Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் -14

விருந்தை கவனித்து அனைவரையும் அனுப்பி முடிக்க மணி மூன்றை கடந்தது , அம்முவை முன்பே உன்ன வைத்து விட்டான் ஜெகன் .

அவளுக்கு பார்த்து பார்த்து அருகில் இருந்து பரிமாறினான்,  மாதவியிடமும் சொல்லி வைத்தான் “அத்தை அவளுக்கு காரம் ஒத்துக்காது , அவங்க எல்லாத்துலயும் தேங்காயும் தேங்கா பாலும் சேத்து சாப்பிடுவாங்க”.

“காரம் கொஞ்சம் இருந்தாலே முகம் எல்லாம் சிவந்திடும் , புரை ஏறிடும் எது குடுத்தாலும் கம்மியான காரமே குடுங்க”  என்றான்.

மாதவிக்கு புரிந்ததோ இல்லையோ , நீலவேணிக்கு புரிந்தது நன்றாக.



Advertisement

பூரணிக்கு அவரின் முகத்தை பார்க்க பார்க்க வயிற்றில் புளியை கரைத்தது ,  இரவு நெருங்க நெருங்க ஒரு வித பதற்றம் அவனிடம்.

இன்னும் சொல்ல வில்லை , தான் போவதை பற்றி.

“புருஷ் தூங்கலாம்” என்று  அவன் கைகளை தானே விரித்து தன்னை அதற்குள் நுழைத்துக் கொண்டு மீண்டும் அவன் கரங்களை தன்னை சுற்றி போட்டுக்கொண்டாள்.

Advertisement

“அம்மு”

Advertisement

“ஹ்ம்ம்”

“நா இப்போ சொல்றத பொறுமையா கேக்கணும்”.

“ஹ்ம்ம்” .

Advertisement

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு”.

“ஹ்ம்ம்” .

“நான் போய்ட்டு கொஞ்ச நாள்ல வந்துடுவேன் , அது வரைக்கும் அம்மு பத்திரமா இங்கயே இருக்கணும்” என்க.

அவனை விட்டு விலகி கட்டிலில் சென்று அமர்ந்தாள் முகத்தை உர்ர் என்று வைத்துக் கொண்டு “என்னவாம் என் அம்முவுக்கு” என்க.

“காலைல சொன்னீங்க விட்டுட்டு போக மாட்டேன்னு , இப்போ போறீங்க , நா கோவமா இருக்கேன்”.

“அம்முக்குட்டிக்கு கோவம் வருதே , சரி என்ன பண்ணா கோவம் போகும்”.

“நீங்க என் கூடவே இருங்க எனக்கு பயமா இருக்கும் இங்க” என்றவள் விழிகள் கலங்கியது.

அவள் கைகளை எடுத்து தன் நெஞ்சில் அழுத்திக்கொண்டான் “அம்மு கூடவே நான் இருப்பேன் டெய்லி போன் பண்ணுவேன் , நீ பேசு”.

“யாரவது உன்ன திட்டினா என்கிட்டே சொல்லு நான் பாத்துக்குறேன், போயிட்டு சீக்ரம் வந்துடுவேன் , அப்பறம் ரொம்ப நாள் அம்முகூட தான் இருப்பேன் , என் செல்லக்குட்டில இப்போ நான் போட்டுமா” என்க.

ஒன்றும் பேசவில்லை திரும்பி படுத்துக்கொண்டாள் , ஏதோ ஒரு உணர்வு மனதில் என்ன என்று அவளுக்கு புரியவில்லை , அதை சொல்ல தெரியவில்லை.

அவள் அருகில் நெருங்கி படுத்தவன் அவள் இடையோடு கை இட்டு அணைத்துக்கொள்ள , அவளின் உடலோடு மனதும் சோர்ந்திருக்க சிறிது நேரத்திலே உறங்கி விட்டாள்.

ரூபாவை அழைத்தவன் அவளுடன் இருக்க சொன்னான் “அவ கூடயே படுத்துக்கோ ரூபா இனிமே , தனியா விடத , உங்க எல்லார்க்கும் தொல்லை கொடுக்குறேன் தெரியுது” என்க.

“மாமா… அவங்க எனக்கு அக்கா , எனக்கு கடமை இருக்கு நான் பாத்துக்குறேன்” என்க தலை ஆட்டியவன் சிறிது நேரம் பார்த்திருந்து உடைமைகளை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினான்.

துறை செல்வம் காரோடு காத்திருந்தார் “பாத்துக்கோங்க அத்தை” என்க.

“நீ தைரியமா போயா நாங்க எல்லாம் இருக்கோம்” என்றார் அவர்.

தந்தையின் அறைக்கு சென்று அவரிடமும் விடைபெற்று ,   அனைவரிடமும் கூறிவிட்டு மாமனுடன் கொச்சி நோக்கி சென்றான்.

மனம் முழுதும் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது.

***************************************************************************************

 

சீதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர்கள் கேரளா வந்த பிறகும், நீலவேணி இளயமகனின் வீட்டிற்கு சென்று கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் பிரகாஷ் அவரை இங்கே வரவே விடவில்லை.

மகனை பார்க்க வேண்டும் என்று அவர் பிரச்சனை செய்யும் சமயங்களில் அவர் மட்டும் சென்று கண்டு வருவார்.

கொஞ்சம் நாட்களாக சீதாவிற்கு சொந்தக்காரர்கள் அழைப்பு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

“என்னமா சீதா இது , அவங்க வயசுல பெரியவங்க ஏதோ ரெண்டு வார்த்தை பேசினாங்கனா நீ தான அனுசரிச்சு போகணும்”.

“என்னமா பூரணி வெளில இருந்து வந்த மறுமவ அவ கிட்ட மூணு வருஷமா நிக்குறாங்க ஒரு பிரச்னையும் இல்ல , உன்கிட்ட நிக்கும் போதும் மட்டும் எப்படி பிரச்னை நடக்குது”.

“அப்போ தப்பு உன் பக்கம் தானே கொஞ்சம் அனுசரிச்சு போ , இதுல நீ சொந்தம் வேற”.

“என்ன சீதா அம்மாவையும் புள்ளையையும் இப்படி பிரிச்சு வெக்கலாமா,  உனக்கு உன் புள்ளைங்கள பிரிஞ்சு இருக்க முடியுமா” என்று ஆள் ஆளுக்கு அறிவுரை.

இவை அனைத்திற்கும் பின்னால் தன் மாமியார் சிறப்பாக வேலை செய்கிறார் என்று சீதாவிற்கு தெரியும் , இருந்தாலும் அவர் யாரிடமும் ஒரு குறையும் சொல்லவில்லை.

கணவரிடமும் சொல்ல வில்லை , மகனிடமும் சொல்ல வில்லை, கணவனை கூட சமாளித்து விடலாம் ஜெகனை யோசிக்க கூட முடியவில்லை.

அவனின் பார்வையும் உடல்மொழியும் குரலும் கூட கொஞ்சமேனும் இளகுவது கார்தும்பியிடம் மட்டுமே.

நீலவேணியை அழைத்து வர சொல்லி ப்ரகாஷிடம் சீதா சொல்ல ப்ரகாஷிற்கு விருப்பம் இல்லை , வாஞ்சியும் விருப்பமின்மையை காண்பிக்க.

ஜெகன் மட்டும் “அவங்க மகன் கூட தங்க அவங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு , இப்போ அவங்களுக்கு அப்பா மட்டும் தான் வேற பிள்ளைங்க இல்லன்னா ஆசிரமத்திலயா விட்டிருப்போம் , நாம அவ்ளோ தரம் தாழ்ந்தவங்க இல்லம்மா”.

“ஆனா எங்க அம்மாவை பேசற உரிமை அவங்களுக்கு கிடையாது, உங்கள மறுபடியும் ஏதாவது சொன்னாங்க அப்பறம் நடக்குற எதுக்கும் நா பொறுப்பில்லை” என்றான் வீடியோ காலில் இதை பார்த்திருந்த பாட்டிக்கு எச்சரிக்கையாக.

மீண்டும் தனியே தாய்க்கு அழைத்தவன் “மா எதா இருந்தாலும் என்கிட்டே சொல்லிடனும் என்கிட்டே மறைக்க பாத்தீங்க அவ்ளோதான்”  என்றவன்.

“மா என் தும்பிய பாத்துக்கோங்க இவங்க பேச்சு அவளுக்கு புரியாது, ஆனா அவங்க சின்னதா முகம் காமிச்சாக்கூட அவளால தாங்க முடியாது” என்க.

“நான் பாத்துக்குறேன் பா” என்றார்.

ஆனால் சீதாவின் பெரிய பயமே இவர் அம்முவை என்ன சொல்லுவாரோ என்றுதான் இருந்தது.

அதிலும் வந்த நாள் முதல் அவரின் பார்வை அவளின் மேல் ஆராய்ச்சியாய் படிந்து கொண்டே இருந்தது.

“அம்முக்குட்டி” என்று மகனும் மருமகளும் கொஞ்ச, வாஞ்சியும் அப்படியே அழைத்து அவளை தாங்குவதை பார்க்க பார்க்க அவருக்கு வயறு எரிந்தது.

எரிச்சலை கூட்டவே வந்து சேர்ந்தான் ஜெகன்நாதன் , அவனை காணும்போது அவள் முகத்தில் வந்துபோகும் செம்மையே அவருக்கு அனைத்தையும் சொல்லிவிட்டது.

கார்தும்பியை பெண் கேட்டு அவர்களின் வீட்டில் காலையிலே சென்று நின்றனர் சீதாவும் பிரகாஷும்.

லக்ஷ்மியம்மா அவர்களை வரவேற்க அனைவரும் கேள்வியோடு அவர்களை பார்த்திருந்தனர்.

“என்ன பிரகாஷ் காலையிலே வந்திருக்கீங்க” என்றான் சங்கரன்.

சீதா நேரே லக்ஷ்மியிடம் சென்று “உங்க பேத்தி கார்த்தும்பிய எங்க மகன் ஜெகனுக்கு கேட்டு வந்திருக்கோம்” என்க.

புன்னகையோடு தட்டை வாங்க கை நீட்டினார் அவர்.

சட்டென்று அந்த தட்டு பறந்து அனைத்தும் கீழே சிதறியது , கணவன் மனைவி இருவரும் அதிர்ச்சியோடு பார்க்க.

“எங்க வந்து என்ன பேசுறீங்க , உங்க மகனுக்கு எங்க வீட்டு பொண்ணு கேக்குதா” .

“என் கல்யாணத்த நிறுத்தினவனுக்கு நான் என் தங்கச்சிய குடுக்கணுமா” என்று அலறிய ராஜீவை விசித்திரமாக பார்த்தனர் தம்பதியர்.

காரணம் இன்று வரை அவன் அம்முவை அவனின் தங்கையையாக எங்கேயும் முன் நிறுத்தியதில்லை .

“உங்க கல்யாணம் நின்னதுக்கும் என் பையனுக்கும் என்ன சம்பந்தம்” என்றார் பிரகாஷ், கோபத்தை அடக்கி.

“உன் கல்யாணம் நின்னு போனது உன் தங்கச்சி ரெம்யாவால அத விட்டுட்டு அந்த பையன ஏன் சொல்ற” என்றார் லக்ஷ்மியம்மா.

உண்மையில் கிருஷ்ணன் நாயரின் மக்கள் ராஜீவ் மற்றும் ரெம்யாவிற்கு பெண் எடுத்து பெண் கொடுக்க நிச்சயம் செய்திருந்தனர்.

ஆனால் ரெம்யாவிடம் அவள் விருப்பத்தை கேட்க வில்லை, அவளுக்கு இந்த திருமணமும் பிடிக்க வில்லை இப்பொழுது திருமணம் செய்வதும் பிடிக்கவில்லை .

அண்ணனிடம் மட்டும் கேட்டவர்கள் தன்னிடம் கேட்கவில்லை என்று கோபம் கொண்டிருந்த ரெம்யா.

தனக்கு ஓமெனில் கிடைத்த வேலைக்கு செல்ல அணைத்து ஏற்பாடுகளையம் செய்து விட்டாள்.

திருமணம் அன்று காலை மண்டபத்தில் வைத்து தனக்கு இதில் விருப்பம் இல்லை என்று கூறி செல்ல வேண்டும் , இவர்களை அவமானப் படுத்தவேண்டும் என்று முடிவு செய்திருக்க.

அந்த விவரம் அறிந்த ஜெகன் அவளை கூப்பிட்டு அறிவுரை கூறினான், “இதில் உன் அண்ணன் வாழ்க்கையும் அடங்கி இருக்கிறது , உனக்கு விருப்பம் இல்லை என்றாள் இப்பொழுதே சொல் இரு குடும்பமும் பேசி முடிவு செய்வார்கள்” என்க.

“நீயெல்லாம் எனக்கு அறிவுரை வழங்காதே” என்று சென்று விட்டாள் அவள்.

கார்த்தும்பி வருந்துவதை கண்ட ஜெகன் “நாளை உன் வீட்டில் சொல்ல போகிறேன்” என்று ரெம்யாவிடம் கூறிவிட்டு , அடுத்த நாள் காலையிலே அம்முவின் வீட்டிற்கு சென்று ரெம்யாவின் முடிவை கூறிவிட்டான்.

அவன் எப்படியும் வீட்டில் சொல்லிவிடுவான் என்று தெரிந்திருந்த ரெம்யா, காலையிலே சில பொருட்கள் வாங்க வேண்டி இருப்பதாக கூறி தன்னுடைய பாஸ்போர்ட் , பைல்ஸ் ,கொஞ்சம் பணம் நகை அனைத்தையும் தன்னுடைய பெரிய ஹாண்ட்பேகில் வைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டாள்.

அவள் என்று ஓமென் செல்கிறாள் , எங்கிருந்து செல்கிறாள் ஒன்றும் இவர்கள் யாருக்கும் தெரியவில்லை .

இவர்கள் தன்னை தேடி வரக்கூடும் என்று முன்பே முடிவு செய்தவள் நேரே பெங்களூரு சென்றுவிட்டாள் , அங்கு அவளின் தோழி மூலம் ஓமென் செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டாள்.

ஜெகன் வந்து சொன்னதும் அனைவரும் பதறி விட்டனர் , உடனே ஆட்களை வைத்து தேட அவள் எங்கு  சென்றாள் என்றே தெரியவில்லை.

மிக அவமானமாக போய் விட்டது சம்பந்தி வீட்டினர் முன்பு, எத்தனையோ எடுத்து சொல்லியும் அவர்கள் சம்மதிக்க மறுத்துவிட்டனர்.

ராஜீவின் திருமணமும் நின்று விட்டது , வெளியில் அனைவரிடமும் ஒத்து வரவில்லை அதனால் நிறுத்தி விட்டோம் , மகளுக்கு ஒரு மாற்றம் வேண்டுமே ஆகையால் அவள் வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்டாள் என்று கூறி சமாளித்தார்.

ஜெகன் வந்து கூறியதால் தான் இப்படியாவது அவர்களால் தப்பிக்க முடிந்தது , ஆனால் ராஜீவ் தன் தங்கை வெளிநாடு போகவே இவன் தான் உதவி செய்தான் என்ற ரீதியில் அவன் மீது பழி சுமத்தினான்.

“உன் கேவலமான புத்தி அப்படி தான் சிந்திக்கும்” என்ற ஜெகனும் அதை  பொருட்படுத்தவில்லை .

ஆனால் ஆறு மாதங்களுக்கு பிறகு அம்முவை பெண் கேட்டு வந்து நிற்கும் தருணம் அதை இடையில் கொண்டு வந்தான் ராஜீவ்.

தாயும் தந்தையும் பேசிவிட்டு வரட்டும் என்று வீட்டில் காத்திருந்தவன் அவனுடைய ஒற்றர் படை (அம்முவின் விளையாட்டு குழுவில் இருக்கும் சிறு பிள்ளைகள் இவனின் ஒற்றர்கள் இவன் சொல்லுவதை தப்பாமல்  செய்யும் அந்த அணில் படை).

அங்கு நடக்கும் தகவலை அவனிடம் சரியாக கொண்டு சேர்த்து, விரைந்து  அம்முவின் வீட்டிற்குள் சென்றுவிட்டான்.

“இவனுக்கு அவளை கல்யாணம் செஞ்சு குடுக்க முடியாது” என்றவனை பார்த்தவன் “உன் அனுமதியை யாருடா கேட்டா” என்றான் சட்டை கையை முட்டிக்கு ஏற்றிக் கொண்டே.

“சம்மதம் சொல்ல வேண்டியவ என் கார்த்தும்பி அவ சொல்லட்டும் நான் வேண்டாம்னு” என்றதும் அனைவர் பார்வையும் அவளில் பதிந்தது.

“எனக்கு நந்தேட்டனை மட்டும் தான் பிடிக்கும் அச்சம்மா , நான் அவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்றாள் பாட்டியிடம்.

“அப்புறம் என்னடா அதான் அவளே சொல்லிட்டாளே , ஒருத்திய வாழ விடாம சாகக்  குடுத்தீங்க , இன்னொருத்தியோட விருப்பம் இல்லாம கல்யாணம் பேசி வீட்டை விட்டே தொறத்தியாச்சு”.

“அம்மு கல்யாணம் அவ விருப்பப்படி  நடக்கும் , அவ விஷயத்துல முடிவெடுக்க உங்க யாருக்கும் உரிமை இல்லை” என்ற லக்ஷியம்மா.

கீழே சிதறி கிடந்த பொருட்களை மீண்டும் தட்டில் அடுக்கி சீதாவின் கையில் கொடுத்து “இப்போ கேளுங்க” என்றார்.

சீதாவிற்கு மனதே சரியில்லை நல்ல விஷயம் பேசும்போது ஏதோ அபசகுனம் போல , வேறு தட்டு கொண்டு வரலாம் என்று அவர் என்ன, பிரகாஷ் “என்ன சீதா குடு” என்க அவரும் நீட்டிவிட்டார் .

தட்டை வாங்கிக்கொண்ட லக்ஷ்மி “உடனே வர நல்ல முகூர்த்தத்துல  கல்யாணம் வெச்சுக்கலாம்” என்றார்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு வரும்  நல்ல நாளில் திருமணம் என்று முடிவும் செய்யப் பட்டது.

ஆனால் நினைத்தது  எதுவும் அங்கு நடைபெறவில்லை, கனவிலும் எண்ணாத ஒரு கருப்பு தினம் அன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!