Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒன்று சேர்ந்த நதியும் கரையும்

ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 7 2

“ஓ உனக்கும் இன்ஜினியர் மாப்பிள்ளை வேணுமா? இப்ப எல்லாம் தடுக்கி விழுந்தா இஞ்சினீயர் தான். என் கிட்ட கை வசம் ரெண்டு பேர் இருக்காங்க. பாக்குறியா?”

“உனக்கு தெரிஞ்சவங்களே எனக்கு வேண்டாம் பா. உனக்கு தெரிஞ்ச எல்லாவனும்  கண்டிப்பா பிராடா தான் இருப்பாங்க”



Advertisement

“ஏய்”

“என்ன உண்மையைச் சொன்னா எரியுதா?”

Advertisement

Advertisement

“அதை விடு. இப்ப கல்யாண விசயத்துக்கு வா. உனக்கு நான் மாப்பிள்ளை மேட்ரிமோனில தேடுறேன். உனக்கு ஓகே தானே?”

“அப்படின்னா ஓகே தான்”

Advertisement

“இரு இரு உனக்கு தூக்கம் வரலைல? நான் இப்பவே ஆன்லைன்ல அக்கவுண்ட் ஓபன் பண்ணிறேன். கண்டிப்பா நாளைக்கே நிறைய அலையன்ஸ் வந்துரும். நான் லேப்டாப் ஆண் பண்ணிட்டேன். நான் கேக்க கேக்க உன் விவரம் சொல்லு”

“சரி சொல்றேன்”, என்று அவள் சொன்னதும் அவனும் அந்த மேட்ரிமோனியல் இணையதளத்துக்கு சென்று இந்துமதி என்ற பெயருக்கு அக்கவுண்ட் ஓப்பன் செய்தான்.

“அவன் இன்னைக்கு தூங்கவே கூடாது”, என்று எண்ணி அவனை எப்படி டார்ச்சல் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் இந்து.

“உனக்கு புரோபைல் கிரியேட் ஆகிருச்சு டி”, என்றான் இன்பன்.

“அப்படியா ரொம்ப சந்தோஷம்”

“ஆமா, இப்ப தான் நாப்பதாயிரம் பணம் கட்டுனேன்”

“நாப்பதாயிரமா?”, என்று உண்மையிலே அதிர்ந்தாள் இந்து.

“ஆமா டி அவ்வளவு கட்டினா தான் நிறைய அலைன்ஸ் காட்டுவாங்க. சரி சரி உன் மத்த டீட்டேயில்ஸ் சொல்லு. நான் ஒண்ணு ஒண்ணா கேக்குறேன். நீ சொல்லு”

“சரி கேளு சொல்றேன்”, என்று அவள் சொன்னதும் “உன் அம்மா அப்பா பேர் சொல்லு”,  என்றான்.

அவளும் சொன்னாள். அடுத்து “உன் படிப்பு, உன் சொந்த ஊர் எல்லாம் சொல்லு”, என்று அவன் சொன்னதும் அதையும் சொன்னாள்.

“உன் உயரம் என்ன?”, என்று அவன் கேட்டதும் அதையும் சொன்னாள்.

அடுத்து “உன் சைஸ் என்ன?”, என்று இன்பன் கேட்க “என்னது?”, என்று அதிர்ந்து போனாள்.

“என்ன டி, இதுல கேட்டுருக்கு. அதான் கேட்டேன். சொல்லு”

“அதெல்லாம் எதுக்கு கேக்குறாங்க?”, என்று கேட்ட இந்து முகம் சிவந்து போனாள்.

“பின்ன குண்டா இருக்குற பொண்ணுக்கு அதுக்கு ஏத்த மாதிரி மாப்பிளை கிடைக்க வேண்டாமா? உசிலமணிக்கும் ஒள்ளிக் குச்சிக்குமா பொருத்தம் பாப்பாங்க? மணி பன்னிரெண்டு ஆகிட்டு. சீக்கிரம் சொல்லு”, என்றான் இன்பன்.

“அதெல்லாம் சொல்ல முடியாது”

“ஏய் விளையாடுறியா? அதை போட்டா தான் டி ஃபார்ம் சப்மிட் கொடுக்க முடியும். டைம் அவுட் ஆகிட்டுன்னா திருப்பி முதல்ல இருந்து எல்லாம் பண்ணனும். அதனால சீக்கிரம் சொல்லு”

“என்னால சொல்ல முடியாது”

“என்னை வெறியேத்தாத இந்து. சீக்கிரம் சொல்லித் தொலை. நான் ஒண்ணும் எனக்காக கேக்கலை. சீக்கிரம் சொல்லு”, என்று அவன் கடுப்புடன் சொன்னதும் வேறு வழியில்லாமல் அவளும் சொன்னாள்.

அதைக் கேட்ட இன்பனுக்கு அவள் உருவம் கண்ணில் வர “அவ்வளவு இருக்குமா? பாத்தா அப்படித் தெரியலையே?”, என்று கேட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டு வெட்கத்தில் அவள் முகம் மேலும் சிவந்து விட்டது. “அறிவு இருக்கா உனக்கு? இதுக்கு தான் சொல்ல மாட்டேனு சொன்னேன்?”, என்று எரிந்து விழுந்தாள் இந்து. அவளுடைய வெட்கம் அவனுக்கும் புரிந்ததில் அவனுக்குள்ளும் பல வித தடுமாற்றம் எழுந்தது.

அந்த இரவு நேர ஏகாந்தம் இருவரையுமே ஏதோ ஒரு மாய வலைக்குள் இழுத்துச் சென்றது போல இருந்தது.

அப்போது அவனுடைய போனுக்கு இன்னொரு அழைப்பு வர தன்னுடைய நினைவுகளில் இருந்து வெளியே வந்தவன் அந்த அழைப்பை எடுத்தான்.

அது மேட்ரிமோனியல் இணையதளத்தில் இருந்து வந்த கன்பர்மேசன் கால். அவர்களிடம் பேசி விட்டு பின் மீண்டும் இந்துவிடம் பேசினான்.

“நான் அப்ளை பண்ணிட்டேன்”, என்று அவன் சொல்ல “சரி நான் வைக்கவா?”, என்று கேட்டாள் இந்து.

“அதுக்குள்ள என்ன அவசரம்? இப்ப ஒரு முப்பது புரோபைல் அனுப்பிருக்காங்க. நான் உனக்கு ஒண்ணு ஒண்ணா சொல்றேன். நீ எது புடிச்சிருக்குன்னு சொல்லு”, என்றான் இன்பன்.

“இவன் தூக்கத்தை நாம கெடுக்கலாம்னு பாத்தா இவன் நம்ம தூக்கத்தை கெடுத்துருவான் போல?”, என்று எண்ணியவள் “நான் மாப்பிள்ளை எப்படி இருக்கணும்னு சொல்லிறேன். அதை வச்சு நீயே செலக்ட் பண்ணி கடைசியா என் கிட்ட சொல்லு”, என்று சொன்ன இந்து மாப்பிள்ளை எப்படி இருக்கணும் என்று ஒரு பட்டியலே வாசித்தாள்.

அனைத்தையும் கேட்ட இன்பனுக்கு அவளுடைய எதிர்பார்ப்பில் தலையே சுற்றியது. “நீ பெரிய ராஜ பரம்பரையா டி? இவ்வளவு கண்டிஷன் போடுற?”, என்று கேட்டான்.

“உன்னை நானா மாப்பிள்ளை பாக்கச் சொன்னேன்? நீ கேட்ட நான் சொன்னேன். முடிஞ்சா பாரு. இல்லைன்னா எங்க தாத்தா எனக்கு மாப்பிள்ளை பாத்து கட்டி வைப்பார்”

“அவர் எப்ப உனக்கு மாப்பிள்ளை பார்த்து உனக்கு எப்ப கல்யாணம் நடக்குறது? சரி சரி நான் பாத்து ஷார்ட் லிஸ்ட் பண்ணிட்டு உனக்கு நாளைக்குச் சொல்றேன்”

“சரி”, என்று சொல்லி போனை வைத்த இந்து இன்று கண்டிப்பாக அவன் தூங்க மாட்டான் என்று சந்தோஷப் பட்டுக் கொண்டே நன்கு உறங்க ஆரம்பித்தாள்.

அவள் நினைத்தது போல தான் நடந்தது. இன்பன் இரவு முழுவதும் தூங்கவே இல்லை. அந்த முப்பது புரோபைலையும் அலசி ஆராய்ந்தான். தூக்கத்துக்கு அவன் கண்கள் எல்லாம் கெஞ்சியது. ஆனாலும் விடாப் பிடியாக அனைத்தையும் பார்த்து முப்பதில் இருந்து இந்து சொன்ன படி ஒரு ஐந்து பேரைக் கண்டெடுத்தான்.

அந்த அஞ்சு பேரை அவன் குறித்து முடிக்கும் போது அதிகாலை மணி நான்கு என்று காட்டியது. அப்போதே அவளிடம் சொல்லி விட வேண்டும் என்று எண்ணி அவளை அழைத்தான். அவன் கண்டிப்பாக நடு ராத்திரியில் தன்னை அழைப்பான் என்று ஏற்கனவே எண்ணிய இந்து அதை சைலெண்டில் போட்டு விட்டு நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள்.

இரண்டு முறை அழைத்தவன் அவள் எடுக்க வில்லை என்றதும் அவனும் லேப்டாப்பை அனைத்து விட்டு படுத்தான். அடுத்த நாள் காலை பத்து மணிக்கு தான் அறக்கப் பறக்க எழுந்தான். அப்போது அவனுக்கு ஒரு ஐம்பது புரோபைல் வந்திருக்க சாப்பிடும் போது கூட ஒவ்வொன்றாக பார்த்தான். பின் அலுவலகம் வந்ததும் ஆபீஸ் வேலையைச் செய்யாமல் இந்துவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையைத் தான் செய்தான்.

இடையிடையே மற்ற ஆட்களும் அவனுக்கு கால் செய்தார்கள். ஏன் தான் தன்னுடைய மொபைல் நம்பரைக் கொடுத்தோம் என்று நொந்து போன இன்பன் அன்று மாலைக்குள் அனைத்து புரோபைலையும் அலசி ஆராய்ந்து ஒரு பத்து வரனை வடி கட்டி முடித்தான். அதன் பின் தான் அப்பாடி என்று மூச்சு விட்டான்.

அவனுக்கோ அவன் தங்கைக்கோ வரன் பாக்கும் போது கூட அவன் இந்த அளவுக்கு கஷ்டப் பட்டதில்லை.

“இப்ப இந்த பத்து பேர்ல இந்த திமிர் பிடிச்சவ ஒரு ஆளை செலக்ட் பண்ணிருவா. அப்புறம் கல்யாணம் தான்”, என்று எண்ணிக் கொண்டு சந்தோஷமாக அவள் அலுவலகத்துக்கு சென்றான்.

ஆபீஸ் முடிந்து வெளியே வந்த இந்து அவனை அங்கே கண்டு திகைக்க அவளுடன் நடந்து வந்த திலகா “யார் இந்து அது? உன் உட்பியா? ரொம்ப அழகா இருக்கார்”, என்றாள்.

அதிர்ந்து போய் திலகாவைப் பார்த்த இந்து “ஐயோ அப்படி எல்லாம் இல்லைக்கா. என் தம்பி லவ் பண்ணுற பொண்ணோட அண்ணன் தான் இவர். கல்யாண விஷயம் கேக்க வந்திருப்பார்”, என்று அவசரமாக சொன்னாள்.

“அப்படின்னாலும் உனக்கும் முறைப் பையன் தானே? ஆள் வேற ஜம்முன்னு இருக்கான். ஹே இவர் இன்பன் தானே?”, என்று அப்போது தான் அடையாளம் கண்டு கொண்டு கேட்டாள்.

“ஆமாக்கா”

“இன்பன் உன் ரிலேட்டிவா? சூப்பர் இந்து. பேசாம நீயே இவரைக் கல்யாணம் பண்ணிக்கோ. சரி சரி நீ பேசிட்டு பாத்து வீட்டுக்கு போ. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றாள் திலகா.

“இவனைக் கல்யாணம் பண்ணினா ஆக்கமா இருக்கும்”, என்று எண்ணிக் கொண்டு அவனை நெருங்கிய இந்துவுக்கு முதல் முறை அவன் அழகு மனதில் பதிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!