Skip to content
Post Views: 3,424
‘எனக்கு தான் ஏற்கனவே தெரியுமே!’
அசராமல் சொல்லிவிட்டு அவளை பார்த்தவனை கண்டு அதிர்ந்துப்போய் ஷைலஜா நிற்க,
Advertisement
“இன்பேக்ட் யாருன்னு தெரிஞ்சு தான் ‘சூட் அட் சைட்’ ஆர்டர் வேணுன்னு பிடிவாதமா கேட்டு வாங்கிருக்கேன்!” என்று சொல்ல, என்ன சொல்வதென்றே தெரியாமல் நின்றாள் ஷைலஜா.
Advertisement
“எப்படி?” இந்த ஒரு வார்த்தையை கேட்கவே அவளுக்கு அத்தனை சிரமமாய் இருந்தது.
Advertisement
ஒருமுறையாவது அவனை ஜெய்க்க வேண்டும் என அவள் நினைக்க, ஒவ்வொரு முறையும் தன்னை மண்ணை கவ்வ வைக்கும் அவன் மீது லேசாக எரிச்சல் கூட எட்டிப்பார்த்தது.
“எப்படி’ன்னா? அப்படி தான்… அதான் நான்!!!” என்றான் சிரித்துக்கொண்டு.
Advertisement
“என்கிட்ட சொல்லிருக்கலாமே!” என்றவளுக்கு மனது தாங்கவே இல்லை.
“ஷைலுமா! உனக்கே தெரியும்… சில விஷயம் வெளில சொல்லாம இருக்க வரை தான் சேஃப்’ன்னு!” என்றவன், “இப்போ நான் சொல்றதை பண்ணு!” என்றான்.
‘வேறு வழி!’
“விக்கிக்கு ஃபோன் பண்ணு… இப்போ நீ கலெக்ட் பண்ண எவிடென்ஸ் பத்தி டீடய்ல்டா சொல்லு… அந்த ஹெல்மெட் மேட்டரை சொல்லி, இப்போ நீ கூட அதே மாதிரி ஹெல்மெட் தானே போட்டுருந்த? நான் பாத்தேன்னு சொல்லிட்டு அவனை உடனே நேர்ல வர சொல்லு!” என்றான்.
மறுபேச்சில்லாமல் அவன் சொன்னதை செய்தாள்.
அவள் பேச பேச மறுமுனையில் விக்கியின் குரலே கம்மிப்போனது. இறுதியாய், ‘உன்னுதும் அதே மாதிரி இருக்கு’ என்று சொன்னபோது பேச்சே இல்லை அவனிடம்!
‘உடனே நேரில் வா!’ என்றதும் சரியென அழைப்பை துண்டித்துவிட்டான்.
ஷைலஜா ‘சொன்னதை செஞ்சுட்டேன்’ என்று அவனை பார்க்க, “அவன் வரமாட்டான் பாரு!” என்றான் பூபதி.
அவளுக்கும் அதே எண்ணம் தான்! காத்திருந்தனர் அவனுக்காக!!!
இதற்கிடையே, சென்னை மாகாண எல்லைப்பகுதி காவலர்களுக்கு விஷயம் ரகசியமாக பகிரப்பட்டு, அவனை கண்டால் பிடித்து வைக்கவும் கட்டளை இடப்பட்டது.
மாவட்டத்துக்குள் அவனை பிடிக்க ஆவண செய்யலாம் என்றால், இது அத்தனை சாதாரணம் அல்ல!
அமைச்சரின் மகனை கொன்றது ஒரு காவலாளி என்று வெளியே கசிந்தால் காவல்துறைக்கு எதிராக பெரும் கலகமே வெடிக்கும்.
கட்சிக்காரர்கள், மீடியா ஆட்கள் அத்தனை பேரும் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவர்.
“ஏற்கனவே தெரியும்ன்னா அப்போவே புடிச்சு ஜெயில்ல போட்டுருக்கலாம்’ல? இதெல்லாம் தேவையா இப்போ?”
ஷைலஜாவிற்கு கேட்காமல் இருக்க முடியவில்லை.
“ஷைலுமா! நான் எதையும் யோசிக்காம இல்லடா! ஒரு போலிஸ்… அதுவும் ஜூனியர்! அவன் இவ்ளோ தைரியமா அமைச்சர் பையன் மேல கை வச்சுருக்கான்னா… அவன் பின்னால யார் இருக்கான்னு தெரியணும்ன்னு நினைச்சேன்! அதான் கொஞ்சம் விட்டு பாத்தேன்! அது யாருன்னு மட்டும் தெரியல! மே பீ அப்படி யாரும் இல்லாமல் கூட இருக்கலாம்!”
‘எதை கேட்டாலும் அதற்கு ஒரு பதிலை ரெடிமேடாய் வைத்திருப்பான்!’
அவள் மனம் சலித்துக்கொண்டது.
அன்று மதியத்திற்கு மேல் வரை காத்திருந்து அவன் வரவில்லை என்றதும், அவனுக்கு மீண்டும் முயற்சித்தாள் ஷைலஜா.
‘சுவிட்ச் ஆஃப்’
உடனே மொபைல் ஜிபிஎஸ் மூலம் அவனை ட்ராக் செய்ய சொல்லி ஷைலஜா உத்தரவிட, போரூர் சிக்னல் என்று காட்டியது.
அவன் கடந்த நான்கு மணி நேரமாகவே அங்கு தான் இருப்பதாய் ட்ராக் செய்தவர்கள் சொல்ல, அங்கிருக்கும் காவலர்களை தொடர்பு கொள்ள முயன்றாள் ஷைலஜா.
“வேஸ்ட்டு! ட்ரை பண்ணாத! அவன் மொபைலை தூக்கி போட்டுட்டு போயிருப்பான்!” என்றான் பூபதி அசட்டையாய்.
“அப்போ அவனை தேடவே வேண்டாம்… விட்டுடலாம்ன்னு சொல்றீங்களா?” சற்று கோபமாக அவள் கேட்க,
“இப்போ தேடுனாலும் வேஸ்ட்… சிக்கமாட்டான்னு சொல்றேன்!” என்றவன், “நம்ம தேடுறது சாதாரண அக்யூஸ்ட இல்லை! அவன் ஒரு போலீஸ்! இவ்ளோ நாள் நம்ம கூடவே ஒன்னும் தெரியாதவன் மாதிரி இருந்துருக்கான்! ஹி நோஸ் அவர் ரூட்ஸ்! என்ன செய்வோம்… எப்படி செய்வோம்… எல்லாம் தெரியும் அவனுக்கு!
அவனை பிடிக்கிறது அவ்ளோ ஈஸி இல்லை” என்றான்.
அவளுக்கும் அது புரிந்தது.
“இப்போ என்னதான் செய்றது?” என்றாள்.
“இந்த கேஸை க்ளோஸ் பண்ணி தூக்கிப்போட்டுட்டு மத்த வேலையை பார்ப்போம்!” என்றான்.
“அப்போ மினிஸ்டர்!?”
“ஓ…இய்யா! அவரை இப்போ பார்க்க முடியுமான்னு கேளு! போய் எல்லாத்தையும் சொல்லிட்டு வந்துடுவோம்! வேலை முடியும்!” என்றான்.
அவனை போல அவளால் இருக்க முடியவில்லை.
என்னவோ தடுத்தது… இது இல்லை… இது முடியவில்லை என்று மனம் சொல்லிக்கொண்டே இருக்க,
“ஷைலு… அப்பாய்ன்ட்மென்ட் பிக்ஸ் பண்ணு” என்றான் மீண்டுமாய்.
இன்னும் ஒரு மணி நேரத்தில் அவருடனான சந்திப்பு உறுதி செய்யப்பட்டது.
நடேசன் காரை செலுத்த பின்சீட்டில் இருந்தனர் இருவரும்.
“மினிஸ்டர் இதை எப்படி எடுத்துப்பாரு?”
ஷைலஜாவிற்கு இருந்த பயமெல்லாம் பூபதிக்கு இல்லை.
“எப்படி எடுத்துக்கிட்டா நமக்கென்ன? கொன்னது யாருன்னு கேட்டாரு! ஆளை கண்டுப்பிடிச்சாச்சு… நம்ம வேலை அத்தோட முடிஞ்சுது!” என்றான்.
அதுவும் உண்மைதானே!?
மினிஸ்டர் வீட்டை அடையும்வரை எந்த பேசும் இல்லை இருவரிடமும்.
இவர்களுக்காகவே காத்திருந்தார் அவர். உடன் ஐ.ஜியும் இருக்க, ‘ஒரே வேலையா முடிஞ்சுது!’ என்று எண்ணிக்கொண்டான் பூபதி.
“என்னாச்சு? ஏதோ முக்கியமான விஷயம்ன்னு சொன்னீங்க?” வந்ததுமே கேட்டார் அமைச்சர்.
“உங்க பையன் ஜெகனை கொன்னது ஷைலஜாக்கு அசிஸ்டன்ட்டா இருந்த விக்னேஷ் தான்!” தடாலடியாய் போட்டு உடைத்தான் பூபதி.
‘இப்படியா சொல்ல வேண்டும்?’ என்று ஷைலஜாவே திணற, ‘நம்ம டிப்பார்ட்மென்ட் ஆளா?’ என்று ஐ.ஜி அதிர்ந்தார்.
அவ்வளவு தான்!
அமைச்சர் ஒருபாடு ஆடி தீர்த்துவிட்டார்.
இதில் ஷைலஜாவை வேறு அவர் அவ்வப்போது ஊறுகாய் போல பேச்சில் தொட்டுக்கொண்டு தாண்டவமாட அங்கே பூபதி தவிர மீதமிருவரும் அயர்ந்துப்போயினர்.
“உன்கூடவே இருந்துருக்கான்… அதை கண்டுப்பிடிக்கக்கூட துப்பு இல்ல உனக்கு!” அமைச்சர் ஷைலஜாவிடம் மீண்டும் ஏற,
“இப்போவும் அவனை கண்டுப்பிடிச்சது நான் இல்லை… ஷைலஜா தான்!” என்று பூபதி சொன்னதும் ஒரு நொடி தன் ஆட்டத்தை நிறுத்தினார் அவர்.
அதை பயன்படுத்தியவன், “உண்மை தான்! கண்டுப்பிடிச்சது அவங்க! ரிபோர்ட் பண்றது தான் நான்!” என்றவன்,
“கண்டுப்பிடிக்குறதோட நீங்க எங்களுக்கு கொடுத்த வேலை முடிஞ்சுது! அவனை தேடி ஜெயில்ல போடுறதோ இல்ல சீக்ரெட்டா போட்டுத்தள்றதோ எதுவா இருந்தாலும் நீங்க சொல்லுங்க.. செய்ங்க!” என்றுவிட்டான்.
“அவனை என் கையாலயே கொல்லணும்ன்னு வெறி வருது! ஆனா, இன்னும் ரெண்டு மாசத்துல எலக்ஷன்! என் ஆளுங்களோ இல்ல என் பேரோ வெளில வேற மாதிரி ஆகிட கூடாது…” என்றார்.
‘ஹும்… புள்ளையே போனபிறகு கூட கட்சி, பதவி, பணம் தான் முக்கியம் போல’ கசப்பாய் நினைத்தாள் ஷைலஜா.
“என் ஆளுங்களை விட்டு தேட ரொம்ப நேரம் ஆகாது! அதுல ஒரு சிக்கல் இருக்கு… என் பையனை எதுக்கு கொலை செஞ்சான்குற கேள்வி வரும்? அதுக்கு பதில் கிடைக்குறது அவ்ளோ நல்லது இல்ல!” என்றவர்,
“எலக்ஷன் முடியட்டும்! அவனை நானே என் கையால கொல்றேன்!” என்றார்.
எழுந்துக்கொண்டான் பூபதி.
“கேஸ் கிளோஸ் பண்ணியாச்சு! ஐ’யம் லீவிங்” என்றவன் அங்கிருந்து வெளியேற, ஷைலாவுடன் சேர்ந்து ஐ.ஜி’யும் அவனோடே வந்தார்.
“மிஸ்டர் ரகுனந்தபூபதி… ஒன் மினிட்?” அவர் நிறுத்த, நின்றான் அவன்.
“விக்கி தான்னு கன்போர்ம்மா தெரியுமா?”
“யெஸ்!”
“அப்படின்னா தெரிஞ்சதுமே அவனை அரஸ்ட் பண்ணிருக்கணும்!”
“கரெக்ட்! ஐ டிட் அ மிஸ்டேக்!” உடனே ஒப்புக்கொண்டான் அவன்.
நம்பமாட்டாமல் அவர் அவனை பார்க்க,
“கேஸ் முடிஞ்சுது! சோ, வீ நீட் சம் ஹாலிடேஸ்!” என்றான் அவரிடம்.
“வீ?” ஷைலஜாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவர் அவனிடம் கேட்க,
“யெஸ்… ‘வீ!” என்றான் அழுத்தமாய்.
இருவரையும் ஒருமாதிரி பார்த்தவர், “ஓகே… டேக் சம் ப்ரேக்! மெயில் பண்ணுங்க!” என்றுவிட்டு போக,
“வாட் இஸ் திஸ் ரகு?” என்று முகத்தை சுளித்தாள் ஷைலஜா.
“என்னது?”
“அவர்கிட்ட எதுக்கு அப்படி கேட்டீங்க? அவர் லுக்கே சரியில்ல”
“எவன் எப்படி பார்த்தா நமக்கென்ன?” என்றவன்,
“நடேசன்… நீங்க வீட்டுக்கு போய்டுங்க!” என்றான் ஐநூறு ரூபாய் தாளை அவரிடம் நீட்டி.
“ஐயோ வேண்டாம்ங்க சார்!”
“ப்ச்! புடிங்க ஆப்பீசர்!” என்றவன் அவர் கையில் திணித்துவிட்டு டிரைவர் இருக்கையில் அமர, மறுபக்கம் வந்து அமர்ந்துக்கொண்டாள் ஷைலஜா.
கார் நேரே ஷைலஜா வீட்டை நோக்கி தான் பயனித்தது.
ஷைலஜாவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை. என்னவோ நிரடிக்கொண்டே இருந்தது.
பூபதியை போல ‘கேஸ் முடிந்தது’ என தூக்கிப்போட்டு போக தோன்றவில்லை.
உண்மையில் அது முடிந்துவிட்ட நிறைவு கூட இல்லை அவளிடம்!
வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவனிடம் திரும்பினாள்.
“உங்களுக்கு நிஜமாவே இந்த கேஸ் முடிஞ்சுதுன்னு தோணுதா?”
“ம்ம்? இய்யா!” என்றான்.
“ப்ச்!” முகத்தை திருப்பிக்கொண்டாள்.
“என்ன ஷைலுமா உன் பிரச்சனை?”
“சீரியஸ்லி… ஐ டோன்ட் க்நொவ்!” என்றாள் தலையை பிடித்துக்கொண்டு.
“நீ இவ்ளோ ஸ்ட்ரெஸ் ஆகுற அளவுக்கு ஒண்ணுமே இல்லைடா! நீ கண்டதையும் நினைச்சு குழம்புறன்னு நினைக்குறேன்! ஐ க்நொவ் ஹவ் டு ரிலேக்ஸ் யுவர்செல்ப்” என்றவன் மியுசிக் சிஸ்டத்தை தட்டினான்.
“தும் சிக்குச்சக்கு தும்…
தும் சிக்குச்சக்கு தும்…
தும் சிக்குச்சக்கு தும்…
தும் சிக்குச்சா!”
ஹஸ்க்கி வாய்சில் இளையராஜா வாயிலேயே மெட்டுப்போட, இவன் உடன் சேர்ந்து கோரஸ் பாடினான்.
“இப்போ சாத்து நடை சாத்து… ஸ்ஸ்ஸ்…
குளிர்காத்து காப்பாத்து…
கைய கோர்த்து, கைய கோர்த்து…
இடம் பார்த்து கொடியேத்து!”
கிறக்கமாய் பாடிய ஆஷாபோஸ்லே கூட அவளை மயக்கவில்லை.
பாடலை அதற்குமேல் ஒலிக்கவிடாமல், படக்கென நிறுத்திவிட்டாள்.
“தெரியும் எனக்கு… இப்டி தான் செய்வ நீ!” என்று முறைத்தான் பூபதி.
“பின்ன பாட்டா இதெல்லாம்? இப்படி ஒரு மட்டமான ரசனை உங்களை தவிர யாருக்குமே இருக்காது!”
“ஓய்?” உண்மையிலேயே முறைத்தவன், அவள் அப்பார்ட்மென்ட் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு,
“உனக்கு தான் ரசனை சரியில்லை! இன்னும் சொல்லனும்ன்னா ரசனையே இல்ல!” என்றான்.
“யாருக்கு எனக்கா?”
“பின்ன எனக்கா?”
“கண்டிப்பா உங்களுக்கு தான்! பாட்டெல்லாம் கேட்டா ரசிக்குற மாதிரி இருக்கணும்! காதை மூடிக்குற மாதிரி இருக்கக்கூடாது!”
“ஆஹான்!” என ஒருமாதிரி பார்த்தவன், “ரைட்! அப்போ யாரோட ரசனை பெஸ்ட்ன்னு ஒரு போட்டி வச்சுடுவோமா?” என்றான்.
“எப்படி?”
“உன் ப்ளே லிஸ்ட் ரெடி பண்ணு! நானும் என்னுதை ரெடி பண்றேன்! போட்டி வச்சுப்போம்! யாரோடது பெஸ்ட்ன்னு!” என்று சொல்ல, சிறுபிள்ளைத்தனமாய் இருந்தது அவளுக்கு.
“ப்ச்… உளறாதீங்க ரகு!”
“ஹே… ஐயம் சீரியஸ்” என்றான் சீரியஸாய்.
அவள் காரை விட்டு இறங்க, இவனும் இறங்கி, “நாளைக்கு எவனிங் ஷார்ப் செவன்! ரெடியா இரு ப்ளேலிஸ்டோட!” என்றான்.
“நோ வே!”
“யூ ஷுட்!” என்று அழுத்தி சொன்னவன், “வெளில போறோம்! டேட்டிங்!” என்று கண்ணடிக்க,
“நான் வரேன்னு சொல்லவே இல்லையே!” என்றாள்.
“நீ வரியான்னு நானும் கேட்கலையே!” என்று சிரித்தவன், “வந்துதான் ஆகணும்!” என்று சொல்ல, முறைத்தாள் அவள்.
காருக்குள் ஏறி அமர்ந்தவன், காரை ரிவர்ஸ் எடுத்துக்கொண்டே,
“ப்ளே லிஸ்ட் ரெடி பண்ண மறக்காத! போட்டி போட்டி தான்!” என்றான்.
இவளோ சட்டென, “அதுல வின் பண்ணா என்ன கிடைக்கும்?” என்று கேட்க, “எது கேட்டாலும்!!!” என்றான் அவன்.
“என்ன கேட்டாலும் குடுப்பீங்களா?” ஏதோ எதிர்ப்பார்ப்புடன் கேட்டாள்.
சில நொடிகள் சிரித்தவன், “எப்படியும் நான் தான் வின் பண்ணப்போறேன்! வின் பண்ணதும் ‘கிஸ்’ குடுன்னு கேட்கப்போறேன்!” என்று சொல்ல, உர்ரென முறைத்தாள்.
“ஏன் அப்படி பாக்குற ஷைலு? அதெல்லாம் கேட்காமையே குடுப்பேங்குறியா?” என்று வேறு கேட்டு அவளை இன்னும் கடுப்பேற்றினான்.
“ஓகே ஷைலுமா! நாளைக்கு ரெடியா இரு… நான் வந்து பிக்அப் பண்ணிக்குறேன்!” என்றவன்,
“எல்லாத்துக்கும் ரெடியா இரு!” என்று விஷமமாய் கண்ணடித்துவிட்டு அவள் கண்ணை விட்டு மறைய, அங்கேயே அப்படியே நின்றிருந்தாள் ஷைலஜா.
error: Content is protected !!