விண்மீன் விழியழகா…
இரவு தொடங்கும் அந்த நேரம்…
அந்தி நேரம்…
Advertisement
நான் அமர்ந்திருந்த பூங்காவின் மனித சஞ்சாரங்களைத் தாண்டியும் அவன் காலடியோசை எனைநோக்கி வருவதை உள்ளம் எப்படியோ கண்டுகொண்டது.
மேலே விண்மீன்கள் எங்களைப் பார்த்து தங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசிச் சிரித்துக்கொண்டனபோலும். எனக்கும் அவன் வருகையின் நிமித்தம் உதட்டோரம் ஒரு புன்னகை வந்தது. அதைமீறி கண்களுக்குள் உவர்நீர் கொஞ்சம் கரித்துக்கொண்டிருந்தது.
Advertisement
Advertisement
எப்போதும் அவன் விழிகளே திக்குதெரியாத கடலில் நான் விழும்போதெல்லாம் எனைக்காக்கும் வடமீன் (துருவநட்சத்திரம்).
Advertisement
இதோ… அருகில் வந்துவிட்டான்… என் இதயமும் படபடக்கத்தொடங்கிவிட்டது.
என்ன பேசுவேன் அவனிடம்….?
எதற்காக பேசவேண்டும்…?
நான் பேச மாட்டேன்…!!
அவன் தானே முதலில் என்னிடம் முறைத்துக்கொண்டான்…!!!
அவன்தானே என் இதயம் நொறுக்கி இடக்கையால் வீசினான்…!!!
அவனே வரட்டும்…!!!
மன்னிப்பு கேட்காவிடில் நான் பேசவேமாட்டேன்…??
வந்தான்…
என் தோள் தொட்டான்…
“அம்மா…
பாருங்கம்மா என்னை…
இனி நான் ஒழுங்கா சாப்பிடுவேன்…!
இப்போ தட்டை வீசியதுபோல இனி எப்போதும் செய்யமாட்டேன்…!
அப்பா தான் சாட்சி…! இப்போ ஒரு ஸ்டார் தோசை கிடைக்குமா”
என்றான் வருந்திய முகத்துடன்.
அவன் பிஞ்சுக்கை வருடலுக்கும், அதற்கு அவன் அப்பா கொடுத்த குரல் மற்றும் வார்த்தைகள் என்னை சமநிலைப்படுத்த…. அவனை வாரியணைத்துக்கொண்டேன்.
நான், அவர், ஒரு வயதான மகன் மூவரும் பூங்காவிலிருந்து அவன் மூன்று சக்கரவண்டியை உருட்டியபடி வீடு சேர்ந்தோம்.
விண்மீன்கள் இப்போதும் எங்களைப்பார்த்து சிரித்துக்கொள்ள, நாங்களும் அவற்றைப் பார்த்துபுன்னகைத்தோம்.
குறிப்பு : முகப்பு படம் பார்த்து காதல் கதைன்னு நெனச்சு யாரும் ஏமாந்திருந்தால் சங்கம் பொறுப்பாகாது.
