Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vaazhkai Vaazha Thaanae

SECOND LINK VVT 9

“வாவ்! சூப்பரா சொல்லிட்டீங்க! கேட்குறவங்களுக்கு ‘சுயநலமா’ தெரியலாம்! ஆனா, உங்க வரையில உங்க பேச்சு சரிதான்!!!” என்றான் அஜய்.

 

 



Advertisement

மாது ஒன்றும் சொல்லவில்லை!

 

Advertisement

 

Advertisement

“அம்மா அப்படி பேசுறாங்கன்னு வருத்தமோ?” என்றவன்,

Advertisement

“அம்மா’ன்னா அப்படிதான்! அவங்க வகைல எது நல்லதுன்னு படுதோ அதைதான் சொல்லுவாங்க! அவங்க பார்த்த வரைக்கும் புருஷன் இல்லாத பொண்ணுன்னா, ரொம்ப கஷ்டப்படுவாங்களா இருக்கும்! நம்ம பொண்ணுக்கு அப்படி கஷ்டம் வர வேண்டாம்ன்னு நினைச்சு பேசிருப்பாங்க!” என்றான் பெரியவர்கள் பக்கமும் யோசித்து.

 

 

“ம்ம்ம்! புரிஞ்சுது எனக்கு!” என்றாள்.  

 

 

“சரி, அதான் தெளிவா பேசிட்டீங்களே! அப்பறம் என்ன ஆச்சு?” என்று கேட்க,

 

 

“அப்பறம் தான் பிரச்சனையே!” என்றவள், “கோர்ட்டுக்கு போனேன், அந்தாளு ரொம்ப நக்கலா சிரிச்சுட்டு இருந்தான்! எனக்கு ஒன்னும் புரியல!” என்றாள்.

 

 

“சரி…!”

 

 

“அவன் லாயர் என்கிட்ட வந்து, இன்னைக்கு ஹியரிங்’ல குழந்தை கஸ்டடி கேட்டு அப்ளை’ பண்ணப்போறோம்ன்னு சொன்னான்” எனும்போதே அவள் கண்கள் மீண்டும் கலங்கியது.

 

 

“ஜஸ்ட் அஸ் ஐ எக்ஸ்பெக்டட்! [just as I expected]” என்றான்.

 

 

விழிவிரித்தவள், “ஹான்? எப்படி?” என்றாள்.

 

 

“உங்களை கார்னர் பண்ண வேற வழியே இல்லையே! குழந்தையை கேட்டா டிவோர்ஸ் குடுப்பீங்கன்னு தெரியும் அந்தாளுக்கு” என்றான்.

 

 

விசும்பியவள், “எனக்கு அந்தாள் கண்ணுல கூட என் குழந்தையை காட்ட இஷ்டம் இல்லை! அவ பொறந்தப்போ கூட வந்து பாக்காத ஜென்மம்! அவளுக்குன்னு ஒரு துரும்பை கூட நகர்த்துனது இல்ல இதுவரை!” என்றாள்.

 

 

“என்ன பண்றதா இருக்கீங்க இப்போ?”

 

 

“அதான் தெரியல!”

 

 

“என்ன சொல்றான் அந்தாளு!?”

 

 

“நான் டிவோர்ஸ் குடுக்கணுமாம்! இல்லன்னா குழந்தை வேணுன்னு கேஸ் போடுவானாம்!”

 

 

“நம்ம லாயர் மேடம் என்ன சொல்றாங்க!” அவன் ஏற்ப்பாடு செய்த வக்கீலை பற்றி கேட்டான்!

 

 

“அவர் கேட்டா உடனே அனுப்பிட மாட்டாங்க! ஆனா, விசிட்டிங் ஹார்ஸ் ஆர் டேஸ் கண்டிப்பா குடுப்பாங்க’ன்னு சொல்றாங்க!”

 

 

“ம்ம்ம்!? சோ, யூ டோன்ட் விஷ் தட் டூ ஹேபன்?” என்றான் யோசனையாய்.

 

 

“ம்ஹும்!!!” என்றாள் மறுப்பாய்!

 

 

“அப்போ டிவோர்ஸ் குடுத்துடுங்க!” என்றான் உடனே…

 

 

அவள் யோசிக்க, “ஆடிட்டர் மேடம் க்கு ‘பேட்ச் அப்’ ஆகுற ஐடியா இருக்கும் போலயே!” என்று நக்கலாய் அவன் சொன்னதுமே கையில் கிடைத்த ‘டிஷூ பேப்பர்’ பாக்ஸ் கொண்டே அவனை அடித்தாள் மாதங்கவதனா.

 

 

சிரித்துக்கொண்டே வாங்கியவன், “பரவால்ல! கூட்டம் கூட்டாம நீங்களே அடிக்குறீங்க!” என்றான் இன்னும் கிண்டலாய்.

 

 

அடித்து சலித்தவள், ‘ம்ச்!’ என சோர்ந்து அமர, “மாது…? வேணும்ன்னா சேர்ந்து வாழனும்… வேண்டான்னா விட்டது சனியன்னு தள்ளி வந்துடனும்! இப்படி சும்மா அலைய விடுறேன் பாருன்னு சுத்த விட்டா நம்ம நிம்மதி தான் சேர்ந்து கெடும்!” என்றான் அழுத்தமாய்.

 

 

அவன் சொன்னதை உள்வாங்கிக்கொண்டவள் தலையசைக்க, “நேத்து கோர்ட்டுல இருந்து அப்படியே ஓடி வந்துட்டதால ஹியரிங் போஸ்ட்போன் ஆகிடுச்சா?” என்றான்.

 

 

‘நான் ஓடி வந்தது இவருக்கு எப்டி தெரியும்?” என்றவள் பார்க்க, “லாயர் சொன்னாங்க!” என்றான் நமட்டு சிரிப்புடன்!

 

 

“அப்ப எல்லாம் தெரிஞ்சு தான் தெரியாத மாதிரி இருந்தீங்களா?”

 

 

“ஹே! ஹியரிங் அடுத்த வாரத்துக்கு போஸ்ட்போன் ஆச்சுன்னு தான் தெரியும்! வேற எதுவுமே தெரியாது… ப்ராமிஸ்!” என்றவனை நம்பமாட்டாது பார்த்தாள் அவள்.

 

 

அவனோ, “பத்து வருஷத்துக்கு முன்னையே ரோஸ்’ஸ தூக்கிக்கிட்டு பின்னால வந்த என்னை திரும்பி பார்த்துருந்தா இப்போ இந்த அக்கப்போர் எல்லாம் தேவைதானா?” என்றான் ஆற்றாமையாய்.

 

 

அவள் முகத்தை திருப்பிக்கொள்ள,

“மாது, நமக்கு ஒரு பிரச்சனையோ, கஷ்டமோ வரும்போது மனசு அதுக்கு நெருக்கமானவங்களை தான் தேடுமாம்! உன் மனசு யாரை தேடுச்சுன்னு பொறுமையா யோசி!” என்றான் சாந்தமான குரலில்.

 

 

காரணமேயின்றி அவள் கண்கள் உடைப்பெடுக்க, மீண்டும் ஆரம்பிக்கும் அழுகையை கன்னத்தில் கைவைத்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் அஜய்.

 

 

‘அழாத’ என்று சொல்லி அலுத்துப்போயிருந்தது.

ஒரு மூச்சு சத்தமின்றி அழுது ஓய்ந்தவள், கன்னத்தில் கை வைத்து அசையாமல் அமர்ந்திருந்தவனிடம், “என்ன?” என்றாள் மூக்கை உறிஞ்சிக்கொண்டே.

“தண்ணீல மீனு மிதக்குது!” என்றான்.

“ஹான்?”

“உங்க கண்ணு!!! தண்ணீல மீனு அங்கயும் இங்கயும் மிதக்குது!!!” அவள் விழிகள் ஓடும் அழகை பருகிக்கொண்டே சொன்னவனை, எழுந்த நாணத்தை மறைத்துக்கொண்டே முறைத்தவள்,

“இந்த ஆம்பளைங்க அடுத்தவன் பொண்டாட்டி’கிட்ட எல்லாம் நல்லா தான் பேசுவீங்க!” என்றாள்.

“நான் என் பொண்டாட்டி’கிட்ட கூட நல்லா தாங்க பேசுவேன்!” என்றதும்,

“ஓ! கல்யாணம் ஆகிடுச்சோ!” என்றாள் எள்ளலுடன்.

“ஓகே’ன்னு சொன்னா பண்ணிடலாம்!” என்றான் அவனும் சளைக்காமல்!

அவளை மீறி உதடுகள் புன்னகைக்க முயல, முகம் லேசாக சூடாகி போனது போல் தோன்ற, முகத்தை அவனுக்கு காட்டாது வேறு புறம் திரும்பியவளின் முயற்சியை முறியடிக்க, முந்திக்கொண்டு அவள் முன்னே குனிந்து, திரும்பி, எக்கி என விளையாடிக்கொண்டிருந்தான் அஜய்.

ஒருக்கட்டதில் அவனிடம் இருந்து தன்னை மறைக்க முடியாது போக, தஞ்சமென அவன் தோளிலேயே முகத்தை ஒட்டிக்கொண்டாள் மாது.

 

 

தன்னிடம் இருந்து தப்பிக்க தன்னிடமே வந்து மறைந்தவளை கண்டு உல்லாசமாய் சிரித்தபடி, அவள் தோள்களை சுற்றி ஆதரவாய் அணைத்துக்கொண்டவன்,

 

 

“பீ ஸ்ட்ராங் மை கேர்ள்!” என்று அவள் உச்சி முகர, துளிக்கூட காமமற்ற அந்த தொடுகையை இரு கண்கள் தன் மூன்றாம் கண்ணில் பதிந்தது.

=வாழலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!