Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கண்டா வரச் சொல்லுங்க

கண்டா வரச் சொல்லுங்க -பகுதி 1

கண்டா வரச் சொல்லுங்க –  பகுதி – ௧

பகுதி – ௧

நீல விளக்கு ஒளியில், வேலைப்பாடுடன் கூடிய மிகப்பெரிய  கட்டிலில், அவள் ஒரு பொதியாக சுருண்டுகிடந்தாள். போர்வைக்குள் அதிர்வுகளின்  வெளிச்சம்… மொபைல் போன் கால்..விடாமல் லைட் அடித்தது.



Advertisement

கைகளில் எடுத்து பார்த்தவள்,வர்ஷா என்ற பெயரைக்கண்டதும், ஆர்வத்துடன் “ஹலோ” என்றாள்.

எதிர்புறம் பேசியவள் படபட என பொரிந்தாள்.. “தூக்கம் வரலன்னு சொல்லிட்டு நல்லா தூங்கிட்டு இருக்கிற?, நான் உனக்காக தூக்கத்தை விட்டு தேடி, உறுதி பண்ணின்னு வேலை முடிச்சுட்டு கூப்பிட்டால் எடுக்கக் கூட மாட்டேங்கிற”.

“சாரி …சாரி…உனக்கே தெரியும்ல, நான் பயந்துபோய் போனை சைலன்ட்ல போட்டுட்டேன்ப்பா.. இந்த போனை பார்த்தாலே, பீதி ஆகுதுப்பா” ..என தேம்பினாள்.

Advertisement

“சரி ..சரி…விடு..சக்சஸ்”.

Advertisement

“அப்படியா.. நம்பர்  கிடைத்ததா”…?

“ஆமாம் பா…நீ அந்த பத்திரிக்கையின்  கட்டுரை சொன்னியே, அதை வச்சி, என் உறவினர்  மூலமாக அவர் எண்  வாங்கிட்டேன்”.

“உண்மையைச் சொல்லிட்டியா”..?

Advertisement

“ச்சே ..ச்சே …அப்படி பண்ணுவேனா … எங்க கிளப் விழாக்கு முக்கிய விருந்தாளியாக  கூப்பிட போறோம்னு தான்  சொன்னேன்.”

“அப்புறம் ஏன் கூப்பிடலனு கேட்க மாட்டாங்களா”?

“அது அப்ப பார்த்துக்கலாம்… இப்ப என்ன தேவையோ அதை விட்டுட்டு வேற பேசிட்டு இருக்கிற” ..?

“பயமா இருக்கு… அந்த நினைப்பை தவிர்க்க வேறவேற பேசிட்டு இருக்கிறேன்….. சரி வருமா .. பிரச்னை ஆகாதே”

“நீ பேசு, மீனா… அப்படி போக வாய்ப்பில்லை .. அதை தான் விசாரிச்சு, தெளிவா கேட்டுட்டேன்…தைரியமாக பேசு,நல்லா கடவுளை வேண்டிக்க”.

“சரி .. இப்பவே whatsapp message பண்ணவா ..இல்லை கால் பண்ணி பேசவா … இப்ப நேரமாயிடுச்சே”.

“நீ ஆதாரம்  வச்சு இருக்கிறல ? அதை அனுப்பி உதவின்னு  சொல்லு …. அப்புறம் அவரே முழுதும் பார்த்துப்பார்னு சொல்றாங்க. கடமை  தான் அவர் மூச்சாம். அச்சோ, மீனா…பை டி.. அம்மா இன்னும் தூங்கலையான்னு கேட்கிறாங்க” என கட் பண்ணினாள்.

மீனாக்கு அத்துடன் தூக்கம் வரல…தன் தேவையை அந்த நம்பருக்கு message பண்ணினாள். அது சென்றது..ஆனால் ஒரு டிக் தான் காட்டியது…ஆஃப்லைன் போல’..என வருந்தியபடி படுத்தாள்.

ஆனால் மனதில் ஏதோ கொஞ்சம் பாதுகாப்பு உணர்வு வந்தது..தப்பிவிடுவோம் என நம்பிக்கை வர, அம்மா சொன்னவாறே‘அகத்தீசா…அகத்தீசா’ என கண்ணயர்ந்தாள்.

காலை…. அந்த பெரிய மைதானம் சுற்றி ஓடி தன் பயிற்சியை முடித்தவன்…அருகிலுள்ள சிமிண்ட்நாற்காலியில் அமர்ந்து இளைப்பாறிய வண்ணம், தன் போனிற்கு இணைய தொடர்பு கொடுத்தான்.

உடனே பாட்டு இசைத்து புது நம்பரிலிருந்து மெசேஜ் என தெரிவித்தது.

இருக்கிற ஏராளமான குருப்பிற்கு இடையே… இப்படி சிலமுக்கியமானவை கவனிக்க விட்டுப் போனதால்…அதற்கென சிறப்பு  ரிங்டோன் வைத்திருந்தான்..அந்த மெசேஜ் எடுத்து வாசிக்கவும் அவன் முகத்தில் கடுங்கோபம் தெரிந்தது.

வேகமாக அந்த மெசேஜ்க்கு பதில் அனுப்பவும், அங்கிருந்தும் உடனே பதில் வந்தது…சில பல

விவரம் கேட்டு அறிந்தான்.

“கவலைப்படாத.. நான் பார்த்துக்கிறேன்” என வைத்துவிட்டான்.

விரைந்து தன் அலுவலகம் சென்றவன்.. தன் குழுவிடம் ஆலோசனை செய்தான்.

அவர்கள் யோசனைகளை கேட்டவன், அடுத்தடுத்து  கட்டளைகளை இட்டான்.

அன்றைய பொழுது தரவுகள் சேகரிப்பில் போனது. தரவுகள் வைத்து உரிய ஆவணங்கள் பெற்றான்.

மறுநாள் அவன் தன் புல்லட்டில் சென்று அந்த பெரிய பள்ளியின் வாயிலில் நின்றான்.

காவலாளி “சார், யாரை பார்க்கணும், அப்பாயின்மென்ட் இருக்கா.. இங்கே அப்பாயின்மென்ட் இல்லாமல் யாரையும் பார்க்க மாட்டங்க..உங்க தேவை என்னனு சொல்லுங்க.. உள்ளே கேட்டு சொல்றேன் ..அப்பவும் இனி நாளை தான் முடியும், பரவாயில்லையா ..?” என்றான்.

இவன் தன் ஐடியை எடுத்து காண்பித்தான்.

“சார்,யாராக இருந்தாலும்..இதான் இங்கே நடைமுறை சார்..”

“நீ இங்கே காவலாளி தானே … நிறைய பேசுற ..உங்களுக்குத் தான் நட்டம்”.

“சார் ..சார்… எங்க சம்பளத்துல கை வச்சுடுவாங்க”. சார்.. உங்க கார்டு கொடுங்க சார், மேம்ட்ட கேட்டு சொல்றேன், சார்” என அந்த காவலாளி கெஞ்சினான்.

கார்டு தரவும், “சார்,ப்ளீஸ், இங்கேயே நில்லுங்க சார்” என ஓடினான்.

அவன் போகவும், தோட்டக்காரன் அவனிடத்தில் வந்து நின்றான்.

திரும்ப காவலாளி ஓட்டமும் நடையுமாக வந்தவன்… “சார்,…. வரச் சொன்னாங்க சார்”. என சுரத்தியில்லாமல் சொன்னான்.

‘தன்னால் இன்று அவன் பொழப்பு போச்சு’ என எண்ணியபடியே அவன் உள்ளே சென்றான்.

ஆனாலும் அங்கே வேறயாரையும் பார்க்க விடவில்லை..பள்ளி மேனேஜர் தான் வந்தார்.

“என்ன சார் … என்ன விசயம்?”.

“எங்க அண்ணன் பையன் அட்மிசன் விவரம் கேட்கலாம்னு வந்தேன்”.

அவர் முகத்தில் ஒரு நிம்மதி உணர்வு வந்து போனது. பின் கெத்துடன்.. “ஓஹோ… என்ன வயசு சார் ?  கிண்டர்கார்டன் என்றால் வாய்மொழித் தேர்வு  மட்டும், வேறகிளாஸ் என்றால், எழுத்துத் தேர்வும் உண்டு, எழுதி செலக்ட் ஆகணும் சார்” என்று சொன்னவர் மீண்டும் தானாக

“உங்க பதவியோ..சிபாரிசோ இங்கே செல்லாது சார், ரெம்ப ஸ்ட்ரிக்ட் ஆக சட்டத்திட்டங்களை பின்பற்றுகிற பள்ளி சார்” என்று சேர்த்து சொன்னார்..

அவன் முகத்தில் கடுப்பு… ‘ஆமாடா .. பொல்லாத சட்டம் ….திட்டம்  நாளை உங்களை சந்தி சிரிக்க வைக்கிறேன்’ என எண்ணியவன்.. “கொஞ்சம் வகுப்பறைகள், பள்ளியைச் சுற்றி   பார்க்கலாமா ?” என கேட்டான்.

“இருங்க சார்” என்று வெளியே போனவர், ஒருத்தருடன் திரும்பி வந்து, “சாருக்கு நம்ம பள்ளி, மற்றும் வகுப்பறைகள் திறந்து காண்பிங்க”.

“சார், இவர்  நம்ம பள்ளி உடற்கல்வி ஆசிரியர், இவர் உங்களுக்கு காண்பிப்பாருங்க”.

இவனும் “நன்றி சார்” என வெளியேறினான்.

பள்ளி பெரிய வளாகம் தான், பணத்தால் இளைத்து இருக்கிறார்கள்.. பணக்கார செழிப்பு ஒவ்வொரு அணுவிலும்  தெரிந்தது. இவ்வளவு சுகமாக

இதில் படிக்கும் மாணவர்கள் நாளை சமுகத்தில் எப்படி இணைவர்?

மறுநாள் போலீஸ் ஜீப்பில் அவன் டீம் சந்திரன், தேவி  தலைமையில் வந்தார்கள்.

முதல் நாள் வரவிலேயே .. தங்கள் செல்வாக்கை வைத்து…பிரச்னையை நுகர்ந்திருந்தனர்.

“முதல்வர்  இல்ல சார், இன்று விடுமுறை .. என்ன வேண்டும்?” என அடுத்த நிலை உதவி தலைமை ஆசிரியரே வந்தார்.

நிர்வாக ஆட்களும் இல்லை.

“உங்க பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ராஜகோபாலை பார்க்கணும் சார்”.

“அவரா… அவர் இங்கே இப்ப வேலையில் இல்லை சார்….இடைநீக்கம் பண்ணியிருக்கிறோம் சார்”.

“ஓ, எப்ப இருந்து, ஏன்” ?

“அவர் மேலே ஒரு பெற்றோர் கம்ப்ளைன்ட்செஞ்சிருந்தாங்க சார்..நிறுத்தி ரெண்டு நாளாச்சு சார்”.

சந்திரன், அருகே நின்ற அலுவலக பெண்ணை நெருங்கியவன்..அங்கே மேசையில் ஆசிரியர் வருகை பதிவேடு இருக்க, அதை எடுத்தான்.

“சார்…சார்..அதெல்லாம் நீங்க எடுக்க கூடாது” என்ற மேனேஜர், அந்த அலுவலக பெண்ணை முறைத்தார்.

சந்திரன் அந்த பதிவேட்டை பார்க்க..அதில்  முந்தைய நாள் வருகை அந்த நீக்கப்பட்டதாக சொல்லப்பட்ட ஆசிரியரின் கையெழுத்துடன் விவரம் இருந்தது.

‘பணம் பத்தும் செய்யும்…பாதாளம் வரை பாயுமே’.

“சார்.. சார் .. இதெல்லாம் முறையாக அனுமதி பெற்று எடுத்து போங்க சார்..இப்ப மேடம் இல்ல.

நாளை வாங்க..சார்” என அவர் பதறினார்.

“எங்கள் கடமையை செய்ய விடலன்னா..உங்களை கைது  பண்ண வேண்டியது வரும்.. பரவாயில்லையா” ..என சந்திரன்கேட்கவும் அமைதியானார்.

‘அவர் எந்தெந்த வகுப்புகள் எடுப்பார்…அவரோட டைம் டேபிள் என்ன..முகவரி தாங்க…அவரோடpresence எதில் உண்டு’ …என விவரங்கள் சேகரித்தவன், அங்கிருந்து கிளம்பினான்.அவனுடைய டீம்மேட் தேவி .. அங்கே இருந்த ஆயாம்மாக்களிடம்.சில ஆசிரியர்களிடமும்  பேசி மற்ற விவரம் வாங்கினார்.

ஜீப்பில்ஏறியவுடன் போன் எடுத்து, “சார் அவன் பெரிய திமிங்கலம் போல, சார்…இந்த பள்ளியும் தில்லாலங்காடி வேலை பண்றாங்க”

“ஓஹோ…சுறாவாகவே இருந்தாலும் நம்மிடம் தப்பிக்க முடியாது.. நம்மிடம் இருக்கும் சாட்சி,அவர்களை பயந்து விலகிட செய்யும் .. எவ்வளவு தூரம் போறாங்க பார்ப்போம்”.

“இதுவும் நல்லாஇருக்குல…அவனைப் போலவே வலையை விரித்து, தானே மாட்டவைப்பது, யாரும் உதவிக்கு வந்துடுவாங்களோ ?”

அதற்குள் அவன் போன் அடிக்கவும் எடுத்து பேசியவன்.. “சரி, நம்ம அலுவலகத்திற்கு வந்து விடுங்கள்” என கட் செய்தான்.

போனில் அவன் தேவைகள் சிலவற்றை சொன்னான்…

அதன் பின்  போனில் தொடர்ந்து மெசெஜ்டோன் வந்த வண்ணமிருந்தது…. சாட் நிறைந்திருந்தது..

பின் அலுவலகம் வரவும் அங்கே ஒரு புது தலைவேதனை அவனுக்காக காத்திருந்தது…..

 

 

மீண்டும் வருவான்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!