Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

விழி மொழி பேசு

அத்தியாயம் 10_3 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்

“ஆமாங்க, என்னை என்னோட அத்தையும் மாமாவும் எங்கயும் கூட்டிட்டு போனதில்லை. பார்க், பொருட்காட்சிக்கு கூட அவங்க எல்லாரும் தான் குடும்பமா போவாங்க. அம்மா அப்பா என்னை கூட்டிட்டு போனாங்களான்னு ரொம்ப நினைவு இல்லை. எனக்கு தெரிஞ்சு நான் பாத்த பங்ஸன் ஏதெல்லாம் தெரியுமா? ஸ்கூல் பங்ஷன், காலேஜ் பங்ஷன், அப்புறம் நம்ம கல்யாணம் மட்டும் தான். பிறந்த நாள் கொண்டாட்டம் எப்படி இருக்கும்னு கூட எனக்கு தெரியாது. என் பிறந்த நாளைக் கூட யாரும் கொண்டாடினது இல்லை. நானும் கொண்டாடினது இல்லை. சடங்கு, காது குத்து, கல்யாணம், வளைகாப்புன்னு எந்த பங்க்சனும் நான் பாத்தது இல்லை. எனக்கு உங்க கூட நடந்த கல்யாணத்தை  தவிர வேற எந்த பங்க்சனும் தெரியாது”

…..



Advertisement

“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? எனக்கு சடங்கு கூட எங்க வீட்ல செய்யலை விக்ரம். வர்ஷாவுக்கு வச்சாங்க போல? ஆனா நான் ஹாஸ்டல்ல இருந்தேன். பொண்ணு பாக்குற சீன் எல்லாம் படத்துல பாத்துருக்கேன். புதுசா பாக்குற ஒரு பையனை வெட்கத்தோட அந்த பொண்ணு நிமிர்ந்து பாக்கும். அந்த பையனும் ஓரக் கண்ணால் அவளைப் பாப்பான். உங்களுக்கு தெரியுமா? நான் உங்க கூட ஜீப்ல வந்தப்ப நமக்குள்ள நடந்ததும் அந்த சீன் மாதிரி தான் எனக்கு தோணுச்சு. அதனால தான் என்னவோ உங்க முகம் என் மனசுல பதிஞ்சிருச்சு. நீங்க என்னை நம்ப மாட்டீங்க. சரி அதை விடுங்க”

Advertisement

…..

Advertisement

“நீங்க என்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டதா எல்லாரும் சொல்றாங்க. நானும் உங்களை ஏற்கனவே லவ் பண்ணினதா எல்லாரும் சொல்றாங்க. நீங்க அப்படி தான் சொல்லி வச்சிருக்கீங்க போல? ஆனா நீங்க என்னை பொண்ணு பாக்க கூட வந்ததில்லை. அப்படி வந்திருந்தாலாவது எனக்கு அந்த பங்ஷன் பத்தி தெரிஞ்சிருக்கும். அதுவும் இல்லை. அதனால தான் என்னையே அறியாம சந்தோசத்துல வறேன்னு சொல்லிட்டேன். இனி இப்படி பண்ண மாட்டேன். உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நாம அங்க போக வேண்டாம். நான் காயு அக்கா கிட்ட வயிறு வலின்னு சொல்லிக்கிறேன்”, என்று சொன்னாள்.

Advertisement

அவளுடைய பேச்சைக் கேட்டு அவன் மனம் கனத்து போனது. இப்போது அவளுடைய கை அவன் கைகளுக்குள் வந்திருந்தது. அவள் கையை பொதிந்த படியே “சாரி மா, உன் மனசு புரியாம உன்னை கஷ்டப் படுத்திட்டேன். நீ என்னைக் கேக்கலையேனு தான் எனக்கு கோபம். சாரி”, என்றான்.

“எனக்கு உங்க பீலிங்க்ஸ் புரியுது விக்ரம்”, என்று அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அந்த புன்னகை அவனையும் தொற்றியது.

“சரி போனதை விடு. சாயங்காலம் நாம அங்க போகலாம். இந்த சேலை வேண்டாம், கசங்கிடுச்சு. அதோ அந்த சேலையைக் கட்டு. நான் ஆபீஸ் போயிட்டு மூணு மணிக்கு எல்லாம் வந்துறேன். அஞ்சு மணிக்கு அவங்க வீட்டுக்கு போகலாம் சரியா?”, என்று புன்னகையுடன் விக்ரம் கேட்க அவள் தலை அழகாக ஆடியது.

அவளை அப்படியே இறுக் கட்டிக்கச் சொல்லி அவன் மனது கெஞ்ச அதை முழு மனதாக செய்ய முடியாமல் அவள் தலையை ஒரு முறை வருடி விட்டு அங்கிருந்து கிளம்பினான் விக்ரம். அவளும் புன்னகையுடன் அவனை வழி அனுப்பி வைத்தாள்.

அன்று மாலை ஐந்து மணிக்கு தான் வீட்டுக்கு வந்தான் விக்ரம். அவன் லேட்டாக வந்ததால் அவளை முறைத்துப் பார்த்தாள் ரேகா.

“சாரி ரேகா, கொஞ்சம் லேட் ஆகிருச்சு. இப்ப கிளம்பிறலாம்”, என்றான்

“அங்க எல்லாரும் வந்துருக்க மாட்டாங்களா?”

“இல்லை அண்ணன் கால் பண்ணினான். மாப்பிள்ளை வீட்ல இருந்து ஆறு மணிக்கு மேல தான் வருவாங்களாம். நாம இப்ப கிளம்பினா சரியா இருக்கும். நீ குளிச்சிட்டல்ல? டிரஸ் மாத்து. நான் அதுக்குள்ள குளிச்சிட்டு வந்துறேன்”, என்று சொல்லி பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான்.

அவன் காலையில் இதைக் கட்டு என்று சொல்லி விட்டுச் சென்ற சேலையை எடுத்து கட்டி முடித்தாள் ரேகா. பின் தலையை பின்னிக் கொண்டிருக்கும் போது தான் குளித்து முடித்து வந்தான் விக்ரம். வந்தவன் அவளைக் கண்டு பாத்ரூம் வாசலிலே சிலையாக நின்று விட்டான்.

நவாப்பழக் கலரில் தங்க நிற ஜரிகை வைத்த சேலையைக் கட்டியிருந்தாள் ரேகா. அதில் இருந்த வெள்ளை நிற கற்கள் அந்த சேலையின் அழகை உயர்த்திக் காட்டியது. விக்ரம் அவள் அழகில் மொத்தமாக விழுந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு பிளீட் வைத்து அவள் கட்டியிருந்ததால் சேலையின் மொத்த அழகும் கண்களுக்கு தெரிந்தது.

தளர்வாக தலையை பின்னல் போட்டு இரண்டு பக்கமும் மல்லிகைப் பூவை வழியுமாறு வைத்துக் கொண்டு அவன் பக்கம் திரும்பினாள்.

விக்ரமுக்கு அவள் மேல் வைத்த பார்வையை எடுக்கவே முடிய வில்லை.

“நான் கிளம்பியே முடிச்சிட்டேன். உங்களுக்கு இவ்வளவு நேரமா குளிக்க? சரி சரி சீக்கிரம் கிளம்பி வாங்க. நான் கீழ அத்தைக் கிட்ட பேசிட்டு இருக்கேன்”, என்று சொல்லி அவள் அந்த அறையை விட்டு வெளியே செல்லப் பார்க்க “ரேகா ஒரு நிமிஷம்”, என்றான் விக்ரம்.

“என்ன ஆச்சு விக்ரம் ஏதாவது வேணுமா?”, என்று அவன் பார்வை புரியாமல் கேட்டாள் ரேகா.

அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளை நெருங்கிச் சென்றான் விக்ரம். அவள் என்னவென்று அவனை பார்த்த போது அவன் கண்களில் இருந்த மயக்கத்தில் தடுமாறிப் போனாள். ஜீப்பில் வைத்து அவளை எப்படிப் பார்த்தானோ அதே பார்வையைத் தான் இப்போதும் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் விழி பேசும் காதலை கண்டு அவளுக்குள் உற்சாக ஊற்று உருவானது. கூடவே இடையில் கட்டிய வெறும் டவலுடன் தன்னை நெருங்கி வந்து கொண்டிருந்த அவனைக் கண்டு அவளுக்கு கூச்சமும் வந்தது.

அவள் அருகில் வந்து அவளின் மூச்சுக் காற்று படும் தூரத்தில் நின்றான். அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்புகள் ரேகாவுக்குள் கிளர்ந்தன. அவள் எதிர்பார்ப்பு படியே அவளை இன்னும் நெருங்கி அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவன் செய்கையை நம்ப முடியாமல் விழி விரித்து அவனைப் பார்த்தாள்.

அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்த விக்ரம் “இந்த சேலைல எப்படி இருக்க தெரியுமா டி? அப்படியே என்னைக் கொல்லுற?”, என்று அவள் காதில் உதடு பட சொன்னான்.

அவன் உதட்டின் குறுகுறுப்பிலும் அவனுடைய நெருக்கத்திலும் அவளுடைய உணர்வுகள் அனைத்தும் விழித்துக் கொள்ள அவன் மேல் இன்னும் நெருக்கமாக சாய்ந்தாள். அவள் சாயவும் அவளை இன்னும் இறுக்கி அணைத்தவனின் விரல்கள் அவளுடைய முதுகை வருடியது. கண்களை இறுக மூடிக் கொண்டாள் ரேகா.

அவளுடைய முதுகை வருடிய அவன் விரல்கள் அவள் ஜாக்கெட்டில் இருந்த முடிச்சு இடைஞ்சலாக இருக்க அதை உருவி விட்டது. அந்த தொடுகையைத் தாங்க முடியாமல் உதடு கடித்து அசையாமல் நின்றாள் ரேகா;.

அவன் விரல்கள் அவளுடைய பின்னங்க் கழுத்து, முதுகு என்று பயணம் போக அவன் உதடுகளோ அவள் தோளிலே பதிந்திருந்தது. அவளோ உணர்ச்சிக் கொந்தளிப்பில் நின்றாள். மனமும் உடலும் அவனுடைய தொடுகையை விரும்பி ரசிக்க அவனிடம் இருந்து அவளால் எப்படி விலக முடியும்? அவன் தொடுகையை ரசித்தாலும் அவளது மனது நேரமானது என்று எச்சரித்தது.

அதனால் தன்னை நிலைப் படுத்தியவள் “என்னங்க நாம காயு அக்கா வீட்டுக்கு போகணும். நேரம் ஆச்சு”, என்று அவன் காதில் சொன்னாள். அவள் அப்படிச் சொன்னதும் அடுத்த நொடி அவளிடம் இருந்து விலகிய விக்ரம் “சாரி, ஒரு நிமிஷம் நான் பழசை எல்லாம் மறந்துட்டேன்”, என்று சொல்லி விட்டு உடை மாற்ற ஆரம்பித்தான்.

அவன் அப்படிச் சொன்னதும் காலையில் இருந்து இப்போது வரை அவளுக்குள் இருந்த உற்சாகம் அனைத்தும் வடிந்தது போல இருந்தது ரேகாவுக்கு. உணர்ச்சி வசப் பட்டதால் அவளுக்கு கண்கள் கூட கலங்கும் போல இருந்தது. “ஆமா நேரம் ஆச்சு, கிளம்பலாம்”, என்று சொல்லி அவன் விலகி இருந்தால் அவளுக்கு வலித்திருக்காது. ஆனால் அவன் அப்படிச் சொல்லவும் அவளுக்கு மிகவும் வலித்தது. “இவன் பழைய விஷயங்களை விடவே மாட்டானா?”, என்று எண்ணி சோர்ந்து போனாள்.

அங்கே நின்றால் அவன் முன்பு அழுது விடுவோம் என்று உணர்ந்து முகத்தை சரி செய்து விட்டு வெளியே வந்து விட்டாள். இப்போது அழுகையே ஆனாலும் அதை அவனிடம் காட்ட மனதில்லை. அவள் உணர்வுகள் அனைத்தும் அவனிடம் தான் வெளிப்பட வேண்டும். ஆனால் அவளையும் அவளுடைய உணர்வுகளையும் மதிக்காதவனிடம் அவளுடைய உணர்வுகளைக் காட்ட அவளுக்கு மனதில்லை.

இப்போது கீழே சென்று சாரதாவை எதிர்க் கொள்ள முடியாமல் மாடியில் இருந்த அவர்களின் ரூமுக்கு வெளியே இருந்த திண்டில் அமர்ந்து விட்டாள்.

அவனுடைய பேச்சால் அவளுக்குள் எழுந்த காதல் உணர்வுகள் வடிந்தாலும் மனம் மட்டும் வெகுவாக சோர்வாக இருந்தது. தனக்கு எதுவுமே நிரந்தரம் இல்லையோ என்று கழிவிரக்கத்தில் அழுகையாக வந்தது.

“உன்னைக் காயப் படுத்திட்டு விக்ரம் மட்டும் சந்தோஷமா இருப்பான்னு நீ நினைக்கிறியா?”, என்று கேள்வி கேட்டது மனசாட்சி. அவளுக்கு நிச்சயம் தெரியும். தன்னை விட அவன் மிகவும் கஷ்டப் படுவான் என்று.

ஒரு பெண்ணுக்கு உணர்வுகளை எளிதாக அடக்க முடியும். ஆனால் அவனுக்கு…. அதுவும் அவள் நேரம் ஆகி விட்டது என்று சொன்னதால் தான் விலகினான். அவன் பக்கம் இருந்தும் யோசிக்க வேண்டும் என்று அவளே அவனுக்கு சப்போர்ட் செய்து கொண்டாள்.

அவனைப் பற்றி யோசித்ததும் சகஜ நிலைக்கு வந்த ரேகா அவர்களின் அறைக்குள் அவன் என்ன செய்கிறான் என்று எட்டிப் பார்த்தாள்.

உள் பணியனைப் போட்டிருந்த விக்ரம் அதே துண்டுடன் தான் கட்டிலில் அமர்ந்திருந்தான். தலையில் கை வைத்து அமர்ந்திருந்த தோற்றத்தைக் காணும் போது ரேகாவுக்கே கஷ்டமாக இருந்தது.

விக்ரமோ அவள் அறையை விட்டு சென்றதும் அப்படியே தளர்ந்து போய் அமர்ந்து விட்டான். அவள் வேண்டும் என்ற உடலின் தாகத்தை அடக்குவதற்குள் வெகுவாக தோற்றுப் போனான். கூடவே அவளை அதிகமாக பேசி விட்டதும் வருத்ததைக் கொடுத்தது.

அவனை அந்த நிலைமையில் பார்த்த ரேகாவுக்கு இப்போது அவனைத் தேற்றுவது தான் முக்கியம் என்று புரிய அவன் அருகே சென்று “என்ன சார் அங்க போற ஐடியா இருக்கா இல்லையா?”, என்று கேட்டாள்.

அவள் குரல் கேட்டதும் அவளை நிமிர்ந்து பார்த்தான் விக்ரம். அவள் கண்களைப் பார்த்ததுமே அவள் அழுதிருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. அதற்கு அவன் தான் காரணம் என்றும் அவன் தெரிந்தே இருந்தான்.

“சாரி ரேகா. நான் வேணும்னு எதுவும் செய்யலை”, என்று தவிப்புடன் சொன்னான் விக்ரம். தன்னை தொட்டதற்காக சாரி சொல்கிறானா இல்லை, தன்னை அப்படி பேசியதற்காக சாரி சொல்கிறானா என்று அவளுக்கு தெரியாது தான்.

அவனைப் பார்த்து புன்னகைத்த ரேகா “உங்களை என்னால புரிஞ்சிக்க முடியுது விக்ரம். நீங்க எந்த விளக்கமும் கொடுக்க தேவையில்லை. கிளம்புங்க, நேரம் ஆச்சு”, என்றாள்.

புரிதலுடன் கூடிய அவளது பேச்சு அவனுக்கும் நிம்மதியாக இருந்தது. “தேங்க்ஸ், நீயும் முகம் கழுவிட்டு கிளம்பு ரேகா”, என்று சொன்னதும் அவளும் புன்னகையுடன் சரி என்றாள்.

இருவரும் சாரதாவிடம் சொல்லி விட்டு கிளம்பினார்கள். போகும் போது இருவரின் முகமும் சாதாரணமாக இருந்தாலும் உள்ளுக்குள் பல யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தது.

விழி பேசும்….., 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!