Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்த பூந்தோரணம்

Aanandha Poonthoranam 58 2

இருவருமே அமைதியாய் இருக்க, ஈசனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பின்  “சார்…”என்று வெங்காடசலத்தை அழைக்க, அவளைப் பார்த்தவர்,

“இதை நான் கூட யோசிக்கலம்மா.. உங்களைப் பார்க்கிறப்போ என்னோட நல்ல ஸ்டூடன்ஸ் அப்படின்னு மட்டுமில்லாம நானும் ஒரு நல்ல வாத்தியாரா இருந்திருக்கேன்னு உணர்றேன்.. படிப்பையும் தாண்டி குணம் பேசும்.. நல்ல சிந்தனைகள் பேசும்.. அப்படியான நல்ல சிந்தனைகளை கண்டிப்பா நம்ம ஸ்டூடன்ஸ் கிட்ட கொண்டு போய் சேர்க்கணும்.” என்றவர் மறைமுகமாகவே லட்சுமி சொன்னதற்கு சம்மதத்தை சொல்ல,

அடுத்து வந்த அரைமணி நேரமும், கலந்துரையாடல் மட்டும் தான் இருந்தது. வழக்கமான பள்ளிக்கூடமாக இல்லாமல், நம் பள்ளியில் வருங்கால சந்ததிக்கு முக்கியமானதாக என்னவெல்லாம் செய்யலாம் என்று மூவரும் கலந்து பேச, இப்போது ஈசன் அவனது யோசனையை கூறினான்.

“சார்.. நீங்க அடிக்கடி சொல்வீங்க ஒரு பொருளை உருவாக்கும் போது தான் அதோட மதிப்பு தெரியும்னு.. நீங்களே பார்த்திருப்பீங்க நம்ம ஊர்ல விவசாய நிலமா இருந்ததெல்லாம் இப்போ பில்டிங்கா மாறிடுச்சு.. அதேபோல மக்களுக்கு, சமுக பொறுப்பு என்னங்கிறதே யாரும் நினைக்கிறதில்லை. சோ.. நம்ம ஸ்டூடண்ட்ஸ் மார்க்குக்காக படிக்காம அவங்க வாழ்க்கைக்காக படிக்கணும்..



Advertisement

வாரத்துல மூணு நாள் அவங்களுக்கு கண்டிப்பா ஒரு ரெண்டு மணி நேரமாவது விவசாயத்தை, அரசியல் அமைப்பு, சமுக கோட்பாடுகள் பற்றின விழிப்புணர்வு இதெல்லாம் பிராக்டிக்கல் கிளாஸா இருந்தா இன்னும் பெட்டரா இருக்கும்…” என, ஈசன் கூறியதும் வெங்காடசலத்திற்கு சரியென்றே பட்டது..

“என்ன சொல்றதுன்னே தெரியலை.. மனசு நிறைஞ்சு போயிருக்கு.. லார்கிட்ட பேசி அடுத்து ஆகவேண்டியதைப் பாப்போம்…..”என்றார்.

“கண்டிப்பா சார்.. என்னோட லாயரையே கூட பாப்போம். டைம் கேட்டு சொல்றேன்.. அப்போ மீட் பண்ணிக்கலாம்.. இன்னும் ரெண்டு நாள்ல அமௌன்ட் கைக்கு வந்திடும்.. அடுத்த வேலைகளை அப்போ ஆரம்பிக்கலாம்..”

Advertisement

“சரிப்பா.. ரொம்ப நல்லது..” என்றவரிடம், இருவரும் சொல்லிக்கொண்டு கிளம்பினர்..

Advertisement

நல்ல சிந்தனைகளும், நல்ல செயல்களும் இருக்குமாயின் நடப்பவையும் நல்லவையாகவே இருக்கும்.. அதுபோலவே ஈசனுக்கும் லட்சுமிக்கும். இதுநாள் வரைக்கும் அவர்கள் வாழ்வில் இருந்த பிரச்சனைகளே பெரிதாய் தெரிய, இப்போது அதெல்லாம் இல்லையென்றான பின், சில பல தெளிவான நல் சிந்தனைகள் அவர்களுக்குத் தோன்றலாயின..

ஈசனும் லட்சுமியும் கிளம்ப, நேராக வீட்டிற்கு போவோம் என்று நினைத்தவளை, ஈசன் அவர்களின் தோப்பிற்கு அழைத்துக்கொண்டுச் சென்றான்

“என்ன மாமா இங்க??” என்றபடி இறங்க, “ஹ்ம்ம் மேடம் கிட்ட கொஞ்சம் பேசணும்னு அதான்….” என்றபோதே காவல்க்காரர் அங்கே வந்ததிட, அவரிடம் கொஞ்சம் பேசிவிட்டு இருவரும் நடக்கலாயினர்.

Advertisement

“எப்படி லஷ்மி??? நிஜமா நான் எதிர்பார்க்கவேயில்ல..” என்றவனை புரியாமல் பார்த்தாள்.

“பார்த்தியா.. பேசுறதெல்லாம் பேசிட்டு புரியாத மாதிரி பாக்குற…”

“அட நிஜமாதான் மாமா..”

“ஹ்ம்ம்.. வெங்காடசலம் சார் கிட்ட சொன்னியே ஃப்ரீ எஜுகேசன் ப்ரோவைட் பண்ணனும்னு.. சூப்பர் ஐடியா.. எப்போ லஷ்மி எனக்குத் தெரியாம இப்படி யோசிச்ச…”

“அட.. நீங்களும் தான் லாஸ்ட்ல அக்ரி அண்ட் அரசியல் இதெல்லாம் சொன்னீங்க.. அதுவும் சூப்பரான ஐடியாதான் தெரியுமா…”

“அத விடு, உனக்கெப்படி இது தோணிச்சு..” என்றான், தனக்கு தோன்றாத ஒன்றை அவள் நினைத்திருக்கிறாளே என்று..

“அதுவா.. காலையில அத்தையும் மாமாவும் ஸ்கூல் பத்தி பேசிட்டிருந்தாங்க மாமா.. அப்போ பணதுக்காகன்னு செய்யாம இதை நிஜமாவே படிப்புக்காகன்னு செய்யணும் அப்படின்னு மாமா சொன்னாங்க,..

அப்போதான் எனக்கு தோணிச்சு.. என்னையவே எடுத்துக்கோங்க மாமா யூஜி படிக்கிற வரைக்கும் சும்மா ஒரு டிகிரி இருந்தா போதும் அப்படின்னுதான் படிச்சேன்.. எனக்கு எல்லா வசதியும் இருந்தது. ஆனா அதுக்கூட எனக்கு உணர முடியலை.. எல்லாமே இருந்தும் எதுவுமே இல்லைன்னு நானா நினைச்சிட்டு இருந்தேன்..

ஆனா அதே படிப்பு வசதியிலைங்கிற ஒரே காரணத்துக்காக எத்தனையோ பேருக்கு மறுக்கப்படுது இல்லையா.. அப்போ தோணிச்சு மாமா. கொஞ்சம் நல்லதும் செய்யணும்னு..” என்று லட்சுமி சொல்லி நிறுத்த ஈசனுக்கு மனதிற்குள் அத்தனை பெருமையாய் இருக்க,

வழக்கமாய் அவன் நினைக்கும் ‘என்ன பொண்ணுடா இவ…’ என்ற எண்ணம் அவனது அனுமதியில்லாமலே அவன் மனதில் தோன்ற, சட்டென்று மாறிப்போன ஈசனின் பார்வையை கண்டவள்,  “உங்கக்கிட்ட ரொம்ப நாள் கேட்கனும்னு நினைச்சேன். அதென்னா அடிக்கடி இப்படி பாக்குறீங்க…” என்றாள்..

லட்சுமி அப்படிக்கேட்டதும் சிரிப்பு வந்திட, அவன் மனதிற்குள்ளோ ‘என்னைய எத்தன நாள் சுத்தல்ல விட்டிருப்ப…’ என்று நினைத்தவன், “சொல்ல முடியாது ..” என்றான் மிடுக்காய்..

“ஓ.. சொல்லாம வேற இருப்பீங்களா??” என்று லட்சுமி முறைக்க,

“ஆமா.. என்னை எத்தன நாள் என்ன நினைக்கிற என்ன நினைக்கிறன்னு கேட்க விட்டிருப்ப.. இப்போ என் டர்ன்.. அனுபவி டி பொண்டாட்டி…” என்றான் உல்லாசமாய்..

“அடடா.. டர்ன் போட்டு வேற பெர்ஃபார்மான்ஸ் செய்வீங்களா.. நடக்கட்டும் நடக்கட்டும். ஆனா எனக்குத் தெரியாம போகாது.” என்று மிரட்டியவள், “நான் சொன்னதுல எதுவும் தப்பில்லையே மாமா??” என்றாள்.

“ம்ம்ஹும்.. தப்பேயில்ல.. ஆனா அதுக்கு சாரும் சரின்னு சொன்னது தான் ஆச்சர்யம்..” என்றவன், “ஒருவேளை அவர் முடியாதுன்னு சொல்லிருந்தா நீ என்ன பண்ணிருப்ப??” என்றான்..

“ரொம்ப சிம்பிள்.. அந்த ஸ்டூடன்ஸ் ஓட படிப்பு செலவ நம்ம ஏத்துக்கிறோம்னு சொல்லிருப்பேன்.. நமக்கு வர்ற ஷேர்ல அவர் எடுத்துக்கட்டும்.  நமக்கு என்ன இல்ல மாமா.. இந்த ஸ்கூல் அப்படிங்கிறது புதுசா வர்றதுதானே..  ஓரளவுக்கு மேல வசதி வந்துட்டா, நமக்கு நமக்குன்னு சேர்க்காம கொஞ்சம் நல்லதும் செய்வோமே..” என்று அவள் இழுத்து சொல்ல,

“ம்ம் லஷ்மி ரொம்ப ரொம்ப புதுசா யோசிக்க ஆரம்பிச்சிட்டா….” என்று அவனும் சொல்ல,

“பின்ன யாரோட பொண்டாட்டி..” என்று அவளும் பெருமையாய் சொல்ல, அந்த கணம் ஈசனுக்கும் ‘நான் லஷ்மியின் கணவன்..’ என்று பெருமையாய் சொல்லிக்கொள்ளும் ஆசை முளைத்தது..

அப்படியே கொஞ்ச நேரம் பேசியபடி, தோப்பை ஒருமுறை சுற்றி நடந்து வர,  லட்சுமியின் அலைபேசி சத்தம் எழுப்ப, “கடை நம்பர்..” என்று சொல்லியபடி எடுத்து பேசினாள்.

“ம்ம் சரி.. வந்திடுறோம்..” என்று பேசி முடித்துவிட்டு, ஈசனைப் பார்த்தவள்,

“அனிதா வந்திருக்காலம்.. உங்களைப் பார்க்கணும் சொல்றாளாம் மாமா..” என்றாள் என்னவோ போல்..

“அவ எதுக்கு பார்க்கணும்..??” என்று ஈசனும் யோசிக்க, “என்னவோ போய் பார்ப்போமே மாமா…” என,

“ஹ்ம்ம் சரி.. முதல்ல நான் போறேன் லஷ்மி.. கொஞ்ச நேரம் கழிச்சு நீ வா.. அவ என்ன எண்ணத்தோட வந்திருக்கான்னு தெரியலை..” என்று அவன் சொல்ல வருவது புரிந்தது போல் அவளும் சரியென்று சொல்ல, இருவரும் கிளம்பினர்.

அங்கே அனிதாவோ சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும் அலுவலக அறையில் காத்திருந்தாள். என்னை அத்தனை அலட்சியமாய் போனால் போ என்றானே என்று இப்போதும் ஈசன் மீது கோவம். அவள்தான் ஆரம்பித்தாள் என்பதை மறந்து, அதெப்படி உன்னால் சிறிதும்  குற்றவுணர்வே இல்லாது வாழ முடிகிறது என்று ஈசனிடம் கேட்க வேறு எண்ணினாள். ஆனால் அப்படி எடுத்ததுமே கேட்டிட முடியாதே.. ஆகையால் வேறு விசயமாய் பேச வந்திருப்பது போல். வந்திருந்தாள்.

சொன்னது போலவே லட்சுமியை வீட்டில் இறக்கிவிட்டவன், “அய்யாக்கிட்ட சொல்லி நம்ம லாயர் கிட்ட பேச சொல்லு லஷ்மி.. அப்புறம் நீ கொஞ்ச நேரத்துல வந்திடு” என்றவன் கிளம்ப,

“கோவமா எதுவும் பேசிடாதீங்க மாமா..” என்றவளைப் பார்த்து,  “நான் கோவமா பேசுறதுக்கு அவ யாரு.. நம்ம இடத்துக்கு வந்திருக்கா.. அந்த மரியாதை மட்டும் தான் அவளுக்கு…” என,

ஈசன் பேச்சைக் கவனித்தவள், “மாமா அப்போவே கேட்கனும்னு நினைச்சேன். சார் கிட்ட ஏன்னைய அவங்க இவங்கன்னு சொன்னீங்க..??” என்று ஆச்சர்யமாய் கேட்டாள்.

“ஹா ஹா கவனிச்சியா.. ஒரு ஸ்டேஜ்க்கு மேல நம்மாலே நம்ம மரியாதையை கூட்டிக்கணும் லஷ்மி.. அதான்..” என்றவன் அவள் தோளைத் தட்டி உள்ளே போ என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!