Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Mister Rascal

Mister Rascal 3

3

“சார்… இங்க தான் அந்த கார் கிரேஷ் ஆகி இருந்தது…!” அந்த ஆள் நடமாட்டம் குறைந்த என்.எச்’யின் ஓரமாய், கார் எஞ்சின் போர்ட் மீது ஏறி அமர்ந்திருந்த ரகுநந்தபூபதியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் ஷைலஜா.



Advertisement

“இன்போர்மேஷன் கிடைச்சு நாங்க ஸ்போட்’க்கு வந்தப்போ இதோ இந்த பக்கம் ஒருத்தனும்…!” அவள் கரம் நீட்டி சுட்டிய இடத்தை கவனித்தான் பூபதி.

“கொஞ்சம் தள்ளி இன்னொருத்தனும் அடிப்பட்டு கிடந்தாங்க! ரெண்டு பேருமே ஸ்போட்’அவுட்! அந்த பொண்ணு மட்டும் கார்க்குள்ள அடிப்பட்டு மயக்கத்துல இருந்துச்சு!” என்றாள்.

Advertisement

Advertisement

“ம்ம்!” என்றவன், “எதனால இதை மர்டர்’ன்னு சொல்றீங்க? ஏன் ஆக்சிடென்ட்’டா இருந்துருக்கக்கூடாது?” என்றான்.

“இனிஷியல்லி நாங்களும் இது ஆக்ஸிடென்ட்’டா தான் இருக்கும்ன்னு நினைச்சோம்! பட் இன் அ டீப் நோட், இது மர்டர்’ரா இருக்கத்தான் ஹை சான்செஸ் இருக்கு!” என்றவள், 

Advertisement

“இது ஒரு ஹை ரேன்ஜ் கார்! இன்கேஸ் ஆக்சிடென்ட் ஆகிருந்தா ஏர்பேக்ஸ் முதல்ல ரிலீஸ் ஆகிருக்கும்! பட், இதுல அப்படி நடக்கல!” என்றாள்.

பூபதியின் கரத்தில் அன்றைய தினம் எடுத்த புகைப்படத்தின் தொகுப்புகள் இருந்தது. அதை அவன் பார்வையிட, அவனிடம் சற்று நெருங்கி, ஒரு புகைப்படத்தை சுட்டிக்காட்டினாள்.

“இது விபத்தா இருந்தா கார் இப்படி ரோட் ஓரத்துல நேரா நின்னுருக்க வாய்ப்பில்லை! இவங்க பர்பசா’ தான் காரை இங்க பார்க்’ பண்ணிருக்காங்க!” என்றவள், 

“கார் நிக்குறது தெரியாம யாராவது வந்து மோதிட்டாங்கன்னா கூட, கார் டிக்கி’ தான் டேமேஜ் ஆகிருக்கணும்! ஆனா, இதுல பிரன்ட் போர்ஷன் தவிர வேற எங்கயும் எந்த டேமேஜும் இல்ல!” என்றாள்.

மேற்கொண்டு அவள் சொல்லவர, “போதும்!” என்றுவிட்டான்.

அதுவரை அமைதியாய் நின்றிருந்த விக்கி,  “சார் மினிஸ்டர் பையனுக்கும் அந்த பொண்ணுக்கும் என்கேஜ்மென்ட் பிக்ஸ் ஆகிருக்கு! அதை செலிபரேட் பண்ணிட்டு ரிடர்ன் வரப்போ தான் இப்படி ஆகிருக்கு! மோர்ஓவர், கார்’ல இருந்த அந்த இன்னொரு பையன், அந்த பொண்ணை ஒன் சைடா லவ் பண்ணிருக்கான்!” என்று நிறுத்த, 

ஷைலஜாவை திரும்பிப்பார்த்தான் பூபதி! அவள் முகம் விக்கி மீதான கடுப்பை காட்டியது. அவளும் ஆரம்பம் முதலே சொல்லிக்கொண்டிருக்கிறாள், ‘இதெல்லாம் பெரிய தகவலே இல்லை!’ என்று!!! இவன் கேட்கிறான் இல்லையே!

இப்போது இவனிடமும் அதையே சொல்ல, கடுப்புடன் அவனை அவள் முறைக்க, 

விக்கியை காட்டி, “யாரிது?” என்றான் பூபதி!

“இந்த கேஸ்’ல என் அசிஸ்டன்ட்… விக்னேஸ்வரன்!” என்றாள் அவள்.

பேக்கெட்டில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து வாயில் சரித்தான். 

ஓரமாய் நின்றிருந்த நடேசன் வேகமாய் கர்சீப்பை எடுத்து மூக்கையும் வாயையும் சேர்த்து பொத்திக்கொண்டார்.

“நீயே எனக்கு அல்லக்கை! இவன் உனக்கு அல்லக்கை’யா? ஹாஹா!” பூபதி இப்படி சொல்லி சிரிக்க, ஷைலஜா எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை!

ஆனால், விக்கி தான் திகைத்து நின்றான். இரண்டு நாட்கள் விடுப்பில் இருந்தவன் இன்றுதான் வேலைக்கு வந்திருந்தான்.

வந்த முதலே இப்படி வெளியே கிளம்பி வந்திருக்க, கமிஷ்னரிடம் தன்னாலான துப்புக்கொடுத்து நற்பேர் எடுக்கலாம் என்று பார்த்தால், அவனோ ஷைலஜா’வையே ‘அல்லக்கை’ என்று சொல்கிறானே! என்று திகைத்துப்போய் பார்த்தான்.

அவனறிந்த வரை ஷைலஜா ஒரு இருமுனை கத்தி! அவளிடம் இயல்பாய் அல்ல… தேவைக்காய் கூட பேச பலர் தயங்குவதுண்டு! உண்மையில் பயமும் கூட! 

அப்படிப்பட்டவளை அவன் அல்லக்கை என்று சொல்ல, அதற்கு அவள் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அப்படியே நிற்ப்பது எட்டாம் அதிசயத்தை பார்ப்பதை போல இருந்தது அவனுக்கு.

காரை விட்டு இறங்கியவன் முன்னால் நடக்க, இருவரும் அவன் பின்னே சென்றனர். 

நான்கடி தூரம் சென்றதும் திரும்பி பார்த்தவன், “என்னை இயற்கை அவசரமா அழைக்குது… போறேன்!!! உங்களையும் ஒரே நேரத்துல இயற்கை அழைக்குதா?” என்றான்.

அவ்வளவு தான்! விறுவிறுவென கார் அருகே சென்று நின்றுக்கொண்டனர்.

ஷைலஜா தன் பேக்கெட்டில் இருந்து ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு தண்ணீருக்காக நடேசனிடம் கை நீட்டினாள்.

அவர் எடுத்து கொடுக்க, “என்ன மேடம்? தலைவலி வந்துடுச்சா?” என்றான் விக்கி.

விழுங்கியவள், சற்று தள்ளி வந்துக்கொண்டிருந்தவனை பார்த்துகொண்டே, 

“அது வந்து மூணு நாளாச்சு!!!” என்றாள் கடுப்புடன்!

நடேசன் வேகமாய் அவளிடம் வந்து, “மேடம், அவர் கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இருங்க! அடிக்கடி கஞ்சா போடுற ஆளு!” என்றார்.

“வாட்? கஞ்சாவா? என்ன உளருறீங்க?” என்றாள்.

“நிஜம் தான் மேடம்! என்கிட்ட அவரே சொன்னாரு! ஏதோ இம்போர்ட்டாம்! மோந்து பார்த்தாலே ரெண்டு நாளுக்கு தலை சுத்துமாம்!” என்று வேறு சொல்ல, 

“வாட் இஸ் ஹி செயிங்!?” என்றாள் விக்கியிடம்!

“என்ன நடேசன் சொல்றீங்க?” என்றான் விக்கி.

“ஆமா சார்! இப்போ கொஞ்சம் முன்ன கூட வாயில எடுத்து போட்டுக்கிட்டாரே! பாக்கலை நீங்க?” என்று கேட்க, ஷைலஜா பூபதி மேலிருந்த கடுப்பை எல்லாம் நடேசன் மீது கொட்டினாள்.

“போலிஸ்’ல சேர்ந்து இருபத்தி அஞ்சு வருஷம் ஆச்சு! கஞ்சாக்கும் ‘மவுத் ரெப்ரெஷனர்’க்கும் கூட வித்தியாசம் கண்டுப்பிடிக்க தெரியல! நீங்க எல்லாம் எதுக்கு இந்த டிப்பார்மென்ட்’க்கு? மாசா மாசம் சம்பளம் வாங்கி தொப்பை வளர்க்கவா? இங்க இருந்து எங்க உயிர் எடுக்குறதுக்கு எங்கயாவது வாட்ச்மேன் வேலைக்கு போய் நாயை விரட்டுங்க! உங்களுக்கெல்லாம் கௌரவமா ஒரு வேலை, கை நிறைக்க சம்பளம்! வெட்கப்படுங்க நடேசன்! ச்ச!!!” ஷைலஜா காய்ந்துத்தள்ளினாள்.

விக்கி’க்கே சங்கடமாய் போனது.

“மேம்! சார்!” என்று ஜாடை காட்ட, பூபதி அருகே வந்ததும் வாயை மூடிவிட்டாள்.

வந்தவன், முன்பை போலவே காரில் ஏறி அமர்ந்துக்கொண்டு, “இந்த கேஸ் இப்போ யார் ப்ரெஷர்’ல நடக்குது?” என்றான்.

“அப்கோர்ஸ்… மினிஸ்டர் தான்!” என்றாள்.

“வாட் அபௌட் தட் கேர்ள்ஸ் பேமிலி?”

“அந்த பொண்ணு அப்பர் மிடில் கிளாஸ்! அம்மா மட்டும் தான்! அவங்களும் இங்க இல்ல! துபாய்’ல இருக்காங்க!”

“ஓ! அந்த இன்னொருத்தன்?”

“அவனுக்கு சொந்தம்ன்னு யாரும் இல்லை! சின்ன வயசுல இருந்து மினிஸ்டர் பையன் ஜெகனோட ரொம்ப கிளோஸ்! சோ, அவன் படிப்பை கூட மினிஸ்டர் தான் ஸ்பொன்சர் செஞ்சுருக்காரு!” என்றாள்.

அத்தனையும் உள்வாங்கிக்கொண்டான்.   

“அந்த ‘ஜெகன்!’ எப்படி?”

விக்கி, “சார், அவனை பத்தி விசாரிச்ச வரைக்கும் ரொம்ப ஒழுக்கமான பையனா இருந்துருக்கான்! மினிஸ்டர் புள்ளைன்னு எந்தவித சலுகையோ வரம்பு மீறுதலோ கூட செய்யாத ஆளுன்னு அவன் காலேஜ்’ல சொல்றாங்க! அதைத்தாண்டி அவன் பிரண்ட்ஸ் எல்லாரும் அவனை பத்தி நல்லதா தான் சொல்லிருக்காங்க!” அவன் சொல்ல, 

பூபதி ஷைலஜாவிடம் திரும்பி, “கொலை கேஸ்க்கு துப்பு துலக்க சொன்னா, கல்யாண ப்ரோக்கர் பொண்ணு வீட்டுல சொல்ற மாறி டீடெய்ல்ஸ் சொல்லிட்டு இருக்கான்! இவனை மாதிரி ஆளு அசிஸ்டன்ட்’ஆ இருந்தா உன்னால எப்படி இந்த கேஸை முடிக்க முடியும்?” என்றான் நேராய்.

விக்கிக்கு முகமே விழுந்துவிட்டது.

ஷைலஜா என்ன சொல்வதென தெரியாமல் திணற, விக்கியிடம் திரும்பியவன்,

“இந்த காதல், கான்டேக்ட் சர்டிகேட் எல்லாம் தாண்டி வேற எதவாது உருப்படியான விஷயமா விசாரிச்சு வந்து சொல்ற! உனக்கு இப்போ இருந்து சரியா ஆறு மணிநேரம் தரேன்! கிளம்பு!” என்றான்.

அவனிடம் தன்னை மெய்ப்பித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் “ஓகே சார்!” என்றுவிட்டு தன் பைக்கில் வேகமாய் ஏறி பறந்தான் விக்கி.

ஷைலஜாவிடம், “அந்த சிசிடிவி வைக்காதவங்களை விசாரிக்க சொன்னேனே… என்ன ஆச்சு?” என்று கேட்க, திணறி நின்றாள் அவள்.

“வாட்!?”

“சா… சார்… ஐ தாட் யூ வேர் கிட்டிங்!” திணறலாய் அவள் சொல்ல, முகம் மட்டும் அசைய சிரித்தவன், “கார்’ல ஏறு!” என்றான்.

அவன் சொன்னது போலவே அருகே இருந்த இரு பெரும் கடைகளின் முதலாளிகள் அவன் முன்னே நிறுத்தப்பட்டனர்.

“ஹைவேஸ்’ல இவ்ளோ பெரிய ‘மோட்டல்’ வச்சுருக்கவங்க, ஏன் இத்துனூண்டு சிசிடிவி கேமரா வைக்கல?” என்றான்.

“அது சார்! நாங்க வச்சுருந்தோம்!” என்றார் ஒருவர்.

ஷைலஜா திடுக்கிட்டு பார்த்தாள். அவள் கேட்டபோது சிசிடிவி இல்லை என்று தானே சொன்னார்கள்!?

“வச்சுருந்தது என்னாச்சு?”

“ஆறு மாசம் முன்ன சில பேர் வந்து எடுக்க சொல்லிட்டாங்க! அதான் எடுத்தோம்!” என்றார்.

இது ஷைலஜாவிற்கே புதிது!

“நான் கேட்டப்போ ஏன் சொல்லல நீங்க?” ஆத்திரத்தை அடக்கி அவள் கேட்க, 

“நீங்க சிசிடிவி இருக்கான்னு தானே மேம் கேட்டீங்க!? நாங்க இல்லன்னு சொன்னதும் போயிட்டீங்களே!” என்று ஒருவர் நியாயம் சொல்ல, அவளுக்கு ஆத்திரமாய் வந்தது.

“கேட்டா தான் சொல்லுவீங்களா?” அவள் எகிற, 

“ஷைலு’ம்மா கூல்!” என்ற பூபதி,

“யார் அவங்க?” என்றான்.

“ஒரு ஏழெட்டு பேர் வந்தாங்க சார்! எலெக்ஷன் முடியுற வரை இந்த வழில எந்த சிசிடிவி கேமராவும் இருக்கக்கூடாது! உடனே எடுங்கன்னு ஆளுங்கட்சி பேர் சொல்லி மிரட்டுனாங்க! எதுக்கு வம்பு?ன்னு நாங்களும் எடுத்துட்டோம்!” என்றனர்.

“அவங்களை அடையாளம் தெரியுமா?”

“இல்ல சார்! மறந்துடுச்சு!”

“ரைட்! இப்போ உடனே சிசிடிவி மாட்டுங்க! யாராவது இனிமேல வந்து மிரட்டுனா அவங்க சொல்றதுக்கு ஆடாம, பக்கத்துல இருக்க போலிஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லுங்க! புரிஞ்சுதா?” என்றவன் காரில் ஏறிக்கொண்டான்.

ஷைலஜா இன்னமும் அவர்கள் மீதான கடுப்பில் தான் இருந்தாள்.

‘நான் கேட்டப்போ சொல்லிருந்தா இந்நேரம் இந்த கேஸ் என் கைல  இருந்துருக்கும்! மேபி நான் முடிச்சே கூட இருப்பேன்! ச்சை!!!’ அவள் மனத்துக்குள் புலம்பி தள்ளினாள்.

அந்நேரம், “ஷைலு’ம்மா அந்த ஹாஸ்பிடல் பேர் சொல்லு! போவோம்!” என்றான் பூபதி.

அவள் இருந்த கடுப்பில் அவனது ‘ஷைலு’வெல்லாம் அவள் காதில் கூட ஏறவில்லை.

தலைமை மருத்துவரின் அறையில் இருந்தனர் ரகுநந்தபூபதியும் ஷைலஜாவும்.

“சோ, நினைவு திரும்புறது கஷ்டம்ன்னு சொல்றீங்க?”

அவன் கேட்க, “கண்டிப்பா! எப்போ சரியாகும்ன்னு சொல்லவே முடியாது! அது எங்க கைலயும் இல்லை!” என்றார் அவர்.

“ஃபைன்!” என்று எழுந்தவன்,  “அந்த பொண்ணு எங்களுக்கு ரொம்ப முக்கியம்! எக்ஸ்ட்ரா கேர் எடுத்துக்கோங்க! அவளை பார்த்துக்க என்ன அரேன்ஜ்மென்ட்ஸ் இருக்கு இப்போ?” என்றான்.

“ரெண்டு நர்ஸ் கூடவே இருப்பாங்க டுவண்டிஃபோர் ஆர்ஸ்!”

“பத்தாது! ஒரு டாக்டர் எப்பவும் அங்க, அவளோடவே இருக்கமாதிரி அரேஞ் பண்ணுங்க! அவக்கிட்ட சின்ன இம்ப்ரூவ்மென்ட் இருந்தாக்கூட உடனே எங்களுக்கு தெரியனும்!” என்றவன், 

“அவ உயிர்… அது ரொம்ப ரொம்ப முக்கியம்!!! கவனமா இருங்க!” என்றான்.

டாக்டருக்கு இப்போது மெல்லிய  பதட்டம்!

அதோடே “சரி சார்!” என்றார்.

அந்த பெண் இருக்கும் அறைக்கு ஷைலஜாவுடன் சென்றான்.

உடலில் பெரிதாய் எந்த காயமும் தெரியவில்லை. தலையில் தான் பெரிய கட்டாய் இருந்தது. 

அங்கிருந்த செவிலியரிடமும் பலமுறை ‘பத்திரம்!’ சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

“இந்த கேஸ் கொஞ்சம் அரசியல் பக்கத்தை தொட்டுட்டு வரும்ன்னு தோணுது! என்ன நினைக்குற நீ?” என்றான் ஷைலஜாவிடம்!

அந்த மோட்டல் முதலாளிகள் சொன்ன தகவலை கேட்டபிறகு அவளுக்கும் அந்த சந்தேகம் இருக்க, ‘ஆம்!’ என தலையாட்டினாள் பெண்.

“நாளைக்கு மினிஸ்டர பாக்கணும்! அப்பாய்ன்மென்ட் வாங்கிடு!” என்றான்.

மூளை சொல்லும் உத்தரவுகளை வாய் அதன்போக்கில் சொல்லிக்கொண்டிருந்தாலும் மனதுக்குள் மருத்துவமனை கட்டிலில் மீள்துயில் கொண்டிருந்த ‘அந்த பெண்ணை’ பற்றியே மனம் வண்டாய் குடைய, அதற்கு ஏற்றார் போல மறுநாள் அதிகாலையே அவனுக்கு செய்தி வந்தது…

‘அவள் இறந்துவிட்டாள்!’ என்று!

அதுவும் இயற்கையாக அல்ல!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!