Skip to content
Post Views: 444
இம்சை காதலி – 3
“எரும மாடு! கைய இப்படி கிள்ளிட்டு போயிட்டா! இம்சை, என்ன சொல்லிட்டேன்னு இப்படி பண்ணிட்டு போகுறா?” என்று புலம்பினான்.
Advertisement
“அண்ணா!” என்று உள்ளே வந்தாள். அவளுடன் ருத்ராவும் வந்தாள்.
Advertisement
“வா அஞ்சு! ருத்ரா! கிளம்பிட்டிங்ளா?”.
Advertisement
“ஆமா சார்” என்றாள் ருத்ரா.
Advertisement
“அஞ்சு! ஏன் ஒரு மாதிரி இருக்க டா?”.
“ஒன்னும் இல்லண்ணா”.
“சரி! சொல்ல மாட்டல்ல.. விடு. வா! உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு அப்படியே வீட்டுக்கு போறேன்”.
“அண்ணா! பக்கத்துலதான் இருக்கு. நடந்தே போயிக்கிறோம்”.
“அஞ்சு! உன் ஹாஸ்டல் எப்படி இருக்குன்னு நா பாக்கணும். அதுக்கு தான் வரேன்”.
“எங்க கூட சுஜியும் ஹேமாவும் வராங்க சார். அவங்க ஹாஸ்டல் பாக்கணும்” என்றாள் ருத்ரா.
“சரி! அவங்களையும் அழைச்சுட்டு போலாம், வாங்க!” என்று வெளியே அழைத்து வந்தான். அதே நேரம் விதுரனும் வெளியே வந்தான்.
“போலாமா அர்வி?” என்றான். அஞ்சுவும் ருத்ராவும் பேக்கை எடுக்கச் சென்றனர்.
“இல்ல ஜெய். நா அஞ்சுவோட ஹாஸ்டல் எங்க இருக்குன்னு பாக்க போறேன் டா”.
“சரி டா! நானும் கூட வரேன்”.
“ஜெய்! நீ வரியா?” என்றான் ஆச்சரியமாக.
“ஏன்? உனக்கு மட்டும்தான் அக்கறை சர்க்கரை எல்லாம் இருக்குமா? எனக்கு இருக்காதா? மூடிக்கிட்டு வா, அஞ்சு, ருத்ரா வராங்க” என்றான் மெதுவாக. அர்வி சந்தேகமாகப் பார்த்தான்.
“போலாம்” என்று பக்கத்தில் வந்தனர்.
“சுஜி! ஹேமா! நீங்க ரெண்டு பேரும் ஜெய் கார்ல ஏறிக்கோங்கமா” என்றான் அர்வி.
“ம்ம்… ஓகே” காரில் ஏறினர்.
“அண்ணா! அவரு எதுக்கு நம்மகூட வராரு?” என கேட்டபடி ஏறினாள், கூடவே ருத்ராவும் ஏறினாள்.
“அவனும் நானும் சேர்ந்து தான் டா வீட்டுக்கு போவோம். நீ வழிய சொல்லு”. விதுரன் இவர்கள் காரை பின் தொடர்ந்தான்.
“இதான் ஹாஸ்டல் சார்” என்றாள் ருத்ரா.
“ரொம்ப பக்கம் தான் போல ருத்ரா!” என்றான் விதுரன்.
“ஆமா சார்”.
“மெயின் ஏரியாவில தான் இருக்கு டா. சேஃப்டிலாம் எப்படி?” என்றான் அர்வி.
“ம்ம்.. குட்ணா. சரி நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க”.
“சரி பாப்பா. ஜெய்! போலாம் டா”
“ம்ம்… அஞ்சனா! பேச மாட்டியா?” என்றான் புருவம் உயர்த்தி.
“மாட்டேன். நா கோவம்!” என்று கையை மார்போடு கட்டியப்படி திரும்பி நின்றாள்.
“அதான் சாரி சொல்லிட்டேன்ல! அப்றம் என்ன டா?” என்று முன்னால் வந்து நின்றான். மற்றவர்கள் இவர்களை சுவாரசியமாகப் பார்த்தனர்.
“இனிமே இப்படி பேசக்கூடாது ஓகேவா?” என்றாள் முறைப்புடன்.
“ம்ம்..ம்ம்” என்று வேகமாக மண்டையை ஆட்டினான்.
“என்னைய மட்டும் இல்ல யாரையும் இப்படி பேசக்கூடாது. பேசுறப்ப யோசிச்சு பேசுங்க சரியா?”.
“சரி”.
“ஓகே. நா மன்னிச்சுட்டேன்” என்றாள் சிரிப்புடன்.
“அஞ்சு! நீ மாறவே இல்ல. அப்பல இருந்தே இப்படித்தான் இருக்கா இல்ல அர்வி!” என்றான் சிரிப்புடன்.
“ஆமா டா!” என்று சிரித்தான்.
“இவ என் வீட்டுக்கு வந்து சண்ட போட்டாலே! நியாபகம் இருக்கா டா?” என்று சிரித்தான்.
“அது மட்டுமா? நாம அடி வாங்குனமே! அத விட்டுட்டியே!” என்று சிரித்தான்.
“ஆமா டா” என்று அர்வியின் கையை அடித்தப்படி சிரித்தான்.
“அடி வாங்குனதுக்கு சந்தோஷப்படுற ரெண்டு ஆளு நீங்களாதான் இருப்பீங்க. கிளம்புற ஐடியா இல்லையா?”.
“அந்த ஐடியா இல்லபோல அஞ்சு. இதுக்குமேல வாட்ச்மேன் வேல பாக்கட்டும் விடு” என்றாள் ருத்ரா கிண்டலாக.
“உனக்கு லொல்லு தான்!” என்றான் அர்வி பொய்யான முறைப்புடன்.
“சரி டா. நாம கிளம்பலாம். பாய் கைஸ்!” என்றான் நாள்வரிடமும்.
“டேக் கேர்! பாய்!” என்று காரில் ஏறினான் அர்வி.
“பாய்!” என்றனர்.
“அஞ்சு! இவங்க ரெண்டு பேரையும் உனக்கு எப்படி தெரியும்?” என்றாள் சுஜி.
“ம்ம்… சொல்லுறேன். ஃபர்ஸ்ட் வந்து ஹாஸ்டல் பாருங்க. பிடிச்சா வந்துருங்க” என் அழைத்துச் சென்றாள்.
மறுநாள் காலையில் இருவரும் வேகமாக ஆஃபிஸ் வந்தனர்.இவர்களுக்கு எதிரே திவாகரும் சுந்தரும் வந்தனர்.
“எதுக்கு இவ்ளோ அவசரம்! மெதுவா..” என்றான் திவா.
“சார்! நகருங்க சார்! நாங்க உள்ள போகணும்” என்றனர் அவசரமாக.
“அட! இன்னும் டைம் இருக்கு” என்றான் சுந்தர்.
“அட போங்க சார்!” என்று அஞ்சு வேகமாக உள்ளே ஓடினாள். பின்னால் ருத்ராவும் வேகமாக ஓடிவந்து சிஸ்டமை ஆன் செய்து, “நா தான் ஃபர்ஸ்ட் அஞ்சு” என்று சிரித்தாள்.
“ச்ச.. எல்லாம் அந்த ரெண்டு பேரால வந்தது” என்று திவாவையும் சுந்தரையும் முறைத்தாள்.
“அட! என்னயா நடக்குது உங்க ரெண்டு பேருக்குள்ள!” என்றான் சுந்தர் குழப்பமாக.
“போங்க சார்! எங்க ரெண்டு பேருக்கும் ஒரு போட்டி. யாரு ஃபர்ஸ்ட் வந்து சிஸ்டம ஆன் பண்ணுறதுன்னு. உங்களால நா தோத்துட்டேன். எங்களுக்கு தெரியும் சார் டைம் இருக்குன்னு” என்று முறைத்தாள்.
“ஈஈஈஈஈ” என்று இழித்தனர்.
“என்ன டா! காலைலயே க்ளோஸ் அப் விளம்பரம் மாதிரி பல்ல பல்ல காட்டுறீங்க?” என்றான் விதுரன் பக்கத்தில் வந்து.
“ஹாய் அஞ்சு! ருத்ரா!” என்றான் அர்வி.
“ஹாய் அண்ணா! ஹாய்!” என்றனர்.
“என்ன டா திவா?” என்றான் மீண்டும். சுந்தர் நடந்ததை சொன்னான். “நீங்க ரெண்டுபேரும் ஓடி பிடிச்சு விளையாட இது என்ன கிரவுண்ட்டா? அஞ்சனா! உனக்கு டெஸ்ட் இருக்குல? படிக்கிறத விட்டுட்டு இது என்ன?” என்றான் முறைப்புடன்.
“இன்னும் ஆஃபீஸ் டைம் ஸ்டார்ட்டாக ரெண்டு நிமிஷம் இருக்கு. அதுவரைக்கும் பொறுங்க பாஸ். அப்ப உங்க கேள்விக்கு பதில் சொல்லுறேன்” என்று பொய்யாக இழித்தாள்.
விதுரன் சிரிப்புடன், “சரிங்க மேடம்”.
“எப்பா டேய்! காலைலயே அவ மூட கெடுக்காத. உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாம போச்சு டா! முதல்ல உள்ள போ” என்று துரத்தினான் அர்வி. “ஓகே டா. ப்ரேக்ல பாக்கலாம்” என்று அர்வியும் உள்ளே சென்றான்.
“அஞ்சு! ருத்ரா! ம்ம்… இனிமே டெய்லியும் இந்த கேம் விளையாடலாம்” என்றான் சுந்தர்.
“ஓகே!” என்றனர் சிரிப்புடன்.
சிறிது நேரத்தில் விதுரன் அவன் டீமை அழைத்தான். அனைவரும் உள்ளே சென்றனர். “ஹாய் கைஸ்! உங்க மெயிலுக்கு ஒரு லிங்க் அனுப்பிருக்கேன். பாருங்க. அதுதான் உங்க கொஸ்டீன். நீங்க அதுலயே பண்ண ஸ்டார்ட் பண்ணலாம். ஒரு மணி நேரம் டைம் நீங்க முடிச்சதும் அந்த லிங்க் விட்டு வெளில வந்துரலாம். முடிக்கலானாலும் லிங்க் க்ளோஸ் ஆயிடும். அந்த புரோகிராம சால்வ் பண்ணுங்க. அத வெச்சுதான் நீங்க எந்த லெவல்ல இருக்கீங்கன்னு நா தெரிஞ்சுக்க முடியும். இன்னும் டென் மினிட்ஸ்ல ஸ்டார்ட் ஆகிடும்”.
“ஓகே சார்” என்றனர்.
“நீங்க போலாம்” என்று அனுப்பினான்.
அவன் சொன்னது போலவே ஆரம்பமானது. ஐந்து பேரும் பண்ண ஆரம்பித்தனர்.”அஞ்சு! நா ஹெல்ப் பண்ணட்டா டி” என்றாள் ருத்ரா.
“வேணா ருத்து. நீ பண்ணுனா தெரிஞ்சு போயிடும்” என்றாள் சிஸ்டமை பார்த்தப்படி. ஐந்து பேரில் இருவர் மட்டுமே முடித்தனர். அஞ்சு முடிக்க முடியாமல் சோகத்துடன் விதுரன் அறைக் கதவை பார்த்தாள். லஞ்ச் டைம் வந்ததும் அர்வி, விதுரன், திவா, சுந்தர் வெளியே வந்தனர்.
“ஏன் டா! நேத்து ரெண்டுபேரும் எங்க டா போனீங்க? எங்க கூட சாப்பிடாம?” என்றான் அர்வி.
“நம்ம புராஜக்ட் மேனஜர் ரொம்ப பண்ணுறான் டா. அவன் குடுத்த ஒர்க் முடிக்காம சாப்பிடக்கூட விட மாட்டான்” என்றான் திவா விதுரனைப் பார்த்து கிண்டலாக.
“அதான் அவனுக்கு முன்னாடி நாங்க ஓடிப்போயி சாப்பிட்டு வந்துட்டோம்” என்றான் சுந்தர் சிரிப்புடன்.
“நா சாப்பிட விடமாட்டேனா டா?” என்று திவாவின் பின்னங்கழுத்தைப் பிடித்துத் தள்ளினான்.
“வாய் பேசுறப்ப கை நீளுது பார்த்தியா அர்வி! அதான் நம்ம பிஎம்” என்றான் கிண்டலாக.
“கை மட்டும் இல்ல டா காலும் நீளும் ” என்றான் சிரிப்புடன்.
“சரி மச்சி! இப்ப சொல்லு. ஏன் டா வரல?” என்றான் அர்வி சிரிப்புடன்.
“அது பசிச்சது டா. அதான் கொட்டிக்க போயிட்டோம்” என்றான் சுந்தர் சிரிப்புடன்.
“சரி வாங்க. சாப்பிட போலாம். இல்லனா சக்கரம் வரலன்னு பிஎம் அடிப்பாரு” என்று மீண்டும் கிண்டலடித்தான். விதுரன் பொய்யாக முறைத்தான்.
“திவா! உனக்கு நேரம் சரியால போல டா. நீங்க முன்னாடி போங்க டா. நா என் தங்கச்சிய சாப்பிட அழைச்சுட்டு வரேன்” என்று அஞ்சுவிடம் சென்றான்.
“ஏன் டா ஜெய்! இவன் தான் சிங்கிளாச்சே வீட்டுக்கு, இப்ப எங்க இருந்து டா இந்த தங்கச்சி குதிச்சா?” என்று கேட்டபடி சுந்தர் விதுரனை அழைத்துச் சென்றான்.
“அஞ்சு! ருத்து! வாங்க சாப்பிடலாம்” சிரிப்புடன்.
“ஓ… ருத்துவா! நீ நடத்து அண்ணா” கிண்டலாக. அர்வி சிரித்தான்.
“சும்மா இரு அஞ்சு. சுஜி! ஹேமா! வாங்க டி” என்றாள் ருத்ரா. நான்கு பேரும் அர்வியுடன் சேர்ந்து சென்றனர்.
அனைவரும் ஒன்றாக உட்கார்ந்தே சாப்பிட்டனர். “சுஜி! ஹேமா! ஹாஸ்டல் எப்ப வரிங்க?” என்றாள் ருத்ரா.
“அதபத்தி நானே சொல்லணும்னு நினைச்சேன் டி. இப்போதிக்கு நோ ஹாஸ்டல் டி. என் ரிலேடிவ் வீட்டுல இன்னும் கொஞ்சநாள் இருக்க சொல்லிட்டாங்க டி அப்பா” என்றாள் சுஜி வருத்தமாக.
“இட்ஸ் ஓகே டி! விடு. எப்ப வரீங்களோ வாங்க! இப்ப கீழ போலாம். என் டிஎல் என்னைய டெஸ்ட் முடிஞ்சதுல இருந்து கண்டுக்கவே இல்ல” என்று அஞ்சு எழுந்தாள்.
“டெஸ்ட் எப்படி பண்ணுன?” என்றாள் ஹேமா கூட நடந்தப்படி.
“ரொம்ப மோசம் டி. ஒன்னுதான் கரெக்ட்டா பண்ணிருக்கேன்னு நினைக்கிறேன்” சோகமாக சொல்லியபடி சிஸ்டமை ஆன் செய்தாள்.
“ஏய்! அங்க பாரு டி அஞ்சு” ருத்ரா வேகமாக. விதுரன் இவளை முறைத்தப்படி நின்றான். இவள் எழுந்து முழித்தாள். முறைத்துவிட்டு உள்ளே சென்றான்.
“உக்காரு டி. இன்னைக்கு உனக்கு கச்சேரி இருக்கும் போலயே டி!”.
“ஆமா டி” என்றாள் சோகமாக.
சிறிது நேரத்தில் விதுரனிடம் இருந்து மெயில் வந்தது. “மெயில் வந்துருச்சு. நா போயி பாக்குறேன்” என்று எழுந்தாள். சுஜி, ஹேமா, ருத்ரா முவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
மொத்த டிம் மெம்பர்ஸும் உள்ளே வந்தனர். “ம்ம்.. எல்லாரும் டெஸ்ட் எப்படி பண்ணுனீங்க? கஷ்டமா இருந்ததா?” என்றான் விதுரன் எழுந்து நின்று. அமைதியாக இருந்தனர். “சொல்லுங்க!”.
“ஆமா சார்” என்றனர்.
“ம்ம்… இது ஜஸ்ட் ட்ரையல் தான் கைஸ். சதீஷ்! நீ நல்லா பண்ணிருக்க ம்ம்… குட்!”.
“தேங்க்ஸ் சார்” என்றான் சிரிப்புடன்.
“எல்லாருமே ஓரளவுக்கு நல்லாதான் பண்ணிருக்கீங்க, நெக்ஸ்ட் டெஸ்ட்ல எல்லாரும் கரக்ட்டா பண்ணனும்! இன்னைக்கு வேற அனுப்பிருக்கேன். அத பாருங்க. எல்லாரும் போங்க. அஞ்சனா! நீ மட்டும் இரு!” என்றான் அவளை முறைத்தப்படி. மற்றவர்கள் சென்றனர்.
“நீ எப்படி பண்ணுன?” என்றான் கோபமாக.
“மோசமா பண்ணிருக்கேன்னு எனக்கு தெரியும்” என்றாள் தலைக்குனிந்தபடி.
“எத்தன சரியா பண்ணிருப்ப? சொல்லு பாக்கலாம்” என்றான் நக்கலாக.
“ஒன்” என்று பயந்தபடி ஒரு விரலை காட்டினாள்.
“கிழிச்ச.. ஒன்னுகூட இல்ல. என்னத்த படிச்ச? நானே உன் கிட்ட சொன்னேன்ல. மதியமா டெஸ்ட் வைக்கிறேன்னு. நீ வேணான்னு சொல்லவும் தான் காலைலயே வச்சேன், என்ன தோணுதோ அத பண்ணுவேன்னு சொன்னல்ல. உனக்கு தோணுன எதுவுமே யூஸ்லஸ். சுத்த மோசம்” என்று கோபத்தில் கத்தினான். அஞ்சு அவனை படப்படப்புடன் உதட்டைக் கடித்தபடி நிமிர்ந்து பார்த்தாள்.
“உதட்ட கடிக்காதன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன். ஒன்னு உதட்ட கடிக்க வேண்டியது, இல்ல நெகத்த கடிக்க வேண்டியது. சொல்லுறது எதையும் கேக்க கூடாதுன்னே இருக்கல்ல?” என்றான் எரிச்சலுடன் அவள் பக்கத்தில் வந்து.
“இல்ல சார். நா வந்து அது..” என்று பாவமாக முகத்தை வைத்தப்படி இழுத்தாள்.
“ப்ச்.. உனக்கு என்ன கஷ்டம்? ஒழுங்கா படிச்சு நெக்ஸ்ட் டெஸ்ட்ல நல்ல மார்க் வாங்குற. இல்லனா நீ ஒரு வேஸ்ட்டு. இந்த வேலைக்கே லாயிக்கு இல்லன்னு நா முடிவு பண்ணிடுவேன்” என்றான் நக்கலாக.
“ஓ… அடுத்த டெஸ்ட்ல பாருங்க. நா யாருன்னு காட்டுறேன்” என்றாள் கோபமாக.
“பாக்கலாம் பாக்கலாம்! பாக்காமலே எனக்கு தெரிஞ்சு போச்சு நீ வேஸ்ட்டுன்னு” என்றான் நக்கல் சிரிப்புடன்.
“பாருங்க!” என்று ஆத்திரமாகச் சொல்லிவிட்டு வெளியே சென்றாள். விதுரன் நக்கலாகச் சிரித்தபடி அவன் வேலையைப் பார்த்தான். ருத்ராவிடம் மட்டும் நடந்ததை மெதுவாக எரிச்சலுடன் சொல்லியபடி படித்தாள்.
மறுநாள் ருத்ராவையும் அஞ்சுவையும் அர்வி அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அரவிந்தின் வீட்டில் அவன் அம்மா வரவேற்றார்.
“அம்மா!” என்று அணைத்தாள்.
“அஞ்சு குட்டி! என்னமா வளர்ந்துட்டா டா!” என்று புவனா(அர்வி அம்மா) விலகி அவள் முகத்தில் இருந்து தோள்வரை தொட்டுப் பார்த்தார்.
“அம்மா! அப்பா எங்க?” சிரிப்புடன்.
“அவரு வேல விசயமா வெளியூர் போயிருக்காரு டா. இவ ருத்ரா தானே? இரட்டையர்கள் ஒன்னாவே வேலையா!” என்றார் கிண்டலாக.
“ஆமா ஆன்ட்டி” என்றாள் ருத்ரா சிரிப்புடன்.
“அம்மா! முதல்ல உக்கார வச்சு பேசுங்க. இவள(அஞ்சு) பார்த்தா தல காலு புரியாதே” என்றான் அர்வி சிரிப்புடன்.
“ஆமா டா. இந்த விசாவ பார்த்தியா டா! அஞ்சுவ சென்னைக்கு அனுப்புவாளாம். நம்ம வீட்டுலயே வச்சுக்குறேன்னு சொல்லுறேன் டா. கேக்க மாட்டிக்கிறா. இவ ஹாஸ்டல்ல இருந்து தான் போகணுமாம்” என்று நொடித்துக் கொண்டார்.
“அம்மா! அம்மா சொல்லுறது சரி தானே. ஆஃபிஸிக்கு ஹாஸ்டல் தான் பக்கம். நானும் ருத்ராவும் வீக்லி இங்க வரோம்” என்றாள் அஞ்சு கெஞ்சலாக.
“சரி சரி! உனக்கும் ருத்ராக்கும் பிடிச்சத தான் சமைச்சு வச்சுருக்கேன். வந்து ரெண்டு பேரும் சாப்பிடுங்க”.
“எனக்கு பிடிச்சது உங்களுக்கு எப்படி தெரியும் ஆன்ட்டி?” என்றாள் ருத்ரா ஆச்சரியமாக.
“நீயும் அஞ்சுவும் ஒன்னாவே தானே இருப்பீங்க. எத்தன வருசம் உங்க கூடவே இருந்துருக்கேன்! விசா சொல்லுவா எப்போதும்” என்றார் சிரிப்புடன்.
“என்ன வீடு மாறி வந்துட்டோமா? நிறைய ஆளுங்க புதுசா இருக்காங்க?” என்றபடி விதுரன் வந்தான். அவனுடன் ஓர் இளைஞன் வந்தான்.
“டேய்! நீங்க ரெண்டு பேரும் வரத சொல்லவே இல்ல! வாங்க டா” என்று அர்வி வரவேற்றான்.
“வாங்க பா” என்றார் புவனா. அஞ்சுவையும் ருத்ராவையும் புதியவன் ஆர்வமாகப் பார்த்தான்.
“என்ன டா! இவங்க ரெண்டு பேரும் யாருன்னு தெரியலயா?” என்றான் அர்வி கிண்டலாக புதியவனிடன்.
“தெரியல” என்றான் ஆர்வமாக அவர்களைப் பார்த்தப்படி.
“உங்க ரெண்டு பேருக்கும் கூட தெரியலையா?” என்றான் விதுரன் கிண்டலாக.
“ஏன் தெரியாம! எதிரிய யாராச்சும் மறப்பாங்களா?” என்றாள் அஞ்சு சிரிப்புடன்.
“எதிரியா?” என்றான் புதியவன் யோசனையுடன்.
புதியவன் யார்??? எதற்காக அஞ்சுவிடம் விதுரனும் அர்வியும் அடி வாங்கினர்?? இவர்களுக்குள் என்ன உறவு எப்படி பழக்கம்?? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…….
?இம்சை காதலி ?
error: Content is protected !!