Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கண்டா வரச் சொல்லுங்க

கண்டா வரச் சொல்லுங்க – பகுதி 2

பகுதி – ௨

அந்த பிரமாண்டமான கட்டிடத்தில்முன் அவன் வண்டி வந்து நின்றது. மிடுக்குடன் இறங்கினான் வெற்றிவேல் ஐபிஎஸ்.

இளம்வயதில் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவன்.

நேர்மையானவன். அவனுக்கு ஏற்றவர்களை தன் சகாக்களாக கொண்டவன். சந்திரன், கபில், தேவி அவன் டீம்.



Advertisement

அனைவரும் ஒரே பேட்ஜில் படித்தவர்கள். எல்லோரும் ஒரே இனம், யாருக்கும் வளையாத இனம். ஒத்த குணம். கை நீளாதவர்கள். எனவே அவர்கள் தானாகவே இணைக்கப் பட்டார்கள்.

வில்லங்கமான வழக்குகள் இவர்களை தேடி வரும், எடுத்ததை முடிக்கும் வரை ஓயார்.

வாயிலில் நின்ற அவன் கீழுள்ள அதிகாரிகளின் சல்யூட்டை ஒரு தலை அசைப்புடன் ஏற்ற வண்ணம் தனது அறைக்கு சென்றான்.

Advertisement

வாயிலில் அவனுக்கு நிறைய பார்வையாளர்கள் காத்திருந்தார்கள் ..அதில் ஒரு பெண்ணும்.

Advertisement

அழைப்பு மணியை அழுத்தி, அவர்களை உள்ளே அனுப்ப சொன்னான்.

இருவர் வந்தனர்..அந்த பெண்ணுடன் ஒரு ஆணும்.

“உட்காருங்க …என்ன விசயம்..?”

Advertisement

“சார்” …என விம்பினாள்.

“என்னம்மா…அழாமல் சொல்லுங்க, தண்ணீர் கொண்டு வர சொல்லவா ?”

“வேண்டாம் சார்…” முகம் துடைத்து, ஆழ முச்சு எடுத்து தன்னை சமன்படுத்தவும்,

“இப்ப சொல்லுங்க”.

கூட வந்த ஆண் “இவங்க கணவர் ரெண்டு நாளாக காணோம் சார்” எனசொல்ல

“நீங்க …?”

அந்த பெண் வாய் திறந்தது “இவர் அவரோட நண்பர் சார்”

“ஓகே .. உங்க கணவர் ..?”

“கண்ணன், மேடை பாடகர் சார்…. இசைக் கச்சேரியில் பாடுறவர் சார். எங்கள் கல்யாணம், காதல் கல்யாணம் சார்”.

“கல்யாணம் ஆகி எவ்வளவு வருடம்  ஆகுது?

“நாலு வருடம் சார்”.

காணாமல் போய் ரெண்டு நாள் தானே ஆகுது, அவர் தொழிலுக்கு இது குறைவு தானே. எதுவும் சண்டையா உங்களுக்குள்ள ?”

“அப்படி எல்லாம் இல்லை சார். பொதுவாக அவர் எங்கே இருந்தாலும் தினம் போன் பண்ணிடுவார். ரெண்டு நாளாக பண்ணல, நானாக கூப்பிட்டாலும் எடுக்கல.”

“எதுவும் நிகழ்ச்சிக்குப் போய் இருக்கலாமே ?”

“அப்படின்னாலும் சொல்லிடுவார் சார்”.

“சொந்தமாக குழு வைத்திருக்கிறாரா ?”

“இல்லை சார்” … என தயங்கி … தானே தொடர்ந்தார் “அவருக்கு ப்ரண்ட்ஸ் அதிகம் சார்.. அதனால் அந்த இசைக்குழுவே கிட்டத்தட்ட சொந்தமானது போல் தான், தேவைக்கு ஏற்ப கலந்துப்பார். குறிப்பிட்டு சொல்ல முடியாது”.

“அவங்க கிட்ட கேட்டிங்களா?”

“சார், அவங்களும் தேடவும் தான் பயந்து இங்கே வந்து இருக்கிறாங்க”.

“நீங்க எப்படி ..?”

“நாங்க பாமிலி ப்ரண்ட்ஸ்”.

“சார்….” – சந்திரன்.

“உள்ளே வாங்க சந்திரன்”.

“ஒகே…பெயர், முகவரி, படம் இருந்தால் இவரிடம்  கொடுத்துட்டு போங்க”.

“சந்திரன், எல்லா விவரமும்  வாங்கிக்க சந்திரன்”.

“ஒகே சார்… உங்களுக்கு போன்”.

“என்ன …..சொல்லுங்க ……ம்… ம்….ம்… எங்கே ..எப்போ…இதோ வந்துட்டேன்”.

சந்திரன் நீட்டிய தாளை வாங்கி பார்த்தான்.

“என்ன ரெண்டு முகவரி ?”..

“சார், அவர் சில சமயம் தனியாக தங்குவாராம்”.

“சில சமயமா ….எப்பவுமேவா ?”

“நிறைய மறைக்கிறாங்க போல, விசாரிக்கணும் சார்”.

“ஓகே ..லெட்ஸ் கோ”.

“சந்திரன்,” என அழைத்தப்படி எழுந்து தன் தொப்பியை அணிந்தவாறே, “ஈசிஆர்ல ஒரு பாடி கண்டுபிடிச்சுருங்களாம் ..வண்டி ரெடி பண்ணுங்க,  இன்னும் இருக்கிறவங்களை கபிலை விவரம் கேட்க சொல்லு, ஹரி அப்”.

மிகப்பெரிய பங்களா அருகே இவர்கள் வண்டி போய் நின்றது. அங்கே இருந்த காவலர்கள், வீட்டின்  பின்புறம் உள்ள அவுட்ஹவுஸ் நோக்கி கூட்டி போனார்கள். பங்களாவைச் சுற்றிலும்  தோட்டம். நல்ல உயரமாக கட்டப்பட்ட பங்களா என்பதால் கடல் தெரிந்தது.

ஒரு சின்ன வரவேற்பு அறை, சின்ன படுக்கை அறை, ஒற்றைக் கட்டில் தான். குட்டி அடுப்பறை. அவசர சமையல் பொருட்கள் மட்டுமே நடப்பது போல இருந்தது .. சமையல் சாதனங்களும் இல்லை, சமையல்  செய்தது போலும்  தெரியவில்லை.

வரவேற்பு அறையில் ஒரு புறம் மியூசிக் சிஸ்டம், ஒரு பெரிய கீபோர்ட் கணினியோட இணைந்து இருந்தது. எங்கும் இருக்கும் பொருட்கள் நேர்த்தியாக இருந்தது.

வெளியே வந்தான், எதிரில்  தோட்டத்தில் ஆங்காங்கே இருக்கைகள் குடையின்கீழ் இருந்தன.

அதில் ஒன்றில் அமர்ந்தவன், கண் அசைக்க, சந்திரன் “சார், இவன் தான் பார்த்தவன்”.

“உன் பெயர் என்ன ?”

“சார், தாமஸ் நான் தோட்டக்காரன்”.

“எவ்வளவு வருடமா இங்கே வேலை பார்க்கிற?”

“ஐந்து வருடமாக சார்.

“எப்ப பார்த்த?”

“நான் காலையில் தோட்டத்திற்கு தண்ணீர் விடுவது வழக்கம். இன்று என் பையனும் வந்திருந்தான் சார்”‘. தோட்டத்தில் வண்ணத்துப்பூச்சிகளை விரட்டிட்டு இருந்தவன், அவன் தான்.. ‘அங்கே யாரோ படுத்து இருக்கிறாங்கன்னு வாப்பான்னு’ சொன்னான்”.

“நான் எதுவும் திருடனனோனு வாட்ச்மேனை சத்தம் கொடுத்துட்டே போனேன். போனால் ..சார் விழுந்து கிடந்தார் …சார் …சார்னு எழுப்பிட்டு இருந்தேன்.அப்ப வாட்ச்மேன் வரவும் கை பிடி தூக்குவோம்னு சொன்னேன். அவன் தான், ‘இல்ல ஒரு மாதிரி இருக்கிறார் பாரு’,‘மூச்சு இருக்கிற மாதிரி தெரியலனு சொன்னான்’.

“அப்ப முன்பு இது போல் நடந்திருக்கா ?”

அவர் ப்ரண்ட்ஸோட வந்தால், சில சமயம் இப்படித்தான். ஆனால் தோட்டத்தில் இல்ல, அந்த வீட்டு வராண்டாவில் கிடப்பார்….காலைல வந்து நான் தான் உள்ளே கூட்டி போய் படுக்க வைப்பேன்.

“இப்படி அடிக்கடி நடக்குமா ?”

“எப்பவும் இப்படி குடிக்க மாட்டார்… சில சமயம்”.

“உன் பையன் எப்பவும் வருவானா ?”

“இல்ல சார், சில சமயம்..ஆனால் இன்று சார் தான்  பார்ட்டி இருக்கு, நல்ல சாப்பாடு உண்டு பையனை கூட்டி வான்னு சொன்னாருங்க”.

“இது மாதிரி சொல்லி முன்பும் இப்படி கூட்டி வந்திருக்கியா ..?”

“இல்லங்க ஐயா .. எதுவும் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுன்னு பணம் தருவார்..இப்படி எல்லாம் சொன்னதில்லங்க”.

“சரி, போகலாம்.. கூப்பிட்டால் வரணும்”.

“சரிங்க ஐயா”.

அடுத்து….

வாட்ச்மேன் வந்தான்.

“வணக்கம் சார். நான் விக்டர். ஏழு வருடமாகஇங்கே வேலை செய்றேன்”.

“இது யாரோட பங்களா?”.

“முதலாளி, வெளிநாட்டில் இருக்கிறாங்க. நான் அவங்களுக்கு தூரத்து சொந்தம். விவசாயம் கை விடவும், இங்கே வந்து சேர்ந்தேன்”.

நீங்க இங்கே மேனேஜர் கம் வாட்ச்மேன் ?

“ஆமாம் சார். வீட்டை பராமரிப்பது, பாதுகாப்பு மட்டுமே என் பொறுப்பு, சார்… இந்த வீட்டை சினிமா, சீரியல் சூட்டிங்க்கு வாடகைக்கு விடுவாங்க”.

“அதை யார் பார்ப்பது..?”

“ஓனர் போன் நம்பர் தந்து இருக்கிறாங்க..அதை கொடுப்பேன், அவங்களே பேசிப்பாங்க..எல்லாம் ஆன்லைன் தான். .

பின்னால் அவர் இருந்த வீடு, நான் தங்க கட்டியது தான். ஆனால் அவ்வளவு நமக்கு ஏன்னு நான் தான் வேண்டாம்னேன்..

“வாசலில் இருக்கிற அறை இப்ப புதுப்பிக்கவும், அதில் தங்கிக்கிட்டேன்”.

“எவ்வளவு நாள் இருக்கிறார்?”

“இப்ப ஒரு வருடமாக தான்”.

“எப்படி குடி வந்தார்.?”

“அதெல்லாம் முதலாளி தான் பார்த்துப்பாங்க, அங்கே ஏதோ இசைக்கச்சேரி போனப்ப பழக்கம் போல”.

“அவர் குடும்பம் இல்லையா ?”

“இல்லை சார். அவரே மாதத்தில் மொத்தம்  பதினைந்து நாள் கூட தங்க மாட்டார்”.

“பின்ன ..?”

“திடிர்னு நண்பர்களோடு வருவார்..விடிய விடிய பாட்டு சத்தம் தான். மறுநாள் கிளம்பிடுவாங்க ”

“பெண்கள் மட்டும்வருவாங்களா ?”

“ம்ம்ம் …அப்பப்ப வருவாங்க சார்”.

“பகலிலா ..? இரவிலா ..?”

“பகலில் வருவாங்க சார், இரவவில்  பெண்கள் மட்டும் தனியாக வந்ததில்லை.

நிறைய பேரா ஆண்கள் வரும்போது, சில பெண்களும் சேர்ந்து  வருவாங்க… முழுதும் பாட்டு பயிற்சி  சத்தம் தான் கேட்கும்”.

“அப்படி வந்த பெண்கள் இரவே போய் விடுவார்களா? இல்ல தாங்குவார்களா?”

“தங்கினது இல்லை…எவ்வளவு நேரமானாலும் கார் பிடித்து போய்டுவாங்க”

“சூட்டிங் இருந்தால் சார் மட்டும் தான் இருப்பாங்க மத்தவங்க திரும்பி போய் விடுவாங்க”.

“அவர்களுக்குள் வாக்குவாதம் எதுவும் சண்டை…?”

“இல்ல சார். ஒரே பாட்டு சத்தம், ஆட்டமா இருக்கும்”.

அந்நேரம்  வெளியே இருந்து சாப்பாடு வாங்குவாங்க. சுத்தம் செய்ய தோட்டக்காரனை தான் சொல்லுவார். அதற்கு காசு கொடுத்திடுவார். மீந்தவையும் கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.

“சரி,கூப்பிட்டால் வரணும். போகலாம்”.

தடய வல்லுனர்கள் வர, “என்ன முடிந்ததா ..?”

“எடுத்தாச்சு சார்..ஆனால் ரிசல்ட் தர ரெண்டு நாளாகும். நிறைய வேறு வேறுதடங்கள்”.

“ஓகே”…….சந்திரன்…..என

“ஆம்புலன்ஸ் வந்துடுச்சு சார் .. நீங்க சொன்னதும்… “ஓகே ப்ரோசிட்.. சந்திரன்”.

தோட்டத்தை சுற்றி வந்தான். செடிகளுக்குள் சுருண்டு இருந்த ஒரு தாளை எடுத்தான்.

‘சம்யுக்தா மை லவ் …’ அப்புறம் எழுதியிருந்தவை  தண்ணீரில் அழிந்திருந்தது.

மீண்டும் வீட்டிற்குள் வந்தான். கட்டில் அருகில் இருந்த சின்ன ராக்கை திறந்து பார்த்தான். அதில் ஒரு கிழிந்த பரிசு கவர் மட்டும் சுருட்டி கிடந்தது. அதன் அடியில் ஒரு டைரி .. இரண்டையும் எடுத்தவன் வெளியேறினான்.

 

மீண்டும் வருவான்

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!