Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 6.3

காரில் சென்று கொண்டிருந்த உதய், ஜெயனை பார்த்து பேச அனுமதி கொடுக்க, “நீங்க சொன்ன மாதிரி ஈஸ்வரன்(உதய்யின் மாமா) சார், நாவலவன் சாரும் கால்ல பெருசா பேசிக்கிட்டது இல்ல சார். ஆனா அவங்க PA வோட மொபைல்ல இருந்து அடிக்கடி கால்ஸ் போயிருக்கு. அதே மாதிரி நாவலவன், ஜெயச்சந்திரன் ரெண்டு பெரும் அடிக்கடி காண்டாக்ட்ல இருந்துருக்காங்க”

வழக்கம் போல் வெளியில் பார்வை பதித்து இருந்தவன், “எல்லாமே மாமா வேலை தான ஜெயன்?”

“இப்ப வரைக்கும் அப்டி தான் சார் தெரியிது ஆனா நம்மகிட்ட ஸ்டராங்கா எந்த ப்ரூபும் இல்ல. சக்தியாலயும் இப்ப வரைக்கும் எந்த டீடைல்ஸையும் கலெக்ட் பண்ண முடியல”

“முடியல, தெரியல தவற வேற ஏதாச்சும் சொல்லுங்க ஜெயன். இவங்கள விட்டு வக்கிர ஒவ்வொரு செகண்டும் பிசினஸ்கு தா லாஸ் ஆகும்” அழுத்தமாக வந்தது அவன் குரல்.



Advertisement

“இல்ல சார் சீக்கிரமா ஏதாச்சும் ட்ரை பண்றேன்”

“என்னமோ… மீட்டிங்கு எல்லாரும் வர்றாங்க தான?”

“எஸ் சார். எவரித்திங் ஐஸ் செட்” தலையை அசைத்தவன், “மாமா மேல ஒரு கண்ணு வைங்க மீட்டிங் அப்ப”

Advertisement

“ஓகே சார்” அவர்கள் பேசி முடிக்க அவலுவலகம் வர சரியாக இருந்தது, “நீங்க இன்னொரு தடவ நான் சொன்ன பைல்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கான்னு செக் பண்ணுங்க. நான் ப்ரோடக்ஷன் டீம் ஹெட்ட பாத்துட்டு டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன். தம்பிகளுக்கு ஒருக்க கால் பன்னிருங்க” என்று அவன் பயணத்தை தொடர்ந்தான்.

Advertisement

சரியாக பாத்து நிமிடங்களில் கேபினில் நுழைந்தவன் கண்ணில் பட்டது பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த யாழினி மற்றும் ஜெயன் தான். அமைதியாக அவன் இருக்கையில் அமர்ந்தவன் அவன் முன் அடுக்க பட்டிருந்த அனைத்து பைலையும் பார்த்து கொண்டிருக்கையில் அவனுடைய கைபேசிக்கு ஹரியிடம் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது அவர்கள் அவன் அறைக்கு வெளியில் நிற்பதாக, ‘ஆமா அப்புடியே ரோஷத்துல வெளஞ்சவங்க உள்ள வர மாட்டாங்களாம்’

“ஜெயன் இந்த பைல்ஸ் எல்லாம் வெளிய நிக்கிறவனுங்கட்ட குடுங்க பக்கத்து ரூம்ல ஒக்கார சொல்லி” என்று சில முக்கியமான பாத்திரங்களை கொடுத்தவன் ஜெயன் சென்ற பிறகு யாழினியை பார்த்து, “எல்லாம் கரெக்டா இருக்கா?”

“பக்கா சார். இத மட்டும் ஒருக்க செக் பண்ணிட்டா ஒர்க் ஓவர்” என்று படபடப்பாக அவனை நிமிர்த்து பார்க்காமல் பேசியவள் தன் ஒரு கற்றை முடியை செவிகளுக்கு பின்னால் சொருகி மேலும் தொடர்ந்தாள், “நேத்து நைட் முழுக்க இத தான் சார் பாத்துட்டு இருந்தேன், எங்க அம்மாவே என்ன ஆச்சிரியமா பாத்திங்கனா பாத்துக்கோங்க… நான் என்னோட வேலை எல்லாம் விட்டுட்டு உங்களுக்காக வேலை பாத்தேன். ஏன் நேத்து கார்ட்ஸ் கூட விளையாட்டுல. ஆமா உங்களுக்கு UNO கார்ட்ஸ் விளையாட தெரியுமா?” சம்மந்தம் இல்லாத நேரத்தில் சம்மந்தம் இல்லாத கேள்விகளை கேட்பதில் கைதேர்ந்த பெண்.

Advertisement

“தெரியும்” என்று மேலும் அவள் கைகளையே பார்த்து கொண்டிருந்தான் உதய்.

“சாப்டாம ஏன் ஆபீஸ் வந்திங்க யாழினி?” என்றான் அவளின் நடுங்கும் கைகள் மற்றும் விரக்தியாய் அலையும் கண்களை பார்த்து.

“அது வந்து சார் அம்மா இன்னைக்கு வெளிய காலைல வெள்ளன போய்ட்டாங்க. சாப்பாடு சமக்கல” என்று பாதி அவனை பார்த்து பாதி அவன் கண்களை பார்க்காமல் கூறினாள்.

உண்மையில் அவள் தாய் வெளியே சென்றது உண்மை தான் ஆனால் அவர் யாழினியை கடையில் வாங்கி சாப்பிட கூறினார் ஆனால் பேருந்திற்கு மட்டுமே பணம் இருக்க உணவை புறக்கணித்தாள், “ஏன் சார் உங்க ஆபீஸ்ல சாலரில அட்வான்ஸ் மாதிரி எதுவும் தர மாட்டிங்களா?” எதை கேட்க கூடாது என்று இருந்தாலோ அதையே கேட்டும் விட்டாள்.

தவிர்க்க முடியாத நிலை, நாளை காலை வரை மட்டுமே பேருந்திற்கும் பணம் இருக்கின்றது, திரும்ப வீட்டிற்கு நடந்தே செல்ல வேண்டும்.

வெட்கத்தால் குனிந்த அவள் தலையையே பார்த்தவன், “தோசை சாப்பிடுவீங்களா?”

புரிந்தது அவளுக்கு அவன் தன்னுடைய நிலையை புரிந்து கொண்டான் என்று. கண்கள் கலங்கிய போதிலும் தலையை தூக்காமல், “சார் நான் காலைல சாப்பாடு எல்லாம் சாப்பிடுறது இல்ல. டயட்ல இருக்கேன்” அசராமல் பொய் கூறினாள்.

கண்கள் சுருக்கி அவளை முறைத்தவன் ஜெயனிற்கு அழைத்து, “ஒரு தோசை, ஒரு காபி. பைவ் மினிட்ஸ்ல வரணும்” என்று அழைப்பை துண்டித்தான்.

“இல்ல சார் வேணாம்” மிகவும் மெலிதாக வந்தது அவள் குரல்.

“பேசவே தெம்பு இல்ல நீங்க எப்டி அப்றம் வேலை பாப்பிங்க?”

“சரி அப்ப காபி வேணாம் எனக்கு டீ தா புடிக்கும். தோசை ஓகே கூட ஒரு உளுந்த வடை” பல்லை காட்டி சிரித்தவளை ரசித்தவன் அவள் கூறியதையே ஜெயனிடம் கூற ஐந்து நிமிடங்களில் வந்தது சுட சுட அவள் காலை உணவு.

“சார் இத சம்பளத்துல இருந்து களிப்பிங்களா?”

“இல்ல தைரியமா சாப்புடுங்க யாழினி” அடக்கப்பட்ட புன்னகையுடன் பதில் கூறினான்.

பசியில் வேகமாக எழுந்தவள் வெளியே செல்ல போக அவளை தடுத்தவன் அங்கேயே அமர்ந்து சாப்பிட கூற, “நீங்க வேணும்னா உளுந்த வடைய சாப்புடுறீங்களா?” என்று அதை அவனிடம் நீட்ட, “எனக்கு வேணாம். நா சாப்பிட்டேன்” என்றான்.

“சார் சும்மா கொஞ்சம் எடுத்துக்கோங்க அப்றம் உங்கள பாக்க வச்சு சாப்டதுக்கு எனக்கு வயிறு வலி வந்துரும்”

‘இதெல்லாம் இன்னும் நம்பிட்டு இருக்காளா?’ என்று அமைதியாக சிரித்தவன், “வலிச்சா வலிக்கட்டும். சாப்ட்டு வேகமா வேலைய பாருங்க இன்னும் ஹாப் அன் ஹௌர்ல மீட்டிங் ஆரமிச்சிடும். அப்றம் உங்களுக்கு சாளரி வர வரைக்கும் ஆபீஸ் வண்டில வந்துருங்க அரேஞ் பண்ண சொல்றேன்” என்று தன்னுடைய வேளையில் மூழ்கிட அவளால் தான் ஒன்றுமே பேச முடியவில்லை.

எவ்வாறு என்னுடைய பசியையும் வறுமையையும் புரிந்து கொள்ள முடிந்தது இவனால்?

‘ஒரு வேளை நாம தான் வாய விட்டு ஒளறிட்டோமோ? சாளரி கேட்டப்ப காசு இல்லனு தெரிஞ்சிருக்கும் ஆனா பஸ்சுக்கு கூட காசு இல்லனு எப்டி தெரிஞ்சிருக்கும்? பசிச்ச நா என்ன ஒளர எதுவும் செஞ்சேனா? இல்லையே எப்டி இவன் கண்டு புடிச்சான்?’ பலவாறு சந்தேங்களுடன் உணவை முடித்தவள் மறக்காமல் நன்றியை தெரிவித்து வேலையை தொடர்ந்தாள்.

அந்த நேரம் கதவை தட்டி உள்ளே வந்த ஜெயன், “சார் எல்லாரும் காண்பரென்ஸ் ரூம்ல வெயிட் பன்றாங்க”

தன்னுடைய இருக்கையில் அமர்ந்து சோம்பல் முறித்தவன், “எல்லா பைல்ஸ்யும் எடுத்துட்டு போங்க ஜெயன். ரொம்ப நாள் ஆச்சு நல்ல கேம் விளையாண்டு” அவன் இருக்கையில் இருந்து எழுந்து மீட்டிங் நடக்கும் அறையை நோக்கி நடந்தான்.

எப்டி இருக்கு?

இனி தா சம்பவங்கள் ஆரமிக்க போகின்றது.
புடிச்சா ஷேர் பண்ணுங்க அண்ட் கமெண்ட் பண்ணுங்க.
பை டேக் கேர் எல்லாரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!