Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக்

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 18 2

ரிச்சர்ட்க்கு பெரிய அதிர்ச்சி இல்லை. இதெல்லாம் தான் அவர்கள் குணம் என முன்பே அனுபவப்பட்டதால் அவன் சொன்னதை கிரகித்துக்கொண்டு அமைதியாய் இருக்க, தேவகியாலும் மகன் சொல்லி கேள்வியுற்ற தேவியின் பேச்சை  ஜீரணிக்க முடியவில்லை.

கனத்த அமைதிக்கு பின்னே, “சரி இப்போ என்ன? சங்கவிக்கூட உனக்கு கல்யாணம்… அதை பத்தி பேச எங்களை வர சொல்லிருக்காங்க.. அதானே? நல்லபடியா முடிஞ்சுடும் எல்லாம்! நீ வொர்ரி பண்ணாத” தேவகி ஆறுதல் சொல்ல, முன்சீட்டில் இருந்து சட்டென நாற்பத்தி ஐந்து  டிகிரி பின்னோக்கி திரும்பியவன்,



Advertisement

“என்ன முடிஞ்சுடும்?” என்றான் திகைத்து.

“மேரேஜ்?”

Advertisement

Advertisement

“நோ…நோஓஓ…” அலறியவன்,  “அவங்க மேரேஜ் பத்தி பேசுனா, ஸ்டபர்ன்’னா நீங்க ‘நோ’ சொல்லணும்!” என்று சொல்ல, இருவருமே ஒருவரையொருவர் குழம்பிப்போய் பார்த்துக்கொண்டனர்.

ரிச்சர்ட், “நீ லவ் பண்ற தானே சங்கவிய?”

Advertisement

ஜேகோப் வெளிறிய முகத்துடன், “வென் டிட் ஐ டெல் யூ லைக் தட்?” என்றான். (நான் எப்போ அப்படி சொன்னேன்?)

இம்முறை தேவகி வெளிறிய முகத்துடன், “அன்னைக்கு நைட் வீடியோ கால்ல சொன்னியே… நம்ம போட்ட சேலஞ்’ல நான் வின் பண்ணிட்டேன்னு!” என்று கேட்க,

“அப்கோர்ஸ், யூ வொன் தி சேலஞ்” என்றான் ஜேகோப்.

(கண்டிப்பா… நீங்க அதுல ஜெய்ச்சுட்டீங்க தான்)

“என்னடா குழப்புற? என் அண்ணன் பொண்ணை லவ் பண்ணிடுவன்னு தானே சேலஞ் பண்ணேன்! அதான் நீ லவ் பண்றியே… பிறகென்ன?” தேவகி எரிச்சலாய் கேட்க,

“ஆஆஆ… மாம்… தட் பரமு மட்டும் தான் உங்க அண்ணன்’னா? சத்தியன் அங்கிள் உங்க அண்ணன் இல்லையா?” என்று அவருக்கு மீறிய எரிச்சலுடன் வினவ, அவன் சொன்ன செய்தி புரிந்ததில் ‘சொத்’ என பின்சீட்டில் தளர்ந்து சாய்ந்தார் தேவகி. ரிச்சர்டுக்குமே இது அதிர்ச்சி!

அதிர்ச்சியில் சில நொடிகள் அப்படியே இருந்த தேவகி, பின் தன்னை தேற்றி, “அப்போ நீ லவ் பண்ணது சங்கவிய இல்ல?” என்று வினவ,

“இல்ல” என்றான் பட்டென.

“ரோஷிணிய தான் லவ் பண்ற!?” அவர் கேட்டதும், அவன் சொன்ன ‘ம்ம்ம்’மிலே அத்தனை இதம்…!

மேலும் சிறிது நேரம் அசாத்திய அமைதி அந்த காருக்குள்…!

அப்படியே அமர்ந்திருந்த தேவகி, திடீரென, “ஏன்டா?” என்றார் அழுவதை போல.

“என்ன ஏன்டா?” அவன் திரும்பி கேட்க, “கண்ணுக்கு லட்சணமா மாமன் பொண்ணு இருக்குல.. அதை லவ் பண்ண வேண்டியது தானே?” அவர் கேட்க, இவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

“வாட் டு டு மாம்! இந்த ‘ஜாக்’க்கு அந்த ‘ரோஸ்’ தான்னு டிசைட் ஆகிடுச்சு” அவளை நினைத்துக்கொண்டே அவன் ரசித்து சொல்ல,

“இதே வாயி தான், பொண்ணா அவ? ஃபிராடு, போர் டுவண்டி, இன்கார்ஜிபில் இடியட், சென்ஸ்லெஸ் ஃபூல்… இன்னும் ப்ளா ப்ளா’ன்னு திட்டுச்சு!” அவர் பழைய கதையை கிளற, அவனோ அன்று பார்த்த காமெடி கிளிப்பிங்க்ஸ் நினைவில்,

“அது போன மாசம்!!!” என்று சொல்ல, “அப்போ இந்த மாசம்?” என்று கொக்கிப்போட்டார் தேவகி.

ஆழமாய் மூச்சை விட்டவன், “அவ என் பட்டுக்குட்டி… தங்கக்கட்டி…” என்று குழந்தையை கொஞ்சுவது போல இழுக்க, “எலிஃபன்ட்(யானை) குட்டி” என்று சிரித்தார் ரிச்சர்ட். அதைக்கேட்டு இவனும் வாய்விட்டு சிரித்துக்கொண்டே, “நோ..நோ… நான் உங்க ஆள சொல்லலை” என்று கண்ணடிக்க,  தேவகி எக்கி அவன் தலையிலேயே கொட்டினார்.

ஆனாலும் அவரால் நம்பவே முடியவில்லை. ரோஷிணியிடம் இவனுக்கு காதல் வரும் என்று கொஞ்சம் கூட தோன்றவில்லை அவருக்கு.

முப்பது வயது ஆகப்போகிறது, இப்போது வரை ஒரு கேர்ள்ஃபிரன்ட் இருந்ததில்லை. அதாவது காதலி! எந்த பெண் மீதும் அவன் மிகுந்த ஈடுப்பாடு கொண்டும் அவர் பார்த்ததில்லை. பெண் தோழிகளை வீட்டிற்கு கூட அழைத்து வந்திருக்கிறான். ஆனால், எல்லாம் தோழிகள் என்ற வரையறையுள் மட்டுமே தான்! அதை அவன் மீறியதே இல்லை.

கேட்கும்போதெல்லாம், ‘எனக்கு தோணனும் மாம்மி! ஒரு பொண்ணை பார்த்தா அவ தான் எனக்குன்னு தோணனும்!’ என்று ஜிவிஎம் ஹீரோ போல டயலாகடிப்பான்.

அப்படிப்பட்டவன், எப்படி இப்படி? என்று நம்பகமிலாத்தன்மை அவருக்கு.

அதை அடக்க முடியாது, “எப்படி டா?” என்றார் மீண்டுமாய்.

“என்னம்மா?” இப்போது அவன் கடுப்பாக கேட்க, “அதெப்டி சுவிட்ச் போட்ட மாதிரி லவ் வந்துது?” என்று கேட்க, அதையே அவனும் அவரிடம் திருப்பிக்கேட்க வெகு நேரம் ஆகாது என்றாலும், தனக்கு தெரிந்த வரை சொல்ல முயன்றான்.

“சீரியஸ்ஸா தெரியல மாம்! அவளை பர்ஸ்ட் டைம் பார்த்தப்போவே அவளை பிடிச்சுது! திரும்பி ஒருமுறை பார்க்கணும்ன்னு தோணுச்சு! அவ என்னை முறைச்சுட்டே இருந்தது கூட ஒரு காரணம்!  அவக்கூட பேசணும், பழகணும்ன்னு தோணுச்சு! அவளே என்கூட அசிஸ்ட் பண்ண வரேன்னு சொன்னப்போ செகண்ட் தாட்டே இல்லாம ஓகே சொன்னேன்!

தென் அவ பண்ற ஃபிராட் வேலை எல்லாம் நான் ரசிச்சு தான் பாத்தேன், எக்சப்ட் தட் ஃபைனல்! நிஜமாவே அவ என்னை சீட் பண்ணவும் ஒரு கோபம்… எனக்கு புடிச்ச பொண்ணுக்கிட்ட புடிக்காத ஒரு ஆக்ட்டிவிட்டி’ய என்னால அக்சப்ட் பண்ண முடியல… அது தான் நான் அவக்கிட்ட கோபப்படவே காரணம்!

என் மனசு அவளை பத்தி பொசிடிவ்’வா நினைச்சு என் கோபத்தை குறைக்க ரீசன் தேடிட்டே இருந்துருக்கு… அன்னைக்கு ஒரு பையனுக்கு அடிப்பட்டோன்ன அவ்ளோ கேரிங்’கா அவனை ட்ரீட் பண்ணா… அவங்க கிட்ட வேலை பாக்குற ஆளோட பையன் தான்! அவளை தவிர வேற யாருமே அந்த பையனை தொடல… அவ அம்மா கூட புது ஷாலு’ன்னு துணிக்காக வருத்தப்பட்டாங்க… ஆனா, அவ எதையும் கண்டுக்கல!

இது ரொம்ப சப்ப ரீசன் தான்! பட் என் மனசு அதை வேகமாக புடிச்சுக்கிச்சு! அவ நல்லவ, உனக்கு அவளை புடிச்சுருக்குன்னு என்கிட்டே சொல்லிட்டே இருந்துச்சு!” சொல்லிக்கொண்டே வந்தவன்,

“உப்ப்!” என தன் உணர்ச்சிகளை மூச்சாக்கி கொட்டி, “தென் அட்லாஸ்ட், மை ஹார்மோன்ஸ் வேர் பம்ப்ட் அப் இன்ப்ரன்ட் ஆஃப் ஹர்! (அவ முன்ன என் உணர்ச்சிகள் மேலெழுந்துச்சு) என் லைஃப்’ல முதல் முறையா ஒரு பொண்ணை கிஸ் பண்ணனும்ன்னு தோணுச்சு! அண்ட் ஐ டிட்!” என்று கள்ளமாக சிரித்தான் அவன்.

டிரைவர் ஒருமுறை அவனை திரும்பிப்பார்த்துவிட்டு பின் வண்டியோட்ட, தேவகி அவசரமாய், “போதும் உன் கதை! இப்போ என்ன நீ ரோஷிணி’ய லவ் பண்ற! நேரா போய் நான் அவளை பொண்ணு கேட்கணுமா?” என்றிட, “ஐயோ… நோ நோ” என அதற்கும் அலறினான் ஜேகோப்.

“ஏய் என்னடா உன் பிரச்சனை? சங்கவியை கட்டுனா நோ’ங்குற… சரி, ரோஷிணியை கட்டுன்னாலும் நோ’ங்குற?”

“ரோஷிணிக்கு நான் தான் ஓகே சொல்லிருக்கேன்… இன்னும் அவ சொல்லல” என்ற ஒரு குண்டை தூக்கி அவர் தலையில் அவன் அலுங்காமல் வீச,

“ஐயோ பெருமாளே… இந்தியா வரவரைக்கும் தெளிவா இருந்த என் பையனுக்கு இப்போ இந்த ஊரு சூட்டுல மூளை குழம்பி கடக்கே!” விளையாட்டு போல என்றாலும் ஆதங்கமாய் சொன்னார் தேவகி.

ரிச்சர்ட் மகனிடம், “டிட் யூ ப்ரொபோஸ் ஹர்?” என்றார். (காதலை சொல்லிட்டியா?)

“எஸ்… ஐ டிட்! ஆனா, அவ என்னென்னவோ சொல்றா! நிறைய யூஸ்லெஸ், லேம் எக்ஸ்க்யூசஸ்! அந்த வீட்டோட வைப், அவளுக்கும் இருக்கும்ல கொஞ்சம்! அங்கிருந்து தூக்கிட்டு போய்ட்டா ஷி வில் பீ ஓகே!”

ரிச்சர்ட், “ப்ச், பப்பூ… அந்த பொண்ணு உன்னை லவ் பண்றான்னு தெரியாம இப்படி அவளை பத்தி அதிகம் நினைக்கக்கூடாது!” சிறிது கண்டிப்புடன் அவர் சொல்ல,  “நோ டேட்… ஐ க்நொவ் ஷி லவ்ஸ் மீ!” என்றான் திடமாய்.

தேவகி, “எப்டி சொல்ற?” என்று கேட்க, “அவளை நான் கிஸ் பண்றபோ, அதை அவ ஃபீல் பண்ணா… என்னை இக்னோர் பண்ணல… இன்பெக்ட் நானா தான் போதும்ன்னு தள்ளி போனேன்!” கன்னத்தில் கொடுத்த முத்ததிற்க்கே அவன் ஆராய்ச்சி கட்டுரை வரைய,  டிரைவர் பிளந்த வாயோடு இவனையும் ரோட்டையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு ஓட்ட, அதைக்கண்ட தேவகி அவசரமாய்,

 “சரி இப்ப முடிவா என்ன? என் அண்ணன் கிட்ட சங்கவியை உன்னால கட்ட முடியாதுன்னு நான் பேசணும் அதானே!?” என்று கேட்டு உறுதி செய்துக்கொண்டார் தேவகி.

ஜேகோபுக்கு இப்போது தான் நிம்மதி ஆனது. அன்னையிடம் அனைத்தையும் கொட்டிவிட்டோம், இனி எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார் என அவன் இருக்க, அவன் எங்கே அறிவான்…? தன் வீட்டுக்குள் காலெடி எடுத்து வைத்ததும் தேவகி, அந்தர்பல்ட்டி அடிக்கப்போகிறார் என்று!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!