Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 17.2

உதய்யுடன் வந்த ஆட்கள் அங்கிருந்த மற்ற இருவரிடம் என்ன நடந்ததென்ன கேட்டு கொண்டிருக்க அதில் வந்த பதிலில் சிலையாய் மாறி நின்றான் உதய்.

“யோவ் இப்ப எதுக்கு இங்க சலம்பிட்டு இருக்கீங்க… அவன் போதை கேட்டான் குடுத்தோம் இப்ப துட்டு தராம எங்களை பாடா படுத்துறான். காசு இல்ல ஆனா கோவம் மட்டும் அவன் அம்மா மேல கை வச்ச மாதிரி வரு…” 

அந்த மனிதன் மீதி பேசும் முன் உதய் அவன் கன்னத்தில் ஓங்கி குத்தி இருந்தான்… அந்த சிறுவனின் கை அவன் மீது பெரிதாக வலி கொடுக்காவிட்டாலும் ஒரு மனிதனிற்கே உரிய கெளரவம் உதய்க்கு அந்த அடியை மீண்டும் கொடுத்தான்.

அவ்வளவு நேரம் தரையில் கிடந்த ஆதி, நண்பன் மீது ஒருவன் கை வைத்ததும் அடங்காத காளையாய் எழுந்து அங்கிருந்தவர்களை தன்னால் முயன்ற அளவிற்கு அடிக்க ஆரமித்தான்… அதில் ஒருவன் கோவத்தில் ஆதியை கத்தியால் குத்த வர அதை கவனித்த உதய் அவனை தரையில் சாய்க்க மற்றொருவன் உதய்யின் கையில் கத்தியை கொண்டு பலமாக காயம் ஏற்படுத்தினான்… அதற்குள் அங்கு நடந்த கலவரம் தெரிந்து மற்றவர்கள் உதய்யை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்…



Advertisement

உதய்யின் ரத்தம் படிந்த கையை பார்த்த ஆதி நின்ற இடத்தில உறைந்தான். 

பிறகு இரண்டு வாரங்கள் தனக்கு அருகில் ஆதியை உதய் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து தனது உறவுகளின் பிரிவினை தாங்க இயலாது கயாத்திரியின் மடியில் படுத்து அழுகையில் கரைந்தான்.

“ஏன் மா எனக்கு மட்டும் இப்டி எல்லாம் நடக்குது? அப்பா போனத முழுசா ஜீரணிக்கிறதுக்குள்ள அம்மா ஒரே மாசத்துல போய்ட்டாங்க. சந்தோசத்தை மட்டும் வாரி வாரி குடுத்துட்டு இப்புடி மொத்தமா ரெண்டு பேரும் எடுத்துட்டு போய்ட்டாங்க. இது வரைக்கும் ஒரு அஞ்சு ரூபா காசு எப்டி வருதுன்னு எனக்கு தெரியாது… நேத்து வீட்டுல சோப்பு தீந்து போச்சுன்னு சஹானா சொன்னா நா காசுக்கு எங்க போவேன் மா? அடுத்து பால்காரு வந்து நிக்கிறாரு… 

Advertisement

பசிக்கிதுன்னு சஹானா வந்து என் முகத்தை பாக்குறப்ப அப்டியே செத்துரலாம் போல இருக்கு மா… இப்டி தெனமும் ஒன்னு ஒன்னு. இந்த எல்லா பிரச்னைலயும் இருக்குற ஒரே ஆறுதல், ‘பாத்துக்கலாம் விட்றா’-னு என் தோள்ல கை போட்டு சொல்ற அவன் ஒரு வார்த்தை மட்டும் தான். ஆனா இப்ப அதுவும் இல்ல. பேசாம நீங்க சஹானாவை தத்தெடுத்துக்குறீங்களா நா எங்கயாச்சும் போய்டுறேன்” என்றவன் கண்களில் இருந்த கண்ணீரும்,மொழியில் இருந்த வலியும் அவனை மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த உதய்யின் கண்களிலும் நீரை வர வைத்தது.

Advertisement

“என்னடா லூசு மாதிரி பேசிட்டு இருக்க” கயாத்திரியின் கண்களும் கலங்க ஆரமித்தது அவன் பேச்சில், “அவ உன் தங்கச்சிடா நீ வெறும் தண்ணிய குடுத்தா கூட குடிச்சுக்குவா. அப்டி அவளை நா தத்தெடுக்கணும்னா நீயும் இந்த வீட்டுக்கு வந்துரு. உன்ன மட்டும் தனியா விட்டுட்டு நாங்க இங்க தெனம் தெனம் மனசுக்குள்ள செதுக்கிட்டு இருக்கவா? ஆனாலும் நீ பண்ணது ரொம்ப பெரிய தப்பு ஆதி. அது தான் உதய் உன்கிட்ட இன்னும் பேசாம இருக்கான்”

“மா இனிமே இந்த மாதிரி எதுவும் நா பண்ண மாட்டேன் மா. என்ன அடிக்க கூட சொல்லுங்க ஆனா இப்டி பேசாம மட்டும் இருக்க சொல்லாதீங்க என்னமோ மனசு ரொம்ப வலிக்கிது. இவன் பேசாதனால அவனுகளும் பேச மாட்டிக்கிறாங்க. ப்ளீஸ் மா பேச சொல்லுங்க… நீங்க சொன்னா கண்டிப்பா அவன் கேப்பான்” என்று அவர் கைகளை புடித்து கெஞ்சியவனை இனி அழுகையில் பார்க்க விரும்பாது அழுந்த தன் கண்களை துடைத்து ஆதியை அழைத்தான்.

“டேய் அங்க என்னடா பண்ணிட்டு இருக்க? மேல வா” அவன் குரல் கேட்டதும் மீண்டும் உயிர் பெற்றவன் போல் மாடி படியை நோக்கி ஓடியவனை மீண்டும் உதய் தடுத்தான், “நில்லு…” 

Advertisement

ஆதி கேள்வியாய் அவனை பார்க்க, “இனிமே இந்த மாதிரி நடந்தது அன்னையோட இந்த உதய் உன் வாழ்க்கைல இல்ல. போதைனு ஒன்ன இனி தொட மாட்டேன்னு நீ உறுதியா இருந்தா மேல வா” இந்த குரலை கேட்க தானே தவமாய் இருந்தான்? அதனால் யோசிக்காமல் நண்பனுக்கு செய்யும் சத்தியமாக படியில் கால் வைத்து மேல தாவி சென்றான்.

அந்த உயர் ரக கார் தார் சாலையில் பெரும் கீச்சலுடன் அந்த போலீஸ் ஸ்டேஷன் முன்னாள் வந்து நின்றது. அதிலிருந்து வேகமாக இறங்கிய ஆதவன் தனது கை சட்டையை முட்டி வரை மடித்து விட்டு வெளியில் நிற்கும் உதய்யின் ஆட்களை தீ பார்வை பார்த்து எதுவும் பேசாமல் உள்ளே சென்றான். மணி மூன்று அதனால் ஆள் அரவமற்று காட்சியளித்தது அந்த இடமே.

உள்ளே சென்றவன் அங்கு தூங்கிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டரை பார்த்து கோவம் கண்களை மறைத்தது. பல்லை கடித்து அங்கிருந்த கணினியை தூக்கி எறிந்தான். அதில் பதறி எழுந்த இன்ஸ்பெக்டர் இவனை பார்த்ததும் கண்களை துடைத்து, “சார் நீங்களா?” என்றான் அதிர்ச்சியில். அங்கு இருந்த மற்ற காவல்துறையினர் ஆதவனை தாக்கும் பொருட்டு நெருங்கி வர அவர்களை தன் பார்வையாலே நிறுத்தி வைத்தான்.

“வேற் ஐஸ் ஹி?” அவனது அழுத்தமான ஆளுமை நிறைந்த குரல் அந்த இடத்தையே அசைத்து பார்த்தது உண்மை தான்…

“லாக்கர்ல இருக்கான் சார். நாளைக்கு கண்டிப்பா உதய் சார் சொன்ன மாதிரி எப்.ஐ.ஆர் போட்டுடலாம் சார் ஒரு த்ரீ ஹௌர்ஸ் வெயிட் பண்ணுங்க அடுத்து ரெண்டு வருஷம் வெளியவே வர முடியாத மாதிரி ரெண்டு மூணு கேஸ் சேத்து போட்றேன் சார்…”

தனது அமைதியை சிறிதும் இழக்காமல் மெதுவாக அந்த இன்ஸ்பெக்டர் அருகில் சென்று நின்றவன் அவன் உயரத்திற்கு கீழே பார்த்து, “எங்க பண்ணுடா பாக்கலாம்” என்றான் சவால் விடும் பொருட்டு.

அவன் பதிலில் குழம்பிய அந்த இன்ஸ்பெக்டர், “சார்…” என்றான் பயத்தில்.

“ம்ம்ம் போடு ரெண்டு வருஷம் ரொம்ப கம்மி பாத்து வருஷம் உள்ள இருக்க மாதிரி போடு விடு… ஆனா அவன் உள்ள இனி இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் உன் வேலை உன்ன விட்டு தூரமா போயிட்டே இருக்கும்… டேய் ஆதி வாடா” என்றான் நண்பன் எங்கிருக்கிறான் என்று தெரியாமலே…

“முடியாது” மிகுந்த சோர்வுடன் ஆனால் உறுதியுடன் வந்தது ஆதியின் மெல்லிய குரல் ஆனால் ஆதவனின் ஆளுமையான பார்வையில் அந்த அமைதியான இரவில் அது தெளிவாக அங்கிருந்த அனைவர் காதிலும் விழுந்தது.

ஆதியின் பேச்சு கேட்டும் அவன் புறம் திரும்பாமல், “போய் அவனை தொறந்து விடு” என்றான் ஆணையாய் மூர்க்கமான குரலில்…

“சார் லாக்கர்ல இருக்க கிரிமினல இப்டி வெளிய விட முடியாது சார்” என்றான் அந்த இன்ஸ்பெக்டர் பயத்துடன்.

“ஓ அப்ப எப்.ஐ.ஆர் எடு”

ஒரு நடுக்கத்துடன், “இல்ல சார் எப்.ஐ.ஆர் இன்னும் போடல”

“ஒகே அப்ப எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த?” ஆதவன் கேள்விகளை கேட்க ஆரமித்த பொழுது அங்கே அவன் நண்பன் ஒருவன் வக்கீலுடன் வர அவன் பின்னாலே ஜெயன் பதட்டத்துடன் வந்தான்…

“சார் அவரு கஞ்சா வித்துருக்காரு அவர் பாக்கெட்ல இருந்து நானே எடுத்தேன்” என்றான் ஒரு வித தைரியத்தை வரவழைத்து…

“ஆதாரம் எடு”

திருட்டு முழி முழித்தவன், “சார் நா என் கண்ணாலேயே பாத்தேன் சார் கான்ஸ்டபில் தா செக் பண்ணுனாரு” என்றான் அந்த இன்ஸ்பெக்டர்…

“ஆதாரம் எடு” என்றான் மீண்டும் தான் புடித்த புடியிலேயே…

“டேய் நீ அப்றம் பேசு… யோவ் எங்கயா அவன்? அவன் மேல கை மட்டும் வச்சிரு அடுத்த நிமிஷம் உன் ஒடம்புல கை இருக்காது” ஆத்திரமாய் ஆதவன் கர்ஜிக்க அந்த இன்ஸ்பெக்டர் துணை இல்லாது விழித்தான்…

விழி பிதுங்கி செயலற்று நின்றான்… ‘அதுவும் ஆதியின் நிலையை பார்த்தல் நிச்சயமாக ஆதவனின் எச்சரிக்கை படியே கையுடன் சேர்த்து தலையையும் எடுத்து விடுவார்களே…’ பயம் உச்சந்தலைக்கு ஏற, உடல் நடுங்க ஆரமித்தது…

“லாக்அப்-ல இருக்கான் சார்…”

ஆதவன் வேகமாக அந்த இன்ஸ்பெக்டர் காண்பித்த லாக்அப்பிற்குள் உள்ளே சென்றான்… உள்ளே சென்றவன் ஆதியின் நிலையை பார்த்ததும் அதிர்ந்து நின்றுவிட்டான்…

ஒரே நொடி தான் சென்ற வேகத்திலேயே வந்தவன் அந்த இன்ஸ்பெக்டரின் சட்டை காலரை கொத்தாக பற்றி தரையிலிருந்து ஒரு அடி மேலே தூக்கி, “என்னடா பண்ணி வச்சிருக்க அவன….” ஆதவனின் கர்ஜனையை அந்த இடமே அதிர்ந்தது…

“ஜெயன் டாக்டர்” ஆதவனின் உத்தரவை ஜெயன் நொடியில் செய்துவிட ஆதவனை அந்த இன்ஸ்பெக்டரிடம் பிரித்து நிறுத்தினான்…

ஆதவனின் அக்னி பார்வையை சமாளிக்க இயலாது நடுக்கத்துடன், “சார் நா எதுவும் பண்ணல சார் ஈஸ்…”

“ஆட்டத்த நீ ஆடிட்ட இனி இத நா முடிச்சு வைக்கிறேன்”

தனது அலைபேசி எடுத்தவன் ஒரு எஸ்.எம்.எஸ் மட்டும் அனுப்பி ஆதி இருந்த செல் நோக்கி வேகமாக சென்ற ஐந்தாவது நிமிடம் அந்த இன்ஸ்பெக்டர் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக தொலைநகல்(fax) வந்து அவன் வேறை ஆட்டியது…

சிட்டாக விரைந்த ஆதவன், ஆதி இருந்த கோலத்தை பார்த்து பதறினான்… சுவற்றில் சாய்ந்து முட்டியை மறுப்புக்கு முட்டு கொடுத்து சுவற்றை வெறித்து பார்த்து அமர்ந்திருந்தான் ஆனால் அவன் உடலில் இருந்த ரத்த காயங்கள் அப்பட்டமாய் வெளியில் தெரிந்தது… நெற்றியில், கைகளில், வலது கன்னத்தில், காக்கி கால்ச்சட்டையை தாண்டி வழிந்த ரத்தம் என ரத்த களறியாய் இருந்தவனை பார்த்து உடலே நடுங்கியது உதய்க்கு… ஆனால் ஆதியோ எந்த உணர்ச்சியையும் கண்களில் காட்டாமல் ஜடமாய் அமர்ந்திருந்தான்…

“ஜெயன் டாக்டர் எங்க?” பதட்டத்துடன் ஜெயனிடம் தன் கோவத்தை இறக்கினான்…

“சார் இப்ப வந்துருவாரு சார்” என்று ஜெயன் மீண்டும் அந்த மருத்துவருக்கு அழைக்க வெளியில் சென்றுவிட…

தன்னையே மிரட்சியுடன் பார்த்து நின்ற கான்ஸ்டபிளிடம், “பர்ஸ்ட் எயிட் பாக்ஸ் எங்க?”

“ஆஹ்??” அவன் பேசியது விழியில் விழுந்தாலும் காதில் விழவில்லை அவன் சற்று முன்னர் நிகழ்த்திய அதிரடியால்…

“பர்ஸ்ட் எயிட்” என்று கத்தினான்… இரண்டே நொடியில் அந்த கான்ஸ்டபில் முதலுதவி பெட்டியுடன் வந்து நின்றான்…

அதிலிருந்த காட்டனை எடுத்து முதலில் ஆதியின் நெற்றியில் இருந்த ரத்தத்தை துடைக்க சென்றவன் கைகளை ஆதி தட்டி விட்டான்…

தன் மீது கோபமாக இருக்கிறான் என்று மீண்டும் அதை துடைக்க செல்ல இப்பொழுதும் ஆதி அவன் கையை தட்டி விட்டான் அதில் கோபத்துடன், “என்னடா நெனச்சிட்டு இருக்க நீ மூடிட்டு அமைதியா இரு” குரலை உயர்த்தி ஆதியை அடக்க நினைத்தான் ஆதவன் …

ஆனால் ஆதி அதற்க்கு சற்றும் அசராமல், “வெளிய போ” நிதானமாய் ஆனால் அழுத்தமாய் இருந்தது. முதல் முறை ஆதவனின் நெருக்கத்தை ஆதி தவிர்க்க விரும்பினான் ஏதோ அவனை பார்க்கவே புடிக்கவில்லை.

“அமைதியா இருடா எதுவா இருந்தாலும் அப்றம் பேசிக்கலாம்” ஆதிக்கு பதிலளிக்க நேரம் கொடுக்காமல் அவன் ரத்தத்தை துடைத்து விட்டான்… இம்முறை அவன் கையை மெதுவாக தள்ளி நிறுத்தியவன் சற்று நகர்ந்து அமர்ந்து, “பேசுறதுக்கு ஒன்னும் இல்ல நீங்க போங்க மிஸ்டர் ஆதவன்”

“சரி நா பேசல பிளட் வந்துட்டே இருக்கு டாக்டர் வர்ற வரைக்கும் அமைதியா இரு அவர் வந்ததும் அவரே உனக்கு டிரீட்மென்ட் குடுப்பாரு” ஏற்கனவே முதுகில் இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு முன்பு தான் வெட்டு காயத்துடன் உயிர் பிழைதான் இப்பொழுது மீண்டும் இந்த நிலையா என்று உதய்யின் உள்ளம் மடிந்து கொண்டிருந்தது… காலையில் பேசியது, அவன் மேல் ஆண்டுகளாய் இருந்த கோபம் என அனைத்தையும் தூக்கி எரிந்து அவன் முன் அமர்ந்து இருந்தான்.

அவ்வளவு நேரம் சுவற்றை பார்த்து அமைத்திருந்தவன் இப்பொழுது ஆதவன் புறம் திரும்பி இளக்காரமாக சிரிப்பை உதடுகளில் வைத்து கண்களில் வெறுப்பும் ஏமாற்றத்தையும் வைத்து, “ஓஓ போலீஸால முடியலன்னு டாக்டர் வச்சு என் கதையை முடிச்சிரலாம்னு அவன் சொல்லி அனுப்புனானா?” மிஸ்டர் ஆதவன் என்று தன்னை மூன்றாம் மனிதர் போல் பெயரை கூறி அழைத்த பொழுதே பாதி உடைத்திருந்தவன் இப்பொழுதும் முழுதும் உடைந்திருந்தான்

அப்பொழுது தான் வக்கீலுடன் பேசி முடித்திருந்த ஜெயன் அந்த வந்த பொழுது ஆதியின் வார்த்தை தீயாய் அவனுள் இறங்கியது… அவன் பேச்சில் இருந்த கோவமும் வெறுப்பும் புரிந்தவன் முதலில் ஆதவனின் முகத்தை தான் பார்த்தான்…

“என்னடா பேச்சு இது?” ஆதவன் அதட்டல் மொழி எதுவும் ஆதியின் செவியில் விழவில்லை.

“உண்மை தான இவனுக்கு…ஸ்ஸ்ஸ் சாரி சாரி இவருக்கு ஆளுங்கள கொல்லுறது புதுசு இல்லையே…”

“ம்ம்ம் சரி தான் ஆனா அவன் இப்ப முடிவை மாத்திட்டான். தன்னோட எதிரி பலசாலியா இருக்கனும்னல” என்று ஆதியின் கையை பிடித்தவன் அதிலிருந்த ரத்தத்திற்கு மருந்திட்டு கொண்டிருந்தான் ஆதவன் முகம் மட்டும் அவனை பார்த்த தவிர்த்து அவன் கைகளில் இருந்த ஆழமான காயத்தை பார்த்து என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடியாதவன் ஆதியின் கோவத்தை எல்லாம் கண்டுகொல்லாமல் அவனுக்கு முதலுதவி செய்ய மட்டுமே முனைப்பாய் இருந்தான்,

“அதுக்காக தான் இப்ப உன்ன காப்பாத்த நெனக்கிறான். அதுவும் இல்லாம உன்ன நம்பி வீட்டுல ஒரு பொண்ணு இருக்கு அதுக்காக மட்டும் தான் உன்ன இப்ப விடுறான். சீக்கிரம் சரியாகி வாங்க ஆதி கேசவன் அவனை முழுசா தெரிஞ்சிகிட்ட ஒருத்தன் தான் தனக்கு எதிரியா இருக்கது தான் அவனுக்கு பெருமை”

“இல்ல அவனை இந்த உலகத்துல யாராலயும் முழுசா புரிஞ்சிக்க முடியல… இத்தனை வருஷம் என்னோட கணக்கு எல்லாமே தப்பா தான் போயிருக்கு… எனக்கு நல்லா தெரிஞ்சவன் குடும்பத்தை பாதிலேயே விட்டுட்டு வர மாட்டான், உயிருக்கு உயிரா நெனச்ச பிரன்ட பலி வாங்க துடிக்க மாட்டான்” கோவத்தின் உச்சத்தில் இருந்தவன் முதல் முறை தன் உயிருக்கு நிகராக நினைக்கும் நண்பன் கண்ணீருக்கு தானே காரணம் ஆனான்…

ஆதி பேசியதை அனைத்தும் ஜெயன் மூலம் கேட்டுக்கொண்டிருக, ஆதியின் வார்த்தை இதயத்தை கிழிக்க ஒரு சொட்டு கண்ணீர் உதய்யும் அறியாமல் கீழே சிந்தியது நொடியில் சிரிப்பில் அதை உள் வாங்கினான், “நீங்க வேனனும்னா என்ன கொல்லுறதுல இருந்து பின் வாங்கியிருக்கலாம் ஆனா நா செத்துட்டேன்… எல்லாத்தையுமே மனசலவுல யோசிச்சு யோசிச்சு செய்றவன் போய்ட்டான். இனி இந்த ஆதி கிறுக்குத் தனமா இருக்க போறான் நீங்க என்னலாம் நா பண்ண மாட்டேன்னு நெனைக்கிறிங்களோ அதெல்லாம் இனி பண்ணுவேன்… இனி உங்களோட ஆட்டத்தை அழிச்சிட்டு தான் இந்த ஆதி ஓயிவான்”

‘சோப்பா போதும்டா சாமி’ மனதில் நினைத்த உதய் இணைப்பை துண்டித்திருந்தான்.

“எப்படி சார் அடுத்தவங்க தூக்கத்தை அவனை மாதிரி மனுசங்க எல்லாம் மொத்தமா எடுத்துட்டு நிம்மதியா தூங்குறாங்க…?”

“அவனை வீட்டுக்கு பத்திரமா கொண்டு போய் விட்டுட்டு வீட்டுக்கு போங்க… நான் வீட்டுல இல்ல, என்னை தேடி எங்கையும் போக வேணாம் ஜெயன்” ஜெயனிடம் குறுந்செய்தி மூலம் உத்தரவிட்டவன் தனது காரினை தனது தாயின் கல்லறைக்கு விரைந்தான்… மனதில் உள்ள பாரம் தீர கரையும் ஒரே இடம் அவன் தாய் மாடி தானே.

இங்கே ஆதியின் காயத்திற்கு காயமிட்ட ஆதவன் ஆதியிடம் மறந்தும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவனுக்கு இந்த நிலையில் யாருக்கு உறுதுணையாய் நிற்க வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது ஆதி எதையோ தவறாக நினைத்திருக்கிறான்… அதே நேரம் உதய்யின் மனது பெரிதும் காயப்பட்டிருக்கும் என்றும் அவன் அறிவான்.

“என்னடா அவன் பண்ணத சொல்லி காமிச்சா உனக்கு கோவம் வருதா?”

“…..”

“பேசுடா உன்கிட்ட தான கேக்குறேன்” – ஆதி

“முதுகுல எதுவும் வலி இருக்கா?” – ஆதவன்

“ஓஓ பேச்ச மாதிரியா சரி தான் இத்தனை வருஷம் அவன் கூட இருந்துருக்கல அவன் புத்தி உனக்கு கொஞ்சமாச்சு வரலாமா இருக்குமா என்ன?” – ஆதி

“அவனை பத்தி உனக்கு என்ன தெரியும்ன்னு இப்ப இப்டி பேசிட்டு இருக்க?” நிதானமாய் கேள்வி கேட்டான் ஆதவன்… கோவமாய் இருக்கும் ஆதியை சமாளிக்க கோவத்தை கையில் எடுத்தால் நிச்சயம் அது தவறான பாதையில் தான் முடியும் அதனாலே இந்த அமைதி. இல்லையெனில் ஆதவன் விரல்கள் ஆதியின் கன்னத்தை பதம் பார்க்க தயங்காது.

“அவனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும் ரொம்ப நல்லா தான் தெரியும் கூட நான் எங்கையோ செத்துட்டு இருக்கேன்னு தெரிஞ்சு நிம்மதியா அவன் தூங்குவானே அதுக்கு என்ன அர்த்தம்?” – ஆதி

ஆதியின் வார்த்தைகள் அனைத்தும் ஆதவனை குற்றஉணர்ச்சிக்கு உள்ளாக்கியது… அவன் படும் வேதனைகளை வெளியில் தெரிய கூடாதென்று சத்தியம் அல்லவா வாங்கியிருக்கிறேன் அந்த அழுத்தக்காரன்.

ஆதியை கை தாங்கலாய் தூக்கியவன், “நீ அவனை தெரிஞ்சிக்கிட்டது அவ்ளோ தான்… என்னமோ சொன்ன அவன் நிம்மதியா தூங்க போறான்னு உனக்கு எங்கடா தெரியும் அவன் தூக்கத்தை பத்தி” அந்த நேரம் சரியாக மருத்துவர் வந்திருக்க அவன் காயங்களை ஆராய்ந்தவர் ஆன்டிசெப்டிக் ஊசியும், ப்பைன் கில்லர் ஒன்றும் குடுத்து அவன் முதுகில் இருந்த காயத்தை ஆராய்ந்து அவனை ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார்.

ஆதியின் வீட்டிற்கு அலைந்து வந்த ஆதவன் அவனை வீட்டிற்குள் படுக்க வைத்து சஹானாவிடம், “உன் அண்ணனை வாய கொறச்சு பேச சொல்லு இல்ல வாய ஒடச்சிருவேன்… என்னமோ பெரிய வில்லன் ரேஞ்சுக்கு பேசுறான்” என்ன நடக்கின்றது என்று தெரியாமல் விழித்தவள் கண்களிலிருந்து ஆதியின் நிலையை பார்த்து கண்ணீர் ஆர்ப்பரித்தது அதை பார்த்தவன் தன்னை நிதானித்து அவளிடம் எதுவும் பேசாமல் கோவமாக கதவை சாத்தி சென்றுவிட்டான்.

மறுபுறம் தாயின் மடியில் தேற்றார் இல்லாமல் சரிந்து கிடந்தான் உதய்… தனக்கு மேலும் மேலும் சோதனைகள் வர போவது தெரியாமல்…

“என் உயிரையே கொல்லுற அளவுக்கா ம்மா நான் மோசமானவன்? எப்படி பேசித்தான் பாருங்க ம்மா” கேட்ட வார்த்தைகள் எதுவும் அவ்வளவு எளிதாய் ஜீரணிக்கும்படி இல்லையே…

How is the chapter? Please Comment…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!