Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 7.1

“என்னடா இந்த ப்ராஜெக்ட் இன்னும் சைன் ஆகாம இருக்கு?” தன்னிடம் கொடுத்த பைலை பார்த்துக்கொண்டிருந்த ஹரி விஷ்ணுவிடம் வினவ அவனோ மும்முரமாக கைபேசியை விளையாடிக் கொண்டிருந்தான், “டேய் கொஞ்ச நேரம் கம்முனு இருடா” என்று மீண்டும் விளையாட சென்றவனின் கைபேசியை வாங்கி ஓரமாக வைத்தான் ஹரி.

கோவத்தில், “எரும மாடே குடுடா அத” விஷ்ணு கேட்க, “அத விடு இத மொத பாரு” என்று அவன் பார்த்து கொண்டிருந்த பைலை விஷ்ணுவிடம் திணிக்க அதை பார்த்தவனின் நெற்றி சுருக்கத்தில் அவனுக்கும் அது புரிய வில்லை என்பது தெரிந்தது.

அது ஒரு மிக பெரிய ப்ராஜெக்ட். ஜவுளி துறையில் வெற்றியடைய உதய் இத்தனை நாட்களாக காத்து கொண்டிருந்த திட்டம். வாகனங்களின் உதிரி பாகங்களை தயாரிப்பதில் முதல் இடத்தில் இருக்கும் அவனது கம்பெனியை ஒவ்வொரு துறையாக மேம்படுத்தி கொண்டிருந்தான் உதய். அதில் சற்று பின் தங்கி இருப்பது ஜவுளி துறை மட்டுமே. அதற்காக அவன் கடந்த ஒரு வருடமாக உழைக்கும் ப்ராஜெக்ட் தான் இது. மேலை நாடுகளுக்கு ஜவுளி எற்றுமதி செய்யும் திட்டம். இதை அவன் கை பற்றுவதற்கு தடையாகவே நடக்கும் சதி திட்டம் இது.

“இது கெடச்சிரும்னு ரொம்ப நம்புனாண்டா அண்ணே. அதுக்காக நாம எம்ப்லாயீஸ்கு பார்ட்டிலாம் வச்சானேடா. இன்னும் இந்த டீல்ல சைன் பண்ணாமையா இருக்கு?”



Advertisement

விஷ்ணு ஆச்சிரியமாக கேட்க, “அது தான்டா எனக்கும் ஆச்சிரியமா இருக்கு. எதையும் இப்டி லேட் ஆகுறவன் இல்லையே அண்ணா. வா ஜெயன்ட்ட கேப்போம்” என்று வெளியே சென்றவர்களை இடை மறித்தது ஒரு குரல்.

“மாப்பிள்ளை?” அமர்த்தலாக வந்தது அந்த குரல்.

மாப்பிள்ளை என்னும் அழைப்பிலேயே பாதி யூகித்த விஷ்ணு முக மலர்ச்சியோடு குரல் வந்த திசை நோக்க அங்க நின்றார் ஈஸ்வரன். விஷ்ணுவின் பாசத்திற்குரிய தாய் மாமன். காயத்திரியின்(உதய், விஷ்ணுவின் தாய்) உடன் பிறந்த சகோதரர். தங்கையின் குணத்திற்கு எதிர் மாறாக பிறந்தவர்.

Advertisement

உறவுகளை அனுசரிக்கும் எண்ணம் என்றுமே அவருக்கு இருந்தது இல்லை. நரியின் தந்திரம் நிறைந்த சூழ்ச்சியும், கண்களில் குரூரமும் காண படுபவர். தங்கையின் திருமணம் முடிந்த பிறகு தங்கை கணவருக்கு நல்ல பிள்ளையாக நடந்து சிறிது சிறிதாக தொழிலும் நுழைத்து விட்டார்.

Advertisement

“மாமா எப்ப வந்திங்க இந்தியாக்கு?” பாசத்தில் அவரை நோக்கி ரெண்டு அடி வேகமாய் எடுத்து இறுக்க அணைத்து கொண்டான் விஷ்னு.

“நேத்து தான் மாப்பிள்ளை வந்தேன். என்ன மாப்பிள்ளை துரும்பா எளச்சு போயிட்ட?” என்று மேலும் கீழும் தன் பாச மருமகனை பார்த்தார்.

“மாமா நானா எளச்சு போயிருக்கேன் பாருங்க நல்லா ஜிம்கு போய் பாடி பில்டு பண்ணி வச்சிருக்கேன், இது ஆர்ம்ஸ் மாமா” என்று தனது புஜங்களை அவரிடம் காண்பித்தான்.

Advertisement

அவனை ரசித்து பார்த்தவர், “என்ன இருந்தாலும் நீ எளச்சு தா போயிருக்க மாப்பிள்ளை. என்ன வீட்டுல ஒழுங்கா கவனிப்பு இல்லையா?” என்று இறுதி வரியை ஹரியை நோக்கி பேசியவறை, விருப்பம் இல்லா பார்வையை அவர் மீது வீசி அந்த இடத்தில் இருந்து நகர்ந்தான் ஹரி.

ஹரி சென்றதை பார்த்து, “ஏன் மாமா இப்டி பேசுனீங்க அவன் முன்னாடி? சித்தி மாதிரி என் அம்மா இருந்த கூட இன்னேரம் பாத்துருக்க முடியாது. நாங்க ஒன்னும் சித்தி பசங்க பெரியம்மா பசங்க மாதிரி பழகல. அவன் என் கூட பொறந்தவனுக்கும் மேல… என்னோட சித்தி என்னோட அம்மாக்கு சமம்” அழுத்தமாய் அடி குரலில் இருந்து தனது எதிர்ப்பை தெரிவித்தான்.

ஒரு நொடி தன் முன் நிற்பது விஷ்ணுவா இல்லை உதய் மாதவனா என்ற சந்தேகம் பிறந்தது அவன் குரலில்.

நிலைமையை சமாளிக்கும் பொருட்டு, “அட என்ன மாப்பிள்ளை சும்மா சொன்னா சின்ன மாப்பிள்ளை கோச்சுக்குறான் அத போய் நீயும் பெருசா எடுத்துக்காத. அப்றம் என் பொண்ணு என்ன சொல்றா? எப்ப கல்யாணத்தை வச்சுக்கலாம்?”

அவரது கேள்வியில் நெளிந்தவன், “இப்ப எதுக்கு மாமா அத பத்தி, அதி படிக்கட்டும் அப்றம் பேசிக்கலாம்” என்று பேச்சை மழுப்பினான்.

ஈஸ்வரனின் ஒரே புதல்வியின் பெயர் தான் அதிதி. விஷ்ணுவை விட நான்கு வயது இளையவள். அவளை எவ்வாறேனும் உதய்க்கு திருமணம் செய்து வைக்க நினைத்தவர் அவனுடைய சாதுர்யத்தையும், யாரிடமும் ஒட்டாது இருக்கும் குணத்தையும் பார்த்து விஷ்ணுவை மாற்றினார். ஆனால் ஒருநாளும் அவனுக்கு அவள் மீது அவ்வாறு ஒரு எண்ணம் வந்தது இல்லை அதே போல் அவளும் அவனிடம் அவ்வாறு நெருங்கியது இல்லை. தந்தையின் பேச்சின் தீவிரத்தை உணர்ந்தவள் ஒரு நாள் விஷ்ணுவிடம் வந்து அவள் வேறு ஒரு ஆணை விரும்புவதாக கூறி அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாள். நேரம் வரும் பொழுது அவனே இதற்கு முற்று புள்ளி வைப்பதாக அவளிடம் வாக்கும் அளித்தான் விஷ்ணு.

“என்ன மாப்பிள்ளை என்நேரமும் போன்ல பேசிட்டே இருக்கீங்க அதான் கல்யாணம் பண்ணி வச்சா நேர்ல சந்தோசமா பேசுவீங்கன்னு நெனச்சு சொன்னே”

‘சண்டாளி கோர்த்து விட்டுட்டா’

அசடு வழிந்தபடியே, “பரவால்ல மாமா கொஞ்ச நாள் ஆகட்டும் தொழில் கொஞ்சம் கத்துக்குறேன் அப்றம் அத பத்தி பேசலாம்” என்று அவரிடம் இருந்து நழுவி ஹரி சென்ற திசையில் தானும் சென்றான்.

அங்கே ஜெயனை பார்க்க சென்ற ஹரி மீட்டிங் ரூமிற்கு வெளியில் நின்று யவருடனோ ஜெயன் கைபேசியில் பேசி கொண்டிருக்க அவன் அருகில் நின்றான் அவனுக்காக காத்து. அவனை கண்ட ஜெயன் ‘ஒரு நிமிஷம்’ என்று சைகை செய்து பேசி முடித்து ஹரியை பார்க்க, “சொல்லுங்க சார்” என்றான்.

“இல்ல இது உண்மையானு உங்கட்ட கேக்க தான் வந்தேன்” என்று அந்த பைலை அவனிடம் நீட்ட, அவனை எப்பொழுதும் போலே சிறு ஆசிரியதுடன் தான் பார்த்தான் ஜெயன். சகோதரனை போலவே தனக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு மரியாதையை வழங்குவது இந்த குடும்பத்தினரால் மட்டும் தான் முடியும் என்று மனதிற்குள் பாராட்டி “ஆமா சார், டீல் இன்னும் சைன் பண்ணல” என்றான்.

“என்ன ஆச்சு எதுவும் ப்ராப்லமா? அண்ணா தான இந்த ப்ராஜெக்ட் ஸ்டார்டிங்க்ல இருந்து பாத்தது அவரோட சைன் மட்டுமே இருந்தாலே போதுமே, அதுவு இல்லாம இது அவரோட ரொம்ப நாள் உழைப்பு” என்று தன் ஐயத்தை அவனிடம் வினவ,

“ஆமா சார், அஸ் எ சி.இ.ஓ ஆப் தி கம்பெனி ( As a CEO of the company) உதய் சார் மட்டும் சைன் பண்ணா போதும் ஆனா உங்க கம்பெனி இன்வெஸ்ட்டர்ஸ்கு இந்த டீல்ல இன்வால்வ் ஆகுறது புடிக்காம இருந்தாலோ இல்ல அவங்களுக்கு இந்த டீல் ப்ராபிட் தராதுனு அவங்க யோசிச்சலோ இதுக்கு அப்போஸ் பண்ணலாம். நாம இன்வெஸ்ட்டர்ஸ் ரெண்டு பேரு டீல்க்கு ஒதுக்கல அதுக்கு தான் இந்த மீட்டிங்”

“யார் அந்த ரெண்டு பேரு?” ஹரியின் பின் இருந்து வந்தது விஷ்ணுவின் குரல்.

அவனை சட்டை செய்யாமல் ஹரி ஜெயனை நோக்கி, “சரி ஜெயன் தங்க்ஸ், மீட்டிங்கில் பாக்கலாம்” என்று விஷ்ணுவின் கேள்வியை புறக்கணித்தான் ஹரி.

விஷ்ணுவை ஒரு பார்வை பார்த்து ஜெயன் சென்றதும் ஹரியிடம் கோபமாய், “டேய் ஆரமிக்காதடா ஒவ்வொரு தடவையும் மாமாவை பாக்குறப்ப உன்ன சமாளிக்கிறது தான் எனக்கு பெரிய வேலையா இருக்கு” சலிப்பாக நெற்றியை நீவினான்.

“என்ன ஏண்டா நீ சமாளிக்கணும், போ உன் மாமா கூப்புடுவான். அப்றம் உனக்கு தூசி பட்டு கண்ணு கலங்குனா கூட நான் தான் உன்ன அடிச்சேன்னு சொல்லிருவான்”

ஹரிக்கு ஈஸ்வரனை சுத்தமாக புடிக்காது ஏதோ விஷ்ணு அவருடைய பார்வையில் இருக்கும் பொழுது மாறுவது போல தோன்றும். அது மட்டும் இல்லாமல் ஈஸ்வரன் எப்பொழுதும் அவனது பெற்றோரை ஏளனமாக பேசுவதால் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டான்.

“மரியாதையா பேசுடா அவரை. வயசுக்கு ஆச்சும் மரியாதை குடு” என்று கடிந்தவனை, “ஐயோ சரிங்க சார். உங்க மாமாக்கு நான் மரியாதை கண்டிப்பா குடுக்குறேன். அதே மாதிரி அவரை எங்க அம்மா அப்பாட்ட பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்க சொல்லுங்க கூடவே நீங்களும் நீங்களா இருக்க பாருங்க அவர் கூட ஒரு வாரம் இருந்துட்டு. அப்றம் நான், அவருக்கு மரியாதை என்ன? தலைல தூக்கி வச்சு கூட ஆடுறேன்”

“ஒழுங்கா பேசுனு சொன்னது தப்பாடா? ஏன்டா உங்க அம்மா அப்பான்னு பிரிச்சு பேசுற அவங்களும் என் அம்மா அப்பா மாதிரி தான்டா. அவரு என்ன சித்தப்பா சித்திக்கு மரியாதை இல்லாம நடந்…”

அவர்களின் பேச்சை இடை மறித்த ஜெயன், “சார் டைம் ஆச்சு மீட்டிங் ரூம்குல எல்லாரும் வந்துட்டாங்க” என்று கூற விஷ்ணுவை முறைத்து மீட்டிங் நடக்கும் அரையினுள் நுழைந்தான் ஹரி. பின்னர் நெடிய பெருமூச்சொன்றை விட்டு விஷ்ணுவும் அவனை தொடர்தான்.

அவர்கள் உள்ளே நுழைந்ததும் அவர்கள் பின் தொடர்ந்து உதய் வேகமாக நுழைந்து அவனுடைய இருக்கையில் அமர அவனுக்கு வலது பக்கமாக ஜெயன் நிற்க இடது பக்கமாக யாழினி சற்று தள்ளி அவனுக்கு பின்னே அமர்ந்தாள்.

“குட் மார்னிங் எவ்ரிவன். எல்லாரையும் ஒண்ணா மீட் பண்ணியே பல மாசம் ஆச்சு. ஹாப்பி டு ஸீ யூ ஆல். கமிங் ஸ்ட்ரைட் டு தி பாயிண்ட். யாரு யாருக்கு இந்த ப்ரொஜெக்ட்ல அப்ஜெக்க்ஷன் இருக்குனு உங்க முன்னாடி இருக்க பைலை பாத்துட்டு எனக்கு பதில் சொல்லுங்க. டேக் யுவர் ஓன் டைம் ஜென்டில்மென்” என்று அவர்களை அணு அணுவாக கவனிக்க ஆரமித்தான்.

உதய்யை பார்த்து ஏதோ கேட்க வந்த விஷ்ணுவை, “மீட்டிங் முடிஞ்சு” என்று அமைதி படுத்தினான் உதய். ‘சரி’ என்று தலை அசைத்தவன் அவன் முன்னே இருக்கும் பைலை மீண்டும் புரட்ட தொடங்கினான்… இம்முறை ஆழமாக.

உதய்யின் கண்கள் நாவலவன் மீது படிய அவரோ அந்த பைலை ஆர்வமே இல்லாமல் கடமைக்கு புரட்டிக்கொண்டிருந்தார் அவரின் செய்கையில் புன்னகை சிறிது ததும்ப தலையை அசைத்து ஜெயச்சந்திரனிடம் சென்றது அவன் கண்கள். அவர் அந்த பைலை படித்து கொண்டு தான் இருந்தார் ஆனால் முழு கவனம் அங்கில்லை.

சிறிது நேரம் கழிய அனைவரும் அதை படித்து அவரவர் கருத்தை கூற ஆரமித்தனர், “இத பத்தி தான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே உதய்… நீ இருக்கன்ற தைரியத்துல மட்டும் தான் நான் இங்க இன்வெஸ்ட் பண்ணத்தோட சரி, இந்த பக்கம் வர்றதே இல்ல… எதுக்கு இந்த மீட்டிங்? ஆல் தி பெஸ்ட். மை சப்போர்ட் இஸ் வித் யு (All the best. My support is with you)” என்று ஒருவர் கூற மற்றொருவரும்,

“கிலியர் ப்ராஜெக்ட். சக்ஸஸ் ஐஸ் ஆன் யுவர் சைடு எங் மேன் (Clear project. Success in on your side young man)” என்று பாராட்டுக்கள் குவிய, ஈஸ்வரன், “நல்ல ப்ராஜெக்ட் தான மாப்பிள்ளை அப்றம் யாரு டீல்ல சைன் பண்ண மாட்டிக்கிறாங்க?” என்றார்.

“நான் தான் சார்” என்று நாவலவன் எரிச்சலுடன் பேச,

“எதுக்கு? சார் இந்த ப்ராஜெக்ட்ல நீங்க குறை சொல்ல ஒண்ணுமே இல்ல… அதையும் மீறி உங்களுக்கு இதுல சந்தேகம் இருந்தா நேரடியா வந்து அண்ணன்ட்ட கேக்கணும் சார் தேவையில்லாம இப்டி மொத்த ப்ராஜெக்ட்டயும் நிறுத்தி வைக்கிறது கிளைன்ட்ட பேர் கெட்டு போக தான் வைக்கும்” என்று கோவத்தை அடக்கிய விஷ்ணு கேட்டான்.

“தம்பி நீங்க சின்ன புள்ள அமைதியா இருங்க. பெரியவங்க பேசிட்டு இருக்கோம்ல” என்று ஜெயச்சந்திரன் விஷ்ணுவை அடக்க முயல,

“ஏன் நாங்க பேசுனா என்ன ஆக…” என்று எகிறியவனை உதய் அமைதி ஆக்கினான், “விஷ்ணு” என்றதும் பற்களை கடித்து தன் இடத்தில் அமைதியாய் அமர்ந்தான்.

நாவலவனை பார்த்து, “நீங்க பேசுங்க சார்” என்று அவருக்கு அனுமதி கொடுக்க அவர் கொண்டு வந்த சில பைலை யாழினியை பார்த்து நீட்டி, “இந்தாம்மா இத உன் சார்ட்ட குடு”

அவர் பேச்சை கேட்டு எழுந்தவளை தன் ஒற்றை பார்வை கொண்டு நிறுத்தினான். அவனின் பார்வையில் இருந்த அனலை உணர்ந்து அவள் அமைதியாக உட்கார ஜெயன் அவரிடம் சென்று அதை வாங்கி உதயிடம் தந்தான்.

“அதுல காட்டன் இண்டஸ்ட்ரியோட புள் டீடெயில்ஸ் இருக்கு அதோட லாபம் நஷடம் எல்லாமே இருக்கு” என்று அங்கிருந்த மற்றவருக்கும் அதே போல் பைலை கொடுக்க, “இத பாத்துட்டு நீங்களே சொல்லுங்க எப்படி இந்த டீல்கு நான் ஒத்துக்க முடியும்?”

“ஆமா உதய் நீயே இத எக்ஸ்பிளைன் பண்ணு. காட்டன் இண்டஸ்ட்ரி ஸ்டார்ட் பண்ணி ரெண்டு வருஷம் ஆச்சு ஆனா இன்னும் அதுல 20 % பிராபிட் கூட வரல அதுவும் இல்லாம இதுல வந்த லாபத்தை விட நஷடம் தான் அதிகம். எப்டி இத நம்பி நாங்க டீல்கு அக்சப்ட் பண்ண முடியும்?” என்றான் ஜெயச்சந்திரன்.

தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்த உதய்,  “வாஸ்தவம் தான் சார், ஆனா அதுக்கு சேத்து தான மத்த இண்டஸ்ட்ரிஸ்ல உங்களுக்கு லாபம் வருது, லாபம் வருதுன்னு சொல்லி அத நீங்க சைன் பண்ணாமையா இருக்கீங்க?”

அவனுக்கு பின்னால் இருந்த ப்ரொஜெக்டார் திரையில் வந்தது ஒரு படம், “இதுல இருக்கது நம்மளோட எல்லா இண்டஸ்ட்ரீஸ் ப்ராபிட் அண்ட் லாஸ்(Profit and loss). எல்லா இண்டஸ்ட்ரீஸ்லயும் ஒரே நேரத்துல ப்ரோபிட் கொண்டு வர முடியாது அதுவும் ஆரமிச்ச ஒடனே”

அவனை இடை மரித்த நாவலவன், “தம்பி ரெண்டு வருஷம் ஆச்சு ஒடனே எல்லாம் லாபம் நாங்க கேக்கல” என்றார் நக்கலாய், அவர் பேச்சில் எள்ளலாக ஜெயச்சந்திரனும் உடன் நகைத்தார்.

“சரி சார் நீங்க சொல்ற மாதிரியே ரெண்டு வருசத்துல என்னால லாபம் கொண்டு வர முடியல. ஒரு வருஷம் டைம் தரேன் ப்ராபிட்ல இருக்க ஸ்டீல் இண்டஸ்ட்ரிக்கு உங்களால 35 % ப்ரோபிட் கொண்டு வரமுடியுமா?” என்று கைகளை மார்புக்கு நேராக கட்டி கேட்டவனை கோபத்துடன் பார்த்தார் நாவலவன். தன்னால் தான இயலாதே. ‘அந்த அளவுக்கு அறிவு இருந்த நான் இன்னேரம் தனியால பிசினஸ் பன்னிருப்பேன்’ என்று நினைத்தார் மனதில்.

“உதய் நாம பேசுறது காட்டன் இண்டஸ்ட்ரி பத்தி. ப்ராபிட் வராத ஒரு இண்டஸ்ட்ரிக்கு இவ்ளோ பெரிய அமௌன்ட் இன்வெஸ்ட் பண்றது நாமளே போய் தூக்கு மேடைல நிறத்துக்கு சமம்” என்றார் ஜெயச்சந்திரன் கோபமாக.

“சார் பிஸ்னஸ்ன்னா லாபம் நஷ்டம் ரெண்டுமே இருக்க தான் செய்யும். எல்லாம் தெரிஞ்சு தான இன்வெஸ்ட் பன்னிருக்கிங்க?” என்றான் ஹரி.

அந்நேரம் சரியாக உதய்யின் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வர அதற்கு பதில் அளித்து ஜெயச்சந்திரனை பார்த்தான் அவரோ, “ஹரி தம்பி இதுல நீ நடுல வராதீங்க இன்வெஸ்டர்ஸ் பேசுறப்ப உங்களுக்கு இதுல சம்மந்தம் இல்ல. என்ன உதய் சின்ன பசங்கள விட்டு பேச வச்சு வேடிக்கை பாக்குறியோ? அடக்கி வை உதய்” என்றார் ஏளனத்துடன்.

கோவத்தில் பதிலடி கொடுக்க வந்த விஷ்ணுவை நிறுத்திய உதய், “விஷ்ணு வெளிய ஆதவன் இருப்பான் உள்ள வர சொல்லு” என்று அவனை திசை திருப்பினான். ‘மெசேஜ்ல தான பாத்தா? அதுலயே வர சொல்ல வேண்டியது தான? அந்த கிழட்டு நாய பேசாம என் வாய அடக்கிறதுலயே இரு நீ’ மனதில் உதய்யை புகழ்ந்து வெளியே சென்றான்.

“எதுக்கு அடக்கணும்? சுயமா யோசிக்கிற புத்தி இருக்கு அவங்க ரெண்டு பேருக்கும் பேசட்டும்” என்று ஒரு வித பொடி வைத்து பேசுவது போல் இருந்தது அவன் பேச்சு.

“நான் வேற என் தம்பிக வேற இல்ல சந்திரன் சார் அவன்ட்ட பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுங்க” அவன் குரலில் அவ்வளவு கோபம், “இப்ப என்ன உங்களுக்கு இந்த ப்ரொஜெக்ட்ல விருப்பம் இல்ல அப்டி தான? அதையும் மீறி நான் இத பண்ணா என்ன பண்ணுவீங்க?”

கோவமாக இறுக்கியில் இருந்து எழுந்த நாவலவன், “என்ன உதய் ஷேர் அதிகம் இருக்குனு தைரியத்துல பேசுறியா? சந்திரன்கும் எனக்கும் ஷேர் சேத்து 13.74 % இருக்கு நாங்க ரெண்டு பெரும் ஷேர்ல இருந்து விலகிட்டா என்ன பண்ணுவ? கம்பெனி லாஸ்ல தான் போகும் பேசுறப்ப பாத்து பேசணுமாம்ல?”

அறையினுள் வந்த ஆதவனை பார்க்க தலையை அசைத்தான் அவன். “என்ன சந்திரன் எதுவும் பேசாம போன்ன பாத்துட்டு இருக்கீங்க?” என்று கத்த, “யோவ் உனக்கு மெசேஜ் வந்துருக்கானு பாரு” என்றார் நாவலவனிடம் பதற்றத்துடன்.

புரியாமல் தன்னுடைய அலைபேசியை எடுத்து பார்த்து, “ஒன்னும் வரல” என்றார்.

“பினாமி பேர்ல ஷேர் வாங்கிருக்கவங்களுக்கு வராது சார். உங்க தம்பிக்கு மெசேஜ் போயிருக்கும்” என்று கூறி தன்னுடைய இறுக்கியில் கால் மேல் கால் போட்டு தெனாவெட்டாக அமர்ந்து, “மீட்டிங் ஹால் ரொம்ப கூட்டமா இருக்குதுல ? ஷேர் இருக்கவங்க மட்டும் தான் இங்க இருக்கணும்னு சொல்லுங்க ஜெயன்” என்று கூறி தன் முன்னே வைத்திருந்த தேநீரை சுவை பார்க்க ஆரமித்தான்.

நாவலவனும் ஜெயச்சந்திரனும் திகைப்பில் இருக்க, ஈஸ்வரனுக்கு என்ன நடக்கின்றது என்று ஒன்றும் புரியவில்லை, “என்ன உதய் இது யாரை கேட்டு எங்க ஷேர்ஸ் எல்லாம் ரிட்டன் பண்ண?” உண்மையில் அவர்களுடைய பங்கை அவர்களுக்கே அவர்களுடைய வாங்கி கணக்கில் பணமாய் செலுத்தி இருந்தான்.

இப்பொழுது அவர்களுக்கு அது பெரும் இழப்பை மட்டுமே தந்திருக்கும், அது மட்டும் அல்லாது கருப்பு பணம் இப்பொழுது தூயதாக மாறி இருந்தது. அவர்களுக்கு அது எவ்விதத்திலும் பயன் பட கூடாதென்று தான் இந்த ஏற்பாடு செய்திருந்தான் உதய் மாதவன்.

இதை கேட்ட ஈஸ்வரனுக்கு தான் மிக பெரிய அதிர்ச்சி அதை உதய்யும் மாதவனும் கவனிக்காமல் இல்லை, “உதய் யோசிச்சு தான் பண்றியா? இவ்ளோ ஷேர் இருந்தா, லாஸ் ஆகுறப்ப அதே அளவு வரும். லாபத்தை மட்டும் பாக்குற நேரம் இது இல்ல”

மாமனின் எச்சரிக்கையை, “எதையும் யோசிக்காம செய்ய மாட்டேன், ஹரி உனக்கு இந்த ப்ராஜெக்ட் பத்தி என்ன தோணுது?” என்று அவருடைய கேள்விக்கு செவி சாய்க்காமல் கேட்டான், “உங்க மேல நம்பிக்கை இருக்குணா” இதற்கு மேல் என்ன வேண்டும்? ஒரு தமயனுக்கும் சரி, தொழிலதிபருக்கு சரி….!

யாழினியிடம் இருந்து ஒரு பைலை வாங்கி அவன் முன் நீட்டியவன், “இதுல ரெண்டு பேரும் சைன் போடுங்க” ஒன்றும் புரியாமல் விழிக்க ஜெயனை பார்த்தான் ஹரி, அவன் ஒரு சிறிய சிரிப்பை தர யோசிக்காமல் சகோதரனுக்காக கையெழுத்திட்டனர் இருவரும்.

“வெல்கம் Mr ஹரி அண்ட் Mr விஷ்ணு” அவர்களை பார்த்து கூறியவன் தன் முன் அமர்ந்து இருக்கும் மற்றவர்களை பார்த்து, “இனி ஹரி, விஷ்ணு ரெண்டுபேரும் நம்ம ஷேர் ஹோல்டேர்ஸ்ல ஒருத்தர். இ நீட் ஆல் ரெஸ்பெக்ட் பார் தேம் (I need all respect for them). எனக்கு இன்னும் எத்தனை நியூ இன்வெஸ்ட்டர்ஸ் வேணாலும் கெடப்பாங்க”

“தப்பு பண்ற உதய்… இத்தனை வருசமா கூட இருந்த எங்களை கொஞ்சம் கூட இன்பார்ம் பண்ணாம இவ்ளோ அசிங்கப்படுத்தி வெளிய அனுப்புறது ரொம்ப பெரிய தப்பு” நாவலவன் எச்சரிக்க ஜெயச்சந்திரனும் முகம் சிவக்க கோவத்தில் நின்றார்.

“நீ சொல்ற எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையை ஆட்டிட்டு இருந்தா நாங்களும் உனக்கு நல்லவங்களா இருந்துருப்போமோ? என்ன உதய் அடக்கி வைக்க பாக்கறியா”

ஆற்றாமையில் பேசிய ஜெயச்சந்திரனை பார்த்து, “உங்களோட அனுபவமும் எனக்கு இது வர உதவுனது இல்ல, உங்களோட பேச்சும் உதவுனது இல்ல. இவ்ளோ பெரிய பிசினஸ ஆட்டி படைக்க தெரிஞ்ச எனக்கு ரெண்டு பேர அடக்கி வைக்க தெரியாதா மிஸ்டர் சந்திரன்? உங்களால ஆல்ரெடி ரெண்டு ப்ராஜெக்ட் லாஸ் ஆகியிருக்கு, எவிடென்ஸோட இப்ப கூட கோர்ட் ஏற நான் ரெடி… எப்படி வசதி? கோர்ட்டா இல்ல வீடா?”

அத்தனை நிமிர்வாய் பேசியவனிடம் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் மானத்தை காத்துக்கொள்ள கோவமாய் இருவரும் வெளியில் சென்றனர்.

“என்னோட இந்த முடிவுல உங்களுக்கு எதுவும் ஆப்ஜெக்ஷன் இருந்தா தாராளமா சொல்லலாம்” மற்றவர்களை பார்த்து கூற அதை அறிந்தவர்கள் அவனது கருத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

“சார் எனக்கு ஒரு டவுட்” அந்த அறையில் திடீரெனெ புதிதாய் ஒரு குரல்.

குரல் வந்த கதவின் திசை நோக்கி அனைவரும் பார்க்க அங்கே கருப்பு நிற முழுக்கை சட்டையை முட்டி வரை மடித்து, வெள்ளை நிற பாண்ட் அணிந்து முகத்தில் இருக்கும் கோவத்தை மறைக்க சிரிப்பெனும் ஆபரணம் அணிந்து நின்றான் ஆதி. ஆதி கேசவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!