Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்தபைரவி

ஆனந்தம் – 4.2

“வேணும்னா வாய தொறந்து கேக்கணும், அத விட்டு முகத்தை தூக்கி வச்சிட்டு ஒக்கார கூடாது” திடீரென அருகில் கேட்ட பேரனின் குரலில் தலையை தூக்க அவருக்கு ஒரு கவளம் உணவை ஊட்டிவிட்டுவிட்டான் அவர் சுதாரிக்கும் முன்பே.

பேரனின் திடீர் செயலில் பெரியவர் இன்பமாய் அதிர, அந்த சந்தோசம் தேவாவின் முகத்திற்கு தாவும் முன்பு, “அறிவிருக்கா தேவா? அப்பா இன்னைக்கு கறி எதுவும் சாப்புட மாட்டாங்க. நீ என்ன செஞ்சாலும் அது உபாத்திரமா தான் ஆகுது”

மொத்த வீட்டினரின் முன்பு யோசிக்காமல் மகனை ராஜரத்தினம் குற்றம் சாட்ட சிவப்பேறிய கண்களோடு நின்றான் தேவா.

“எல்லாத்துலயும் உனக்கு அவசரம் தான்டா” நாயகியும் கணவனுக்கு உடன் சிந்து படிக்க, அனைவரும் மொத்தமாக அமைதியாகிவிட்டனர்.



Advertisement

“ரத்தினம், நான் அன்னைக்கு உன்ன புரிஞ்சுக்காம பண்ண அதே தப்ப இன்னைக்கு நீயும் பண்ற, என் பேரன் எனக்கு சாம்பாரை தான் ஊட்டி விட்டான், என்ன பேசுனாலும் யோசிச்சு பேசு”

பெரியவர் கோவத்தை நேராக மகன் மேல் காட்டிவிட, நிலைமையின் தீவிரத்தை மறைக்க சந்தோஷ், “வா உன்ன கடைக்கு கூட்டிட்டு போறேன்” என தேவாவை அழைத்து சென்றுவிட்டான்.

அதே போல் பார்வதியின் மகனையும் மருமகளையும் கவனிக்க, சூழல் கணம் குறைந்தது.

Advertisement

இளைஞர்கள் மூவரும் கடைக்கு சென்று மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பொழுது வீட்டில் அனைவரும் உண்டு வரவேற்ப்பை முற்றத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க இவர்கள் வந்ததும் பெண்கள் வந்து பரிமாறி மீண்டும் பேச்சில் ஈடுபட தினம் மதிய உறக்கத்தை நாடும் எவருக்கும் உறக்கம் வராமல் போனது.

Advertisement

“பெரிம்மா எனக்கு ரூம் எதுன்னு காமிங்களேன் நான் கொஞ்ச நேரம் தூங்கணும்” – தேவா

“நீ அத்தை வீட்டுல இரு ய்யா, இங்க மேல ரூம் வேலை பாக்கணும், அத்தை வீட்டுல மேல் மாடில முன்னாடி இருக்க ரூம் தான் ய்யா உனக்கு” – பார்வதி

“சரி அய்யம்மா” – தேவா

Advertisement

அத்தையின் வீடு எதிரில் இருப்பதை தெரிந்தவன் தன்னுடைய பையை எடுத்து வெளியில் வந்த பொழுது நிவேதா யாருடனோ கைபேசியில் பேசிக்கொண்டிருக்க அவள் பேசட்டும் என காத்திருந்தவன், அவள் கைபேசியை அனைத்து திரும்ப, அவள் குண்டு கண்களை பார்த்து ஒரு நொடி சொக்கி தான் போனான்.

அவள் அழகை ரசிப்பதை நிறுத்தாமல் அதை பாடாகவும் வெளியிட நினைத்து, “பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம், ரெண்டே ரெண்டே கண் தான் ஒவ்வொன்றும் காவியம்…”

அவன் பாடியத்தில் வெட்கம் வந்துவிட, சிரித்த நிவேதா, “சாமி போதும் நிறுத்துறீங்களா?” எனவும் தான் நிறுத்தினான்.

“என்ன பாட்டெல்லாம் திடீர்னு?” – நிவேதா

“அழக மனசுக்குள்ள வச்சுக்க முடியாம வெளிய பாட்டா வந்துடுச்சு” – தேவா

“ரைட்டு” – நிவேதா

“நீ எந்த பக்கம் திரும்பினாலும் எனக்கு ஓகே தான்டா நிவிமா, மச்சான் நீ ரைட் சொன்னா ரைட்ல போவேன், லெஃப்ட் சொன்னா லெஃப்ட்ல போவேன்” – தேவா

“ஐயோ மச்சான், நீங்க நல்லா பேசுறீங்க” என நிவேதா சிரிக்க,

“அறுபத்தி நாலு கலைகள்ல இதுவும் ஒரு கலை தானே?” என்றான் தேவானந்த்.

“எது கடலை போடுறதா?” கேலியாக நிவேதா.

“தப்பா சொல்லாதடா நிவிமா, நான் பாடல் கலைய சொல்றேன்”

“சரி தான் போங்க” – நிவேதா

“எங்க போறேன்னு உனக்கு வாட்ஸ்அப் பண்ணவா?” – தேவா

“என் நம்பர் உங்ககிட்ட இருக்கா? யார் தந்தாங்க?” வியந்தாள் சிறு பெண்.

“பொண்ணுங்ககிட்ட அவங்களா நம்பர் குடுத்தா தான் வீரனுக்கு அழகு” – தேவா

“சரி டயலாக் பேசாதீங்க, நம்பர் நோட் பண்ணிக்கோங்க” எதற்காக அடி போட்டானோ, அதுவே எளிதாக கிடைத்திட, “நைட் பேசுறேன் நிவிமா” என்க, மாமன் மகனின் ஈடுபாட்டில் அவளுக்கும் தயக்கமின்றி போனது.

“டாட்டா” குழந்தையை போல் சந்தோசமாக சென்றவன் வீட்டை விட்டு வெளியில் வந்து எதிர் வீட்டை பார்த்தான்.

அவர்கள் வீட்டை போல் பெரிதல்ல, சிறிய பார்க்கிங் வசதி தான் இருந்தது, சிறிய வீடென்பதால் தரைத்தளம் ஒரு வரவேற்பறை, ஒரு சமையலறை, ஒரு சிறிய அறை சீதா தம்பதிக்கு தான் இருக்கும்.

முதல் தளத்தில் மகனுக்காக பெரிய விசாலமான படுக்கரையையும் ஒரு சிறிய அறை பொருட்களை சேமித்து வைக்க இருந்தது, இரண்டாவது தளத்தில் இரண்டு அறைகள் மட்டுமே.

அதுவும் இரண்டு அறைக்கும் நடுவில் துணியை காய போட என வெட்ட வெளியாக இருக்க ஒரு ஓரத்தில் ஒரு பைப் மற்றும் துணி துவைக்க ஒரு கல் இருக்கும்.

வீட்டினை ஆவலாக பார்த்த தேவா கண்களுக்கு மேல் மாடி சுவற்றில் வைத்திருந்த செடியை பார்த்த பொழுது, குறிலிருந்த வேப்ப மரம் அவர்கள் வீட்டை ஒட்டி வளர்ந்திருப்பதை கவனிக்க, ஒரு குருவியின் சத்தம் அதிகமாக கேட்டுப்பதாய் உணர்ந்தான்.

கண்களை கூர்மையாக்கி பார்த்த பொழுது செடிகளுக்கு இடையில் ஒரு சிறு குருவி செடிக்கு இடையில் ஏதோ வலியால் துடிப்பதை பார்த்து வேகமாக அங்கு செல்ல அவர்கள் வீட்டின் கதவை கூட சரியாக மூடாமல் வீட்டிற்குள் நுழைய படியை தேடிய பொழுது அந்த சிறிய படியில் இரண்டு இரண்டு எட்டுகளாக எடுத்து வைத்து ஓடினான்.

முதல் தளத்தை தாண்டி இரண்டாவது தளத்திற்கு செல்ல எத்தனித்த பொழுது எதிர் பாரா விதமாக பைரவி கீழே இறங்கி வர யூ டர்ன் எடுத்த பொழுது அவள் மேல் தேவா மோதிவிட, அவள் கால்கள் தடுமாறி கீழே விழ இருந்த சமயம் உடனே சுதாரித்த தேவாவின் கைகள் அவள் இடையோடு அழுத்தமாய் பிடித்து நிறுத்தியது.

இரண்டு நொடிகளே இருக்கும், தன்னுடைய பிடியை தளர்த்தி, “ஹே பாத்து…” அவன் பேசி முடிக்கும் முன்பே தன்னை பற்றியிருந்த அவன் கையை உதறி தேவாவின் நெஞ்சில் கை வைத்து தள்ளிய பைரவி அடுத்த நொடி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.

“ச்சீ பொறுக்கி” உடல் கூசியது போல் முகத்தை ரௌத்திரமாக வைத்து அருவருப்புடன் அவன் முகம் பார்த்து அவள் பேசியதை பார்த்த தேவாவின் ஆத்திரமும் இமாலயத்தின் உச்சியை அடைந்தது.

எந்த தொடுகையை அவள் வெறுத்தலோ அதே கை கொண்டு அவள் கழுத்தை சுவற்றோடு இறுக்கி பிடிக்க அவள் மற்றொரு கையை முதுகிற்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தி அவள் கண்கள் பார்த்து தீயாய் முறைத்தான்.

“என்னடி ஓவரா துள்ளுற?”

பற்களை கடித்து பேசியவன் கண்கள் அதிகமாக மூச்சு வாங்கும் அவள் மேனியில் படர, அவன் பார்வையில் உடல் பதற, கண்களிலிருந்து நொடி தாமதிக்காமல் கண்ணீர் அருவியாய் வெளியேறியது.

“பொறுக்கித்தனம் பண்ற அளவெல்லாம் உன்கிட்ட ஒன்னும் இல்ல” அவன் கசப்பான பேச்சில் இன்னும் உடல் நடுங்கியது பைரவிக்கு.

தன் கன்னங்களை பதம் பார்த்த அவள் கைகளுக்கு இன்னும் வலியை கொடுக்கவென தேவா அவள் கையை இன்னும் அழுத்தமாக பிடிக்க கண்களை மூடி அவனிடமிருந்து திமிர முயன்று தோற்று நின்றாள் பேதை.

“பொம்பள புள்ள மேல கை வக்கிர அளவு வக்கிர புத்தி எனக்கில்லை, என்ன பேச்சுடி பேசுற நீ? பொறுக்கியாக்கோம்? ஆஹ்? இன்னொரு தடவ என்கிட்ட இந்த மாதிரி பேசுறதோ, கை ஓங்குற வேலையோ வச்சிக்கிட்ட…”

முதுகிற்கு பின்னால் கட்டியிருந்த அவள் கைகளை இன்னும் முறுக்க, ஒரு விசும்பல் அவள் இதிலிருந்து வெளிப்பட்டு அவள் உடலை சற்று உலுக்கியது. பெண்ணின் வேதனையை உணர்ந்தவன் உடனே அவள் கைகளுக்கு விடுதலை கொடுத்து விலகி நின்று,

“கைய ஒடச்சிடுவேன் ஜாக்கிரதை” அடங்காத சினத்தோடு அவன் படியை ஏறி வேகமாக சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் அதே படியில் அமர்ந்த பைரவி முகத்தை கைகளால் மூடி அழுதது படிகளில் ஏறி சென்ற தேவாவின் காதுகளுக்கு மிக தெளிவாக கேட்டாலும் அவள் மேல் இருந்த கோவத்தில் அவள் பக்கமே திரும்பவில்லை அவன்.

ஆனால் அவன் செயலில் கட்டவிழ்ந்த அவள் காயங்கள் மீண்டும் தோன்றி பைரவியை உயிரோடு கொன்றது. அவன் தொடுகை, அவன் பார்வை, அவன் பேச்சு என அத்தனையும் அவளுள் தீ போல் சுட்டெரிக்க எத்தனை நிமிடங்கள் சுற்றம் மறந்து அழுதாள் என அவளுக்கே தெரியாமல் போனது.

மேல் ஏறிய கோவத்தோடு முதலில் அவனுக்காக கொடுத்திருந்த அறைக்கு முன்பிருந்த அந்த செடிகளுக்கு இடையில் சிக்கியிருந்த குருவியை எடுத்தவன், அதன் கால் சற்று சிக்கியிருப்பதை பார்த்து அதனை கையிலெடுத்து காயத்தை ஆராய்ந்து அதன் காயம் பெரிதாக இல்லை, என உறுதி செய்து கொண்டிருந்த பொழுது பைரவியின் கொலுசொலி கேட்க திரும்பி பார்த்தான்.

இவன் நிற்பதை கூட கவனிக்காமல் பின்னால் இருந்த அறைக்குள் சென்று கதவை அடைத்த சில நொடிகளில் அறையினுளிருந்து ரேடியோ ஓடும் சத்தம் கேட்டது.

புருவத்தை சுருக்கி எரிச்சலை கட்டுப்படுத்தியவன் அந்த குருவியின் முதுகை தேய்த்துக்கொண்டிருந்த நேரம் அவன் கைபேசிக்கு அழைப்பு வந்தது.

“டேய் லூசு பயலே என்னடா சொல்லாம கொள்ளாம ஊருக்கு கெளம்பிட்ட?” அந்த பக்கம் எடுத்த எடுப்பிலே குணா காய்ந்தான் அந்த பக்கம்.

“அய்யப்பா வீட்டுக்கு விருதுநகர் வர வந்தேன்டா, சொல்லு என்ன விசியம்?” – தேவா

“இந்த அய்யனார் ஏதோ பன்றான் மாப்பிள்ளை, அவிங்க தோட்டத்து பக்கம் கூட்ட கூட்டமா அடிக்கடி புது புது ஆளுங்க வந்துட்டு போறானுங்க” – குணா

“எதுல வர்றாய்ங்க?” – தேவா

“டூ வீலர் தான், திண்டுக்கல் வண்டி மாதிரி தெரியுது” – குணா

“வண்டி நம்பர் நோட் பண்ணி வச்சுக்கோ, பின்னாடி யூஸ் ஆகும். காவாலிபய ஏதாவது தப்பு பண்ணட்டும், அது நல்லா செட்டாகுற வர நாம அமைதியா இருப்போம், அப்போ தான் அவனுக்கு சந்தேகம் வராது” – தேவா

“சரிடா மாப்பிள்ளை, அப்றம் உன் அத்தை மகளுக என்ன சொல்றாங்க?” குணாவின் கேள்விக்கு முதலில் நினைவு வந்தது பைரவின் அறை தான்.

தன்னிச்சையாக அவன் கைகள் கன்னத்திற்கு செல்ல ஒரு நொடி அமைதி காத்தவன் மனம் நிதானித்து நிவேதாவை நினைத்து சிரித்தது, “அதுக்கென்ன மாப்பிள்ளை, குளுகுளுன்னு இருக்கு. சரி இங்க ஒரு சிட்டு குருவிக்கு கொஞ்சமா கால்ல அடி பட்டாப்பல இருக்கு ஏதாவது கை வைத்தியம் இருக்கா?” என்றான் அதன் மேனியை மெதுவாய் தடவிக்கொண்டு.

துறுதுறுவென பறந்து திரியும் அதன் தன்மை தேவாவின் கைகளில் இருக்கும் பொழுதும் மாறாமல் இருக்க தலையை நொடிக்கொரு பக்கம் அசைத்து துறுதுறுத்தது.

“சவாலுக்கு பண்ற மாதிரியே இதுக்கு பண்ண முடியாதே மாப்பிள்ளை” ஒரு சில நொடிகள் யோசித்தவன், “அடிபட்டிருக்க இடத்த டெட்டால் வச்சு சுத்தம் பண்ணி, மஞ்சள், வேப்பெண்ணெய் வச்சு விடு காயம் வேகமா ஆறிடும்” என்றான் குணா.

“சரிடா நான் அத பண்றேன், நீங்க அய்யனாரை ரொம்ப நெருங்காதிங்க, நாம அவனை கொஞ்சம் தள்ளி நின்னே கவனிச்சுக்கலாம்” எனவும் சரி என குணா வைத்தான்.

என்னோட பேஸ்புக் குரூப் லிங்க்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!