Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக்

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 11 2

வீட்டுக்கு மருமகள் என ஒருத்தி வந்தபோது, அவளிடம் அதிகாரம் செய்ய வேண்டும், தன் ஆட்சிக்கு கீழ் அவளை வைக்க வேண்டும் என்ற எந்தவித எண்ணமும் கமலத்துக்கு இல்லை. மகள் இல்லையே… மகள் என்ன செய்கிறாளோ… இந்நேரம் குழந்தை பிறந்திருக்குமோ… ஒத்தையில் என்ன அவதி பட்டாளோ… இப்படியாக தான் அவர் எண்ணங்கள் இருக்கும்!

இங்கே மழை வந்தால் கூட, அவ ஊருல மழை வருமோ… காய்ச்சல்ன்னு வந்தா பாடா படுவாளே! நான் இல்லாம என்ன செய்றாளோ? என்று தான் நினைவு வரும்.



Advertisement

மாங்காய் ஊறுகாய்ன்னா ஒரு கை சோறு அதிகம் திம்பா! அவளுக்கு அங்க அதெல்லாம் கெடைக்குதோ என்னவோ?!

ஊரில் யாராவது வாழாமல் வந்தாளோ, புருஷனிடம் சண்டையிட்டு வந்தாள் என்ற செய்தி கேட்டாளோ, ‘வெள்ளைக்காரனை நம்பிப்போய் என்ன கதில இருக்காளோ தெரியலையே… நல்லா வச்சுருக்கானா? இல்ல எங்கானும் வித்துட்டானா? அவசரம்ன்னு ஓடி வரக்கூட முடியாதே… பாஷை தெரியாம, கைல காசில்லாம என்ன சீப்படுதோ என் புள்ள!? என்று கலங்கி நிற்ப்பார்.

Advertisement

Advertisement

அதிரசம் செய்தால் அவள் எண்ணம்…

அட்டிகை அணிந்தால் அவள் எண்ணம்…

அவளள்ளி கொஞ்சிய கன்றுக்குட்டியை கண்டால் அவள் எண்ணம்…

Advertisement

அடுப்படியில் தேங்காய் சில் அறிகையில், ‘எனக்கொன்னுமா!’

            கண்ணை சுருக்கி தோளோடு தொங்கி கேட்கும் நினைவில் அவளின் எண்ணம்…

அம்மா வீட்டு சீராக அள்ளிக்கொடுக்க சேகரித்த பட்டுப்புடவையை கண்டால் அவள் எண்ணம்…

அம்மன் கோவில் திருவிழாவில் அடம் பிடித்து அவள் வாங்கி அம்போவென விட்டுசென்ற                        கண்ணாடி           வளையல்களை கண்டால் அவள் எண்ணம்…!!!

இன்னும்…,

அவள் கிடந்தாள்… தவழ்ந்தாள்… எழுந்தாள்… நடந்தாள்… ஓடினாள்… துள்ளினாள்… என்று…

     காணுமிடம் யாவிலும் அவளின் எண்ணங்கள் நிறைந்துக்கிடக்க…

அவள் நலம் கூட அறியமுடியா நிலையில்

அன்னையின் அடிமன ஆழத்தில்

அமிழ்ந்து பாரம் ஏறியது      அவள் எண்ணங்கள்…!!!

ஜேகோப்  பாட்டியின் அறையில் இருந்து வெளியே வந்தான். வீடே வெறிச்சோடி கிடந்தது. சற்றுமுன் பார்த்த ருக்மணியை கூட காணவில்லை. நேற்று கூடத்தோடு நின்றுவிட்டு ரோஷிணியின் வீட்டிற்கு சென்றுவிட்டதால், இப்போது வீட்டை ஒருமுறை பார்க்கலாமா என்ற ஆசை எழுந்தது. அவன் இது போன்ற வீடுகளை, கட்டிடக்கலையை எல்லாம் புகைப்படத்தில் தான் கண்டதுண்டு…!

ஒவ்வொரு இடத்தையும் ஆசையாய் அவன் பார்த்துக்கொண்டு நகர்ந்து வர, சங்கவியும் ரோஷினியும் அப்போது தான் அவனை பழிவாங்குவது பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மாடியில் இருந்ததால் அவனுக்கு தெரியவில்லை.

இன்னும் உள்ளே சென்றுக்கொண்டே இருந்தவன் காதுகளில் தேவியின் கலங்கிய குரல் ஒலிக்க, அந்த பக்கம் விரைந்து சென்றான்.

முந்தானையில் கண்களை துடைத்துக்கொண்டே, “சத்தியமா அத்தை அவளை இவ்ளோ தேடிருப்பாங்கன்னு எனக்கு தெரியாது ருக்கு… அவங்களும் இந்த வீட்டு ஆம்பளைங்களை போல கோவமா தான் இருக்காங்கன்னு நினைச்சுட்டு இருந்தேன்… ஒருவார்த்தை… ஒரு… வார்த்தை… என்கிட்டையோ இல்ல உன்கிட்டயோ கூட சொல்லிருந்தா உடனே அவகிட்ட பேச வச்சுருப்பேனே!!!” ஆற்றாமையுடன் சொன்னவர்,

“ஒருவேளை நான் தான் சொல்லிருக்கனுமோ? என்னால தான் அவங்க இப்போ இப்படி இருக்காங்களோ?” என்று அதிகமாய் நினைத்து பேச,

“ஆன்ட்டி…!” என்று உள்ளே நுழைந்தான் ஜேகோப். அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டார் தேவி.

வந்தவனோ, “எனக்கு ரொம்ப பசிக்குது!” என்றான்.

ருக்மணி தேவியை பார்க்க, “பாதாம் பால் குடிக்குறியா?” என்றார் தேவி.

“ஓகே!” என்றவன் அங்கேயே அடுப்படி மேடையில் அமர்ந்துவிட்டான். ருக்மணி பாலை அடுப்பில் வைத்து வேலையை ஆரம்பிக்க, தேவி தொங்கிய முகத்துடனே வெங்காயத்தை வெட்டிக்கொண்டிருந்தார்.

“ஆன்ட்டி… நான் ஒன்னு கேட்கவா?” பொதுவாக அவன் கேட்க, இருவருமே என்னவென்று பார்த்தனர்.

“பாட்டி எங்க அம்மா மேல இவ்ளோ அஃபெக்ஷனோட இருந்தது யாருக்கு தெரியுமோ தெரியாதோ என் அம்மாக்கு தெரியும் தானே?”

குழப்பமாக, ‘ஆமென’ தலையசைத்தனர் இருவரும்.

“அப்போ, எல்லாரையும் விட்டுட்டு போன எங்க அம்மா உங்ககிட்ட டச்’ல இருந்தது போல, இத்தனை வருஷத்துல நினைச்சுருந்தா  அவங்க அம்மாக்கிட்டையும் பேசிருக்கலாம்… இல்லன்னா அவங்க என்ன மனநிலைல இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு பேச முயற்சி செஞ்சுருக்கலாம்… ஆனா, என் அம்மா எதுவுமே பண்ணல! இந்த விஷயத்துல தப்பு என் அம்மா பக்கமும் கொஞ்சமா பாட்டி பக்கமும் இருக்கே தவிர, உங்க பக்கம் ஒண்ணுமே இல்லை!

உங்க பிரண்ட் கிட்ட பேசுறதை யாருக்கும் தெரியாம இத்தனை வருஷம் மேனேஜ் பண்ணதே ரொம்ப பெருசு! சோ, ரப்பிஷ்’ஷா எதையும் யோசிக்காம ஃப்ரீயா விடுங்க… அதான் நான் வந்துட்டேன்’ல… எவ்ரிதிங் வில் பீ ஆல்ரைட்” என்றான் திண்ணமாக.

அவன் பேசியதும் தேவியின் முகம் கொஞ்சமாய் தெளிந்ததை போல இருந்தது.

அன்னை தன்னிடம் இந்தியா போக சொல்லி அழுதபோது தான் பிடிவாதமாய் மறுத்தது நினைவு வந்தது அவனுக்கு.

ஒருவேளை வராமல் போயிருந்தால்…!? இதே நிலை தானே இன்னும் எத்தனை வருடங்கள் ஆகியிருந்தாலும்…!!!  ஒருவேளை பாட்டிக்கு தவறாக ஏதேனும் நடந்திருந்தால்..!? தேவகியின் மீது கோபம் கூட வந்தது ஜேகோபிற்கு.

அவன் அந்த சிந்தனையில் இருக்க, “எனக்கு கொஞ்ச நாள் முன்ன தான் இவ உங்க அம்மாக்கிட்ட பேசுவான்னே தெரியும்! ஒருக்கா பேசும்போது நான் பாத்துட்டேன், அதனால சொன்னா… இல்லன்னா இந்த அமுக்குணி சொல்லிருக்கவே மாட்டாளே!” ஓரகத்தியை  வம்பிழுத்து பேசினார் ருக்மணி.

சிரித்த ஜேகோப், “தேவி ஆன்ட்டி எல்லாம் இந்தியன் ஆர்மில சீக்ரெட் ஏஜென்ட் ஆகிருக்க வேண்டிய ஆளு… சத்தியன் கிட்ட வந்து மாட்டி டேலேன்ட் எல்லாம் வேஸ்ட் பண்ணிட்டாங்க” என்றான் கிண்டலாய். அவன் அப்படி சொன்னதும் தான் தேவிக்கு கணவனுடனான அவனது இணக்கம் நினைவு வர,

“என்ன செஞ்ச என் புருஷன?” என்றார் ஆச்சர்யமாய். ருக்மணி என்னவென்று கேட்டதற்கு அந்த எட்டாம் அதிசய நிகழ்வை தேவி விவரிக்க, அவருக்குமே ஆச்சர்யம்.

“நீங்க தான் உங்க புருஷனை ஒண்ணுமே செய்யல போல…” சிரிப்பை விழுங்கிக்கொண்டு படுகிண்டலாய் சொன்னான் அவன்.

திருதிருவென முழித்த தேவி, “என்ன சொல்ற?” என்றார்.

“அவருக்கு இடுப்புல லேசா கை பட்டா கூட அப்படி ஒரு கூச்சம் தெரியுமா? ரிவர்ல என்னை ட்ரோப் பண்ணிட்டு கிளம்ப போனாரு… பைக் விட்டு இறங்குறப்போ ஆக்சிடென்ட்டலி என் கை டச் ஆகிடுச்சு… ஹி லிட்ரலி ஜம்ப்ட் ஓவர் தெரியுமா?”

ருக்மணி சுவாரஸ்யமாய், “அப்பறம் என்னாச்சு?” என்று கதை கேட்க, “அப்பறம் என்ன? அவர் போதும் போதும்ன்னு கெஞ்சுற வரை  அவரை விடவே இல்லை நான்!” என்றவன் சத்தமாய் சிரித்தான்.

ருக்மணியும் அவனோடு சேர்ந்து சிரிக்க, தேவி தான் முகத்தை உம்மென்று வைத்திருந்தார்.

“என்னாச்சு உனக்கு?” ருக்மணி முழங்கையால் இடிக்க, “என் புருஷனுக்கு தொட்டா கூச்சம் வரும்ன்னே இத்தனை வருஷம் போய் இந்த பய சொல்லிதான் தெரியுது! நான் குடும்பம் நடத்துற லட்சணத்தை நினச்சேன்… ஹும்ம்…” மீதியை சொல்லாது அவர் நிறுத்த, ருக்மணியும் ஜேகோப்பும் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தனர்.

அந்த சிரிப்பு சத்தத்தில் அடுப்படியை எட்டிப்பார்த்த ரோஷினி மூக்கில் புகைவண்டி ஓட்டிக்கொண்டு நிற்க, “ஒன்னு கூடிட்டாய்ங்கடி… ஒன்னு கூடிட்டாய்ங்க” என்று கமெண்ட்ரி சொன்னாள் சங்கவி.

“விட மாட்டேன் டி அவனை!

பனை மரத்துல இருக்கும் நுங்கு…

இந்த ரோஷினியை பகைச்சுக்கிட்டவனுக்கு சங்கு…” ரோஷிணி கறுவ, “நான் பாதாம் பால் குடிக்க போறேன்… செம்ம ஸ்மெல்லு…” என அவளை இடித்துத் தள்ளிக்கொண்டு உள்ளே ஓடினாள் சங்கவி.

முதலில் விறைப்பாய் நின்ற ரோஷிணிக்கும் அரோமா ஆளை இழுக்க, ‘சோறா? சொரனையா?’ என்ற போட்டியில் சோறே வென்று, ‘யம்மா, என்னக்கொரு கிளாஸ் குடும்மா’ என அடுத்து கெஞ்ச வைத்துக்கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!