Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்தபைரவி

ஆனந்தம் – 11.2

“பைரவி, கார்ல எதுவும் திங்ஸ் இருக்கானு செக் பண்ணிக்கோ ம்மா, நான் கொஞ்சம் வெளிய போகணும்” எனவும் ஒருமுறை சென்று சோதித்து பார்க்க ஒரு பையை எடுக்காமல் வைத்திருந்தான் தேவா.

அவள் அன்னை கொடுத்தது தான். திருமணத்தன்று வெள்ளி பொருட்களை கொடுக்க மறந்து போக நேற்று கொடுத்து அனுப்பியிருந்தார்.

“உன் அத்தைகிட்ட மறக்காம குடுத்துடு” என. அதனை எடுத்து சென்று பைரவி வரவேற்பறைக்கு செல்ல அங்கு அமர்ந்திருந்த அவன் அன்னையிடம் கொடுத்தாள்.

“என்ன இது?” ஆர்வமில்லாமல் கேட்டார் நாயகி.



Advertisement

“வெள்ளி ஜாமான் அத்தை. அம்மா அன்னைக்கு மறந்துட்டாங்கனு இப்ப குடுத்தாங்க” அவருக்கு பதில் சொல்ல, இஷா அத்தை ஆவலாய் பிரித்து பார்த்தாள்.

“நீயே வச்சுக்கோ, எங்க இருந்தா என்ன?” என்றவர், “யாருக்கு வாங்குனதோ என் பையனுக்கு வந்துருக்கு” நாயகி வார்த்தைகளின் தாக்கம் புரியாமல் பேசிட பைரவிக்கு கண்கள் கலங்கி வலித்தது.

ஆசையாய் அவரிடம் காட்ட எடுத்து வந்து, இறுதியில் இதயத்தில் வேதனையை சுமந்து நின்றாள்.

Advertisement

தன்னுடைய மகனுக்கு உன்னை திருமணம் செய்ததே பெரிய பிழை என அவளை பார்க்கும் நொடி ஒவ்வொன்றும் அழுத்தி அழுத்தி கூறும் அவர் செயல்கள்.

Advertisement

“என் ப்ரன்ட் கவிதா தெரியும்ல இஷா உனக்கு?” மகளின் கேட்க, “ம்ம்ம் தெரியும் ம்மா”

“அவ மகளுக்கு ஒன்றை கிலோ வெள்ளி, ஒரு கிலோ தங்கம் தர்றேன் உன் பையனுக்கு தான் என் பொண்ணுன்னு சொன்னா. நானும் சரி உன் கல்யாணத்தை முடிச்சிட்டு பேசலாம் நினைச்சேன்” – நாயகி

“தப்பு பண்ணிட்டீங்க ம்மா, அப்ப நீங்க தெளிவா முடிவு எடுத்திருந்தா இந்நேரம் அண்ணன் ரொமான்ஸ் பண்ணிட்டு சுத்திருப்பான்”

Advertisement

இருவரும் மாறி மாறி ஜாடை பேச்சுகள் பேச உயிர் இல்லாத உடல் போல் தங்கள் அறைக்கு நடந்தாள்.

மதியம் முதல் கணவன் இனிமையாக அவளை ஆட்டிப்படைக்க இப்பொழுதும் அவன் அன்னையின் உபயத்தினால் அவனே ஆட்டிப்படைதான் ஆனால் இம்முறை அவன் எதிர்காலத்தையும் சேர்த்து வருத்திவிட்டோமோ என்ற பயம்.

தன்னால் அவன் சுகங்களை அனுபவிக்க முடியாமல் உள்ளதோ?

ஏராளமான எண்ணங்கள் வியாபிக்க இரவு உணவை மறந்து தங்கள் அறையின் பால்கனியில் இரவின் இருட்டை வெறித்து அமர்ந்திருக்க அவன் வாகனம் வீட்டினுள் நுழையும் சத்தத்தினால் தான் சுயம் பெற்று கீழே வந்து கதவை திறந்தாள்.

மழையில் நனைந்திருப்பான் போலும். உடை எல்லாம் உடம்போடு ஒட்டி, சிகையினுள் அவன் விரல்கள் சென்ற தடம் கூட அப்படியே இருந்தது.

எதுவும் பேசாமல் வழி விட்டு சமையலறை செல்ல அவளை பார்த்தவன் எப்பொழுதும் இருக்கும் அவள் அமைதி தானே என மேலே சென்று குளித்து உடை மாற்றி வந்த சமயம் அவன் ஆசைப்பட்டு கேட்ட பிரியாணியை சூடு செய்து வைத்து, இரண்டு தோசை வார்த்து தாயாராக இருந்தாள்.

“சாப்பிட்டியா?” இல்லை என தலை ஆட்டி ஏற்கனவே அவள் அத்தை மீதம் ஹாட்பாக்சில் வைத்திருந்த தோசையை எடுத்து தன்னுடைய தட்டில் வைத்தாள்.

அவள் அமைதிக்கு காரணம் மதியம் தன்னுடைய சேட்டையால் இருக்குமோ என சந்தேகம். ஆறி போன தோசையை அவள் சாப்பிடுவதை பார்த்தவன் அத்தை தான் எடுத்துக்கொண்டு அவள் தன்னுடைய தட்டில் சூடாக இருந்ததை அவளிடம் வைத்தான்.

தட்டையே மௌனமாக பார்த்தவள் மீண்டும் அவனிடமிருந்து எடுக்கப்போக, “இப்ப என்ன பைரவி உனக்கு?” என்றான் புரியாமல்.

“எனக்கு ஒன்னும் இல்ல, உங்களுக்கு என்ன நான் அத சாப்டா?” – பைரவி

“அது ஆறி கெடக்குடி” – தேவா

“அப்போ நீங்க ஆறுனத சாப்பிடலாமா?” – பைரவி

“அப்போ நீ சாப்புடலாமா? எனக்கு பிரியாணி சூடா இருக்கு, அதுனால நான் இத எடுத்துக்குட்டேன்” – தேவா

“நீங்க வேலைக்கு போயிட்டு உழைச்சிட்டு வர்றவங்க. நான் வீட்டுல சும்மா தானே இருக்கேன்? சாப்பிடலாம்” – பைரவி

அவள் மனநிலை இப்பொழுது சரியில்லை என புரிந்தவன் அவள் போக்கிலே விட்டு உணவை கவனிக்க தலையை தூக்கி தேவா முகத்தை கூட பார்க்கவில்லை அவன் மனைவி.

“பைரவி சாப்புடாத” பதறியடித்து எழுந்தவன் எதற்கு தடுத்தான் சொல்ல வருகிறான் என யூகிக்கும் முன்பே கணவன் கதவை திறந்து வெளியேறியிருந்தான்.

போன வேகத்தில் வந்தவன் அடுப்பை உயிர்ப்பித்து ஏதோ வேலை செய்ய பைரவி தட்டையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.

‘இப்ப இத நான் சாப்புடனுமா வேணாமா?’ என குழப்பத்தில் இருக்க அவன் செய்த ஏதோ ஒன்றின் வாசனை கூட பைரவி இருந்த நிலையில் எட்டவில்லை.

சுட சுட இருந்த தோசை மேலும் ஆறிப்போயிருக்க ஊத்தப்பம் பதத்தில் சுட சுட ஒரு தோசையை அவள் தட்டில் வைத்து, அதை விட சூடாக நன்கு சுண்டியிருந்த அயிரை மீன் குழம்பை மனைவியின் தட்டில் பரிமாறினான் தேவா.

“ஏன்?” என்றாள் அந்த குழம்பில் கண்ணை வைத்து.

“என்கிட்டையே புடிக்கும்னு சொல்ல என் பொண்டாட்டிக்கு தயக்கம். அவளுக்கு புடிக்கும்னு தெரிஞ்சு அதுக்கு மேல என்னால சாப்புட முடியல.

அதான் மொத்தத்தையும் எடுத்து வச்சு ரசம் ஊத்தி பொரிச்ச மீன் வச்சு சாப்பிட்டேன், கெண்டையை எதிர் பாத்துடாத” என்ற எச்சரிக்கையோடு தேவா மேலும் தன்னுடைய உணவில் கவனமாகினான்.

ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் தவித்தவள் அவனிடம் நன்றி சொல்ல கூட அவனை பார்க்கவில்லை. கண்கள் எல்லாம் கரித்தது, முன்னாள் இருந்த உணவு மங்கலாக துவங்க, கொள்ளை ருசியாக இருந்த உணவின் சுவையை நா உணர மறுத்தது.

சிறிதும் பாசத்தை காட்டாத தனக்கே இவ்வளவு ஆசையாக ஒவ்வொன்றையும் செய்கிறானே, அவனை முழு மனதோடு ஏற்று கணவனாகியிருக்கும் பெண்ணை மனந்திருந்தால் அவன் வாழ்க்கை செழுமையாக இருந்திருக்குமோ என்ற எண்ணமே பெண்ணை குத்தி கிழித்தது.

எத்தனை முயன்றும் முட்டி வந்த அழுகையை அவளால் அடக்க முடியவில்லை, “சக்கரை செம்ம டேஸ்ட் பிரியாணி, இம்புட்டுகாண்டு க்ரேவி எடுத்து வச்சிருக்கலாம்ல ங்கொக்கா மக்க டக்கரா இருந்துருக்கும்”

காரம் அதிகம் போட்டிருந்த காரணத்தால் அவன் வீட்டினர் பிரியாணியை சிறிதளவே எடுத்திருக்க தன்னுடைய மனத்திற்காக பார்த்து பேசுபவன் சுயநலமில்லா அன்பினில் அவள் அழுகை விசும்பலாய் வெடித்தது.

திடீரென அழுகும் மனைவியை பார்த்து பதறிய தேவா, “ஹே பைரவி என்ன ஆச்சு?” என்றான்.

பதில் சொல்லாமல் மேலும் அழுபவளின் கண்ணீரில் பதட்டமானவன் கை கழுவி வேகமாக அவள் அருகே வந்து நின்றான், “பைரவி என்னடி இது எதுக்கு இப்டி அழகுற? நான் ஏதாவது உன்ன ஹர்ட் பண்ணிட்டேனா? சாரி டா. ப்ளீஸ் அழுகாத”

அவனால் தான் அழவில்லை என தலை ஆட்டி இன்னும் அழுவதிலே மும்முரமாய் இருந்த மனைவி அமர்ந்திருந்த நாற்காலியை 90 கோணத்தில் தன்னை பார்த்து திரும்பியவன் அவன் முன் மண்டியிட்டு, “அம்மா ஏதாவது சொன்னாங்களா?” என்றான் சற்று கோவமாக.

உடனே பைரவி அழுகை நின்று அவனை கவலையோடு பார்த்தாள், “ஏன் ஆனந்த் நான் அழுதா அதுக்கு மத்தவங்க தான் காரணமா இருப்பாங்களா?

என்னோட நிலைமைக்கு என்னைக்கும் நான் மட்டும் தான் காரணமா இருந்துருக்கேன். எனக்காக எவ்ளோ யோசிக்கிறீங்க நீங்க, ஆனா என்னால உங்கள சந்தோசமா வச்சுக்க முடியலையே. சின்ன சந்தோசத்தை கூட குடுக்காம நான் என்னனு உங்களுக்கு மனைவி ஆனந்த்?”

“சந்தோசம் மீன்ஸ் எத சொல்ற நீ?” புருவங்கள் உயர்ந்து பார்வை உன்னிப்பானது தேவாவுக்கு.

தயங்கியவள் கண்ணீர் இன்னும் அதிகமானது, “ஒரு மனைவி கணவன எப்படி சந்தோசமா வச்சுக்கணுமோ அப்டி” என்றாள் திக்கி திணறி.

“அப்போ செஃக்…” பைரவி கண்கள் வேதனையில் மூட அதை கவனித்தவன் உடனே வார்த்தையை விழுங்கினான்,

“தாம்பத்யம் குடுத்தா தான் என்ன சந்தோசமா வச்சுகிட்டாதா அர்த்தமா?”

மூடிய அவள் கண்கள் இன்னும் கசிந்தது மனைவிக்கு, “ஆமா” என்றாள் வேதனையோடு.

“சரி அப்போ நான் உன்ன தொடுறேன் பைரவி, ஆனா உன்னால முகம் சுளிக்காம, மனசு வலி இல்லாம என்னோட நெருங்கியாவது நிக்க முடியுமா?”

அவளிடம் அமைதி தான் பதில், “உன் மனச தெரிஞ்சும் உன் வேதனையை கொளுத்துறேன்னு வை, நான் ரேப் பண்ணதுக்கு சமம்” பற்களை கடித்து மனைவியை முறைத்தான்.

உடையை இறுக்கமாக பற்றிய பைரவியின் கைகளில் வலி, “நீங்க என்னோட ஹஸ்பன்ட்…”

“மயிறு…” அவளை முடிக்க விடாமல் தடுத்தான் தேவா.

“பேச வைக்காத பைரவி. புருஷனா இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு விருப்பம் இல்லாம பக்கத்துல வந்தாலே அது பேர் ரேப் தான். நான் ஆம்பளடி. கட்டில்ல ஜெய்கிறத விட உன் மனச ஜெயிக்கிறது தான் எனக்கு முக்கியம்.

அதையும் மீறி கண்டதையும் யோசிச்சு தேவையில்லாதது கேட்டு உன் இஷ்டத்துக்கு தான் எல்லாம் நடக்கும்னு ஆசைப்பட்டா, உன் எண்ணம் மாறுற வர நான் இந்த வீட்டு பக்கம் எட்டியே பாக்க மாட்டேன்”

அங்கிருந்து நகரப் போனவனின் கையை பிடித்தவள் பிடித்த வேகத்தில் அவன் கையில் தலை வைத்து தேம்பி அழ அவள் நிலையை பார்த்து தேவாவுக்கு கூட கண்ணீர் வந்தது.

“உங்களுக்காக என்ன மாத்திக்கணும்னு தான் ஆனந்த் நினைக்கிறன். ஆனா என்னால முடியல… முடியல ஆனந்த். காதுல கேக்குற ஒவ்வொரு வார்த்தையும் மூளைக்கு தப்பா போகுது” திக்கி திணறி பேசியவன் கண்ணீர் அவன் கையை நனைத்திருந்தது.

“என்னால உங்க சந்தோசம் எல்லாம் பாலா போகுதோனு மனசு தவிக்கித்து” அவள் தலையை ஆதூரமாய் வருடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!