Skip to content
Post Views: 470
அங்கு கையில் சூலத்துக்குப் பதிலாகக் குச்சை வைத்திருந்து காளி அவதாரத்தில் நின்றிருந்தாள் அஞ்சனா.
Advertisement
“அஞ்சு குட்டி! நீயாடா? ” என்றான் அர்வி இழித்துக் கொண்டு அடித்த இடத்தை தேய்த்தபடி.
Advertisement
Advertisement
Advertisement
“அஞ்சனா! வா வா. என்ன! மறுபடியும் சண்ட போட வந்துட்டியா?” என்று விதுரன் சமாளிக்கப் பார்த்தான்.
“இருங்க டா வரேன்” என்று எகிறி குதித்து அவர்கள் பக்கத்தில் வந்து, “நீங்க ரெண்டுபேரும் ஃப்ரெண்ட்ஸா டா?” என குச்சியால் இருவரையும் அடிக்க ஆரம்பித்தாள்.
“ஏய்! இம்சை, அடிக்காதடி. ராட்சசி! அடிச்ச இடம் எல்லாம் கோடு கோடாகுது” என்று விதுரன் கத்தினான்.
“அஞ்சு குட்டி! அண்ணா சொல்லுறத கேளு டா. அப்றம் அடி” என்று குச்சியைப் பிடித்தான் அர்வி.
“என்ன டா கேக்க சொல்லுற? நா கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. ரெண்டுபேரும் ஃப்ரெண்ட்ஸா?” என்று கோபத்தில் கத்தினாள்.
“ஆமா அஞ்சுகுட்டி! ஸ்கூல் படிக்கிறப்பைல இருந்து” அர்வி முழித்தபடி.
“அத ஏன் டா சொல்லல? ஒரு சாரி கேக்க அண்ணனுக்கும் தம்பிக்கும் துப்புல்ல, அவன்கூட உனக்கு ஃப்ரெண்ட்ஸிப் கேக்குதா!” என்று குச்சியைப் பிடிங்கி அர்வியை அடித்தாள்.
“ஏய்! என்னடி? என் ஃப்ரெண்ட்டயே அடிக்கிற!” என்று கோபமாக பக்கத்தில் வந்தான்.
“அவன மட்டும் இல்ல உன்னையும் தான் அடிப்பேன்” என்று அடித்தாள்.
“ஏய்! வலிக்குதுடி” என்று குச்சியைப் பிடிங்கி தூக்கிப்போட்டான்.
“வலிக்கட்டும். ரெண்டுபேரும் எந்த தெருவுல உருண்டு புரலுவிங்களோன்னு பயந்துகிட்டு இருந்தா ரெண்டுபேரும் சேர்ந்து என்னையே ஏமாத்துறீங்களா!” என்று அழுதாள்.
“அஞ்சுகுட்டி! அழாத டா. சும்மா விளையாண்டோம்” என்று பக்கத்தில் வந்தான் அர்வி.
“ஆமா அஞ்சுகுட்டி! சும்மா டா. இதுக்குள்ள அழலாமா? நீ அழறத இந்த ஊர்ல பார்த்தா உன்மேல இருக்க பயம் என்னாகுறது? நீ எவ்ளோ பெரிய ரவுடி! சண்டக்காரி!” என்று விதுரன் பக்கத்தில் வந்தான்.
“போங்க டா. ரெண்டுபேரும் பக்கத்துல வந்திங்க கல் எடுத்து அடிப்பேன்” என்று அழுகையுடன் குனியப் போனாள்.
“அஞ்சுகுட்டி! சாரி! சமாதானம்” என்று இருவரும் காதைப் பிடித்து தோப்புக்கரணம் போட்டனர். அழுதபடி பார்த்தாள்.
“அழாத அஞ்சுகுட்டி. அதான் தோப்புக்கரணம் போடுறோம்ல” என்றான் அர்வி. அந்தப் பக்கம் போகிறவர்கள் இவர்களை விசித்திரமாகப் பார்த்தபடி சென்றனர்.
“சொல்லுங்க. இனிமே ஏமாத்த மாட்டேன். தப்பு பண்ணுனா சாரி கேப்பேன் அஞ்சு குட்டி ம்ம்.. சொல்லுங்க டா” என்று கீழே இருந்து குச்சியை எடுத்தாள்.
“அஞ்சுகுட்டி! இதுலா உனக்கு ஓவரா தெரியலயாடி?” என்று சலிப்புடன் விதுரன் கேட்டான்.
“என்னைய ஏமாத்துறது ஓவரா தெரியல. உன் தம்பிக்கும் சாரி சொல்ல சொல்லித் தரேன்னு சேர்த்து சொல்லிகிட்டு போடு” என்று குச்சியை அவன் முன்னால் தட்டினாள்.
“ம்ம்.. என்ன டா இவ இப்படி பண்ணுறா? எப்படா விடுவா?” என்று மெதுவாக அர்வியிடம் முனங்கினான்.
“நாம ஏதாச்சும் சொன்னா நூறு போட வச்சுடுவா. வாய மூடிகிட்டு பண்ணுனா பத்தோட விட்டுருவா” என்று மெதுவாகச் சொன்னான்.
“அத முன்னாடியே சொல்லிருக்கலாம்ல? நா வாய திறந்துருக்க மாட்டேன்ல” என்றான் மெதுவாக.
“நா வாய திறக்காம இருக்குறப்பவே நீ உசாராயிருக்கணும்”.
“டேய்! அங்க என்ன குசுகுசுன்னு பேசிட்டு இருக்கீங்க? நா சொன்னத சொல்லி போடுங்கடா” என்று குச்சியை வைத்து தட்டினாள். விதுரன் அர்வியை முறைத்தான்.
“டேய்! அவ அப்றம் அழுவா, சொல்லுடா” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு அஞ்சு சொன்னதைச் சொல்ல ஆரம்பித்தான். விதுரன் முறைத்தபடி சொன்னான்.
“ம்ம்.. போதும்! ரெண்டுபேரும் இனிமே இப்படி பண்ணக் கூடாது போங்க” என்று குச்சியைக் கீழே போட்டுவிட்டு போகப் போனாள்.
“அஞ்சுகுட்டி! மன்னிச்சுடியா?” என்றான் அர்வி வேகமாக.
“டேய்! போறவள எதுக்குடா நிறுத்துற?”.
“அவ மன்னிச்சுட்டேன் சொன்னா மட்டும்தான் நமக்கு இனிமே அடி விழாது. பேசுவா இல்லன்னா இப்படி ஒருத்தன் இருக்கானுகூட கண்டுக்கவே மாட்டா டா, அஞ்சு குட்டி!”.
“ம்ம்… ம்ம்… மன்னிச்சுட்டேன். போய் ஆயின்மெண்ட் போட்டுக்கோங்க. சுடு தண்ணில குளிச்சா கால் வலிக்காது. போய் ரெஸ்ட் எடுங்க ரெண்டு பேரும்” என்று சென்றாள்.
“என்ன டா இவ இப்படி இருக்கா புரியாத புதிரா இருக்கா!” என்றான் குழப்பமாக.
“காயத்தையும் அவதான் கொடுப்பா, அதுக்கான மருந்தையும் அவளே கொடுத்துருவா. அதுதான் அஞ்சு. எப்பா! என்னா அடி! ” புலம்பியபடி சென்றான்.
(ஃப்ளாஷ்பேக் ஓவர்)
“அண்ணா! அப்ப அன்னைக்கு உடம்பு முடியாம வந்தியே? அம்மா என்னாச்சுன்னு கேட்டதுக்கு நீ ஏதோ நாயி உன்ன துரத்துச்சுன்னு சொன்ன? அப்ப அந்த நாய் இந்த நாயா?” என்றான் விஷ்வா கிண்டலாக.
“அது நடந்து அஞ்சு வருஷமாச்சு டா. அத போயி நியாபகம் வச்சுருக்க? உன் நியாபகத்துல இடி விழ! எல்லா பிரச்சனையும் உன்னாலதான்டா, வாடா அர்வி” என்று விஷ்வாவை குனிய வைத்தான். அர்வி அஞ்சு ருத்ரா மூவரும் வேகமாக வந்து அவனை அடித்தனர்.
“ஏய்! விடுங்கடா! விடுங்க டா!” என்று தள்ளிவிட்டு நிமிர்ந்தான். நான்கு பேரும் சிரித்தனர்.
“போதும் விளையாடுனது. பாவம் விஷ்வா, விட்டுடுங்க” என்றார் புவனா.
“சரி வாங்கடா, ஹால்ல உக்காரலாம்”என்று அர்வி அழைத்துச் சென்றான்.
‘ஸ்கூலுக்குப் போறப்ப அட்டு ஃபிகரா இருந்தவ இப்ப என்ன இவ்ளோ அழகா இருக்கா! இவ வளந்ததும் இப்படி இருப்பானு தெரிஞ்சுருந்தா அப்பவே கரெக்ட் பண்ணிருப்பேனே! டேய்! விச்சு, இப்பவும் ஒன்னும் ஆயிடல, கரெக்ட் பண்ணிடு’ நினைத்தபடி, “அப்றம் நீங்க ரெண்டு பேரும் எங்க ஒர்க் பண்ணுறீங்க?”.
“உனக்கு தெரியாதா? நா, அஞ்சு, அர்வி சார் உங்க அண்ணா எல்லாரும் ஒரே ஆஃபீஸ்லதான் ஒர்க் பண்ணுறோம்” ருத்ரா.
“வாட்! அண்ணா! நீ சொல்லவே இல்ல” என்றான் விதுரனை முறைத்தபடி.
“நா சொல்ல மறந்துட்டேன்”.
“ஆமா ஆமா! உங்க அண்ணா மறந்துருப்பாங்க. எங்களலாம் நியாபகம் வச்சுப்பாங்களா?” என்றாள் அஞ்சு கிண்டலாக.
“அஞ்சு! விடுவிடு. இவன் கிடக்குறான்” என்று சமாதானம் செய்தான் அர்வி.
“அஞ்சு! ருத்ரா! இங்க வாங்க” என்றார் புவனா. இருவரும் டைனிங் டேபிளுக்குச் சென்று அமர்ந்தனர்.
“அஞ்சுவும் ருத்ராவும் ரொம்ப வளர்ந்துட்டாங்கலண்ணா! ரெட்டஜட, பாவாட சட்டை போட்டுகிட்டு இருந்ததுங்க, இப்ப இப்டி அழகா ஆயிட்டாளுக!” என்றான் விஷ்வா இருவரையும் பார்த்துக் கொண்டே.
அவன் தலையில் லேசாகத் தட்டி, “ருத்ரா என் ஆளு. அஞ்சு என் தங்கச்சி. நியாபகம் வச்சுக்கோ!” என்று மிரட்டினான்.
“அண்ணா! எனக்கு ருத்ராவ பார்த்துல ஒன்னும் தோணல. அஞ்சுவ பாருங்கண்ணா. ஆனா ஊனா கையில ஒரு குச்சி வச்சு இடுப்புல, ஒரு கைய வச்சுகிட்டு மிரட்டுவா பாருங்க.. எப்பா! அப்படி இருந்தவ இப்ப இந்த ஜீன்ஸ், டாப்ல என்ன அழகா இருக்கா! உங்களால நம்ப முடியுதா? சொல்லுங்க அண்ணா. நா சொல்லுறது உண்மையா? இல்லையா? பார்த்து சொல்லுங்க” என்றான் அங்கு சிரித்து பேசிக்கொண்டு இருக்கும் அஞ்சுவைப் பார்த்தபடி.
மற்ற இருவரும் சேர்ந்து பார்த்தனர். அஞ்சு சிரிப்புடன் இவர்களைத் திரும்பிப் பார்த்து என்ன என்றபடி புருவம் உயர்த்தினாள். மூவரும் ஒன்றுமில்லை என்பது போல் தலையை ஆட்டினர். அஞ்சு சிரித்தபடி புவனாவுடன் பேச ஆரம்பித்தாள்.
“அட! ஆமாடா! என் தங்கச்சி உண்மையாவே ரொம்ப வளர்ந்துட்டா தான். ஆனா நீ அவள இப்டி லுக்கு விடாத. நீ ஜொல்லு விடுறத நிறுத்து. இல்ல நா என்ன பண்ணுவேன்னு தெரியாது. அங்க பாக்குறத நிறுத்துடா. இங்க பாரு!” என்று அர்வி மிரட்டினான்.
“அண்ணா! ரொம்ப மிரட்டாதீங்கணா. உங்க தங்கச்சிய நா எதும் பண்ண மாட்டேன்” என்றான் சிரிப்புடன்.
‘இவன் சொல்லுறது கரெக்ட்தான் அப்ப எப்படி இருந்த இவ இப்ப இப்படி ஆள அசத்துற மாதிரி அழகா இருக்கா! இந்த அஞ்சு வருஷத்துல இவளோ மாற்றமா இவகிட்ட! எப்பா! எப்படி பேசுறா பாரு! பேசிப் பேசியே மயக்கிருவா!’ என்று நினைத்தபடி பாடல் ஒன்றை ஹம்மிங் செய்தான். மற்ற இருவரும் விதுரனை திரும்பிப் பார்த்தனர்.
“டேய்! என்ன டா? ஏதோ பாட்டு பாடுற மாதிரி இருக்கு” என்று அவன் முதுகில் தட்டினான்.
“அது ஒன்னும் இல்ல அர்வி. ஒரு பாட்டு நியாபகம் வந்தது. அதுதான் ஹம்மிங் பண்ணிட்டு இருந்தேன்” என்றான் சிரிப்புடன்.
“என்ன பாட்டுணா?” வேகமாக.
“பேசும் அழகினை கேட்டு ரசித்திட.. தீடிர் இந்த லைன் தோணுச்சு. அவ்ளோதான்! அப்றம் அர்வி! திவா கிட்ட ஒரு வேல கொடுத்தேன் டா. அவன் அத முடிக்காம ஊருக்கு போயிட்டான்டா. அந்த ஒர்க்க உனக்கு அனுப்பிட்டேன் டா. நைட்டு அத நீ பண்ணிடுடா, எனக்கு வேற வேல இருக்கு. அந்த கிளையண்ட் கூட நாளைக்கு வீடியோ கால் இருக்குடா” என்று வேலை சம்மந்தமாகப் பேச ஆரம்பித்தான். இருவரும் பேச ஆரம்பித்ததும் விஷ்வா மெதுவாக எழுந்து அஞ்சு, ருத்ரா இருக்கும் இடத்திற்குச் சென்றான். அவர்கள் அரட்டை சத்தத்தில் அர்வியும் விதுரனும் திரும்பிப் பார்த்தனர்.
“அஞ்சு! ருத்ரா! நானும் இனிமே உங்க ஆஃபிஸுக்கு வரேன்” என்றான் சிரிப்புடன்.
“முதல்ல இன்டர்வியூ அட்டென்ட் பண்ணனும் டா. இது என்ன நம்ம தாத்தா ஓட ஆஃபீஸா? இப்ப ஃபிரஷ்ஷர்லாம் எடுக்குறது இல்ல. நெக்ஸ்ட் டைம் இன்டர்வியூ வைக்கிறப்ப சொல்லுறேன்” என்று எழுந்து பக்கத்தில் வந்தான் விதுரன். அவனுடன் அர்வியும் வந்து உட்கார்ந்தான்.
“இன்டர்வியூலாம் எனக்கு தேவையே இல்ல. நாளைக்கு நானும் உங்க ஆஃபீஸ்ல உங்க கூட இருப்பேன்”.
“எப்படி?” என்றனர் பெண்கள் இருவரும் ஆர்வமாக.
“அதுலா சொல்லமாட்டேன். சொன்னா சஸ்பென்ஸ் போயிடும்” சிரிப்புடன்.
“ஏய்! இவன் நமக்கு காது குத்த பாக்குறான்டி. இவனோட அண்ணா தானே அங்க பிஎம்(புராஜக்ட் மேனஜர்) இவன எடுக்க முடியாதா என்ன!” என்றாள் அலட்சியமாக.
“ஓய்! அதுனாலலா இவன நா எடுப்பனு கனவுல கூட நினைக்காத. எனக்கு ரூல்ஸ் ரூல்ஸ் தான்! அது என் தம்பியா இருந்தாலும் சரி, அவன் ஒழுங்கா அட்டென்ட் பண்ணுனா மட்டும்தான் கிடைக்கும்” என்றான் அழுத்தமாக.
“ஆமா அஞ்சு. இவன்லா ரூல்ஸ் ரொம்ப பாப்பான். இல்லன்னா நீ என் டீமுக்கு வந்துருப்ப”.
“என்ன சார்? நா உங்க டீம்ல இருக்குறதுக்கு ரொம்ப ஃபீல் பண்ணுறீங்க போல?” என்று முறைத்தாள் ருத்ரா. மற்ற மூவரும் சிரித்தனர்.
அர்வி திருதிருவென்று முழித்தப்படி, “நா எங்க அப்படி சொன்னேன் ருத்து?” அவசரமாக.
“அதான் ஆஃபிஸ்ல ரூல்ஸ் இருக்குல. சேம் காலேஜ் ஓரே டீம்ல இருக்கக் கூடாதுன்னு. அப்றம் எப்படி உங்க டீம்ல ரெண்டுபேரும் இருக்க முடியும்?” எரிச்சலுடன்.
“அட! நா விதுரன பத்தி சொன்னேன்மா. மலை இறங்கு” என்றான் கெஞ்சலாக.
“விடு ருத்து! அண்ணா பாவம். பொலச்சு போகட்ட்ம்”.
“சரி சரி! எனக்கு நேத்து ஒரு ஒர்க் கொடுத்தீங்களே அத நா பண்ணல”.
“ஏன் பண்ணல? அப்படி என்ன பண்ணுன? சின்ன வேல தானே கொடுத்தேன் உனக்கு” என்றான் முறைப்புடன்.
“எனக்கு நேத்து பண்ண மூட் இல்ல. தூக்கமா வந்துச்சு. அதனால சுஜி, ஹேமா கிட்ட பேசிட்டு இருந்தேன். நாளைக்கு ஈவ்னிங் முடிச்சு தரேன். வந்ததும் கேக்கக்கூடாது என்ன? ஓகேவா?” என்றாள் தோளைக் குளுக்கியபடி.
“அடிப்பாவி! நாளைக்கு அத வச்சு தான் எனக்கு ஒர்க்கே இருக்கு. அத நீ பண்ணாம வச்சுருக்க” என்றான் முறைப்புடன்.
“அவ்ளோ அவசரமா வேணும்னா நீங்களே பண்ணிக்கோங்க. எனக்கு நோ அப்ஜெக்சன்” அலட்சியமாக.
“அஞ்சு!!!” என்றான் எரிச்சலுடன்.
“ப்ச்.. சரி விடுணா! அவ காலைல முடிச்சுக் கொடுத்துடுவா. நேத்து அவளுக்கு உடம்பு சரியில்லண்ணா. லைட்டா ஃபீவர் இருந்தது. அதான் பண்ணல”.
“ஃபீவரா! இப்ப எப்படி இருக்க ருத்து?” அக்கறையாக.
“ம்ம்… நல்லாதான் இருக்கேன். அதனால தான் இங்க வந்தேன்”.
“சரி! முடிஞ்சா நீ பண்ணு. இல்லனா நா பண்ணிக்கிறேன்”.
“டேய்! போதும் டா. ஒர்க்க அவ கத்துக்கணும். அப்பதான் தனியா பண்ண முடியும். ருத்ரா! உனக்கு உடம்பு சரியில்லனா அங்க சிக் ரூம் இருக்கு ரெஸ்ட் எடுத்துக்கடா” விதுரன்.
“ம்ம்…”.
“அப்றம் அஞ்சு! நாளைக்கு டெஸ்ட் இருக்கு. நியபாகம் இருக்கா?” கிண்டலாக.
“அத எப்படி விதுரன் சார் மறப்பேன்? எல்லாம் நியாபகம் இருக்கு” என்று எல்லாமை அழுத்திச் சொன்னாள். விதுரன் கூர்மையாகப் பார்த்தான் சலிக்காமல் பதில் பார்வை பார்த்தாள்.
“அஞ்சு! நாம கிளம்பலாம் டி”.
“ம்ம்.. சரி”.
“அஞ்சு! ருத்ரா! நாளைக்கு எத்தன மணிக்கு ஆஃபிஸ் வருவீங்க?”என்றான் விஷ்வா.
“எதுக்கு விஷ்வா? பத்து மணிக்குள்ள வந்துருவோம்” அஞ்சு.
“சரி! நாளைக்கு அங்க மீட் பண்ணலாம்”
“நீ இன்னும் இந்த காமெடிய விடலயா?” ருத்ரா கிண்டலாக.
“நாளைக்கு வந்து காட்டுறேன். அப்ப பாருங்க இந்த விச்சு யாருன்னு தெரியும்” கலரை தூக்கிவிட்டான்.
“பாக்கலாம்! பாக்கலாம்! அம்மா! நாங்க கிளம்புறோம்” அஞ்சு.
“சரிடா. அடுத்த வாரம் வரணும். நா காத்துக்கிட்டு இருப்பேன்” பாசமாக.
“இல்லமா. அடுத்த வாரம் நாங்க ஊருக்கு போறோம்” ருத்ரா.
“சரி டா. விதுரன்! விஷ்வா! நீங்க இருங்க. அர்வி விட்டுட்டு உடனே வந்துருவான்”.
“இல்லம்மா. நாங்களும் அப்படியே கிளம்புறோம்” விதுரன்.
“சரி” என்று அனைவரையும் வழி அனுப்பினார்.
மறுநாள் காலையில் அஞ்சு, ருத்ரா ஆஃபிஸ் உள்ளே நுழையும்போதே விஷ்வா இருவரையும் வரவேற்றான். இருவரும் ஆச்சரியமாக அவனைப் பார்த்தனர்.
“என்ன! நா சொன்ன மாதிரியே வந்துட்டனா?” என்றான் கிண்டலாக.
“நீ எப்படி இங்க?” என்றனர் ஆச்சரியமாக.
“அதான் சொன்னேன்ல?” சிரித்தேன்.
“அஞ்சு! ருத்ரா! இன்னைக்கு கேம் இல்லையா?” என்றபடி வந்தனர் திவாவும் சுந்தரும்.
“இவன பார்த்தனால இன்னைக்கு இல்ல சார்” என்றனர்.
“ஹாய் சுந்தர் அண்ணா! திவா அண்ணா!”.
“விஷ்வா! நீ என்ன டா பண்ணுற இங்க?” என்றனர்.
“நா இன்னைல இருந்து இங்க ஒர்க் பண்ண போறேன்ணா. இந்தாங்க ஜாயினிங் லெட்டர்” என்று நீட்டினான்.
“நீ இங்க ஜாயின் பண்ணிட்டியா?” என்று விதுரன் லெட்டரை வாங்கிப் பார்த்தான்.
“ஆமா அண்ணா. எப்படி?” என்றான் புருவம் உயர்த்தி.
“என்ன விதுரா! உனக்கே தெரியாதா?” திவா.
“இன்டர்வியூ கூட அட்டென்ட் பண்ணாம உனக்கு ஜாப் கிடைச்சிச்சா! ம்ம்… என்ஜாய்!” என்றான் அர்வி கிண்டலாக.
“ஆமா ஆமா! சரி, என்னைய அஞ்சு டீம்ல போட்டுடுங்க. அவ எனக்கு சொல்லிக் கொடுத்துருவா”.
“உன்ன என் டீம்லல வச்சுக்க முடியாது. எந்த டீம்னு சொல்லுறோம். போ! போயி உக்காரு. நீங்க ரெண்டு பேரும்(அஞ்சு, ருத்ரா) என்ன வேடிக்க பார்த்துட்டு நிக்கிறீங்க? போங்க! போய் வேலைய பாருங்க” என்றான் விதுரன் எரிச்சலுடன். இருவரும் எதுவும் சொல்லாமல் சென்றனர். விஷ்வா பின்னாலயே போகப் போனான்.
“நீ எங்க அங்க போற? இன்னும் உனக்கு டீம் சொல்லல. வெளிய போய் உக்காரு” என்று அவன் சட்டையைப் பிடித்து இழுத்து வெளிப் பக்கம் திரும்பினான்.
“விதுரா! விடு டா, சுந்தர் டீம்ல அவன சேர்த்துரலாம். சுந்தர் உனக்கு ஓகேவா டா?” என்றான் அர்வி.
“ஓகே டா. அவன் என் டீம்ல இருக்கட்டும். நீ உள்ளே போய் உக்காரு விஷ்வா. நா கூப்பிடுறப்ப என் ரூமுக்கு வா”.
“சரி சுந்தர் அண்ணா. நா அந்தப்பக்கம் என் ஃப்ரெண்ட்ஸ்கூட உக்காருறேன்” என்று பதிலை எதிர் பார்க்காமல் அஞ்சு, ருத்ரா பக்கம் சென்றான்.
“விச்சு! உன்ன கொல்லப்போறேன் அஞ்சுவ டிஸ்டர்ப் பண்ணுனனா” என்றான் எரிச்சலுடன்.
“சரி விடு விதுரா! அவன நா பார்த்துக்குறேன்” சுந்தர் சமாதானமாக.
‘இவன..’ என்று நினைத்தபடி “அஞ்சு! நம்ம டீம்கு அரைமணி நேரத்துல டெஸ்ட் இருக்கு. எல்லார்கிட்டயும் சொல்லிடு. விஷ்வா! இது ஆஃபிஸ். உன் ஃப்ரெண்ட்ஸிப்ப வெளிய வச்சுக்க. அஞ்சுவையும் ருத்ராவையும் தொல்ல பண்ணாத. அஞ்சு! டெஸ்ட்” என்று சிந்தளில் முடித்தான்.
“எல்லாம் நியாபகம் இருக்கு”.
“பாக்கலாம் பாக்கலாம்” நக்கலாக.
“பாருங்க” என்றாள் எரிச்சலுடன். விதுரன் நக்கலாகச் சிரித்தபடி ரூமிற்குச் செல்லப் போனான்.
“என்ன டா! இவன் இப்படி பண்ணுறான்?” என்றான் திவா சிரிப்புடன்.
“அது ஒரு மேட்டர் டா” என்று அர்வி ஆரம்பிக்கும் போதே,
“டேய்! மூணுபேரும் காலைலயே வெட்டி கதையா? போங்க டா! போயி வேலைய பாருங்க. நா கேட்டத அனுப்புங்கடா” என்று திட்டிவிட்டு ரூமிற்குச் சென்றான். மூவரும் வேகமாக அவர்கள் அறைக்குச் சென்றனர்.
விஷ்வா எப்படி ஆஃபிஸ் வந்தான்?? விதுரன் எதற்காக கோபப்படுகிறான்?? அஞ்சு சொன்னபடி ஜெயிப்பாளா?? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…. ..
? இம்சை தொடரும் ?
error: Content is protected !!