Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி.

10.காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

கண்ணன் சொன்னதையே தூங்காமல் யோசித்து கொண்டிருந்த ஆரதி அதற்கு மேல் பொறுமை இல்லாமல்… நள்ளிரவு நேரத்தில் கண்ணனின் அறைக்குள் நுழைய, அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்‌‌. இல்லை ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் நடித்து கொண்டிருக்க, 

சில நொடி அவனையே பார்த்திருந்தவள் மெல்ல “ஆழி” என்றழைக்க, 



Advertisement

தன் நடிப்பை தொடர்ந்து கொண்டிருந்தான் கண்ணன்.

“ஆழி நீ தூங்கலன்னு எனக்கு தெரியும். மரியாதை எந்திரிச்சுரு இல்ல’ன்னா அவ்வளவுதான்..” அப்போதும் அவன் அமைதியாக படுத்து இருக்க…. வேகமக மெத்தையில் ஏறி அவன் வயிற்று மீது அமர்ந்துக் கொண்டவள் சரமாரியாக அடிக்க ஆரம்பிக்க,

Advertisement

Advertisement

“ஏய் ரிப்பேரு… போதும்டி அடிக்காத. நீ ஏறி உட்கார்ந்த அப்பவே பாதி மூச்சு நின்னுடுச்சி . இதுல விடாம அடிச்சிட்டு இருந்த அப்புறம் கொலை கேஸ் தான்.”

“பரவால்ல…. என்னை வெறுப்பேத்தி பார்க்குற உன்னை கொன்னா கூட என் கோபம் தீராது. சொல்லு எவடா அவ. அப்படியே அழகு ல ஐயா மயங்கிடிங்களோ. சொல்லுடா… வேலைக்கு போன இடத்துல… இந்த வேலை தான் பாத்துட்டு இருந்தியா.” என்று அடித்துக் கொண்டே கேட்க,

Advertisement

“அத‌ எதுக்கு டி நீ கேக்குற. நிஜமாவே அந்த பொண்ணு அவ்ளோ அழகா இருந்தா தெரியுமா. கட்டுனா அந்த மாதிரி ஒரு பொண்ணு தான் கட்டனும்.”

“கட்டுவடா கட்டுவ.. கட்டுறதுக்கு கை இருந்தா தான கட்டுவ. அத இன்னைக்கு உடைச்சிட்டா சரியாகிடும்.” என்றவள் அமைதியாகி விட்டாள் கண்ணனின் அணைப்பில். ஏற்கனவே கண்ணன் மீது அமர்ந்து அடித்துக் கொண்டிருந்தவள் பேசிக்கொண்டே.. முழுவதும்  சரிந்து இருக்க,

அவள் வருகைக்காகவே காத்திருந்தவனுக்கு இந்த வாய்ப்பை விடவா மனசு வரும். இடையோடு சேர்த்து அவனோடு அணைத்துக் கொண்டு “கட்டிக்கிட்ட டி ரிப்பேரு  இப்போ உன்னால என்ன பண்ண முடியும். எங்க.. உடைக்க போறதா  சொன்னியே  அந்த கைய இப்போ உடை பார்க்கலாம்.” என்றவன் மேலும் அவனோடு  இறுக்க,

அவனையே பார்த்திருந்தாலே தவிர வேறு எதுவும் பேசவில்லை. சில நொடி அவள் கண்களையே பார்த்த கண்ணன் “அம்மா கிட்ட சொன்னதுலாம் சும்மா உன்னை வெறுப்பேத்த. பெங்களூரு போயிருந்தப்போ… அந்த பொண்ணு ரோட்டுல ஒரு சின்ன ஆக்சிடன்ட் ல மாட்டிக்கிட்டா ஆதி. நான்தான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனேன். அந்த பொண்ணோட அப்பா அம்மா வந்ததும் சொல்லிட்டு அங்கிருந்து நான் கிளம்பிட்டேன். சத்தியமா வேற ஒன்னும் இல்ல. நீ வருவேன்னு தெரியும்… இதைக் கேட்க. அதை நானும் தூங்காம இருந்தேன். என்னை பத்தி நல்லா தெரிஞ்சும்மாடி உனக்கு இதுல சந்தேகம் வருது… ரிப்பேரு.”

“நான் எப்ப சொன்ன சந்தேகப்படுகிறன்னு.”

“இல்லாம தான் இந்த நேரத்துல இங்க வந்திருக்கியா ரிப்பேரு.” என்றவனை முறைத்துப் பார்த்த ஆரதி,

“சந்தேகப்பட்டுலாம் கேட்க வரல கோலி கண்ணா . ரொம்ப ஓவரா புகழ்ந்துட்டு இருந்தியா.. அதான் என்ன ஏதுன்னு கேட்க வந்தேன். வேற ஒண்ணும் இல்ல. நீ எதையாது கற்பனை பண்ணிக்காத.. உன் மூஞ்சி அதுக்கெல்லாம் சரிப்பட்டு வராது’ன்னு எனக்கு நல்லாவே தெரியும் எடுபிடி ……” என்றவள் அவன் பிடியில் இறுக்கத்தை உணர்ந்து மிரண்ட பார்வையோடு….விலகி வெளியேற நினைக்க,

“எங்க போறீங்க மேடம்…” 

“நீ ஒரு டம்மி னு தெரிஞ்சும்… இவ்வளவு நேரம் யோசிச்சு தூங்காம இருந்துட்டேன். எனக்கு தூக்கம் வருது ஆழி நான் தூங்க போறேன்.” என்றவள் மீண்டும்  விலக முற்பட,

“இங்கையே தூங்கு ஆதி. உன்னை எதுவும் பண்ண மாட்டேன். ப்ராமிஸ்” என்றவன் ஆரதியை வலது பக்கமாக சரித்து உறங்கச் செல்ல .. அவள் தான் இந்த புது அனுபவத்தில் உணர்வு குவியலை மாறியிருந்தாள். 

ஆரதி வேலைக்கு கிளம்பாமல் கையில் மாத்திரையை வைத்துக்கொண்டு யோசனையில் இருக்க… அதைப் பார்த்துக் கொண்டே வந்த சித்து,

“ஆதி என்ன மாத்திரை இது. உடம்புக்கு ஏதாவது முடியலையா… ” என கேட்க,

“இல்ல பித்து.. இது அனிதா பேக்ல இருந்த மாத்திரை. நேத்து அவளை பத்தி விசாரிக்க வேலை செஞ்ச இடத்துக்கு போய் இருந்தேன் . என்று நேற்று அங்கு நடந்ததையும் சித்து விடம் சொல்ல,

“சோ! இதை அனிதா பேக்ல இருந்து எடுத்து இருக்க. நிச்சயமா இத அனிதா யூஸ் பண்ணி இருக்க நிறைய வாய்ப்பிருக்கு. இது என்ன மாத்திரை’ன்னு விசாரிச்சிட்டியா ஆதி.” என்றவனுக்கு, ” ஹ்ம்ம் இது தைராய்டு சம்பந்தப்பட்ட மாத்திரை. இந்த மாத்திரையை தொடர்ந்து போட்டுட்டு இருக்கனும்.” என்றாள்.

“அனிதா அம்மா கிட்ட இதை பத்தி பேசி பாரு ஆதி. அவங்க எதாச்சும் தகவல் சொல்ல வாய்ப்பு இருக்கு… அது மட்டும் இல்ல இங்க இருந்து போனதிலிருந்து அவங்க கிட்ட நானும் பேசவே இல்லை. பொண்ண நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருப்பாங்க.”என்று பேசிக்கொண்டே சென்ற சித்துவை தடுத்து நிறுத்தியது ஆரதியின் “அவங்க ஃபோனும் எடுக்கல பித்து. நேத்துல இருந்து கால் பண்ணிட்டு இருக்க. அதான் ஒரே யோசனையா இருக்கு. இங்கேயே இருந்து யோசிக்கிறதை விட அவங்க வீட்டுக்கு போய் பாக்கலாமான்னு யோசிக்கிறேன் பித்து.”

“சரி ஆதி நீ தனியா போகாத. நானும் கூட வரேன்.” என்று இருவரும் ராசாத்தி அம்மாவை பார்க்க முடிவு செய்திருந்தனர்..

டெபுடி கமிஷனர் அலுவலகம்…

ராபர்ட்டை பிடிக்க தயார் படுத்தப்பட்ட தனிப்படை காவலர்கள் நேற்று மதுரைக்குச் சென்று கடைசியாக சிக்னல் நின்ற இடத்தில் விசாரிக்க, அது ஆள் அரவமற்ற காட்டுப் பகுதியாக இருந்தது. அவர்கள் வருவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக… மீண்டும் ராபர்ட்டின் சிம் கார்ட் தொடர்புக்கு கிடைக்க ஆரம்பித்திருந்தது. அதுவும்   அங்கிருந்து ஆறு கிலோ மீட்டருக்கு உள்ளேயே  மாறிமாறி இருப்பிடம் காட்ட…, கண்ணனின் காதிற்கு வர…, அவனது ஆலோசனைப்படி ஆறு காவலர்களில் 4 பேர் அந்த இடத்தில் இருக்க…. இரண்டு காவலர்கள் அந்த இடத்திலிருந்து ஆறு கிலோ மீட்டருக்கு தொலைவிலுள்ள ஒரு மதுபானக் கடையில் அமர்ந்திருந்தனர். சரியாக நள்ளிரவு ஒரு மணி போல் … சிக்னல் நான்கு காவலர்கள் மறைந்திருந்த இடத்திற்கு அருகில் காட்ட ஆரம்பித்தது. காவலர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு நிற்க,

அழுக்கு  கையிலியோடு கசங்கிய சட்டையும், கையில் மது பாட்டிலுடன் பல நாட்களாய் வெட்டாமல் இருக்கும் முடியுடன் ஒருவனும், அவனைப்போலவே தோற்றத்துடன் கையில் போனுடன் ஒருவனும்  வர , அவர்களை முன்னே போக விட்டு பின்னே சந்தேகம் வராமல் தொடர ஆரம்பித்தனர் போலீஸ்காரர்கள். அப்படியே நடைபயணம் முக்கால் மணி நேரத்திற்கு பின் அந்த காட்டில் உள்ள ஒரு குடிசை வீட்டில் நின்றது. 

அவ்விருவரும் குடிசைக்குள் நுழைந்து பத்து நிமிடங்கள் ஆகி இருக்க. நான்கு போலீஸ்காரர்களும் அவ்வீட்டை சுற்றி வளைத்து உள்ளிருக்கும் இருவரையும் பிடித்தனர். பின் மதுரையில் இருந்து காலையில்தான் சென்னை வந்திருந்தனர். 

திறமையாக செயல்பட்டு பிடித்த ஆறு காவலர்களையும் பாராட்டிய ஆழி கண்ணன்…. அடுத்ததாக பிடிபட்டவர்களை பற்றி விசாரிக்க,

“சார்..!  நாங்களும் ராபர்ட் னு நினைச்சி தான் பிடிக்க போனோம் . அங்க போனதுக்கு அப்புறம் தான்  தெரிஞ்சுது ராபர்ட் அங்க இல்லன்னு. இவங்க ராபர்ட் கூட வேலை பார்க்குற கூட்டாளிங்க சார். “என்று தனிப்படை காவலர்களில் ஒருவர் கூற,

பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கண்ணன் தான், “அவங்க கிட்ட ராபர்ட் எங்கன்னு கேட்டீர்களா சார். ராபர்ட் போன் இவங்க கிட்ட எப்படி வந்துச்சி.”

“என்ன கேட்டாலும் ராபர்ட் எங்க இருக்கான்னு தெரியவே தெரியாதுன்னு சொல்றாங்க சார்.”

“ஹ்ம்ம்! அப்டியா சொல்றாங்க தலைங்க. சரி அப்போ நம்ம விசாரணை விழாவ ஆரம்பிச்சிடலாம் சார் வாங்க.”

“வணக்கம்! என்னோட பேரு மணிகண்டன். இதோ இவ என்னோட மனைவி மகேஸ்வரி. இவள் என்னோட மக ரதிதேவி. நாங்க பெங்களூர்ல இருந்து வந்திருக்கோம். ஆழிக்கண்ணன் வீடு இது தான…” என்று கண்ணனின் வீட்டிற்கு வந்திருந்த ரதிதேவி குடும்பம் மகாலட்சுமியிடம் அறிமுகப்படலம் நடத்த…,

ரதி தேவி என்ற வார்த்தை தான் அவரை சிலையாக மாற்றியிருந்தது. வந்தவர்களும் அப்படியே நிற்க… சில நொடிகளில் தன்னை மீட்டுக் கொண்ட மகாலட்சுமி , “ஆமாங்க ஆழிக்கண்ணன் என்னோட மகன் தான். உள்ள வாங்க…” என்று மரியாதை நிமித்தமாக அவர்களை உபசரிக்க ஆரம்பித்திருந்தார் .

“ஆன்ட்டி! திடீர்னு யாரு’ன்னே தெரியாதவங்க வீட்டுக்கு வந்ததும் உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும்னு புரியுது. சாரி! சொல்லிட்டு வரணும்னு தான் நினைச்சேன். ஆனா எங்க ஆழிக் கண்ணன் சார் வேணாம்’னு சொல்லிடு வாங்களோன்னு  பயந்துதான் இப்படி சொல்லாமா வந்தோம் . தப்பா நினைச்சுக்காதீங்க ஆன்ட்டி..” என ரதிதேவி பொறுமையாக மகாலட்சுமிக்கு தங்கள் சூழ் நிலையை விவரிக்க,

“சாரி’லாம் எதுக்கு மா. நீங்க வந்தது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என் மகனை பாக்கணும்னு அவ்ளோ தூரத்திலிருந்து வந்திருக்கீங்க. இதுல எனக்கு சந்தோஷம்தான். என்னோட மகன் இப்போ வீட்ல இல்ல. வர மதியத்துக்கு மேல ஆகும்…” என்று மகாலட்சுமி கூற,

“தெரியும் ஆன்ட்டி! சார் இப்போ எங்க இருக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சுதான் வந்தேன். அவங்க வரும்போது ஒரு சின்ன சர்ப்ரைஸ். சார் எப்படி ரியாக் பண்றாங்கன்னு பாக்கணும் ஆன்ட்டி.” என்றவளின் பேச்சில் இருக்கும் ஆர்வத்தை உணர்ந்த மகாலட்சுமி மேற்கொண்டு எதுவும் பேசாமல் கண்ணனுக்கு தகவல் கூற அவனும் வருவதாக சொல்லியிருந்தான்.

சிறிது நேரத்திலே ரதிதேவி மகாலட்சுமியிடம் நன்றாக பேச.. அவரும் இவளின் பேச்சில் கலக்க ஆரம்பிக்க,

“ஆன்ட்டி ! நான் ஃகாபி போடவா.. ஆன்ட்டி அத நான் பண்ற…” என வார்த்தைக்கு வார்த்தை மகாலட்சுமி இடம் அன்பை கொட்டிய ரதி தேவியை ஆரதி இடத்தில் வைக்க முடியாமல் ஒரு பக்கம் மனம் நெருடினாலும் பிள்ளைகளின் சந்தோஷத்தை கெடுக்க மனமில்லாமல் ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருந்தார். 

வழக்கமாக மதிய நேரத்தில் உணவருந்த வரும் நாராயணன் இவர்களை கண்டு யார் என பார்வையாலே மகாலட்சுமியிடம் வினவ, 

அவரைப் பார்த்ததும் ஆழி கண்ணனின் தந்தை என புரிந்து கொண்ட ரதிதேவியோ, ” ஹாய் அங்கிள். நான் ரதிதேவி… இவங்க என்னோட அப்பா. பக்கத்துல உக்காந்து இருக்காங்களே அவங்க தான் அவரோட பொண்டாட்டி அதாவது எனக்கு அம்மா. நீங்க அப்படியே சார் மாதிரி இருக்கீங்க… இல்ல இல்ல சார் தான் உங்கள மாதிரி இருக்காரு.  ஆன்ட்டியோட சாயல் சார் கிட்ட இல்லவே இல்லை.”

“ஹ்ம்ம் ! நேத்துதான் என்னோட பையன் உன்னை பத்தி சொன்னாம்மா..” என்று நாராயணன் கூற, அதில் குஷியான ரதிதேவி, தன் தந்தையிடம்  “அப்பா நான் சொன்ன பார்த்திங்களா என்னை சார் மறந்து இருக்க மாட்டாங்கன்னு. அப்போ சார் வந்ததும் என்னை பார்த்து சந்தோஷப் பட போறாங்க.”

கண்ணனின் சிறப்பான கவனிப்பில்.. பிடிப்பட்ட இருவரும் ராபர்ட் சென்னை சென்றதாகவும், இப்போது கொல்கத்தாவில் இருப்பதாகவும், இங்கிருந்து செல்லும் பொழுது கைப்பேசியை தங்களிடம் கொடுத்து விட்டு சென்றதையும், இதை எக்காரணத்தைக் கொண்டும் உபயோகிக்க வேண்டாம் என்று கூறியதையும் சொல்லி இருந்தனர். மேலும் வேறு ஒரு நம்பரை ராபர்ட் உபயோகித்து இருப்பதும், நேற்று இரவு கூட தங்களிடம் பேசியதும் கண்ணனுக்கு தெரியவர அந்த நம்பரையும் பெற்றுக் கொண்டான். 

வாங்கிய புது நம்பரை சோதித்து பார்த்ததில் அவனது மனைவி நம்பருக்கு அடிக்கடி அழைப்பு இருக்க, ராபர்ட் கொல்கத்தாவில் இருப்பது உறுதியாகியது. .. எனவே, ராபர்ட்டை பிடிக்க ஆறு பேர் கொண்ட தனிப்படையை கொல்கத்தாவிற்கு அனுப்பி வைத்தான்.

தன் வேலையை முடித்து விட்டு மாலை நேரம் இல்லம் திரும்பிய கண்ணனை வரவேற்றது ரதிதேவி தான். அந்த நேரம் ஆரதியும் சித்துவும் வீட்டிற்குள் வர சித்துவை கண்டுகொண்ட ரதிதேவி ஆரதியை யாரென பார்த்துக்கொண்டிருக்க, மகாலட்சுமி தான் “இவள் என் அண்ணன் மகள்” என்று அறிமுகப்படுத்தினார்.

ரதி தேவியை எதிர்பார்க்காத ஆரதி.. கண்ணனை வெறிகொண்டு முறைக்க , அவனோ அப் பார்வையில் மிரண்டு ரதி தேவியையும் , ஆரதியையும் மாத்தி மாத்தி பார்த்துக்கொண்டிருந்தான். 

மணிகண்டன், “தம்பி அன்னைக்கு இருந்த அவசரத்துல உங்களுக்கு ஒரு நன்றி கூட சொல்ல முடியல. என் பொண்ண காப்பாற்றுனதுக்கு ரொம்ப நன்றி. எனக்கு ரதி தேவி ஒரே பொண்ணு. என்னோட மொத்த உலகமுமே அவதான். அவ ஆசைப்பட்டானு தான் ஸ்கூட்டி ஓட்ட சம்மதம் சொன்னேன். அதுவே அவளுக்கு கஷ்டத்தை தரும்’னு நினைக்கல. நல்லவேளையா  என் பொண்ண சரியான நேரத்துல ஹாஸ்பிடல்ல சேர்த்துடிங்க.  ஒரு நாள் முழுக்க ஹாஸ்பிடல்ல தான் தம்பி இருந்தோம். வீட்டுக்கு வந்ததும் என் பொண்ணு உங்களை பார்த்தே ஆகணும்னு ஒரே அடம். அதான் உங்கள பத்தி விசாரிச்சேன். இப்படி சொல்லாம கொள்ளாம உங்கள பார்க்க வந்ததற்கு மன்னிச்சிடுங்க தம்பி. ” என்றார்.

“சார் இதுக்கு எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க. உங்க பொண்ணுக்கு பெருசா எந்த அடியும் அன்னைக்கு படல. இருந்தாலும் ஒரு சேஃப்டி காக தான் நான் ஹாஸ்பிடல்ல சேர்த்தேன். இதுக்கு நீங்க எவ்வளவு தூரம் வர வேண்டிய அவசியம் கூட இல்லை. இருந்தாலும் என்னை பார்க்க வந்ததுக்கு ரொம்ப நன்றி சார்.” 

“பெருசா எந்த அடியும் இல்லனாலும்.. என் பொண்ணு விஷயத்துல என்னால அப்படி எடுத்துக்க முடியாது தம்பி. அவ ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக.. உங்கள ஒரு வாரமா தேடி கண்டுபிடித்து இருக்கேன். என் பொண்ணு ஆசைக்காக எதை வேணா செய்ய நான் தயாராக இருக்கேன். அப்படிப்பட்ட என் பொண்ணு உயிரைக் காப்பாற்றின  நீங்க எனக்கு கடவுள். ” என்றவரை இடை நிறுத்திய ரதிதேவி,

“அப்பா…! என்னோட பேரு சாருக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமா. அன்னைக்கு என்னோட பேரு ரதி னு சொன்னதும் ரொம்ப அழகா இருக்குன்னு சொல்லி சிரிச்சாரு பாருங்க அப்படி ஒரு வெக்கம் அவங்க முகத்துல.” என்றவளின் வார்த்தையில் கொதித்த ஆரதி எதுவும் பேசாமல் தன் அறைக்கு செல்ல, 

கண்ணன்தான் தன்னையே நொந்து கொண்டான்.

ஓயாமல் பேசிக் கொண்டிருந்த ரதி தேவியை அரும்பாடுபட்டு அங்கிருந்து கிளப்ப மணிகண்டனும், மகேஸ்வரியும் படாதபாடு பட்டுவிட்டனர்.  கண்ணனை விட்டு நகர மறுத்த ரதிதேவியை சமாதான படுத்தவே இன்னும் ஒரு வாரத்திற்கு சென்னையில் தங்க முடிவு செய்தனர் ரதி தேவியின் பெற்றோர்கள்.

ஆரதியை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்த கண்ணனின் நினைவை தடைசெய்தது அலைபேசி ஒலி. தன்னை மீட்டுக் கொண்டவன் .. வந்த அழைப்பை செவிக்கு கொடுக்க, 

எதிர்ப்புறம் இருந்து வந்த செய்தியில் ஆடிப் போனான் கண்ணன். 

அரக்கப்பரக்க வீட்டிலிருந்து ஓடியவன் தன் அலுவலகத்தில் நிற்க… அங்கே நேற்று ஆலோசனை குழுவில் ரவுடிகளின் விவரங்களை சேகரிக்க சொல்லி இருந்த அத்தனை போலீஸ்காரர்களும் கூடியிருந்தனர்.

அதில் , ஒருவரிடம் “நல்லா தேடி பார்த்தீர்களா! உண்மையாவே அந்த டெட் பாடி ராபர்ட் தானா. உடற்கூறாய்வில் சொன்ன தகவலும், ஏற்கனவே ராபர்ட் பற்றின அங்க அடையாளங்களும் ஒன்னா!!!!!!.” என்று நம்ப முடியாமல் கேட்ட கண்ணனுக்கு பதிலாக வந்தது” ஆமா சார். நாங்களும் இதை எதிர்பார்க்கல. ஆனா ராபர்ட் பத்தின அங்க அடையாளங்கள் நேத்து நீங்க சொன்னதோட பொருந்துது சார். அந்த கணுக்கால் ல இரண்டு வெட்டுக்காயம் இருந்தது கூட கடைசியா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி புது அடையாளமா பதிவு பண்ணி இருக்கோம் சார். கண்டிப்பா அந்த டெட்பாடி ராபர்ட் தான் சார். “

“அதெல்லாம் சரிதான் சார். ஆனா இன்னைக்கு பிடிச்சுட்டு வந்த ரெண்டு பேரும்.. நேத்து நைட் கூட ராபர்ட் கிட்ட பேசினதா சொல்றாங்களே. அது எப்படி! நேத்து ராபர்ட் பேசினது உண்மையா இருந்தா அவன் எப்படி இருந்திருக்க முடியும். ஒருவேளை ராபர்ட் இறந்தது உண்மையா இருந்தா அப்போ ராபர்ட் போன்ல இருந்து பேசுனது யாரு. அதே மாதிரி இன்னைக்கு காலையில கூட அவனுடைய மனைவி நம்பருக்கு போன் பண்ணி இருக்கான். கிட்டத்தட்ட 24 நிமிஷம் ரெண்டு பேரும் பேசி இருக்காங்க. ” என்றவன் தன் இருக்கையில் அமர்ந்து ராபர்ட்டின் சிந்தனையில் உழன்று கொண்டிருக்க மூளையும் தன் செயல்பாட்டை அதிகரித்து கண்ணனுக்கு தகவல்களை கட்டளையாக இட்டுக் கொண்டிருந்தது.

குழப்பத்தில் இருந்து மீண்ட கண்ணன், “சார் அந்த டெட்பாடிய உடனே டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க ஏற்பாடு பண்ணுங்க. ராபர்ட் பையன ஹாஸ்பிடல் கூட்டு போக ஏற்பாடு பண்ணுங்க. கொல்கத்தா ல இருக்க நம்பர் இப்போ ஆக்டிவ் ல  இருக்கான்னு பாருங்க. அந்த நம்பர் ல  இருந்து யார் யாருக்கு கால் போய் இருக்குன்னு டீடெயில்ஸ் வாங்குங்க. அவனும் அவன் மனைவியும் பேசின ஆடியோவை கேளுங்க. நாளைக்குள்ள அந்த டெட்பாடி ராபர்ட் தான்னு நம்ம கன்ஃபார்ம் பண்ணி ஆகணும். அதேநேரம் கொல்கொத்தாவு ல இருக்கிறவனை தப்பிக்க விடக்கூடாது. ரெண்டு சைட்ல ஏதாவது ஒரு இடத்துல ராபர்ட் இருக்கிறது உறுதி.”

அடுத்தடுத்த கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு தகவல்களும் விரைவாக வர ஆரம்பித்திருந்தது. அதில் கொல்கத்தாவில் இருக்கும் நம்பர் அதே இருப்பிடத்தில் இருப்பதும், ராபர்ட்டின் மனைவியிடம் பேசிய ஆடியோவும் கண்ணன் பார்வைக்கு அறிக்கையாக வந்தது.

ராபர்ட் மனைவியிடம் தகவல் சொல்லப்பட அவரும்  மகனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்திருந்தார். ராபர்ட்டின் டிஎன்ஏ டெஸ்ட்க்கு ஏற்பாடுகள் நடக்க…

இதற்கிடையில் ராபர்ட்டின் மனைவியிடம் உங்கள் கணவர் இறந்து ஒரு வாரத்திற்கு மேலாகுது என்ற தகவலை கூற அவரோ,  மருத்துவமனையை இரண்டாகி விட்டார். அங்கு வந்த கண்ணன் என்னவென விசாரிக்க, “என் புருஷன் சாகல. இன்னைக்கு காலைல கூட எங்கிட்ட பேசினாரு. அடுத்த வாரம் எப்படியா இருந்தாலும் உன்னை பார்க்க வருவேன்னு சொன்னாரு. அப்படி இருக்க எப்படி என் புருஷன் இறந்திருப்பாரு. உங்களால கண்டுபிடிக்க முடியலன்னு யாரையோ கொண்டுவந்து என் புருஷன்னு சொல்லி தப்பிக்க பாக்குறீங்க. ” என்ற ராபர்ட்டின் மனைவியை பெண் காவலர்கள் கொண்டு சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருந்தான் கண்ணன்.

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில்  அதிகாலை 4: 35மணிக்கு முடிவுகள் வர … இறந்தது ராபர்ட் தான் என்று உறுதியாகியது. 

ஊடக  நண்பர்களும் அங்கு படையெடுக்க… மருத்துவமனை பலத்த பாதுகாப்போடு சூரியனை சந்தித்தது. 

ஊடகத்துறை என்பதால் ஆரதியும் அங்கு வந்திருக்க… நடக்கும் செய்திகளை நுணுக்கமாக சேகரித்துக் கொண்டிருந்தாள். அவை யாவும் நாளை கண்ணனுக்கு எதிராக திரும்பும் என்பதை அறிந்தும்.

ராபர்ட் என்ற ரவுடியின் குற்ற வரலாறு ஏற்கனவே  மீடியாக்கள் மூலமாக மக்களுக்கு அறிமுகமாகி இருப்பதால்… ராபர்ட்டின் இறப்பு செய்தி பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது அனைத்து சேனல்களிலும்.  சேனல்கலும், பத்திரிக்கையாளர்களும் ராபர்ட் பற்றிய செய்திகளை சேகரித்துக் கொண்டு இருக்க… ஆரதி மட்டும் காவல்துறைக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டி இருந்தாள். மேலும் ராபர்ட்டின் மனைவியை பேட்டி எடுத்தவள் அதைத் தன் சேனலுக்கும் பகிர…. 

அதில், உயிருடன் இருக்கும் நபரை இறந்ததாக காவல்துறை சித்தரிப்பதாக ராபர்ட்டின் மனைவி கூறியிருக்க… இந்த வழக்கின் பார்வை தனிப்படை அமைத்து தேடி கொண்டிருந்த கண்ணனின் மீது விழுந்தது. 

பணிச்சுமையில் சிக்கிய கண்ணனை ஊடகத்துறையும் தன் பங்கிற்கு சுமையேற்ற, காவல்துறையின் மேலதிகாரிகளும்  விசாரணைக்கு வருமாறு அழைப்பை அனுப்பி இருந்தனர் கண்ணனுக்கு.

அம்மு இளையாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!