Skip to content
Post Views: 2,809
14
Advertisement
“டேய் என்னடா நினைச்சுட்டு இருக்க நீ? அங்க போனதும் பேசுனவன் தான், அதுக்கு பிறகு ஆளே காணோம்… நீ என்ன பண்றன்னு தேவிக்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க வேண்டியதா இருக்கு!” மறுநாள் மதியம் போல அவன் அலைபேசியில் பிடித்துக்கொண்டார் தேவகி.
“நான் ஒரே பிஸி மாம்மி!” வேண்டுமென்றே கூறினான் ஜேகோப்.
Advertisement
Advertisement
“ஓ… அப்பா, அம்மாவை மறக்குற அளவு பிஸியா?” அவர் கேட்க, “நான் மறந்தா என்ன? அதான் நான் எப்டி இருக்கேன்னு தேவி ஆன்ட்டி சொல்றாங்க தானே?” என்றான் அவன்.
“என்னடா பேசுற நீ? நான் உன்கிட்ட நேரடியா பேசுறதும், நீ எப்படி இருக்கன்னு இன்னொருத்தர் மூலமா தெரிஞ்சுக்குறதும் ஒன்னாகிடுமா?” என்றதும், விளையாட்டு தொனியை கைவிட்டவன்,
Advertisement
“அப்போ அதே மாதிரி தானே பாட்டியும், உங்களுக்காக… உங்க குரலுக்காக ஏங்கிருப்பாங்க? இத்தனை வருஷத்துல அவங்க கூட பேசனும்ன்னு நீங்க ஏன் நினைக்கல மாம்மி?” என்றான் பளிச்சென்று.
அவனது திடீர் தாக்குதலில், மறுமுனையில் கனத்த மௌனம்…!!!
“தேவி ஆன்ட்டிக்கிட்ட பாட்டி எப்படி இருக்காங்கன்னு விசாரிச்சுக்கிட்டா மட்டும் போதுமா? நான் ரெண்டு நாள் பேசலன்னு இவ்ளோ ஃபீல் பண்றீங்க? நீங்க இத்தனை வருஷமா பேசாம, எப்படி இருக்கீங்கன்னு அவங்களுக்கு தெரியப்படுத்தாம இருக்கீங்களே… பாட்டி எப்படி ஃபீல் பண்ணுவாங்கன்னு திங்க் பண்ணீங்களா?” அழுத்தமாக அவன் கேட்க,
“என…க்கு தை…தைரியம் இல்லடா பேச!” அழுகையோடு அவர் சொல்ல, “தப்பு பண்ண மட்டும் தைரியம் இருந்துதா மாம்!” என்றான் சூடாக.
தேவகி மகனின் வாயால் குட்டுப்படுவதில் பேச்சற்றுப்போக, ரிசீவரை வாங்கிய ரிச்சர்ட், “ஜாக்கி…” என்றார் கடினமாக.
அவர் பேசும் முன்னே, “டேட், டோன்ட் ட்ரை டு ப்ரோடெக்ட் ஹர் ப்ளீஸ்! உங்க வைஃப்’ப நீங்க பேம்பர் பண்ணுங்க… தப்பில்லை…! ஆனா, அவங்க செஞ்ச விஷயத்தோட கான்சீக்குவென்சஸ்’ஸ ஷி ஹஸ் டு ஃபேஸ்!” என்றான்.
“லவ் பண்றது தப்பா ஜாக்கி?” ரிச்சர்ட் கேட்க, “நாட் அட் ஆல் டேட்… பட், டிசீவிங் தி ஹோல் பேமிலி இஸ் இன்எக்ஸ்கியூசபில்”
(இல்லவே இல்ல… ஆனா, மொத்த குடும்பத்தையும் ஏமாத்துறது மன்னிக்கவே முடியாத தப்பு) என்றான் ஜேகோப்.
ரிச்சர்ட் மறுமுனையில் அமைதியானார்.
“பாட்டி ரொம்ப அஃபெக்ட் ஆகிருக்காங்க, ஜஸ்ட் பிகாஸ் ஆஃப் டேவ்!” என்றவன், “பல வருஷமா ஸ்ட்ரெஸ்… அது டிப்ரெஷனா மாறிருச்சு… இன்னும் போனா ஸ்ட்ரோக் கூட வரும்” இவன் சொல்லும்போதே, தேவகியின் கேவல் இவன் செவியை அடைத்தது.
“வாட் ஷால் வீ டூ பப்பூ?” ‘ஜாக்கி’ கோவம் போனதால் ‘பப்பூ’ என்று மாறியிருக்க, மெல்ல முறுவலித்த ஜேகோப், “இங்க எல்லாரும் சப்போர்டிவ் தான், எக்சப்ட் மாமா! அதுவும் சரி ஆகிடும்! எப்போ வேணாலும் நீங்க இந்தியா வர மாதிரி இருக்கலாம்! கெட் ரெடி ஃபார் தட்” என்றான்.
அடுத்து சில நிமிடங்கள் தந்தையுடன் பேசிவிட்டு வைத்துவிட்டான். தேவகி இன்று முழுக்க அழுதுக்கொண்டிருப்பார் என்று அவனுக்கு தெரியும். வியாதி போக மருந்துண்டால் தானே சரியாகும்!? ஒரு நாள் அழுகைக்கு மரியாதை செய்தால், இங்கே பாட்டியின் பல வருட துன்பத்திற்கு மரியாதை இராது என்று ‘எல்லாம் நன்மைக்கே’ என அதுப்போக்கில் விட்டுவிட்டு குளிக்க சென்றான் அவன்.
இந்தியன் டாய்லட் இப்போது பழகியிருந்தது அவனுக்கு…!
குளித்து முடித்து வெளியே வர, ஹாலில் கையில் ஃபோனுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தார் தேவி. அன்னை அழுத அழுகைக்கு அவரிடம் இப்படி பேச வாய்ப்பில்லையே!? என்று நினைத்துக்கொண்டே அவன் படியிறங்க, தேவிக்கு பின்னே நின்றிருந்த ரோஷிணி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
கழுத்தை கவ்விபிடித்து உடலோடு ஒட்டியிருந்த வெண்ணிற டீஷர்ட்… சும்மாவே ‘பளிச்…பளிச்’.
அதிலும் இந்த உடையில் கேட்கவும் வேண்டுமா? சுவரில் ஒட்டிக்கொண்டிருந்த டியுப்லைட்டுக்கு தான் கைகால் முளைத்து படியில் இறங்குகிறதோ என்றெண்ணும்படி இருந்தான் அவன்.
அனிச்சையாய் ரோஷிணியின் கண்கள் அவன் மேனியில் படிந்தது. இரு தினங்கள் முன்பு, ‘என்ன பெரிய கலரு? என்னை விட கொஞ்சூண்டு அதிகம்!’ என்று இறுமாப்பாய் அவள் எண்ணியதை போல இப்போது எண்ண முடியவில்லை.
நேற்று அவன், ‘எனக்கு உன்மேல இருக்க ஃபர்ஸ்ட் ‘பேட்’ இம்ப்ரெஷனை சேஞ் பண்ணு’ என இலகுவாய் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
இவளுக்கு தான் ‘எதற்கு? ஏன்? எதனால்?’ இப்படி முதலில் கேள்விகள் முளைக்க, பின்போ, அதெல்லாம் ஒன்று சேர்ந்து, ‘எப்படி?’ என்று மாறிவிட்டது.
‘ஏன்டா இப்படி சொன்ன?’ இப்போது அவனை பார்த்ததும் இது தான் தோன்றியது அவளுக்கு.
அவனுக்கு அதெல்லாம் இல்லை போலும். சிரித்தபடி வந்தவன், ஐவிரல்களையும் மடக்கி அவளிடம் நீட்ட, அவளும் அதேபோல மடக்கி அவனுடன் இடித்தாள்.
அவன் ‘ஹாய்’ சொல்லும் வழக்கம் இது!
அவன் வந்ததும் பேசிக்கொண்டிருந்த தேவி, “டேய் திரவியா, சொன்னேன்’ல என் ஃபிரன்ட் தேவகி பையன் பப்பூ” என்று மொபைலை அவன் முகம் தெரியும்படி நீட்டினார். அலுவலகத்தில் இருப்பான் போலும். ஃபுல் ஃபார்மல்சில் இருந்தான் திரவியன்.
ரோஷிணி தான், “இன்னும் என்னமா ஃபிரன்ட் பையன்? உங்க நாத்தனார் மகன்னு சொல்லி பழகுங்க” என்று கிழவி போல சொல்ல,
“பாரேன்! அது என்னவோ நட்பு பதிஞ்ச அளவுக்கு உறவு பதியல!” தன்போக்கில் சொன்னவரும், “நம்ம சங்கவியோட அத்தை மகன்’டா” என்ற அறிமுகத்தோடு பப்பூ கையில் மொபைலை கொடுத்தார்.
வாங்கிய ஜேகோப், “ஹாய் பையா! திஸ் இஸ் ஜேகோப்!” என்று ஆரம்பிக்க, “சாரி… ஐ ஹேவ் எ மீட்டிங் நவ்… வீ வில் டாக் லேட்டர்” என்ற திரவியன், ஜேகோப் சரியென்பதற்குள் அழைப்பை துண்டித்திருந்தான்.
ரோஷிணிக்கு கோபம் வந்தது. ‘இதென்ன இவ்வளவு நேரம் பேசியவனுக்கு இப்போது இரண்டு வார்த்தை பேசக்கூட முடியாத அளவு மீட்டிங்’கா என்று!?’
தேவிக்கும் கோபம் வந்தாலும் பப்பூவிடம் மகனை விட்டுக்கொடுக்காமல், “அவன் அப்படி தான் பப்பூ… என்கிட்டே கூட பேசிட்டு இருக்கும்போது வேலை வந்துடுச்சுன்னு ஓடிடுவான்!” என்று சமாளிக்க, அதை பெரிதாய் எடுத்துக்கொண்டதை போல ஜேகோப் காட்டிக்கொள்ளவில்லை. எப்போதும் போலவே தான் இருந்தான்.
சத்தியன் அப்போது வேகமாய் வாசலுக்கு போக, “ஏங்க… சாப்பிட்டுட்டு போங்க” அவசரமாக அழைத்தார் தேவி.
“டாக்டர் வந்துருப்பாரு… என்னனு கேட்டுட்டு வரேன்” என்றவர் நிற்காமல் போய்விட, “டாக்டர் எதுக்கு?” என்றான் ஜேகோப்.
தேவி, “வாராவாரம் உங்க பாட்டியை பாக்க ஒரு டாக்டர் வீட்டுக்கே வருவாரு! இன்னைக்கு அவர் செக் பண்ண வர நாளு… அதான் வேகமா போறாரு!” என்று சொல்ல,
“ஓ! அப்போ நானும் போறேன்!” என்ற ஜேகோப் வேகமாய் செல்ல, “நானும் போறேன்” என அவனை வால்ப்பிடித்துக்கொண்டு பின்னே ஓடினாள் ரோஷிணி.
அங்கே அப்போது தான் டாக்டர் வீட்டுக்குள் சென்றுக்கொண்டிருந்தார். வீட்டின் ஆட்கள் எல்லாம் கமலத்தின் அறையில் இருக்க, உள்ளே நுழைந்த டாக்டர் அப்படியே நின்றுவிட்டார்.
சில நொடிகள் தான்! பின்னே அதீத சந்தேகத்துடன், “உண்மையை சொல்லுங்க… வேற ஏதாவது நல்ல டாக்டர் கிட்ட வைத்தியம் பாக்க ஆரம்பிச்சுட்டீங்களா?” என்று கேட்க, ‘இல்லையே…இல்லையே!’ என்றனர் எல்லோரும்.
“அப்பறம் எப்படி மாசக்கணக்கா படுக்கையில கடந்தவங்க, இந்த ஒரு வார கேப்’ல எழுந்து உட்காந்துருக்காங்க?” அவர் குரலில் அப்படியொரு வியப்பு.
ஆம்! பேரன் கொடுத்த தெம்பில் ஒழுங்காய் உண்டு மருந்தெடுத்து இப்போது படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து பேசும் அளவுக்கு அதி விரைவில் கமலத்திடம் முன்னேற்றம் தென்ப்பட்டது.
அப்போது ஜேகோபும் ரோஷினியும் அங்கே வர, “அதோ என் பேரன்… தேவகி பையன்… எல்லாம் அவனை பார்த்ததும் தான் மந்திரம் போட்டது போல நடக்குது.” என்று பெருமிதமாய் அடையாளம் காட்டினார் வீரைய்யன்.
பார்த்துக்கொண்டிருந்த பரமுவிற்கு புசுபுசுவென கோபம் ஏறியது. பல்லைக்கடித்துக்கொண்டு நின்றார்.
டாக்டர் வழமை போல பிபி, சுகர், பல்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு கிளம்ப, “மருந்து?” என்று கேட்டார் வீரைய்யன்.
“அதான் ஆறடில நீங்களே ஒன்னு வச்சுருக்கீங்களே? இதுவே போதும்… இன்னும் சீக்கிரமா சரியாகனும்ன்னா, இந்த ஆறடியை தயார் பண்ண ஆளை கூட்டிட்டு வாங்க! அப்பறம் என்ன? இந்த வருஷ தீபாவளிக்கு கமலம்மா கையாள சுட்ட அதிசரமும் சுழியமும் தான் இந்த ஊருக்கே!!!” அவர் ஜேகோப்’பின் தோளில் தட்டி சொல்லிவிட்டு கிளம்ப, பரமுவை தவிர அங்கிருந்த அத்தனை பேருக்கும் பெரும் நிம்மதி… ஆசுவாசம்… கூடவே மகிழ்ச்சியும்!
கமலத்தை உறங்க சொல்லிவிட்டு எல்லாரும் வெளியேற, வீரைய்யனோ, “பப்பூ, உங்கம்மா’வை வர சொல்லுடா! என் பொண்டாட்டி பரிபூரணமா குணமாகனும்! எனக்கு அதுதான் முக்கியம்!” யாரிடமும் கேட்காமல் அவரே சொல்ல,
“அவ வந்தா நான் இங்க இருக்க மாட்டேன்” என்று ஆரம்பித்தார் பரமு.
எல்லோரும் ஒருவித எரிச்சலில் தான் அவரை பார்த்தனர்.
“என்னடா பேசுற? அவ வந்தா தான் உங்கம்மா சரியாவாளாம்! கேட்டீல நீயே? உங்க அம்மா உயிரை விட வீம்பு முக்கியமா உனக்கு?” வீரைய்யன் கேட்க,
“அவ போனதால தான் அவங்களுக்கு இந்த நிலைமையே! அது ஏன் புரியல உங்களுக்கு?” என்று கத்திய பரமு,
“இந்த வீட்டுல அவ காலடி பட நான் விட மாட்டேன்… மீறி வந்தா இனி ஆயுசுக்கும் என் காலு இந்த வீட்டு படியை மிதிக்காது” ஆக்ரோஷத்துடன் சொல்லிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து வெளியேறினார் பரமேஸ்வரன்.
ஜேகோப் பார்த்த தெலுங்கு பட வில்லனை விட ஆக்ரோஷத்துடன் ஆத்திரமாய் அவர் கத்திவிட்டு போக, அவனோ ‘அடுத்து என்ன?’ என்பதை போல வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றான். அவனால் ஒன்றும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை.
அவன் தோளை தொட்ட வீரைய்யன், “அவன் அப்படி தான்! அப்படி வளர்த்து வச்சுட்டேன் நானு… எல்லாம் என் தப்பு!” என்று கலங்க, அவர் கரத்தை ஆதரவாய் பற்றினான் ஜேகோப்.
“மாறுவான்… மாறுவான்னு நம்புவோம்! அதுவரைக்கும் என்ன நடக்குதோ நடக்கட்டும் எல்லாம் விதி விட்ட வழி” என்றவர், “ஆனா, நீ வேணா பாரு பப்பூ, இந்த கத்து கத்திட்டு போற உன் மாமனே உங்க அம்மாவுக்கு ஃபோன் போட்டு ‘இங்க வா’ன்னு கூப்பிடுவானா இல்லையான்னு பாரு!” என்றார்.
அவர் ஏதோ ஆதங்கத்தில் தன் ஆசையை சொல்லிவிட்டு போக, அது அந்த வாரமே ஆரூடம் போல பலிக்கும் என்று யாருக்கு தெரியும்!? ஏன், அவருக்கே கூட தெரியாதே!?
error: Content is protected !!