Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedஇணையா துருவங்கள்

அத்தியாயம் – 11.2

“ஆதி என்ன சொன்னான்?”

“வழக்கம் போல அவரை மதிக்காம அனுப்பி விட்டுட்டான்” உதய்யின் உதடுகளில் மெலிய புன்னகை அரும்பியது…

“ம்ம்ம்ம்ம்”

“என்னடா கதையா சொல்லிட்டு இருக்கேன் அவன் ஒரு லூசுடா இப்ப இப்புடி இருப்பான் நாளைக்கு உனக்கு எதிரா எதாவது காட்டுன ஒடனே மாறிடுவான் எத்தனை நாள் தான் அவரை அவன் முன்னாடி வராம தடுக்க முடியும்னு நினைக்கிற?” – ஆதவன்



Advertisement

“டேய் அவன் லூசு தான் அதுக்காக அவன் முட்டாள் இல்லை போகட்டும் எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்ளோ தூரம் என் மாமா போகட்டும் எனக்குன்னு ஒரு மூளை இருக்குதுல அத வச்சு நான் பொழச்சுக்குவேன்”

“என்னமோ போ ஆதி விசயத்துல நீ ரொம்ப ஈஸியா இருக்க அவனை பத்தி உனக்கும் தெரியும் எப்ப எப்டி இருப்பான்னு தெரியாது…” – ஆதவன்

ஆதவனின் பதிலில் சத்தமாக சிரித்துவிட்டான் உதய், “ஏண்டா இன்னுமா நீ அவனை நம்பிட்டு இருக்க? என்ன பலி வாங்கணும்னு நெனச்சிருந்தா அவன் எப்பையோ பன்னிருப்பான்… இன்னேரம் வழக்கம் போல எதாவது ஒரு டீ கடைல அந்த ரெண்டு காமெடி பீஸ் கூட சேந்து என் கார் டயர பஞ்சர் ஆக்குறதா இல்ல செருப்பை திருடுறதான்னு யோசிச்சிட்டு இருப்பானுக…”

Advertisement

****************

Advertisement

வராத ஜூஸை வா வா என்று போராடி இழுத்துக் கொண்டிருந்தான் கெளதம்… அதை ஏக்கமாய் பார்த்து நின்ற தமிழ்…

அந்த தெருவில் இருக்கும் ஒரு சிறிய டீ கடை அது எப்பொழுதும் ஆட்கள் அதிகமாகவும் அல்லாமல் குறைவாகவும் அல்லாமல் இருக்கும் இடம். அங்கிருக்கும் டீயின் வாசனை போவோர் வருவோரை எல்லாம் கட்டி இழுக்கும், அதை நம்பி தான் இவர்களும் முதல் முறை அங்கு சென்றனர் பிறகு அங்கிருக்கும் அந்த ரோஸ் மில்க்கின் சுவையில் மயங்கி அங்கேயே அவர்கள் சங்கத்தை கூட்ட தொடங்கினர் வாரம் ஒரு முறையேனும் அங்கு செல்லாமல் அவர்கள் பொழுது ஓயாது…

“மச்சான் எனக்கு ஒரு வாய் டா” தமிழ் கெஞ்சி கொஞ்சி பார்த்தும் கெளதம் அசரவில்லை…

Advertisement

“மச்சான் இது யோசிக்கிறவங்களுக்கு நீ அமைதியா நின்னு வேடிக்கை பாரு போ”

“சாமியோவ் சாத்துக்குடி ஜூஸ் கூட நல்லாதான் போடுற” ஒரு சொட்டு விடாமல் குடித்து முடித்த கெளதம் அந்த கடைக்காரர் குப்புசாமியை பாராட்டினான்…

“பச்சை தண்ணி கூட வைக்க தெரியாதவன்லாம் என்ன பேசுறான்… மொத அந்த  பாக்கி ரெண்டாயிரத்தை தா டா”

“என்ன குப்பு காசு எல்லாம் கேக்குற?” எகிறினான் தமிழ்…

“ஏண்டா உங்களுக்கு ஓசில ஜூஸ் குடுக்குறதுக்கா எங்க ஆத்தா என்ன பெத்து போட்டுச்சு…” இது அங்கே நடக்கும் வழக்கமே…

இதை எல்லாம் பொறுமையாய் வண்டியில் சாய்ந்து நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆதி மேலும் இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று அமைதியாய் நின்றான்…

“ரைட்டு விடு ரோஸ் மில்க் தரியா தாகமா இருக்கு. இவனே ஜூஸ் குடிச்சுபுட்டான்” அப்பாவியாய் கேட்டான் தமிழ் அவரிடம்…

“அந்தா பச்சை தண்ணி இருக்குது பாரு போய் குடி”

“ஆதி…” – தமிழ்

பொறுமை காற்றில் பறக்க, “யோவ் குப்புசாம்மி குடேன்யா அவனுக்கு நான்… காசு தரேன்” ஆதி கூற அவர் அவர்கள் மூவரையும் முறைத்துக்கொண்டு அவனுக்கு கொடுத்தார்…

“டேய் எனக்கு கொஞ்சம்…” கெளதம் தமிழிடம் கெஞ்ச, “தர மாட்டேண் டா உனக்கு தர மாட்டேண் டா நீ எனக்கு தந்தியா?” சிறு பிள்ளையாய் சண்டையிட்டு கொண்டிருந்தனர்…

“மச்சான் போதும் டா வேணும்னா நீ இன்னொன்னு வாங்கிக்கோ டா ஆனா தயவுசெஞ்சு ஏதாச்சும் ஐடியா சொல்லுங்க டா” ஆதி கெஞ்சிக் கொண்டிருந்தான்…

“என்ன ஐடியா மாப்பிள்ளை?” அந்த கடையில் இருந்த ஒரு குச்சி முட்டையை எடுத்து சப்பிகொண்டே கெளதம் ஆதியிடம் கேட்டான்…

“அந்த குச்சியை வச்சே கொறவளைய கிழிச்சிடுவேன்… சனியனே சாகடிக்காத”

உதய்யை பழிவாங்கவே இந்த கூட்டம் ஆனால் அதை எவ்வாறு செய்ய்வதென்று தெரியாத ஆதி அறிவில் வளமை பெற்றிருக்கும் அவனது நண்பர்களிடம் தஞ்சம் புகுந்தான்… அறிவுரைக்கு லஞ்சம் கேட்டே இந்த ஜூஸ் நாடகம் நடக்கின்றது…

“ஐயோ மச்சி டென்ஷன் ஆகாத இப்புடியே கத்துனனா BP வந்துடும்” தமிழ் ஆதியின் தோளில் கைபோட்டு சமாதான படுத்த, “ஏய் சீய் கைய எடு நாயே ஐடியா சொல்றிங்களா இல்ல குடிச்சதுக்கு காசு குடுக்குறீங்களா?”

“நான் சொல்றேன்” கெளதம் முந்தினான், “அவன் வாக்கிங் போறப்ப நாய் விட்டு கடிக்க விட்ரலாமா”

“போ டா லூசு… அவன் நாய்க்கு எல்லாம் பயப்பட மாட்டான்… அவன் வாக்கிங் போறப்ப பர்ஸ்ச திருடிறலாமா?” – தமிழ்

“அவனுக்கு இருக்குற காசுக்கு அந்த பர்ஸ் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல… பேசாம அவன் வாக்கிங் போறப்ப ஆளு வச்சு முகத்தை துணியால மூடி மண்டைல ரெண்டு கொட்டு கொட்டிட்டு ஓடிறலாமா?”- கெளதம்

“கேக்கவே நல்லா இருக்குது டா ஆனா அவனுக்கு ரெண்டு கொட்டு எல்லாம் பத்தாதே…” நாடியை தடவி யோசித்த தமிழ், “ஏண்டா ஆதி இப்புடி பண்ணிட்டா?”

“எப்புடி?” புருவங்களை உயர்த்தி எந்த ஒரு மாறுதலும் இல்லாமல் கேட்டான் ஆதி…

“அவனோட கார் டயர பஞ்சர் ஆக்கிடலாமா வீட்டுக்கு நடந்தே போகட்டும்”

“போ டா பூல் ரோட்டுல வேற டாக்ஸி… ஏன் அவனே ஓராயிரம் கார் வச்சிருப்பான்… நான் சொல்றேண் டா அவன் வாக்கிங் போறப்ப…” கௌதமை இடை மரித்த தமிழ்…

“டேய் நீ இன்னும் வாக்கிங்ல இருந்து வரலையா?”

வண்டியில் இருந்து நிமிர்ந்து நின்ற ஆதி, “நான் ஒரு ஐடியா சொல்றேன்…” என்ன என்று ஆர்வமாய் அவனை பார்த்தனர் இருவரும், “குப்புசாம்மிகிட்ட எலி மருந்து இருந்தா வாங்கி குடிச்சிட்டு அதோ அங்க வருது பாரு தண்ணி வண்டி அதுல அடிபட்டுச் செத்துருங்க… நாட்டுல ஜனத் தொகையாச்சும் கம்மி ஆகும்” என்றான் அடக்கி வைத்தக் கோபத்துடன்…

“அப்டிலாம் சொல்லாத ஆதி” பொய் கண்ணீர் வடித்தனர் இருவரும்…

“நடிக்காதிங்க டா நானும் எவ்வளவு நேரம் தான் அமைதியவே இருக்கது கேன கூமுட்டை மாதிரி பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் அவ்ளோ பாசம் அவன்மேல் இருந்தா போங்க அவன்ட சும்மா இங்க இருந்து நடிச்சிட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்ல யாருக்கும்…”

“ஆதி அப்டிலாம் இல்லடா எங்களுக்கு நீயும் முக்கியம் தான் டா… அவன் உன்னோட உதய்டா…” – தமிழ்

“என் உதய்ங்கிற நால தான் டா சண்டை போட போறேன். வேற யாராச்சும்னா இன்னேரம் அவனை பொதச்ச இடத்துல புல்லே மொளச்சிருக்கும்… அவன் என்ன கண்டந்துண்டமா வெட்டி போட்ருந்தா கூட சந்தோசமா செத்துருப்பேன் ஆனா அவன் என் அப்பா மேல கை வச்சிருக்கான்… எந்த புள்ளையால பாத்துட்டு சும்மா இருந்துருக்க முடியும்? நான் பட்ட கஷ்டத்துக்கு இல்லனாலும் என் தங்கச்சி ஓட கண்ணீருக்கு அவன் பதில் சொல்லியே ஆகணும்… சொல்ல வைப்பேன்” என்றான் தீர்க்கமாக…

“உதய் அப்புடி பண்ணிருப்பான்னு நம்புறியா ஆதி?”

“கண்ணு முன்னாடி எல்லா ஆதாரமும் இருக்கே டா… அவன் அதப் பண்ணலைனா ஏன் அதை மறுத்துப் பேச மாட்டிக்கிறான்? அப்ப அவன் பண்ணிருக்கானு தான அர்த்தம்?”

“வெறும் ஆதாரத்தை வச்சு ஒரு முடிவுக்கு வராத ஆதி” கௌதமின் குரலில் ஒரு கடுமை கலந்த இறைஞ்சுதல் இருந்தது…

நண்பர்கள் இடையில் நட்பு உருவாகவிடினும் மேலும் பிளவு ஏற்பட யாரும் விரும்பவில்லை… அதில் ஆதவனும் சரி கெளதம், தமிழும் சரி குறியாய் இருந்தனர் ஆனால் ஆதியும் உதய்யும் சிரமமே இன்றி தகர்த்தனர் எளிதாய்…

“இங்க பாருங்க என்ன சமாளிக்கிற வேலைய இதோட நிறுத்திக்கோங்க கூட இருக்கதா இருந்தா இருங்க இல்லனா நானே என்ன பண்ணணுமோ அத பணிக்குவேன்… நான் முடிவு பண்ணது பண்ணது தான்”

“டேய் நீ செய்றது தப்பு தான் ஆனாலும் நாங்க உன் கூட இருப்போம் எப்பையுமே… எல்லை மீறி நீ போக மாட்டங்கிற நம்பிக்கைல…” ஒரு சிறு புன்னகையுடன் தமிழ் கூற…

தலையை அசைத்து அவன் கூறியதை ஏற்றுக்கொண்ட ஆதியிடம் கெளதம், “என்ன பண்ணலாம்னு இருக்க?”

“சரியாய் வருமான்னு தெரியல… எனக்கு குடுத்த அதே அடியை அவனுக்கு நானும் கொடுக்கணும்னு ஆசை படுறேன்…”

“அவன் கம்பெனி-ல கை வைக்க போறியா?” – கெளதம் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றான் வாயை பிளந்து…

“என்ன டா லூசு மாதிரி பேசுற அவன் எவ்ளோ பெரிய கம்பெனி வச்சிருக்கான் அதுல நம்மளால ஒரு சின்ன துரும்பை கூட அசைக்க முடியாது”

தன்னுடைய பையிலிருந்து ஒரு டாக்குமெண்டை எடுத்து நீட்டிய ஆதி, “என்னால முடியாது ஆனா இது பண்ணிடும்ல?”

புரியாது விழித்த இருவரும் அதை வாங்கி பார்த்து அதிர்ந்தனர்… அதில் உதய்யின் கட்டுமான நிறுவனம் கட்டிய 10 அடுக்குமாடி இல்லங்கள் அதன் அனுமதிக்கு அதிகமான தளங்களை கட்டியதாக இருந்தது அதுமட்டும் இன்றி அதில் பயன்படுத்திய பொருட்களின் தரம் அவர்கள் குறிப்பிட்டிருந்த தரத்திற்கு மிக குறைவாக பயன்படுத்தியதற்கான அனைத்து ஆதாரங்களும் இருந்தது…

“இது எப்டி டா உனக்கு கெடச்சது?” – தமிழ் ஆச்சிரியமாக கேட்டான்…

“நேத்து அவன் மாமா வந்தாருனு சொன்னேன்ல அப்ப அவரு தான் குடுத்தாரு”

“நானும் அங்க தானே டா இருந்தேன் எப்டி எனக்கு தெரியாம நீ எல்லார்கிட்டையும் பேசுற?” – கெளதம்

“அவரு பேசல டா பைலை எதார்த்தமா வைக்கிற மாதிரி வச்சிட்டு போய்ட்டாரு…”

“அவரு மேலயே எனக்கு டவுட் இருக்குதுடா எதுக்கு சொந்த தங்கச்சி பையன மாட்டி விடணும்? அதுவும் முன்ன பின்ன தெரியாத ஒருத்தன்கிட்ட” தமிழின் கேள்வியில் ஆமோதித்து கௌதம் தலை ஆசைதான்…

“எனக்கும் டவுட் இருக்குது டா ஆனா அவரு ஆரம்ப காலத்துல அவன் மேல ரொம்ப பாசமா இருப்பாரு அவனே அடிக்கடி சொல்லிருக்கான் அதை. ஆனா, அந்த கண்ணுல என்னமோ சரி இல்லன்னு எனக்கு தோணுது. இன்னொரு பக்கம் பாத்தா விஷ்ணு அவர் கூட என்ன பண்ணுறான்னு யோசனையாவும் இருக்குது… நேத்து நைட்-ல இருந்து இதே யோசனை தான் எனக்கு தலையும் புரியல வாலும் புரியல இது எல்லாத்துக்கும் மேல உதய் அப்டி பண்ணுவானானு எனக்கு குழப்பம் வேற… அவன் மேல தப்பு இருக்கோ இல்லையோ அவனை நான் கண்டிப்பா பழி வாங்குவேன் இது எனக்கு கிடைச்ச ஒரு துருப்பு சீட்டு மாதிரி”

யோசனையில் ஆதி சிகையை கோதி அவன் பாக்கெட்-ல் இருந்து ஒரு சிகெரெட்டை எடுத்து பற்ற வைத்து ஆழ்ந்து அந்த துர்-புகையை உள் இழுத்தான்…

“அவன் மேல ஒரு அடி பட்டாலும் துடிச்சு போய் நிப்பியே டா ஆனா இன்னைக்கு நீயே அதுக்கு காரணமா இருக்கலாமா ஆதி?” கவலை தேய்ந்த முகத்துடன் தமிழ் ஆதியை ஏறிட்டான்…

“ஆதி பால (ball) இங்க பாஸ் பண்ணுடா” வேர்வை சொட்ட சொட்ட இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்த ஆதியின் கவனத்தை உதய்யின் குரல் ஈர்த்தது… 

அவன் மேல் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையில் அவனிடம் கால்பந்தை மாற்றி விட்டவன் உதய்யை திரும்பி பார்க்காமலே வெற்றி களிப்பில் முகம் மலத்திருக்க உற்சாக படுத்திக்கொண்டிருந்த நண்பர்களை பார்த்து சிரித்து நின்றிருந்தான்… 

கால்பந்தை கைப்பற்றும் நோக்கில் ஒருவன் உதய்யிடம் போராடிக்கொண்டிருக்க, வேறொருவன் வேண்டும் என்றே உதய்யை இடித்துவிட்டு கீழே சரியவைக்க சத்தத்தில் திரும்பி பார்த்த ஆதி பொங்கி எழுந்த ஆத்திரத்தில் உதய்யை நோக்கி ஓடினான்…

உதய்யை தூக்கி நிற்கவைத்தவன் அவன் உடலை தலை முதல் கால் வரை ஆராய்ந்து அவன் கணுக்கால், கைகள், கன்னம் என சிராய்த்திருந்த இடங்களை பார்த்ததும் உதய்யின் கட்டுப்பாட்டில் இருந்து புயலாய் அவனை தள்ளி விட்டவனை நோக்கி வேக வேகமாய் நடந்தான்… அவன் நடந்த வேகமே கூறியது அவனுடைய கோவத்தின் அளவை…

“எவன் டா என் உதய தள்ளி விட்டது? சொல்லு எவன் தள்ளி விட்டது… நான் இருக்குறப்பயே எந்த நாய்க்கு என் உதய் மேல கை வைக்க தைரியம் வந்துச்சு… தில்லு இருந்தா வந்து இந்த ஆதியை தாண்டி இப்ப என் உதய் மேல கை வைக்க பாரு… அவனை தள்ளி விட்டவன் கால  ஒடச்சு, ஒடஞ்ச காலோட இந்த மொத்த கிரௌண்ட்டையும் நாய் மாதிரி ஓட ஓட விரட்டலை நான் ஆதி இல்ல டா… கோத்தா ஆம்பளையா இருந்தா இப்ப வாங்க டா…” வேர்வை சொட்ட கண்கள் சிவக்க கர்ஜித்த ஆதியின் குரல் அந்த மைதானத்தையே அதிர வைத்தது…

என்ன செய்தும் ஆதியின் சீற்றலை தடுக்க யவரும் இல்லை… சொல்லை காப்பாற்றும் வகையில் நண்பன் மீது கை வைத்தவனின் காலை உடைத்தே வளாகத்தை விட்டு அனுப்பிவைத்தான். அதனால் எழுந்த பெரிய போராட்டத்தில் இரண்டு வாரம் பள்ளியில் இருந்து நீக்கினர். நண்பனுக்கு துணையாய் பழியை தானும் சுமந்து உதயும் அவனுடன் வீடு சென்றது இன்றளவும் அழகாய் நினைவில் நின்றது…

அந்த நாள் உதய், ஆதியை வறுத்தெடுத்து இன்றளவும் நினைவில் இருக்க அந்த அழகிய நினைவுகளை தலையை உலுக்கி தள்ளி வைத்தான் உதய்யின் உயிர் ஆதி… 

“இப்ப என்ன பண்ண போற?” கெளதம் கேட்க தோளை உலுக்கி பதில் கூறினான்.

ஆதி உதய்யின் அருகில் இருந்த வரை எந்த துன்பமும் அவனை நெருங்க விடவில்லை ஆதி. ஆனால் இன்று அவன் கண்ணில் தெரிந்த வலியை பார்த்தவனுக்கு தன்னை குறை கூறுவதா? அவன் குடும்பத்தை குறை கூறுவதா என்று தெரியவில்லை. கைபேசியை எடுத்து இருந்த ஆத்திரத்தை எல்லாம் காலை அட்டன் செய்த ஆதவன் இறக்கினான்…

“ஹலோ”

“என்ன டா பண்ணிட்டு இருக்க நீ… உன்ன நம்பி தான டா அவனை தனியா விட்டு வந்தேன் அவனை பாதுக்காம என்ன புடுங்குற வேலையா நீ பாக்குற… பெரிய இவனாட்டம் பேசுன அன்னைக்கு. இப்ப எங்க போச்சு அந்த பேச்சு மயிறு எல்லாம்… உங்கள எல்லாம் நம்பி ஒரு ஆணியையும் புடுங்க முடியாது போல… கவனிச்சிக்கிறேன் எல்லாத்தையும் இருக்குது இனி எல்லாருக்கும்”  பட்டாசாய் உச்சகட்டக் கோவத்தில் பொறிந்தவன் உடனே இணைப்பை துண்டித்தான் ஆதி…

மறுபுறம் துண்டித்த கை பேசியை காதிலிருந்து எடுத்த ஆதவன் அதை அப்பாவியாய் பார்த்தான், “என்ன டா இவனா போன் பன்னான் இவனா திட்டினான்… இவனா வச்சிட்டான்… என்ன பன்னேனு சொல்லிட்டு தான் திட்டேண் டா?” ஒன்றும் புரியாமல் விழித்தான் ஆதவன் பாவம்…

எப்டி இருக்குது மக்களே? 

கமெண்ட்ஸ் சொல்லுங்க… 

புடிச்சா கண்டிப்பா ஷேர் பண்ணுங்க…

நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!