவிட்டு ஓடினான் கோமளத்திடம்.
” அம்மா நம்ம இளவரசன் தம்பி அங்க, அங்க பஞ்சாயத்துல இருக்கு மா “என்று மட்டும் கூறி விட்டு அவன் சென்றுவிட, கோமளமோ வீட்டில் உள்ளே இருந்த அவர் கணவரை பார்த்தார்.
அவர் கணவரோ தனக்கும் அதுக்கும் எந்த சம்மதம் இல்லை என்று போல், சாப்பிட்டு கொண்டிருக்க, அவரின் மகள் இளவரசியோ தாயை முறைத்து பார்த்துவிட்டு முகத்தை திரும்பி கொண்டு சென்று விட்டாள்.
“பெத்த புள்ள பஞ்சாயத்துல இருக்குறான், இங்க சோறு கொட்டிக்கிட்டு இருக்கறாரு மனுஷன் நீ எல்லாம்,, இருய்யா வந்து வச்சிக்குறேன் உனக்கு “என்று கூறி தலை முடியை தூக்கி கொண்டை போட்டுகொண்டு கிளம்பினார் திரௌபதி அம்மன் ஆலயத்தை நோக்கி.
இங்கே பஞ்சாயத்து தலைவர் துரைசிங்கம் முன்னால் அவ்வூர் பெரியவர்கள் அனைவரும் கூடினார்கள்.கூடவே இலக்கியாவின் தாய் ராஜியும், ராதா, சிவகாமியும் அங்கு நின்று நடக்க போகும் வாதத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள்.
“என்னப்பா ரத்தினம், இப்படி மாட்டை அடிக்கறாப்ல அடிச்சி துவைச்சு இழுத்துட்டு வந்துக்குற, இவன் ஆத்தாகாரி வந்தா என்ன பதில் சொல்லுறது,..”என்றார் அங்கிருந்த ஒரு பெரியவர்.
” ஐயா இவன் ஊருக்குள்ள ரொம்ப ரவுடி வேலை பார்க்குறான், இவன் நமக்கு தெரியாம சாராயம் வேற காய்ச்ச ஆரம்பிச்சுட்டான், இவனை இப்படியே விட்டா ,நம்ம ஊரே சாராய குடிச்சிட்டு சீரழிச்சி போயிடும் “என்றான் இளவரசன்.
அப்போது அங்கு வந்த கோமளம் ரத்தினம் பேசிய பேச்சை கேட்டு “என்ன டே சொன்னா என் புள்ள சாராய விக்குறவனா, டேய் ஆதாரத்தோடு பேசு, ஆத்தி ஆத்தா எனக்கு இருக்கற ஒரே புள்ளைய இப்படி அடிச்சிபுட்டானே, நான் என்ன பண்ணுவேன், ” என்றவர் மகனின் அருகில் செல்ல, அவர் பெத்த மகனோ வலியில் துடித்து கொண்டிருந்தான்.
இதை பார்த்த ரத்தினமோ அவன் மீது இரக்கம் பட்டு அவனை தனது தோளில் சுமந்து கொண்டு ஓடினான் வைத்தியசாலையை நோக்கி.
கோமளமும் அவன் பின்னால் ஓட முயற்சிக்க, அங்கிருந்த பெரியவர்கள் அவரை தடுத்து, இந்தா மா கோமளம், பஞ்சாயத்து இன்னும் முடில, நீ எங்கே ஓடுற, இங்கே நில்லு, சாராயம் காய்ச்சி விற்கிறது ஆதாரம் இருக்கா ன்னு கேட்டியே, அதுக்கு எல்லாம் பக்கவா இருக்கு, இதோ இந்த புள்ள இலக்கியா தான் அதற்கு ஆதாரமே ” என்றார் அப்பெரியவர்.
“இதோ பாருங்கய்யா சும்மா ஊருல இருக்குற பொண்ணை கையை காட்டி, இது தா ஆதாரம் ன்னு சொல்லாதீங்கய்யா, என் புள்ளைய பத்தி எனக்கு தெரியும், “என்றவரை பார்த்த ராதாவுக்கு சுள்ளென்று கோவம் தான் வந்தது.
உடனே கூட்டத்தில் இருக்கும் பெரியவர்களை நோக்கி “இல்லை தாத்தா இவங்க பொய் புளுகுறாங்க, நானும் சீதாவும் தோப்பு க்கு போய்ட்டு புளியங்காய் பொருக்கிக்கிட்டு வரும் போது இந்த இலக்கியா அக்கா கத்துற சத்தம் கேட்டுது, நானும் சீதாவும் ஓரமா மறைஞ்சி நின்னுட்டு பார்த்துட்டு இருந்த அப்ப சீதா காலுல ஒரு கட்டைஎறும்பு கடிச்சிது, அப்போ சீதா போட்ட சவுண்ட்ல, அங்க சாராயம் குடிச்சிட்டு இருந்த இளவரசன் பார்த்து எங்களை துரத்தி புடிக்க ஓடிவந்தான், நாங்களும் ஸ்பீடா ரன்னிங் ரேஸ் ல வூட்டுக்கு ஓடியாந்துடோம் “என்று ஒன்னும் விடாமல் நேரில் பார்த்ததை அப்படியே கூறிய ராதாவை பார்த்து அனல் போல் முறைத்து வைத்தார் கோமளம்.
“இந்தா பாப்பா நீ சின்ன பொண்ணு, சும்மா உனக்கு வாயில வந்ததை எல்லாம் பொயி சொல்லாத, என் புள்ளைய பத்தி எனக்கு தெரியும், வந்துட்டா சாட்சி சொல்ல, அது என்ன என் பையன அவன் இவன் ன்னு சொல்லுற, வாயை புடிச்சி தச்சிபுடுவேன் தச்சி, அந்த இலக்கியா பொண்ணே கம்முனு நிக்கிது உனக்கு என்ன கேடு, மூடிக்கிட்டு உன் வேலையை பார்த்துட்டு போ “என்ற கோமளத்தை நக்கலோடு பார்த்த இலக்கியா அங்கு அமர்ந்து இருந்த துரைசிங்கத்திடம் “ஐயா சாட்சி நான் சொல்றேன், இந்த புள்ள ராதா சொல்றது உண்மை தான். நான் வழக்கம்போல காட்டு வேலையை முடிச்சிட்டு, முகத்தை கழுவிட்டு போகலாம் ன்னு அந்த அருவியில் கிட்ட போனேன். முகத்துல தண்ணீர் கூட தெளிக்கல ஐயா, இந்த அம்மா பெத்தவன் என்னைய என் வாயை பொத்தி தூக்கிட்டு போயிட்டான் ஐயா, நானும் அவன் முதுவுல கடிச்சி பார்த்துட்டேன், கருமம் என்ன நாத்தம் நாறுது, எப்படியோ கடவுள் மாதிரி வந்து இந்த புள்ள ராதா பார்த்துட்டு போனதுக்கு அப்புறம் தான், எனக்கு நம்பிக்கையே வந்துச்சி, என்னைய நீங்க காப்பாத்திடுவீங்கன்னு , ராதா மட்டும் என்னைய பாக்கலன்னா நான் இன்னேரம் அந்த குடிகாரனுக்கு இறையா போயிருப்பேன்.”என்று விழியின் ஓரத்தில் வழியும் கண்ணீரோடு கூறினாள் இலக்கியா.
மகள் கூறுவதை கேட்ட ராஜிக்கோ ஒரு நொடி உடல் அதிர்ந்து தான் போனது. ஓடிச்சென்று ராதாவை பார்த்து திருஷ்டி கழித்து “என் ராசாத்தி நீயும் உன் குடும்பமும் நூறு ஆயுசோடு நன்னா இருக்கனும் ஆத்தா “என்று கூற ராதாவோ வாயெல்லாம் பல்லாக “ஈஈஈ சரிங்க அத்தை “என்று கூற சிவகாமியோ மகளை நினைத்து பெருமை பொங்க பார்த்தார் வர போகும் ஆபத்தை அறியாமல்..
இவையெல்லாம் காளி அவதாரத்துக்கு மேல் கோபத்தில் சிவந்து நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கோமளாவின் வேற தவறான நோக்கத்தில் சிந்திக்க ஆரம்பித்தது.
