Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மனம் மலரும் ஓசை

Manam Malarum Oosai 16.2

ஆதிரை புரியாமல் விழிவிரிக்க.. ‘ரூபன் உன்கிட்ட சொல்லலையா ஆதி..? நாளை மறுநாள் பட்டுக்கு முதல் வருடப் பிறந்தநாள்.. அவசரக் கல்யாணம்னால டைரக்டர்கிட்ட கேட்டுட்டு வந்தான்.” என்றார் கணேசன்.

        ‘டைரக்டர்கிட்டயா..?” என ஆதிரையின் முகம் ஆச்சர்ய பாவனை காட்டவும்.. மாரியப்பன்.. ‘ஹா..ஹா.. பேரன் உன்கிட்ட ஒன்னும் சொல்லலையா ஆதிம்மா..?” என்றார்.

    ஆதிரை.. ‘என்ன சொல்றிங்கன்னு புரியலை தாத்தா..”

        ‘என் பேரன் சாதாரணப்பட்டவன் இல்லமா.. ஆபத்தான சண்டைக்காட்சில கொஞ்சம் கூட பயந்துக்காம நடிப்பான்.. ஒரு படத்துல எம்மா உயரத்துல இருந்து குதிச்சிருக்கான் தெரியுமா.?” என்றார் பெருமையாக.



Advertisement

         ‘என்ன நடிகனா.?” என ஆதிரை விழிவிரிக்கவும்.. ‘டூப் போடறது மட்டுமில்லமா.. அபிஷேக்.. துருவன்.. ஜெகதீஸ்.. மகாவீர்.. இவங்களோட எல்லா படத்துக்கும் நம்ம ரூபன்தான் பின்னனி குரல் கொடுத்திட்டிருக்கான்..” என்றார் கணேசன்.

      ‘இவங்க எல்லாரும் டிரெண்டிங் ஸ்டார்ஸ் ஆச்சே..” என அதிசயித்து வாய்பிளந்தாள் ஆதிரை.

      ‘என்னடாம்மா இப்படி பார்க்குற.? காஞ்சனாகிட்ட சொல்லியிருந்தனே.. அம்மா சொல்லலையா உனக்கு..?” என்றார் கணேசன்.

Advertisement

     நைட் இதைதான் சொல்ல நினைத்தானோ என நினைத்தவாறு இல்லையென்பதாய் தலையசைத்தாள். ‘ரூபன்தான் உன்னை கல்யாணம் செய்துப்பான்னு உனக்கு அப்ப தெரியாதில்லடாம்மா.. அதனால கல்யாணத்துக்கு அப்புறம் சொல்லிக்கலாம்னு விட்ருக்கும்..” என்றார் மாரியப்பன்.

Advertisement

      ஆதிரைக்கு அழைப்பு வர.. காஞ்சனாதான் அழைத்திருந்தார்.. ‘ம்மா..” என்றாள் கரைந்தவளாய்.

           ‘ஆதிம்மா..” என்க.. ‘நான் ஃபோன் செய்தேன்.. ஏன் எடுக்கல.?” என்றாள் சிறு கோபமாக.

         ‘நைட்டெல்லாம் தூக்கமே வரலடா.. விடியகாலம் அஞ்சி மணிவரை முழிச்சிருந்து அதுக்கப்புறம் அசந்து தூங்கிட்டேன்.. இப்போதான் எழுந்தேன்..” என்றார் கமறலாக.

Advertisement

       ‘ம்மா.. “ என தவித்தவள் பின்னே சுதாரித்து தனதறைக்குள் நுழைந்தவள்.. ‘நல்லா ப்ளான் போட்டு எல்லாம் செய்துட்டு என்னவோதான்..” என குறைபட்டவளிற்கும் கண்கள் கலங்கியது.

       ‘இது நல்லாயிருக்கே.. சின்ன பிள்ளை ஆசைப்பட்டுட்டாளேன்னு கல்யாணம் செய்து வச்சா என்னையே குறை சொல்றயா.?” என்றார் பொய் கோபமாக.

         ‘விரும்பினேன்.. ஆனா கல்யாணம் கேட்டேனா.?” என்றாள் கோபமாக.

        ‘ரூபனை விரும்பிட்டு கர்ணனை கல்யாணம் செய்துக்க நினைச்சது மட்டும் நியாயமா.? அதுவும் கர்ணாவைப் பத்தி தெரிஞ்சிருந்தும்..” என கோபமாக சொல்லி..

        ‘ஆனாலும் கடைசியா பயந்துட்டதான.? ரூபன் தாலி கட்டவும்தான நிம்மதியானது..” என்றார் மகளைப் புரிந்த சிரிப்போடு.

     ‘அதெல்லாம் ஒன்னுமில்ல..” என வீராப்போடு சொன்னவள்.. ‘எனக்கு உன்ன பார்க்கனும்..” என்றாள் ஏக்கமாக.

       ‘நாளைக்கு வரேன் ஆதி.. இன்னைக்கு நானும் உன் அத்தையும் போய் சீர் வரிசைக்கு சாமான்லாம் வாங்கனும்..”

      ஆதிரை அமைதியாக இருக்க.. இதற்கு மேல் பேசினால் மௌனக் கண்ணீர் வடிப்பாள் எனப்புரிந்த காஞ்சனா.. ‘சரி.. கணேசண்ணாகிட்ட போனை கொடு..” என்றார்.

      ‘ம்..” என வெளியே வந்தவள்.. ‘அம்மா பேசனுமாம்..” என ஃபோனை நீட்டினாள். கணேசனிடம் நலம் விசாரித்து மாரியப்பன் கனகா அனைவரிடமும் பேசி.. மீண்டும் ஆதிரையிடம்.. ‘அதென்ன அம்மா பேசனுமாம்னு சொல்ற.? மாமனார் மாமியாரை அத்தை மாமான்னு சொல்லனும் ஆதி..” என கண்டித்து இணைப்பை துண்டித்தார்.

      ‘ப்பா…” என பட்டு குரல் கொடுக்க.. ‘நான் போறேன்ங்க..” என உள்ளே சென்ற கனகா.. குழந்தையை தூக்க.. ‘அப்பா..” என்றாள். இரவு குழந்தையை ரூபன் தூங்க வைத்ததால் கேட்டாள்.

         ‘அப்பா வேலைக்கு போய்ட்டாங்க..” என கனகா பாவம்போல் முகத்தை வைத்து சொல்ல.. முகம் வாடினாலும் பாட்டியைத் தேற்ற வழக்கம்போல் பெரிய மனுஷியானவளாய்.. ‘குளிச்சி.. அப்பாக்கு போன் பேசி..” என கனகாவிடம் பேசியவாறே குளித்து வெளியே வந்த குழந்தை ஆதிரையைப் பார்த்ததும்.. ‘பெரிய பட்டூ…” என சந்தோசித்தாள்.

      புதுஇடம்.. புது மனிதர்கள் என யாரிடமும் ஒன்றாத குழந்தை ஆதிரையிடம் ஒன்றினாள். நம்ம வீட்டுக்கு இன்னொரு பட்டு வரப்போறாங்க.. அவங்க நம்ம பெரிய பட்டு.. என் குட்டிபட்டுதான் பெரிய பட்டுவை பார்த்துக்கனும் என்ற அதிரூபனின் ஒருநாள் போதனை குழந்தை மனதில் பசையாய் ஒட்டியது போலும்.

        ஆதிரை பேசாத போதும் தன் வழக்கமான இயல்போடு முகத்தில் பல பாவனைகளை காட்டியவாறு ஆதிரையிடம் மழலையில் தொணதொணத்துக் கொண்டேயிருந்தாள்.

      அடுத்த நாள் காலை ஒன்பது மணிபோல் காஞ்சனா அபிமன்யு ரோஜா அனைவரும் சீர்வரிசையோடு வந்தனர்.

       ஆதிரையின் முகூர்த்த புடவைக்கும் நகை புதுப்பித்ததற்கும் நிறைய செலவாகியிருக்க.. கடன் வாங்கி சீர்வரிசை செய்யலாம் என நினைத்திருந்தார். கணேசன் நிறைய வேணாம் என்கவும்.. கடன் வாங்காமல் தற்போது கையிருப்பில் முடித்துக்கொள்ளலாம்.. பிறகு தேவையென்றால் வாங்கி கொடுக்கலாம் என நினைத்து.. பீரோ கட்டிலோடு பூஜைக்கு தேவையான சாமான்கள்.. ஆதிரைக்கு உடை என மட்டும் வாங்கியிருந்தார்.

      காஞ்சனா சிறுவயதில் இவ்வீட்டிற்கு வந்தது. அதன்பின் தற்போதுதான் வருகிறார். கணேசனும் மாரியப்பனும் அத்தனை பாசத்தோடு வரவேற்றனர்.

     நேற்றெல்லாம் ஆதிரையோடு ஒட்டிய குழந்தை இவர்களை கண்டதும் கணேசன் மடியேறியவள் கீழிறங்கவில்லை. சாப்பிடும் போது ‘பெரிய பட்டுக்கு..” என குழந்தை கேட்கவும்.. ‘அம்மா சொல்ல சொல்லி பழக்கி விடுங்கண்ணா..” என்றார் காஞ்சனா.

      அதன்பின் அனைவரும் எடுத்துரைத்தும் கேட்கவில்லை குழந்தை.. பெரியபட்டு என்ற நிலையிலேயேதான் நின்றது. ‘ரூபன் சொன்னாதான் கேட்பா..” என குழந்தைக்கு கன்னத்து முத்தம் வைத்து குழந்தையை தேற்றினார் கனகா.

       ம் அனைவரும் அம்மா சொல்லு என மாறி மாறி சொல்லிக்கொடுக்க குழந்தை அழும் நிலைக்கு சென்றிருக்க இதற்குமேல் இனி யாரும் ரூபன் வந்து பார்த்துக்கட்டும்.. இல்லை இப்படியே கூப்பிடட்டும் என சொல்லி குழந்தையை தேற்றவும் பிறகுதான் வந்த அழுகையை நிறுத்தியிருந்தாள் குழந்தை.

       ‘குழந்தைகளை கூட்டிட்டு கர்ணனை வர சொல்லியிருந்தேனே..” என கணேசன் கேட்கவும்.. ‘அபியும் கர்ணனும் நாளைக்கு ஊருக்கு கிளம்பறாங்கண்ணா.. இன்னைக்கு அண்ணியோடவும் குழந்தைங்களோடவும் இருக்கலாம்னு வரலன்னுட்டான்..” என்றவர்..

      கனகாவிடம்.. ‘அண்ணி.. ஆதிக்கு சமையல் வீட்டுவேலைன்னு எதுவும் தெரியாது.. படிப்பு படிப்புன்னு எப்பபாரு புக்கோடதான் இருப்பா.. என் பொண்ணு வீட்டு வேலைலாம் செய்யாது.. நல்லா படிச்சி பெரிய வேலைக்கு போகப்போவும்னு அவங்கப்பாவும் ரொம்ப செல்லம் கொடுத்துட்டார்.. அவர் போனதுக்கப்புறம் வேலைக்கு போக ஆரம்பிச்சா.. பொழுதுக்கும் புள்ள பேக்கரில கஷ்டப்படுறாளேன்னு நானும் எந்த வேலையும் வைக்காம விட்டுட்டேன்..” என்றார் தயக்கமாக.

      ‘பட்டுவை பார்த்துக்கிறதை தவிர நானே எந்த வேலையும் செய்யிறதில்ல.. எதாவது நல்ல நாள் பூஜைக்கு அப்படின்னா மட்டும் சமைப்பேன்.. மத்தபடி மாலாதான் எல்லாமும்.. நீங்க எதுவும் கவலைப்படாதிங்க..” என தேற்றினார் கனகா.

      இரண்டு மணிநேரம் வரை பேசியிருந்தவர்கள் மதிய உணவை முடித்து கிளம்பியிருந்தனர்.

       இன்று மாலை வருகிறேன் என்றவன் அதிகாலை நான்கு மணிக்கு வந்தான். அவனிடமிருந்த சாவியில் வீட்டைத் திறந்தவன் தனதறையை திறக்க தாழிடப்பட்டிருந்தது. மெசேஜ் பார்க்கலயா..? என மொபைலை எடுத்தான்.

      இன்றிரவு வருகிறேன் கதவை தாழிட வேண்டாம் என நேற்றிரவு ஒன்பது மணிக்கே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். ஆனால் ஆதிரை பார்க்கவில்லை என்பது புரிய.. மாடியிலுள்ள அறைக்கு சென்று குளித்து வந்தவன் குழந்தைக்கான வீட்டு அலங்காரங்களில் இறங்கினான்.

      நடைபயிற்சிக்காக வழக்கம்போல் ஐந்து மணிக்கு எழுந்த கணேசன் வெளியே வர.. ‘ரூபா.. எப்போ வந்த.?” என ஹால் முழுவதும் கட்டியிருந்த வர்ண பலூன்களை பார்த்து ரசித்தவாறு கேட்டார்.

      ‘நாலு மணிக்கு வந்தேன்ப்பா.. எப்படியும் இந்த வேலையிருக்குன்னு ஆதியை எழுப்பல..” என்றான்.

       ‘காஞ்சிம்மாக்கு ஏன் சொல்ல வேணாம்னு சொன்ன.? முன்ன எப்படியோ.. இப்போ சம்பந்தி ஆயாச்சு.. நாம சொல்லலைன்னாலும் ஆதி சொல்லி தெரியதான போகுது.. ஏண்ணா சொல்லைன்னு என்னைத்தான் கேட்கும்..” என்றார் வருத்தமாக.

       ‘அன்னைக்கே அத்தையும் மாமாவும் ஆதியை எப்படி பார்த்தாங்கன்னு பார்த்திங்கள்லப்பா.? எனக்கு என் பட்டுமா பர்த்டே டென்சன் இல்லாம சந்தோசமா போகனும்.. அத்தை கேட்டா நான் சொல்லிக்கிறேன்.. இங்கயும் நம்ம அத்தைமாமா வரும்முன்ன கேக் வெட்டியாகனும்..” என்றான்.

      ‘ப்பா..” என குழந்தை குரல் கொடுக்க.. ‘உன் குரல் மட்டும் தூக்கத்துல கூட கேட்டுடுது..” என மெச்சியவாறு கணேசன் செல்ல.. பின்னோடே சென்றவன்.. ‘அப்பா வந்துட்டேன்..” என அள்ளினான் பட்டுவை.

      கனகாவும் எழுந்திட.. குழந்தைக்கு குளிக்க வைத்ததும் இன்றைக்கான உடையை குழந்தையே தேர்வு செய்ய ஆரம்பிக்க.. ‘பட்டுக்கு புது டிரெஸ்..” என தான் வாங்கிவந்ததை எடுக்கவும்.. ‘ப்பா.. நா பட்டூ..” என  குதூகலித்த குழந்தை.. ‘ப்பா.. பெரிய பட்டு..” என அறையை காண்பிக்க.. ‘ஆதிரை.. ரூபன் வந்துட்டான்..” என கனகா கதவை தட்டினார்.

    ம் குழந்தை விசயத்தில் எதற்கும் ஆதிரையை கம்பல் செய்யக் கூடாது என முடிவெடுத்திருந்தான். எனவே தற்போது கேக் வெட்ட ஆதியை எழுப்பலாமா வேணாமா என்ற யோசனையில் அதிரூபன் எழுப்பாமல் இருக்க.. கனகாவின் சத்ததில் ஆதிரை கதவை திறந்தாள்.

      ‘ஹேப்பி மார்னிங்..”என புன்னகைத்தவன்.. ‘ம்மா சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க.. இன்னும் அரை மணி நேரத்துல சாமி கும்பட்டு கேக் வெட்டனும்.” என வாங்கி வந்திருந்த கேக்கை வெட்டுவதற்கு ஏதுவாக டேபிளை இழுத்து தன் வேலையில் கவனமானான்.

       ம்.. ஆதிரை விருப்பப்பட்டால் குளித்து வரட்டும்.. இல்லன்னாலும் பரவாயில்லை.. அடுத்த வருட பிறந்தநாளிற்குள் தன்னை புரிந்து கொள்வாள். அப்பொழுது இன்னும் சிறப்பாக செய்திடலாம்.. என எண்ணிக்கொண்டான்.

       அரைமணி நேரத்தில் தயாராகி வந்த கனகா பூஜைக்கு தயார் செய்யவும்.. ஆதிரையும் குளித்து வந்தாள். ‘ப்பா.. பெரிய பட்டூ..” என குழந்தை சொல்ல.. தலைக்கு குளித்து தன் கூந்தலை விரியவிட்டபடி.. சன்ன கரையிட்ட மஞ்சள் நிற சுடிதாரில் வந்து நின்ற மனைவியை பார்த்து மயங்கிப்போனவன்.. ‘ம்.. பெரிய பட்டூடூ..” என சந்தோசித்து.. ‘கேக் வெட்டலாம்ப்பா..” என்றான்.

       ‘அத்தை வந்திடட்டும் ரூபா..” என மாரியப்பன் சொல்ல.. ‘அவங்க வந்தா இன்னொருமுறை வெட்டிக்கலாம்ப்பா.. இப்போ நாம மட்டும்..” என பிடிவாதமாய் சொன்னவன்.. ‘பட்டு வாங்க..” என குழந்தையை முன்னிருத்தி கேக் வெட்ட.. ‘ஹேப்பி பர்த் டே பட்டு மா..” என ஆதிரை பாட.. சந்தோசத்தில் மொத்தமாய் நிலையிழந்தான் அதிரூபன்.

        கேக்கை வெட்டியதும் குழந்தைக்கு ஊட்டியவன்.. ‘அப்பாக்கு..” என வாய் திறந்தான் ஆசையாக. தன் கையளவிற்கு கேக்கை எடுத்த குழந்தை ரூபனின் வாய் வரை கொண்டு வந்து.. ரூபனின் கன்னத்தில் கடித்து வைத்து.. கேக்கை தன் வாய்க்குள் போட்டுகொண்டு கலகலவென சிரிக்கவும் ரூபனோடு சேர்த்து அனைவரும் கண்கலங்கினர்.

       ம்.. ஒவ்வொரு பிறந்த நாளிற்கும் ரூபனிடம் ப்ரியா செய்யும் சேட்டையை யாரும் சொல்லித் தராமலே அவனின் பட்டு செய்யவும்.. ப்ரியாவின் நினைவில் கண்ணீரை வெளியனுப்பினான் அதிரூபன்.

      சட்டென அனைவர் முகத்திலும் எற்பட்ட மாறுதலும்.. அதிரூபனின் கலங்கிய தோற்றமும்.. குழந்தையின் அன்னையை நினைத்துதான் கலங்குகிறான் என ஆதிரைக்கு தெளிவாய் புரிய.. அதற்கு மேல் நிற்க முடியாமல் உள்ளே விரைந்து கதவை தாழிட முயல.. தடுத்தவன் தானும் உள்ளே சென்று கதவை தாழிட்டான்.

          எது நடக்கக்கூடாது என நினைத்து யாரையும் அழைக்காமல் கேக் வெட்ட எண்ணினானோ, அது அவனின் பட்டுவின் செயலால் நடந்தேறிவிட்டது.

     ‘வெளில போங்க..” என கத்தினாள் ஆற்றாமையோடு.

          ‘ஆதி ப்ளீஸ்..” என மனைவியை நெருங்கி நிற்க.. ‘ப்ளீஸ் போங்க..” என்றாள் கண்ணீரோடு.

         ‘உன்கிட்ட நிறைய பேசனும்.. பட்டுவை தூங்க வச்சிட்டு பேசலாம்..” என்றான்.

        ‘உங்க கடந்த காலம் எதுவும் எனக்கு வேணாம்.. வெளில போங்க..” என்றாள் ஆத்திரமாக.

    உடல்கள் உரச நெருங்கி நின்றவன்..  ‘நீ நினைக்கிற அளவுக்கு ஒன்னும் இல்லடா.. ஒரு பொண்ணோட இத்தனை நெருக்கத்தோட இதுவரை யாரோடவும் நான் நின்னதில்ல.. நீ எப்படி எனக்கே எனக்காக இருக்கியோ.. அதுபோலத்தான் நானும்..

          என் உதடு இதுவரை எந்த பொண்ணையும் இப்படி கிஸ் பண்ணினதில்ல..” என நெற்றியில் முத்தம் பதிக்க.. அதிர்வோடு ஆதிரை தலைநிமிர..  மனைவியின் துடித்திருந்த உதடுகளை தன் விரல் கொண்டு மென்மையாய் வருட.. ‘போங்க..” என அவனின் விரலை தட்டிவிட்டு கண்ணீர் விட்டாள் ஆற்றாமையோடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!